பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 27, 2009

அதிஷாவின் KFC பதிவும் அபிஅப்பாவின் கெண்டக்கி அனுபவமும்!!!!


நேற்றைக்கு அதிஷா ஒரு பதிவு போட்டிருந்தார். உடனே நானும் ஆமை சுத்த ஆரம்பிச்சுட்டேன். நான் மட்டும் சுத்தினா போதுமா பத்து பேர் கிட்டயாவது அதை பொலம்பி தீர்க்கலைன்னா தூக்கம் வருமா? அதான் அதான் சிரிச்ச மூஞ்சி பதிவர்கள் இருக்காங்களே. அதான் எழுதிட்டேன்.நெட் கூட ஒரு வாரமா சொதப்பிடுச்சு வீட்டிலே.
MSc Wild Life Biology என்னும் படிப்பு இந்தியாவிலே ரெண்டு காலேஜ்ல தான் இருக்கு. ஒன்னு எங்க காலேஜ் அடுத்து பூனாவிலே ஒரு காலேஜ். அதனால அந்த கோர்ஸ்ல மட்டும் இந்தியா, வெளிநாட்டில் இருந்து எல்லாம் வந்து பீட்டர் விட்டுகிட்டு இருப்பாங்க. அப்படித்தான் விவேகானந்தன்னு ஒரு பீட்டர் பார்ட்டி. அவங்க அப்பா அம்மா எல்லாம் லண்டன்ல இருந்தாங்க. இவனும் அங்க படிச்சவன் தான். இங்க வந்து அந்த கோர்ஸ்ல சேர்ந்தான். அவனை பார்த்தாலே எங்களுக்கு வேப்பங்காய். பின்னே எங்க கிட்ட வந்து பீட்டர் விட்டா கடுப்பு வராதா. அதிலும் ராதாவுக்கு கோவம் கோவமா வரும். "இந்த இங்கிலீஷ் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையிலே மாட்டினா செத்தாண்டா மொவன்"ன்னு கதறுவான்.

ஒரு நாள் எங்க கிட்ட வந்து "இந்த ஊர்ல KFC எங்க கிடைக்கும்"ன்னு கேட்டான்.அது என்ன வஸ்துன்னே தெரியாது எங்களுக்கு. உடனே கிரிக்கெட் வீரர்லாம் இப்ப விக்கெட் எடுத்தா வட்டமா தோள் மேல கைபோட்டுகிட்டு நிக்கிறாங்களே அது போல நின்னு கிட்டு அது என்ன கந்தாயம்ன்னு டிஸ்கஸ் செஞ்சோம். நான் சொன்னேன் "டேய் அது ஒரு வகை ஸ்வீட்டுடா". அதுக்கு கந்தசாமி "அட போடா அவன் லண்டன்ல படிச்சவன். அநேகமா அது எதுனா புத்தமமா இருக்கும்"ன்னு சொல்ல, அதுக்கு சங்கரோ " டேய் இது ஸ்போர்ட்ஸ் சம்மந்தப்பட்ட பேட் மாதிரிடா என சொல்ல நம்ம ராதா "போங்கடா லூசுங்கலா இவன் பாரின்காரன். எல்லா கெட்ட பழக்கமும் இருக்கும். அனேகமா அது எதுனா காண்டம் வகையறாவா இருக்கும்" அப்படின்னு சொல்ல எல்லோருக்கும் அது சரின்னு பட்டுது.வட்ட சங்கிலி மாநாட்டை பிரிச்சுட்டு ராதா தான் அவன் கிட்ட பேசினான்.

"நீ கேக்குற பிராண்ட் இருக்காது. வேற பிராண்டு தான் இருக்கும். எல்லா பெட்டிகடையிலும் இருக்கும். பெரியாஸ்பத்திரி போனா ப்ஃரீயாவே கிடைக்கும்"ன்னு சொன்னான். பீட்டர் பார்ட்டிக்கு புரிஞ்சு போச்சு நாங்க எல்லாம் வெத்துவேட்டு கேஸுன்னு. "மேன் அது புஃட் அயிட்டம்யா"னு சொல்லிட்டு எகத்தாளமா பார்த்தான். அதுக்கு ராதா "அப்படின்னா காளியாகுடில கேட்டு பாரு"ன்னு சொல்ல அவன் தலையில அடிச்சுகிட்டு போனான். அதன் பிறகு நாங்க KFC ன்னா என்னான்னு தெரிஞ்சுக்க ஏறாத மலை இல்லை, சுத்தாத அரசமரம் இல்லை. விடை கிடைத்தபாடில்லை. சரி ச்சீ சீ இந்த அயிட்டம் புளிக்கும்ன்னு அதை மறந்துட்டோம். இதல்லாம் நடந்தது 1986ல்.நிற்க.

