பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 6, 2009

சஞ்சய் மை ஸ்வீட் ராஸ்கல்!!!!!


சஞ்சய்! என் மனதுக்கு பிடித்த தம்பி! 2008ல் குசும்பன் கல்யாணத்துக்கு வரும் போது மாயவரம் ரயில்வே ஸ்டேஷனனில் அவரை நந்துவாகவே தான் நினைத்தேன். ஏனனில் இளையகவி கனேஷ் குமார், இம்சை வெங்கி எல்லாரும் அப்படித்தான் அறிமுகப்படுத்தினாங்க.
ஆனால் வீட்டுக்கு வந்த பின் ஆட்டோமேட்டிக்காக என் மனைவியிடம் தான் தான் சஞ்சய்ன்னு சொன்னார். பின்னே நட்ராஜ் அவர் கிட்ட தான். மாலை மாயவரத்தில் இருந்து கிளம்பி திருவாரூர் போனோம். குசும்பன் கல்யாணத்துக்கு.
காலைக்குள் சுரேகா, காயத்ரி, பாலைதினை காயத்ரி, நாகை சிவா, மாநக்கல் சிபி எல்லாரும் வர கல்யாணம் களை கட்டியது.
கல்யாணம் முடிந்த பின்னே எல்லோரையும் காரில் அனுப்பி விட்டு நான், சுரேகா, சஞ்சய் பஸ்ஸில் போனோம் மாயவரம். அப்போ நான் செஞ்ச அலப்பறை இங்க சொல்வதுக்கு இல்லை.
யார்கிட்டயும் ஒரு சண்டை சச்சரவு இல்லாத மனிதனாக பார்த்தேன் சஞ்சயை. இப்படி ஒரு கேரக்டர் இருக்க முடியுமா என வியந்தேன்.
தம்பிக்கு சீக்கிரம் ஒரு நல்ல பெண் கிடைத்து நல்ல படியா கல்யாணம் நடக்கனும். நாங்க எல்லாரும் போகனும் குசும்பன் கல்யாணத்துக்கு போன மாதிரியே!
தம்பிக்கு இன்று பிறந்தநாள்! இந்த நாளில் நான் அன்புடன் வாழ்த்துகிறேன்! இங்கே இரவு 10.30. ஊரில் 12 ஆச்சு! வாங்க எல்லாரும் வந்து வாழ்த்துங்க!!!!!
அன்புடன்
அபிஅப்பா

55 comments:

 1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணாச்சி :))))

  ReplyDelete
 2. ஞாபகம் வருதே!!!

  ஞாபகம் வருதே!!!!

  குசும்பன் கல்யாண கும்மி மெயிலு

  பூம்புகாரு :)))))))

  ReplyDelete
 3. வாப்பா ஆயில்ஸ்! சஞ்சய் கல்யாணத்துக்கு வந்து குமுறிடினமும்! ஆமா சொல்லிட்டேன்!!!! உன் வாழ்த்துக்கு நன்றிப்பா!!!!

  ReplyDelete
 4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. குசும்பன் கல்யாணத்திலே குசும்பனை விட நாங்க தான் ஜாலியா இருந்தோம்!!!!இது தான் உண்மை!!!!

  ReplyDelete
 6. குசும்பன் கல்யாண கும்மி மெயிலு
  //

  ம் குசும்பனுக்கெல்லம் கல்யாணம் ஆயிட்டு..:)

  ReplyDelete
 7. நவம்பர் 29 புலி கல்யாணம் கூட வருது!!!! வாங்க கலக்கிடலாம்!!!!

  ReplyDelete
 8. சஞ்சய் கல்யாணத்துக்கு வந்து குமுறிடினமும்! ஆமா சொல்லிட்டேன்!
  //


  பாலிய விவாகம் தப்பாச்சே :)

  ReplyDelete
 9. அடப்பாவி மின்னல்! இந்த கமெண்ட்டை பார்த்தா குசும்பன் டேரா துபாய்ல ரூம் போட்டு அழுவான்ப்பா!!!! ஏன் இந்த கொலை வெறி???????

  ReplyDelete
 10. சஞ்செய் மனசாட்சிSeptember 7, 2009 at 12:18 AM

  பாலிய விவாகம் தப்பாச்சே..:)

  //


  இப்படியே சொல்லி சொல்லியே நம்பளை அம்போனு விட்டுடுவானுவோளோ...?

  ReplyDelete
 11. சஞ்செய் மனசாட்சிSeptember 7, 2009 at 12:20 AM

  ம் குசும்பனுக்கெல்லம் கல்யாணம் ஆயிட்டு..:)
  //

  அடபாவி மின்னலு எனக்கு இன்னும் கல்யணம் ஆகலைனு சிம்பாலிக்கா சொல்லுறீயா..

