பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 17, 2009

கோவை பயணம் # 1


என்ன எழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு நாலு தலைமுடி போனது தான் மிச்சம். பேசாம கோவை பயண கட்டுரை எழுதிடலாம்ன்னு முடிவு செஞ்சாச்சு.


நான் அம்பிஜா கல்யாணத்துக்கு போறேன். யார் யாரெல்லாம் என் கூட வரீங்கன்னு கேட்டதுதான் தாமதம். ஒட்டுமொத்த குடும்பமும் கையை பூமிக்கு கீழே புதைத்துக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை. "சரி நான் வரலை இப்ப யார் யார் வரீங்கன்னு" கேட்டதும் நட்டு வாட்டர் டேங் மேலே நின்னு ரெண்டு கையும் தூக்கியது உட்சபட்சம்.


ஒரு வழியாக பிளைட், கார், வேன், ஆம்னி எல்லாம் தேய்ஞ்சு போய் கடைசியாக அரசு பேருந்து பயணம் முடிவாகி தஞ்சை வரை நட்டு துங்கியதால் எல்லாம் நல்லபடியா தான் போச்சு. வல்லம் வந்தபோது என் சீட்டுக்கு எதிரே இருந்த பட்டாச்சாரியார் பட்டாசு வெடிச்ச மாதிரி கத்தியதால் டிரைவர் பிரேக் போட்டு கத்தியதால் பஸ்ஸில் பலபேர் பிரேக் போடாமலே கத்தினோம். அடுத்த வினாடியே எனக்கு தெரிந்து விட்டது. புள்ளாண்டான் விளையாடிட்டான்ன்னு. அவர் வந்து உட்காந்ததுமே எனக்கே கடிக்க தோணித்து. பின்னால திரும்பி அவர் "மாமி கொழந்தைக்கு பல்லு கொழுக்கட்டை செஞ்சு படைப்பதா சக்கரத்தாழ்வாருக்கு வேண்டிக்கோங்கோ எல்லாம் சரியாகிடும்"னு சொல்ல நானும் ஆட்டையில் கலந்து கொள்ள "மாமா பூர்ணம் வச்சதா ப்ளைனாவா"ன்னு கேட்டு இடுப்பில் ஒரு இடி வாங்கியது தான் நான் கண்ட பலன்.


இதற்கிடையில் பதிவர் நண்பர் வெயிலான் "எப்ப வந்து கோவை சேர்வீங்கன்னு கேட்டு குளிரில் காய்ஞ்சு போய் அப்துவை அழைக்க ஏர்போட் போயிட்டார்.நான் இரவு வந்து சேர்ந்து காலை கல்யாணம் முடிச்சு மயிலக்காவுக்கு போன் செஞ்சேன். "ஆட்டோவிலே ஏறி உட்காந்து ஆட்டோ டிரைவர் கண்ணை மூடினா நம்ம வீடு தான்"ன்னு சொல்ல எனக்கு லேசா பயம் வந்துச்சு. ஆட்டோ டிரைவர் கண்ணை திறந்து வச்சிருந்தாலே சொர்கம் கன்பர்ம்டு. இதுலே கண்ணை மூடி கிட்டா ஒரு வேளை பர்த் கோச் கிடைக்குமோ என நினைத்து கண்ணை மூடி கொண்டேன்.


போகும் வழியில் "ஐய்யோ நாம போக போவது பெரிய ஃபேஷன் டிசைனர் வீட்டுக்கு. இப்படி 16 முழம் கட்டிகிட்டு வந்தா நீ யாரோ நான் யாரோ என சொல்லி ஆட்டோவில் தள்ளி உட்காந்து கொள்ள "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"ன்னு படிக்கொண்டே அபிஅம்மாவும் சந்தோஷமாக தள்ளி உட்கார மயிலக்கா வீடு வந்தாச்சு.


"என்னங்க பொண்ணு "ராசாத்தி"யாட்டம் இருக்குங்க"ன்னு சொல்லி கொண்டே உள்ளே போக உள்ளே ஒரு பெண் உட்காந்து இருந்தது.
"இது யாருன்னு நான் அபிஅம்மாவிடம் கேட்க "இது தான் பாட்டியாலா"ன்னு சொன்னாங்க. அதே நேரத்தில் மயிலக்கா வந்து இது தான் சந்தனமுல்லைன்னு சொல்ல அபிஅம்மா "அபி கூட இதை தான் தைக்கனும்னு சொல்ல எனக்கு ஒரே குழப்பம்.அதற்குள்ளாக தாரணிபிரியாவின் "நான் வாசலுக்கு வந்துவிட்டேன்" என போன் வர "உள்ளே வந்தே சொல்லியிருக்கலாமே" என்கிற என் குழப்பம் தீரும் முன்பாகவே முல்லை ஓடிப்போய் கதவின் பின்னே மறைந்து நின்று "பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ"ன்னு பயம் காட்ட நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஆனா கள்ளுளி மங்கி தாரணிபிரியா அப்படி ஒரு நிகழ்வு நடந்ததையே காட்டிக்கொள்ளாததால் முல்லை 72 மணி நேரம் பதிவு போடாமல் பந்த் அறிவித்தது இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லா விஷயம்.

