பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 5, 2007

அந்தரங்கம் விற்பவர்களை செருப்பால் அடி!!!

சமீபத்தில் மனதை மிகவும் பாதித்த நிகழ்வு இது. கடலூர் மாவட்ட ஒரு கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கம் போல் அன்றிறவே முதலிரவு. மறு நாள் அந்த பெண்ணின் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அந்த பெண் தன் உறவினர்களிடம் முறையிட்ட நெஞ்சம் பதைக்க வைக்கசெய்யும் புகார்.

அதாவது தன் முதலிரவில் தான் தனது கணவரின் நண்பர் மூலமாக வீடியோ எடுக்கப்பட்டதாக. பின்னர் அந்த வீடியோ கேசட் வெளிநாட்டு விற்பனைக்காக விமான நிலையம் வரை போய் விட்டதாகவும் அந்த மணப்பெண் தெரிவித்தார். இதை கேள்விப்படும் எந்த தந்தையும் இந்த தந்தை எடுத்த முடிவுதான் எடுப்பார் என்பது உண்மைதான்.

இதில் எந்த அளவு உண்மை என்பது விசாரனையில் இருக்கட்டும். உண்மையாய் இருக்குமேயானால் என்பது பற்றியே இப் பதிவு.

அந்தரங்கம் விற்பனை எங்கு ஆரம்பமாகின்றது? ஒரு உறவினர் மணமகளை முதலிரவுக்கு அனுப்பும் முன்பே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறேன் பேர்வழி என்று, அந்த பெண் மறுநாள் தன்னிடமே அவள் அவளுடைய அந்தரங்கத்தை விற்பனை செய்யவேண்டி, 'அறிவுரை' என்ற முதலீட்டை இடுகின்றாள். மறுதினம் "சந்தோஷமா இருந்தியா?" என்ற கொக்கியில் மாட்டி அந்த பெண் தன் அந்தரங்கத்தை இலவசமாக வாரி இறைக்கிறாள்.

மணமகனோ வேறு வழியில். அவனுடைய ஆண்மைதனம் பற்றிய அகங்காரம் அவனுடைய நண்பர்களிடம் பீற்றிக்கொள்ள வைக்கின்றது. இலவச கிலுகிலுப்புகள் கிடைக்கப்பெற்றவர்கள் இன்னும் இன்னும் கொக்கிகளை போட அந்த உளருவாயனோ தனக்கே தெரியாமல் தன் அந்தரங்க விற்பனையை அமோகமாய் நடத்துகிறான்.

அந்த இருவருக்குமே சொல்வதுயாதெனில் நீங்கள் விற்பனை செய்வது உங்களுக்கு மட்டுமேயானது அல்ல. உங்களை தவிர மறைமுகமாக வேறு சிலரின் மானம் சம்பந்தப்பட்டதும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை உணருங்கள்.

விலைமாதுவிடம் சென்று வந்தவன் கூட அவன் லீலைகளை, அகங்கார ஆண்மைதனத்தை அடுத்தவனிடம் சிலாகித்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவள் அவனிடம் மட்டுமே தன் மானத்தை விற்க ஊதியம் பெற்றாலொழிய இவன் வெளியே வந்து மற்றவர்களிடம் அவள் மானத்தை(மிச்சமிருப்பதை)விற்க எந்த விற்பனை உரிமையும் தரவில்லை. அப்படியிருக்கும் போது புதுமண தம்பதிகளின் இந் நடத்தை, கலாச்சார சீர்கேடு என்ற புற்று நோயின் ஆரம்ப விழாவிற்கான அழைப்பிதழே.

கிலுகிலுப்பு கிடைக்கப்பெற்றவர்கள் எப்படி வலை விரித்தாலும் உங்களுக்கு எங்கே போகிறது புத்தி?

இந்த வாய் வழி விற்பனையே வளர்ந்து ஊடகத்துறை என்றெல்லாம் கடந்து இதோ இந்த பதிவின் ஆரம்பத்தில் கண்ட கடலூர் மாவட்ட நிகழ்வெல்லாம் நடைபெறுகின்றன.

உணருங்கள் - அந்தரங்கம் புனிதமானது

41 comments:

 1. தம்பி,
  சும்மா ஜாலியா பெனாத்திட்டு போயிட்டெ இருப்போம்ன்னு இருந்தவன, சீரியசா எழுது சீரியசா எழுதுன்னு கொட கொடன்னு கொடஞ்சியய்யா, இப்ப எத்தன பேர் என்னய குமுர போறாங்களோ தெர்லயே....எங்கய்யா போயிட்ட...

  ReplyDelete
 2. //test!//

  தம்பி, "சோதனை" என்பதன் ஆங்கில ஆக்கமா?