பின்னே 1990ல் அபுதாபி வந்துவிட்டேன். என் ஆபீஸ்க்கு எதிரே KFC கடை நல்ல சிவந்தமண்னா இருந்துச்சு. என் கூட வேலை பார்த்த ஹாஜா கிட்ட கேட்டேன் அது என்ன கடைடான்னு. அது ஒரு ஹோட்டல்ன்னு சொன்னான். கடையின் ஜம்பத்தை பார்த்தா நிச்சயமா பில் 200 அல்லது 300 திர்காம் வரும் போல அதனால ஒரு சம்பளம் வாங்கி மொத்தமா எடுத்துகிட்டு போய் என்னன்னு பார்த்துடலாம்ன்னு ஒரு சபலம் எனக்கு. ஹாஜாவுக்கும் அதே.

சம்பள நாள் வந்தது. ஹாஜா என் கிட்ட "அந்த கடை பார்த்தாலே ரொம்ப டீசண்ட்டா இருக்கு. அதனால நாம நம்ம கெட்டப்பையே மாத்திகிட்டு போவோம்டா"ன்னு சொன்னான். உடனே புது ஷூ, புது பேண்ட், சட்டை, ஒரு தொப்பி ,10 திர்காம் ஸ்டிக்கர் ஒட்டின டியூப்ளிகேட் ரேபாண்ஸ் சன் கிளாஸ் எல்லாம் வாங்கிட்டோம். இந்த லெட்சனத்துல ஹாஜா ஆபரேஷன் செய்யும் டாக்டர் மாதிரி கையுறை, நம்புங்க ஜட்டி பனியன் கூட புதுசு.
சம்பளத்துக்கு முதல் நாள் இரவு தூக்கமே வரலை. இரவு 11 மணிக்கு ஹாஜா சோகமா வந்தான் என் ரூம்க்கு. என்னடான்னு கேட்டதுக்கு "நம்ம அக்கவுண்டண்ட் ரொம்ப சிடு மூஞ்சிடா"ன்னு சொன்னான். ஏன்னு கேட்டதுக்கு "நாளை சம்பளம் கண்டிப்பா போடுவீங்கதானே சார்"ன்னு போன்ல இப்ப கேட்டதுக்கு கன்னா பின்னான்னு திட்டிட்டு போனை வச்சுட்டார்டான்னு சொன்னான். நான் அதுக்கு "நீ எத்தனை தடவை போன் செஞ்சே"ன்னு கேட்டேன். ஒரு தடவை தான்னு சொன்னான். ஹாஜாவுக்கு தெரியாது நான் அதுக்கு முன்னமே 4 தடவை போன் செஞ்சு இதே கேள்வியை கேட்டு 4 வது தடவை "அடுத்த தடவை எவனாவுது போன் செஞ்சா போலீசை கூப்பிடுவேன்"ன்னு திட்டியதும்.

ஒரு விழியா தூங்காத இரவா கழித்துவிட்டு காலை ஆபீஸ் போயாச்சு. காலை முதல் வேலையே ஓடலை. எப்போதும் 10 மணிக்கு சம்பள கவர் கொடுத்துதிடுவாங்க. அன்றைக்குன்னு பார்த்து மதியம் 1 மணிக்கு கூட பெட்டியை திறக்கலை அக்கவுண்டண்ட். போச்சு 1-2 லன்ச் KFC சாப்பிட முடியாம போச்சு. அதை நம்பி சாப்பாடு கூட எடுத்து வரலை. பசியோட கிடந்தோம். 5 மணிக்கு ஆபீஸ் முடியும். 4.45க்கு கொடுத்தாங்க. ஆபீஸ்லயே தலைசீவி , முகத்துக்கு கிரீம் தடவி, பவுடர் போட்டு மேக்கப் எல்லாம் முடிஞ்சு வெளியே இருட்டி விட்டது கிட்டதட்ட. பகீர்ன்னு ஆகி போச்சு. இருக்காதா பின்ன சன்கிளாஸ் போட முடியாதே. பரவாயில்லைன்னு போட்டுகிட்டு தான் போனோம்.

