பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 18, 2010

இட்லி+நெய்+ஜீனி (18.09.2010)

ஒரு வழியா எந்திரன் ரிலீஸ் ஆக போவுதாம். எனக்கு ரஜினி படம் முதல் காட்சி பார்க்கும் "பயங்கரமான" ஆசை எல்லாம் ராகவேந்திரா, மன்னன் ஆகிய பட்ங்களோட சுத்தமா போயிடுச்சு. ராகவேந்திரா படம் ரஜினிக்கு 100 வது படம்.நம்ம ராதாவுக்கு ரஜினி படம் ரிலீஸ்ன்னா ரஜினி உயிர். கமல் படம் வந்தா உடல் மண்ணுக்கு உயிர் கமலுக்கு என்று வாழ்து கொண்டிருந்த நேரம். "வாடா போகலாம் மன்ற டிக்கெட் எடுத்து விட்டேன், பியர்லெஸ்ல பால்கனில டிக்கெட்" என்றதும் அவன் கையில் இருந்த "ராகவேந்திரா நமக" என பிரிண்ட் செய்த ரிப்பனை பிடுங்கி தலையில் கட்டிகொண்டு கிளம்பி விட்டேன்.

படம் ஆரம்பித்ததும் எங்க பக்கத்தில் இருந்த ஒரு உணர்சிவசப்பட்ட ரசிகர் ஒரு தேங்காயின் தலையில் சூடம் கொளுத்தி காண்பித்து விட்டு எங்க தலையை சுத்தி டமார்ன்னு கீழே உடைக்க..தேங்காய் உடைந்ததோ இல்லியோ கீழே வேற தேங்காய் சூடம் சுத்திகிட்டு இருந்த ஒருத்தன் மண்டை உடைந்த சத்தம் "அய்யோ தலைவா"ன்னு கேட்டுச்சு.

"டேய் எவனோ கமல் ரசிகன் உள்ளே புகுந்திட்டான். எங்க தர்மயுத்தம் மன்ற தலைவர் மண்டைய உடைச்சுட்டான்"ன்னு கத்த ஒட்டு மொத்த ரஜினி ரசிகர்களும் மேலே தபதபன்னு ஓடி வர எங்களுக்கு என்ன நடந்தது என சரியா தெரியலை. சில்லித்தனமா அடிச்சதிலே சில்லி மூக்கு உடைந்து சில பல மில்லி ரத்தம் வீணாகியது. கொஞ்ச நாள் நான் தெலுகுதேசம் சந்திரசேகரராவ் மாதிரி திரிஞ்சேன். கழுத்தில் ஒரு பிங்க் நிற துண்டு இல்லாதது தான் ஒரே குறை.இனி ரஜினி படத்தை புறக்கணிப்போம் என்கிற வைராக்கியம் பிரசவ வைராக்கியம் போல ஆனது.

"டேய் சுந்தரம் தியேட்டரில் மன்னன் படம் ரிலீஸ். முதன் முதலா இளையராஜா மியூசிக்ல தலைவர் ஒரு பாட்டு பாடியிருக்காரு. முதல் காட்சி மன்ற டிக்கெட் வாங்கிட்டேன். வா போகலாம்" என அதே ராதா சொல்ல நான் மறுப்பேதும் சொல்லாமல் போனேன். வாசலில் தலைமை மன்றத்தில் இருந்து புகுந்த வீட்டுக்கு சீர் கொடுப்பது போல கை நிறைய கொடுத்தாங்க. என்னாது.. கிழிஞ்ச லாட்டரி டிக்கெட். தலைவர் வரும் போது போடனும். வாங்கி பை நிறைய வச்சுகிட்டு போய் உட்காந்தா... அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாட்டு வந்தது. "அய்யய்யோ தலைவர் பாடுறார்டாஆஆஆஆஆ"ன்னு எவனோ கத்த ஒரே லாட்டரி மழை தான் தியேட்டரில்.

