பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 15, 2012

அறிஞர் அண்ணாவும் சிவசேனை பால்தாக்ரேவும்!



அண்ணா அவர்கள் 1968ல்  அமேரிக்க பயணத்தின் போது "யேல்" பல்கலைகழகத்தில் பிரமாதமாக பேசினார், அவரது ஆங்கில புலமை கேட்டு அங்கே வியந்தனர். "Because என்ற சொல்லை ஒரு வாக்கியத்தில் மூன்று முறை தொடர்சியாக வர வழைக்க இயலுமா என கேட்டமைக்கு அண்ணா அவர்கள் ' No sentence begins with because, because, because is a conjuction"  என சொன்னார், என்றெல்லாம் இங்கே சரித்திரம் உள்ளது. ஆனால் அவர் "யேல்" பல்கலை கழகம் போவதற்கு முன்பாகவே ஹவாய் தீவில் கலந்து கொண்ட ஒரு பல்கலைகழகத்தில் அவரை நோண்டி நொங்கு எடுத்து விட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா?

அறிஞர் அண்ணா அவர்கள் அமேரிக்கா சென்ற போது ஹவாய் பல்கலைகழக கிழக்கு மேற்கு அமைப்பின் சார்பில் ( east west center) அளிக்கப்பட்ட வரவேற்பின் போது இந்திய மாணவர்களின் (கவனிக்க தமிழக மாணவர்கள் இல்லை இந்திய மாணவர்கள்) கேள்விக்கு அளித்த பதிள்களின் தமிழாக்கம் இவைகள்!

கேள்வி: அமேரிக்காவை சுற்றி ப்பார்த்த போது உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் என்ன?

அண்ணா: இந்த நாட்டில் இயற்கை தந்திருக்கும் செல்வம் மட்டும் அல்ல, மனிதர்கள் தங்கள் முயற்சியினால் பல்வேறுவிதமான ஆற்றல்களினால் அடைந்த முன்னேற்றமும் அவர்களுடைய வெற்றியும் என் உள்ளத்தை தொடும் முதல் எண்ணம் ஆகும்.

கேள்வி: இந்திய ஜனநாயகத்தின் தலைவிதி என்ன?

அண்ணா: இந்தியர்கள் எப்போதும் தலைவிதியையே சரணடைகின்றனர். ஆனால் இந்திய ஜனநாயகம் பற்றி பேசுகையில் தலைவிதி என்னும் சொல்லை நீங்கள் பயன் படுத்துவது சரியில்லை என நான் கருதுகிறேன். இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஒரு விதமான அபாயமும் கிடையாது. ஏனனில் நம்முடைய பண்பாடு ஜனநாயக பண்பாடு ஆகும். இப்பண்பாட்டால் நம் அன்றாட வாழக்கையில் கூட ஜனநாயகம் இருக்கின்றது என சொல்லலாம். இந்தியா தான் உலகிலேயே மிகப்பெரிய, புதிய மற்றும் ஏழ்மையான ஜனநாயக நாடு. இருந்த போதிலும் நான்கு பெரிய தேர்தல்களை வெற்றிக்கரமாக நடத்தி இருக்கிறோம். இந்தியாவை பற்றி அறிந்துள்ள பல மேநாட்டார்  தேர்தல் சமயத்தில் பயங்கர போராட்டங்களும் புரட்சிகளும், ரத்தம் சிந்துதலும் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஆங்காங்கே சில மோதல்கள் இருந்த போதிலும் நான்கு தேர்தலில்களிலும் ஏற்பட்ட எல்லா சேதங்களையும் கூட்டிப்பார்த்தால் அமேரிக்காவில் ஒரு வருடத்தில் உண்டாகும் விடுமுறை விபத்துகளை விட மிகக்குறைவாக உள்ளன. ஜன நாயகத்தை கையாள்வதில் நமக்குள்ள ஆற்றல் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டு விடவும் வேணடாம். ஜனநாயம் பற்றி மெத்தனமாகவும் இருந்து விட வேண்டாம்.

கேள்வி: நீங்கள் இது வரை நடந்த 4 தேர்தல்களும் வெற்றியாக முடிந்ததாக சொன்னீர்கள், அது வெற்றிகரமாகவும் திட்டமிடப்பட்டும் முன் யோசனையோடும், ஒழுங்காக நடந்ததாக எண்ணுகிறீர்களா? முக்கியமாக காஷ்மீரில் நடந்த தேர்தலை பற்றி பல்தரப்பட்ட பேச்சுகள் இருந்தன. மேலும் 1967க்கு முன் நடந்த  3 தேர்தல்களும் ஒழுங்காக நடக்கவில்லை என்று நாம் எண்ண எல்லா காரணங்களும் இருக்கே அய்யா?

அண்ணா: தேர்தல்கள் நாணயம் இல்லாமல் இருக்கின்றன என்னும் குற்றச்சாட்டு எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் இருக்க கூடிய குற்றச்சாட்டு தான். முதல் 2 தேர்தல்களிலும் நாணயம் சற்று குறைவாக இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனாலும் நாணயமற்ற முறைகள் அல்லது வேறு விதமான குறைகளை பார்த்த வரையில் மனிதர் குணம் இருக்கிற நிலையில் நிச்சயமாக எல்லா நாட்டிலும் எல்லா தேர்தல்களிலும் ஏதோ ஒரு நாணயமின்மை இருக்கத்தான் செய்யும்.இந்த பயங்கரத்தை பொறுத்த வரையில் நம் நாட்டு தேர்தலில் ஆங்காங்கே நாணயம் அற்ற நடப்புகள் இருப்பினும் பொதுத்தேர்தல் என்னும் கண்டத்தின் வழியே நான்கு முறை வெற்றிகரமாக வெளி வந்து விட்டோம். அதே சமயம் பல நாடுகளில் தேர்தல் நடுவில் நிறுத்தப்பட்டும் , முழுவதுமாக கைவிடப்பட்டும் , தடைபடுத்தப்பட்டும் போயுள்ளன. மேலும் நம்மோடுஜனநாயக ஆட்சியை தொடங்கிய பல நாடுகள் கடைசியில் ராணுவ ஆட்சியிலோ, அடிப்படை ஜனநாயகத்திலோ, அல்லது வழி நடத்தி செல்லும் ஜனநாயகம் என்னும் ஜனநாயகத்திலோ வந்து சரணடைந்து விட்டன.

கேள்வி: சென்னை மாநிலம் ,மும்மொழி திட்டத்தை விட்டு விட்டு இரு மொழி திட்டத்துக்கு போய்விட்டது அல்லவா? வருகின்ற வருடங்களில் இதே கொள்கையை கடைபிடுப்பீர்களா? அல்லது மும்மொழி திட்டம் ஏற்க்கப்படுமா?

அண்ணா: நீங்கள் , மும்மொழியை விரும்புகிறீர்களா அல்லது இரு மொழியை விரும்புகிறீர்களா என்று விவரித்த பின்னர் இந்த கேள்வியை கேளுங்கள் என நான் கூறுவேன். (சிரிப்பு) மும்மொழி திட்டத்தின் பின்னால் ஒரு சரித்திரமே இருக்கின்றது. மும்மொழி திட்டம் பல மாவட்டங்களிலேயே சமரச திட்டங்களாக பல வருடங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இந்திய நாட்டை ஒற்றுமையாக நிலைக்கச்செய்ய எல்லா மாநிலங்களும் மூன்று மொழிகள் கொண்டு இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அவற்றில் ஒன்று மாநில மொழியாகவும், இரண்டு ஆங்கிலம், மூன்று அவர்கள் தேசிய மொழி என கருதிய அவர்கள் சொன்ன ஒரு மொழி. நான் அச்சமயம் எதிர்கட்சியில் இருந்தேன். அதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி  மும்மொழி திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அந்த திட்டம் எல்லா மாநிலத்துக்கும் செய்யப்பட்டது. நல்ல ஜனநாயக பிரதிநிதியாக நான் முதலில் அதை எதிர்த்த போதிலும் அது அமலுக்கு வந்த பின் இடையில் நுழைத்து தொல்லை தவில்லை. திட்டம் நடக்க ஆரம்பித்து விட்டது. அதை நான் கெடுக்க விரும்ப வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னும் ஆறு மாதம் அது இருந்தது. சென்னை மாநிலம் மும்மொழி திட்டத்தில் மிகவும் உண்மையாக ஊக்கமாக இருந்தது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கும் இந்த சமரச திட்டத்தை ஒத்துக்கொண்டு ஒரு தரப்பாக இருந்த வட மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல் செய்வதில் உண்மையாக இல்லை. சிலர் அவர்கள் தென்னிந்திய மொழிகள் எதையும் படிக்க அவசியம் இல்லை என கூறிவிட்டனர்.

ஒரு மாநிலம், ஆங்கில கூட தேவை இல்லை என கூறிவிட்டது. அவர்கள் மாநில மொழியே போதும் என சொன்னார்கள். ஆகவே மும்மொழி திட்டம் பல மாநில ஊக்கத்தோடும் நம்பிக்கையோடும் அமல்படுத்தவில்லை. பாராளுமன்றத்தில் புது மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் வட இந்திய மாநிலங்கள் மும்மொழி திட்டத்தை அவமதிப்பதை உணந்தாலும் என் மாநிலத்தில் தமிழும் ஆங்கிலமும் இரு மொழி திட்டத்தை கொண்டு வந்தேன். இரு மொழி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் என்றால் ஆட்சியையும் மக்கள் மாற்றுவார்கள். ஆனால் நான் ஆட்சியில் இருக்கும் வரை இரு மொழி திட்டத்தை மாற்றுவதாக இல்லை, மும்மொழிக்கு போவதாகவும் இல்லை (செம கைதட்டல்)

கேள்வி: கல்லூரிகளில் கூட மாநில மொழியை பாட மொழியாக மாற்றுவதாக கேள்விப்படும் போது சில சமயங்களில் அது நல்லதாக படுகின்றது. பொதுவாக நம் மொழியில் நாம் படிப்பது நல்லது தான். ஆனால் எல்லா விஞ்ஞான படிப்புகளையும் அப்படி செய்ய முடியுமா? ஜப்பானில் அது நடந்துள்ளது. அப்படியாக தமிழில் விஞ்ஞானத்தை மொழி பெயர்த்து "தொழில் நுட்ப கல்விகளை: செய்யும் உத்தேசம் உள்ளதா?

அண்ணா: நீங்கள் ஜப்பானை பற்றி சொல்லும் போதே அதில் பாதி பதில் அடங்கி விட்டது. ஆனால் நான் அதில் இருந்து பதில் உண்டாக்க போவதில்லை. தமிழ்நாடு பொறுத்த வரை தொழில்கல்விகளாகிய மருத்துவம், பொறியியல், இயந்திர நுணுக்கவியல் ஆகியவற்றில் இன்னும் தமிழை பாட மொழி ஆக்கப்படவில்லை. கலைக்கல்வியில் மட்டுமே இதுவரை ஆக்கியுள்ளோம். விரைவில் எல்லாமும் வரும். மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் அவை பயிற்றுவிக்கப்படும். ஜப்பானில் உள்ளது போல எல்லாமே மொழியாக்கம் செய்விக்கப்பட்டு பொறியியல் முதல் எல்லாம் தமிழில் வரும். ஆனால் ஆங்கில இரண்டாம் மொழியாக இருக்கும். திமுக ஆட்சி இதைநீண்ட கால திட்டமாக செய்யும்.

கேள்வி: இந்தியாவில் இப்போது இருக்கும் பல முக்கிய பிரச்சனைகளை விட தேசிய மொழி பிரச்சனை முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிற்களா?

அண்ணா: என் நல்ல காலம் உங்கள் கேவியிலேயே பதிலும் உள்ளது. நீங்கள் கேட்பது போல பல மிக முக்கிய பிரச்சனைகள் இருக்கையில் நாம் முதலில் அவற்றை முடித்து விட்டு பின்னர் மொழியை பற்றி சிந்திக்கலாம்.

கேள்வி: சென்னையில் உங்கள் திமுக அடைந்த வெற்றி போல மற்ற மாநிலங்களில் வேறு கட்சிகள் வலிமை அடைய வாய்ப்பு உள்ளதா? பஞ்சாப், மகாராஷ்ட்டிரா ஆகிய இடங்களில் "சிவசேனை" என்னும் கட்சி வெற்றி அடையுமா?

அண்ணா: திமுகவின் வெற்றியைப்பற்றி எண்ணும் போது அதன் சரித்திரமும் சேர்த்து பார்க்க வேண்டும். நாங்க 1949ல் கட்சி ஆரம்பிச்சோம். அதன் பின்னர் பல தேர்தல்ல நிக்கவே இல்லை. மிகுந்த யோசனைக்கு பின்ன கட்சிக்குள்ள கேட்டுகிட்டு ஆலோசிச்சுகிட்டு பின்ன 1957ல் நின்னோம். முதல்ல 15 சட்டப்பேரவை இடம் மட்டுமே கிடைச்சுது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு இடம் மட்டுமே கிடைச்சுது. அடுத்த தடவை 50 சட்ட மன்ற உறுப்பினர்களும், எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கொடுத்தாங்க மக்கள். பின்ன நாங்க 1967ல் நின்ன போது நாங்க 134 சட்ட மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்கு 25 உறுப்பினர்களும் பெற்றோம் என்றால் ஒரே இரவில் நிகழ்ந்த சாதனை இல்லை இது. ஏதோ ஒரு தலைவன் ஒரே இரவில் தன் மனமாச்சர்யங்களுகாக கட்சி ஆரம்பிச்சா ஆரம்பத்தில் பிரகாசமா இருப்பது போல தெரிந்தாலும் நாளடைவில் நிற்காது. இதை சிவசேனை போன்ற கட்சிகளுக்கு சொல்கிறேன். அவங்க நல்லது செஞ்சா நல்லது நடக்கும். அத்தனையே! ஆனால் சிவசேனை வளர்கிறது. அதற்கு காங்கிரசும் அதன் ஆட்சி செயல்பாடுகளும் கூட காரணமாக இருக்கலாம்.

கேள்வி: இளைஞர் பலருக்கு நீங்கள் முதன் முதலில் திமுகவில் இளமை நாட்களில் கொண்டிருந்த பல கொள்கைகளை கைவிட்டு விட்டதாகவும் இப்போது நீங்கள் கொண்டுள்ள கருத்துகள் புரியாத புதிராகவும் காணல் நீராகவும் தோன்றுகின்றன. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

அண்ணா: உங்களை ஒன்று கேட்கிறேன்! நான் பிரிவினை பற்றி பேசியபோது 50 இடங்கள் மட்டுமே தந்து விட்டு நான் பிரிவினை கொள்கையை விட்ட பின்னர் 134 இடங்கள் தருகின்றனர் மக்கள். இதை எண்ணும் போது அவர்கள் என் மீது கோவம் கொண்டது போல் தெரிகின்றதா? நிச்சயம் இல்லை. நீங்கள் அதற்கு என்ன விளக்கம் தர முடியும்?

