பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 7, 2007

( உ ஊ )என்ன அழகு எத்தனை அழகு!!

அழகுன்னா இன்னா, கொஞ்சம் வந்து செப்புன்னு கொத்ஸ், "தம்பி"ய கேக்க தம்பி என்னய கேக்க நான் இப்போ உங்க முன்னால நிக்கிறேன். 6 அழகுதான் சொல்லனுமான்னு கேக்க "எத்தனை வேணுமின்னாலும் சொல்லுங்க"ன்னு தம்பி சொல்லிட்டார். சரி தோனியது அத்தனையும் பகிர்ந்துகலாம்ன்னு ஐடியா.

இடம்:

எனக்கும் தங்கமணிக்கும் நீண்ட நாள் ஆசை, நம் இஷ்டத்துக்கு ஒரு வீடு கட்டனும்ன்னு, எங்களுக்கே எங்களுக்காய் அழகாய் கட்ட ஆசை. 6 மாதம் முன்பு அது நிறைவேறியது. கட்டி முடித்த பிறகு தான் நான் போனேன். அதுவரை போட்டோ கூட அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.

வீட்டுக்கு முன் ஒரு சின்ன கிரவுண்ட், அந்த வழியே போனா நேருக்கு நேர் வீட்டை பார்க்கலாம். அந்த வ்ழியா போனேன். 100 மீட்டர் முன்பே வண்டியில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். முதன் முதலாக அப்போ தான் பார்க்கிறேன். நான் இத்தனை வருஷம் கனவில் கண்ட மாதிரி அச்சு அசலாக அப்படியே இருந்தது. கிட்ட நெருங்க நெருங்க பட படப்பு. பெயிண்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது.

கிட்ட போய் மெதுவா தொட்டேன். உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ந்தது மாதிரி உணர்வு. "அப்பா"ன்னு அது என்னை கூப்பிடுவது மாதிரி ஒரு பிரம்மை. மறு நாள் கிரகபிரவேசம்.

வீட்டில் எல்லா இடமும் எனக்கு பிடிக்கும்.மாடிப்படியில் உக்காந்துப்பேன், வாசலில், மொட்டை மாடியில், பால்கனி இப்படி எல்லா இடத்திலும் உக்காந்துப்பேன். வெறும் தரையில் படுத்துப்பேன்.

இப்போது நான் ரொம்ப மிஸ் பண்ணுவது என் இந்த அழகைதான்.

மாதம்:

மாதங்களில் எனக்கு பிடித்த அழகான மாதம் ஐப்பசி தான். எனக்கு மட்டுமல்ல கிட்டத்தட்ட 75%மயிலாடுதுறைவாசிகளுக்கு பிடித்த அழகான மாதமே அதுதான். முதல் தேதியில் இருந்து 30 தேதி வரை அமர்களம் தான். பெரிய கோவில்ல இருந்து சண்டிகேஸ்வரர், வினாயகர், முருகர், அவயாம்பிகை, மாயூரநாதர் எல்லாரும் தனி தனி வெகிக்கில்ல ஜாலியா காவிரிக்கு குளிக்க கிளம்பிடுவாங்க. சன்னதி தெருவிலே 20 நாதஸ்வரம், 20 தவில் மல்லாரி இசைக்க கிளம்பி பட்டமங்கல தெரு வழியா காவிரிக்கு போய் தீர்த்தம் குடுத்துட்டு மகாதான தெரு வழியா திரும்பி வருவாங்க. அந்த தெருவில தான் எங்க ஸ்கூல் இருக்கு.

மேள சத்தம் கேட்டதும் (நான் ஆரம்ப பள்ளி படித்து கொண்டிருந்த போது) ஒட்டு மொத்த பசங்களும் ஓடிப்போய் பார்ப்போம். சாமியை பார்ப்பது விட பூதம், பூதச்சி வாகனங்கள் மேல் ஒரு காதல். இது நான் 11வது, 12வது படிக்கும் வரை நீடித்தது.

அந்த மாத கடைசியில் கட முழுக்கு, முட முழக்கு வரும். காவிரியில் ஆரம்பிச்சு, சின்ன கடைதெரு வரை கடைகள், பலூன் சுடும் கடை, பெண் தலை பாம்பு, ராட்டினம், பஞ்சு மிட்டாய், சல சலன்னு மழை... ஹூர்ரே!!! எல்லாமே அழகுதான்.