எனக்கோ பயங்கர ஆச்சர்யம். மெதுவா ராதா கிட்ட "டேய் இது ஜேசுதாஸ் குரல் மாதிரி இருக்கேடா'ன்னு கேட்டப்ப அவன் "போடா லூசு, இவர் பாட வந்துட்டா ஒரு பயலுக்கும் சான்ஸ் இல்லாம போயிடும்ன்னு இது வரை பாடாம இருந்துட்டாரு. பின்ன ஒரு நாள் இளையராஜா இவர் கிட்ட அழு அழுன்னு அழுது பாட வச்சாரு... பாரேன் நீயே ஜேசுதாஸ் பாடுவது மாதிரி இருக்குன்னு சொல்லிட்ட... ஆக்சுவலி இந்த ரெக்கார்டிங் போது தலைவர் ஜலதோஷத்துல இருந்தாரு. அதனால தான் இப்படி இருக்கு. இல்லாட்டி இன்னும் பிரமாதமா வந்திருக்கும். போடுடா கையில இருக்கும் லாட்டரி சீட்டை"ன்னு சொல்ல நான் தேமேன்னு போட்டேன்.

பின்ன ஒரு விஜயசாந்திகூட ரொமான்ஸ் பாட்டில் ரஜினி "உம் அப்புடி போடு" "அது சரி"ன்னு ஏதோ எசப்பாட்டு பாட ராதா என் பக்கம் திரும்பினேன். அவன் என் கிட்ட "பாரேன் ஜேசுதாஸ் குரல் கன்றாவியா இருக்கு நம்ம தலைவர் குரலுக்கு இந்த குரல் கிட்டத்திலேயே வர முடியாது"ன்னு சொல்ல என் ரெண்டு கண்ணிலும் தாரை தாரையா தண்ணி வந்திதுச்சு. அப்போ முடிவு செஞ்சது தான் இனி ரஜினி படம் ரஜினி ரசிகர்கள் கூட உட்காந்து பார்க்க கூடாதுன்னு. இப்ப சொல்லுங்க நான் எந்திரனை பார்கவா? புறக்கணிக்கவா?

@@@@@@@@@@@@@@@@

ஒரு பத்து நாள் முன்ன திடீர்ன்னு பசங்களுக்கு லீவ் கிடைச்சது. அன்னை வேளாங்கன்னி தேர் திருவிழான்னு லோக்கல் ஹாலிடே. சரின்னு காவிரில குடும்பத்தோட குளிக்கலாம்ன்னு முடிவாகி கட்டுசாதம் கட்ட அபிஅம்மா ஜரூரா வேலை பார்க்க தம்பி ஓடிப்போய் அவன் சைக்கிள் துடைக்க ஒரு ஹாட்பேக், ஜமுக்காளம், துண்டு எல்லாம் அபி ரெடி பண்ண ஜகஜோதியா கிளம்பிட்டோம். எங்க ஊர்ல இருந்து 6 கிமீல் எங்க குலதெய்வம் காத்தாயி அம்மன் கோவில். அதை பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சுக்க இங்க கிளிக் பண்ணுங்க. அங்க இருந்து கூப்பிடு தூரத்தில் காவிரி. கரையில் முந்திரி காடு. அந்த பக்கம் திருவெண்காடு வயல் எல்லாம் வந்துடும். இந்த இடத்தில் காவிரியில் நடுவே ஒரு கிணறு இருக்கும். ஆழம் அத்தனை இருக்காது. சுழல் இருக்காது. ஊர்க்காரன் ஒருத்தன் இருக்க மாட்டான். எந்த பயமும் இல்லாமல் கும்மாளம் போடலாம்.

ஒரு ரெண்டு மணி நேரம் குதியாட்டம் போட்டோம். வந்து ஜமுக்காளத்தில் உட்காந்து ஹாட்பேக் திறந்தா அது காலியா இருந்துச்சு. வழக்கம் போல சொதப்பினது நான் தான். எல்லாம் செய்து வைத்து விட்டு எடுத்து வைக்கும் என் கடமையில் சிறிது தவறி விட்டேன். கழுவ போட இருந்த காலி ஹாட்பேக் எடுத்து வந்து விட்டேன். சரி போட்டோ எடுக்கலாம் என்றால் பேட்டரியை சார்ஜ்ல போட்ட நான் திரும்ப அதை எடுத்து போடாமல் கேமிராவை மாத்திரம் எடுத்து வந்திருந்தேன். பெண்கள் வீக்கர் செக்ஸ்ன்னு எவன் சொன்னது. செம குத்து. முதுகு வலி தான் மிச்சம்.