கேள்வி: தேசிய நிலையில் வட இந்திய , தென்னிந்தியா பற்றி உங்கள் கருத்துகளையும் மாநில அளவில் சென்னையில் பிரமண அல்லாதோர் பற்றி உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன் அய்யா?

அண்ணா: சென்னையை பொறுத்த வரை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனை இறந்தொழிந்து விட்டது. நீங்கள் இங்கே எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றீர்?

கேள்வி: திமுக தேசிய பிரபல்யம் அடைந்து நீங்கள் பிரதம மந்திரி ஆனால் நீங்கள் என்னன்ன முயற்சிகள் எடுத்து கொல்வீர்கள்?

அண்ணா: உங்கள் கேள்வி எனக்கு ஒரு மயக்குறு கேள்வியாக உள்ளது. இப்படி மனதை மயக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட அவற்றை பற்றி சிந்திப்பதில் நேரம் செல்விடுவது நேர விரயத்தை தடுக்கும் செயலாகும்.

கேள்வி: மொழிப்பிரச்சனை  பற்றி இன்னும் ஒரு கேள்வி, போன வருடம் எழுந்த மொழிக்கலவரங்கள் மக்களிம் மொழி பற்றிய உள்ளார்ந்த உணர்வால் எழுந்ததா? அல்லது வெறும் சாக்கா? அவர்கள் பட்டினியின் கோவத்தை வெளிப்படுத்த எழுந்ததா?

அண்ணா: 1965 ல் உண்டான மொழிக்கலவரம் பற்றிய கேள்வியாகும் இது என நினைக்கிறேன்.

கேள்வி: ஆமாம்!

அண்ணா: அது நிச்சயமாக மொழி தீர்மானத்தை எதிர்த்து மாணவர்களால் தொடங்கப்பட்டதாகும். பிறகு அந்த கிளர்சியில் மற்ற வெளியாட்கள் சேர்ந்து பழைய கோவங்களுக்கு பழி தீர்த்து கொண்டனர். ஆனால் அதை ஆரம்பித்த மாணவர்கள் உண்மையாகவே நாடாளுமன்றத்து மொழி தீர்மானம் தம்முடைய எதிர்காலத்தை கெடுக்க கூடியதாக இருப்பதை உணர்ந்து கிளர்ந்து எழுத்தனர். எந்த கட்சியும் அவர்களை தூண்டி விடவில்லை. ஆனால் அதில் பெரும்பான்மையான மாணவர்கள் "மாணவர் திமுக" அணியினர் "என்பதால் இப்படி ஒரு பெயராகி போனது.

கேள்வி: சிறிது நேரத்துக்கு முன் கருத்துகளை கூறுவதை விட செயல்முறையில் காட்டுவது அதிக நம்பிக்கை என கூறினீர்கள். ஆட்சிக்கு வரும் முன் கொண்டிருந்த கருத்துகளில் மறைவாக கொண்டிருந்த கொள்கைகளில் எவற்றை எல்லாம் செய்து காட்டினீர்கள்?

அண்ணா: முதலிலே கருத்துகளை கூறுவதாக இல்லை என்று நான் சொன்னால் "மறைவு" என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிக்க அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.

கேள்வி: மன்னிக்கவும், திருத்தத்தை ஒப்புக்கொள்கிறேன்!

அண்ணா:நான் உங்களை ஒன்று கேட்கிறேன். என் கருத்துகளை எல்லாம் செயல் படுத்த ஓர் ஆண்டு போதுமா?

கேள்வி: போதாது. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் சிறிதளவவது செயல்பட்டுள்ளீர்களா?

அண்ணா: உங்களுக்கும் அது பற்றி தெரிவிக்க வேண்டுமே! விளைச்சலை அதிகம் ஆக்கியுள்ளோம், காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி கைவிடப்பட்ட ரேசன் முறையை மீண்டும் ஆரம்பித்து உள்ளோம், விலவாசியை குறைத்து இருக்கின்றோம். ஒரே ஆண்டில் இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்க இயலும்?

கேள்வி: நான் கேட்பது அமேரிக்க நண்பர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்கு தான். இங்கு வரும் செய்திகள் அதிகள் இல்லை.

அண்ணா: கேள்வியாக நான் கேட்பது உங்களுக்கு சவால் விட அல்ல. ஆங்கில மொழி வாங்கியங்கள் கேள்வியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது அல்லவா..

கேள்வி: நீங்கள் இங்கே வந்திருப்பது அரசியல்  காரணம் மட்டும் அல்லாது சென்னையில் ஏதோ தொழிற்சாலை தொடங்க பேச்சுகள் நடத்த வந்திருப்பதாக இங்கே பத்திரிக்கையில் பார்த்தோம்.

அண்ணா: ஆமாம் , ஜெனரல் மோட்டார் கம்பெனியுடன் இந்திய கம்பெனி ஒன்று கூட்டு சேர்ந்து சென்னையில் விவசாய கருவிகள் செய்யும் தொழிற்சாலை உணடாக்க எண்ணி இருந்தனர். இங்கே வரும் போது ஜெனரல் மோட்டார் கம்பனியின் நிர்வாகிகளை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கூட்டு சேர இருந்த இந்திய கம்பனி மோசடி முத்திரையை வாங்கி விட்டதால் வேறு ஒரு கம்பனி முன்வரும் வரை இங்குள்ள கம்பனியாரை சந்திப்பதில் பொருத்தம் இல்லை. அதனால் நான் அவர்களை சந்திக்கவில்லை.

*******************

அண்ணா! எம் தீர்க்கதரிசி அண்ணா! உனக்கு இன்று வயது 104! உன் புகழ் இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்தும் நிற்கும் அண்ணா! எம் அண்ணா!


குறிப்பு: "அறிஞர் அண்ணாவும் அமேரிக்க பேட்டியும்" என தலைப்பு வச்சா எவன் வருவான் கட்சிகாரனை  தவிர! ஒரு பேமஸ் கூட நொட்டோரியசை சேர்த்து கொண்டால் ஆஹ்ஃகா... கூட்டு பிரமாதமா இருக்கும் என்பதால் மட்டுமே இந்த தலைப்பு!


September 14, 2012

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களே! கொஞ்சம் இதை படித்து பாருங்கள்!



கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே என நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு என்னை வசை பாடி மகிழ்ந்தீர்களே, இதோ 19.9.2012 தேதியிட்டு இன்று வந்த "சோ" வை ஆசிரியராக கொண்ட "துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகளை பாருங்கள்.  "சோ" அவர்கள் "ஜெ" அவர்களின் ஆஸ்தான குருநாதர் ஆவார் என்பதும் உங்களுக்கு தெரியும்.

ஆனாலும் உங்களுக்கு வசைபாட வசதியாக "கலைஞர்"தான் கிடைப்பார். இதற்கு மேலும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடினால் இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் தான் உண்மை என்ற நிலைக்கு தமிழக "பொதுமக்கள்"  வர வேண்டி இருக்கும் என்பதை உணருங்கள். இதற்கு மேல் உங்கள் விருப்பம்.


இதோ அந்த "துக்ளக்" கட்டுரையின் சில ... மிகச்சில குறிப்புகள்.



**************************


1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.

6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.

7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.

8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும். அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!

9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???

10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.


****************

இதன் பின்னரும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடுவேன், திமுகவினரை தான் குறி வைத்து தாக்குவேன் என்று கூறினால்... உங்கள் தலையெழுத்து யாராலும் மாற்ற இயலாத நிலை தான் என்பதை உணருங்கள்!



September 7, 2012

அய்யா ஒரு பீஃப் பிரியாணி ப்ளீஸ்....

"அய்யா ஒரு முரசொலி கொடுங்க" என ஆரம்பித்தது என் இன்றைய பொழுது!
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் வரை வாக்கிங் போய் திரும்பி
வந்தால் அந்த கடை திறந்து இருக்கும். ஒரு கிழவன் , கிழவி... கடையின் மீது
"எம் ஜி ஆர் அவர்கள் கொடுத்த நன்கொடை இந்த கடை" என போட்டிருக்கும்.
முரசொலியை வாங்கி முதுகில் பனியனுக்குள் வைத்து கொண்டேன். (கிட்ட தட்ட
எங்க ஊர்ல அரிவாள் ஸ்டாண்ட் போல)

என்னவோ நியாபகம் வர "அய்யா ஒரு 'அவள் விகடன்' கொடுங்க என கேட்க அதே
நேரத்தில் ஒருவர் அதே போல கேட்க ... கடைக்கார அய்யா குழம்பி விட்டார்.
"இங்க ஒரு அவள் விகடன் ஒன்னு தான் சார் இருக்கு" என சொல்ல நான் "அவர்
கிட்டயே கொடுங்க" என விலகினேன்.

"மருந்தீஸ்வரர் கோவில் கிட்டே கூப்பிடு தூரம் சார், அருமையான பிளாட்
சார்.. பக்கத்தில் டி பி ஆஸ்பத்திரி இருக்கு சார் ( அட பாவமே என்னய
பார்த்து ஏண்டா இது போல சொல்ற) வெயில்னா அங்க இருப்பவங்க "இன்னா"ன்னு
கேட்பாங்க சார், சும்மா பதினேழு லட்சம் தான்  சார்) . அந்த மருந்தீஸ்வரரை
பார்த்திடலாம் இன்னிக்கு என நினைத்துக்கொண்டேன்.

எல்லா நியாபகங்களும் வர நடந்தேன். சரி இரண்டு நாளா இருமல் அதிகமா இருக்கே
என கோவில் பக்கம் போக நினைத்த போது அந்த "அவள் விகடன்" தோளை தொட்டார்.

"சார் ரொம்ப தேங்ஸ். என் ஆத்துக்காரி அவள் விகடன் இல்லைன்னா செத்துடுவா.
காப்பாத்திட்டிங்க"

"எங்க சார், கோவிலுக்கா? நானும் அங்க தான் இருங்க செருப்பு போட்டுட்டு வர்ரேன்"

"சார் இதான் வன்னி மரம். என் பொண்ணுக்கு கடி ஜோக் போட்டி வச்சா சங்கரா
ஸ்கூல்ல . அவ தான் பஷ்ட். என்னா கடின்னா "ராமதாஸ்க்கு பிடிச்ச மரம் எது?
ஹி ஹி ஹி அதான் வன்னி மரம்"ன்னு சொன்னேன். அவ தான் சார் பஷ்ட் வந்தா கடி
ஜோக்ல. அப்படின்னா இந்த கோவில் என்ன ஒரு கிரியேட்டிவிட்டி கொடுக்கும்
கோவில்னு பார்த்துகுங்க"

"சார் , இங்க கோவில்ல ரொம்ப அநியாயம் சார். தக்கினூண்டு புளியோதரை 5
ரூவா. கொஞ்சம் வெயிட் பண்ணினா அவாளே கோவில்ல கொடுப்பா. ரொம்ப பிராமாதமா
இருக்கும்"

"சார், முதல்ல கணபதி கிட்டே வேண்டிகுங்க. இந்த கணபதி கடன் தீர்க்கும்
கணபதி. நான் பிளாட் வாங்கின போது லோன் கிடைக்கனும்னு இந்த கணபதிட்ட
வேண்டிகிட்டே இருந்தப்ப எல் ஐ சில இருந்து போன். லோன் சாங்கஷன்"

"சார் இந்த திரிபுரசுந்தரி இருக்காளே, பவர் புல்... இவ கிட்ட
வேண்டிகிட்டா நடக்காததும் நடக்கும்" அப்போது ஒரு மாற்று திறனாளி தவழ்ந்து
வந்து வேண்டிகிட்டாரு. அவருக்கு வழி விட்டோம்.

பின்ன மருந்தீஸ்வரர் சன்னதிக்கு வந்த போது அவர் 'சார் இவர் சுயம்பு. இவர்
கிட்டே வேண்டிகிட்டவன் எவனும் கெட்டு போனதா சரித்திரம் இல்லை.." என
சொல்லி கிட்டே அய்யருக்கு ஒரு இருபது ரூபாய் போட்டார். அவரும் இவருக்கு
சின்ன பூ மாலை போட்டு பதில் மரியாதை செய்தார். என் கிட்டே சில்லரை இல்லை
இரு 100 ரூபாய் நோட்டும் இரண்டு ரூபாய் காசும், ஒரு ரூபாய் காசும்
இருந்துச்சு. அனேகமாக செருப்பு கடைக்கு சில்லரை காசு தேவைப்படும். பாவம்
அவங்க கிட்டே 100 ரூபாய் நோட்டுக்கு மீதி இருக்காது என நினைத்தேன்.
ஆனாலும் சில்லரை காசு எடுத்து போடும் போது அவர் தடுத்தார். "சார் மானம்
போகுது. நோட்டா இருந்தா  தட்சனை கொடுக்கலாம். சில்லரை எல்லாம் தப்பு
சார். அவர் என்னமா மந்தரம் சொல்றார். அவருக்கு தட்சனை கொடுக்காட்டி கூட
பரவாயில்லை. ஆனா அவமானப்படுத்தக்கூடாது சார்.இவருக்கு கொடுத்தா டைரக்டா
ஈஸ்வரனுக்கு கொடுத்தது போல. ஈஸ்வரனுக்கு கொடுத்தா அவர் மக்களுக்கு
திருப்பி கொடுப்பார்" என்றார். எனக்கு மனதில் வேற கணக்கு ஓடியது. அவர்
சொல்வது சரிதான். இருக்கும் 100 ரூபாயை டாஸ்மாக் என்னும் குருக்கள்
கிட்டே கொடுத்தா அது அரசாங்கம் என்னும் ஈஸ்வரன் கிட்டே போகும். அதை வச்சு
அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்யும். அடடே... ஆரம்ப காலம் முதலே
இருக்கும் கணக்கு தானா இது நினைத்து டாஸ்மாக் குருக்கள் கிட்டே சாயரட்சை
பூசைல கொடுக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

பின்னர் அப்படியே வெளியே வரும் போது பசு மாட்டு தொழுவம் இருந்தது. இவர்
போய் கும்பிட்டார். கும்பிட்டார். கும்பிட்டு கிட்டே இருந்தார். ஓடி
என்னிடம் வந்து "சார் பசுவுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தா நாம இது வரை
செஞ்ச பாவம் எல்லாம் போய்டும் சார். கொஞ்சம் இருங்க, நான் போய்  வெளியே
புல் விற்கும், வாங்கிட்டு வர்ரேன், உங்களுக்காகவும் ஒரு கட்டு வாங்கி
வர்றேன். காசெல்லாம் கொடுக்க வேண்டாம்" என சொன்ன போது நான் "இல்லீங்க..
எனக்கு வேண்டாம். நான் இதுவரை பாவம் எதும் செய்யலிங்க" என சொன்ன போது...
"சார் செம காமடியா பேசுறீங்க கொஞ்சம் இருங்க" என சொல்லி விட்டு வெளியே
போய் பின்னர் வந்தார்.

