பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 21, 2010

மனைவியை குத்த ஆயிரத்தில் சில காரணம் மட்டும் இங்கே!!!!

 முதல்ல இதை படிங்க மக்கா! http://ultoo.com/login.php?refererCode=2892467E&flag=hide 

எல்லோரும் எல்லோரையும் குத்தியாச்சு. ஆனா மனைவியை குத்த எழுதியவர்கள் மட்டும் கொஞ்சம் பயந்த சுபாவமா காமிச்சுகிட்டு எழுதிட்டதால வேற வழி எனக்கு தெரியவில்லை. நெஞ்சுல தைரியத்தையும், கண்ணுல பீதியையும் வச்சுகிட்டு மீதிய இங்க கொட்டுறேன். இது என் தனிப்பட்ட குத்து மட்டுமே. இதே காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவங்க அவங்க வீட்டுல கச்சேரி வச்சுகுங்க.

1. என்னங்க மணி 5 ஆச்சு, என்னங்க மணி 5.10 ஆச்சு எழுந்திருக்கலையா? என ஸ்நூஸ் வச்ச அலாரம் மாதிரி காலை முதல் பிடுங்கல் வருமே அப்ப தான் அந்த நாளின் முதல் பன்ச் ஆரம்பிக்க தோன்றும்.

பின்ன என்ன ராத்திரி படுக்கும் போது 5 மணிக்கு எழுப்பி விடு. விளையாட போகனும்னு சொல்லி படுத்தி எடுத்துட்டு ...என் தூக்கமும் போனது தான் மிச்சம்.

2. குளியல் அறையில் நுழைந்து கண்ணாடி பார்க்கும் போது வருமே ஒரு எரிச்சல். என் முகத்தை பார்த்து இல்லை. ஏதோ ஏக் துஜே கேலியே படத்து மாதவி மாதிரி என் முகத்தில் வட்டமா ஒரு பொட்டு இருக்கும். அப்ப வரும் ஒரு எரிச்சல். 'எத்தனை தரம் சொல்லியிருக்கேன்,அசிங்கமா கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு வைக்காதேன்னு" என ஒரு சத்தம் போட்டுட்டு ஒரு குத்து விட தோன்றும்.

பொட்டு ஒரு கெட்ட விஷயமா? நான் என்ன உங்க பைக்லயா வச்சேன்? பாத்ரூம் கண்ணாடில தான வச்சேன்.

3. குளித்து முடித்து தலை சீவ கண்ணாடி முன்னே நிற்கும் போது அந்த சீப்பிலே இருக்கும் கொத்து தலை முடி தான் என்னை அதிகமாக டென்ஷன் ஆக்கும் விஷயம். "தலை சீவினா அந்த முடியை சுருட்டி துக்கி போட மாட்டியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ"ன்னு அலறி கிட்டே ஒரு குத்து விட தோன்றும்.

இந்த வீட்டிலே நான் மட்டும் தான் பொம்பளையா? உங்க பொண்ணு இத செஞ்சிருக்க கூடாதா? புடிக்கலைன்னா எடுத்து போட்டுட்டு சீவிக்க வேண்டியது தானே!

4. அடுத்து சாப்பிட ஆரம்பித்தவுடன் எனக்கு பெரிய பிரச்சனையே விக்கல் தான். சாப்பிடுவது போல நினைத்து கொண்டாலே விக்கல் வரும் பார்ட்டி நான். அத்தனை ஏன் தண்ணீர் குடித்தாலே விக்கல் வரும்னா பார்த்துகுங்க. அப்படிப்பட்ட எனக்கு சாப்பாடு வைத்து விட்டு " இன்னிக்கு ஒரு புது மெத்தேட்ல இட்லி சுட்டேன்"அப்படீன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே விக்கல் வந்து "அய்யோ தண்ணி அய்யோ தண்ணி"ன்னு கத்த ஆரம்பிச்சு .....சாப்பாடு வைக்கும் முன்னே தண்ணி வைக்க தெரியாதா"ன்னு சண்டை முடியுமே அப்ப அந்த சண்டைக்கு முடிவுரையா ஒரு குத்து விட தோன்றும்.

