பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 11, 2007

சிறு கதை - இதுதான் அழகு!!

பணி நிமிர்த்தமாக வெளி நாட்டில் இருக்கிறான் அவன். இன்று காலை முதலே மனது சஞ்சலமாக உணர்ந்தான். காதலித்து கல்யாணம் செய்து கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு இது 8 வது மாதம். கொஞ்ச நாளாகவே இவனுக்கு பரபரப்பு அதிகமாகவே இருக்கிறது. தினமும் போன் செய்ய தவறுவதில்லை. முதல் குழந்தைக்கு கூடவே இருந்து ஆறுதலாக இருந்து விட்டு இப்போ இரண்டாவதுக்கு தூரத்தில் இருப்பது உறுத்தலாகவே இருக்கிறது அவனுக்கு.

சரி போன் செய்திடலாம் என போன் செய்தான்.

ஹலோ.....செல்லம் எப்டி இருக்க?

ம், நீங்க எப்டி இருக்கீங்க?

நான் கிடக்கட்டும், நீ?

நல்லா, நேத்து ராத்திரி செம உதை

வலிக்குதாடா ரொம்ப, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்

நானும் தான், அவ வயித்துல இருக்கும் போது நீங்க கிட்டயே இருந்தீங்க, தலை சீவி பொட்டு வச்சு கோயிலுக்கெல்லாம் அழச்சுட்டு போவீங்க, இப்போ நான் எப்டி இருக்கேன் தெரியுமா, என்னை பார்க்க எனக்கே பிடிக்கலை அசிங்கமா ஃபீல் பண்றேன்.

அப்டி சொல்லாதடா, நானே எவ்ளோவ் மனசு கஷ்டத்துல இருக்கேன் தெரியுமா..நீ தைரியமா இருடா...

8 கிலோ வெயிட் கூடியிருக்கு, வாட்டர் லெவல் நல்லாயிருக்குங்க..

ம் சரி, மூவிங் எப்டி இருக்குடா..

மூத்தது மாதிரியே சுட்டியா இருக்கும் போலயிருக்கு. காலை உதைச்சு நீந்துவது மாதிரி ஒரு ஃபீலிங்...கால் வீங்கி போய் இருக்கு, கொஞ்சம் சோகையா இருக்கு, முகம் வெளுத்து இருக்குங்க

சரி போனை வயத்துல வச்சுக்கடா செல்லம்..

க்கூம்..விஜய் படம் ரொம்ப பாக்காதீங்க, எதுவாயிருந்தாலும் எனக்கே குடுங்க..நான் குடுத்துகிறேன் அதுக்கு..

அழுத்தமாக பரிமாரிக்கப்பட்டது........ கண்ணீருடன் போன் துண்டிக்கப்பட்டது.

பரந்து போன சுருள் முடி முகத்தில் விழ சரிந்த வயிறு, வெளுத்த முகம், அதில் தெரியும் பிரகாசம், வீங்கிய கால்கள், கையை தரையில் ஊன்றி எழுந்து ஆடி ஆடி நடக்கும் தன் மனைவியின் அந்த அழகை நினைத்து கொண்டே அவன் அன்றைய பொழுதை ஆரம்பித்தான். உலகத்திலேயே கர்பிணி பெண்களே அழகு என நினைத்துக்கொண்டான்.

64 comments:

 1. அபி அப்பா, வீட்ல ஏதாவது விசேஷமா?

  ReplyDelete
 2. என்ன டுபுக்கு மாதிரி நீங்களும் திடீருனு பீலீங்க்ஸ் உட ஆரம்பிச்சிட்டீங்க....

  வீட்ல ஏதாவது விசேஷமா? :-)

  ReplyDelete
 3. //Chinna Ammini said...
  அபி அப்பா, வீட்ல ஏதாவது விசேஷமா? //

  :-)))))

  ReplyDelete
 4. //Appaavi said...
  என்ன டுபுக்கு மாதிரி நீங்களும் திடீருனு பீலீங்க்ஸ் உட ஆரம்பிச்சிட்டீங்க....

  வீட்ல ஏதாவது விசேஷமா? :-) //

  :-)))))))

  ReplyDelete
 5. என்ன வரிசையா எல்லோரும் கேக்குறோம்.. பதில் சொல்லாம ஸ்மைலி போடுறீங்க..

