பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 21, 2008

ஜெய் ஜெய் ஜெயந்தி!!! பாகம் # 2 (ஒரு மீள் பதிவு)

நான் பிளாக் எழுத ஆசைப்பட்டு அவசர குடுக்கையா ஒரு பிளாக் கிரியேட் பண்ணி "வணக்கம் - அன்புடன் அபிஅப்பா"ன்னு ஒரு பதிவு போட்டுட்டு வந்துட்டேன். பின்ன அந்த பக்கமே எட்டி பார்க்கலை. வெறும் பின்னூட்டமே போட்டு தாக்கிகிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஒரு நாள் வந்து எட்டி பார்த்தா" என்ன அபிஅப்பா ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்து எட்டி பார்த்தா வணக்கம் மட்டும் போட்டிருக்கீங்க! அபி செல்லம் அப்பாவை நாலு சாத்து சாத்துடா- இப்படிக்கு இம்சை அரசி"ன்னு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. எனக்கு முதல் பின்னூட்டமே அது தான்.

அதுல ஆரம்பிச்ச அந்த பழக்கம் இன்று இம்சை அரசி என்கிற ஜெயந்தி என் உடன் பிறவா தங்கச்சியாகி இனி அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நாங்கள் இது போலவே அண்ணன் தங்கையாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டும் அளவு பாசமாகியாச்சு!

இன்று அவளுக்கு என் தங்கைக்கு பிறந்த நாள்! அவள் நீடூடி வாழ எல்லா வளமும் பெற்று வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்! நல்லா இருடா செல்லம்!!

குறிப்பு: ஒரு சின்ன பெருமிதம்! என்னால் வாழ்த்தப்பட்ட எல்லோருமே நல்லா இருப்பாங்க என்பதுக்கு ஜெயந்தி ஒரு உதாரணம்! போன பிற்ந்த நாளுக்கு என் தங்கச்சியா இருந்த ஜெயந்தி இப்போ ஜெயந்திமோஹன்பிரபு! அடுத்த வருடம் என் குட்டிமருமகனுக்கோ மருமகளுக்கோ அம்மா!!!

குறிப்பு 2: ஆசீர்வாதமோ, வாழ்த்தோ பெற விழைபவர்கள் அனுகவேண்டிய முகவரி www.abiappa.blogspot.com பணத்தை கிரடிட் கார்டு மூலமாக கிழிக்கவும்! ரசீது தபால் மூலமாக அனுப்பப்படும்!!!

குறிப்பு: முதலில் வந்து ஆசீர்வாதம் வாங்கி போனவர் என் அடுத்த தங்கச்சி கவிதாயினி காயத்ரி! டிசம்பரில் கல்யாணமாக கடவது என ஆசீர்வதித்து அனுப்பியிருக்கிறேன்!!! ஜல்தி ஜல்தி, ஓடியாங்கப்பா!!!

10 comments:

 1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இம்சை அரசி (aka) ஜெயந்தி :)

  ReplyDelete
 2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெயந்தி அக்கா...

  ReplyDelete
 3. Anna, ennaium Asivatham Pannunga...
  (but already i have one daughter)
  So, life la oru peria viyabara kanthama poga kadavathu endru
  asivathikkavum...

  ReplyDelete
 4. Nenga Asivathicha God Ganesa

  Asivathicha mathiri...

  (Pona pathivil ulla photovukkum ithrkkum entha sambanthamum illai)

  ReplyDelete
 5. ஜெயந்தியக்கா...
  இனிய தலை பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :))

  மாப்ஸூக்கும் வாழ்த்து சொல்லிருங்க!
  ஒங்க தலை பர்த்டே-ன்னா என்னா!
  எங்க தல பர்த்டே-ன்னா என்னா!
  எல்லாம் ஒன்னு தேன் :)

  ReplyDelete
 6. இம்சை அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  காயத்ரி அக்காவுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்!


  அப்புறம் அபி அப்பா என்னிய ஆசிர்வாதம் பண்ணனும்

  அடுத்த வருஷம் என்னிய துபாய்க்கு வரவைக்கறமாதிரி இருக்கணும் உங்க ஆசி!

  ReplyDelete
 7. அபி அப்பான்னு பேரை பார்த்ததும் ஏதோ கொஞ்சம் சீரிய(ல்)ஸ் பார்ட்டி போலருக்குன்னு எட்டிப் பார்த்தேன். ஒரே பீர் வாசனை. (அடுத்த பிளாகைச் சொல்றேன்.)

  இதுக்குள்ள நுழைஞ்சா கப்புன்னு சென்டிமெண்ட் அட்டாக் குடுக்கறீங்க.

  சுவாரசியமான ஆள்தான்!

  வர்ரரரர்ட்டா....

  ReplyDelete
 8. அபிஅப்பா என்னையும் ஆசீர்வாதம் பண்ணுங்க :P

  ReplyDelete
 9. அப்புறம் அபி அப்பா என்னிய ஆசிர்வாதம் பண்ணனும்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))