வித விதமா சட்னி, இட்லி, பொங்கல் இதல்லாம் கண்ணுக்கு தெரியலை. தண்ணி தான் தெரியுது. நான் தான் கேக்குறேன். தண்ணியாவது எடுத்துகிட்டு உட்காந்தா என்ன சாப்பிடும் போது.

5. கிளம்பலையா இன்னும் கிளம்பலையா இன்னும் 7.30க்கு ராகுகாலத்துக்கு முன்ன படி இறங்கனும் என 6 மணி முதல் அனத்தி எடுத்துட்டு நான் 7.28க்கு வண்டி எடுத்த பின் வீட்டை பூட்டி விட்டு வரும் மனைவி என்னங்க செல் போனை மறந்து விட்டேன் கொஞ்சம் இருங்க என கேட் முதல் எல்லா கதவையும் திறந்து உள்ளே போய் அதை தேடி கடைசியில் பிரிட்ஜ் உள்ளே இருந்து அதை எடுத்து(வரும் முன் அவசரத்திலே தண்ணீர் குடிக்கும் போது போனை உள்ளே வச்சிருப்பாங்க) வண்டி ஏறும் போது கொழுத்த ராகுகாலமாகியிருக்குமே அப்ப ஒரு குத்து விட தோன்றும்.

பண்ற தப்பு எல்லாம் நீங்க. நீங்க படுத்தின பாடுல எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. ராகுகாலமா இருந்தா என்ன? அதான் சனிய கூட கூட்டிகிட்டு போறனே. சனிய விட ராகு அத்தனை மோசம் இல்லை.

6. அடுத்து வண்டி ஏறும் போது அந்த ஃபுட் ஸ்டெப்பில் காலை வைத்து ஏதோ மாடி படி ஏறுவது போல ஏறி என்னை நிலைகுலைய வைக்கும் போது என் பிரஷர் எல்லாம் எகிறி ஒரு குத்து விட தோன்றும்.

இதுக்கு நீங்க கார் வாங்கி கூட்டிகிட்டு போகனும். சும்மா பேசக்கூடாது.

7. நீங்க ரோட்டை பார்த்து ஓட்டுங்க நான் ஹேண்ட் சிக்னல் எல்லாம் பண்ணிக்கிறேன் என சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனால் வலது பக்கம் கை காமின்னு சொல்லும் போது மிகச்சரியாக இடது பக்கம் காண்பித்து விட்டு என்னை எவனாவது "வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?"ன்னு கேட்கும் போது "வீடே பின்னாடிதான் உட்காந்திருக்கு. தேவைப்பட்டா உடனே சொல்லிக்கலாம்" என பதில் சொல்லிட்டு பின்னால் இருக்கும் வீட்டுக்கு ஒரு குத்து விட தோன்றும்.

அய்யோ நான் வலது கை தான் காமிச்சேன். ஆனா இடது பக்கமா காமிச்சுட்டேன். அந்த சண்டாளன் தான் சரியா வரலை. நீங்க மெதுவா போவ கூடாதா?

8. இந்த பதிவை படி. செம காமடியா இருக்குன்னு சொல்லும் போது "இன்னிக்கு கரண்ட் பில் கட்டனும்"ன்னு சம்மந்தம் சம்மந்தமில்லாம பேசுவது போல அவமானப்படுத்துவது என்னை மட்டுமில்லை தமிழை வளர்க்கும் வலையுலகமே உங்களையும் சேர்த்து அவமானப்படுத்தும் போது ஒரு குத்து விட தோன்றும்.

இந்த நெட்ட முதல்ல புடுங்கினா இந்த வீடும் உறுப்படும் நீங்களும் முக்கியமா நானும் நிம்மதியா இருப்பேன்.

