பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 15, 2007

ஆனந்தவிகடனில் அபிஅப்பா......

எல்லாத்துக்கும் ஒரு கும்பிடு அடிச்சுக்கறேன் முதல்ல. 7 நாள் முன்ன 'தம்பி'யும்,கோபிநாத்தும், நானும் கிடேசன் பார்க்கில் நடத்திய சந்திப்ப பத்தி யாரும் மூச்சுவிடலை. நானும் ஒரு 7 நாள் கழிச்சு வந்து பாத்தா, தமிழ்மணம் சர்வ அமைதியா இருக்கு. சரி நாமலே அந்த சந்திப்ப பத்துன விஷயத்த உங்க எல்லார்கிட்டயும் பகிர்ந்துகலாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன்.

வெட்டிதம்பி,தம்பி மத்தமத்த எல்லாருக்கும் பதிவுக்கான மேட்டர் பஞ்சமே வரமாட்டங்குது. 5 பதிவ்ய் போட்ட எனக்கு அதுக்குள்ள பஞ்சம் தலய விரிச்சுபோட்டு குத்து டான்ஸ் போடுது. சரி இந்த விஷயத்த சந்திப்புல வச்சிட்டோம்ணா தம்பி நைசா ஏதுனா ஐடியா எடுத்துவுடுவார்ன்னு பிட்ட போட்டேன்.

அவரும் சில டிப்ஸ் எடுத்துவுட்டார். பெட்டர் காப்பி பேஸ்ட்தான்னு சொன்னார். எனக்கும் அது நல்லதாவே பட்டுச்சு.

காப்பி பேஸ்ட்ன்னு முடிவாகிபோச்சு. இதுல எதுக்கு அடுத்தவங்க மேட்டரு...நம்ப ஆனந்தவிகடன்ல எழுதினதையே போடலாமேன்னு அவர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் ''என்னங்க...எல்லேராம்,உஷாராமச்சந்திரன் மாதிரி ஆ.வி லல்லாம் எழுதுவீங்களா" ன்னு ஆச்சர்யமா கேட்டார்.

"அவங்க அளவு இல்லாட்டியும் ஓரளவு எழுதுவேன்" என்றேன். பின்பு "அதை எப்படி போடுவது, ஸ்கேன் செய்து போடலாமா?"ன்னு கேட்டேன்.அதற்கு அவர் " அதெல்லாம் வேண்டாம், ஜஸ்ட் டைப் செய்து போடுங்க..யாராவது நம்பலைன்னா பின்ன ஸ்கேன் செஞ்சு போடலாம்"ன்னு சொன்னார்.

நேத்திக்கு மூத்த பதிவர் செந்தழலார்கூட பேசிக்கிட்டு இருக்கும்போது"இதனால ஏதும் காப்பிரைட் பிரச்சனை வருமா?"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் " எதுவும் வராது தைரியமா போடுங்க"ன்னார்.

ஓக்கே... நா ஆ.வி ல எழுதுனதே ஒரு கதை. ஒரு நாள் எஸ். பாலசுப்ரமணியன் என்னிடம் கேட்டார். "நிறைய புத்தகம் வாங்குற பழக்கம் உள்ள உங்களுக்கு, எழுத்து மேல ஆசை அதிகம் இருக்கும்ன்னு தெறியுது. நீங்க ஏன் நம்ம ஆ.வில எழுதக்கூடாது"ன்னு கேட்டார்.

"நமக்கு ஏது சார் நேரம்"ன்னு மையமா சொல்லி வச்சேன். ஆனா அவர் பத்த வச்ச நெருப்பு மாத்திரம் தக தகன்னு எரிய ஆரம்பிச்சுது.