ஜெயிலில் இருந்த பசுக்களுக்கு புல் கொடுத்தார். வெளியே வந்தோம். நான்
போய் செருப்பு கடை காண்டிராக்ட் எடுத்த கடையில் மூச்சு வாங்கி
கொண்டிருந்த ஒரு பெண் கிட்டே மூன்று ரூபாய் கொடுத்தேன். "அண்ணே, ரெண்டு
ரூவா தான் அண்ணே" என சொன்னது. அது கர்பஸ்த்ரீ. "என்னிக்கும்மா டெலிவரி
டேட் சொல்லியிருக்காங்க"ன்னு கேட்டேன். "இன்னும் ரெண்டு நாள்
இருக்குண்ணே" என சொன்னது.

அதற்குள் என் நண்பர் கோபுரத்தின் இரண்டு பக்கமும் ஓடி ஓடி ரன் எடுப்பது
போல தன் செருப்புகளை "கலெக்ட்" செஞ்சுட்டு வந்தார். என்னிடம் சொன்னார் "
சார்... ஊதாரித்தனமா செலவு செஞ்சா எனக்கு பிடிக்காது சார். ஜோடியா போட்டா
தான செருப்பை திருடுவானுங்க. ஜோடிய பிரிச்சு போட்டு ஏமாத்தனும் சார்.
இந்த செருப்பு திருட்டு எப்ப தான் ஒழியுமோ இந்த நாட்டுல அப்ப தான் சார்
நம்ம நாட்டிலே ஒரிஜினலா சுதந்திரம் கிடைச்ச மாதிரி. சரி சார் அப்ப நான்
விடை பெறுகிறேன் நமஸ்காரம்"

எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. பக்கத்தில் தான் வீடு. ஆனாலும் ஹோட்டல்
பிரியாணி மீது ஒரு ஆவல் வந்தது. ஒரு 15 நாட்கள் முன்னதாக சென்னை சி ஐ டி
நகரில் ஒரு ஹோட்டலில் என் நண்பர்களுடன் சாப்பிட போன போது "தோழர் பீஃப்
சாப்பிடுங்க, என சொன்னார் ஒரு தோழர். எனக்கு  பீஃப் சாப்பிட்டு பழக்கம்
இல்லை. இருந்தாலும் அவர் மனம் கோணக்கூடாதே என சகித்து கொண்டு
சாப்பிட்டேன்.அதை நோக்கி என் மனம் சென்றது. ஹோட்டலில் அமர்ந்த பின்
சர்வரிடம் "ஒரு பிரியாணி கொடுப்பா. பீஃப் பிரியானியா இருந்தா உத்தமம்" என
சொன்னேன்!

September 4, 2012

பேராசிரியர் க. அன்பழகனார் - ஒரு வியத்தகு அரசியல் பழம்!


அது 1957, நம் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்து 8 ஆண்டுகள் ஆன நிலை. தேர்தலில் நாம் முதன் முதலாக போட்டியிடுகின்றோம். மொத்தம் உள்ள சட்ட மன்ற இடங்களில் நம் கட்சி போட்டியிட்டது 124, அது போல பாராளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்ட இடங்கள் 11. நமக்கு முதன் முதலாக கிடைத்த வெற்றிகள் என்பது சட்டமன்றத்தில் 15 இடங்கள். பாராளுமன்றத்தில் இரண்டு இடங்கள். சட்ட மன்றத்தில் வெற்றி வாகை சூடியவர்கள் அண்ணா, கலைஞர், பேராசிரியர், ப.உ  ச, ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, களம்பூரார்(அண்ணாமலை), சந்தானம், நடராசன், இருசப்பன், ஆனந்தன், கோவிந்தசாமி, சாரதி, சுப்ரமணியம், செல்வராஜ் ஆகியோர். அது போல பாராளுமன்றத்துக்கு ஈ வி கே சம்பத், தருமலிங்கம் ஆகிய இருவர். செமத்தையான வெற்றி தான்! ஏனனில் அப்போது மக்கள் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே கட்சியாக இருந்து தொலைத்தது. ஆக நாம் காங்கிரஸ் என்னும் மரத்தின் வேருக்கு ஊற்றிய முதல் ஆசிட் பாட்டிள்கள் அந்த 15 சட்டமன்ற உறுப்பினர்களும். போகட்டும்..... இதல்லாம் எனக்கு இப்போ தேவை இல்லை. நேற்று என் வாழ்நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடந்தது.

நான் நேற்று ( 03.09.2012) இரவு சென்னை வர வேண்டி இரவு 11.30க்கு மயிலாடுதுறை வரும் கம்பன் விரைவு ரயில் வண்டிக்காக கொஞ்சம் மு கூட்டியே இரவு பத்து மணிக்கு இரயில்வே நிலையம் போனேன். போகும் போது வழக்கம் போல நக்கீரன், ஜூவி, (ரிப்போர்டர் வாங்குவதில்லை) ஆகியன வாங்கி போனேன். முதல் பிளாட்பாரம்ல  புகைவண்டி வரும் என்பதால் அமைதியாக அமர்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் போது என் முதுகின் பின்னால் யாரோ "டொக். டொக்" என நடந்து போவது உணந்தேன். யாராக இருக்கும் என திரும்பி பார்க்கும் போது தான் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் செயலற்றவனாக ஆகிப்போனேன்.

ஆமாம்! வந்தது அந்த தள்ளாத வயதில் "ஓய்வறை" நோக்கி செல்லும் அந்த மா மனிதன் நம் கழக பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் தான். எனக்கு முதலில் என்ன செய்வது என தெரியவில்லை. இந்த விஷயம் கலைஞர் காதுக்கு போனால் தளபதி கதி என்ன? தளபதி காதுக்கு போனால் மயிலாடுதுறை திமுக நிர்வாகிகள் அதாவது நகரம், ஒன்றியம், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி என எல்லார் நிலையும் என்ன? சும்மா விடுவாரா தளபதி? ஒரு பழுத்த திராவிட கிழவன் தடியூன்றி தானாக நடந்து வருவதை பார்த்தால் மயிலாடுதுறை திமுகவினர் கண்ணீர் விட்டே செத்துப்போவர்:-(

நான் ஓடிப்போய் அதை ஒரு புகைப்படமாக எடுப்போம் என நினைத்தது என் மகா முட்டாள் தனம். கற்பழிக்கப்படும் பெண்ணை  காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த கயவர்கள் போல் ஆவேன் நான். எனினும் அதை செய்தேன். பின் பக்கம் பார்த்தேன். அண்ணன் குத்தாலம் கல்யாணம் அண்ணன் ஓடி வந்து கொண்டு இருந்தார். நான் போய் பேராசிரியரிடம் "அய்யா... கட்சியின் ப்ரோட்டோகால் சொல்லி கொடுக்கும் நீங்களே இப்படி எங்க மாவட்டம் ஏ  கே எஸ் அண்ணன் அனுமதி இல்லாமலோ அல்லது எங்கள் நகரம் குண்டாமணி அண்ணன் இல்லாமலோ தனியாக வரலாமா?" என நேரிடையாக கேட்டேன்.

அதற்கு அவர் "இல்லையப்பா, நான் சொந்த காரணமாக வந்தேன். இது கட்சி விசயம் இல்லை. ஆனா கோவக்கார தம்பி குத்தாலம் கல்யாணத்துக்கு நாளை பின்ன அவருக்கு சேதி தெரிஞ்சா கோவிப்பாரேன்னு அவரு கிட்ட மட்டும் சொன்னேன். தப்பா நினைக்காதீங்க" என சொன்ன போது எனக்கு  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அய்யாவை  முதல் வகுப்பு இடத்தில் அமர வைத்து விட்ட நேரத்தில் குத்தாலம் அண்ணன் மனைவியார் அவர்கள் அய்யாவுக்கு இரவு சப்பாடை கொண்டு வர நான் அதற்குள் "அய்யா, வீட்டு இட்லியும் பூண்டு மிளகாய் பொடியும், வத்த குழம்பும் இருக்கு" என சொல்ல குத்தாலம் அண்ணன் "இல்லடா தம்பி இதை எல்லாம் அய்யா நல்லா சாப்பிட்டாலே போதும்" என சொல்லி தடுத்தார். பின்னர் அய்யா பேராசிரியரும், குத்தாலம் அன்பழகன் அண்ணனும் சாப்பிட அந்த சோபாவில் அமர, நானும் அண்ணியாரும் வைக்க அய்யா சாப்பிட ஆரம்பித்தார். நான் பின்னர் வெளியே வந்து எங்கள் நகரம் குண்டாமணி அண்ணனுக்கு போன் செய்தேன். கவனிக்க.. அப்போது மணி 10.50.

அதற்குள் அய்யா மூத்த வக்கீல் முருகு. மாணிக்கம் அவர்களும், பின்னர் எங்கள் மயிலாடுதுறை ஒன்றிய செயலர் அண்ணன் மூவலூர் மூர்த்தி அண்ணனும் வந்தனர். நான் மூர்த்தி அண்ணன் கிட்டே "சீக்கிரம் உள்ள போங்க அண்ணே, பேராசிரியர் தனியா உட்காந்து இருக்கார்" என சொன்னேன். அவர் அரக்க பரக்க ஓட அடுத்த நிமிடம் எங்கள் நகரம் குண்டாமணி அவர்கள் ஒரு சுமாராக 50 நகர பொறுப்பில் இருப்பவர்கள் புடை சூழ ஓடி வர எங்கிருந்தோ தொண்டர்கள் ஓடி வந்து "தலைவர் கலைஞர் வாழ்க! அய்யா பேராசிரியர் வாழ்க! அண்ணன் தளபதி வாழ்க! " என வாழ்த்து முழக்கமிட நாங்கள் அய்யாவின் ஓய்வறைக்கு போன போது அய்யா பேராசிரியர் "இல்லைப்பா, இது என் அஃபீசியல் விசிட் அல்ல. நான் திருவாரூர் வந்த வரை மட்டுமே அஃபீசியல். இது என் சொந்த விஷயமாக நான் படித்த பள்ளி, நான் பிறந்த இடம் பார்க்க வந்த சொந்த விஷயமப்பா, இதை பெரிசு பண்ணாதீங்க, எல்லாரும் எங்க பிள்ளைங்க தானே, நான் சொன்னா கேட்பீங்க தானே, அமைதியா இருங்க. இப்போ மணி இரவு 11 ஆச்சுது. நாம மத்த பயணிகளுக்கு தொல்லை கொடுக்கலாமா?"ன்னு கேட்க எங்கள் நகர செயலர், ஒன்றிய செயலர் எல்லாம் அழுதே விட்டனர்.

இவர்கள் எல்லாம் வரும் முன்னர் "தம்பி எனக்கு கால் மரத்து போகுது, நான் கொஞ்சம் இந்த டீப்பாயில் காலை எடுத்து வச்சுக்கவா" என நான் மட்டுமே இருக்கும் போது எனக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலை. " அய்யா, நானே எடுத்து காலை வச்சிவிடும் பாக்கியம் எனக்கு கிடைக்கட்டுமே" என்றேன்.

ஆனால் எல்லா கட்சி நிர்வாகிகளும் வந்து விட்ட நிலையில் அய்யா அவர்கள் தன் காலை இறக்கி கீழே வைக்க எங்கள் நகர செயலர் குண்டாமணி அவர்கள் "அய்யா மன்னிக்கனும்" என சொல்லி விட்டு மீண்டும் காலை எடுத்து டீப்பாயில் வைத்தார். ஒரே அமைதி அந்த இடத்தில். பேராசிரியரின் பக்கத்தில் எங்க எம் எல் சி  சோழமண்டல தளபதி கோ சி மணி அய்யாவின் பால்ய நண்பர் கட்சியின் மூத்த வழக்கறிஞர் திரு முருகு. மாணிக்கம் அவர்கள் அமர்ந்திருக்க அந்த இடம் ஒரு திராவிட மூத்த பழுத்த கிழ சிங்கம் முன்னாள் நிற்கும் சிங்க குட்டிகளாய் அமைதி காத்தது.

அய்யாவே அமைதி கலைத்தார். " ம் ... சொல்லுங்க யார் யார் என்ன பண்றீங்க? உங்க கூட நன் புகைப்படம் எடுத்துப்பேன். (வார்த்தையை கவனிக்கவும்... என் கூட நீங்க புகைப்படம் எடுத்துக்கலாம் என சொல்லாமல்... வந்திருக்கும் எல்லார் செல் போனிலும் தயாராக இருக்கும் கேமிராவை பார்த்து எப்படி சொல்கிறார் பாருங்கள்) வாங்க எல்லாரும் வாங்க"

"அய்யா நான் சீர்காழி, தென்பாதி முத்துராக்க மாரப்பன் பேரன் அய்யா"

"ஒ அப்படியா, அவரு இருக்காரா" என கேட்டுவிட்டு டக் என சுதாரித்து கொண்டு "நல்லா இருக்காரான்னு கேட்டேன்ப்பா" என சொன்னார். இதில் விஷயம் என்னவெனில் அந்த மேற்படி முத்துராக்க மாரப்பன் அவர்கள் இன்று உயிரோடு இருந்தா கிட்ட தட்ட 112 வயது ஆகியிருக்குமாம். அதை "கணக்கு" செய்து தான் பேராசிரியர் அப்படி கேட்டார் போல முதலில். ஆனாலும் ஒரு கண்ணியம் குறைவான வார்த்தை தன் வாயில் இருந்து வெளிப்பட்டு விட்டதோ என அஞ்சியே அதாவது தன் மனதுக்கு அஞ்சியே அவர் தன்னை திருத்திக்கொண்டார். பின்னர் அந்த நபர் "இல்லீங்கய்யா அவர் இறந்து ரொம்ப வருஷம் ஆச்சுய்யா" என சொல்ல பேராசிரியர் அவரை பற்றி சில வார்த்தைகள் பெருமையாக அவாரின் வாரிசுகிட்டே சொல்லிட்டு "ஒரு தபா தன் பேரனுக்கு ஒரு ஸ்டுடியோ வச்சு தரனும்"ன்னு சொன்னாருப்பா அவரு"ன்னு சொல்ல வந்தவர் அழுதே விட்டார். ஏனனில் அந்த ஸ்டுடியோ பேரன் அவர் தான் போல.

