ஒரு வழியாக கோடை விடுமுறை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து "பள்ளி உண்டு பாடம் இல்லை" என்னும் கோஷத்துடன் நேற்று ஆரம்பம் ஆகிவிட்டது. நட்ராஜ் தான் ரகளை செய்வானோ என்கிற மாதிரியாக பயம் இருந் தாலும் அவன் முதள் நாளே ஸ்கூல் போகும் பேக் எல்லாம் முதுகிலே மாட்டிக்கொண்டு படுத்து தூங்கும் அளவு தயார் நிலையில் தான் இருந்தான். எனக்கு தான் அழுகை அழுகையாக வந்தது. பின்னே என்ன நான் காலேஜ் போன காலத்திலேயே அம்மா காலை கட்டிக்கொண்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டவனாச்சே. அத்தனை ஏன்? ஞாயிறு லீவ் விட்டு திங்கள் அன்று போகும் போது கூட ஒரு டோஸ் அழுதுவிட்டு தான் போவேனாக்கும். அத்தனை ஒரு ஈடுபாடு படிப்பு மீது :-)
காலை எழுந்ததும் எனக்கு முன்னரே அவன் குளித்து முடித்து தயாராகி பைக் எல்லாம் துடைத்து உம்மாச்சி எல்லாம் கும்பிட்டு சந்தன கோபி எல்லாம் நெற்றியில் பிரமாதமாக வைத்து கொண்டு பள்ளிக்கு போன உடனே அவன் நண்பர்கள் சூர்யா, ஷிபாயா, கல்யாணி என எல்லோரிடமும் குசலம் விசாரித்து கொண்டிருந்தான்.
"நீ லீவுக்கு எங்க போனே? என்ன சினிமா பார்த்தே? என்ன ஸ்வீட் சாப்பிட்ட என்பன போன்ற அதிமுக்கிய விசாரணைகள் நடந்தன. நீ லீவுக்கு எங்க போனே என்ற கேள்விக்கு மாத்திரம் அவன் வாய் கும்பகோணம் என சொல்ல வந்தும் அவன் ஜீன் சும்மா விடுமா? படார்ன்னு கைனடிக்டெக்ட்ன்னு சொன்னான். நானே இது வரை கேள்விப்பட்டது இல்லை அந்த பெயரை. எப்போதோ யோகேஸ்வரன் ஃபெட்னா நடந்த இடம் அது, அது வட அமரிக்காவிலே இருக்குன்னு சொன்னது மாத்திரம் லைட்டா ஞாபகம் வந்தது. அவன் இந்த பெயரை அப்போது மனதில் வைத்துக்கொண்டு இப்போது அவிழ்த்து விட்டுவிட்டான். யாரோ ஒரு வாண்டு 'அது எங்க இருக்கு?" என கேட்க இவன் கொஞ்சமும் சளைக்காமல் "அமேரிகாவிலே இருக்கு. அமேரிக்கா ரொம்ப பெரிசா இருக்கும்" என அமேரிக்கா புராணம் அவிழ்த்து விட ஆரம்பிக்க நான் என் பள்ளிக்கூட நாட்களுக்கு மனது போக ஆரம்பித்துவிட்டது.
எனக்கு என்னவோ உலகில் அப்போதைக்கு பெரிய இடமே "மெட்ராஸ்" தான். என் ஒரு அத்தை மெட்ராஸ்ல இருப்பது மட்டும் தான் தெரியும். அங்கே போனது எல்லாம் கிடையாது. தீபாவளி, பொங்கல் வரிசைப்பணம் அப்பா மணியார்டர் அனுப்பும் போது 35, கெனால் பேங் ரோடு என அட்ரஸ் எழுதும் போதே ஒரு வித சிலிர்ப்பு வரும். அப்படித்தான் ஒரு முறை பஞ்சாபி என்கிற பஞ்சாபகேசன் என்னிடம் " மெட்ராஸ்ல எங்க போனே?" என கிராஸ் கொஸ்டின் கேட்க லைட்டாக அதிர்ந்தாலும் 35, கெனால் பேங் ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28 என மனப்பாடமாக சொன்னேன். போதா குறைக்கு இன்னும் டீப்பாக " அந்த பிள்ளையார் கோவில் பக்கத்துல" என பிள்ளையாரின் மேல் இருந்த அதீத நம்பிக்கையால் அளந்துவிட்டேன். கண்டிப்பாக பிள்ளையார் கோவில் இல்லாமலா போகும்.