ஒரு நாள் உக்காந்து எழுதினேன். தம்பி சொன்ன மாதிரி அப்படியே கீழே கொடுத்திருக்கேன். படித்துவிட்டு பாராட்டனும் என்று சிரம் தாழ்ந்து கேட்டுக்கறேன்.
_____________________________________________________________1. மஞ்சள் தூள்---------1 பாக்கெட்
2. உப்பு--------------------2 பாக்
3. க. பருப்பு------------1/2 கிலோ
4.உ. பருப்பு-----------2 கிலோ
5.து. பருப்பு----------2 கிலோ

6. ப.பருப்பு-------------1/2 கிலோ
7.சன் பிளவர் ஆயில்---2 கிலோ
8. இதயம் நல்லெண்ணெய்----1 கிலோ
9.ரமணா'ஸ் சத்து மாவு ----2 பாக்கெட்
10. சூடம்-------------1 பாக்கெட்
11. பத்தி---------3 பாக்கெட்
12. குழம்பு மிளகாய் தூள்-----2 கிலோ
13. பேரீச்சம் பழம்-----கடைகாரர் சும்மா குடுத்தா!!

-------------------------------------------------------------------------------------------

இப்படியாக, நம்ம வீட்டு தங்கமனி கிச்சன் உள்ளயிருந்து சொன்னதை நான் ஹாலில் இருந்து அவசரத்துக்கு வேற பேப்பர் கிடைக்காததால் பக்கத்துல இருந்த புது ஆனந்த விகடன்ல சர புரன்னு எழுதிதள்ளிவிட்டு ஆனந்த விகடன்ல எழுதிய ஆனந்தத்தோட காதுல பஞ்ச வச்சிகிட்டு உக்காந்துட்டேன்.

"நா இன்னும் படிக்ககூட இல்ல, அதுங்காட்டிலும் இந்த பாவி மனுசன் செய்யுற அக்குறும்ப கேக்க ஆளேயில்லியா" ன்னு மெதுவா காதில விழுந்துது.

செந்தழுலாரே!! உங்க பேச்ச கேட்டிகிட்டு நாபாட்டுக்கு எழுதிட்டேன். காப்பிரைட் பிரச்சனை எதுவும் வந்துடாதே. ஆ.வி ஏதுனா கேஸ் கீஸ் போட்டுட போறாங்க. எதுக்கும் விக்கி பசங்க கிட்டெ கேட்டு கிளியர் செஞ்சுக்கனும்.

இதுல அந்த S. பாலசுப்ரமணியன் யாருன்னு கேக்களியே!!!! நா எப்போதும் போய் புக் வாங்கியார பெட்டி கடைகாரரு.

63 comments:

 1. சரியான காமெடி!

  :)))))))))))))))

  உடம்பு சரியில்லன்னாலும் உமக்கு நக்கல் போகலைய்யா!

  மக்களே நம்பாதிங்க!
  இவரு உண்மையிலயே பெரிய எலக்கியவாதிங்கோ!

  ReplyDelete
 2. காப்பி ரைட் இல்லை.. அநேகமா உங்களுக்கு இன்னிக்கு காப்பியே பிரச்சனை ஆகிடும்னு நினைக்கிறேன் :-D

  ReplyDelete
 3. சன் டீவியில் அபி அப்பா
  சொர்க்கத்தில் அபி அப்பா
  நிம்மதியில் அபி அப்பா
  வீராசாமியில் அபி அப்பா

  இந்த மாதிரி மொக்கைகள் தொடர்ந்தால் அல்குஸ் ஏரியாவுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்று எச்சரிக்கிறேன்.

  ReplyDelete
 4. வெவரமாத்தேன் கிளம்பி இருக்கீங்க! :)))

  நல்லாயிருங்கடே!

  ReplyDelete
 5. //காப்பி ரைட் இல்லை.. அநேகமா உங்களுக்கு இன்னிக்கு காப்பியே பிரச்சனை ஆகிடும்னு நினைக்கிறேன் :-D //

  ஐ ஜாலி, தங்கமனி காப்பிய பத்தி உங்களுக்கு தெறியல....

  ReplyDelete
 6. நம்ப ஃப்ரீக்குவென்ஸியா நீங்க?