அடுத்து ஒருவரிடம் "தம்பி நீங்க என்ன தொழில் பண்றீங்க?"ன்னு கேட்க அதற்கு அவர் "அய்யா எனக்கு முழு நேர தொழில் அரசியல் தான் அய்யா"ன்னு சொல்ல அதற்கு பேராசிரியர் " நோ நோ தி எக்ஸ்ட்ரா டெசிமல் ஆக்டிவிட்டீஸ் ஷுட் பீ எக்ஸ்ட்ரா டெசிமல். பட் தெ ப்ரொப்பஷனல் ஷுட் பீ அனதர்" என சொல்ல நாங்க எல்லாரும் கை தட்டினோம். "மன்னன்" படத்தில் ரஜினி ஆங்கிலம் பேசிய அந்த இரண்டு நிமிடத்துக்காக இரு நூறு தடவை படம் பார்த்தவங்களாசே நாங்க:-))

மீண்டும் பேரசிரியர் "இல்லைப்பா தொழில்னா நீயும் உன் மனைவி மற்றும் குழந்தைகள் உன்னுடைய எந்த வருமானத்தில் சாப்பிடுறாங்க"ன்னு அர்த்தம். அரசியல் என்பது நம் ஆர்வம். சமூக ஆர்வம். சமூக ஆர்வம் மட்டும் இருக்கு எனக்கு. ஆனா பொண்டாட்டி பிள்ளையை சாப்பாடுக்கு கஷ்டப்படுத்துவேன் என்றோ அல்லது சமூக ஆர்வத்தினால் "கிடைக்கும்" வருவாய் கொண்டு பொண்டாட்டி பிள்ளையை சாப்பாடு கொடுப்பதோ தப்பு.இன்னும் புரியும் படி சொல்லவா? எனக்கு ஒரு திராட்சை தோட்டம் இருக்கு. நான் ஒரு விவசாயி'ன்னு சொல்லும் இந்த உலகில் நான் சைக்கிள் பஞ்சர் ஒட்டி தொழில் நடத்துறேன்"ன்னு சொல்லு. அது தான் திமிர். அந்த திமிர் தான் வேணும். எனக்கு எம் எல் ஏ பென்ஷன் வருதுப்பா... ஹா ஹா ஹா" என சிரிக்க அங்க இருந்த எல்லாரும் அமைதியை கிழித்து விட்டு சிரித்தோம்.

உடனே ஒருவர் "அய்யா நீங்க எங்க தெய்வம் அய்யா"ன்னு உணர்சி மேலிட கூட அவரை கிட்டே அழைத்து " ஊகூம்... எனக்கு மனிதனாக இருக்கவே ஆசை. சரி உனக்கு நான் தெய்வமாகவே இருந்தா கூட உன் மணிகட்டில் இத்தனை கயிறு கட்டிக்க சொல்ல மாட்டேன். உன்னையே நம்பு. உன் மூளையை நம்புன்னு தான் சொல்லியிருப்பேன். அது என்ன கயிறு? ஆங் "முடி கயிறு" தானே. ஆத்திகன் அதை முடி கயிறுன்னு சொல்றான். அதையே தான் பகுத்தறிவாளனும் சொல்றான்.. பாமரனுக்கும் புரியும் மொழியில் சொல்றான், ஆனா பகுத்தறிவாளன் சொல்லும் போது கோவம் வருது எல்லாருக்கும்"( may be மயிறு கயிறு???? :-)) ) என சொன்ன போது  பத்து வருடம் முன்னமேயே ஆயிரம் பிறை கண்டு முடித்த இவர்,  இன்றும் பெரியார் கருத்துகளை போதிக்கும் ஒரு பெரியார் சீடனாக அய்யா பேராசிரியரை கண்ட போது உடம்பு சிலிர்த்து அடங்கியது!

எங்கள் ஒன்றியம் மூவலூர் மூர்த்தி அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போது அவரின் தந்தையார் பற்றி சிலாகித்து பேசினார். எங்கள் நகரம்  திரு. குண்டாமணி அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போதும், எங்கள் நகராட்சி தலைவர் அவர்களின் கணவர் வக்கீல் சீனிவாசன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போதும் "இது நம்ம ஊர் கோட்டைப்பா. தக்க வச்சுகுங்க" என சொன்னார்.

என்னை "கிட்ட வாங்க அபிஅப்பா, நீங்க மட்டும் ஏன் போட்டோவுக்கு வரலை" என சொன்ன போது... "இல்லீங்க அய்யா... எங்க நகரம், ஒன்றியம் போட்டோ எடுத்து காலைல நெட்ல போடனும் என்பதை தவிர எனக்குன்னு தனிப்பட்ட ஆர்வம் எதும் இல்லீங்கய்யா" என சொன்னேன். "பரவாயில்லை வாங்க தோழரே" என சொன்ன போது அந்த மனிதன் கிட்டே இருக்கும் கம்யூனிச பாசம் (அடிக்கடி கலைஞர் சொல்லுவாரே தான் ஒரு கன்யூனிஸ்ட் என்று அது போல) தெரிந்தது. ஓடிப்போய் அவர் சோபாவின் பக்கத்தில் ஒரு குழந்தையாய் அமர்ந்து கொண்டேன்.

புகைவண்டி வந்தது. எல்லோரும் நடந்து போனோம் பேராசிரியரை பின் பற்றி. அவரின் உதவியாளர்கள் இருவர் அவரின் படுக்கை, மற்றும் ஒரு பெட்டி எடுத்து வந்தனர். குத்தாலம் கல்யாணம் அண்ணன் "அண்ணே உங்களை தனியா அனுப்ப மனசு இல்லை அண்ணே" என கண் கலங்கினார். திடீரென ஒரு மாற்றுக்கட்சி முக்கிய புள்ளி ஒருவர் அந்த கூப்பேயில் இருந்து வெளிப்பட்டு பேராசிரியரை பார்த்து திடுக்கிட்டு அவர் பாதம் தொட்டு வணங்கி "அய்யா நான் இருக்கேன் இந்த பெட்டியில். நான் உங்களை சென்னையில் இறக்கி விடும் வரை தூங்க மாட்டேன் அய்யா" என சொல்லி விட்டு  பிளாட்பாரத்தில் நின்ற எங்களை பார்த்து "கவலை வேண்டாம். அவர் எல்லாருக்கும் பேராசிரியர் தான். நான் பார்த்துக்குறேன். காலை அவரை அழைக்க வருபவர்கள் கிட்டே ஒப்படைச்சுட்டு உங்களுக்கு போன் செய்கிறேன்" என குத்தாலம் அண்ணனிடம் சொன்னார்.

நான் பேராசிரியரிடம் சொன்னேன். "அய்யா நான் நான்கு பெட்டி தள்ளி தான் இருக்கேன். நான் வேண்டுமானா எல்லா ஸ்டேஷனிலும் வந்து பார்த்துக்குறேன்" அதற்கு அவர் " நான் என்ன பெரியாரா? இங்க படுத்தா சென்னைல தான் எழுந்திருப்பேன்" என சொல்ல அங்கே வந்திருந்த பெரியாரிஸ்ட் தோழர்கள் வாய் விட்டு சிரித்தனர். அதே நேரம் மனம் குளிர அழுதனர். "இவர் ஒரு வாழும் பெரியார்" என சொல்லி!!!!


குறிப்பு: நான் பார்த்ததை கேட்டதை எப்போதும் போல எழுதிய பின்னர் தோழர் திராவிடப்புரட்சி அவர்களுக்கு அனுப்பி அவர் சில விஷயங்கள் "எடிட்" செய்து அனுப்பிய பின் இட்ட பதிவு இது! நன்றி தோழர் திராவிடப்புரட்சி அவர்களுக்கு!

திராவிட சிங்கத்தின் பக்கத்தில் நான் - மிக பெருமையாக!
அண்ணன் மூவலூர் மூர்த்தி அவர்கள் பேராசிரியருடன்...
தனியே நடந்து வரும் திராவிட சிங்கம் பேராசிரியர் அவர்கள்



என் கேமிரா வழி எடுத்த சில புகைப்படங்கள் மட்டுமே இவைகள். இன்னும் எங்கள் நகரம் திரு.குண்டாமணி அண்ணன் எல்லாம் இருக்கும் புகைப்படங்கள் பின்னர் அப்டேட் செய்யப்படும்!

August 21, 2012

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என் மூஞ்சி அத்தனை பிஞ்சாவா இருக்கு????


எனக்கும்  சமீபகாலமாக (?) வயசாகி கொண்டு இருப்பதாக உணர்கிறேன். காலை எட்டு மணிக்கு எல்லாம் "என்னாச்சு இட்லி" எனவும் மதியம் 1 மணிக்கு "இன்னிக்கு கறி சோறு இல்லியா?" எனவும் அது போல டான்னு இரவு எட்டு மணிக்கு  "அய்யோ பசிக்குதே" என அலறும் போது தான் எனக்கும் வயசு ஆகிகிட்டே இருப்பதை உணர்ந்தேன்.

என் வயசில் இருப்பவன் எல்லாம் எங்கள் ஊரில் நாலு பஞ்சாயத்து எட்டு கோர்ட்டுன்னு போய் கொண்டு இருக்கும் போது நான் மட்டும் தேமேன்னு இருப்பதாய் உணர்ந்தேன். உடனே ஓடிப்போய்  என் வயது தாதாவாய் பில்டப்பு ஆனவனை கேட்டேன். அவனுக்கு வருவது எல்லாம் டைவர்ஸ் கேஸ் தான் என்றும்,  தான் அதில் தான் எக்ஸ்பர்ட் எனவும் சொன்னான்.

கிட்ட தட்ட எல்லா தாதாவுக்கும் பைனான்ஸ் கேஸ் தான் முதலில் வரும் என்றும் பின்னே "சீனியர்" ஆன பின்ன தான் டைவர்ஸ் கேஸ் எல்லாம் வரும் எனவும் சொன்னான். ஆனால் அவனுக்கு முதலில் வந்ததே டைவர்ஸ் கேஸ் தான் எனவும் மேலும் "டேய் முதல்ல டைவர்ஸ் கேஸ் வந்த  தாதா எல்லாம் பெரிய ஆளுங்கடா" என அவன் சொன்ன  போதே நான் முதலில் டைவர்ஸ் கேஸ் தான் என் முதல் கேஸ் என முடிவெடுத்து வந்து விட்டேன். எனக்கு எப்போதுமே டாப் கியர் தான் ஒத்து வரும்.

வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் "சரி இப்ப சொல்லு யாருக்கு டைவர்ஸ் வேணும்?" என   நாற்காலியில் அட்டானிக்கால் போட்டு முதல் கேள்வியை நான் கேட்டது என் முதல் தப்பு. "எனக்குங்க எனக்குங்க எனக்குங்க" என என் மனைவி சொன்னது எனக்கு என்னவோ அபசகுணமா பட்டுச்சு.
ஒரு வழியா சமாதானம் செய்து விட்டு என் அக்கா பையன்கள், என் மனைவியின் அக்கா பையன், பொண்ணுங்க எல்லாருக்கும் டைவர்ஸ் வாங்கி பஞ்சாயத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்து என் முயற்சியை தொடர்ந்தேன்.

அடுத்த நாளே என் மனைவியின் அக்கா பையன் போன் செய்தான்..." சித்தப்பா ஒரே பிரச்ச்னையா இருக்கு, அது மாசமா ஆகிடுச்சு" என சொல்லிகிட்டு இருக்கும் போதே நான் "டைவர்ஸ் செஞ்சுடலாம் ஒன்னியும் பிரச்சனை இல்லை"ன்னு மேல மேல பஞ்சாயத்தை தொடர அவன் போனை கட் பண்ணிட்டான். அடச்சே... சந்தோஷமா சொல்லியிருக்கான் போலிருக்கு. பொண்டாடி வாந்தி எடுப்பதுக்கு  எல்லாம் டைவர்ஸ் செய்ய மாட்டாங்க  போலிருக்கு....

ஒரு கட்டத்தில் ஒரு டைவர்ஸ் கேஸ் கூட என் கிட்டே வராத காரணத்தால் கோவத்திலே அப்டி இப்டி இருந்துட்டு  வீட்டுக்கு வந்தேன். அப்போ நிஜமாகவே டைவர்ஸ்காக வீட்டுக்கு ஒரு பிரச்சனைக்காக வந்த அக்கா பையன் மற்றும் மருமகள் கிட்டே நான் பேசிய பேச்சு என் நண்பன்  நெப்போலியனை விட அதிகமாக கொடுத்த காசுக்கு மேல கூவியதால  அவங்க போகும் போது " எங்க வாழ்கையிலே வெளக்கு ஏத்தி  வச்சுட்டீங்க மாமா"ன்னு  போக எனக்கு மனசே ஒடிஞ்சு போச்சுது.

என் மனக்கவலையில் நான் சோகமாக இருக்க வீட்டுக்கு வந்த அம்மா "என்னடா தம்பி"ன்னு கேட்க நான் விபரம் எல்லாம் சொன்னேன். அதுக்கு அவங்க "இதுக்கு தாண்டா சொல்வாங்க பெத்தவங்க ஆசீர்வாதம் வேணும்னு" சொல்லி தனக்கும் அப்பாவுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுன்னு சொல்லி அவங்க சொல்ல நானும் சந்தோஷமாக முதல் பஞ்சாயத்தை எடுத்தேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அவ்வ்வ்வ்வ்... பஞ்சாயத்து முடிவில் அம்மாவுக்கு அது வரை தம்பி வீட்டில் சவுக்கியமாக இருந்த அம்மாவுக்கு கீழ் ரூமும், "நான் இருக்கும் வீட்டில் தான் அப்பாவும் இருப்பாங்க அதனால மேல் மாடி ரூம்ல 2 டன் ஏசி போட்டு அப்பாவுக்கும்" என சொல்ல ... போச்சுடா செலவு மேல செலவு....