  அப்போ விசேஷம்தான் :))

  சென்ஷி

  ReplyDelete
 6. //சென்ஷி said...
  என்ன வரிசையா எல்லோரும் கேக்குறோம்.. பதில் சொல்லாம ஸ்மைலி போடுறீங்க..

  அப்போ விசேஷம்தான் :))

  சென்ஷி //

  :-)))))))))))

  ReplyDelete
 7. ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே..

  -------
  எனக்காக சிரமப்படவேண்டாம்.

  அபிஅப்பா said...
  :-)))))))))))
  இது தானே பதில்.

  {பார்த்து சிரிப்பான் போடும் பட்டன் வீணாய்ப் போயிடப்போது}

  ReplyDelete
 8. //அபிஅப்பா said...
  :-)))))))))))
  இது தானே பதில்.//

  சரிங்க முத்துலெஷ்மி! இருந்தாலும் சிரிப்பான் போட்டுக்கறேன்:-)))

  ReplyDelete
 9. இந்த கொடுமைய கேக்க ஆளில்லயா..

  எப்பவும் காமெடியா எழுதி நம்மள சிரிக்க வச்ச மனுசன் இப்போ பதில சொல்லாம தனக்குத்தானே சிரிச்சுக்கிட்டு இருக்காரே.. :)

  ஆசை ஆசையா வளத்தேனே ராசா... இப்படி ஸ்மைலியா போட்டுட்டு இருக்கியே ராசா....
  :)

  சென்ஷி

  ReplyDelete
 10. இன்னும் ரெண்டு அழகு எங்க ??

  உஸ்..அழகு எழுதுற ஆளுங்கள மெரட்டி வாங்கவேண்டியுருக்கு

  சீக்கிரம் எழுதுங்க அபிஅப்பா

  ReplyDelete
 11. //சென்ஷி said...
  இந்த கொடுமைய கேக்க ஆளில்லயா..

  எப்பவும் காமெடியா எழுதி நம்மள சிரிக்க வச்ச மனுசன் இப்போ பதில சொல்லாம தனக்குத்தானே சிரிச்சுக்கிட்டு இருக்காரே.. :)

  ஆசை ஆசையா வளத்தேனே ராசா... இப்படி ஸ்மைலியா போட்டுட்டு இருக்கியே ராசா....
  :)

  சென்ஷி //

  சென்ஷி தம்பிக்காக வெள்ளிக்கிழமை லீவ் அன்னிக்கு உக்காந்து ஒரு சூப்பர் காமடி பதிவு போட்டுடலாம், ஓக்கேவா?:-)

  ReplyDelete
 12. கே..

  ஓக்க்கே...

  அதுக்கு ஸ்மைலி போடுற வேலைய நாங்க பாத்துக்கறோம்..

  இப்ப இந்த ஸ்மைலிக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்லுங்க


  சென்ஷி

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்..

  இன்னும் யார் யாருக்கெல்லாம் சவால் காத்துகிட்டு இருக்கோ தெரியலியே...

  :-))))))))

  ReplyDelete
 14. //அய்யனார் said...
  இன்னும் ரெண்டு அழகு எங்க ??

  உஸ்..அழகு எழுதுற ஆளுங்கள மெரட்டி வாங்கவேண்டியுருக்கு

  சீக்கிரம் எழுதுங்க அபிஅப்பா//

  அய்யனாரே! கொஞ்ச கொஞ்சமா எழுதலாமா?

  ReplyDelete
 15. //சிறு கதை - இதுதான் அழகு!!" //

  இதுவும் ஒரு வகை அழகு.... :-)

  ReplyDelete
 16. ஹைய்யா... அபி பாப்பாவுக்கொரு தம்பி பாப்பா பொறக்க போகுது..... :)

  ////Chinna Ammini said...
  அபி அப்பா, வீட்ல ஏதாவது விசேஷமா? //

  :-)))))//

  :))))

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் அபி அப்பா!

  ReplyDelete
 18. //என்ன வரிசையா எல்லோரும் கேக்குறோம்.. பதில் சொல்லாம ஸ்மைலி போடுறீங்க..