ஒரு பொருளை வியாபாரம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதை விட ஆஃப்டர் சர்வீஸ் என்பது ரொம்ப முக்கியம் என்கிற வியாபார தந்திரம் எனக்கு அப்பவே நல்லா தெரியும். பொய் சொல்வது என்னவோ ஒரு செகண்ட் வேலை தான். அதை மெயிண்டய்ன் பண்ணுவது என்பது ஆஃப்டர் சர்வீஸ் மாதிரி. ரொம்ப கஷ்டம். அவன் ஒரு படி மேலே போய்" அப்படியா உங்க மாமா என்ன வேலை பண்றார்?"ன்னு அடுத்த கேள்வி கேட்க நான் கொஞ்சமும் தயங்காமல் "அதே பேங்ல தான்" என சொல்ல அவன் என்னிடம் "அதாவது கெனால் பேங்ல தானே" ன்னு கேட்டான். அகராதி புடிச்சவன். நான் ஆமாம் என சொன்னதும் ஒரு வித நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு போய்விட்டான்.
ஆக கெனால் பேங் சாலையில் அத்தை வீடு இருக்கு, கெனால் பேங்ல மாமா வேலை செய்கிறார் என்னும் அழகிய பொய்யை அடுத்த அடுத்த வருட லீவ் முடிந்ததும் அதே பஞ்சாபியை கூப்பிட்டு உரம் போட்டு வளர்த்தேன். மாமா அந்த பேங்ல பீல்டு ஆப்பீசராக, மேனேஜராக இப்படி வருடா வருடம் பிரமோஷனும் கொடுத்து வந்தேன். பின்ன என்ன? இல்லாத வேலையில் சேர்த்தாச்சு கற்பனையில். அதுக்காக சும்மா விட்டுட முடியுமா என்ன? பிரமோஷன் யாரு கொடுப்பா? வேலை வாங்கி கொடுத்த நான் தானே எல்லாம் செய்யனும். என் கடமை இல்லியா அதல்லாம்? அத்தனை ஏன்? ஒரு லீவ் முடிந்து போன போது அந்த மாமா அந்த கெனால் பேங்ல ஒரு பிரச்சினையில் சஸ்பென்ஷன்ல இருக்காருன்னு கூட சொன்னேன். அத்தனை ஒரு தொழில் சுத்தம் நம்ம கிட்ட:-)
ஒரு வருஷ ரெண்டு வருஷமாவா நான் பெத்த அந்த பொய்யை காப்பாத்தினேன். ரொம்ப வருஷம் கழிச்சு அதே பஞ்சாபி ஏதோ நொய்டாவோ என்னவோ ஒரு பிராஞ்ச்ல பஞ்சாப் நேஷனல் பேங்குல ஆப்பீசராம். மாயவரம் பக்கம் பொண்டாட்டி பிள்ளையோட கடைத்தெருவில் போனான். என்னை பார்த்ததும் கூப்பிட்டு "இப்ப கெனால் பேங் மாமா என்ன பண்றார்?" என கேட்க அவரு ரிட்டையர்டு ஆகிட்டாருன்னு சொல்லிட்டு வந்தேன். அப்போதும் அதே நமட்டு சிரிப்பு தான் அவன் கிட்டே. அதன் பின்னே ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது. கெனால் பேங் என்றால் கூவம். கெனால்ன்னு சொன்னா சாக்கடைன்னு. கெனால்க்கு அர்த்தம் தெரிஞ்சதும் நான் பணால் ஆகிப்போனேன். எனக்கு அதல்லாம் கூட கவலையாக தெரியவில்லை. ஆனா அந்த பஞ்சாபி நான் 3வது படிக்கும் போதே ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தானே. அப்படின்னா அப்பவே அவனுக்கு தெரிஞ்சிருக்கும் தனே. அப்போதே தனியா கூப்பிட்டு என்கிட்ட சொன்னால் என்ன என்கிட்ட?. இப்போது நான் போன பின்னே பொண்டாட்டி கிட்டே சொல்லி சிரிச்சு என் மானத்தை வாங்கியிருப்பான். கிராதகன்.