என் மூஞ்சி ஒரு டைவர்ஸ்க்கு கூட யோக்கிதை இல்லாம போய்டுச்சான்னு நான் அழுதுகிட்டே என் மனைவி கிட்டே கேட்டேன். அதுக்கு அவங்க "நான் தான் அப்பவே சொன்னனே, உங்களுக்கு முதல் கேஸ் நான் கொடுக்கிறேன்"ன்னு சொல்லி பீதி கிளப்ப... கும்பகோணத்தில் அக்கா வீட்டின் அடுத்த வீட்டில் ஒரு டைவர்ஸ் கேஸ் வந்திருக்கு ன்னு நல்ல சேதி வந்துச்சு.

முதன் முதலாக ஒரு நல்ல பஞ்சாயத்து வந்ததால் குடும்ப சகிதம் சென்றேன். கேஸ் என்னவோ செம கேஸ் தான். பையன் பேர் பாலமுருகன். அவன் பொண்டாட்டி பேர்.... ம்ம்ம்ம் சரி பாலமுருகின்னு வச்சுகுங்க. பையன் சின்ன வயசில் இருந்தே எனக்கு தெரிந்தவன். ஆனா அவனுக்கு படிப்பறிவு சுத்தமா இல்லை. ஆனா பகுத்தறிவு ஜாஸ்தி. கிட்ட தட்ட அவன் பத்தாவது பாஸ் செய்யவும் அதன் பின்னே பாலிடெக்னிக் பாஸ் செய்யவும் அவன் அப்பா மட்டும் அல்ல ஒட்டு மொத்த அரசாங்கமும் எல்லா பகீரதபிரயதனும் செஞ்சாங்க.

அவன் கேஸ் தான் என் கிட்டெ வந்துச்சு. ஆனா படிப்பிலே தான் அப்டி இப்டி.. ஆனா லவ்ஸ்ல கெட்டிக்காரன். அடிச்சான் பாருங்க சிக்சர்... அவன் கூட எட்டாவது படிச்ச நம்ம பாலமுருகி ஒன்பதாவது போச்சுது.  பின்ன பத்தாவது, பின்ன ... அப்படியே எம் எஸ் சி படிச்சு எம் பில் கூட படிச்ச போது நம்ம பாலமுருகன் ஒரு வழியா பத்தாம்பு வந்து அங்கயே கான்கிரீட் போட்டு உட்காந்துட்டன்.

பின்ன இவனை ஒட்டு மொத்த அரசாங்கமும் பின் பக்கம் தூக்கி தினத்தந்தி பேப்பரை கொளுத்தி காமிச்சு  பாஸ் பண்ண வச்சு பின்ன ஒரு பாலிடெக்னிக்ல ஒக்காத்தி வச்சி அவனும் "கேம்பஸ்"ல ஜெயிச்சு (ஜெயிக்க வச்சி) அட சாமிங்களா.. அவன் இன்னிக்கு நல்ல நிலையில் இருக்கான். அவன் "ஜில்லுன்னு ஒரு காதலா" நல்ல மெக்கானிக்கா .... இல்லை இல்லை இஞ்சினியரா இருந்து தொலைக்கிறான். அவன் பொண்டாட்டியாகிய பாலமுருகி கன்சால்டேட் பெசிஸ்ல அந்த ஊர்ல லெக்சரரா ஒரு காலேஜ்ல 2999 ரூபாய் வாங்கி கிட்டு இருக்கு.

போதும் இந்த முன்கதை சுருக்கம் எல்லாம். இப்ப நான் இங்க கும்பகோணம் வந்ததே இவங்க டைவர்ஸ்க்கு தான். பிரச்சனை எதும் இல்லை. தன் புருஷன் பி ஈ படிக்கனும். அதான் அதுக்கு ஆசை. இல்லாட்டி டைவர்ஸ்.

நான் போனேன். பேசினேன். பொண்ணு சொன்னுச்சு. "எனக்கு என் புருஷன் பி ஈ படிக்கனும். நான் கொஸ்டின் பேப்பர் வாங்கி தர்ரேன், நல்ல சூபர்வைசரா கொண்டு வந்து பிட் அடிக்க வைக்கிறேன், மொபைல்ல ஆன்சர் அனுப்பறேன், மொபலை அனுமதிக்க வைக்கிறேன், அதும் முடியலையா.. பேப்பர் சேஸ் பண்றேன்" இப்படியாக பேசப்பேச நான் என் மனைவியை தான் பார்த்து முறைத்தேன். இப்படில்லாம் ஒரு பொண்டாட்டி இருந்தா நானெல்லாம் ஜனாதிபதியா ஆகியிருப்பேன்:-(

முதல் சிட்டிங்ல கேஸ் முடிஞ்சிடுமா என்ன? சரி பரிட்சை எழுதட்டும். பய புள்ள எப்படியும் பாஸ் பண்ண மாட்டான். நமக்கு வெற்றி தான் என நினைத்து கொண்டேன்.

அத்தோடு அந்த கேஸ் பத்தி மறந்து விட்டேன். அதன் பிறகு அக்கா பையன்கள், மனைவியின் அக்கா பையன்கள், பொண்ணுகள் எல்லாம் என் கிட்ட பஞ்சாயத்துக்கு வரும் போது தனித்தனி ஆட்டோவிலே வந்துட்டு போகும் போது என் சுசுகில கட்டிபுடிச்சுகிட்டு டாட்டா சொல்லிட்டி " அங்கிள் பஸ்டாண்டிலே வண்டிய போட்டுட்டு போறேன், நீங்க நடந்து வந்து எடுத்துகுங்க"ன்னு சொல்லிட்டே போனாங்க.

ஒரு கட்டத்தில் நான் வெறுத்துப்போய் உட்காந்து இருக்க என் மனைவி "ஏங்க நாம வேணா டைவர்ஸ் பண்ணிக்கலாமா?" என மீண்டும் ஆசையாய் கேட்க  அப்போது தான் அந்த போன் வந்துச்சு. அந்த பாலமுருகி கிட்டே இருந்து. ஆண்டவன் என்னை கைவிடவில்லை என ஆசையாய் எடுத்தேன்.

"சார் உடனே வாங்க"ன்னு எனக்கு உடம்பெல்லாம் மின்சாரம். "போய்ட்டு வெற்றியோட  ஒரு டைவர்ஸ்ஸோட  வர்ரேன்"ன்னு சொல்லி கிளம்பினேன்.

கும்பகோணம் போகும் போன பின்னே அந்த வீட்டில் நுழையும் முன்னமே எனக்கு சகுனம் சரியில்லை. ஏன்னா புருஷன் பொண்டாட்டி இருவருமே சந்தோஷமா  "வாங்க வாங்க"ன்னு கூப்பிட்டாங்க.

நானும் அமைதியா உட்காந்து கேட்டேன். "அண்ணே உங்க ராசியே ராசி, உங்க மூஞ்சி டைவர்ஸ் செய்யல்லாம் ஒத்து வரலைண்ணே" என அந்த பாலமுருகி கிண்டல் செய்தது என் வியாபாரத்துக்கு வைக்கும் ஆப்பு  மாதிரியே இருந்துச்சு.

அந்த பெண் தான் பேசிச்சு. "அண்ணே! நான் இவரை பி ஈ படிக்க ஆசைப்பட்டது என்னவோ உண்மை தான். நானும் கொஸ்டின் பேப்பர் எல்லாம் வாங்கினேன்.  சூபர்வைசர் எல்லாம் சரி கட்டினேன். ஆனா பாருங்க அன்னிக்கி பார்த்து இங்க கரண்ட் போச்சுது. என் மொபைல்லயும் சார்ஜ் இல்லை. சரி கொஸ்டின் பேப்பர் க்கு ஆன்சர் பண்ண முடியலைன்னு அந்த முயற்சிய கைவிட்டேன். பின்ன பேப்பர் ச்சேஸ் பண்ண ஆரம்பிச்சேன். அப்ப தான் அண்ணே நான் திருந்தினேன்"னு மூச்சு விடாம சொன்ன போது எனக்கு ஒரே குழப்பம். எல்லாம் சரியா தான பேச்சுதுன்னு. பின்ன அந்த பெண் தொடர்ந்து  பேசுச்சு.

"சரின்னு நான் பேப்பர் ச்சேஸ் பண்ண போன போது தான் அந்த பேப்பர் திருத்துபவர் வந்து இவரோட பேப்பரையே காமிச்சாரு அண்ணே. காமிச்சுட்டு "இனிமே உன் புருஷன்  பி ஈ பாஸ் செய்யனுமான்னு நீயே முடிவெடும்மான்னு சொல்லிட்டாரு அண்ணே"ன்னு சொன்னுச்சு.

அப்படி அந்த பேப்பரில் என்ன எழுதி இருந்துச்சுன்னு நானும் ஆர்வமா கேட்க அந்த பாலமுருகி சொன்னுச்சு "அண்ணே அவரு பேப்பரிலே " Hurry!! Recharge with Rs.64 (All Local call mobile calls at 30p/min for 30 days)& get free RC 12 (30 lacal /std mins for 3 days ) Recharge now" அப்படின்னு அந்த பேப்பர்ல இருந்துச்சு அண்ணே! இதுக்கு பின்ன என் புருசன் பி ஈ படிச்சா என்ன படிக்காட்டி என்ன? நாங்க இனி சந்தோசமா இருப்போம். எல்லாம் உங்க ராசி தாண்ணே"

நான் தொய்ந்து போய் வீட்டுக்கு வந்தேன். என் மனைவி என் சோக முகத்தை பார்த்து என்னிடம் ஒரு டம்ளர் மோர் கொடுத்து விட்டு முதலில் கேட்ட அதே கேள்விய கேட்டாங்க "ஏங்க நாம வேணா டைவர்ஸ் செஞ்சுப்புமா?"

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என் மூஞ்சி அத்தனை பிஞ்சாவா இருக்கு????



உடன்பிறப்புகளுக்கு தலைவர் எழுதிய கடிதம் இல்லை இது, ஒரு உடன்பிறப்பு தலைவருக்கு எழுதிய கடிதம்!!!



பொதுவாக 'முரசொலி' யில் உடன்பிறப்புகளுக்கு தலைவர் எழுதும் கடிதம் வரும். பார்த்தும் இருப்பீர்கள். ஆனால் முதன் முதலாக ஒரு உடன்பிறப்பு தன் தலைவருக்கு எழுதிய கடிதம் பார்த்தது உண்டா?


என் தலைவரை பற்றி சிந்தித்தால் சந்தோஷம், என் தலைவரை பற்றி பேசினால் சந்தோஷம், என் தலைவரை பற்றி எழுதினால் மிக்க சந்தோஷம். இது ஒரு கடிதம். மிக மிக சாதாரண கடிதம்.ஆனால் இது ஒரு உணர்சிக்குவியல்.  இரண்டு நாட்கள் முன்னதாக "முரசொலி"யில் வந்த கடிதம். ஆனால் அந்த கடிதம் 'எடிட்' செய்யப்பட்ட கடிதம். என் தலைவன் கிட்ட இருந்து அவரை கவனிப்பவர்களுக்கு தெரியும். அவருக்கு 90 வயதா? டீன் ஏஜ் வயதா என்பது? அவருக்கு ஈடாகுமா இப்போ இருக்கும் டம்ளர் குரூப்ஸ்? முதலில் கிட்ட வாங்கடா, அவருக்கு சரிசமமா கபடி ஆடுங்கடா என சொல்ல தோன்றும்.

விரைவில் இன்னும் பத்தே வருடம் என் தலைவனின் நூற்றாண்டு வரும். அதில் கூட என் தலைவன் எங்களை ட்ரில் வாங்க போகின்றார். "வாழ்க வசவாளர்கள்" என சொல்லிவிட்டு நாங்கள் எங்கள் அடுத்த கட்ட பயணம் செய்ய தயாராகிவிட்டோம். எங்களுக்கு அவருக்கு சமமாககூட இல்லை. அவரின் ஓரளவுக்காவது சுறு சுறுப்பு வேண்டும். இதோ தோழர் அசன் முகமது ஜின்னா அவர்கள் எங்கள் தலைவருக்கு எழுதிய 'எடிட்' செய்யப்படாத கடிதம். அவரது அனுமதி கேட்டா கொடுக்க மாட்டார் என எனக்கு தெரியும். இருந்தாலும் சிறிய மனஸ்தாபத்துடன் இதை அனுமதிப்பார் என்று தெரிந்தே இதை இங்கே பெருமையுடன் வெளியிடுகிறேன்! இதோ அவரது கடிதத்தை படியுங்கள்

!
*************************************


உயிரினும் இனிய தலைவர் அவர்களுக்கு, வணக்கம்.


உலகத்தின் பார்வை உங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. உண்மைத் தமிழினம் உங்கள் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கிறது. ஏசுவோர்-ஏளனம் செய்வோர்-எதற்கும் உதவாதோர் எத்தனை விமர்சனங்களை வைத்தாலும், எதிர்ப்புகளையும் தடைகளையும் ஏற்படுத்தினாலும் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தங்களின் மனஉறுதிக்குக் கிடைத்த வெற்றிதான் டெசோ மாநாடு. தங்கள் பொதுவாழ்வுப் பயணத்தின் நெடுகிலும் எந்தத் தமிழினத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறீர்களோ, அந்தத் தமிழினத்தின் நிலையை உலக நாடுகளின் கவனத்திற்கும் ஐ.நா. அவையின் பார்வைக்கும் கொண்டு சென்று, நிரந்தரத் தீர்வு காண்பதற்கான பெரும்பணியை மேற்கொண்டுள்ள டெசோ அமைப்பின் மாநாட்டில் தங்களுடனும் தளபதியுடனும் அருகிலிருந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை என் வாழ்நாளின் சிறந்த தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

இமயத்தைத் தோளில் சுமப்பது போன்ற கடினமானப் பணியை, குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாயின் கவனத்துடன் தாங்கள் செயலாற்றியதை எண்ணி எண்ணி வியக்கிறேன். ஜூலை 4ஆம் நாள் கழகத்தின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம். தமிழகச் சிறையின் கொள்ளளவைவிட 4 மடங்கிற்கு கழகத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டக் களம் கண்டதால், ஆட்சியாளர்கள் அஞ்சி நடுங்கி, அனைவரையும் மாலையிலேயே விடுவித்தனர். அந்தப் போராட்டத்தில் பங்கேற்று விடுவிக்கப்ட்ட நான், தங்களைக் காண வருகிறேன். தமிழகம் முழுவதுமிருந்தும் போராட்ட வெற்றிச் செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வெற்றியில் இரண்டொரு நாட்களாகவது திளைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் யாருக்குமே ஏற்படும். ஆனால், தலைவரோ, அந்த வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியளித்துவிட்டு, வழக்கம்போல் கழகப்பணியில் ஈடுபட்டதுடன், என்னைப் போன்றவர்களிடம் டெசோ மாநாட்டுப் பணிகள் எந்தளவில் இருக்கிறது என்று கேட்டீர்கள். அடுத்த களம் எது, அதில் வெற்றி காண்பது எப்படி என்று சிந்திக்கின்ற தங்களின் போர்க்குணம் என்னைக் கூனிக் குறுகச் செய்தது.