  ReplyDelete
 3. nalla visayathathaan sollirukeenga....

  antharangam enbathe oru antharangamaana visayam.. atha velitcham poduvathu antharanga ilakanathukke purambaanathu...

  [sorry for typing in english :))]

  ReplyDelete
 4. அபி அப்பா,

  துபாய்லே பெனாத்தறதுக்குக் கூட காம்பெடிஷன் வந்துட்டுதா!

  என்ன சோதனை!!

  sudamini AT gmail DOT com க்கு உங்கள் 050 எண்ணை அஞ்சலித்தால் விரிவாக பினாத்தலாம்:-)

  ReplyDelete
 5. \\தம்பி,
  சும்மா ஜாலியா பெனாத்திட்டு போயிட்டெ இருப்போம்ன்னு இருந்தவன, சீரியசா எழுது சீரியசா எழுதுன்னு கொட கொடன்னு கொடஞ்சியய்யா, இப்ப எத்தன பேர் என்னய குமுர போறாங்களோ தெர்லயே....எங்கய்யா போயிட்ட..\\\

  எலேய்...பாவம் அபி அப்பா...சிவவேன்னு இருந்தாரு..
  எதுக்கு உனக்கு இந்த கொலை வெறி...

  ReplyDelete
 6. \\//test!//

  தம்பி, "சோதனை" என்பதன் ஆங்கில ஆக்கமா?\\

  அண்ணாத்த..
  இதுதான் உள்குத்து தெரியாதா !!!!!!

  ReplyDelete
 7. //nalla visayathathaan sollirukeenga//

  வாங்க ஜி! நல்ல விஷயம்தான். ஆனா கும்மி சத்தத்தையே கானுமே.

  ReplyDelete
 8. //துபாய்லே பெனாத்தறதுக்குக் கூட காம்பெடிஷன் வந்துட்டுதா!

  என்ன சோதனை!!

  sudamini AT gmail DOT com க்கு உங்கள் 050 எண்ணை அஞ்சலித்தால் விரிவாக பினாத்தலாம்:-) //

  வாங்க வாங்க சுரேஷ், முத முதலா வந்துள்ளீர்கள். நன்றி. வரும்போதே ஒரு நல்ல விஷயத்தோட வந்திருக்கீங்க நன்றி.

  ReplyDelete
 9. //எலேய்...பாவம் அபி அப்பா...சிவவேன்னு இருந்தாரு..
  எதுக்கு உனக்கு இந்த கொலை வெறி... //

  கோபி தம்பி, வந்திருக்குற பின்னூட்டத்தல்லாம் பாத்தா இதயும் மக்கள் காமெடியா எடுத்துகிட்டாங்கன்னு நினைக்கிரேன்.

  ReplyDelete
 10. என் சார்பாகவும் ஓரு அடி!

  ReplyDelete
 11. //என் சார்பாகவும் ஓரு அடி! //

  வாங்க வாங்க பாலா, முதல் வருகை. நன்றி. நிஜமாகவே சிகரெட்டை விட்டு விட வாழ்த்துக்கள்.(சென்னைல அங்கங்க ஆளு வச்சிருக்கேன்-கண்காணிக்க)

  ReplyDelete
 12. //அபி அப்பா said...
  //nalla visayathathaan sollirukeenga//

  வாங்க ஜி! நல்ல விஷயம்தான். ஆனா கும்மி சத்தத்தையே கானுமே.//

  சீரியஸ் பதிவப் போட்டுப்புட்டு கும்மி சத்தத்த கேட்டா எங்க போறது...

  கும்மிக்கு மட்டும்தான் கும்மி அடிப்போம் நாங்க...

  ReplyDelete
 13. இருந்தாலும் போஸ்டர் ஒட்டுற ஆள இப்படி படு சீரியஸா ஒரு போஸ்ட போட வச்சி ஆப்படிக்கிறாரே இந்த தம்பிப் பய...

  ReplyDelete
 14. //சீரியஸ் பதிவப் போட்டுப்புட்டு கும்மி சத்தத்த கேட்டா எங்க போறது...

  கும்மிக்கு மட்டும்தான் கும்மி அடிப்போம் நாங்க...//

  ஜி, அப்டியா சங்கதி, "கும்பியடிக்க வாரீகளா?"ன்னு ஒரு பதிவு போட்டா தான் சரியா வருவீங்களா? போட்டுடுவோம்.