  அப்போ விசேஷம்தான் :))

  சென்ஷி //

  இது இவ்வளவு நாளா தெரியாதா உமக்கு....

  சரி இன்னொரு விசயம் விரைவில் அவரு இந்தியா போகிறார்...

  ReplyDelete
 19. //சரி இன்னொரு விசயம் விரைவில் அவரு இந்தியா போகிறார்... //

  அட உண்மையாவா..

  அப்போ கிடேசன் பார்க் மீட்டிங் எங்கன்னு சொல்லுங்கப்பு..

  சென்ஷி

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் அபி அப்பா

  :))))))))))

  ReplyDelete
 21. நீங்க மட்டும்தான் சசிரிப்பான் போடுவீங்களா? நாங்கலும் நல்லாவே போடுவோம்..

  ReplyDelete
 22. இந்த பதிவை எப்போதோ எதிர் பார்த்தேண். இப்போதான் வெளி வந்திருக்கு..

  கொத்ஸ் & தம்பி ஆரம்பிச்ச இந்த விளையாட்டில் நிறைய உண்மைகள் வெளியாகும் போலிருக்கே?? ;-)

  ReplyDelete
 23. 'குட்டி'க் கதை அழகு. எல்லாரும் கேக்கிற கேள்விக்கு சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க... சிரிக்க வேண்டியதுதான். பின்னே...வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. மற்ற அழகுகளை சொல்வதுக்கு அடுத்த பதிவா?

  அதுவும் சிறுகதைகளுடன் வெளியாகுமா?

  காமெடி கதைகளா? செண்டிமெண்டலா?

  பதிவு இன்றைக்கேவா? இல்லை நாளைக்கா?

  (உங்களை பார்த்ததும் நிறைய கேள்விகள் தோணுது.. ஹீஹீ)

  ReplyDelete
 25. // தேவ் | Dev said...
  :)))))//

  நன்றி தேவ்!

  ReplyDelete
 26. // மனதின் ஓசை said...
  வாழ்த்துக்கள்..

  இன்னும் யார் யாருக்கெல்லாம் சவால் காத்துகிட்டு இருக்கோ தெரியலியே...//

  உள்ளூர் ஆளுங்க கிடையாது, எல்லாம் பாரின் தான்:-)))

  ReplyDelete
 27. //இதுவும் ஒரு வகை அழகு.... :-) //
  //இது இவ்வளவு நாளா தெரியாதா உமக்கு....

  சரி இன்னொரு விசயம் விரைவில் அவரு இந்தியா போகிறார்...//

  வாங்க புலியாரே! உகாண்டா எப்படி இருந்துச்சு?

  புலி 1 வாரம் இல்லாம தமிழ்மணமே வெறுமையா இருக்குப்பா:-))

  ReplyDelete
 28. // இராம் said...
  ஹைய்யா... அபி பாப்பாவுக்கொரு தம்பி பாப்பா பொறக்க போகுது..... :)

  ////Chinna Ammini said...
  அபி அப்பா, வீட்ல ஏதாவது விசேஷமா? //

  :-)))))//

  :)))) //

  பார்ரா...பார்ரா பார்ரா...ஓவர் ம்புய்யா உமக்கு:-))

  ReplyDelete
 29. //Hariharan # 03985177737685368452 said...
  வாழ்த்துக்கள் அபி அப்பா//

  வாங்க ஹரிஹரன், முதல் வருகை மிக்க சந்தோஷம். வாழ்த்துக்கு நன்றி:-))

  ReplyDelete
 30. //என்னை பார்க்க எனக்கே பிடிக்கலை அசிங்கமா ஃபீல் பண்றேன்// ஆண் குழந்தை மாதிரி தெரியுது ;-))

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. எங்க எல்லாதையும் கொசுவத்தி சுத்த வச்சிடீங்களே...
  அழகோ அழகு அப்பா..

