பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 5, 2011

ஆயில்யன் கல்யாண வைபோகமே - பாகம் # 1


ஆயில்யன் கல்யாணம் எழுத போகிறேன் என கூகிள் பஸ்ல டீசர் எல்லாம் விட்டாச்சு. இனியும் எழுதாட்டி மாயவரத்தான் என் மானத்தை வாங்கும் அபாயம் அதிகம் இருப்பதால் எழுத ஆரம்பித்து விட்டேன்.

என்ன எழுதலாம் என்பதை விட எதிலிருந்து எழுதலாம் என்பது மிகப்பெரிய குழப்பமாக இருந்தது. இதோ கல்யாணம் முடிந்து இரண்டு நாள் ஆகிவிட்டது. இன்னும் அந்த பிரம்மிப்பில் அப்படி கூட சொல்லக்கூடாது பெரும்மப்பில் இருந்து விடுபட்டாகிவிடவில்லை. அத்தனை ஒரு அழகிய திருமணம்.

ஆயில்யன் தன் வலைப்பூவின் காப்ஷனில் போட்டது போல 'ஆயில்யன், கடகம் எல்லா இடத்திலும் நட்பாக". மகா பெரிய உண்மை. ஆமாம். இங்கே நாங்கள் பார்த்தது ஆரியம் - திராவிடம், திமுக - அதிமுக, ரஜினி - கமல், சிவாஜி- எம் ஜி ஆர், விஜய்- அஜீத், கிழக்கு - மேற்கு என எல்லாத்தரப்பும் ஒரு வித சந்தோஷமுடன் தனது வீட்டு திருமணத்துக்கு வந்தமை போன்ற ஒரு உணர்வு.

நான் இது வரை ஒரு 350 பதிவுகள் எழுதியாகி விட்டது. ஒரு திருமணத்தை அழகாக எழுத வேண்டும் என ஆசை இருந்தும் எழுத இயலாமைக்கு காரணம் எனக்கு அத்தனை ஒரு கோர்வையாக வரவில்லை. ஆன்லைனில் இருந்த துளசி டீச்சரிடம் கேட்டேன். எப்படி டீச்சர் எழுதுவது என்று. "நத்திங். பார்த்தது எல்லாம் விரலில் கொண்டு வா உண்மை தமிழன் போல... பக்கம் அதிகமானால் கவலையே இல்லை. எழுதி முடித்ததும் பாகம் 1, 2 என போடு.. எழுதிய திருப்தி தான் முக்கியம். (ஆமா படிப்பவன் பத்தி நாம ஏன் கவலைப்பட வேண்டும்:-)) என சொன்னாங்க. "அப்படி எழுதினா என்ன கிடைக்கும் டீச்சர் என கேட்டதுக்கு " நீ நல்லா எழுதினா உனக்கு பத்துமனாபபுரம் கோவிலை எழுதி தருவேன். என்ன !உனக்கு அதல்லாம் பத்துமா? இன்னும் முக்கால் லெட்சம் கோடி கேட்பாய்" என சொன்னாங்க. ஒ .. ஆக இந்த பதிவை ஒரு நக்கல் பதிவாக எழுத சொல்றாங்க டீச்சர் என நினைத்துக்கொண்டேன்.

பொதுவா ஒரு நல்ல கச்சேரிகாரங்க கச்சேரிக்கு போகும் முன்னே எனக்கு தெரிஞ்சு எதும் கச்சேரி சம்மந்தமா பேசிப்பது இல்லை. ஆனா "சபை" நல்ல சபைன்னு தெரிஞ்சா மனசுக்குள்ளே "சபையை அசத்த வேண்டும்" என்கிற டெலிபதி மாத்திரம் ஒருவருக்கு ஒருவர் ஓடிக்கொண்டு இருக்கும். உதாரணத்துக்கு கத்ரி கோபால்நாத் எங்கயாவது கர்நாடகா கத்ரில இருந்து பிளைட் பிடிச்சு வருவாரு. வயலின் கன்யாகுமரியம்மாள் நாகர்கோவில்ல இருந்து காரை பிடிச்சு வருவாங்க. விக்கு வினாயக்ராம் ஜெர்மன் கச்சேரி முடிச்சுட்டு வருவாரு. ஹரித்வாரமங்கலம் திருவையாறு போயிட்டு அவசரமா வருவாரு. மோர்சிங் ராஜசேகர் பெங்களுருவில் இருந்து வருவாரு. எல்லாரும் தங்கும் ஜாகையும் வேறு வேறு. ஆனா மேடையில் வந்து உட்காந்ததும் சபையை பார்த்ததும் ஒரு புது ரத்தம் நாடி நரம்பில் ஓடி அடிச்சு தூள் கிளப்பிடுவாங்க.