  ReplyDelete
 15. hai abi appa!!!!
  supera ezhuthi irukeenga!!!
  nalla comedy varum pola ungalukum ennoda guru mathiri!!!
  kalakunga.. (this comment is for the last post)

  indha padivum nanraaga ullathu

  ReplyDelete
 16. //hai abi appa!!!!
  supera ezhuthi irukeenga!!!
  nalla comedy varum pola ungalukum ennoda guru mathiri!!!
  kalakunga.. (this comment is for the last post)

  indha padivum nanraaga ullathu//

  வாங்க வாங்க டுபுக்கு சிஷ்யை, முதல் முறையாக வருகின்றீர்கள். உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது சேதுக்கரசி அவர்கள்.கீழ் கண்டவாறு...
  //அபி அப்பா, ஆட்டையில நல்லாவே மிங்கிள் ஆயிட்டீங்க.. தம்பியோட டவ் ஷாம்பூவை சரியான நேரத்துல ஞாபகம் வச்சி எழுதுறதிலிருந்தே தெரியுதே :) அப்புறம்.. இல்லாத காதலியப் பத்தி கைப்பு எழுதியிருக்கதை அவசியம் படிச்சுப் பாருங்க. ரொம்ப சுவாரசியமா இருக்கும். அன்னிக்கு இருந்து கைப்பு வலைப்பூ ரசிகை நான். இந்த ரேட்டுல போனா டுபுக்கு டிசைப்பிள் மாதிரி கைப்பு டிசைபிள் ஆகிடுவேனோ என்னாவோ. (அப்புறம்.. அபி அப்பா, டுபுக்கு டிசைப்பிள் பக்கம் பார்க்கிறப்ப அபி அம்மா இல்லாத நேரமாப் பாருங்க, சரியா? :))

  ReplyDelete
 17. ரொம்ப நல்ல பதிவு அபி அப்பா.

  இதை கூட மத்தவங்ககிட்ட share பண்ணிக்குவாங்களானு ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு.

  பாவம் அந்த பொண்ணு. அவனையெல்லாம் அங்கயே அருவா எடுத்து போட்டு தள்ளியிருக்கணும்.

  ReplyDelete
 18. செருப்பால அடிச்சா பத்துமா அபி அப்பா???

  இவனை ரேப் கேஸ்ல புக் பண்ணனும்!!!

  ReplyDelete
 19. அபி அப்பா.. இப்படியா போட்டுக்குடுப்பீங்க? நல்லா இருங்கப்பா அபியப்பா.

  ReplyDelete
 20. //பாவம் அந்த பொண்ணு. அவனையெல்லாம் அங்கயே அருவா எடுத்து போட்டு தள்ளியிருக்கணும்.//

  இம்சை அரசி தர்பாரில் என்ன தண்டனை என்பதை உங்கள் பாணியில் சொல்லுங்கள் மன்னி!!!!

  ReplyDelete
 21. //அபி அப்பா.. இப்படியா போட்டுக்குடுப்பீங்க? நல்லா இருங்கப்பா அபியப்பா.
  //

  வாங்க சேதுக்கரசி, எப்போ எழுத ஆரம்பிக்க போறீங்க? ஆவலுடன் வெயிடிங்

  ReplyDelete
 22. //இவனை ரேப் கேஸ்ல புக் பண்ணனும்!!!//

  ஆமா வெட்டி தம்பி, ஆனா அதுக்கு காவிரி நடுவர் மன்ற நீதிபதிய போடக்கூடாது. 17 வருஷம் இழுத்துடுவாரு.

  ReplyDelete
 23. hai abi appa neraiya phthiya sinthanaigal varattum
  subhan

  ReplyDelete
 24. அபி அப்பா,
  அதெல்லாம் சரிதான். முக்கியமான அந்த நேரத்தில் தன் மகளுக்கு உறுதுணையாக இருந்து அந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டுவர மனதளவில் சப்போர்ட்டாக இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட அந்த அப்பாவை ஒன்றும் சொல்லாமல் விட்டுட்டீங்க?!

  முதலிரவில் கணவனைத் தவிர்த்த ஒருவன் படுக்கை அறையில் இருக்கிறான் என்பதை உணர்ந்த பின்னும் ஆர்ப்பாட்டம் போட்டு அப்பாவை அழைக்க முடியாமல் போனதன் பொறுப்பும் கூட, மகள் பற்றிய கவலையின்றி தற்கொலை செய்து கொண்ட தந்தையையே சாரும்.

  இது தொடர்பான செய்தி தட்ஸ்தமிழ்.காமில் வந்த போது அந்தப் பெண்ணின் போட்டோவையும் போட்டு செய்தி வெளியிட்டது அந்த இணையதளம். இதுவும் ஒரு அந்தரங்க விற்பனை தான்! அதற்கும் ஒரு செருப்படி?!

  இறுதியாக, இது போன்ற அந்தரங்க வீடியோக்கள், பெண்களை ஏமாற்றி எடுக்கப்படுவதற்கு காரணமாக இருப்பவர்களில், முதன்மையானவர்கள், இது போன்ற நீலப்படங்களை ஆர்வத்துடன் வாங்கிப் பார்க்கும் வாடிக்கையாளர்களும் தான். உண்மையில் இது போன்ற விஷயங்களில் தலைகுனிய வேண்டிய முதல் ஆட்கள் இவர்கள் போன்ற நுகர்வோர் தான். அவர்களையும் சேர்த்து கண்டிக்க வேண்டும்..