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள், நல்ல வேளை எங்க சிரிச்சுட்டு பதில் சொல்லாம விட்டுருவாரோ ன்னு நினைச்சேன், நாங்களும் விட்டுருவமா?,

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள்! இருங்க நானும் சிரிப்பானிக்கிறேன் :-))))

  //காதலித்து கல்யாணம் செய்து கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு//
  //முதல் குழந்தைக்கு கூடவே இருந்து ஆறுதலாக இருந்து விட்டு //
  //தலை சீவி பொட்டு வச்சு கோயிலுக்கெல்லாம் அழச்சுட்டு போவீங்க,//
  //அழுத்தமாக பரிமாரிக்கப்பட்டது........ கண்ணீருடன் போன் துண்டிக்கப்பட்டது.//
  //பரந்து போன சுருள் முடி முகத்தில் விழ சரிந்த வயிறு, வெளுத்த முகம், அதில் தெரியும் பிரகாசம், வீங்கிய கால்கள், கையை தரையில் ஊன்றி எழுந்து ஆடி ஆடி நடக்கும் தன் மனைவியின் அந்த அழகை //

  அத்தனையும் அழகு!!! உங்கள் காதல் வாழ்வு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  உங்கள் மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலி! நீங்களும்தான் :-)

  அபிக்கும், அபி தம்பிக்கும் எங்களது ஆசிகள்.

  ReplyDelete
 34. முன்பே ஒரு பின்னூட்டத்தில் (பேரை மாத்திக்கிறேன் ?) "அபி தம்பி அப்பா" என்று எழுதியிருந்தாரே !
  :-)

  ReplyDelete
 35. அபி பாப்பா, அபி அம்மா, அபி அப்பா
  இந்தாங்க எல்லாரும் புடிங்க வாழ்த்துக்களை

  ReplyDelete
 36. அனுபவச்சி எழுதிருக்கீங்க :-)))

  ReplyDelete
 37. உங்களின் பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் படித்ததும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
  அபி அப்பா மாதிரி அடுத்த NEWBLOG பெயர் என்ன?

  அடுத்த குழந்தையவும் எங்களுக்குப் பிடித்த அபிபோல((உங்களை போல் அல்ல) புத்திசாலியாய் வளர்க்க வாழ்த்துக்கள்!

  //இராம் said...
  ஹைய்யா... அபி பாப்பாவுக்கொரு தம்பி பாப்பா பொறக்க போகுது
  //
  ராயலு அதெப்படி தம்பிப் பாப்பானு சொல்லுர?

  தங்கமணிகிட்ட அடுத்து போசும்போது அனைத்துப் பின்னூட்டங்களைப் பற்றியும் சொல்லுங்க சந்தோஷப்படுவாங்க!

  உங்களின் பதிவு- இதுதான் அழகு!

  அன்புடன்...
  சரவணன்.

  ReplyDelete
 38. அபி அப்பா கதை ரொம்ப நல்லா தான் இருக்கு ;-)))

  ஆனா இந்த பின்னூட்டங்களை பார்க்கும் போது தான் என்ன சொல்லறதுன்னு ஒன்னுமே புரியல

  ReplyDelete
 39. \\அய்யனார் said...
  இன்னும் ரெண்டு அழகு எங்க ??

  உஸ்..அழகு எழுதுற ஆளுங்கள மெரட்டி வாங்கவேண்டியுருக்கு

  சீக்கிரம் எழுதுங்க அபிஅப்பா\\

  ம்ம்ம்....சீக்கிரம்........( பதிவும் சேர்த்து தான் );-))))

  ReplyDelete
 40. \\.:: மை ஃபிரண்ட் ::. said...
  பதிவு இன்றைக்கேவா? இல்லை நாளைக்கா?

  (உங்களை பார்த்ததும் நிறைய கேள்விகள் தோணுது.. ஹீஹீ)\\

  சாரி மை ஃபிரண்ட்

  கிடேசன் பார்க் வேலைகள் நிறைய இருக்கின்றது. அதுவும் புதிதாக வந்துள்ள எங்க குலச்சாமி அய்யனாருக்கு பதிவி எல்லாம் வேற பிரிச்சி கொடுக்காணும். அதனால சனிக்கிழமை தான் பதிவு வரும் என்பதை கிடேசன் பார்க் மன்றத்தின் சார்ப்பாக தெரிவித்து கொள்கிறேன்

  ReplyDelete
 41. //ப்ரசன்னா said...
  வாழ்த்துக்கள் அபி அப்பா

  :))))))))))//

  நன்றி பிரசன்னா:-)

  ReplyDelete
 42. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  இந்த பதிவை எப்போதோ எதிர் பார்த்தேண். இப்போதான் வெளி வந்திருக்கு..

