பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 19, 2014

மூவர் உள்ளிட்ட எழுவர் விடுதலையும் ஜெயா ஆடப்போகும் நாடகமும்!

இங்கே தமிழ் நாட்டில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்னு திமுக. அடுத்து அதிமுக. திமுகவுக்கும் அதிமுக மீது எவ்வித காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால் அதிமுக தலைவிக்கும் எங்கள் திமுகவுக்கும் ஏதோ தனிப்பட்ட காழ்”புணர்வு” இருப்பதாகவே நினைக்கிறேன்!

முருகன், சாந்தன், பேறறிவாளன் ஆகியோர் தூக்கு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அது போல ரத்து செய்யப்படின் உடனே விடுதலை செய்யபட வேண்டும் எனவும் 25 லட்சம் பேர் ஒப்புதலுடன் ஒரு தீர்மானம் போட்டது திமுக.

இது போல அதிமுக எதாவது செய்ததா எனில் இல்லை என்பதே பதில். அது போல “போர் எனில் பொது மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்ற பொன் மொழியை உதிர்த்தவர் இன்றைய முதல்வர்.

அப்போது தலைவர் கலைஞர் பதில் சொன்னார்.... “காலம் பதில் சொல்லும் இவர்களுக்கு”

என்ன அஒரு தீர்க்கதரிசி அவர். இது தேர்தல் காலம். இன்றைக்கு சாமான், நெடுமரம், சைக்கோ போன்றவார்கள் ஜெயா முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பினும் கூட அந்த ஜே சி பி இயந்திரத்தை கைது செய்ய வேண்டும் என்று “முழக்கமிடும்” அளவு காயடிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில்... தேர்தல் “காலம்” என இப்போது வந்து விட்ட இந்த “காலத்தில்”... அங்கே உச்ச நீதிமனறத்தில் ஒரு சிறப்பான தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

காலம் தாழ்ந்து விட்டது கிட்ட தட்ட 24 ஆண்டுகள் தினம் தினம் ஒருவர் தூக்கு கயிறு வாசனையில் இருக்கும் போது காலம் தாழ்த்தியமை என்பது பெரும் கொடுமை! ஒன்று .... என்று தீர்ப்பு சொல்லப்பட்டதோ அன்று அதை ஜனாதிபதி ஆம், இல்லை என சொல்லி நிறை வேற்றி இருக்க வேண்டும். இல்லாவிடில் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் காலம் தாழ்த்தி உச்ச நீதி மன்ற தீர்ப்பையே கேலிக்குரியதாக செய்து விட்டனர். அதாவது தீர்ப்பில் “ஒரு இருபத்தி நான்கு ஆண்டுகள் சிறை... பின்னர் தூக்கு” என நீதி வழங்கி இருப்பின் அதில் ஒரு கந்தாயம் இருக்கும். ஆனால் இது போல ஜனாதிபதிகள் காலம் தாழ்த்தியது அவர்களுக்கு கொடுத்த தண்டனையை மேலும் நீட்டிப்பதாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. எனவே இந்த உச்ச நீதி மன்றம் அவர்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்கின்றது. அது போல் அவர்களுக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகின்றது. அது போல இவர்கள் 24 ஆண்டுகாலம் சிறையில் இருந்து விட்ட படியால் இவர்களை விடுதலை செய்வது என்பது மாநில அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. அவர்கள் விரும்பின் விடுதலை “கூட” செய்யாலாம். இதில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாது!” என சொல்லிவிட்டது!

சபாஷ்! சபாஷ்! சபாஷ்! இங்கே தான் கலைஞர் உள்ளே புகுந்தார். (இதற்கு முன் 48 மணி நேரம் முன்பே தனக்கு முன்னர் ஒரு 25 லட்சம் பேர் இருக்கும் தைரியத்தில் சொல்லிவிட்டார். தூக்கு தண்டனை என்பதே கூடாது. அதிலும் இந்த மூவர் தண்டனை ஏற்புடையது அல்ல என சொல்லி விட்டார். அது போலவே அப்பாடி ரத்து செய்யப்படும் பட்சத்தில் தமிழக அரசு “விடுதலை” செய்ய வேண்டும் என அழுத்தம திருத்தமாக சொல்லி விட்டார்.

இப்போது நான் இங்க கட் பண்ணி அங்க போகிறேன்! ஏதோ இவர்களை “விடுதலை” செய்தது என்பது தமிழினம் மீது இருக்கும் பற்று காரணமாகவா? அல்லது செத்துப்போன “ஈழத்தாய்” பட்டம் ரினிவலுக்காகவா? அல்லது இன்று வாய் மூடி கிடக்கும் சாமான், நெடுமரம், சைக்கோ கும்பல் உன்னை புழக வேண்டும் என்பதற்காகவா???? இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

