பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 12, 2014

இணையமும் திமுகவும்!

இணையத்தில் திமுக வளர்ந்த கதையும் கலைஞரின் வேகமும்!!!

ஒரு இயக்கம் வெற்றி பெற வேண்டுமாயின் அதன் கொள்கைகள், கருத்துகள், தாம்
செய்யப்போகும் திட்டங்கள், செய்த திட்டங்கள் என எல்லாம் மக்களிடம் போய்
சேர வேண்டும். அதற்கு மக்கள் புழக்கம் எங்கு அதிகமோ, மக்கள் ரசனை எதில்
நாட்டம் அதிகமோ அந்த வழியே இயக்கமும் சென்று தன் கருத்துகளை அவர்களிடம்
சென்று சேர்ப்பிக்க வேண்டும். அதன் பெயர் தான் "பிரச்சாரம்". இதைத்தான்
திராவிட இயக்கங்கள் ஆரம்பம் முதல் சரியாக செய்து வெற்றிக்கனி பறித்தன.

 1950 களில் ஓரளவு படித்த மக்கள் பத்திரிக்கைகள் படித்தனர். பாமரர்கள்
நாடகம், தெருக்கூத்து பார்த்தனர். இதை புரிந்து கொண்ட திராவிட இயக்கங்கள்
அவர்கள் விரும்பும் அந்த ஊடகங்கள் வழியே தன் கொள்கையை பரப்பியது. படித்த
மக்களை சென்றடைய பத்திரிக்கைகள் நடத்தின. குடியரசு, விடுதலை, திராவிடன்,
திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு,
குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு,
மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம்,
முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை,
முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி,
திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு,
பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு,
முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம்,
எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு இப்படியாக தமிழகமெங்கும்
பத்திரிக்கைகள் திராவிடர்களுக்கு இருந்தன. திராவிட கருத்துகளை அமுதம் போல
அள்ளி வழங்கின. படித்தவர்கள் திராவிட இயக்கம் பக்கம் வந்தனர். தம்
மக்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவது முதல் அனைத்தும் மொழி, இனம் சார்ந்து
செயல்படும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டனர்.

பாமரர்கள் பார்க்கும் தெருக்கூத்து, நாடகங்கள் இவைகளையும் திராவிட
இயங்கங்கள் விட்டு வைக்கவில்லை. அண்ணா, கலைஞர் என இயக்கத்தின் மேல்தட்டு
தலைவர்களே நாடகங்களில் தோன்றி நடித்தனர். மக்களிடம் தங்கள் கொள்கையினை
கொண்டு சேர்த்தனர்.

அதன் பின்னர் அதன் பரிமாண வளர்ச்சியான திரைப்படம்... இதிலே திராவிட இயக்க
முதல் கட்ட தலைவர்கள் தங்கள் எழுத்துகளால் உயிரூட்டினர். அதன் இரண்டாம்
கட்ட தலைவர்கள் அதில் நடித்து மக்களை ஈர்த்தனர்.
"கோவில் கூடாதென்பது அல்ல என் நோக்கம், கோயில் கொடியவர்களின்
கூடாரமாகிவிடக்கூடாது என்பதே என் நோக்கம்" என திராவிட கருத்துகள்
கொப்பளித்தன கலைஞர் வசனத்தில். "அத்தி மரத்தில் கிளையில் காய்க்கும்
காய், வேரில் காய்க்கும் காய் இரண்டுக்கும்  ஒரே சுவை எனில் பிரம்மனுக்கு
தலையில் பிறந்தவன் என சொல்லப்படுபவனுக்கும் காலில் பிறந்தவன் என
சொல்லப்படுபவனுக்கும் வேறு வேறு குணமா இருக்க முடியும்?" என பகுத்தறிவு
வினா திரைப்படம் வாயிலாக வினாத்தொடுத்தார் கலைஞர். மக்கள் உணர்ந்தனர்.
அது போல ஊருக்கு ஊர் , தெருவுக்கு தெரு மேடை போட்டு தங்கள் திராவிட இயக்க
கருத்துகளை கொண்டு சேர்த்தனர். மக்கள் கூட்டம் திரவிட மேடை நோக்கி
நகர்ந்தது.