  நல்லா இருக்கு ஆனந்த விகடன்ல எழுதுன உங்களோட படைப்பு!

  எங்க ஊர் பதிப்புகளில் உங்க படைப்பு வரலை!நல்ல வேளை நீங்களே பதிவாப் போட்டுட்டீங்க!

  :))

  ReplyDelete
 7. //இந்த மாதிரி மொக்கைகள் தொடர்ந்தால் அல்குஸ் ஏரியாவுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்று எச்சரிக்கிறேன்.//

  பதிலுக்கு உங்களுக்கு "வீராசாமி" சி.டி அனுப்பப்படும்...பர்வல்லயா!!!

  ReplyDelete
 8. //வெவரமாத்தேன் கிளம்பி இருக்கீங்க! :)))

  நல்லாயிருங்கடே!//

  வாங்க கொத்ஸ்,
  இனி மேட்டர் பஞ்சம் தீர்ந்துச்சு...நா குமுதம், குங்குமத்துல எழுதுனது எல்லாம் வரிசையா வுடலாம்.

  ReplyDelete
 9. //தம்பி சொன்ன மாதிரி அப்படியே கீழே கொடுத்திருக்கேன்.//

  செய்யிறதயும் செஞ்சிட்டு என்ன எம்மேல பழிய போடுறிங்க!

  ReplyDelete
 10. மொக்கை பதிவு போட்டாலும் ரொம்ப விவரமா போடுறாங்கப்பா...
  நமக்குத்தேன் matter ஒண்ணும் கிடைக்கமாட்டேங்குது.. நல்லா இருங்கப்பு :-)

  ReplyDelete
 11. //நம்ப ஃப்ரீக்குவென்ஸியா நீங்க?//
  வாங்க சிபி,
  நா ஒரு கத்துகுட்டீங்க...

  ReplyDelete
 12. //மொக்கை பதிவு போட்டாலும் ரொம்ப விவரமா போடுறாங்கப்பா...
  நமக்குத்தேன் matter ஒண்ணும் கிடைக்கமாட்டேங்குது.. நல்லா இருங்கப்பு :-)//

  வாங்க அப்பாவி குமாரி, எதுக்கும் தொடர்து 7 நாட்கள் ஒரே ரூமில் உக்காந்து சன் டி.வி பாருங்களேன்...100 பதிவு போடலாம்.

  ReplyDelete
 13. Talaivaa naan kumari illangnaa.. kumaran.. Sex : Male :-)

  //தொடர்து 7 நாட்கள் ஒரே ரூமில் உக்காந்து சன் டி.வி பாருங்களேன்...100 பதிவு போடலாம்.//

  kadisiyaa "Antha 7 naadkal" appadinu pathivu poda vasathiyaa irukum..

  ReplyDelete
 14. :))))
  ஊட்காந்து யோசிச்சீங்களா?
  படுத்துக்கிட்டு யோசிச்சீங்களா? ;-)

  ReplyDelete
 15. //Talaivaa naan kumari illangnaa.. kumaran.. Sex : Male :-)//

  சாரிங்க, அப்பாவி குமாரின்னு ஒருத்தவங்க இருக்காங்க...நா அவங்கன்னு நெனச்சுட்டேன்.

  ReplyDelete
 16. எஸ் பாலசுப்ரமணியத்தை அந்தப் பெட்டிக்கடையின் M D என்றும் சொல்லலாம் அல்லவா?

  சரி, இனி உங்கள் படைப்புக்கான திறனாய்வு!

  அருமையான படைப்பு. மங்களகரமாக மஞ்சள் தூளில் ஆரம்பித்து, பெரிய பருப்பு என்று தன்னை நிரூபித்த படைப்பாளி, மணம் கமழத் தொடர்ந்திருக்கிறார். இறுதியில் வியாபார உத்தியாக இலவசத்தையும் கொண்டு வந்திருப்பது அவருடைய தொழில்நுட்பத்திறனையும் காட்டுகின்றது என்றால் மிகையாகாது. இப்படி ஒரு படைப்பை தனியே படைக்க முடியாது என்பதால் தன் மனைவியின் ஆக்கபூர்வமான துணையைப் பெற்று அதைத் தனியேவும் குறிப்பிட்டிருப்பது பாங்கு!

