பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 24, 2013

இயக்குனர் மணிவண்ணன் நிஜமான போராளி என்றால்....


நல்ல இயக்குனர், நல்ல பெரியாரியவாதி, நல்ல தமிழ் உணர்வாளர்  திரு. மணிவண்ணன் இறந்து போனது வருத்தமே. அவர் இறந்த பின்னர் என் மனம் அமைதி இழந்தது, மனம் கனத்து போனது, இதயம் அழுதது எல்லாம் உண்மையே.


ஆனால் அதற்கு அடுத்து அடுத்து நடந்த சம்பவங்கள் தான் கொடுமையே! பாரதிராஜா என்னும் தன் குரு திட்டியதால் தன் மணிவண்ணன் மன உளைச்சல் காரணமாக இறந்தார் என நாம் தமிழர் என்னும் டம்ளர் பாய்ஸ் சொல்வது சிரிப்பை உண்டாக்குது.


ஒரு மன உளைச்சலால் சாகக்கூடிய பூஞ்சை மனசு மணிவண்ணனிடம் இருந்தால் பாரதிராஜா இவர் அவரிடம் மாணவராக இருக்கும் போது திட்டிய போதே (திட்டுவாராம்) செத்து போயிருக்கனும். சரி அப்போ அவர் மனதும் உடலும் திடம் என வைத்து கொண்டாலும் கூட உச்சகட்டமாக பிரபாகரனை தன் மானசீக மாவீரன் என மனதளவில் கொண்டாடிய மாவீரன் மரித்த போதே மன உளைச்சள் காரணமாக இறந்து போயிருக்க கூடும்.


அப்படி என்ன மணிவண்ணன் இலவம் பஞ்சின் மனது கொண்டவரா எனில் அதும் இல்லை. அவர் மேடைகளில் தன் எதிரிகளை வசை பாடியது இல்லியா? கழுவி கழுவி ஊத்தினது இல்லியா? அது என்ன வசைபாடும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு, மற்றவர்களுக்கு அது கிடையாது என்னும் மனோபாவம் அவருக்கு என நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லை. மணிவண்ணனுக்கு தெரியும். நாம் மேடையில் யாரையாவது வசைபாடினால் தனக்கும் அது போல திரும்பி வரும் என தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை அவர். அதை எல்லாம் தெரிந்து தான் மேடை ஏறியிருப்பார். அதனால் பாரதிராஜா இவரை  திட்டினார், அதனால் இவர் செத்தார் என டம்ளர் பாய்ஸ் கூறுவதை ஒரு சிரிப்புடன் தான் நாம் கடந்து போக வேண்டும்.

இதே பாரதிராஜா நெய்வேலி போராட்டத்தின் போது "ஊ ஆர் யூ" என கலைஞரை வினவியதையும் எல்லோரும் அறிவோம். அப்போது இதோ இன்று "அம்மா" புகழும் பாடிக்கொண்டு, சன் டிவியில் கூட தொடர்பில் இருக்கும் மிஸ்டர் ராதிகா சரத்குமார் எல்லாம் அப்போது இதே பாரதிராஜாவை என்ன என்ன பேசினாங்க என கூட எல்லருக்கும் தெரியும். அதே ராதிகா குரூப்  இப்போது கலைஞருக்கு எதிரிகள். ஆனால் பாரதிராஜா இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் சீரியல் இயக்குனர். இது தான் நிதர்சனம். உணர்சிவசப்படுதலால் நிரம்பி வழிவது தான் சினிமா உலகம். இந்த நாடியை கலைஞர் நன்கு உணர்ந்தவர். ஆனால் 400 படங்களில் நடித்தும், 50 படங்கள் இயக்கியும் இருந்த மணிவண்ணனுக்கு இதல்லாம் தெரியாது என நினைப்பது டம்ளர் பாய்ஸ்ன் முட்டாள்தனம்.