தமிழகத்தின் சுவர் விளம்பரங்கள் முழுவதும் " இராகுகாலம் பார்ப்போருக்கும்
சாகும் காலம் உண்டு" என பகுத்தறிவு வாங்கியங்கள் பொங்கி பிரவாகமாக
பளிச்சிட்டது. திராவிட இயக்கம் ஆட்சியை பிடித்தது. காலங்கள் மாறின.
பிரச்சாரயுக்தி பரிமாண வளர்ச்சி அடைந்தது. மக்கள் பத்திரிக்கை படிப்பதை
விட, அரங்குகள் சென்று பார்ப்பதை விட தன் வீட்டு கூடத்தில் அமர்ந்து
வசதியாய் உலக நடப்புகளை தெரிந்து கொள்ளும் "தொலைக்காட்சி" வந்தது.

அந்த தொலைக்காட்சியையும் முதலில் பிடித்தது திராவிட இயக்கத்தின் முதல்
தரமான கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தான். 1991 முதல் 1996 வரையிலான
தமிழகத்தின் இருண்ட ஆட்சியின் அவலங்களை மக்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்து
கொண்டே பார்த்து ஒரு முடிவுக்கு வந்து அதன் பின்னர் திமுகவுக்கு 1996ல்
மீண்டும் ஆட்சியை கொடுத்தது.

ஆக தமிழகத்தின் கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் மாறி வரும் பிரச்சார
உத்திக்கு ஏற்றபடி திமுகவும் தன்னை மாற்றிக்கொண்டு அந்த நவீன
பிரச்சாரத்தில் முதன்மையே பெற்றது. ஆரியர்கள் ஆடிப்போயினர். இந்த கால
கட்டத்தில் தான் "இணையம்" என்ற புதிய நவீன பிரச்சார வடிவம் 2000 ஆண்டு
முதல் பிரபல்யம் ஆனது. அதுவரை அனைத்து பிரச்சார முனைகளிலும் முதன்மை
பெற்ற திமுக இந்த ஒரு விஷயத்தில் அத்தனை ஆர்வம் காட்டவில்லையா அல்லது
என்ன காரணம் என தெரியவில்லை, கொஞ்சம் சுனக்கம் காட்டியது என்பதே உண்மை.
கிடைத்த இடைவெளியில் உள்ளே புகுந்தது ஆரியப்பாம்பு. இணையம் வழியே 2000ம்
ஆண்டுகளில் அமேரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து கொத்த தொடங்கியது.
2001ல் அதன் தாக்கம் மிகப்பெரியதாக வெளியே தெரியவில்லை. புற்று நோய்
கட்டி போல மெல்ல மெல்ல வளரத்தொடங்கியது.

ஆனாலும் திமுகவினர் விடவில்லை. தாமதம் ஆனாலும் விழித்துக்கொண்டு இன்று
ஓடத்தொடங்கி இன்று பல்லாயிரக்கணக்கானோர் இணைய வழி பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். 2000ம் ஆண்டுகளில் இணையத்தில் பிரச்சாரம்
மேற்கொண்டவர்கள் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். வளைகுடா
நாடுகளில் பணியாற்றிய "அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்", அமேரிக்கா
வாஷிங்டனில் இருந்து மயிலாடுதுறை சிவா, சிங்கப்பூரில் இருந்து செயல்பட்ட
"உடன்பிறப்பு" என்னும் பெயரில் எழுதிய சம்சுதீன், "கிழுமத்தூர்
எக்ஸ்பிரஸ்" என்னும் பெயரில் எழுதிய பெ.மகேந்திரன், மற்றும் தமிழகத்தில்
இருந்து இயங்கிய லக்கிலூக் என்னும் யுவகிருஷ்ணா, எம்.எம்.அப்துல்லா, டான்
அசோக் என்னும் இளவரசன், கொக்கரக்கோ சௌம்யன், சூர்யா பார்ன் டு
வின்,மெல்வின் பாக்கியநாதன்,  வைரமுத்து, இவர்களுடன் எஸ்.எஸ்.சிவசங்கர்
(இப்போதைய அரியலூர் மாவட்ட செயலர் மற்றும் குன்னம் சட்ட மன்ற தொகுதி
உறுப்பினர் மற்றும் புதுகை மாவட்ட செயலர் பெரியண்ணன் அரசு,
தாமைரைச்செல்வன் எம்.பி,  ஆகிய  அனைவரும் தங்கள் சொந்த வலைப்பூ வைத்து
கொண்டு அந்த ஆரிய பாம்பு கூட்டங்களுக்கு சரிசமமாக போரிட்டனர். ஒரு
மாபெரும் படையை நம் திமுகவின் மேற்கண்ட சிறிய குழு தன்னால் இயன்றவரை
போராடி அடக்கப்பார்த்தது.

