பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 7, 2009

மயிலாடுதுறை தொகுதி நிலவரம்!!

முதல்ல ஒரு விஷயம் தெளிவா சொல்லி விடுகின்றேன்! எங்க தொதியிலே 20 சதவிகிதம் இஸ்லாமிய வாக்காளர்கள் தான். ஆனால் எல்லோரும் நினைப்பது போல் எல்லா இஸ்லாமியர்களும் "இஸ்லாமியரா இருந்தா இஸ்ஸ்லாமியர்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்பதோ அல்லது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கோ தான் ஓட்டு போடுவார்கள்"என்பது மிக தவறு. (நம்ம சக பதிவர் மரைக்காயர் சொல்வது போல) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இல்லை. அப்படி ஒரு கட்சியே கிடையாது என்பது உளவுத்துறை கலைஞருக்கு சொல்லவே இல்லை. அது கிடக்கட்டும்.

1989-90ல் பி.ஜெய்னுலாபுதீன் என்பவர் அழகா இஸ்லாம் என்றால் என்ன என அழகா பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சு வைத்த இடம் எங்க தொகுதியை சேர்ந்த சங்கரன்பந்தல். அப்போது பத்தி எரிஞ்ச தீ அழகா எரிஞ்ச்சுது. எங்க எல்லாரூக்கும் அப்பதான் இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்தது. ஆண்கள் அப்போது தங்க நகை போடுவதை தவிர்த்தார்கள். பிஜே பிஜே என்று துபாய் கூட பற்றி எரிந்தது. ஆச்சு அப்போ வந்து அவர் கூட ஒட்டிகிட்டு வந்தவர் தான் பேராசிரியர். நான் அவரை தப்பா சொல்ல வில்லை. அழகா பிஜேவின் கருத்தை மக்கள் முன் கொண்டு சேர்த்தார். "உணர்வு" என்னும் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு அழகாக எல்லா இஸ்லாமிய மக்களிடம் போய் சேர்ந்தது. விண் டிவியில் அழகாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

வன்னியருக்கு 20 சதம் இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கை எப்படி தேசதுரோகம் இல்லியோ அப்படி தான் முஸ்லீம்களுக்கு 3 சதம் இட ஒதுக்கீடு கோரிக்கையும் என்பது பி ஜேவின் முக்கிய முழக்கமாக இருந்தது.

சென்ற பாராளுமன்ற தேர்தல் போது தஞ்சையில் மாபெரும் மாநாடு. அப்போது மேடையில் பிஜே இப்போது மயிலாடுதுறை வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எல்லாரும் இருந்தார்கள். அப்போது கலைஞரிடம் இருந்து வந்த ஒரே செய்தியால் அப்போது பி ஜே முழங்கினார். அப்போது அந்த கூட்டத்திலிருந்தது பாதி பேருக்கு மேல் பெண்கள். ஆச்சர்யம் ஆச்சர்யம். இஸ்லாமிய பெண்கள் இத்தனை பேர் எப்படி ஒரு அரசியல் மாநாட்டுக்கு வருவார்கள்?

யாரால் எல்லாம் முடிந்தது யாரால் எல்லாம் முடிந்தது?? எல்லாம் பிஜே என்னும் தனி மனித பிரச்சாரத்தல்!அழகாக திமுக கூட்டணி 40 தொகுதியில் ஜெயிக்க இஸ்லாமிய மக்கள் வாக்குகள் உதவின. பின்னே என்ன நடந்தது. எப்போதும் போல அரசியல் விளையாட்டு! அழகா பேராசிரியர் ஆட்கள் வந்து வஃப்பு வாரியத்துல உட்காந்துகிட்டு என்ன கிழித்தார்கள் என்பதை மரைக்காயர் போன்றவர்கள் சொல்லட்டும்!
அதன் பின்பு பேராசிரியர் பிரிஞ்சு போய் தனி கட்சி கண்டார்.. ஆனால் இஸ்லாமியர்கள் யார் கூட இருக்கின்றார்கள். 3 சதம் கொடுத்த கலைஞர் கூட தான். எங்க பி.ஜே கூடத்தான்.