  ReplyDelete
 17. //Talaivaa naan kumari illangnaa.. kumaran.. Sex : Male :-)//

  நீங்க கோவிச்சிக்காதிங்க அப்பாவி! அவருக்கு கண்ணுல காமாலை ராத்திரியாச்சின்னா அப்படிதான்.

  ReplyDelete
 18. //சாரிங்க, அப்பாவி குமாரின்னு ஒருத்தவங்க இருக்காங்க...நா அவங்கன்னு நெனச்சுட்டேன்.//

  அதெல்லாம் நம்பாதிங்க அப்பாவி!

  என்னய்யா ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கு உங்க பதிவுலன்னு கேட்டா அது என்னோட தப்பு இல்ல ப்ளாகர் தப்பு பண்ணுதுன்னு சொல்ற ஆள் அவரு.

  ReplyDelete
 19. அபி அப்பா... கலக்கல் பதிவு

  நமக்கு தான் இந்த மாதிரி மேட்டர் எல்லாம் கிடைக்க மாட்டேங்குது :-((

  இங்கயே பதிவு போட மேட்டர் இல்லாம பாலைவனமாத்தான் இருக்குது...

  நீங்க ஏன் ஒரு சிறுகதை எழுத கூடாது?

  உங்களுக்கு நல்லா எழுத வரும்னு நினைக்கிறேன்... முயற்சி பண்ணுங்களேன்!!!

  ReplyDelete
 20. //பதிலுக்கு உங்களுக்கு "வீராசாமி" சி.டி அனுப்பப்படும்...பர்வல்லயா!!! //

  இது ரொம்ப மோசங்க..ஒரு நண்பனை இப்படியா முதுகுல குத்துறது :)

  ReplyDelete
 21. ஹிம்.. நானும் உட்கார்த்து அப்புறமா படுத்துக்கிட்டு எல்லாம் யோசித்து பார்த்திருக்கேன்.... இம்புட்டு வெவரமா எழுதணுமின்னு தோணுனதே இல்லை....... :)

  ReplyDelete
 22. தலைப்புக் கலையை நல்லாக் கத்துக்கிட்ட கத்துக்குட்டி(?) வாழ்க. (நற..நற.. :-( )

  ReplyDelete
 23. சூப்பர் காமெடி சென்ஸ் உங்களுக்கு..

  அப்படின்னா நான் வீட்டு ஜன்னலில் பென்சிலால் கிறுக்கிட்டு "Windows" எழுதினேன் என்று பீத்திக்கலாமா? :-P

  ReplyDelete
 24. \\தம்பி சொன்ன மாதிரி அப்படியே கீழே கொடுத்திருக்கேன். படித்துவிட்டு பாராட்டனும் என்று சிரம் தாழ்ந்து கேட்டுக்கறேன்.\\

  :))))))))))))

  ReplyDelete
 25. \\7 நாள் முன்ன 'தம்பி'யும்,கோபிநாத்தும், நானும் கிடேசன் பார்க்கில் நடத்திய சந்திப்ப பத்தி யாரும் மூச்சுவிடலை.\\

  அய்யா சாமி நல்ல ஆளுயா நீங்க

  இப்படி மூச்சுவிடலை, மூச்சுவிடலைன்னு எல்லா பதிவுலையும் முதல்ல இத பத்திதான் போடுறீங்க...
  நிறுத்துங்க.
  தாங்காது...
  முடியல

  ReplyDelete
 26. //சாரிங்க// appadiyellam sollapadaathu... np

  ReplyDelete
 27. உங்கள் எழுத்துப் பணி இப்படி இன்னும் பல பத்திரிக்கைகளிலும் தொடர என் மனமார வாழ்த்துகிறேன்... நல்லாக் கிளப்புறாயங்கய்யா பீதிய

  ReplyDelete
 28. ஆனாலும் செம நக்கல்தான்...!!!