அதுவும் காவிரிக்கு தெற்கே எங்க பக்கத்து மாயூரநாதர், ஐயாரப்பர், காசி விஸ்வநாதர் போன்ற ஜாம்பவானக்ள் (இந்த பக்க வலைப்பூ ஆளுங்கன்னு பாத்தா எல்லே ராம், மூக்கு சுந்தர், மயிலாடுதுறை சிவா, அபிஅப்பா) காவிரியில் நிற்க, வடக்கு கரையில் தெஷ்ணாமூர்த்தி கோயில் தலைமையில் அந்த பக்க ஜாம்பவான்கள்( அந்த பக்க வலைப்பூ சீமாச்சு அண்ணா, மற்றும் பலர்) நிற்க தெற்கு பக்கத்துக்கும் வடக்கு பக்கத்துக்கும் சிக்னல் கொடியசைப்புதான்.(இப்போ செல் போனாயிருக்கலாம் யார் கண்டது) முதலில் மாயூரநாதர் தீர்த்தவாரி பின்ன அத்தனை சாமிகளும், அதுவரை தலையில் தண்ணீர் படாமல் இருந்தவர்கள், காவிரியில் மூழ்க ஏகப்பட்ட பிக்பாக்கெட் அந்த 1 நிமிஷத்தில் நடக்கும்.

பல சமயம் தீபாவளியும் அந்த மாதத்தில் வந்து விடும். கேக்கவே வேண்டாம் சந்தோஷத்தை. ஆக அபிஅப்பா வுக்கு பிடிச்ச அழகு ஐப்பசி மாதம் தான்.

ஆறு/காடு

ஆறுன்னாவே அழகுதான். அதிலும் பிரச்சனைக்குரிய காவிரின்னா எனக்கு பிடிக்கும். அதிலும் மயிலாடுதுறையில் சுடுகாடு பக்கத்தில் காவிரி சட்ரஸ் இடம் அந்த சுடுகாடு ரொம்ப பிடிக்கும்.

எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து அதே இடம் தான் எரியூட்டும் இடம். அந்த இடத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு வரும். எனக்கு ஏகப்பட்ட தாத்தா, பாட்டி. எல்லாரும் கிட்டதட்ட ஒரே தெரு தான். எல்லாருக்குமே அதே சுடுகாடுதான். சின்ன வயசுல நாங்க சகோதரர்களே வச வசன்னு 25,30 பேர் இருப்போம்.

ஏதாவது தாத்தா போயிட்டா எங்களுக்கு தீபாவளிதான். கடைசியா சுடுகாட்டுக்கு எடுத்து போகும் போது மட்டும் ரொம்ப அக்கறையா ஏதாவது சித்தப்பா எங்களை ஒன்னு திரட்டி அங்க போக விடாம தடுத்துடுவாங்க. பயந்துடுவோம்ன்னு..அதுக்காக. சரி விடுங்கடா சின்ன தாத்தாவுக்கு பாத்துப்போம்ன்னு மனச தேத்திப்போம்.

இப்போல்லாம் நாமதான பெரிய மனுசன். தாரளமா போகலாம். 6 மாதம் முன்ன ஊருக்கு போன போது கடைசி தாத்தா போயிட்டார். சுடுகாட்டில் எரியூட்டுபவருக்கு பணம் கொடுக்கும் போது ரொம்ப பிசிரி பிசிரி தான் பணம் கொடுப்பாங்க. எனக்கு அது பிடிக்காது. ஏன் அப்படின்னு கடைசி தாத்தாவை ஒரு முறை கேட்டபோது"நிறைய குடுத்தா, இவங்க ரொம்ப நல்லவங்க, அடிக்கடி அவங்க வீட்டுல சாவு விழனும்"ன்னு வேண்டிகிட்டா ன்னு தான் இப்டி பிசிரி பிசிரி தர்ரோம்ன்னு சொன்னார். இப்போ அவரே போயிட்டாரா, வேற ஒரு பெரியப்பா பிசிரிகிட்டு இருந்தார்.