இருங்க விஷயத்துக்கு வரேன். எங்க மயிலாடுதுறை எப்பவுமே சாதி, மதம், தனிநபர் அப்படீன்னு பார்த்தது இல்லைங்க. நாங்க சுய நினைவு உள்ளவங்க. அப்படி பார்த்தா விஜய டி ராசேந்தர் ஏங்க கள்ளகுறிச்சில நிக்கனும். அவர் எங்க தொகுதியிலே நின்னா 6 ஓட்டு தான் கிடைக்கும் என அவருக்கு தெரியாதா என்ன?

இரண்டு நாள் முன்ன அய்யர் போனில் பேசினார். நேற்று அய்யரின் மனைவி போனில் பேசினார்!மிக அழகாக நாங்க 40 தொகுதியிலயும் ஜெயிக்க போகின்றோம்.

பாவம் மரைக்காயர் விஷயம் தெரியாமல் சொல்லிகொண்டு இருக்கார்! எலந்தங்குடி என்னும் இஸ்லாமிய கிராமத்துக்க்கு பேராசிரியர் போன போது அவருக்காகவே கிராமம் முழுக்க கதவடைப்பாம்!

அதே போல சங்கரன்பந்தல், கிளியனூர், நீடூர்,தேரிழந்தூர், கோமல், எலந்தங்குடி, எங்கும் பேராசிரியருக்கு கதவடைப்பு! பி. ஜே வின் குருந்தகடுகள் அழகாக வேலை செய்கின்றது!

அது போல மயிலாடுதுறை தொகுதியில் 40 சதம் வன்னியர்கள். இருந்தும் மருத்துவர் அய்யா சொல்லி எல்லாம் மாயவரம் மசியாது.

அய்யருக்கு மாயவரம் உருதி. ஆனால் ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பேருந்து நிலையத்துக்கு உங்க ராஜ்குமார் MLA கிட்ட சொல்லி எதுனா செய்ய சொல்லுங்க! அது போதும் எங்களுக்கு!

11 comments:

 1. //இரண்டு நாள் முன்ன அய்யர் போனில் பேசினார். நேற்று அய்யரின் மனைவி போனில் பேசினார்!//

  அவங்க தான் தினமும் ஆயிரம் தடவை போனில் பேசுவாங்களே! அது என்ன நேத்தும், முந்தாநாளும் மட்டும் பேசினாங்க?!

  ReplyDelete
 2. இந்த இடுகைக்கு நான் பின்னூட்டம் போட்டால் என்னை திமுக அடிவருடி என திட்டி அனானி பின்னூட்டம் வரும். அந்த கஷ்டமே வேண்டாம்... நானே சொல்லிக் கொள்கிறேன்...நான் திமுகவிற்கு மட்டுமே அடிவருடி :)

  ReplyDelete
 3. மரைக்காயர் ஏதோ மர கழண்டவர் மாதிரி தெரியுது, ஃப்ரீயா விடுங்க

  ReplyDelete
 4. //மாயவரத்தான்.... said...
  //இரண்டு நாள் முன்ன அய்யர் போனில் பேசினார். நேற்று அய்யரின் மனைவி போனில் பேசினார்!//

  அவங்க தான் தினமும் ஆயிரம் தடவை போனில் பேசுவாங்களே! அது என்ன நேத்தும், முந்தாநாளும் மட்டும் பேசினாங்க?!
  //

  LOL :)))))))

  ReplyDelete
 5. எவ்ளோதான் போட்டி இருந்தாலும் கடைசியில மணி அடிச்சு புடிச்சு வந்துடுவாருன்னு சொல்லுறாங்க பார்ப்போம் :)