அந்த இருட்டிலே சன்கிளாஸ், கையுறை சகிதமா எங்களை பார்த்தவுடன் என்ன நினைச்சு இருப்பாங்க. ஏதோ பார்வையற்றவர்கள் போலன்னு பரிதாபப்பட்டு ஒடனே ஒடிவந்தான் ஒரு பிலிப்பைனோ சிவப்பு சட்டை, சிவப்பு தொப்பி சர்வர். ஆனா எங்களுக்கு எல்லாமே கருப்பா தான் தெரிஞ்சுது. அவன் பேசின இங்கிலீஷ் என்னன்னு புரியலை. ஹாஜா உடனே "ஒன் KFC" ன்னு சொல்ல அவன் அதுக்கு என்னவோ சொல்ல நாங்க ஓக்கே ஓக்கேன்னு சொல்லிட்டு சுத்தியும் பார்த்தா எல்லா பிலிப்பைனி கஸ்டமரும் டவுசர் பாண்டியாவும், கிழிச்சிவுட்ட ஜீன்சுமா இருக்கானுங்க.

கொடுத்த ஆர்டர் வந்தது வட்ட வட்ட பன்னும், முட்டைகோஸ்(தயிரில் ஊறவச்சது), தக்காளி சாஸ், பிஃங்கர் சிப்ஸ். "என்னடா ஹாஜா பன்னு கொண்டாந்து வைக்கிறான் சரி சரி கண்டுக்காம சாப்பிடு"ன்னு மதிய பசி வேற. ஆளுக்கு 12 பன், முட்டை கோஸ் சாப்பிட்டோம். ஹாஜா உடனே "டேய் எப்படியா இருந்தாலும் பில் தீட்ட போறான் அதனால இன்னும் கொஞ்சம் பன் சாப்பிடலாம்ன்னு சொல்லிட்டு சர்வரை கூப்பிட்டு இன்னும் பன் கேட்க அவன் ஒரு மாதிரியா பார்த்தான். எனக்கு அப்பவே என்னவோ நடக்குது மர்மமா இருக்குதுன்னு பயம் வந்துடுச்சு. அவன் மட்டுமா அப்படி பார்த்தான் அங்க சாப்பிட்டவன் எல்லாரும் அப்படி பார்த்தானுங்க.
நான் நடுவே எழுந்து கடை வாசலில் இருக்கும் காயின் பூத்ல காசு போட்டு இந்தியாவில் இருந்த ராதாவுக்கு போன் செஞ்சேன். அவன் அப்பா தாசில்தார் ஆச்சா அதனால வீட்டிலே போன் இருந்துச்சு. ராதா அம்மா தான் எடுத்தாங்க. "என்னடா அம்பி எதுனா சொல்லனுமா ராதாகிட்ட"ன்னு கேட்டாங்க. "ஒண்ணுமில்லைம்மா KFCன்னா பன்னு தான்னு சொல்லுங்க"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "என்னவோ போங்கடா கோட் வேர்டுல பேசிக்கறேள்ன்னு மாத்திரம் புரியர்து"ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க.

அதுக்குள்ளா அடுத்த 12 பன் வந்து இருந்துச்சு. அதையும் வயிறு முட்ட சாப்பிட்டு அத்தனை பெரிய பெப்சியையும் புல்லா குடிச்சுட்டு எழுந்திருக்க முடியலை. சர்வரை கூப்பிட்டு "சர்வர் பில்"ன்னு கேட்டோம். சர்வர் ஒரு மாதிரியா பார்த்துட்டு ஒரு பக்கெட் முழுக்க லெக் பீஸ், செண்டர் பீஸ்ன்னு சொறிமுத்து அய்யனார் மாதிரி எங்களை பார்த்து கண் அடிக்குது எல்லா கோழியும். கூடவே 85 திர்காம் பில். நானும் ஹாஜாவும் பேசிக்கவே இல்லை. ரெண்டு பேர் முகத்திலும் ஈயாடலை. அதை சாப்பிடவும் ஒரு செண்டிமீட்டர் கூட இடம் இல்லை.. சரி அதை பார்சலா ரூம்க்கு எடுத்துட்டு போகலாமான்னு தெரியலை. வெட்கம் வேற. அங்க இருந்த மொத்த கூட்டத்தின் கண்களும் எங்க மேலத்தான். 100 ரூபாய் பில் கொடுத்துட்டு அவன் மீதி 15 கொடுத்த போது அவசரப்பட்டு ஹாஜா "டிப்ஸா வச்சிக்கோ"ன்னு சொல்ல எனக்கு அழுகையே வந்துடுச்சு.

சர்வர் அந்த நன்றிக்காக "சார் சாப்பிடலையா"ன்னு கேட்க நாங்க ஒரே குரலில் "we dont like this item'' ன்னு சொல்ல அந்த மொத்த கூட்டமும் தலையிலே அணுகுண்டு போட்ட மாதிரி எழுந்துட்டாங்க. கேஷ்ல உட்க்காந்து இருந்தவன் கீழே விழுந்துட்டான்.