நான் சகஜ நிலைக்கு வந்தேன். நட்ராஜிடம் கூப்பிட்டு சொன்னேன். "தம்பி நிஜமாகவே கைனடிக்டெக்ட்ன்னு ஒரு ஊர் இருக்குதான்னு ஒரு கூகிள் பஸ் விட்டு விசாரிச்சுப்போம்டா. நாளை மருநாள் அவன் பொண்டாட்டி பிள்ளை கிட்டே உன் மானம் போய்ட கூடாதுல்ல. அது எதுனா பெரிய சாக்கடைன்னு அர்த்தம் எதுனா வந்துட போகுது" என சொன்னேன். ஏங்க வட அமரிக்கா வலைப்பதிவர்களே! அப்படி ஒரு ஊர் இருக்குதா?
அடப்பாவி...... கனெக்டிகட்டை ஏதோ கைனடிக் ஹோண்டான்ற மாதிரி சொன்னானா:-)))))))))))))))))
ReplyDeleteஅப்பனுக்குப் புள்ளை................ தப்பாமல்........
கெனால் = கால்வாய்
ReplyDeleteவாங்க டீச்சர்! ஆமாம் கெனால் - கால்வாய் தான். ஆனா அந்த பர்டிகுலர் ராஜாஅண்ணாமலைபுர அந்த ஏரியா கூவம் போகும் சாக்கடை ஏரியா. சாக்கடை கால்வாய்:-)) அதான் அப்படி சொன்னேன்:-)
ReplyDeleteஅந்த ஏரியான்னு இல்லை எல்லா ஏரியாவிலும் கூவம் சாக்கடையாத்தான் நிக்குது:(
ReplyDeleteஒருமுறை அண்ணன் வீட்டுக்குப் போக குமரன் நகர் கெனால் பக்கமுன்னு சொல்லி ஆட்டோக்காரர் வேறெங்கியோ கொண்டுபோய்...அவருடன் சண்டை போட்டு சரியான இடத்துக்கு வந்தால்.... அந்த ஆட்டோக்காரர் சொன்னார்......ஏம்மா...காவாயாண்டேன்னு சொல்ருக்கக்கூடாது? வேறென்னமோ சொன்னீங்காட்டியும் அட்ரஸ் மாறீச்சுன்னார்:-)
உங்களுக்கு நகைச்சுவை இயல்பாய் வருது. ரசித்துச் சிரித்தேன் நீங்க பெத்த பொய்யை:-)
vaalththukkal
ReplyDeleteதொல்ஸ்
ReplyDeleteஅது கனெக்டிகட் . அந்த ஊரை நெறைய பசங்களுக்குத் தெரியாது. நட்டுவை அடுத்த முறை பாஸ்டன் போனேன்னு சொல்லச் சொல்லுங்க.
அங்க ஸ்ரீராம் மாமா இருக்கார்னு சொல்லட்டும் ஆனா பாஸ்டன்ல பாஸா (மொட்டை பாஸ்) இருக்கார்னு மட்டும் சொல்ல வேணாம்னு சொல்லுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஆகா ஸ்ரீராம்! யோகேஷ்வரன் வந்ததால அந்த ஊர் பெயர் அவனுக்கு தெரிஞ்சுது. நீங்க வாங்க நம்ம வீட்டுக்கு. பாஸ்டனும் தெரிஞ்சுடும்:-)) கண்டிப்பா ஊருக்கு வரும் போது வாங்க!
ReplyDeleteHii... Hii... (Sirippu!)
ReplyDeleteஅபி அப்பா,
ReplyDeleteகனெக்டிகட் இருக்கு.