9. இங்க பாரேன் கவிதா ஒரு பதிவு போட்டிருக்காங்க. விவாகரத்து பத்தின்னு சொல்லும் போது "ஹூம் நான் மட்டும் விவாகரத்து செஞ்சிருந்தா உங்களை இருபத்தி ஏழாவது தடவையா கட்டின புருஷனை விவாகரத்து செஞ்சவன்னு கின்னஸ்ல வந்திருக்கும்' என அங்கலாய்க்கும் போது ஒரு செம குத்து விட தோன்றும்.

ஏன் நான் சொல்றது என்னா தப்பு. நீங்களே சொல்லுங்க.

10. இப்படி நான் சொல்வதுக்கு எல்லாம் சிவப்பு???மஞ்சள்!!!! எழுத்தில் பதிலுக்கு பதில் சொல்லிகிட்டே வந்தா பத்தாவது குத்து விட தோன்றும்.

குறிப்பு: எல்லாம் தோன்றும் தோன்றும் தான். இது வரை குத்து விட்டதில்லை என்பதை என் அன்பான பெண்ணீயவாதிகளுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.

25 comments:

 1. சிவப்பு சிவப்பா எழுதாட்டி உமக்கு உடம்பெல்லாம் சிவப்பு கோடு வுழுந்திருக்கும்ன்னு எங்களுக்கு தெரியும் இருந்தாலும், தெரியாதமாதிரியே நடிச்சுக்கிட்டு படிச்சுக்கிடறோம் ஒ.கேவா? :))))))))))

  ReplyDelete
 2. //என்னங்க மணி 5 ஆச்சு, என்னங்க மணி 5.10 ஆச்சு எழுந்திருக்கலையா? என ஸ்நூஸ் வச்ச அலாரம் மாதிரி காலை முதல் பிடுங்கல் வருமே அப்ப தான் அந்த நாளின் முதல் பன்ச் ஆரம்பிக்க தோன்றும்.//
  முன்னாடி எழுந்திருக்கற தங்ஸ்லாம் இப்ப ரொம்ப் கம்மி பேருங்க :)

  ReplyDelete
 3. //பூட்டி விட்டு வரும் மனைவி என்னங்க செல் போனை மறந்து விட்டேன் கொஞ்சம் இருங்க என கேட் முதல் எல்லா கதவையும் திறந்து உள்ளே போய் அதை தேடி கடைசியில் பிரிட்ஜ் உள்ளே இருந்து அதை எடுத்து(//

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 4. கிருஷ்ணா கணவர்களைக் குத்த பல கரணங்கள் ன்னு
  எதிர் பதிவு போடுங்க.
  அபிஅப்பா உங்க வீட்டு பூரிக்கட்டையை ஒளிச்சு வச்சிடீங்களா ?

  ReplyDelete
 5. அப்பாவி ரங்கமணிகள் சங்கம் சார்பாக நன்றிகள் பல

  ReplyDelete
 6. எல்லாம் சரி... இப்படி இரண்டு கருத்துக்களையும் நீங்களே சொல்லிட்டா, நாங்க எதைத்தான் பின்னூட்டமா போடுவதாம்...

  இதெல்லாம் சரியில்ல... ஆட்டத்த முதல்ல இருந்து ஆரம்பிங்க..

  ReplyDelete
 7. // எல்லாம் தோன்றும் தோன்றும் தான். இது வரை குத்து விட்டதில்லை என்பதை என் அன்பான பெண்ணீயவாதிகளுக்கு தெரிவித்து கொள்கின்றேன். //

  இவ்வளவு தைரியம் வந்துடுச்சான்னு கேட்கிறேன்... தோன்ற வேற ஆரம்பிச்சுடுச்சா... இருக்கு உங்களுக்கு..

  ReplyDelete
 8. "ஹூம் நான் மட்டும் விவாகரத்து செஞ்சிருந்தா உங்களை இருபத்தி ஏழாவது தடவையா கட்டின ((புருஷனை)) விவாகரத்து செஞ்சவன்னு கின்னஸ்ல வந்திருக்கும்'

  Intha idathil ((manaivi)) endruthane vanthirukka vendum......