இதே ஒரு வாரம் முன்பாக தன் 90 வயது தகப்பன் சாகும் நிலையில் கூட இருக்க வேண்டும் என பரோல் கேட்ட இதே நளினிக்கு இதே தமிழக அரசு நீதிமன்றத்தில் “இவரை வெளியே விட்டால் (அதாவது பரேலில் விட்டால் கூட) தமிழக சட்டம் ஒழுங்கு பாதித்து விடும்” என காரசாரமாக வாதிட்டது. ஆனால் இன்று நீதியரசர் சதாசிவம் கொடுத்த குட்டு தலையில் வலி உண்டாக்கியதா அல்லது ஓட்டுக்காக விடுதலையே செய்தாரா என நடுனிலையாளர்கள் மற்றும் சாமான், நெடுமரம் , சைக்கோ போன்ற ஈழ வியாபாரிகள் நினைத்து பார்க்க வேண்டும். ஆக ஒரு வாரம் முன்பாக நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் எனில் இந்த ஒரு வாரத்தில் எல்லாம் சரி செய்யப்பட்டு தமிழகம் சட்டம் ஒழுங்கில் சீராகிவிட்டதா எனில் இல்லை.... இல்லை... இதே சென்னையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கூட ஊரப்பாக்கத்தில் படுகொலை ... போன்ற சங்கதிகள் தினம் தோறும் நடந்து கொண்டு தான் உள்ளது!

எனவே! இது ஜெயாவின் தமிழர் பாசம் இல்லை.... இது சதாசிவம் அய்யா போட்ட கிடுக்கிப்பிடி தான்!
அன்று கலைஞர் சொன்னாரே “காலம் பதில் சொல்லும்” என்று... இது தான் அந்த காலம்! “தேர்தல் காலம்” உனக்கு ஓட்டு விழ எது வேண்டுமானாலும் செய்வாய்!

ஆனாலும் அதற்கும் “கலைஞர்” அவர்களே காரணம் என்பதை சாமான், நெடுமரம், சைக்கோ குரூப்ஸ் உணரட்டும்!

இந்த மூவர் மட்டும் இல்லை. நளினி உள்ளிட்ட அந்த ஏழு பேரின் விடுதலைக்கு கலைஞரே காரணம்!

அரசியல் சதுரங்கத்தில் உனக்கு செக் வைத்த ராஜா “கலைஞர்” மற்றும் தமிழின “யானை” சதாசிவம்” அய்யாவே காரணம்! இன்று நீ தோற்று போனது தான் உண்மை! தமிழர்கள் தான் வெற்றி பெற்றனர்! நீ தோற்று விட்டாய்! உன்னை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்த அவர்களுக்கு என் நன்றிகள்!

9 comments:

  1. iyya abi appa avargale
    idhe kolainger than nalini thavira mattra moondru perukkum thookku thandanai aayul thandanai aaga mattra koodathu endru thamilaga satta sabaiyil theermanm niraivettri ullar melum prabhakaran amma parvathi ammal avargal maruthuva sigichai seyya chennai vandha podhu viratti adithathu ungal kolinger thaan. naan jaya ammavirku aadharuv illai ungal thalivar kolinger ondrum yokkiyam illai adhai mudhalil neengal purindhu kollungal .

    ReplyDelete
  2. கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))

    No கருத்து

    ReplyDelete
  3. அது போல “போர் எனில் பொது மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்ற பொன் மொழியை உதிர்த்தவர் இன்றைய முதல்வர்.

    Mazai vittalum thoovanam vidathu enru sonnathu endha vaai? Indha Naara vai dhane?

    ReplyDelete
  4. நான் பெரியார் பக்தன். விடுதலைப்புலி பிரபாகரன் எனக்கு புடிக்கும். குஷ்பூ பெரியார் பிறந்தது மதுரை ச்சீ திருச்சின்னு சொன்னதும் நான் குசுபூவை கிண்டல் பண்ணி ஒரு பதிவு போட்டுட்டன்.
    http://wandererwaves.blogspot.com/2014/02/blog-post_5262.html

    ReplyDelete
  5. இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவதில் இரண்டு கட்சிகளுக்கும் எந்த பேதமும் இல்லை! எப்படியோ இப்பவாவது விடுதலை செய்தார்களே அந்த மட்டும் லாபம்!

    ReplyDelete
  6. இது ஜெயாவின் தமிழர் பாசம் இல்லை.... இது சதாசிவம் அய்யா போட்ட கிடுக்கிப்பிடி தான்!//

    இது தான் உண்மை.

    ReplyDelete
  7. திரு தொல்காப்பியன் அவர்களே, ஜெ யின் ஈழத்தமிழர் பாசம் அனைவரும் அறிந்தது தான் என்றாலும், இன்று ஓட்டுக்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தார் என்றாலும் கூட,எடுத்த முடிவு நல்ல முடிவு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? . நீதியரசர் சதாசிவம், அவர்களை விடுதலை செய்ய சொல்லி தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றும் போடவில்லை. முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என்றே கூறியது. தீர்ப்பு வந்த அடுத்த நாளே கால தாமத்மின்றி அமைச்சரவையை கூட்டி விடுதலை முடிவை எடுத்து சட்டசபையில் அறிவித்தாரே அதுதான் சிறப்பு . அவர் நினைத்திருந்தால் கொஞ்சம் தாமதித்து இருக்கலாம் அந்த இடைவேளையில் மத்திய அரசுக்கு ஏதேனும் குளறுபடி செய்யும் வாய்ப்பு கொடுத்து பின் நான் என்ன செய்ய எல்லாம் மத்திய அரசுதான் செய்தது என்றும் கூறி இருக்கலாம் தான். அதற்காகவாவது இந்த விஷயத்தில் ஜெவிற்கு நன்றி சொல்லுங்கள் இயலவில்லை எனில் தூற்றாதிருங்கள், நன்றி !

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))