  வீராச்சாமியை பார்த்து எதுவும் மண்டைக்குள்ள குருவி பறக்கலியே ?

  யாருக்கோ சி.டி வேற அனுப்புறேன்னு சொன்னீங்களே ? கொரியர் கம்பெனிக்கு சூனியம் வெக்காதீங்க ப்ளீஸ்....

  உடம்பு நல்லாருக்கா ? வீட்டம்மா காப்பியையா குறைசொல்றீங்க ? அபியை விட்டு உங்க காதை புடுங்க சொல்றேன்..!!!

  ReplyDelete
 29. //இப்படி மூச்சுவிடலை, மூச்சுவிடலைன்னு எல்லா பதிவுலையும் முதல்ல இத பத்திதான் போடுறீங்க...
  நிறுத்துங்க.
  தாங்காது...
  முடியல
  //

  அட! ஆமாங்க! அதுவும் முதல் பத்தி(பாரா)லயே!

  ReplyDelete
 30. //:))))
  ஊட்காந்து யோசிச்சீங்களா?
  படுத்துக்கிட்டு யோசிச்சீங்களா? ;-) //

  அருட்பெருங்கோ வாங்க! படுத்துகிட்டுதான். அதான் 7 நாளா படுத்தி எடுத்துடுச்சே!!

  ReplyDelete
 31. // சரி, இனி உங்கள் படைப்புக்கான திறனாய்வு!//

  வாங்க பெனாத்தலாரே!!!
  திறனாய்வு செய்யும் அளவு நா என்னத்த எழுதிட்டேன்...க.பருப்பு, உ.பருப்பு ன்னு... இருந்தாலும் அந்த பாலசுப்ரமணியன் எவ்வளவு கடுப்பாகியிருப்பாரு என் மேல...

  ReplyDelete
 32. ////Talaivaa naan kumari illangnaa.. kumaran.. Sex : Male :-)//

  நீங்க கோவிச்சிக்காதிங்க அப்பாவி! அவருக்கு கண்ணுல காமாலை ராத்திரியாச்சின்னா அப்படிதான்//

  இல்ல தம்பி, என்னோட வணக்கம் பதிவுக்கே பதில் சொன்னவங்க அந்த அப்பாவி குமாரி

  ReplyDelete
 33. //ஆ.வி ஏதுனா கேஸ் கீஸ் போட்டுட போறாங்க//

  அட! நாங்க எதுக்குங்க கேஸ் போடப் போறோம்?

  :))

  ReplyDelete
 34. //என்னய்யா ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கு உங்க பதிவுலன்னு கேட்டா அது என்னோட தப்பு இல்ல ப்ளாகர் தப்பு பண்ணுதுன்னு சொல்ற ஆள் அவரு. //

  தம்பி, இதெல்லாம் படா பிளாக்கர்ஸ் ஊஸ் பன்ற வார்த்தை...அதுதான் ஹீ ஹீ....
  appaavi.hikanyakumari.com இதுதான் அந்த அப்பாவி...தெர்தா..

  ReplyDelete
 35. //அபி அப்பா... கலக்கல் பதிவு//

  வாங்க வெட்டி தம்பி, வருகைக்கு நன்றி.

  வசிஸ்டர் வாயால் பட்டமா?? எனக்கா?? இததான் இங்லீஸ்ல கலிகாலம்னு சொல்லுவாங்க!!!

  ReplyDelete
 36. ///இது ரொம்ப மோசங்க..ஒரு நண்பனை இப்படியா முதுகுல குத்துறது :) //

  மனிகண்டன் வாங்க! எங்க வீராசாமி என்னிக்குமே முதுவுல குத்துற ஆள் இல்லப்பா... ஸ்டிரயிட்டா முகம்தான்...எப்புடி???

