பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 6, 2010

நட்ராஜ் டான்ஸ் களேபரம்!! சிம்பு கலவரம்!!!நட்ராஜுக்கு சிம்பு டான்ஸ் மேல அத்தனை ஒரு கிரேசி. வேற வழியே இல்லாம நாங்களும் பார்த்தே ஆகவேண்டிய நிலை. நல்ல நேரம் எங்க டி.ஆர் டான்ஸ் போட்டு காமிக்கலை இன்னும்.

@@@@@@@@@@@@@@

இப்ப தான் ஸ்கூல் சேர்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள டெஸ்ட் வருதாம். அவங்க மிஸ் சிலபஸ் கொடுத்துட்டாங்க. அ முதல் ஃ வரை ஓரல், அ முதல் ஈ வரை எழுதனும், 1 முதல் 10 வரை ஓரல், 1 முதல் 5 வரை எழுதனும், ஆங்கிலத்தில் ஜானி ஜானி எஸ் பாபா, தமிழில் பள்ளி செல்ல விரும்பு ரைம்ஸ்...இப்படியாக.

அவன் அம்மாவுக்கும், அக்காவுக்கும் இது ரொம்ப ஹெவியாக இருக்கின்றதாம். எனக்கும் நட்ராஜுக்கும் அப்படி தோன்றவில்லை.ஏனனில் நட்ராஜ் இதை எல்லாம் படிக்க போவதில்லை என நினைக்கின்றேன். என்னை விட்டா ஜஸ்ட் லைக் தட் ஊதி தள்ளி விடுவேன். இதே சிலபஸ் நான் காலேஜ் படிக்கும் போது இருந்திருந்தா நான் யுனிவர்சிட்டி பர்ஸ்ட் வாங்கியிருப்பேன் என்பது வலையுலகம் அறிந்ததே.

எதுக்கும் இருக்கட்டும் என நினைத்து அ முதல் ஃ வரை எழுதி பார்த்தேன். "ஔ" மட்டும் கடைசி வரை வரவில்லை. அதுக்கு பதில் "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"ன்னு டெம்பிளேட் பின்னூட்ட அவ்வ்வ்வ்வ்வ்வ் தான் வருகின்றது. அமைதியாக, எழுதி பார்த்த சிலேட்டை எச்சில் துப்பி அழித்து விட்டேன்.

@@@@@@@@@@@@@@@

சமீபமாக நட்ராஜ் கையை தொங்க போட்டு கொண்டு தோள் இரண்டையும் குலுக்குகினான். அதாவது "எனக்கு தெரியாது", "யார் எக்கேடு கெட்டா எனக்கு என்ன", "நான் அவனில்லை", "வேற வேலை இருந்தா போய் பாரு, என்னை டிஸ்டர்ப் செய்யாதே" என்பன போன்ற அர்த்தமாம். எல்லாம் சீமாச்சு அண்ணாவின் ரெண்டாவது பெண் சூர்யாவின் பாதிப்பாம். சூர்யா பரவாயில்லை. பெரியவள் ஷண்முகா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். டென்னிஸ் விளையாட கிளப்க்கு போன போது ஷண்முகா ஃப்ரம் அமரிக்கா என தெரிந்த ஒரு நண்பர் தொண்டையை எல்லாம் நல்லா கனைத்து கொண்டு 'வாட் ஈஸ் யுவர் நேம்?" என கேட்ட போது அது ஷண்முகாவுக்கு புரியாமல் போக பின்னே நாள் விம் போட்டு விளக்க அவரிடம் "இன்னும் வைக்கலை"ன்னு கூலாக சொன்ன போது நான் அதிர்ந்தேன்(லைட்டா) ஆனா கேட்ட நண்பருக்கு சரியாக அந்த ஆங்கிலம் மட்டுபடாமையால் விட்டு விட்டார்.

@@@@@@@@@@@@@@@@

நட்ராஜ் பள்ளிக்கு அழைக்க போன போது ரொம்ப ஆர்வமாக அவன் அம்மா 'பையன் எப்படி?' என கேட்க அதற்கு அவங்க மிஸ் "ரொம்ப கோவம் வருது. எல்லார் கையிலயும் பேப்பர் கொடுத்து உங்களுக்கு என்ன தெரியுமோ அதை வரைந்து கொடுங்க என சொல்லி கொடுத்த போது இவன் வாங்கிய உடனேயே ரொம்ப கோவமா கிறுக்கி குடுத்தான். இப்படி செய்யலாமா நான் படம் தானே போட்டு குடுக்க சொன்னேன் என சொன்னதுக்கு 'மிஸ் இது நூடுல்ஸ் படம் மிஸ்'ன்னு சொல்றான்.