திரும்ப போய் காவிரியில் குதியாட்டம் போட்டோம். சும்மா ஜாலியா நான் "இப்போ என் கிட்ட 100 கோடி ரூபாய் இருக்குன்னு வச்சுகுங்க, என்ன பண்ணலாம்னு கேட்க அபிஅம்மா "இங்க இருந்து டாக்சி ஆட்டோ பிடிச்சு போய் அந்த ஹாட்பேக்கை எடுத்து வந்துடலாம்"ன்னு அபத்தமாக சொல்ல நான் "இல்ல சன் பிக்சர்ஸ் மாதிரி பன் பிக்சர்ஸ்ன்னு ஆரம்பிச்சு 100 நாள் ஓடுவது போல படம் எடுக்கலாம்"ன்னு சொன்னேன். அதுக்கு அபி, "அதுக்கு எதுக்கு 100 கோடி? கேபிள் அங்கிள் புத்தகம் 30000 ரூபாயில் படம் எடுப்பது வாங்கி படிச்சுட்டு படம் எடுத்துட்டா போச்சு"ன்னு சொன்னா. நான் அதுக்கு "அய்யோ படம் 100 நாள் ஓடுவது மாதிரி இருக்கனும்"ன்னு சொல்ல அதுக்கும் அபி "நோ பிராப்ளம், உண்மை தமிழன் அங்கிள் கிட்ட சொன்னா அவரு 100 நாள் ஓடுவது மாதிரி எடுத்து தரப்போறார்"ன்னு சொல்ல எனக்கு அப்போ ஒன்னும் புரியலை. ஆனா தம்பி தான் இல்லாத 100 கோடிக்கு அழகா பட்ஜட் போட்டான். பஞ்சு மிட்டாய் வாங்கலாம் என அவன் கருத்தை பறக்கவிட்டான்:-)

திரும்ப வீட்டுக்கு வந்த பின்னர் தான் புரிந்தது. யோவ் உண்மை தமிழா உன் புகழ் ரெக்கை கட்டி பறக்குதுய்யா... கொஞ்ச நேரம் மனம் விட்டு சிரித்தேன்.ஆமாம் உனாதானா படம் எடுத்தா இன்னிக்கு ஆரம்பிக்கும் படம் 100 நாள் ஓடி பின்ன தான் அடுத்த காட்சி ஆரம்பிக்கும் என்பது புரிந்து ரொம்ப நேரம் சிரிச்சேன்.

@@@@@@@@@@@@@@@@

என் நண்பர் ஒருத்தர் கடைத்தெருவில் போகும் போது வண்டியை நிப்பாட்டி 'நான் பஸ் விட்டிருக்கேன்" என சொல்ல "ஓக்கே நோ பிராப்ளம்.லைக்கிட்டா போச்சு. நல்லா இருந்தா ரீஷேர் பண்ணிடலாம்"ன்னு சொல்ல அவரு "அட அதல்லாம் வேண்டாம். நானே முழு பணமும் போட்டாச்சு" என என்னவோ சொல்ல பின்னர் தான் புரிந்தது. அவரு கோடங்குடி- மாயவரம் மினி பஸ் ரூட் வாங்கி பஸ் விட்டது. என்ன கொடுமை இதல்லாம். இதுக்கு தான் சொல்றது. ரொம்ப நேரம் Buzz ல உட்காராதீங்கன்னு.

இந்த Buzzல பசங்க செய்யும் அட்டகாசம் தாங்கலை. அதிலயும் மீனாட்சிசுந்தரம்னு ஒரு பையன். ரொம்ப அடாவடி தான். அவரு பஸ்ல ரெண்டு எடுத்து விடுறேன் பாருங்க.

=============
விஜய்: ஆஞ்சனேயா! என அடுத்த படம் மாத்திரம் 100 காட்சி ஓடட்டும். நான் உனக்கு வடை மாலை சாத்துறேன்.

ஆஞ்சனேயர்: ஆகா வட போச்சே!
=================

எந்திரனுக்கும் இந்தியனுக்கும் என்ன வித்யாசம்?

இந்தியன்ல யூத்து தாத்தா வேஷம் போட்டாரு, எந்திரன்ல தாத்தா யூத்து வேஷம் போட்டாரு.

===========================

இந்த கொடுமை எல்லாம் எங்க போய் சொல்ல பிளாக்கை விட்டா?