டெசோ மாநாட்டிற்கும் ஆய்வரங்கற்கும் வருவதற்கு ஒப்புதல் தெரிவித்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பட்டியலைக் கேட்டு, அவர்களின் வருகை குறித்த விவரங்களை என்னிடம் விசாரித்தீர்கள். இலங்கைத்தமிழ்ப் பிரதிநிதிகளை அழைத்து வரும் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் அது பற்றிய விவரங்களைக் கேட்டறிகிறீர்கள். மாநாடு தொடர்பான மற்ற பணிகள் குறித்து கழக நிரவாகிகளிடம் உத்தரவிடுகிறீர்கள். ஓய்வு என்ற ஒரு சொல்லே உங்கள் அகராதியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதோ என்று ஆச்சரியப்பட்டு நின்றேன்.

ஜூலை 20ஆம் நாள் மாலை 6 மணிக்கு அறிவாலயத்திற்குத் தலைவர் வந்துவிடுவார் என்று முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. நாங்களும் அங்கு வந்து காத்திருக்கிறோம். 6 மணி என்றால் எப்படியும் 7 மணியாவது ஆகும் நம் தலைவர் வருவதற்கு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மிகச்சரியாக 5.59க்கு அறிவாலயம் வாசலில் உங்கள் கார் வந்து நிற்கிறது. வழக்கமாக வரும் பாதுகாப்புக்கான பூனைப்படையினரைக் காணவில்லை. அவர்கள் தங்கள் இல்லத்திற்கு வந்து சேராத நிலையிலும், மாநாட்டுப் பணிகள் பற்றி ஆலோசிக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்றதும் பாதுகாப்பு பற்றிக்கூடக் கவலைப்படாமல் அறிவாலயத்திற்கு வந்துவிட்டீர்கள். எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கழக நிர்வாகிகள் வரத் தாமதமானாலும் குறித்த நேரத்தில் தளபதி வந்துவிடுவது வழக்கம். அந்த வழக்கம், எங்கிருந்து அவருக்குப் பழக்கமானது என்பதை அன்று புரிந்துகொள்ளள முடிந்தது.

தங்களிடம் ஒவ்வொரு நாளும் பாடம் கற்றுக்கொள்ள எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவே டெசோ மாநாட்டுப் பணிகள் அமைந்தன. ஜூலை 24ந் தேதியன்று ஆலோசனைகள் முடித்து தாங்கள் புறப்படும்போது, என்னையும் தங்கள் காரில் ஏறிக்கொள்ளச் சொன்னீர்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி. தயங்கி நிற்கிறேன். அப்போது நீங்கள், “பாதியில் இறக்கிவிட்டுவிடுவேன்னு பார்க்குறியா?” என்று கேட்கிறீர்கள். “நீங்கள் எங்களை ஒருபோதும் பாதியில் இறக்கிவிடமாட்டீங்கய்யா” என்று என் நெஞ்சத்து வார்த்தைகள் உதட்டின் வழியே வெளிப்பட்டன. என் தந்தை அசன் முகமது அவர்கள் தங்களோடு காரில் பயணித்திருக்கிறார். கழகத்துடனான எங்கள் குடும்பத்தின் பயணம் இன்றும் என்றும் தொடரும். தாங்களோ தளபதியோ ஒரு போதும் பாதியில் இறக்கிவிட்டுவிட மாட்டீர்கள் என்பதைத்தானே எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக இந்த இயக்கத்தில் பயணிப்பது காட்டுகிறது.

கார் பயணத்தின்போது நான் தயக்கத்துடனும் அமைதியுடனும் உட்கார்ந்திருக்கிறேன். ஆனால், தலைவர் நீங்களோ தங்கள் அனுபவத்தில் சிறு துணுக்கு அளவுகூட இல்லாத என்னிடம் கருத்தகளைக் கேட்கிறீர்கள். இந்திய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்கள் வெற்றி பெற்ற செய்தி பற்றி பேச்சு வருகிறது. சுதந்திர இந்தியாவில் குடியரசுத் தலைவர்களாக பதவியேற்வர்களில் 7 பேர் தலைவரின் முயற்சியாலும் ஆதரவாலும்தான் குடியரசுத் தலைவர் ஆனார்கள் என்று நான் சொன்னதும், அவ்வளவு இருக்காதே? என்கிறீர்கள். நான் வரிசையாக ஒவ்வொரு பெயரைச் சொல்ல, தாங்கள் விரல் விட்டு எண்ணியதும், அதன்பிறகு அந்தத் தேர்வுகள் குறித்த தங்களின் விளக்கங்களும், தாங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எத்தனை கவனத்துடன் இருக்கிறீர்கள் என்பதை எனக்கு உணர்த்தியது.

ஒரு நாள் கேபாலபுரத்தில், டெசோ மாநாட்டில் ஒலிபரப்புவதற்கான ஈழத்தமிழர் துயர் துடைப்புப்பாடலின் ஒலிப்பேழையைத் தலைவர் அவர்களோடு நாங்களும் கேட்கிறோம். தாங்கள் சொல்லியிருந்த திருத்தத்தை செய்துமுடித்து பேராசிரியர் சுப.வீ அவர்கள் அந்த ஒலிப்பேழையைக் கொண்டு வந்து போட்டுக் காட்டுகிறார். இருட்டறையில் உள்ளதடா ஈழம் என்று தொடங்கும் தலைவரின் பாடலைக் கேட்கும்போது நெஞ்சம் விம்மி, கண்கள் கலங்குகிறது அனைவருக்கும். அதில் ரத்தம் கொதிக்கிறதே என்பதற்குப் பதில் ரத்தம் துடிக்கிறதே என்று இருக்கிறது. தாங்கள்தான் அதை சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால், அங்கே தங்களோடு அந்தப் பாடலைக் கேட்ட அண்ணன் எ.வ.வேலு, அண்ணன் க.பொன்முடி, அமைப்புச்செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட எல்லோருமே ‘ரத்தம் கொதிக்கிறதே’ என்றுதான் இருக்கிறது என்கிறார்கள். தங்கள் உதவியாளர் நித்யாவை அழைத்து, ரீவைண்ட் செய்து போடச் சொல்கிறீர்கள். அப்போதுதான் எல்லோரும் கவனமாகக் கேட்கிறார்கள். தாங்கள் சொன்னதுபோல, ‘ரத்தம் துடிக்கிறதே’ என்றுதான் அதில் இடம்பெற்றிருந்தது. செய்யப்பட்ட திருத்தம் பதிவாகவில்லை என்பதை சுப.வீ உள்ளிட்ட எல்லோரும் உணர்கிறார்கள். ஒற்றை வார்த்தைகூட தப்பிப்போய்விடாதபடி தாங்கள் எவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள் என்பதைக் கண்டு வியந்தேன்.

உடல்நலன் பற்றி கவலைப்பட்டுக்கொண்டோ, இந்த வேலையையெல்லாம் நாம் கவனிப்பதா என்று அலட்சியம் காட்டுவதோ இல்லாமல் மாநாட்டின் ஒவ்வொரு பணியையும் உங்கள் மேற்பார்வையில்தான் நிறைவேற்றினீர்கள். மாநாட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் போதுமானதாக இருக்காது என்று சொல்லப்பட்டவுடன், தளபதியிடம் தொண்டர் படையை உருவாக்கும்படி கூறினீர்கள். தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி பாயுமே! தளபதி உருவாக்கிய தொண்டர் படைதான், போலீஸ் பாதுகாப்பே இல்லாத டெசோ மாநாட்டில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதபடி பாதுகாத்து, போக்குவரத்து நெருக்கடியில்லாமலும் தவிர்த்தது.

எனது நண்பர் திருவண்ணாமலை நேரு நட்பு முறையில் சில ஆலோசனைகளை எனக்குச் சொல்வார். “எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். உங்கள் இலக்கிலிருந்து கவனம் சிதறிவிடும். விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதைப் புறக்கணித்து நம் செயல்களைத் தொடரவேண்டும் விமர்சனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் செயல் தேங்கிவிடும். தேங்கி நிற்கின்ற எதுவுமே தீங்குதான். ஆறுபோல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் அனைவருக்கும் பயன் தரும்” என்று சொல்வார். தலைவரிடம் அதை அனுபவரீதியாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

காலி டப்பாக்களில் கல்லைப் போட்டு உருட்டியதுபோல வாய்ப்பேச்சு வீரர்கள் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள். அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, டெசோ மாநாடு வெற்றிபெற்றிருக்கிறது என்றால் அதற்குத் தலைவரின் ஓய்வறியா செயலாற்றலே காரணம். நிச்சயமாக வெற்றி பெறமுடியும் என்கிற போர்க்களத்தில் யாரும் இறங்கலாம். இந்தக் களம் கடினமானது என்றும் இது பெருஞ்சோதனை என்றும் சொல்லப்படும் நேரத்தில் அந்தக் களத்தில் இறங்கி, வெற்றியை உறுதி செய்வதற்குப் பெயர்தான் பேராற்றல். இன்று அந்தப் பேராற்றலைக் கொண்ட ஒரே தலைவர் நீங்கள் மட்டும்தான்.

என் தந்தை அசன் முகமது அவர்கள் முரசொலியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவங்களைப் பல முறை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். தலைவர் அவர்களிடமிருந்து போன் வந்தால், யார் அதை எடுத்துப் பேசுவது என்று தயங்குவார்களாம். காரணம், தலைவர் என்ன மனநிலையில் இருக்கிறார்? எப்படிப் பேசுவார்? திட்டினால் என்ன செய்வது? என்பதுதான் தயக்கத்திற்குக் காரணமாக இருக்குமாம். எந்தளவுக்கு நியாயமான கோபம் இருக்கிறதோ, அதைவிட அதிகமான அளவுக்கு உயர்ந்த குணமும் நகைச்சுவை மனமும் தலைவரிடம் உண்டு என்பதை என் அப்பா சொல்லியிருக்கிறார். டெசோ மாநாட்டுப் பணிகளின் போது தங்கள் அருகிலிருந்து அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

தாமதமாகும் பணிகளைப் பற்றி அறிந்ததும் தங்களிடமிருந்து சீற்றமான வார்த்தை வெளிப்படும். அடுத்த சில நிமிடங்களில், வேறொரு பணி சிறப்பாக நிறைவேறியதற்காகப் பாராட்டான வார்த்தைகள் இயல்பாக வரும். டெசோ லெட்டர் பேடில் மாநாட்டின் மைய நோக்கம் குறித்து சுருக்கமாக எழுதவேண்டும். எப்படி எழுவதும் என்று எல்லோரும் குழம்பிக்கொண்டிருந்தபோது, தலைவர் வந்தீர்கள். அந்த லெட்டர் பேடை வாங்கினீர்கள். அடுத்த 5 நிமிடத்தில் தெளிவான-விரிவான நோக்கத்தை வெளிப்படுத்தும் வார்த்தைககளால் குறிப்பை எழுதிக் கொடுத்தீர்கள். மாநாட்டின் தீர்மானங்கள், விளக்கவுரைகள் இவை தொடர்பாக இரவு 3 மணியளவில் கூட குறிப்புகளை எடுத்தவர் நீங்கள் என்பதை அறிவேன். அந்தக் குறிப்புகளைப் பதிவு செய்யும்படி உதவியாளர் நித்யாவிடம் தாங்கள் கூறியபோது, அந்த நேரத்தில் பேப்பர் இல்லை என்கிற நிலவரத்தை அவர் சொல்ல, ”பேப்பர் இல்லையா, உனக்குத் தூக்கம் வருகிறதா?” என்று கேட்டு, விழிப்பை உண்டாக்கியவர் நீங்கள்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு பற்றி தங்களிடம் சொல்லப்பட்டதும், அதன் செயல்பாடு பற்றிக் கேட்டீர்கள். போர்க்களத்தில் சிக்கியவர்கள்-சிறைப்பட்டவர்கள் ஆகியோருக்குத் துணை நிற்பது என்று தங்களிடம் சொன்னார்கள். உடனே தாங்கள், “இதைத்தானே பெருஞ்சோறளித்த சேரலாதன் என்று இலக்கியம் சொல்கிறது. அவன் போர்க்களத்தில் சிக்கியவர்களுக்கு சோறும் நீரும் அளித்தவனாயிற்றே!“ என்று சொல்லி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழினம் எத்தகைய சிந்தையும் செயல்பாடும் கொண்டிருக்கிறது என்பதை என்னைப் போன்ற இளையவர்களுக்கு உணர்த்தினீர்கள். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்ற அய்யன் வள்ளுவரின் வரிகளுக்கேற்ப, டெசோ மாநாட்டுப் பணிகளில் எதனை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்து ஒப்படைத்து, அனைத்தையும் ஒருங்கிணைத்து வெற்றிகாணச் செய்ததது தாங்கள்தானே!

மாநாட்டில் பங்கேற்ற உலகநாடுகளின் தலைவர்கள் அனைவரும், இத்தனை வயதில் இப்படி உழைக்கும் ஆற்றல்மிக்க ஒரு தலைவரை நாங்கள் கண்டதில்லை என ஆச்சரியத்தோடு சொன்னார்கள். மலேசியாவிலிருந்து வந்திருந்த அந்நாட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த யுஸ்மாடி யூசுஃப், அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்குதத் தேர்தல் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அவர் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியபோது, தமிழக காவல்துறையினர் தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். மாநாடு ரத்தாகிவிட்டது. நீங்கள் திரும்பிப்போகவேண்டும் என்று சொல்ல, “நான் திரும்பிச் சென்றால் இரண்டு நாடுகளிடையே பிரச்சினை ஏற்படும். ஏன் நான் திரும்ப வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். அதன்பிறகுதான் காவல்துறையினர் அவரை அனுமதித்திருக்கிறார்கள்.

தலைவரின் உழைப்பாலும் சிந்தனையாலும் உருவான வள்ளுவர் கோட்டத்தையும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருவூலத்தையும் பார்த்துவிட்டு, இதுவரை உலகளவில் எந்தத் தலைவரோடும் நான் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டதில்லை. ஆனால், உங்கள் தலைவரோடு  ஒரு படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று மனம் விட்டுச் சொன்னார்.