  கொத்ஸ் & தம்பி ஆரம்பிச்ச இந்த விளையாட்டில் நிறைய உண்மைகள் வெளியாகும் போலிருக்கே?? ;-)//

  சந்தாஷத்தி பாரேன் இந்த பிள்ளைக்கு, நன்றி மைஃபிரண்ட்:-)))

  ReplyDelete
 43. //தமிழ்நதி said...
  'குட்டி'க் கதை அழகு. எல்லாரும் கேக்கிற கேள்விக்கு சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க... சிரிக்க வேண்டியதுதான். பின்னே...வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி தமிழ்நதி! "குட்டி"கதை...இதுகூட நல்லாயிருக்கு:-)

  ReplyDelete
 44. //காமெடி கதைகளா? செண்டிமெண்டலா?

  பதிவு இன்றைக்கேவா? இல்லை நாளைக்கா?//

  மைஃபிரண்ட், நாளைக்கே போடலாம், அதுவும் காமடியாக:-)))

  ReplyDelete
 45. // ஜெஸிலா said...
  //என்னை பார்க்க எனக்கே பிடிக்கலை அசிங்கமா ஃபீல் பண்றேன்// ஆண் குழந்தை மாதிரி தெரியுது ;-))

  வாழ்த்துக்கள்.//

  நன்றி சகோதரி ஜெஸிலா, ஆணாய் பிறந்தால் சந்தோஷம், பெண்ணாய் பிறந்தால் ரொம்ப சந்தோஷம்:-))

  ReplyDelete
 46. //இலவசக்கொத்தனார் said...
  வாழ்த்துக்கள் //

  மிக்க நன்றி கொத்ஸ்:-)

  ReplyDelete
 47. // மங்கை said...
  எங்க எல்லாதையும் கொசுவத்தி சுத்த வச்சிடீங்களே...
  அழகோ அழகு அப்பா.. //

  மிக்க நன்றி சகோதரி மங்கை:-))

  ReplyDelete
 48. //செந்தில் said...
  வாழ்த்துக்கள், நல்ல வேளை எங்க சிரிச்சுட்டு பதில் சொல்லாம விட்டுருவாரோ ன்னு நினைச்சேன், நாங்களும் விட்டுருவமா?, //

  :-))))))))

  ReplyDelete
 49. //அத்தனையும் அழகு!!! உங்கள் காதல் வாழ்வு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  உங்கள் மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலி! நீங்களும்தான் :-)

  அபிக்கும், அபி தம்பிக்கும் எங்களது ஆசிகள்.//

  வாங்க ஸ்ரீதர் வெங்கட், மிக்க நன்றி மிக்க நன்றி! மிக்க நன்றி! :-))))))

  ReplyDelete
 50. //பாலராஜன்கீதா said...
  முன்பே ஒரு பின்னூட்டத்தில் (பேரை மாத்திக்கிறேன் ?) "அபி தம்பி அப்பா" என்று எழுதியிருந்தாரே !
  :-) //

  ஆமாம் சார், கொத்ஸ் பதிவில் போட்டிருந்தேன், கூடவே கொத்ஸ் குழம்பட்டும்ன்னு போட்டிருந்தேன்:-)))

  ReplyDelete
 51. //Chinna Ammini said...
  அபி பாப்பா, அபி அம்மா, அபி அப்பா
  இந்தாங்க எல்லாரும் புடிங்க வாழ்த்துக்களை //

  மிக்க நன்றி:-))))

  ReplyDelete
 52. //சேதுக்கரசி said...
  அனுபவச்சி எழுதிருக்கீங்க :-)))//

  நன்றி:-))

  ReplyDelete
 53. //அடுத்த குழந்தையவும் எங்களுக்குப் பிடித்த அபிபோல((உங்களை போல் அல்ல) புத்திசாலியாய் வளர்க்க வாழ்த்துக்கள்!//

  சரா! காலை வாராதப்பா:-)) உங்களைப்போல தம்பிக இருக்கும் போது என்ன கவலை, கண்டிப்பாக நல்லா வள்ர்ப்போம்!