வெளியே வந்தோம். "எதுனா பேசுடா ஹாஜா"ன்னு நான் தான் மௌனம் கலைத்தேன். அதுக்கு அவன் " 85 திர்காம் கொடுத்து பன்னு தின்னது பத்தி எந்த காலத்திலயும் யார்கிட்டயும் சொல்லிடாதே. அதுவும் ஜட்டி முதல் புதுசா போட்டதை கண்டிப்பா சொல்லிடாதே"ன்னு சொன்னான். நானும் இதுவரை யார் கிட்டயும் மூச்சு விடலை.

25 comments:

 1. :)
  ஸ்பைஸி சிக்கன்னு ஒண்ணு இங்கெல்லாம் கிடைக்குது.பயங்கர டிமாண்ட். அங்கே கிடைக்காதா.

  ReplyDelete
 2. வாங்க சின்ன அம்மனீ! இங்கயும் கிடைக்குமே! இந்த சம்பவம் 1990ல் நடந்தது. அப்ப எல்லாம் தெரியாது இப்படி ஒரு சமாச்சாரமே.

  இப்ப எல்லாம் லாண்டரில போட்ட துணி சரியான எண்ணிக்கைல வந்துட்டா கூட KFC பார்ட்டிதான்!ஸ்பைசி சிக்கன் தான்.

  ReplyDelete
 3. appaaa...sirichu vayiru valikkuthu :-)

  ReplyDelete
 4. // நானும் இதுவரை யார் கிட்டயும் மூச்சு விடலை. //

  இத்தனை நாள் மூச்சு விடாததற்கும் சேர்த்து, இந்த இடுகையில் பெருமூச்சு விட்டாச்சு போலிருக்கு.

  ReplyDelete
 5. :))) in jeddah KFC is LESS DEMAND. only AL-BAIK SPICY CHICKEN MORE DEMAND!!!

  ReplyDelete
 6. ஆஹா அதாவது ஒரு பேமிலி பக்கெட்க்கே 6 லெக் பீஸ் தான் மீதி எல்லாம் செண்ட்டர் பார்ட் போட்டு தாக்கினாங்க. ஒரு பார்ட்டின்னா லெக் பீஸ் எடுக்க போட்டி வந்து அவனவன் போட்டிய எடுத்துக்கும் அளவு வந்துட்டான். அப்ப பார்த்தான் அமரிக்கா கெண்டக்கியின் பேரன் சமீபத்துல(இது டோண்டு சமீபம் அல்ல உண்மையான சமீபம்! கோழி நெஞ்சுல நம்ம ஊரு எலந்தங்குடி, கீரங்குடி மஞ்சா சோறு வச்சு வுட்டான் செண்டர் பீஸ்க்கு.

  அது கூல் பீர்க்கு இதமா இருந்துச்சு. (அடுத்த நாள் ஞாயிறா இருப்பதால் பிச்சுகிட்டு போனாலும் கவலை இல்லை) ஆனா கோழிக்கு இருப்பதோ ஒரு வயிறு, 2 கால் ..... அதனால் டிமாண்ட்

  இப்ப பேமிலி பக்கெட்ல(பாக்கெட் இல்லல என் படத்தில் இருக்கும் பக்கெட்) முழுக்க லெக் பீசே வர்ரதில்லை. 1990 அபிஅப்பா மாதிரி ஆளுக்கு அதை தள்ளி விடுவாங்க. 2009 அபிஅப்பாவுக்கு எல்லாமே கூட கேட்டது கிடைக்கும்.

  அருணாசல அய்யர் மளிகையும் ஒன்னுதான், ரிலையன்ஸ் பிரஷ்ச்சும் ஒன்னு தான் உலகம் முழுக்க:-)))))
  தெரிஞ்சவனுக்கு ஒன்னு தெரியயதவனுக்கு ஒன்னு!

  ReplyDelete
 7. வாங்க முத்துகுமார்! நீங்க எந்த முத்துகுமார்???

  ReplyDelete
 8. வாங்க கல்ஃப் தமிழன்! வருகைக்கு நன்னி! இங்க கிடைக்குதுப்பா!!!

  ReplyDelete
 9. இராகவன் அண்ணா!

  வாங்க!அட ஆமாம்ல சொல்லிட்டனா! உடனே எல்லாரும் மறந்துடுங்க:-))

  நல்லா இருக்கீங்களா? அர்விந் சார் எப்படி இருக்கார்? அண்ணிய விசாரிச்சதா சொல்லவும்!!!