  ReplyDelete
 37. //ஹிம்.. நானும் உட்கார்த்து அப்புறமா படுத்துக்கிட்டு எல்லாம் யோசித்து பார்த்திருக்கேன்.... இம்புட்டு வெவரமா எழுதணுமின்னு தோணுனதே இல்லை....... :)//

  வாங்க இராம், இப்புடி அடக்க ஒடுக்கமா பம்முரீங்களே!!!

  ReplyDelete
 38. //தலைப்புக் கலையை நல்லாக் கத்துக்கிட்ட கத்துக்குட்டி(?) வாழ்க. (நற..நற.. :-( )//

  வாங்க சேதுக்கரசி, எத்தன பதிவு படிக்கறோம். கத்துக்க மாட்டோமா பின்ன!!

  ReplyDelete
 39. //அப்படின்னா நான் வீட்டு ஜன்னலில் பென்சிலால் கிறுக்கிட்டு "Windows" எழுதினேன் என்று பீத்திக்கலாமா? :-P//

  வாங்க மை பிரன்ட்!!!!! தாராளமா....ஒரு பதிவு போட மேட்டர் கிட்டியாச்சு உங்களுக்கு.

  ReplyDelete
 40. அய்யய்யோ என்னோட பின்னூட்டத்தை காணோம்.

  - செந்தழல் ரவி

  ReplyDelete
 41. //அய்யா சாமி நல்ல ஆளுயா நீங்க//

  வாங்க கோபிதம்பி!!!! எப்டி இருக்கீங்க. கிடேசன் பார்க் மீட்டிங் உங்களுக்கும் ஒத்துக்கலயா? 2 நாளா ஜுரமாமே? இப்ப எப்டி இருக்கு. டேக் கேர்.

  ReplyDelete
 42. //:-)))//
  என்ன சிரிப்பு. செந்தில் குமரன்..ஒரு சீரியஸ் பதிவு போட முடியலயே!!!!!!!!!

  ReplyDelete
 43. //உங்கள் எழுத்துப் பணி இப்படி இன்னும் பல பத்திரிக்கைகளிலும் தொடர என் மனமார வாழ்த்துகிறேன்... நல்லாக் கிளப்புறாயங்கய்யா பீதிய //

  வாங்க வாங்க தேவ்ஐயா!!!! முத முதலான வருகை. மிக்க நன்றி!!!

  ReplyDelete
 44. //ஆனாலும் செம நக்கல்தான்...!!!

  வீராச்சாமியை பார்த்து எதுவும் மண்டைக்குள்ள குருவி பறக்கலியே ?

  யாருக்கோ சி.டி வேற அனுப்புறேன்னு சொன்னீங்களே ? கொரியர் கம்பெனிக்கு சூனியம் வெக்காதீங்க ப்ளீஸ்....

  உடம்பு நல்லாருக்கா ? வீட்டம்மா காப்பியையா குறைசொல்றீங்க ? அபியை விட்டு உங்க காதை புடுங்க சொல்றேன்..!!//

  வாங்க வாங்க செந்தழலாரே!!!
  யாருக்கு நம்ம தம்பிக்குதான். அவருகிட்ட அந்த பாணத்த தடுக்கிற வல்லவன் சி.டி இருக்குன்னு எனக்கு தெரியுமே!!!

  ReplyDelete
 45. //அட! ஆமாங்க! அதுவும் முதல் பத்தி(பாரா)லயே!//

  கவுத்திபுட்டியே தலைவா!!!

  ReplyDelete
 46. ////ஆ.வி ஏதுனா கேஸ் கீஸ் போட்டுட போறாங்க//

  அட! நாங்க எதுக்குங்க கேஸ் போடப் போறோம்?

  :))//

  ரொம்ப டேங்ஸுங்கோ!!!