கிட்ட தட்ட ஆயில்யன் கல்யாணம் கூட அப்படித்தான். எனக்கு, மாயவரத்தானுக்கு, கொக்கரக்கோ சௌமிக்கு, ராம்கிக்கு தவிர அமரிக்காவிலே இருந்து சீமாச்சு அண்ணன், மயிலாடுதுறை சிவா , எல்லே ராம் எல்லோருக்குமே அப்படித்தான். கோவை பதிவர் சந்திப்பு, சென்னை வலைப்பதிவர் பட்டரை, ஈரோடு சங்கமம் எல்லாம் போல நம்ம மாயவரம் சந்திப்பு ஆயில்யன் திருமணம்... வரும் விருந்தினரை நல்லா கவனிச்சு நம்ம ஊர் பெயரை தக்க வச்சுக்கனும் என்கிற அதீத ஆர்வம் எங்க மனசுக்குள்ளே ஓடிகிட்டே இருந்துச்சு. அதை திறம்பட செய்யனும். மிக அழகாக செஞ்சாங்க நம்ம மாயவரம் பதிவர்கள் கொக்கரக்கோ சௌமியனும், மாயவரத்தானும்.

ஜூலை 3ம் தேதி 2011ல் திருவாரூரில் கல்யாணம், அதே நாள் மாயவரத்தில் ரிசப்ஷன். வரும் விருந்தினர்களை மாயவரத்தில் தங்க வைத்து உபசரித்து திருவாரூர் அழைத்து போய் திரும்பவும் மாயவரம் வந்து ரிசப்ஷனில் கலந்து கொண்டு ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். கான்செப்ட் இதான்.

ஜூலை 2ம் தேதி காலை முதலே பதிவர்கள் மாயவரம் வந்துடுவாங்க என தெரியும். சென்னையில் இருந்து அப்துல்லா, மருத்துவர் புரூனோ ஆகியோர் ஒரு காரிலும், மணீஜி, அகநாழிகை பொன் வாசுதேவன், உண்மை தமிழன் சரவணன், விந்தை மனிதன் ராஜாராம், கே ஆர் பி செந்தில் ஆகியோர் ஒரு காரிலும் வருவாங்க, பின்னே மாயவரத்தான் உட்பட சிலர் ஒரு காரிலும், சென்ஷி, கோபி ஆகியோர் தனியாகவும், சந்தன முல்லை, ஜி 3 ஆகியோர் தனியாகவும் வருவாங்க என நினைத்தோம். பின்னர் மாயவரத்தான் "எல்லா காரும் பல்லாவரத்தில் இருந்து வரிசையாக கிளம்பலாமே" என சொல்ல பின்னர் சஞ்சய், வேலன் அண்ணாச்சி ஆகியோர் கோவையில் இருந்தும், வெயிலான் ரமேஷ், முரளிகுமார் பத்மநாபன் ஆகியோர் திருப்பூரில் இருந்தும் அது போல பெங்களூரில் இருந்து சொக்கன், ஜீவ்ஸ் உட்பட பலரும் பின்னே மங்களூர் சிவாவும் வருவாங்க என கிட்ட தட்ட முடிவாகியது. கிழக்கில் இருந்து பா.ரா, பத்ரி, முத்துகுமார் ஆகியோர் வருவாங்க, மதுரையில் இருந்து சீனா சார் திருமதி சீனா கூட வருவாங்க எனவும் நினைத்தோம்.