குறிப்பாக 2006ல் ஆட்சிக்கு வந்த திமுக கழகத்தை அதன் இலவச வண்ண
தொலைக்காட்சி திட்டத்தை  "அய்யோ தமிழக வருவாய் முழுக்க கருணாநிதி இலவசம்
என்னும் பெயரால் அழித்து வருகின்றார்" என இணையம் முழுக்க கூக்குரலிட்ட
போது அபிஅப்பா என்கிற தொல்காப்பியனின் கட்டுரையில் " புதிதாய் ஒரு வீடு
கட்டினால் வீட்டுக்கு வாசலில் ரோசா செடியும், மல்லிகை செடியும் வைப்பது
போல வண்ணத்தொலைக்கட்சி கொடுக்கும் திட்டம். அதே வீட்டில் பின் பக்க
கொல்லையில் புளிய விதை நடுகின்றானே வீட்டு சொந்தக்காரன், அது அவன் சந்ததி
அந்த வீட்டை பயன் படுத்தும் போது பயன் பட வேண்டி நடப்பட்டது. அது போல
கொள்ளையில் நடும் புளிய விதை  போன்றது தான் சேது சமுத்திர திட்டம். இதை
திமுக  போராடி பெற்றது. வீட்டை அழகு படுத்த ரம்மியமாக்கவே வாசலில் நடும்
பூச்செடி போல வண்ணத்தொலைக்காட்சி திட்டம்" என விளக்கம் கொடுத்தது இணையம்
முழுக்க பிரசித்தமானது.

இப்படியாக ஒரு பெரிய ஆரியப்படைகள்  முன்னதாக இந்த திமுகவின் சிறிய குழு
தன் முழு பலப்பிரயோகமும் காட்டியது. ஆனாலும் திராவிட இயக்கத்தினால் பலன்
பெற்று கணிணி பயின்ற திராவிட இயக்க வழிவந்த புதுவாக்காளர்களே அந்த
ஆரியப்படையின் சூழ்ச்சியல் அவர்கள் செய்த பொய்ப்பிரச்சாரத்தால்
அவர்களுக்கு  கூறிய மந்திர வார்த்தையான "மாற்றம் வேண்டும்" என்பதை நம்பி
ஆரிய ஆட்சியை 2011ல் ஆட்சியில் அமர்த்த வழி வகுக்கும் வகையில் தங்கள் 25
லட்சம் புது வாக்குகளை அள்ளி வழங்கினர்.  பின்னர் தான் திமுக சிந்தனை
கொண்ட இணையம் புழக்கத்தில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டனர்.

இதோ இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் இணையம் வழி திமுக கொள்கைகளை பரப்பி
வருகின்றனர். ஆரியப்படை திக்குமுக்காடி போய் செய்வதறியாது நிற்கின்றது.
இந்த பத்தாயிரம் பேரில் அபிஅப்பா என்கிற தொல்காப்பியன், டான் அசோக்,
சூர்யா, கொக்கரக்கோ சௌம்யன், பால்ராஜ், ஜே பி பிரகாஷ், திராவிடப்புரட்சி
போன்ற சிலர் கட்டுரையாளர்கள், ஹாங்காங் அன்சாரி, நாகூர் ஜலால் போன்ற
சிலர் (கார்டூனிஸ்ட் போல) போட்டோனிஸ்ட்கள்,  கோகுல், சித்தன்,
ரா.அசோக்,சம்பத்குமார், சரவணகுமார், அருள்பிரகாசம் போன்ற  சிலர்
அண்ணாவைப்போல, கலைஞரைப்போல "பன்ச் டயலாக்" வித்தகர்கள், மரியா அல்போன்ஸ்
பாண்டியன் போன்ற சிலர் நம்மை எதிர்த்து எழுதும் வெகுஜன பத்திரிக்கைகளின்
இணைய தளத்தில் அவர்களுக்கு பதில் சொல்வதையே முழு நேரப்பணியாக செய்து
வருபவர்கள். சிலர் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை ஆராய்ந்து திமுக மீது தவறு
இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வகையில்  செயல்படுபவர்கள்.
இந்த கட்டுரை எழுதும் என்னைப்போல சிலர் திமுகவின் அனைத்து
நிகழ்வுகளுக்கும் சென்று புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு
செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள். நான் இது வரை எடுத்து
வெளியிட்ட புகைப்பட எண்ணிக்கை 50,000 தாண்டி விட்டது.