@@@@@@@@@@@@@


எங்க வீட்டிலே அபிக்கும் மூத்த ஒரு குழந்தை இருக்கு. பெயர் T.N.எழில். இதோ போட்டோவிலே இருக்கே அதான். அதுக்கு இன்னிக்கு தான் பர்த்டே. அபி பிறக்கும் முன்னமே இதை வாங்கி வந்தேன். அபி பிறந்த பின்னே அபி கூட வளர்ந்து பின்னே தம்பி நட்ராஜ் கூட வளர்ந்து இப்பவும் இப்படியே குழந்தையா இருக்கு. அதுக்கு முன்னே பெயர் எல்லாம் கிடையாது. சமீபமா அதுக்கு எழில்னு பேர் வச்சுட்டா அபி. எங்கள் படுக்கையில் அதுக்கும் ஒரு இடம் உண்டு.குழந்தைகளுக்கு போர்வை போத்தினா அதுக்கும் கால் தெரியாம போத்தனும். பாதி இரவில் அது அபி, நட்ராஜ் கிட்டே உதை வாங்கி கால்பக்கம் போனா கூட எங்களுக்கு மனசு தாங்காது. எடுத்து பக்கத்தில் போட்டு போர்வை போர்த்தி விடும் வழக்கம் ஆகிடுச்சு. அதன் பக்கத்தில் இருக்கும் பொம்மை T.N. புஜ்ஜியாம். நட்ராஜ் குழந்தையா இருக்கும் போது பெட்ல உச்சா போனா கூட அந்த பழியை பாவம் எழில் தான் ஏத்துக்கும். கோல மாவு டப்பாவை தம்பி கீழே கொட்டினா கூட எழில் தான் கொட்டியதா அர்த்தம். அப்படி ஒரு அன்னியோன்யமாகி விட்டது அந்த அஃறினை குழந்தை. வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் எழிலை விசாரிக்காமல் இருந்ததில்லை.

டெடிபீர் பொம்மை வத்து கொஞ்சும் கல்லூரி பெண்களை பல தடவை நானே கிண்டல் செய்திருக்கேன். ஆனால் நானே இன்னிக்கு அதுக்கு பர்த்டே கேக் வாங்கி வந்தேன். எல்லாம் குழந்தைகளுக்காக:-))

@@@@@@@@@@@@@@@@@@@@@@

30 comments:

  1. //பஞ்சு மிட்டாய் வாங்கலாம் என அவன் கருத்தை பறக்கவிட்டான்:-)//

    சூப்பரூ தின்னு தின்னு நாக்கு ரோஸ் கலருக்கு ஆயிடும்ல்ல ஹைய்ய்ய ஜாலி :)))

    எழிலுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க நான் வந்திருந்தப்ப என் கண்ணும் கூட பட்டுச்சு :))))

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டி.என். எழில் பொம்மைக்குட்டிக்கு

    அபிஅப்பா உங்க பதிவுகள் அனைத்தும் அருமை
    :)))

    ReplyDelete
  3. யோவ், உண்மைதமிழா உன் புகழ் ரெக்கை கட்டி பறக்குதுய்யா... கொஞ்ச நேரம் மனம் விட்டு சிரித்தேன்.ஆமாம் உனாதானா படம் எடுத்தா இன்னிக்கு ஆரம்பிக்கும் படம் 100 நாள் ஓடி பின்னதான் அடுத்த காட்சி ஆரம்பிக்கும் என்பது புரிந்து ரொம்ப நேரம் சிரிச்சேன்.]]]

    நானும்தான்..! மாயவரம் குசும்பு ரொம்பய்யா உங்களுக்கு..!

    ReplyDelete
  4. /
    நட்ராஜ் குழந்தையா இருக்கும் போது பெட்ல உச்சா போனா கூட அந்த பழியை பாவம் எழில் தான் ஏத்துக்கும்
    /

    cho sweeeet

    ReplyDelete
  5. nalla irukku abi appa.. thanjai mavattam ninaivalaigal adikkuthu

    ReplyDelete
  6. அன்பின் தொல்ஸ்

    நல்லாவே இருக்கு இடுகை - இனிய பிறந்த நாள் ந்ல்வாழ்த்துகள் டி என் எழிலுக்கு. அபிக்கும் நட்ஸூக்கும் செல்லமான முத்தங்கள்

    நல்வாழ்த்துகள் அனைவருக்கும்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அட மாயவரமா உங்களுக்கு? நான் வேதாரணியம் பக்கம் கிராமம்

    ReplyDelete
  8. //
    இனி ரஜினி படம் ரஜினி ரசிகர்கள் கூட உட்காந்து பார்க்க கூடாதுன்னு. இப்ப சொல்லுங்க நான் எந்திரனை பார்கவா? புறக்கணிக்கவா?
    //
    நான் எப்பவும் ரஜினி படம் தொலைக்காட்சியில போடும் போது தான் பார்ப்பேன். அப்போ தான் கால் மணி நேரம் படம் ஓடினதும் தூங்குறதுக்கு வசதியா இருக்கும் ;-)

    ReplyDelete
  9. காமெடியான பதிவு அபி அப்பா..டி.என் எழிலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..உண்மையிலேயே குழந்தைகள் சோ ஸ்வீட்...