மலேசியாவின் எதிர்க்கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள அவரிடம், மாறிவந்தால் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி தருவதாக அந்நாட்டு ஆளுந்தரப்பு சொன்னபோதும் கட்சி தாவதா மனஉறுதி கொண்டவர் யுஸ்மாடி  யூசுஃ.ப். அவர் தங்கள் கட்சித் தலைவர் அந்நாட்டில் எதிர்கொண்ட அரசியல் அடக்குமுறைகள் பற்றி விளக்கினார். நாமும் நமது மாநிலத்தில் உள்ள அடக்குமுறைகளைச் சொன்னதுடன், கருவூலத்தில் உள்ள மிசா காலக் கொடுமைகள் பற்றிய பதிவுகளைக் காட்டி, தளபதி அவர்கள் ஓராண்டுகாலம் கடும் சித்ரவதைகளுடன் சிறைவாசத்தை எதிர்கொண்டதையும் விளக்கினோம். அதனால்தான் உங்கள் தலைவரும் தளபதியும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள என்றார் யூசுஃப்.

எமர்ஜென்சி காலத்தில் தளபதி எதிர்கொண்ட சித்ரவதைகளைப் பற்றி அறிந்த மொராக்கோ நாட்டைச் சேர்ந்த உண்மை மற்றும் நீதி ஆணையத்தின் தேசியத் தலைவர் அஃபெகோ முபாரக் மிகவும் வேதனையடைந்தார். காரணம், அவர் மொராக்கோ நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டபோது royal house எனப்படும் அரண்மனையில் இருந்த அஃபெகோ முபாரக்கும் அவரது குடும்பத்தினரும் மொத்தமாகக் கைது செய்யப்பட்டனர். அஃபெகோவின் தந்தைக்கு ராணுவ ஆட்சி 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அஃபெகோவும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் 4 ஆண்டுகாலம் சிறையில் அடைபட்டிருந்தனர். பிறகு, ராணுவ ஆட்சி நீங்கி unitral parliamentary constitutional monarchy என்கிற நாடாளுமன்ற ஆட்சி முறை மொராக்கோவில் அமைந்தபிறகே அஃபெகோவின் தந்தை, 11 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின் விடுதலையானார். ஆட்சியாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அஃபெகோவுக்கு எமர்ஜென்சிக் காலக் கொடுமைகளும் அப்போது தலைவரும் குடும்பத்தினரும் பட்ட துன்பங்களும், தளபதி சிறைப்பட்டதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தலைவர் மீதும் தளபதி மீதும் அவருக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டதுடன், தளபதிக்கு கென்டகி கர்னல் விருது கிடைத்தது பற்றி மாநாட்டு மேடையில் பெருமையுடன் பேசினார்.

சுவீடன் சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்தவரான நசீம் மாலிக், நமது  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்து இங்கே வந்து தரையிறங்கினார். உலக நடப்புகள் பற்றியெல்லாம் விவாதித்தபடி வந்திருக்கிறார்கள. நசீம் மாலிக்கிடம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்கள் கட்சி உள்ளது. பலநாடுகளில் ஆட்சியில் இருக்கிறது. எங்கள் கட்சி சார்பில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால் யாரையும் வேலை வாங்கமாட்டோம். அந்த ஊரில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்களோ அவர்கள் பிரதமராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்கள் டிராக் பேண்ட் போட்டுக்கொண்டு, தங்கள் மனைவி மற்றும் நிர்வாகிகளோடு வந்து, அந்த கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வார்கள் என்றார்.

நாங்கள் அவரிடம், கழகம் எப்படி ஒரு குடும்பம் போல செயல்படுகிறது என்பதையும், கழக ஏடான முரசொலியைத் தலைவர் தன் தலையிலும் தோளிலும் சுமந்து சென்றதையும், தளபதியும் ஒவ்வொரு ஊராகச் சென்று கழகத்தை வளர்ப்பதையும் எடுத்துச் சொன்னோம். நசீம் மாலிக் மிகுந்த ஆச்சரியமடைந்தார். தலைவரைப் பாராட்டி பரிசளித்ததுடன், வளர்ந்து வருகிற தலைவர் என்று தளபதியை மாநாட்டு மேடையில் அவர் பேசியதற்கு காரணம், தங்கள் இருவர் மீதும் ஏற்பட்ட மதிப்புதான்.

துருக்கி நாட்டைச் சேர்ந்தரான ஐ.நா. பன்னாட்டு ஆணையத் தூதர் கெமால் இல்திரிம்ஸ், பல்வேறு நாட்டு அதிபர்களை சந்தித்து விவாதிக்கக் கூடியவர். உலக அரசியல் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளவர். அவரும் கருவூலத்தைப் பார்த்து, தலைவரின் பொதுவாழ்வு செயல்பாடுகளைப் பார்த்து வியந்து, டெசோவின் வளர்ச்சியில் தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டு, அடுத்த டெசோ மீட்டிங்கை  அர்ஜென்டினாவில் நடத்துவோம் என்றார்.

ஈழப்பிரச்சினை தொடர்பாக ஐ.நா மனித உரிமை அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த நாடான நைஜீரியாவிலிருந்து வந்திருந்த மேமோவும் தலைவரின் செயல்பாடுகளை அறிந்து வியந்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைத்து நாட்டினருமே தமிழகத்தில் இப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காத்து இந்த இனத்தின் நலனுக்காகவே பாடுபட்டு வரும் தலைவரையும் அவருக்குத் துணை நிற்கும் தளபதியையும் மனதாரப் பாராட்டினர்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு, போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் மீது நிறைய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. அதற்கு இலங்கை அரசு பதில் தர வேண்டும் என்றும் நிர்பந்தித்துள்ளது. அத்தகைய அமைப்பின் தேசிய இயக்குநர் ஆனந்த் குருசாமி, டெசோ மாநாட்டிற்கு வருகிறார் என்றதும், அதை எப்படியாவது கெடுத்துவிடவேண்டும் என இங்கே ஈழப் பிரச்சினையைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் வியாபாரிகள் கடும் முயற்சிக் செய்தனர். ஆனால், அம்மெனஸ்டி இன்டர்நேஷனல் அமைப்போ, “எங்களுக்கு நோக்கம்தான் முக்கியம். எங்கள் கருத்தை எடுத்துச் சொல்ல ஒரு ப்ளாட்பார்ம் தேவை. எனவே நாங்கள் டெசோ மாநாட்டில் பங்கேற்பதை யாரும் தடுக்க முடியாது என உறுதியாகக் கூறிவட்டது.

ஈழத்தமிழர் நலனுக்காக யார் குரல் கொடுத்தாலும் ஆதரிக்கும் இயக்கம்தான் தலைவரின் தலைமையிலான தி.மு.கழகம். ஜெயலலிதா இதற்கு முன் என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்பது தெரியும். ஆனாலும், அவர் ஆட்சியில் ஈழத்தமிழர் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த இயக்கம் தி.மு.க. ஆனால், தி.மு.கவை எதிர்க்கும் அமைப்புகளோ, ஈழத்தமிழர் நலனைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு, கழகத்திற்கு எதிராகவே செயல்படுகின்றன. ஈழத்தை வைத்து இங்கே பிழைப்பு நடத்தும் அவர்களால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த பலன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்லமுடியுமா? வெறும் வாயை மெல்லுகிறார்கள். வெறுங்கையால் முழம் போடுகிறார்கள்.

தலைவரே உங்களின் உழைப்பின் பயனை மாநாடு தொடங்குவதற்க முன்பே உணர முடிந்தது. தாங்கள் எடுத்த நடவடிக்கை பல நாட்டு ஆதரவினைப் பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு, ஐ.நா. மனித உரிமை அவையின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடு. ஆனால், அந்நாட்டு அதிபரின் அரசியல் ஆலோசகர் அனுப்பிய வாழ்த்துச்செய்தியில், ‘டெசோவில் எங்களையும் இணைத்துக் கொள்கிறோம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதுதான் உங்கள் மாபெரும் முயற்சிக்கான முதற்கட்ட வெற்றி.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க மாநாட்டில் நானும் பணியாற்ற வாய்ப்பளிக்கும் வகையில், தளபதி தலைமையிலான வரவேற்புக் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமித்து, தங்கள கடிதத்தில் என் பெயரையும் குறிப்பிட்டு, மாநாட்டு மேடையில் மூன்று தீர்மானங்களைப் படிக்கும் வாய்ப்பையும் அளித்ததைக் காலம் உள்ளவரை நெஞ்சில் நன்றியுடன் நிலைநிறுத்தியிருப்பேன்.

துருக்கி நாட்டைச் சேர்ந்தரான இல்திரிம்ஸ் சென்னையிலிருந்து விமானம் ஏறும்போது, என் வீட்டை விட்டுப் போவது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்று சொன்னார். அதுதான் நம் தமிழ் மண்ணின் பெருமை. அத்தகைய பெருமைமிக்க இனத்தின் உரிமைகளும் அடையாளங்களும் பறிபோய்விடக்கூடாது என்பதற்காகத்தான் தலைவர் அவர்கள் அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இனமானப் பேராசிரியரும் தளபதியும் தங்களுக்குத் துணைநிற்க, கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் உங்கள் பின்னே அணிவகுத்து நிற்கிறார்கள். அந்த உடன்பிறப்புகளில் ஒருவனான நான் பெற்ற வாய்ப்பையும் அனுபவத்தையும் நன்றியுணர்ச்சியுடன் பதிவு செய்யவேண்டும் என்பதாலேயே இந்த நீண்ட கடிதத்தை எழுதியுள்ளேன்.

என்றும் அன்புடன்

அசன்முகமது ஜின்னா
மாநில இளைஞர் அணி துணை செயலர்
திராவிட முன்னேற்ற கழகம் - தலைமை நிலையம்


August 6, 2012

நாஞ்சில் சம்பத் என்னும் பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் கொக்கரிக்கின்றது ..... (டெஸோ மாநாடு)


டெஸோ மாநாடு நடைபெற இருக்கும் Y M C A மைதானத்தில் பந்தல் வேலையை பார்வையிடும் (தன் 90வது வயதிலும்) கலைஞர் அவர்கள்

எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் தேதி 2012 அன்று சென்னையில் டெஸோ மாநாடு நடத்தப்படும் என கலைஞர் அறிவித்த அன்றைய தினத்தில் இருந்து திமுகவினரோ, அல்லது அந்த டெஸோ அமைப்பில் இருப்பவர்களோ கூட யாரும் இந்த மாநாட்டு செய்திகளை முனைப்போடு மக்களிடம் எடுத்துச்செல்லவில்லை என சொல்லும் அளவுக்கு இலங்கை அரசும், (ஆமாம், இலங்கை அரசே தான்), மற்றும் எப்போதும் போல கலைஞர் எது செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற மனோநிலையில் இருக்கும் மனோவியாதியஸ்தர்களும் வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்ததன் விளைவு... டெஸோ குழுவினருக்கு "விளம்பர" மிச்சம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது கிண்டல்கள், கேலிகள் என கலைஞர் எதிர்ப்பாளர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்க, இங்கே டெஸோ மாநாட்டு குழுவினர்  அமைதியான முறையில் அதே நேரம் துரித கதியில் மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு உள்ளனர்.

கலைஞர் அவர்கள், தன் 24 மணி நேரம் போதாமல் மாநாட்டு வேலைகளில் மூழ்கிக்கிடக்க அவரது பரிவாரங்கள் தான் பாவம். அனேகமாக அவர்கள் ஆகஸ்ட் 12க்கு பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டு ஆசுவாசம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை.

இதனிடையே மதிமுகவின் வைக்கோ, நெடுமாறன், சீமான் போன்ற,  ஈழப்பிரச்சனையை அரசியல் வியாபாரமாக்கிவர்கள் வயிற்றில் புளி கரைக்கப்பட்டு என்ன பேசுகிறோம் என எதும் தெரியாமல் பிதற்றிக்கொண்டு இருக்கின்றனர். ஒருவனை முதுகில் அடிக்கலாம். வயிற்றில் அடிக்கலாமா கலைஞரே? அவர்கள் பிழைப்பில் மண் போடலாமா? அதனால் தான் பிதற்றுகினனர் போல.  பிணம் தின்னி அரசியல்வாதிகளை அப்படி அடித்தால் கூட தவறில்லை என்றே தோன்றுகின்றது இப்போது. ஏனனில் அவர்களது சமீபத்திய உளறல்கள் அப்படியாகவே இருக்கின்றன.

இதில் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் இதயத்தை இரும்புப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு பேசும் பேச்சுகள் பல சமயம் எரிச்சலாகவும் சில சமயங்களில் அயற்சியாகவும் உள்ளன. சமீபத்தில் கூட  "டெஸோ மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கூட எங்களுக்கு இனி எதிரிகள் தான். அவர்களும் தமிழின விரோதிகள் மற்றும் துரோகிகள் தான்" என திருவாய் மலர்ந்துள்ளார். இனியாவது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் "டெஸோ" மாநாடு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் திமுகவின் 36 மாவட்ட செயலர்கள் தங்கள் தங்கள் மாவட்ட குழு கூட்டம் நடத்தி முடித்து விட்டனர். நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் தங்கள் கூட்டம் நடத்தி முடித்து விட்டன. கிளைக்கழக கூட்டம் எல்லாம் முடிந்து விட்டன. அதிலே எடுத்த முடிவின் படி பொதுமக்களும் மாநாட்டுக்கு ஏன் வ வேண்டும் என தெருமுனைக்கூட்டங்களும், பெரிய கூட்டங்களும் நடந்து கொண்டு உள்ளன. கிட்டத்தட்ட திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரை செய்தி போய் சேர்ந்து விட்டது. டெஸோ மாநாட்டுக்கு வர வேண்டி போக்குவரத்து, தங்குமிடம், சாப்பாடு ஆகிய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன தொண்டர்கள் மத்தியில்.  சிறை நிரப்பும் போராட்டத்துக்கே இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் என்றால் இதற்கு அதை விட ஐந்து மடங்கு கூட்டம் வரும் என காவல்துறை கைபிசைந்து நிற்கின்றது. முதல்வரோ இதற்கெல்லாம் கவலைப்படாமல் கொடநாட்டில் இருக்கின்றார்.

ஈழத்தமிழர்களே! ஒரு பத்து லட்சம் பேரை ஒரே இடத்தில் திரட்டி உலகின் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்களை கொண்டு வந்து அவர்களை வைத்தே மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றி.... இந்த மாநாடு என்பது ஏதோ திமுகவினரின் பொழுது போக்கிற்காக இல்லை... ஒரு சென்சிட்டிவான ஈழப்பிரச்சனைக்காக என்பதை வரும் முக்கியஸ்தர்களிடம் விளக்கி அதை அவர்கள் எந்த அளவு கொண்டு சென்று உலக அளவில் பரப்ப வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு ஒரு அருமையான நிகழ்வு நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் ..... நரம்பில்லா நாக்குக்கும், மூளை இல்லா கபாலத்துக்கும், இதயம் இல்லா மார்புக்கும் சொந்தக்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டியே இப்பதிவு.