நான் மேலே சொன்னதில் சிலர் மட்டும் சில அவசர வேலை காரணமாக வர முடியவில்லை.ஆனால் ஐகாரஷ் பிரகாஷ் உட்பட நாங்கள் எதிர்பாராத பலர் வந்து அசத்தி விட்டனர். 2ம் தேதி காலை வேலன் அண்ணாச்சி வந்ததும் நான் பேருந்து நிலையம் போய் அழைத்து வந்தேன். பின்னர் ஆயில்யன் வீட்டுக்கு போனோம். ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போயிருந்ததால் ஆயில்யன் விட்டில் ஒரு காபி குடித்து விட்டு வந்தோம். ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போனதை தனியாக பஸ் விட்டோ பதிவு போட்டோ கும்ம வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்து அடுத்த பாகத்துக்கு பயனிக்கிறேன்.

17 comments:

 1. சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது இந்தப் பதிவு.
  நாங்களே மாயுரம் வந்தது போன்ற ஒரு உணர்வு

  ReplyDelete
 2. தொடருங்கள். நேரில் வர இயலாதவர்கள் (வந்தவர்களும்) வாசிக்கக் காத்திருக்கும் பதிவு:)!

  ReplyDelete
 3. அடுத்த பாகம் சீக்கிரம்,

  மிஸ் பண்ணிட்டேன் ன்னு பீலா இருக்கு :((

  ReplyDelete
 4. \\நான் பேருந்து நிலையம் போய் அழைத்து வந்தேன்.\\

  இன்னும் இந்த காமெடியை நீங்க விடலையா ! ;)

  ReplyDelete
 5. நல்ல பதிவு.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  நன்றி.

  ReplyDelete
 6. //ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போனதை தனியாக பஸ் விட்டோ பதிவு போட்டோ//

  அட, அவளும் ஃபேசியல், அண்ணலும் ஃபேசியல்! :) கம்பனின் சித்திரம்! இதுக்குப் போயி கும்மி அடிப்பாங்களா?-ன்னு கேட்டா.......அது மகா பாவம்! கட்டாயம் ஃபேசியல் டெவில் ஷோ எங்களுக்கு வேணும்:))

  ReplyDelete
 7. ஆயில்யனுக்கும் அனுவுக்கும் எங்களின் அன்பார்ந்த மணவிழா வாழ்த்துகள்!

  ஆயாவின் உடல்நிலை திடீரென்று மோசமானதன் காரணமாக என்னால் வர இயலவில்லை. :-(

  ReplyDelete
 8. முன்னுரையே முழம் நீளமா ? அவ்வ்

  நாங்களெல்லாம் ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பாவம்

  ReplyDelete
 9. நல்ல ஹியூமரஸ் நடை உங்களூக்கு அபி அப்பா.. இந்த நேரத்தில் நட்டு அவன் அண்ணனுக்கு சொன்னது நியாபகம் வருது . “உனக்கு பாடம் கத்துக் கொடுக்கப்போகிறேன்:-))

  ReplyDelete
 10. என்ன அடுத்த பாகமா அது எப்போ...???

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்

  ஆயில்யனுக்கும் - அவருக்கு
  ஆத்துக்காரியாகியிருக்கும் - சகோதரிக்கும்.


  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 12. ஆயில்யன் பிளீச்சிங் வைபோகம் படிக்க மிக ஆசை

  ReplyDelete
 13. ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போனதை தனியாக பஸ் விட்டோ பதிவு போட்டோ கும்ம வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்து அடுத்த பாகத்துக்கு பயனிக்கிறேன். //

  அருமையான கும்மிக்கு வாழ்த்துகள். ஆயில்யனுக்கும், அவர் மனைவிக்கும் இனிய மணவாழ்க்கைக்கு வாழ்த்துகள், ஆசிகள்.

  ReplyDelete
 14. மணமக்களுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 15. என்னோட கமெண்ட் ஏன் பப்ளிஷ் ஆகலை?? :((((((( அமைதியோடது மட்டும் வந்திருக்கு, நான் காலையிலேயே கொடுத்திருந்தேனே!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 16. எனக்குத்தெரியாமலேயே போயிருச்சு! போய்ட்டு வந்து கேபிள் சொன்னாரு..!

  வந்த ஃபீலிங்கை நீங்க கொண்டுவந்திருக்கீங்க! சூப்பர்!

  ஆயில்யனுக்கு அன்பான வாழ்த்துக்கள்!

  அண்ணாத்த...!

  ஒரு வேண்டுகோள்..!

  இந்த டெம்ப்ளேட்டில் தொடர்ச்சியா படிக்கமுடியலை..கண்ணைக்கட்டுது... கலரை மாத்துங்களேன்..!

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))