    ReplyDelete
  10. //
    நட்ராஜ் குழந்தையா இருக்கும் போது பெட்ல உச்சா போனா கூட அந்த பழியை பாவம் எழில் தான் ஏத்துக்கும். கோல மாவு டப்பாவை தம்பி கீழே கொட்டினா கூட எழில் தான் கொட்டியதா அர்த்தம்
    //
    :)

    ReplyDelete
  11. அபி அப்பா...
    நிறைய இடங்களில் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  12. எழிலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    கடந்த பதிவிலேயே கவனத்தை ஈர்த்தவளாயிற்றே. நடராஜ் கடலை சாப்பிடுவதை குட்டி நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது எழில்தானே:)?

    ReplyDelete
  13. எங்க வீட்டில் எல்லா பொம்மைகளுக்கும் பெயர் உண்டு. சிலபல பாத்திரங்களுக்கும் கூட.

    எ.கா: பேஸின் ப்ரிட்ஜ் டம்ப்ளர்.

    எழிலுக்கு ஹேப்பி பர்த் டே!

    ReplyDelete
  14. ரசித்தேன் அபி அப்பா

    ReplyDelete
  15. டெடிபீர் பொம்மை வத்து கொஞ்சும் கல்லூரி பெண்களை பல தடவை நானே கிண்டல் செய்திருக்கேன். ஆனால் நானே இன்னிக்கு அதுக்கு பர்த்டே கேக் வாங்கி வந்தேன். எல்லாம் குழந்தைகளுக்காக:-

    அது

    எழிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  16. Anna, aanalum enga thalaivar uh romba kalachutinga.... Ellam veetuku auto varadhungura thaiyiriyama????

    ReplyDelete
  17. //கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா//
    /
    நான் கந்தசாமி இல்லாததால் நோ கருத்து!

    ReplyDelete
  18. தூள்.
    எழில் மேட்டர் ஏத்துக்க முடியுது. ஆனா, டம்ப்ளருக்கு பெயர் வைக்கும் கொடுமையை தாங்கிக்க முடியல்லடா சாமி.

    :)

    ReplyDelete
  19. //இதுக்கு தான் சொல்றது. ரொம்ப நேரம் Buzz ல உட்காராதீங்கன்னு//

    ஹா ஹா ஹா.. இது .சூப்பர்

    ReplyDelete
  20. முன்னாள் (அந்நாள்?) ரஜினி ரசிகன் நான் ரசித்துப் படித்தேன்..

    ReplyDelete
  21. அபி அப்பா.. சூப்பர் சூப்பர் சுப்பர் .. சிரிச்சு சுிரிச்சு முடியல..

    ஆமா எழில் ., புஜ்ஜி நலமா..:))

    ReplyDelete
  22. இந்தியன், எந்திரன் வித்தியாசம் உண்மை!!

    அப்புறம், உங்க தப்புகளுக்கு பழியேத்துக்க ஒரு ஆள் வேணும், அதுக்காக எழில்!!அப்பப்ப கேக், பிரியாணியெல்லாம் கொடுத்து வச்சுக்கோங்க, அப்பத்தான் உரிமைக்குரல் எழுப்பாது!! :-))))

    ReplyDelete
  23. இந்தியன், எந்திரன் வித்தியாசம் உண்மை!!

    அப்புறம், உங்க தப்புகளுக்கு பழியேத்துக்க ஒரு ஆள் வேணும், அதுக்காக எழில்!!அப்பப்ப கேக், பிரியாணியெல்லாம் கொடுத்து வச்சுக்கோங்க, அப்பத்தான் உரிமைக்குரல் எழுப்பாது!! :-))))

    ReplyDelete
  24. நகைச்சுவையான பதிவு..அபி அப்பா

    ReplyDelete
  25. குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.

    ரசனையான பதிவு.

    ReplyDelete
  26. சூப்பரான பதிவு.டைட்டில் வேறு வைத்திருந்தால் இன்னும் சூப்பர்ஹிட் பதிவாக ஹிட் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  27. சூப்பரான பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))