எம் ஜி ஆர் இறந்த அன்று கலையில் வந்த முரசொலியில் எம் ஜி ஆரை கிண்டலடித்து கார்டூன் வந்தது, செய்தி வந்தது என சொல்லும் முட்டாள்கள் இருக்கும் நாடு தான் இது. எம் ஜி ஆர் இறந்தது விடிகால 4 மணிக்கு. தினசரிகள் அச்சேறும் நேரம் இரவு 10 மணிக்கு. எம் ஜி ஆர் விடிகாலை இறந்து போவார் என அச்சேற்றும் கடைநிலை ஊழியருக்கு அங்கே தெரிந்தால் கூட அதை அச்சேற்ற மாட்டார்கள். அதே நிலை தான் இப்போதும். ஆனந்த விகடன் குழுமத்துக்கு மணிவண்ணன் இறந்து போவார் என தெரிந்து இருந்தால் பாரதிராஜாவின் பேட்டியை வெளியிட்டு இருப்பார்களா என சிந்தித்து பார்க்கும் அளவு புத்தியும் இல்லை, நேரமும் இல்லை போலிருக்கு.

பாரதிராஜா இப்படித்தான் பேசுவார் என நான் சப்பைக்கட்டு கட்டவில்லை. அவர் பேசிய பேச்சுகள் தவறாகவே இருக்கட்டும். அதனால் "கொலைப்பழி" அளவுக்கு எல்லாம் பாரதிராஜா ஒர்த் இல்லை. பின் ஏன் பாரதிராஜா அந்த சாவு வீட்டுக்கு வரவில்லை என கேட்கும் நபர்களே, எளிதில் உணர்சி வசப்படும் ஒரு கூட்டம் அங்கே புலிக்கொடி போர்த்த சொன்னால் கூட டம்ளர் கொடி போர்த்தி வைத்திருக்கும் ஒரு கூட்டத்தில் அங்கே பாரதிராஜா உள்ளே வருவது, கலைஞரை நடு இரவில் கைது செய்து கொடுமை செய்த கூட்டத்தினை சேர்ந்த  151 பேர் நடுவே சட்டமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் போவது எப்படி  "தற்கொலை"க்கு சமமோ அதைப்போல  தான் என்பதை உணருங்கள்.


சாகும் முன்னர்  சில நாட்கள் முன்பாக கூட கலைஞரை இதே மணிவண்ணன் எதேற்சையாக சந்தித்த போது ...

"என்ன மணி எப்படி இருக்கே?" - இது கலைஞர்!

"அண்ணே, முதுகு பிரச்சனை இருக்குண்ணே, ஆபரேஷன் நடந்து இருக்கு. நடக்க கூட முடியவில்லைண்ணே"

"ஆக நீயும் என்னைப்போலத்தான். எனக்கும் அந்த பிரச்சனை தானே"

"ஆமாம் அண்ணே, ஆனா ஒன்னு உங்க கிட்டே பேங் பேலன்ஸ் இருக்கு. என் கிட்டே அது இல்லை அண்ணே"

உடனே கலைஞர் சிரித்து கொண்டே... "இவரு நம்மாளுய்யா" என பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்கிறார்.


உடனே திமுகவின் நண்பர்கள் கோவித்து கொள்கின்றனர். யார் மீது? கலைஞர் மீது! "கலைஞர் இந்த சினிமாகாரனுக்கு ஏன் இத்தனை கரிசனம் காட்டுறார். இதே இந்தம்மா ஜெயா இப்படி செய்யுமா? கிட்டத்திலே நின்னு பேச அனுமதிக்குமா. கலைஞர் ஜெயா போல நடந்துக்கனும். கலைஞர் இன்னும் கத்துக்க வேண்டும்" என தனக்கு தெரிந்த "அறிவுரை"களை அள்ளி வீசுகின்றனர்.


அப்படி சொல்பவர்களை நான் பார்த்து ஒரே கேள்வி கேட்கிறேன். இதே ஜெயாவைப்பார்த்து "கலைஞர் மாதிரி நடந்து கொள்ளுங்கள்" என சொல்ல தைரியம் இருக்குதா உங்களிடம். ஏன்னா கலைஞர் என்றல் இலவசமா இழுத்து வைத்து இஸ்திரி போடலாம் என்னும் நினைப்பு தானே உங்களுக்கு? அந்த நினைப்பு திமுக உறுப்பினர்களுக்கே இருக்கும் போது எதிர் முகாமில் இருக்கும் மணிவண்ணனுக்கு இருக்காதா?