கனால் பான்க் ரோடுல பான்க் இருக்கு. கனரா பாங்கு
:)
அன்பின் நட்டப்பா - உண்மையிலேயே கெனால் பேங்க் பக்கதுல பிள்ளையார் கோவில் இருக்கு - கெனால் பேங்க் ரோட்டில் என் பொண்ணுக்கு ஒரு வீடும் இருக்கு - நான் அடிக்கடி போற ரோடு அது - ம்ம்ம்ம் - நட்டு பொளச்சிப்பான் - நல்வாழ்த்துகள் நட்டுவுக்கு - நட்புடன் சீனா
ReplyDeleteஅது கனெக்டிகட்
ReplyDeleteithu nalla irukkuthe....
ReplyDeleteappa nattuvukku ovvoru nattulerunthum/oorlarunthum oru aala anuppalam...
ulaga arivu seekkiram valarum.
-Yogesh.
http://en.wikipedia.org/wiki/Connecticut
ReplyDeleteஅபிஅப்பா.. என்னவோ யோகேஸ்வரன் ஒருதடவை வந்ததுல ஊரு பேரு கத்துகிட்டான். நான் எத்தனை தடவ உங்க வீட்டுக்கு வந்தேன்.. என்கிட்டே எதுவும் கத்துக்கலயே.. நான் தான் எப்போ வந்தாலும் ஸ்கூல் புராணம் பாடிட்டிருக்குறதால.. நான் அமெரிக்காவுல இருந்து வந்திருக்கேன் என்பதே அவன் மனசுல பதிஞ்சிருக்காது..
ReplyDeleteநட்டுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. சாக்லேட்களுக்கு நன்றி !!!
அன்புடன்
சீமாச்சு..
கைனட்டிக் ஹோண்டா... கனெக்டிகட்... :)))
ReplyDelete//பொய் சொல்வது என்னவோ ஒரு செகண்ட் வேலை தான். அதை மெயிண்டய்ன் பண்ணுவது என்பது ஆஃப்டர் சர்வீஸ் மாதிரி. ரொம்ப கஷ்டம். //
100% உண்மை.... இதில் பொய்யே இல்லை...
நல்ல சுவையான பகிர்வு நண்பரே...
Neenga solra Raja Annamalaipuram Canal is Buckingham Canal, hence Canal. Coovum is known by that name only, some people mix up.
ReplyDeleteShobha
நட்டு ::))
ReplyDeleteமிகவும் அருமை! ரசித்து சிரித்தேன் :) வார்த்தைகளின் உபயோகம் மெய் சிலிர்க்க வைக்கிறது! வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஅப்பாவுக்கு புள்ளை தப்பாம பிறந்திருக்கு...ங்கற பழமொழியை நிரூபிச்ச குடும்பம் நீங்கதான்!!
ReplyDeleteவாழ்க!, வளர்க!!
:)
இன்னும் நட்டுவின் குறும்புகள் எழுதுங்க.ஹா...ஹா. வாய்விட்டுசிரிக்க.
ReplyDeleteரொம்பப் பெரிய பல்பாகதான் வாங்கியிருக்கிறீர்கள்:))!
ReplyDeleteஇனி எப்பக் கெனால் பாங்க் ரோட்டைப் பார்த்தாலும் உங்க நினைவுதான் வரும்!நல்ல பாங்கில் வேலை வாங்கிக் கொடுத்தீர்கள் உங்கள் மாமாவுக்கு!
ReplyDeleteவலைச்சரத்தாலும்
ReplyDeleteமுக்கியமாக மணிராஜ் வலைப்பூ ஆசிரியர் இராஜ ராஜேஸ்வரி அவர்களாலும் இணைந்தோம்..
இனி தொடர்ந்து வருகிறோம் நண்பரே..
தாங்களும் ஓய்விருக்கும் போது எமது சிவயசிவ - என்னும் வலைத்தளத்திற்கு வருகை தாருங்கள்..
http://sivaayasivaa.blogspot.com
நன்றி..
விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது ,ஏற்பாடு செய்த பதிவர்கள் #அபிஅப்பா #கொக்கரக்கோ செளமியன் சகோதரர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள் #ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது!! #AayilsWedding https://twitter.com/thennarasu/statuses/87538713822892032
ReplyDelete