  ReplyDelete
 47. வந்திருச்சு.

  ReplyDelete
 48. அபிஷ்டு, ஷண்டாளா, க்ராதகா

  ReplyDelete
 49. நாப்பத்தொம்போது, இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் ஷண்டாளா !!! இரு இரு உனக்கு ஷூனியம் வெக்கறேன்.

  ReplyDelete
 50. //நாப்பத்தொம்போது, இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் ஷண்டாளா !!! இரு இரு உனக்கு ஷூனியம் வெக்கறேன். //

  வாங்க அனானி தம்பி,
  எனக்கு முதல் 50 போட்டதுக்கு நன்றி!!
  உங்க ஷுனியம் எனக்கு எல்லா வளமும் கொடுக்கட்டும் என கடவுள் இப்போதான் மெசெஜ் அனுப்பினார்.

  ReplyDelete
 51. \\வாங்க அனானி தம்பி,\\

  எல்லரையும் தம்பி, தம்பின்னு சொல்லியே மொத்தம தம்பிக்கு சூன்னியம் வைச்சிட்டிங்க....
  வாழ்க!!!!

  ReplyDelete
 52. //எல்லரையும் தம்பி, தம்பின்னு சொல்லியே மொத்தம தம்பிக்கு சூன்னியம் வைச்சிட்டிங்க....
  வாழ்க!!!!//

  கோபிதம்பி,
  இது தஞ்சாவூரு பழக்கம் வாழ்க தம்பி வாழ்க

  ReplyDelete
 53. என் பையன் 2 வயசுலயே தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இண்டியா இப்படி எழுதி தள்ளி இருக்கான் அதெல்லாம் நாங்க வெளிச்சம் போட்டு சொல்றதில்லன்னு ஒரு தன்னடக்கமா இருக்கோம். நீங்க என்னடான்னா?..
  சரி சரி. மறந்தாப்புல அபி ஸ்கூல் நோட்டுல எழுதிடாந்தீங்க. பாவம் .

  ReplyDelete
 54. /////அவருகிட்ட அந்த பாணத்த தடுக்கிற வல்லவன் சி.டி இருக்குன்னு எனக்கு தெரியுமே!!!////

  இந்த இரண்டு பாணங்களும் வாணத்தில் மோதி புஸ் போக.

  ReplyDelete
 55. //என் பையன் 2 வயசுலயே தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இண்டியா இப்படி எழுதி தள்ளி இருக்கான் அதெல்லாம் நாங்க வெளிச்சம் போட்டு சொல்றதில்லன்னு ஒரு தன்னடக்கமா இருக்கோம். நீங்க என்னடான்னா?..
  சரி சரி. மறந்தாப்புல அபி ஸ்கூல் நோட்டுல எழுதிடாந்தீங்க. பாவம் . //

  என்னய விட பெரிய எழுத்'தாளர்' போலிருக்கு.பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்.

  அபி புக்ல நா எழுத அவ இடம் வச்சதேயில்லை.(எவ்வளவு கிறுக்கறது)

  ReplyDelete
 56. ஆஹா இஞ்சின் சூடு பிடிச்சிடுச்சா?

  ReplyDelete
 57. //தாராளமா....ஒரு பதிவு போட மேட்டர் கிட்டியாச்சு உங்களுக்கு.//

  ஆஹா.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரண களமா ஆகிறதுக்கு எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க? :-P

  ReplyDelete
 58. //ஆஹா.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரண களமா ஆகிறதுக்கு எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க? :-P //

  ஒரு குரூப்பே இருக்கோம்.

  ReplyDelete
 59. //கலக்குங்ணோவ் :))) //

  இப்பதான் வாரீங்களா இந்த பதிவுக்கு!!! சரியாபோச்சு. வந்த விருந்தளிங்க கூட்டத்துல முக்கியமான அபிகுட்டி அத்தைய தேட மறந்துட்டேனே!!! சாரிம்மா

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))