  //ராயலு அதெப்படி தம்பிப் பாப்பானு சொல்லுர?

  தங்கமணிகிட்ட அடுத்து போசும்போது அனைத்துப் பின்னூட்டங்களைப் பற்றியும் சொல்லுங்க சந்தோஷப்படுவாங்க!

  உங்களின் பதிவு- இதுதான் அழகு!

  அன்புடன்...
  சரவணன். //

  அப்பப்ப படிச்சுடுவாங்க சரா:-)

  ReplyDelete
 54. //சாரி மை ஃபிரண்ட்

  கிடேசன் பார்க் வேலைகள் நிறைய இருக்கின்றது. அதுவும் புதிதாக வந்துள்ள எங்க குலச்சாமி அய்யனாருக்கு பதிவி எல்லாம் வேற பிரிச்சி கொடுக்காணும். அதனால சனிக்கிழமை தான் பதிவு வரும் என்பதை கிடேசன் பார்க் மன்றத்தின் சார்ப்பாக தெரிவித்து கொள்கிறேன் //

  கிடேசன் பார்க் தல தம்பிக்கும், செயலர் கோபிக்கும், கொஞ்சமா எனக்கும் குலசாமி அய்யனார் படையல் வைக்க முடிவெடுத்துள்ளது...(அதனால நாளை காமடி பதிவுல போட நெறைய மேட்டர் கிடைக்கும்)

  ReplyDelete
 55. அண்ணே, இது உங்க டைம், எவ்வளவு ஸ்மைலி வேணும்னாலும் போட்டுக்கங்க, நாங்க எல்லோரும் ஒண்ணா சேர்ந்து உங்களோட அடுத்த பதிவுக்கு ஸ்மைலி போட்டு தாக்குவம்ல (கண்ணுங்களா, கொஞ்சமாவது காப்பாத்துங்க, கவுத்துடாதிங்க!)

  ReplyDelete
 56. //அப்பப்ப படிச்சுடுவாங்க சரா:-)//

  அப்படியா? சொல்ல்ல்லவே இல்ல..

  //கிடேசன் பார்க் தல தம்பிக்கும், செயலர் கோபிக்கும், கொஞ்சமா எனக்கும் குலசாமி அய்யனார் படையல் வைக்க முடிவெடுத்துள்ளது...//

  அபி அம்மா...

  இத படிங்க முதல்ல!

  இந்த கிடேசன் பார்க் படையல்ல பல மர்மங்கள் புதஞ்சு இருக்கு. என்னமோ 'கொஞ்சமா'வாமே...

  ReplyDelete
 57. //அபி அம்மா...

  இத படிங்க முதல்ல!

  இந்த கிடேசன் பார்க் படையல்ல பல மர்மங்கள் புதஞ்சு இருக்கு. என்னமோ 'கொஞ்சமா'வாமே... //

  ஸ்ரீதர்! மேலோட்டமா படிச்சுட்டு போறவங்களை கூப்பிட்டு வச்சு போட்டு குடுத்தா என் பாடு என்ன ஆகும். கொஞ்சமான்னா பெப்ஸி மட்டும்ன்னு அர்த்தம்ன்னு அவங்களுக்கு தெரியும்ப்பா தெரியும்:-))

  ReplyDelete
 58. வாழ்த்துக்கள் அபி அப்பா! ரொம்ப அழகா அனுபவச்சி உணர்ச்சி பூர்வமா எழுதியுருக்கீங்க! அழகுங்க!

  ReplyDelete
 59. mmmmmm, Daily I am coming and seeing. No writing after this pathivu. Too busy? aani romba irukkaa? illai went to home?

  ReplyDelete
 60. //கீதா சாம்பசிவம் said...
  mmmmmm, Daily I am coming and seeing. No writing after this pathivu. Too busy? aani romba irukkaa? illai went to home//

  ஆமா மேடம்! இன்னிக்கு சரியான ஆணி, வீட்டுக்கு போகவே நைட் 10 ஆகும் போல இருக்கு. இன்னும் இந்தியா போகலை. ஜூன் முதல் வாரம் போகிறேன்:-))

  ReplyDelete
 61. வாழ்த்துக்கள் அண்ணா...!!!

  :)))))))))))))))))))))))))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))