முதல் நாள் மிஸ் எல்லாரிடமும் "அ" எப்படி போடுவது தெரியுமா?ன்னு கேட்க இவன் தெரியும் என சொல்லியிருக்கான். சொல்லு என சொன்ன போது இவன் சொன்ன பதில் "ஆல்ட் 2 அடிச்சு A அடிக்கனும் மிஸ்"

என் மனைவி கிட்டே சொன்னேன். "இனி பையன் எப்படின்னு கேப்பியா கேப்பியா கேப்பியா?"


@@@@@@@@@@@@@@@

நம்ம இயற்கை மகள் ராஜி பொண்ணுக்கு(அதாவது ராஜி பொண்ணு அப்படின்னா ராஜின்னு தான் அர்த்தம், எங்க பக்கத்துல எல்லாம் அபிபொண்ணு, சங்கி பொண்ணு இப்படித்தான் கூப்பிடுவோமாக்கும்) இன்றைக்கு பிறந்தநாள். எத்தனையாவது என கேட்கும் அன்பர்கள் ஒரு நல்ல பரிசாக எனக்கு பார்சல் செய்து விட்டு தனி மடலிட்டால் சொல்லப்படும். இரவு 12 மணிக்கு பதிவு போட்டு தாக்கலாம் என நினைத்தேன். நேற்று மட்டும் முப்பது தடவை மின்சாரம் போனது.அதில் ராத்திரி 12 மணிக்கு போனதும் அடக்கம். காலை எழுந்து பார்த்தா ஜோசப் குழுமத்துல கும்மி ஆரம்பிச்சு வச்சுட்டாரு. அதனால என்ன இங்கிட்டும் ஒரு வாழ்த்து சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்.வாழ்க ராஜி பொண்ணு.

@@@@@@@@@@@@@@@@@100 சதம் நம்புகிறேன். வீடியோ வேலை செய்யாது என்று. பார்ப்போம் செய்யுதா இல்லியான்னு:-)

28 comments:

 1. நாட்டுல இந்த தகப்பனுங்க தொல்ல தாங்கமுடியல சாமி! (டயலாக்கு உபயம் குசும்பன்)

  ReplyDelete
 2. ந‌ல்ல ஆட்ட‌ம்.சிம்புவை க‌வித்திடுவார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. வாங்க விதூஷ்! மண்டையிலே பதிவு போட மேட்டர் இல்லைன்னா எதுனா எழுத தானே புள்ளையே பெத்துக்கறோம்:-))) நன்றி நன்றி!!

  ReplyDelete
 4. \\வடுவூர் குமார் said...

  ந‌ல்ல ஆட்ட‌ம்.சிம்புவை க‌வித்திடுவார் என்று நினைக்கிறேன்.
  \\

  வாங்க குமார் அண்ணே! மிக்க நன்றி! பை தி பை உங்க ஊருக்கு சமீபத்திலே போனேன். இப்ப உங்க ஊர் பறவைகள் சரணாலயத்தில் அதிகமாக பறவைகள் வருது. ஒரே குறை கேமிரா எடுத்து போகாம விட்டுட்டேன்.

  ReplyDelete
 5. நூடுல்ஸ் படம் :)))))))))))))))

  வாழ்த்துகள் ராஜீ

  ReplyDelete
 6. நட்டு கலக்குறாரு.

  ராஜிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. \\☀நான் ஆதவன்☀ said...

  நூடுல்ஸ் படம் )))))))))))))

  வாழ்த்துகள் ராஜீ
  \\

  நன்றி ஆதவா. இப்பவே நூடுல்ஸ் படம் எல்லாம் போடுறானே. +2 படிக்கும் போது அமீபா படம் எல்லாம் அட்டகாசமா போடுவான் போலிருக்கு:-))

  ReplyDelete
 8. வீடியோ வேலை செய்தது. டான்ஸ் சூப்பர். தலைப்பு ரொம்பப் பொருத்தம்!

  ஒள/அவ்வ்-ரசித்தேன்!

  //இது நூடுல்ஸ் படம் மிஸ்//

  :)!

  //ஆல்ட் 2 அடிச்சு A அடிக்கனும் மிஸ்//

  ரசிக்க வைத்த................பில்ட் அப்:))!