நான் இதை எதற்கு இங்கே சொல்கிறேன் எனில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை இருந்தவரிடம் எப்படி நாசூக்காக பேச வேண்டும் என்கிற சாதாரண அடிமட்ட அறிவு கூட இல்லாத மணிவண்ணன், இதே பாரதிராஜா இப்படி தன் சீடனை பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எனில் எந்த அளவு இந்த மறைந்த மணிவண்ணன் அவரை பேசியிருப்பார் என நினைத்துப்பாருங்கள் தோழர்களே!



ஒருவர் திட்டியதுக்கே செத்து போகிறார் ஒருவர் எனில் அவரை போராளி என்றோ அவருக்கு அஞ்சலி செலுத்த "வீர வணக்கம்" என வாசகங்கள் அச்சடிப்பதோ மகா அசிங்கம். மீண்டும் மீண்டும் பாரதிராஜா திட்டியதால் மணிவண்ணன் இறந்தார் என சொல்லி அந்த நிஜமான போராளியை அசிங்கம் செய்யப்போகின்றீர்களா டம்ளர் பாய்ஸ்???


மனதார சொல்கிறேன் ... மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்! அவரை "போராளி"யாகவே இருக்கவிடுங்கள் அட்லீஸ்ட் இறந்த  பின்னராவது! அவர் சாவில் அரசியல் செய்யாதீர்கள்!

11 comments:

  1. ஸ்ஸ்ஸ் எவனாவது ரெண்டு எலுமிச்சம் பழம் அனுபுங்கடா ...

    ReplyDelete
  2. தமிழ்நாட்டுல போராளிகளுக்கா பஞ்சம், தமிழக ஜனத்தொகைக்கு equala போராளிகளின் எண்ணிக்கையும் இருக்கே. அதனால் மணிவண்ணன் போன்ற ஆட்களையும் போராளின்னு சொல்லிக்கலாம்,

    ReplyDelete
  3. என் கருத்தும் இது தான் சகோ

    ReplyDelete
  4. இதுல மணிவண்ணனை விட கருணாநிதி பத்தி தான் அதிகமா புகழ்ச்சி இருக்கு. தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை இருந்தவர் திருடனாக இருந்தால், அப்படி தான் பேசவாங்க.

    ReplyDelete
  5. இதுல மணிவண்ணனை விட கருணாநிதி பத்தி தான் அதிகமா புகழ்ச்சி இருக்கு. தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை இருந்தவர் திருடனாக இருந்தால், அப்படி தான் பேசவாங்க.

    ReplyDelete
  6. ஸ்ஸ்ஸ்..முடியல... எப்படிண்ணே...இப்டிடிடிடி...............கொடும...


    Maakkaan.

    ReplyDelete
  7. கருணாநிதி சோனியாவின் தமிழின அழிப்பு கூட்டணி மீண்டும் மலந்துள்ளது! இன்னும் ஒரு இமாலய ஊழலை நிகழ்த்தி இவர்களின் முந்தய ஊழல் சாதனையை முறியடிக்க தயாராகி விட்டார்கள். கருணாநிதி சோனியாவிற்கு சாமரம் வீசும் வேலையை மூன்றுமாத இடைவெளிக்குப்பின் மீண்டும் பெற்றுவிட்டார். உன் போன்ற சொம்படிச்சான் குஞ்சுகள் என்ன பினாத்தினாலும் 2014 இல் டெபொசிட் நிற்பதே கடினம்.

    ReplyDelete
  8. உங்க ஆளு ஒரு தவறும் பண்ணவில்லை. சரி...ஓகே... கரெக்டு ...

    ReplyDelete
  9. அன்னை குரூப்June 28, 2013 at 2:28 PM

    எதுக்கு புண்ணாக்குகளின் பின்னோட்டங்களை எல்லாம் வெளியிடுகிறீர்கள்? அவர்களின் முழு நேர தொழிலே கிடைத்த இடத்தில்த கலைஞரை தாக்குவது.

    ReplyDelete
  10. நல்ல, திறமை மிகுந்த, ஒரு ப்ளாகர் வெறும் அரசியல் சார்பினால், தரம் தாழ்ந்து, வீணாய் போவது தூரதிர்ஷ்டமே :-(

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))