தாரணி பிரியா கலகலபிரியாவாக அந்த இடத்தை கலகலப்பாக, சஞ்சய் வராத குறையை சஞ்சய் கேமிரா போக்கி கொண்டிருந்தது. "இந்த இடத்தில் இல்லாதங்க பத்தி கமெண்ட் அடிக்காதீங்கப்பா" என மயிலக்கா சொன்ன போது சின்ன ஷாக் எல்லாருக்கும். பின்னெ "சஞ்சய் பத்தி பேச இதற்கு விதி விலக்கு"ன்னு சொன்ன பின்னே தான் எல்லாருக்கும் மூச்சு வந்தது. பின்னே தமண்ணா சஞ்சய் அப்படின்னு ஏதோ பேசி கொண்டிருந்தார்கள். எனக்கு ஏன் வம்பு.நான் வாயை மூடி கொண்டு இருந்தேனாக்கும்.


அப்போது தான் தமிழரசி வந்தாங்க. பார்த்ததும் ஏதோ எங்க வீட்டு பொண்ணை பார்த்த மாதிரி இருந்துச்சு. டபார் டபார்ன்னு மனதில் பட்டதை கேட்பதும், கலகல சிரிப்பும், மயிலக்காவிடம் பல்பு வாங்குவதும் அப்படியே டிபிகல் தஞ்சை குணம் இருந்துச்சு.


என்னை பார்த்து "நீங்க சிவிலா?"ன்னு கேட்ட போது "நான் தான் சிவில் அவர் கிரிமினல்"ன்னு அபிஅம்மா என்னை கை நீட்டி சொன்ன மாதிரி என் காதுக்கு பட்டது.
தொடரும்....
செல்வா, சஞ்சய், மஞ்சூர் ராஜா குடும்ப சந்திப்பு அடுத்து வரும்....

15 comments:

 1. நீங்க சொல்றது எந்த தமிழரசி!

  அவுங்க ஆந்திராவாச்சே!

  ReplyDelete
 2. சூப்பரோ... சூப்பர்...

  கலக்கறீங்க தலைவா...

  ReplyDelete
 3. //"நான் தான் சிவில் அவர் கிரிமினல்"ன்//

  hahahaha

  ReplyDelete
 4. நாலு தலைமுடி போனது தான் மிச்சம். //
  இருக்குறதே அவ்ளோ தானே. ;)

  நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்கன்னு தெரியுது. பதிவு முழுக்க சுவாரசியம்.

  ReplyDelete
 5. ஆகா..சூப்பர் பயணம் போல!!

  ReplyDelete
 6. கலகலப்பான சந்திப்பு:)!

  ReplyDelete
 7. அவங்க தமிழரசி இல்லைங்க. வீட்டு புறா சக்தி செல்வி

  ReplyDelete
 8. அடடா...இதென்ன கலாட்டா????எப்போ???

  ReplyDelete
 9. //"இந்த இடத்தில் இல்லாதங்க பத்தி கமெண்ட் அடிக்காதீங்கப்பா" என மயிலக்கா சொன்ன போது சின்ன ஷாக் எல்லாருக்கும். பின்னெ "சஞ்சய் பத்தி பேச இதற்கு விதி விலக்கு"ன்னு சொன்ன பின்னே தான் எல்லாருக்கும் மூச்சு வந்தது. பின்னே தமண்ணா சஞ்சய் அப்படின்னு ஏதோ பேசி கொண்டிருந்தார்கள். எனக்கு ஏன் வம்பு.நான் வாயை மூடி கொண்டு இருந்தேனாக்கும்.
  //

  இந்த விஜிமாமி இதெல்லாம் சொன்னாங்களா? என்னை வச்சி காமெடி பண்றதுன்னா அவ்லோ இண்ட்ரஸ்ட்.. நல்லா இருங்க மகா ஜனங்களே..

  அவுக தமிழரசி இல்லீங்க.. ஊட்டுப்பொறா டமிள்செழ்வி..

  ReplyDelete
 10. எதோ நல்லா இருந்தா சரிதான் :))

  சஞ்சய் பூந்தி நாங்க சரியத்தான் சொன்னோம் :)

  ReplyDelete
 11. அட.
  தாரணி, சொல்லிருந்தா பெரியவங்கள நாங்களும் வந்து பாத்திருப்பமில்ல.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))