  அவ்வ்வ்

  ReplyDelete
 12. ஆஹா இல்லாத மனசாட்சி எல்லாம் வந்து பேசுதுப்பா!!!!

  ReplyDelete
 13. வெடிகுண்டு முருகேசனின் காமடி பின்னூட்டம் எங்கே?????

  ReplyDelete
 14. இது கும்மின்னு முடிவாகிடிச்சு பின்ன என்ன தயக்கம் வாங்க எல்ல்லாரும் கும்மி குருப் எல்லாரும்!!!!

  ReplyDelete
 15. அபிஅப்பா கும்மி அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே! சீக்கிரம் வாங்க!!

  ReplyDelete
 16. பக்கி புக்September 7, 2009 at 12:34 AM

  ஆமா! தல ராகுல் வருவது சஞ்சய் பொறந்தநாளுக்குன்னு தொங்கபாலு சொன்னாறே உண்மையா??????

  ReplyDelete
 17. தொங்கபாலுSeptember 7, 2009 at 12:36 AM

  நான் ரகசியமா பேசிகிட்டு இருந்தேன் காமராஜர் மளிகைல! உங்க கிட்ட யார் சொன்னது????

  ReplyDelete
 18. பக்கி புக்September 7, 2009 at 12:38 AM

  யோவ் தொங்கபாலு! காமராஜர் மாளிகைல பேசினா ரகசியம்! நீர் பேசினது காமராசர் மளிகைல!!!!!!!

  ReplyDelete
 19. ஆச்சில இடம் வேணும்!

  இப்படிக்கு

  E V K S இளங்கோவன்

  ReplyDelete
 20. கிந்தழல் கிவிSeptember 7, 2009 at 12:42 AM

  யோவ் தொங்கபாலு! உனக்கு இந்த பேர் வச்ச உரிமையிலே சொல்றேன்! எங்க்க வந்து என்ன கேக்குற???? காரைக்குடி போய் கேளுய்யா!!!!

  ReplyDelete
 21. கில கீர கீரதிSeptember 7, 2009 at 12:46 AM

  நானும் எதுனா சொல்லனும் ஆனா கெட்டவன்ன்னு பேர் எடுக்க கூடாது அதனால தொங்கபாலுக்கு ஒரு வணக்கம் வச்சிக்கறேன்

  இப்படிக்கு

  கில. கீர கீரதி

  ReplyDelete
 22. பசும்பொன் - ஜார்ஜாSeptember 7, 2009 at 12:47 AM

  நான் மட்டும் ஏன் சும்மா இருக்கனும்

  பசும்பொன்

  ReplyDelete
 23. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 24. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சஞ்சய்

  ReplyDelete
 25. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு சஞ்சய்..

  எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளுவாராக.

  ReplyDelete
 26. கோபி வாப்பா வாழ்த்தியமைக்கு நன்னி நன்னி நன்னி!!!!


  ராதாகிருஷ்ணன் அய்யா வாங்க! உங்க ஆசீர்வாதம் வேண்டும் தம்பிக்கு! சீக்கிரம் கண்ணாலம்ன்னு ஒரு ஆசீர் வாதம் அடிச்சு வுடுங்க ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல:-)))))

  இராகவன் அண்ணா வாங்க வாங்க தம்பிக்கு ஒரு காஸ்ட்ட்லி வாழ்த்து சொல்லிடுங்க! ( வேற என்ன கல்யாணம் தான்)

  ReplyDelete
 27. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

  ReplyDelete
 28. அபி அப்பா, நான் கூட இதுவரை பத்து பொண்ணு ஜாதகம் கொடுத்திட்டேன், ஒண்ணும் சரியாகவில்லை, அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையா சுயம்வரம் நடத்தலாம் என்று இருக்கேன். எப்பூடி..

  (சஞ்சய் .. இதுக்கு மேல் என்னால் பிட்ட போட முடியாது..) :))

  ReplyDelete
 29. WISH U MANY MORE HAPPY RETURNS OF THE DAY TO ABI APPAVIN SWEET RASCAL......

  ReplyDelete
 30. தம்பி..

  இன்றுபோல் என்றும் பதினாறாக வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 31. வெடிகுண்டு முருகேசன்September 7, 2009 at 12:55 PM

  இன்றுபோல் என்றும் பதினாறாக வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!
  //


  உண்மை தமிழன் எப்படிபட்ட பிட்டு போடுகிறார்னு தெரியுதா..?

  அவருக்கு துனைக்கு ஒரு ஆளு தேவையாம் :)


  பிரமச்சாரிகள் சங்கத்துக்கு !!!