  இயற்கை மகளின் மகளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. தல நட்ராஜ் ஏதோ தப்பு பண்ணிட்டான் போல பாவம் கால் விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்டுக்கிறான். மன்னிச்சிடுங்க ;)))))

  \\நம்ம இயற்கை மகள் ராஜி பொண்ணுக்கு இன்றைக்கு பிறந்தநாள். எத்தனையாவது என கேட்க\\\

  இயற்கை மகள் ராஜி பொண்ணுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)))

  ReplyDelete
 10. நட்டு சிம்புவுக்கு தண்ணி காட்டறான். இயற்கை ராஜிக்கு பிறந்தநாளா இல்லை அவங்க பொண்ணுக்கு பிறந்தநாளா. யாரா இருந்தாலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. நான் மட்டும் டவுட்டு நினைச்சேன்...யப்பாடா வழக்கம் போல தல தான் தப்பாக எழுதியிருக்கு ;)))

  சீக்கிரம் மாத்திடுங்க ;)

  ReplyDelete
 12. அவ்வ்வ்வ்வ் ஊர் மானம் தலைகீழ டான்ஸ் ஆடுதேய்ய்ய்ய்ய்! தம்பி எந்திரிச்சு ஆடுடா ராசா! :))))

  ReplyDelete
 13. சாப்பிட்டு குடல் ஏறிக்க போகுதுடா தம்பி -
  அம்மா என்றால் அன்பு :)

  கேமராவை கையில வைச்சுக்கிட்டு இவுரு பண்றாரு வம்பு ! அண்ணோவ்வ்வ்வ் போய் புள்ளைய நின்னு ஆடறதுக்கு பிராக்டீஸ் செய்ய சொல்லுங்க !

  ReplyDelete
 14. உங்க பையன விட என் பொண்ணு சின்னவ , அவ இன்னும் வித்யாசமா எதாவது பண்ணுவ. நான் உஷாரா இறுக்கம்,
  ராஜியின் மகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. Nice dance :-) Aana indha dance ah silla varushathuku munnadi ellam, chidambaram bus stand la patha madri niyabagam ;-) Simbu oru vela adha pathu than kathukittu irupaaro????

  ReplyDelete
 16. பிட், பிட்(?!)டாக எல்லா
  துணுக்குகளும் நச்!
  ராஜி மகளுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. நட்ராஜ் அப்டேட்ஸ் கலக்கல்.

  பிறந்த நாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..
  ராஜியோட பொண்ணு இல்லீங்க மக்களே.. ராஜிக்கு அதாவது எனக்குத்தான் இன்னிக்கு பர்த்டே...

  ReplyDelete
 18. வருகை தந்த எல்லோருக்கும் மிக்க நன்றி நன்றி. ஆகா எங்க பக்க வழக்கப்படி ராஜிபொண்ணுன்னு சொல்லிட்டேன். அதனால ராஜியோட பொண்ணுன்னு தப்பா புரிஞ்சுகிட்டீங்களே. அந்த புள்ள இப்பதான் நாலாம்பு முடிச்சு அஞ்சாப்பு போவுது. பச்ச மண்ணு:-)) சரி சரி உங்க வாழ்த்து எல்லாத்தையும் மனப்பூர்வமா ராஜி ஏத்துகிட்டு பதிலுக்கு உங்க அக்கவுண்ட் நம்பர் குடுத்தா தலைக்கு ஆயிரம் ரூவா கிரடிட் செய்வதா சஞ்சய் தலை மேல சத்தியம் பன்ணுதுங்கோ:-))

  ReplyDelete
 19. ஹி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜி:)!

  ReplyDelete
 20. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...


  நல்லாருக்குண்ணே....

  படமும் வெளக்கமும்.

  ReplyDelete
 21. சூப்பரான டான்ஸ்.

  ReplyDelete
 22. ஹா ஹா ஹா... சூப்பர் அபி அப்பா... actual ஆ உங்க வீட்டு ஹீரோ நடராஜ் தான் போல இருக்கு... சூப்பர் டான்ஸ் தான்.. அதுலயும் noodles வரைஞ்சது.... ஹா ஹா ஹா... சிரிக்க தெம்பில்லை இனி...
  ராஜிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. பரவாயில்ல அவங்க அப்பா அளவுக்கு இல்லன்னாலும் நட்டு சார் நல்லாவே ஆடுறார்...

  ReplyDelete
 24. Nice Dance :-) Simbuvukku anuppi vainga ....

  ReplyDelete
 25. //100 சதம் நம்புகிறேன். வீடியோ வேலை செய்யாது என்று.//

  செய்யுதே. செய்யுதே.

  ReplyDelete
 26. அன்பு அபி அப்பா ....நான் உங்களுடைய blog fulla இப்போ தன படிச்சி முடிச்சேன்....உங்க எழுது ரொம்ப நல்லா இருக்கு ....நானும் உங்க பாகத்து ஊருதான் ..கும்பகோணம்....இப்போ ஜித்தா ல இருக்கேன்..உங்கள் பதிவு படிக்கும் போது எனக்கு என்னுடைய ஊர் நினைப்பு வருது....யாரவது எங்க ஊற பத்தி blog எழுதுன தெரிய படுத்துங்கள் ...நன்றி....

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))