  ReplyDelete
 10. அபி அப்பா

  இது நாங்க முதல் முதலா பான் பீடா தின்ன கதையை விட சோகமால்ல இருக்கு.....

  ஒரு சந்தோக்ஷம்.... நம்ம மாதிரி அனுபவம் நெறையப் பேருக்கு இருக்குன்னு படிக்கும் போது....ஒரு ஆருதல் தேங்.....

  ReplyDelete
 11. சிரிக்க, சிரிக்க - படிக்க, படிக்க

  ஆமா அந்த மெக்டொனால்ட் போனதைப்
  பற்றி எதுவுமே எழுதலியே

  ReplyDelete
 12. anbu udan pirappe summa thamaasukkaaka thane ezuthi irukkiraai?

  ReplyDelete
 13. unga friend intha post ah padikanum..appuram irukku ungalukku:-)

  ReplyDelete
 14. //நெட் கூட ஒரு வாரமா சொதப்பிடுச்சு வீட்டிலே//

  ?

  அப்ப ஊர்லயா?

  ரைட்டு!

  ReplyDelete
 15. This is the first time i'm visiting your blog sir..this post is really gud.

  ReplyDelete
 16. கிகிகிகி

  ReplyDelete
 17. என்னமே சொல்லறிங்க ஒன்னும் புரியலை, நான் எல்லாம் கே.ஃப்.சி,மேக்டோனால்டு, ஸ்பானிஸ் பக்கம் எல்லாம் கால் இல்லிங்க கண்ணு கூட வைச்சது இல்லை. இம்ம் இருக்கப்பட்ட மனுசங்க
  புது ஜட்டி, புது பனியனு சும்மா சொல்லக்கூடாது கலக்கறீங்க அபி அப்பா.

  ReplyDelete
 18. /// சர்வர் ஒரு மாதிரியா பார்த்துட்டு ஒரு பக்கெட் முழுக்க லெக் பீஸ், செண்டர் பீஸ்ன்னு சொறிமுத்து அய்யனார் மாதிரி எங்களை பார்த்து கண் அடிக்குது எல்லா கோழியும். கூடவே 85 திர்காம் பில். நானும் ஹாஜாவும் பேசிக்கவே இல்லை. ரெண்டு பேர் முகத்திலும் ஈயாடலை///

  இந்த இடத்துல எனக்கு தொடர்ச்சி வராத மாதிரி தோணுது..

  சர்வர் ஒரு மாதிரியா பார்த்துட்டு >இதுக்கப்புறம் தொடர்ச்சி இல்லாத மாதிரி இருக்கு.

  ReplyDelete
 19. அய்யோ ஆண்டவா|||||| உங்களுடைய அறிவு திறனை எல்லாம் இப்படி வெளிப்படுத்தாதீர்கள். (எங்களுக்கு தெரிந்த அறிவுத்திறன் எல்லோருக்கும் தெரிய வேண்டுமா||||||||

  ReplyDelete
 20. இதே போல நமக்கும் ஒண்ணு நடந்துச்சுங்க!KFC வற்றியாடான்னு கேட்டு நம்ம நண்பன் ஒருத்தனைக் கூட்டிட்டுப் போனோம்!அங்க போய் சிக்கன் ஆர்டர் பண்ணி வந்ததும் அய்யா அலர்றாரு சிக்கனா அப்படீன்னு.......எனக்கு சிக்கன் வேணான்னு சொல்லிட்டு சர்வரைக் கூப்புட்டான்!....ரொம்ப கூலா, 1 வெஜ் பிரியாணி ப்ளீஸ்...அப்படீன்னான்...அப்போ சர்வர் மூஞ்சியப் பாக்கணுமே!........

  ReplyDelete
 21. Oh, you reminded me the bucket chicken... Inaike poi sapidanum... Salary than vandhduchula... Enna ippadi diet la irukave vida matinguringale....

  ReplyDelete
 22. சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அபிஅப்பா.

  ReplyDelete
 23. ஆனா எப்படின்னே தெரியல. இந்தியாவுல இருந்து அபுதாபி போனவங்க எல்லாம் ஒருமாதிரி காமெடியன் ஆயிடுறாங்க

  என்னோட அக்கா புருஷனும் இந்த மாதிரி நிறைய கதை சொல்லுவார். சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாகும் . அருமையான பதிவு. நல்ல சொல் நடை .

  ReplyDelete
 24. hahhahahaha


  சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அபிஅப்பா

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))