  (எது எப்படியோ புது பஸ் ஸ்டாண்ட் இல்லைன்னு முடிவாகிப்போச்சு இனி புது ரயில்வே லைன் போட்டு நான் எங்க வூட்டுக்கு புது ஸ்டேஷன்ல இறங்கி போனா ரொம்ப சந்தோசமா இருக்கும்ம்:))

  ReplyDelete
 6. //தயவு செஞ்சு பேருந்து நிலையத்துக்கு உங்க ராஜ்குமார் MLA கிட்ட சொல்லி எதுனா செய்ய சொல்லுங்க! /

  அட அது எப்பவோ செய்ய ஆரம்பிச்சுப்புட்டாங்கண்ணே ! இப்ப தற்காலிக பஸ்ஸ்டாண்ட் @ பெருமாள் கோவில் தோட்டம் புதுசா பஸ்ஸடாண்ட் பழைய இடத்துலயேதான்! :))

  ReplyDelete
 7. அன்பின் அபிஅப்பா,

  ஆனால் மணி அய்யர் மயிலாடுதுறையில் தோற்றால் அதற்கு அபிஅப்பா தான் 200% காராணமாம். எப்படினா மணி அய்யர் முன்னே மயிலாடுதுறையை துபாய் போல மாத்துறேன் என வாக்குகொடுத்து அபிஅப்பாவ ஸ்பான்ஸர் பண்ணி துபாய்க்கு அனுப்பிவைத்தாராம். துபாய பார்க்கம அது மாதிரி எப்படி மயிலாடுதுறையை மாத்தமுடியும்? அதனால தான் இந்த திட்டம். அபிஅப்பாவுக்கு கொடுத்த வேலை என்னான துபாய நல்லா உத்து பார்த்து ஃபீல்டு ரிப்போர்ட்டை மணி அய்யர்ட்ட கொடுக்கனும்!!! அதை பார்த்து மணி அய்யர் மயிலாடுதுறைய துபாய மாத்துவார். இது தான் அந்த மெக புராஜெக்டாம்.

  ஆனால் அபிஅப்பா எந்த உதவியும் மணி அய்யருக்கு பண்ணாம துபாய்ல குஜலா, ஷோக்கா ஷேக் போல இவ்வளவு நாளா இருந்திட்டு இப்ப வந்து இரண்டு நாள் முன்ன மணி அய்யர் போனில் பேசினார். நேற்று மணி அய்யரின் மனைவி போனில் பேசினார் என்று பதிவு போட்டால் என்ன பிரயோஜனம். சாதா போன்ல பேசுனதான் அடுத்த முனைல உள்ளவங்களுக்கு கேட்க்கும். வீடியோ போன்ல தான் ஒரே நேரத்தில் பார்க்க, பேச முடியும். அதுல கூட வாய் பேசாம கோரணிய (சைகை) பட்டியல் படத்துர வர்ர பரத் மாதிரி கூட பேசலாம். இங்க தான் சரியான பஸ் ஸ்டாண்டே இல்லையே? வீடியோ போனுக்கு தஞ்சாவூர் தான் போகனும். அங்கன தான் நான் அதை இன்ஸ்டால் செய்தேன்.


  உண்மை என்னான மணி அய்யர் வூட்ல உள்ள எம்.பிக்கான போனை BSNL ஆளுங்க ரிசல்ட்டுக்கு முன்னாடியே புடுங்கி கிட்டு போய்ட்டங்களாம். !!! எப்படியும் தோக்க தான் போறாரு, எதற்கு இந்த போன் என்று. அதனால மணி அய்யர் வெளில உள்ள காய்ன் பாக்ஸ்ல க்யூல நின்னு ஒன் பை ஒன்னா காய்ன போட்டு பேசி இருக்கார். க்யூ பெருசா இருந்ததால அவர் மனைவிக்கு அடுத்த நாள் தான் போன் கைல கெடைச்சுதாம்.!!! மேட்டர் இது தான். நான் நாலு நாளா இங்க தான் இருக்குறேன். இது எப்படி இருக்கு ? !!!