  [ஒண்ணுமில்ல, சீரியஸா ஒரு பதிவு எழுதி இருக்கீங்க, ஒரு சீரியஸ் பின்னூட்டம் கூட காணமா.. அதான் :))) ]

  ReplyDelete
 25. //ஒண்ணுமில்ல, சீரியஸா ஒரு பதிவு எழுதி இருக்கீங்க, ஒரு சீரியஸ் பின்னூட்டம் கூட காணமா.. அதான் :))) //

  வாங்க வாங்க பொன்ஸ் அக்கா, உங்களின் முதல் வருகைக்கு ரொம்ப நன்றி. உங்களின் இந்த பின்னூட்டத்துக்கு நல்ல பதில் சொல்ல ஆசை. ஆனால் சனிக்கிழமை சொல்கிறென்.

  ReplyDelete
 26. //எப்போ எழுத ஆரம்பிக்க போறீங்க?//

  ஹிஹி.. எனக்கே தெரியல :-)

  ReplyDelete
 27. அடிக்கலாம். ஆனா அந்த பொண்ணு லூசாமே ?

  ReplyDelete
 28. அப்பாக்களே!
  நானும் துபையில தான் இருக்கேன். இந்த மாதிரி துபை மக்களெல்லாம் கூடி கும்மியடிக்கும் போது நமக்கும் ஓலை அனுப்புங்கப்பா.ரொம்ப போரடிக்குது இங்க.

  ReplyDelete
 29. சும்ம கெடந்த சங்கை ஊதி கெடுத்த தங்கத் 'தம்பி' வாழ்க!

  -இவன்
  தம்பி ரசிகர் மன்றம்,
  டேரா கிளை,
  நைப் ரோட்,
  துபை

  ReplyDelete
 30. //ஹிஹி.. எனக்கே தெரியல :-)//

  அப்படி சொல்லக்கூடாது!!"3 வயசுலேர்ந்து எழுத ஆரம்பிச்சிட்டேனே!!!" அப்டீன்னு சொல்லுங்க

  ReplyDelete
 31. //அடிக்கலாம். ஆனா அந்த பொண்ணு லூசாமே ? //

  அப்படி சொல்லாதீங்க அனானி! அந்த விஷயம் விசரனையில் உள்ளது. அது உண்மையாயிருக்கும் பட்சத்தில் என்பதுதான் பதிவு.

  ReplyDelete
 32. //அப்பாக்களே!
  நானும் துபையில தான் இருக்கேன். இந்த மாதிரி துபை மக்களெல்லாம் கூடி கும்மியடிக்கும் போது நமக்கும் ஓலை அனுப்புங்கப்பா.ரொம்ப போரடிக்குது இங்க. //

  கவலப்படாதீங்க லொடுக்கு தம்பி! அடுத்த கும்மிக்கு நீங்க உண்டு.

  ReplyDelete
 33. //கவலப்படாதீங்க லொடுக்கு தம்பி! அடுத்த கும்மிக்கு நீங்க உண்டு. //

  ரொம்ப டாங்ஸ்.

  ReplyDelete
 34. என்னத்தான் எல்லாரும் தேடுறீங்களா?

  ReplyDelete
 35. //கேமரா மேன் said...
  என்னத்தான் எல்லாரும் தேடுறீங்களா?
  //
  ஏலே! எஸ் ஆயிடு. அறுத்துபுடுவானுக.

  ReplyDelete
 36. நான் செய்த எலிக்குட்டி சோதனையில் இங்கு பின்னூட்டமிட்டவர்தான் அந்த காமரா மேன் என்று தெரியவருகிறது.

  ReplyDelete
 37. //சும்ம கெடந்த சங்கை ஊதி கெடுத்த தங்கத் 'தம்பி' வாழ்க!

  -இவன்
  தம்பி ரசிகர் மன்றம்,
  டேரா கிளை,
  நைப் ரோட்,
  துபை //

  ஏற்கனவே கெட்டுபோன சங்குதான் கண்மனிகளே!!!

  ReplyDelete
 38. கேமிராமேன்/மணமகன்/எலி குட்டி/
  வந்துட்டீங்களாய்யா...யோவ் இது சீரியஸ் பதிவுய்யா..

  ReplyDelete
 39. சும்மா ஜாலியா பெனாத்திட்டு போயிட்டெ இருப்போம்ன்னு இருந்தவன, சீரியசா எழுது சீரியசா எழுதுன்னு கொட கொடன்னு கொடஞ்சியய்யா,

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))