என்னது அது? நாஞ்சில் சம்பத்தா, அல்லது நஞ்சில் தோய்த்த அம்பா? என்னது அது? ம்ம்ம்ம்... டெஸோ மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் அவர்களுக்கு இனி எதிரியாமாம். என்ன ஒரு உணர்வு. சீமான், நெடுமாறன், வைக்கோ, சம்பத் போன்ற இன்ன பிற செல்லாக்காசுகள் இத்தனை நாள் இது போல ஒரு கூட்டம் கூட்டி உலக நாடுகளை அவர்கள் பக்கம்  திரும்பச்செய்தனரா? அல்லது இனிமேலாவது அப்படி உலகப்பார்வையை உங்கள் மீது விழ வைத்து ஈழத்தமிழர் பிரச்சனையை உலகலாவிய பிரச்சனை ஆக்க முயற்சியாவது செய்தது உண்டா? அல்லது அந்த தெம்போ, திராணியோ உங்களுக்கு இருக்கின்றதா முதலில். இதோ நாங்கள் மாநாட்டுக்கு வரும் சில முக்கியஸ்தர்களை பற்றி சொல்கின்றோம். அவர்களை நீங்கள் எல்லாம் போய் அவர்கள் நாட்டிலாவது பார்க்க இயலுமா? அல்லது பார்த்தாலும் உங்கள் ஒரு கை ஓசை ஒலி எழுப்புமா? அத்தனை பேரையும் ஒரே இடத்தில் கூட்டக்கூடிய வலிமையோ அல்லது திறமையோ உங்களுக்கு உண்டா? உங்களால் முடிந்தது எல்லாம் பாவம்... அந்த புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் காசுகளில் நார்வே, ஸ்வீடன், செர்மனி, அமரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என இன்ப சுற்றுலா போய் அங்கே ஒரு மூடிய அரங்கில் தொண்டை நரம்பு புடைக்க முழக்கமிட்டு கைத்தட்டல் போதையை ஏற்றிக்கொண்டு விமானம் ஏறி தமிழகம் வந்து "போய் வந்த" பொருளாதார திமிரில் கலைஞரை வசை பாடுவீர்கள்.

ஆனால் டெஸோ மாநாடு அப்படி இல்லை நஞ்சில் புழுத்த புழுக்களே, யாரெல்லாம் உலக அரங்கில் உன்னத நிலையில் மனிதாபிமானத்தோடு, மனிதநேயத்தோடு உலகை உலுக்கும் சக்தியோடு இருக்கின்றனரோ அவர்களை இங்கே ஒரே குடைக்கு கீழே கொண்டு வருகிறோம். உரக்க பேசுவதை விட அவர்களுக்கு உரைக்கும் விதத்தில் பேசப்போகிறோம். உங்களைப்போல மூடிய அரங்கில் முக்காடிட்டு அழுவது போல அல்லாமல் திறந்த அரங்கில் உலகமே பார்க்கும் படி ஈழத்தமிழர்களின் வாழ்வாதார உரிமைக்காக, வரும் உலக தலைவர்களை உலுக்கப்போகின்றோம்.  மனித நேயம் மாண்டுவிட்டதா என அவர்கள் மனதை கரைக்கப்போகிறோம். அவர்கள் உங்களுக்கு இனி எதிரிகளா? நாஞ்சில் சம்பத் என்னும் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என கொக்கரிக்கின்றது. எங்களுக்கு பூனைகளை பற்றி கவலை இல்லை. மனிதர்களைப்பற்றி மட்டுமே அக்கரை. இதோ அந்த மாநாட்டுக்கு வரும் ஒரு சிலர் பற்றிய அவர்களது விபரங்களை தந்து இருக்கிறோம். படியுங்கள். இனியாவது தெளியுங்கள்!



ஸ்வீடன் - திரு. நசீம் மாலிக்

திரு.நசீம் மாலிக் அவர்கள்

திரு. நசீம் மாலிக் ஸ்வீடன் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினரும், அந்த நாட்டின் பழமையானதும், மிகப் பெரியதுமான சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தலைவரும் ஆவார்.


மனித உரிமை ஆர்வலரான இவர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்த பல்வேறு கருத்தரங்கள், ஆய்வரங்களில் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் ஈழப் பிரச்சனை குறித்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டுக் கூட்டத்திலும், ஸ்வீடன் பாராளுமன்றத்திலும் பேசக்கூடிய வாய்ப்பை பெற்றவர்.


The International Human Rights Commission (IHRC) has appointed H.E. Malik Nasim Ahmed (Elected Reserve Member of the Swedish Parliament) as the International Human Rights Commission’s Ambassador for Human Rights and Peace At Large for Scandinavia Countries from Sweden from 16th April 2012.
H.E. Malik Nasim was also appointed as a GOODWIL AMBASSADOR OF PEACE AND HUMANITY, Sweden, by Dr. Dr. Datu Camad Ali, Founding Chairman & Executive President of Southern Philippines Muslim &Non-Muslim Unity & Development Association (SPMUDA International).


H.E. Malik Nasim is renowned for his services to humanity and his efforts for the efforts of human rights and peace. He is working for the democracy, Right of vote for all the citizens of every country and freedom of expression and speech, as these are the fundamental requirements for the establishment of lasting peace in the world.

He also is working against the severe persecutions on religious and ethnic grounds. He is a firm believer of religious freedom and tolerance. These two important appointments are clear evidence of his love and services for mankind.


ஓ.ஐ.சி: - திரு, கெமால் யில்டிரிம்


இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி யில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன. இந்த ஓ.ஐ.சி அமைப்பானது ஐக்கிய நாடுகள் அவையின் UNTC (United Nations Treaty Collection)-ன் கீழ் இயங்கும் பன்னாட்டு அமைப்பு ஆகும். இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் சர்வதேச மனித உரிமை ஆணையமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர். சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் தூதரான திரு, கெமால் யில்டிரிம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஈழப் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றிட முயல்வளார்.


நைஜீரியா: இதில் இருந்து டெஸோ மாநாட்டுக்கு வருகை தருகின்றனர்.

நைஜீரியா நாடு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் அவையின் ஏதிலிகள் நல ஆணையத் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடு ஆகும். நைஜீரிய அரசாங்கத்தின் சார்பாக டெஸோ மாநாட்டுக்கு வருகை தருவதாக உறுதி அளித்துள்ளனர். வரும் செய்தி உறுதி செய்யப்பட்ட பின் அவர்கள் பெயர்கள் மற்றும் விபரங்கள் இங்கே அப்டேட் செய்யப்படும் தோழர்களே!


 மலேசியா: - திரு. யுஸ்மாடி யூசுப்

திரு.யுஸ்மாடி யூசுப் அவர்கள்  கிழக்காசிய பசிபிக் ட்ரியேனியல் மாநாட்டில் பேசும் காட்சி 

திரு. யுஸ்மாடி யூசுப் அவர்கள் மலேசிய பாராளுமன்ற உறுப்பினராகவும் மலேசிய நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டியின் சர்வதேசப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சியாகும். மேலும் திரு. யுஸ்மாடி யூசுப் அவர்கள் தமிழ் அமைப்பினருடன் இணைந்து மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரைச் சந்தித்து ஈழத்தமிழர் நலன்காக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டி ஈழத்தமிழர்கள் மற்றும் மலேசியாவில் ஏதிலிகளாகக் குடியேறியுள்ள ஈழத் தமிழர்களின் நலம் காட்க பல்வேறு நிதியுதவிகளையும் செய்துள்ளது. சமீபத்தில் இந்தக் கட்சியினர் ஈழத்தமிழர்களுக்காக நிதி சேகரித்துக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

\\ usmadi was born in Balik Pulau, Penang. A Kampung Boy (his story was written in an article entitled From Balik Pulau to Washington D.C. in Al Islam Magazine issue February 2006). He had his early education at Sekolah Kebangsaan Sungai Korok in Balik Pulau and continued his high school at SMKA Al-Mashoor (Lelaki), Pulau Pinang and Sultan Alam Shah Islamic College in Klang.

Yusmadi is a graduate of law (LL.B) from International Islamic University Malaysia where he studied both common law and Islamic law.. He is a Partner at a regional law firm law firm in Malaysia where he specializes in public interest litigation and criminal defense cases. Yusmadi’s involvement in Human rights activism at the local and international level was duly recognised when he was nominated by the US Embassy of Kuala Lumpur to participate in the International Visitors Leadership Program (IVLP) for Multi Regional Human Rights Advocacy Programme, 2004 in USA.

Apart from practicing law, he is a Fellow at the Institut Kajian Dasar (Institute for Policy Research) and a founding Director of GERAK (Movement for Democracy and Anti-Corruption) in Malaysia. Yusmadi was also a founding member of Malaysia America Friendship Alumni Association (MAFAA). In early 2005 Yusmadi was selected by Phoenix TV (a Hong Kong based TV station) to represent the Malaysian Youth for a documentary on successful Asian youths entitled The Neighboring Country Story. Yusmadi is a prolific writer and his views on law and politics are sought after by both print and electronic media in Malaysia.
He writes a weekly column, "Dengan Izin" ("May It Please the Court") on legal and social issues for the leading Malaysian daily, Utusan Malaysia.

In 2006 he was nominated as Hubert H. Humphrey Fellow for Law & Human Rights and was selected by the Fulbright Board to pursue posgraduate studies, LL.M (International Legal studies with specialization in Human Rights) at American University Washington College of Law in Washington D.C.
In Summer 2008, he was selected as Draper Hills Democracy & Development Fellow at Center on Democracy, Development & the Rule of Law, Stanford University.

In the recent Malaysia 12th general election, Yusmadi was elected as Member of Parliament of Malaysia for Balik Pulau, Pulau Pinang and was also appointed as Chairman of International Affairs, People's Justice Party (KeADILan). Yusmadi is married to Fahda Nur, a lawyer and they are blessed with two children (Aqil and Rayidah).

மொராக்கோ: - திரு. டாய்டா முகமது
மொராக்கா பாராளுமன்றம் - இங்கேயும் ஈழத்தமிழன் நிலை குறித்து வாதாட இயலும் திரு.டாய்டா முகமது அவர்களால்...

மொராக்கோ நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான திரு. டாய்டா முகமது அந்நாட்டில் அனைவரும் அறிந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார். இவர் தனிப்பட்ட முறையிலும், சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் தான் பொறுப்பு வகிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் பல்வேறு ஈழ ஏதிலிகளுக்கு உதவியுள்ளார். ஈழப்பிரச்சனை குறித்து மொராக்கோ பாராளுமன்றத்தில் பேசித் தீர்மானம் நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.


அம்னெஸ்டி இன்டர்நேசனல்: - ஒரு முக்கிய பிரமுகர் கலந்து கொள்கிறார்:


நோபல் பரிசு பெற்ற மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேசனல் உலகப் புகழ் பெற்ற அமைப்பாகும். ஈழத் தமிழர்கள் தொடர்ந்து அங்குள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பலமுறை கண்டனங்களைத் தெரிவித்துள்ள அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு அவ்வப்போது இலங்கையில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வறிக்கைகளை ஐக்கிய நாடுகள் அவைக்கும், உலக நாடுகளின் பார்வைக்கும் கொண்டுவருகிறது. அம்னெஸ்டி இன்டர்நேசனல் டெசோ அமைப்புடன் இணைந்து ஈழ மக்களுக்காகப் பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளது.

======================
மேலே இருக்கும் செய்திகள் உதவி திரு.அசன் முகமது ஜின்னா அவர்கள், டெஸோ மாநாட்டு வரவேற்பு குழு செயலர் - திமுக தலைமையகம்)

======================

நாஞ்சில் சம்பத் என்னும் பூனை தன் கண்ணைக் கட்டிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் கொக்கரிக்கின்றது




டெசோ குறித்து ஒரு ஈழ தமிழரின் பார்வை....(இணயத்தில் இருந்து) (செய்தி உதவி திரு ஜே பி பிரகாஷ் அவர்கள்)

\\ யார் குத்தி என்றாலும் அரிசியாக வேண்டும். தமிழீழத்தில் நான்கு இலட்சம் மக்கள் தற்காலிக கொட்டில்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எந்த அடிப்படை வசதியும் இன்றி வாழ்கிறார்கள். போர்க்காலம் போலவே இராணுவம் வட - கிழக்கு மாகாணங்களில் குவிக்கப்பட்டு இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. சிவில் நிருவாகம் முடக்கப்பட்டுள்ளது. தமிழர்களது அன்றாட வாழ்க்கையில் இராணுவம் தலையிடுகிறது. கோயில் திருவிழா, விளையாட்டுப் போட்டி, திருமணம் எதுவாக இருந்தாலும் இராணுவம் தலையிடுகிறது. தங்களையும் அழைக்குமாறு நிர்ப்பந்தம் செய்கிறது. தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்குப் பாரிய தளங்களை அமைத்து வருகின்றன. பவுத்தர்கள் வாழாத ஊர்களில் இராணுவம் விகாரைகள், தூபிகள், புத்தர் சிலைகள் ஆகியவற்றை நிறுவுகின்றது. தென்னிலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் அடாத்தாகக் கொண்டுவந்து குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களது தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. சுருக்காகச் சொன்னால் இனச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது. பண்பாட்டுப் படுகொலை (Cultural Genocide) மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியில் திமுக நடத்தும் டெசோ மாநாடு வரவேற்கப்பட வேண்டிய மாநாடு. அதனை எதிர்ப்பவர்கள் கள நிலை தெரியாது கருணாநிதி மீதுள்ள கோபத்தால் எதிர்க்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் தமிழீழ மக்களின் இருப்புக்கு யார் ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டாலும் அது மலையளவு உதவியாக ஈழத் தமிழர்களால் எண்ணப்படும்....\\




****************


உண்மையாகவே ஈழத்தமிழர்கள் மீது அக்கரை இருப்பின் இனியாவது இந்தப்பக்கம் வாருங்கள் ஈழவியாபாரிகளே!ஆனால் வரும் போது வியாபாரி வேஷம் கலைத்து விட்டு மனிதநேயம் தாங்கி வாருங்கள்.ஆகஸ்ட் 12, 2012 - சென்னை டெஸோ மாநாட்டில் சந்திப்போம் தோழர்களே!