  ReplyDelete
 32. சஞ்சய் அங்கிளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. சஞ்சய் அண்ணாவுக்கு வாழ்த்துகள் :))

  ReplyDelete
 34. அண்ணே தலைப்பிலேயே கவுந்திட்டேன்.. ரொம்ப நன்றி..:)

  //நான், சுரேகா, சஞ்சய் பஸ்ஸில் போனோம் மாயவரம்.//
  இல்லை.. நாம 2 பேர் மட்டும் தான். பஸ்ஸில் ஏறுவதற்கு முன் நடந்த சங்கதிகளை பெரும் பதிவாவே போடலாம்.. ;))

  ReplyDelete
 35. நன்றி ஆயில்ஸ்.. எனக்கும் ஞாபகம் இருக்கு.. :)

  நன்றி மின்னல்..

  நன்றி கோபி..

  நன்றி டிவிஆர்..

  நன்றி ராகவன் அண்ணாச்சி..

  நன்றி சின்ன அம்மிணி அக்கா.. :)

  நன்றி மயில் ( உடனே நடத்தவும் :) )

  நன்றி தமிழரசி.. :))

  நன்றி வால் தாத்தா.. :))

  நன்றி திருமதி ஸ்ரீமதி.. :)

  ReplyDelete
 36. யாரய்யா அனானி ஆட்டம் ஆடறதி.. பிண்றிங்களே.. இ லைக் ஆல் தோஸ் கமெண்ட்ஸ் :))

  ReplyDelete
 37. வாழ்த்துக்கள் சஞ்சய்..


  இந்த போஸ்ட்லயே எனக்கு ரொம்ப புடிச்சது " ராஸ்கல்" இது தான்

  ReplyDelete
 38. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 39. இனிய நல்வாழ்த்துகள் சஞ்சய்

  ReplyDelete
 40. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு நண்பர் சஞ்சய்...

  சும்மா அப்படியே திரும்பினா ரெட்டு அஜித் மாதிரியே இருக்கீங்கன்னு ஊரே பேசிக்குதாம்.!

  ReplyDelete
 41. வால்பையன் said...
  சஞ்சய் அங்கிளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  //

  வாழ்த்துகள்!

  ReplyDelete
 42. நன்றி திருமதி ஸ்ரீமதி.. :)//

  ரெண்டு ஒன்னுதானே சஞ்சய்!:)

  ReplyDelete
 43. நன்றி வால் தாத்தா.. :))//

  அவருக்கும் வயசாயிடுச்சா?

  ReplyDelete
 44. சும்மா அப்படியே திரும்பினா ரெட்டு அஜித் மாதிரியே இருக்கீங்கன்னு ஊரே பேசிக்குதாம்.!//

  ம்ம்ம்!
  ரிப்பீட்டு

  ReplyDelete
 45. சஞ்சய்-க்கு எனது இனிமையான
  வாழ்த்துக்கள், பிறந்த நாளுக்காய்!

  அ.அ.அவர்களே, 'என் பக்கம்'
  சிறிது எட்டிப் பாருங்களேன்:

  http://nizampakkam.blogspot.com/2009/09/kalaattaacollege.html

  ReplyDelete
 46. \\ சின்ன அம்மிணி said...
  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

  September 7, 2009 3:10 AM


  mayil said...
  அபி அப்பா, நான் கூட இதுவரை பத்து பொண்ணு ஜாதகம் கொடுத்திட்டேன், ஒண்ணும் சரியாகவில்லை, அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையா சுயம்வரம் நடத்தலாம் என்று இருக்கேன். எப்பூடி..

  (சஞ்சய் .. இதுக்கு மேல் என்னால் பிட்ட போட முடியாது..) :))

  \\

  ஆகா நம்ம மகளிர் அணி எல்லாம் சஞ்சய்க்கு கழுத்து கட்டு போட ஸாரி கால் கட்டு போட ரெடி தானா!

  சீக்கிரம் சுயம்வரம் வைங்க! ஜமாய்ச்சிடலாம்! இந்த வருஷம் முடிச்சிடுவோம்!!!!!

  யாரும் நிம்மதியா இருந்தா ந(எ)னக்கு பிடிக்காது!

  பேரக்ஸ் வாழைபழ பிளேவர் வாங்க 32 கி மி அலையனும்!

  வாடி மொவனே சஞ்சய் வரிஞ்சு கட்டிகிட்டு இருக்கோம்!!!!!

  ReplyDelete
 47. \\ தமிழரசி said...
  WISH U MANY MORE HAPPY RETURNS OF THE DAY TO ABI APPAVIN SWEET RASCAL......

  September 7, 2009 9:21 AM


  உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  தம்பி..

  இன்றுபோல் என்றும் பதினாறாக வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

  வாழ்க வளமுடன்

  \\

  தமிழரசி, உனாதானா ரொம்ப நன்னி நன்னி!