5 வருடம் முன்பகவே தளபதி இணையம் பக்கம் வந்து கழக செய்திகள், கொள்கைகள்
என வெளியிட்டு நேரிடையாக மக்கள் முன் வந்து விட்டார். இதோ ஒரு வருடம்
முன்பாக கலைஞர் அவர்களும் இணையம் பக்கம் வந்து விட்டார். தன் பேச்சுகள்,
தன் அறிக்கைகள், தன் நேர்காணல்கள் என அனைத்து அதிலே வந்து நேரிடையாக
மக்களை சென்று அடைந்து வருகின்றது. நம் "முரசொலி"கூட யூனிக்கோட் வழி
வந்து இன்று உலகம் முழுக்க "முரசொலி" பட்டொளி வீசிப்பறக்கின்றது.
உலகிலேயே 90 வயது அரசியல்வாதி ஒருவர் ஒரு நவீன உலகின் வெளிப்பாடான
"இணையம்" வழி மக்களை சந்திக்கிறார் எனில் அது நம் தலைவர் கலைஞர் ஒருவர்
மட்டுமே. ஒரே ஒருவர் மட்டுமே. நாம் கொடுத்த இலவச வண்ணத்தொலைக்காட்சி
பெட்டி வழியே "பொய்ப்பிரச்சாரம்" செய்து மக்களை 'மாற்றம் வேண்டும்' என
சொல்லி ஆட்சிக்கு வந்து  ஏமாற்றம் கொடுத்து கொண்டிருக்கும் ஆரிய
ஆட்சிக்கு இன்று அவர்கள் கொடுக்கும் இலவச லேப்டாப் மூலமாக நாம் "இணைய
வழி" உண்மை பிரச்சாரம் செய்து பதிலடி கொடுத்து மீண்டும் திமுகவை
ஆட்சியில் அமர்த்துவோம்.

இன்று 90 வது பிறந்த நாள் நம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு. "மாணவ நேசன்"
என்று தன் கைப்பட எழுதி கையெழுத்து பிரதியாக தன் 13 வயதில் தொடங்கிய
அவரது திராவிடப்பிரச்சாரம் பின்னர் அச்சு பிரதியாகி, நாடக நடிகராகி,
திரைப்பட எழுத்தாளர் ஆகி, மேடைப்பிரச்சரம் என வளர்ந்து, பின்னர் ரேடியோ,
தொலைக்காட்சி என விரிவடைந்து இன்று அவருடைய 90 வது வயதில்
"இணையப்பிரச்சாரம்" என்னும் நிலைக்கு வந்துள்ளது. எதிர்காலத்தில் ஒருவர்
கண் மூடி படுத்து இருந்தால் கூட ஒரு பட்டனை தட்டினால் கண்ணுக்கு முன்னதாக
எழுத்துகள் வரி வடிவிலும் , திரைப்பட வடிவிலும் (விஷூவல்) தெரிவது மாதிரி
ஏதாவது புது அறிவியல் கண்டுபிடிப்பு வரலாம். அது இப்போது இணையத்தில்
இருக்கும் எங்களுக்கு புதிகாக இருக்கலாம். ஆனால் கலைஞருக்கு அதுவும்
பழகும். கண்மூடி படுத்தாலும் கலைஞர் தாக்கம் இருக்கும். அப்போது அனேகமாக
நாங்கள் பேசிக்கொள்வோம் " இது என்ன கலைஞர் பயன்படுத்துவது புதுவித
டெக்னிக்காக இருக்கே, இதை நாம் எப்படி பயன்படுத்துவது" என எங்களுக்குள்
பேசிப்பேசி குழம்பி நாங்கள் அதனுள் செல்லும் போது கலைஞர் அனேகமாக இந்த
நவீன யுகத்தின் அதற்கடுத்த  டெக்னாலஜிக்கு தன் பிரச்சாரத்தை
மாற்றிக்கொண்டு போயிருப்பார். அவரது வேகத்துக்கு நாம் ஈடுகொடுக்க இயலுமா?
அது நடக்கும் விஷயமா? வாழ்க கலைஞர்!வெல்க திமுக!

10 comments:

 1. ஆரிய சூழ்ச்சிக்கு ஏதிராய் களமிறகவாரா களா?