  அப்பறம் இந்த பி.ஜே என்ற துலுக்க பய பேச்சை முஸ்லிம்கள் நாங்க யாரும் கேக்குறது கிடையாது. இந்த ஜவாஹிருல்லாவும், பிஜேவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.ரெண்டு பேருக்கும் என்ன வேலைன யாரவது ஏமாந்த பள்ளிவாசல் நிர்வாகத்துல போய் கலாட்டா பண்ணி அங்க உள்ள இறைநேசர்களின் கபுருகள இவனுங்க மீசை மாறி தரை மட்டமாக்கிட்டு, அங்க பிரச்சினைய இவனுங்க தாடி மாறி வளத்துவுட்டு வந்துடுவானுவ. அவ்வளவுதான், அங்க ஒண்ணா இருந்த மக்க எல்லாரும் மண்ண அள்ளி வீசி சண்டை போட ஆரம்புச்சிடுவாங்க. இவனுங்க அதை காரணமா வச்சி கல்ப்ல வசூல ஆரம்பிச்சுடுவனுவே. பாவம் நம்ம மக்கள் அங்க கேக்ரான் மேக்ரான் = க்ளேன்கோல மூக்க பொத்தி, வாய கட்டி, வயத்த கட்டி சம்பாதித்த திர்ஹம்கள அல்லா பேர சொல்லி குல்லாவ போட்டு காமிச்சி ஆட்டைய போட்டுக்கிட்டு வந்திடரனுவ. ங்கொய்யலா, இதுக்கெல்லாம் ஞாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவனுவ டவுசர உருவும் போது தான் தெரியும். இங்கன பாருங்க இவனுவ லேட்டஸ்ட் சண்டைய. நாத்தம் தாங்க முடியல.

  பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்-தமுமுக தொண்டர்கள் மோதல் http://thatstamil.oneindia.in/news/2009/05/08/tn-tntj-tmmk-cadres-clash-near-pollachi.html


  கடேசிய ஒண்ணு சொல்லிகுறேன். எப்பாடு பட்டவது நாலு கிழட்டு ஒட்டகமும் , ரெண்டு லோடு துபாய் கடற்கர மண்ணையும் உடனே மயிலாடுதுறைக்கு அனுப்பி வைக்கவும். அதை வைத்து இங்க பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல துபாய் மாதிரி செட் போட்டாதான் இந்த எலக்சன்ல மயிலாடுதுறை மக்கள் கேட்க்கும் கேள்விய சமாளிக்க முடியும். அட்லீஸ்ட் இதையச்சும் உடனே செய்து முடிக்கவும். மணி அய்யரை காப்பற்றவும்.


  குறிப்பு - இந்த புண்ணுட்டம் நம்ம குசும்பனுக்கும் அனுப்பபட்டு உள்ளது. ஆதலால் இதை வைத்து குசும்பன் கும்மாளாம் போட்டால் எமது நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாகாது என்பதை தயை கூர்ந்து தெரியப்படுத்துகிறோம்.


  with care and love,

  Muhammad Ismail .H, PHD,
  http://gnuismail.blogspot.com

  ReplyDelete
 8. //இரண்டு நாள் முன்ன அய்யர் போனில் பேசினார். நேற்று அய்யரின் மனைவி போனில் பேசினார்!மிக அழகாக நாங்க 40 தொகுதியிலயும் ஜெயிக்க போகின்றோம்.//

  அபி அப்பா அது வாய்ஸ் மெசேஜ் சர்வீஸ்!:)))

  ReplyDelete
 9. நமிதா...May 29, 2009 at 4:36 PM

  இதுவும் சும்மா தான்


  :))

  :))))  பகுத்தறிவு பாசறையில் இருந்து
  ஒரு குருட்டு பூனை :)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))