  ReplyDelete
 9. ஒரு நாளைக்கு இந்த பத்து குத்துக்களையும் விட்டால் பதிலுக்கு 20 குத்துக்கள் வாங்கணுமே...நல்லாயிருக்கு குத்துக்கள் எல்லாமே..

  ReplyDelete
 10. குத்து வாங்குற ஆளு என்னிக்குமே குத்து விட முடியாதுனு தெரியும் தொல்ஸ்.... இப்படி தான் ஏதாச்சும் எழுதி வடிக்கால் தேடிக்கனும் :)

  ReplyDelete
 11. தினம் குத்து வாங்குவோர் சங்கம் இருக்கா விசாரிக்கணும்..

  ReplyDelete
 12. Is this y ppl advice me to remain single????

  ReplyDelete
 13. இதில ஏதோ உள்'குத்து' இருக்குதுன்னு
  நான் ஸ்ட்ராங்கா நம்புகிறேன்.

  ReplyDelete
 14. என்னய்யா எல்லாரும் இப்படி குத்துறீங்க .. ? இது என்ன பஞ்ச் (டயலாக்) வாரமா ?

  ReplyDelete
 15. அபி,நட்டு எல்லாரும் எங்க போயிட்டீங்க. அப்பா கன்னா பின்னானு பதிவு போடறாரு. எதிர் பதிவு போடுங்க:)
  சூப்பர் அபிஅப்பா..வரிக்கு வரி சிரிப்பு.நன்றி.

  ReplyDelete
 16. //
  பண்ற தப்பு எல்லாம் நீங்க. நீங்க படுத்தின பாடுல எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. ராகுகாலமா இருந்தா என்ன? அதான் சனிய கூட கூட்டிகிட்டு போறனே
  //
  சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது...

  //
  குறிப்பு: எல்லாம் தோன்றும் தோன்றும் தான். இது வரை குத்து விட்டதில்லை என்பதை என் அன்பான பெண்ணீயவாதிகளுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.
  //
  வாங்கின குத்துக்கு கணக்கு கிடையாதுங்கிரத பத்தி சொல்லவே இல்ல...

  ReplyDelete
 17. வணக்கம்.சிகப்பு எழுத்து குறைவாக தான் உள்ளது..அப்ப பரவாயில்லை.தப்பிச்சிக்க.

  ReplyDelete
 18. ஹையோ ஹையோ...ஒரே ஜோக் தான் உங்களுக்கு... சரி சரி இன்னிக்கி பொய் பேசும் நாள் போல உங்க சங்கத்துல...நடத்துங்க... நடத்துங்க... (வழக்கம் போல எதிர் பதிவு போட கை துரு துருங்குது.... சும்மாவே நமக்கு நல்ல பேரு... வேண்டாம் விடுங்க....ஹா ஹா ஹா)

  ReplyDelete
 19. அன்பு அபி அப்பா ....நான் உங்களுடைய blog fulla இப்போ தன படிச்சி முடிச்சேன்....உங்க எழுது ரொம்ப நல்லா இருக்கு ....நானும் உங்க பாகத்து ஊருதான் ..கும்பகோணம்....இப்போ ஜித்தா ல இருக்கேன்..உங்கள் பதிவு படிக்கும் போது எனக்கு என்னுடைய ஊர் நினைப்பு வருது....யாரவது எங்க ஊற பத்தி blog எழுதுன தெரிய படுத்துங்கள் ...நன்றி....
  July 20, 2010 3:52 PM

  ReplyDelete
 20. சிவப்பு எழுத்துல உங்க பயம் தெரியுது...இதெல்லாம் சகஜம் விடுங்கோ...

  ReplyDelete
 21. சிவப்பை மாத்திட்டோம்ல :))))))))

  ReplyDelete
 22. உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன் அபி அப்பா
  http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_28.html

  ReplyDelete
 23. :-)

  அண்ணா, இந்த பதிவு மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ;-)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))