  ReplyDelete
 2. சரியான கருத்துக்கள். இணையம் இருப்பதே திமுகவையும் குறிப்பாக கலைஞரையும் எதிர்ப்பதற்குத்தான் எனும்படியாகவே நிலைமை இருக்கிறது. கலைஞர் பற்றிய விமரிசனங்களை நானும் வைத்தாலும் இந்தப் 'பொத்தாம் பொதுவான போக்கிற்கு' எதிராகத்தான் இணையத்தில் எழுதிவருகிறேன்.
  அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முரசொலி இன்றைக்கு யூனிகோட் வழி கிடைக்கிறது என்று எழுதியிருக்கிறீர்கள். உள்ளே சென்று படிப்பதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. தினமலர், தினமணி, தினகரன், இ இந்து போன்று படிப்பதற்கு சுலபமாக இருக்கிறதா என்பதை கவனிக்கச் சொல்லுங்கள். தேர்தல் வருவதற்குள் சுலபமான முறையில் படிப்பதற்கு ஏதுவாக மாற்றச்சொல்லுங்கள். நன்றி.

  ReplyDelete
 3. நீங்களுமா அமுதவன்?

  ReplyDelete
 4. Whatever you do ,tats ur effort. But it will be all in Vain, when your own party command is not in Good shape! Modernizing is good, but your party Goals and policies are only benefiting certain people! I dont know,you actually aware of or just pretending you dont know! Its just my view, i never want to hurt anybody! Thanks

  ReplyDelete
 5. இணையத்தில் இன்னும் கலக்குவோம்.எதிரியை தோற்கடிப்போம்.

  ReplyDelete
 6. எதிரியை வீழ்த்துவதற்கு இணையத்தில் பரப்புரையாற்றுவோம்.

  ReplyDelete
 7. no one fraud dmk leader in the world

  ReplyDelete
 8. உங்களுக்கு நீங்களே விளம்பரமா?

  ReplyDelete
 9. அபி அப்பா அவர்களே... மற்றும்..
  டான் அசோக் அவர்களே, சூர்யா அவர்களே, கொக்கரக்கோ சௌம்யன் அவர்களே, பால்ராஜ்மரியா அவர்களே, ஜே பி பிரகாஷ் அவர்களே, திராவிடப்புரட்சி அவர்களே, ஹாங்காங் அன்சாரி அவர்களே, நாகூர் ஜலால் அவர்களே, கோகுல் அவர்களே, சித்தன் அவர்களே, ரா.அசோக் அவர்களே,சம்பத்குமார் அவர்களே, சரவணகுமார் அவர்களே, அருள்பிரகாசம் அவர்களே,


  யப்பா மூச்சு முட்டுது ..எஙக சோடா எங்க சோடா.. ...


  இத்தனை பேர் எழுதுவது அவர்க்ளின் நண்பர்கள் சிலர் தவிர பெரும்பாலோருக்கு குறிப்பாக எனக்கு .. தெரிவதில்லை...

  இவர்களின் தளங்த்தின் சுட்டிகளை தயவு செய்து ஒரே இடத்தில் சேகரித்து வைத்தால் அனைவருக்கும் பயன்படும்..

  முடிந்தால் ஒரு தனி தளத்தில் அவர்க்ளின் லேட்டஸ்ட் 1 - 2 பதிவுகள் தானாக அப்டேட் ஆவது போல் செய்தால் இன்னம் வசதி, தினம் அந்த தளத்தை பர்த்துவிட்டு லேட்டஸ்ட் செய்தி தளங்களுக்கு செல்லலாம்.

  நீஙக்ள் சொல்லும் அன்பான எதிர் மரியா அல்போன்ஸ் பாண்டியன், போன்றவர்களின் எழுத்துகளையும் அதில் சேர்த்தால் இன்னம் வசதி,

  யாரும் அதற்கு பதில் சொல்ல வாய்ப்பக அமையும். சில ஆண்டுகள் கழித்து பார்த்தால் கட்சியின் மிக பெரிய தகவல் கிடங்காகும்.

  போன தேர்தலில் விருச்சீக காந்து போன்ற பெயரில் தமிழக உளவுத்துறையின் ஐடி பிரிவு செயல்பட்டது போல இப்போதும் ஆரம்பிக்கபடலாம்.

  தேர்தலுக்கு இது மிகவும் பயன்படும்.

  செய்வீர்களா.. நன்றி,
  வினோத்

  ReplyDelete
 10. iyya abi father avargale
  "jaalra" virku alave illai
  edho kolinger avargal thaan inayathil kalakkukirar mattravargal ellam summa ullargal endru

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))