  யோவ் உனா தானா அடுத்த களேபரம் உம்ம கல்யாணம் தான்! அட்லீஸ்ட் சினேகா இல்லாட்டி நமீதவை கட்டி வச்சிடுவோம்ல!

  (சும்மா ஜோக்) நல்ல பொண்ணா பார்த்து உன்னையும் மாட்டி விடலைன்னா பார்த்துக்கோ:-))

  ReplyDelete
 48. \\ வெடிகுண்டு முருகேசன் said...
  இன்றுபோல் என்றும் பதினாறாக வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!
  //


  உண்மை தமிழன் எப்படிபட்ட பிட்டு போடுகிறார்னு தெரியுதா..?

  அவருக்கு துனைக்கு ஒரு ஆளு தேவையாம் :)


  \\

  யோவ் வெடிகுண்டு அந்த அர்த்தம் இல்லை அதுக்கு! குண்டு வெடிச்சாலும் சத்தமாதான் வெடிக்குது!

  ReplyDelete
 49. \\ வால்பையன் said...
  சஞ்சய் அங்கிளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  September 7, 2009 2:05 PM


  ஸ்ரீமதி said...
  சஞ்சய் அண்ணாவுக்கு வாழ்த்துகள் :))

  \\

  வாலு சுருட்டி வச்சிக்க மாட்டியா பையனுக்கு உன்னை விட 1 வயசு தான் அதிகம்! ஜஸ்ட் 22வாக்கும்.


  \\ ஸ்ரீ என்னம்மா உனக்கு தம்பிம்மா சஞ்சய். 21 வயசு பால் புட்டி பாப்பாவாக்கும்\\

  ReplyDelete
 50. \\ மஞ்சூர் ராசா said...
  இனிய நல்வாழ்த்துகள் சஞ்சய்

  \\

  நன்றி சார்! தம்பிக்கு வாழ்த்து சொன்னதுக்கு!

  ReplyDelete
 51. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

  ReplyDelete
 52. \\மதிபாலா said...

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு நண்பர் சஞ்சய்...

  சும்மா அப்படியே திரும்பினா ரெட்டு அஜித் மாதிரியே இருக்கீங்கன்னு ஊரே பேசிக்குதாம்.!

  \\

  அஹ்ஹா இப்புடி சூடாக்கியே தான் தம்பிக்கு பொண்ணு கிடைக்காம செய்ய்யிறீங்களா மதி???:-)))))

  ReplyDelete
 53. \\ அத்திவெட்டி ஜோதிபாரதி said...
  வால்பையன் said...
  சஞ்சய் அங்கிளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  //

  வாழ்த்துகள்!

  September 7, 2009 7:39 PM


  அத்திவெட்டி ஜோதிபாரதி said...
  நன்றி திருமதி ஸ்ரீமதி.. :)//

  ரெண்டு ஒன்னுதானே சஞ்சய்!:)

  September 7, 2009 7:40 PM


  அத்திவெட்டி ஜோதிபாரதி said...
  நன்றி வால் தாத்தா.. :))//

  அவருக்கும் வயசாயிடுச்சா?

  September 7, 2009 7:42 PM


  அத்திவெட்டி ஜோதிபாரதி said...
  சும்மா அப்படியே திரும்பினா ரெட்டு அஜித் மாதிரியே இருக்கீங்கன்னு ஊரே பேசிக்குதாம்.!//

  ம்ம்ம்!
  ரிப்பீட்டு

  \\

  ஜோதி! ஏனப்பா ஏனப்பா போயிட்டு போகட்டும் தம்பி! ரெட் அஜீத்க்கு தலைல முடி இல்லை என்பதை இப்படி நாசூக்கா சொல்றீங்களே!

  ஒரு காங்கிரஸ்காரன் கஷ்ட்டப்படனும்ன்னா அவனுனுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வைக்கனும் அப்படின்னு நான் உள்ளடி வேலை செய்வது உங்களுக்கு பிடிக்கலையா:-)))))

  வருகைக்கு நன்றி ஜோதி!(ஜோதி ஜோதின்னு சொல்லும் போதே சண்டை போட ஆசையா இருக்கு. ஏன்னா என் சின்ன அக்கா பேர் ஜோதி 1 வயசு வித்யாசம்.எப்பவும் சண்டை தான்:-))

  ReplyDelete
 54. அபி அப்பா,
  இங்கே வந்து கொஞ்சம் கை கொடுங்க...

  http://nizampakkam.blogspot.com/2009/09/tamilalphabet.html

  ReplyDelete
 55. வாழ்த்திய அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். :)

  அபிஅப்பா @ தொல்ஸ் அண்ணாவுக்கு மிக்க நன்றி. ;)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))