நான் தான் இப்போ பெரிய மனுசன் லிஸ்ட்ல வந்துட்டனா ஏதாவது பேசியாகனுமேன்னு எரியூட்டுபவரை பாத்து "விடுப்பா அடுத்தடுத்து விசேஷம் இருக்கு பாத்துக்கலாம்"ன்னு சொல்லிட்டு இருமல் பெரியப்பாவை பார்த்தேன். போச்சு, அதோட அவர போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க என் அண்ணன் தம்பிங்க. சரி போகட்டும்ன்னு வீட்டுக்கு வந்தா எங்க அம்மா சின்ன அக்காகிட்ட பேசிகிட்டு இருந்தாங்க. அப்போ அம்மா "அடுத்து எப்பம்மா வருவ"ன்னு கேக்க அதுக்கு சின்ன அக்கா"பெரியப்பா கையிலதான் இருக்கு"ன்னு சொல்லிட்டு அவரை பார்க்க...சே என்ன ஃபேமிலிடா..

சுடுகாடு அழகுன்னு சொன்ன அபிஅப்பா வியர்டுன்னு சொன்னாலும் மனுசன் ஆடி கடைசியா அடங்கும் அந்த இடம், அமைதி, அமானுஷ்யம், பல தத்துவார்தங்களை உள்ளடக்கிய அந்த இடம் அழகுதான்.

6 அழகிலே 3 சொல்லியாச்சு. பதிவு பெருசா இருப்பதால இத்தோட போதும்.

நான் கூப்பிட போகும் அந்த 3 பேர் யாரு?

1. பாசமலர் இம்சை அரசி

2. மூக்கு சுந்தர்

3.அபிஅப்பாவின் மனசாட்சி

16 comments:

 1. வணக்கம் அபி அப்பா. ;-)

  ReplyDelete
 2. ஒரு அட்டெண்டண்ஸ் பின்னூட்டம்.

  ReplyDelete
 3. ஹய்யா.... வந்துட்டோம்'ல.......

  அடடா வீட்டை பத்தி சொன்னது அழகு, அதுவுமில்லாமே ஊர்திருவிழாவிலே நம்ம கோஷ்டிகளோட திரியுறது இன்னொரு அழகு :)

  ReplyDelete
 4. //வணக்கம் அபி அப்பா. ;-) //

  வணக்கம் மை பிரண்ட்:-))

  ReplyDelete
 5. அபி அப்பா

  உங்க மூன்று அழகுகளும் சூப்பர்ப்பா ;-)

  திருவிழா அழகு எல்லாம் உங்கள மாதிரி மக்கள் சொல்லும் போதும், சினிமாவில் பார்க்கும் போதும் தான் அதன் அருமை எல்லாம் தெரியுது.

  சரி அடுத்த மூனு அழகு எங்க?.......அதையும் சீக்கிரம் போடுங்க ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
 6. நல்லாத்தான் எழுதி இருக்கீங்க. மூணுமே முத்தான அழகுதான். அடுத்த மூணுக்கு இடம் இல்லைன்னு உங்களையே கூப்பிட்டுக்கிட்டது அழகுதான். எப்போ பார்ட் - 2?

  இந்த விளையாட்டுக்கு பார்ட் 2 போடறது எல்லாம் பெருமையா இருக்கு. :))

  ReplyDelete
 7. எங்க அம்மா சின்ன அக்காகிட்ட பேசிகிட்டு இருந்தாங்க. அப்போ அம்மா "அடுத்து எப்பம்மா வருவ"ன்னு கேக்க அதுக்கு சின்ன அக்கா"பெரியப்பா கையிலதான் இருக்கு"ன்னு
  நல்ல நகைச்சுவை. இதே மாதிரி எங்கவீட்டிலும் என் மூத்த அண்ணனுக்கு சத்திரத்தில் 10ஆம் நாள் கரியம் முடிந்து எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். திடீரென்று என் சின்னப்பையன் கேட்டான் என்னைப்பார்த்து" அப்பா நம்பவீட்டில் என்னிக்கு அப்பா'
  நான் உள்பட எலோரும் ஆடிவிட்டோம். அவன் கேட்டது என் வீட்டில் நடக்க இருந்து சுபம் காரியம்.Truth is stranger than fivtion என்பது

  ReplyDelete
 8. தலை, எல்லாம் சரி, இந்த 3 பேர கூப்பிடறது, 4 பேர கூப்பிடறது, எனக்கு இப்பவே தலை வலிக்க ஆரம்பிச்ச மாதிரி தெரியறது, ஏற்கனவே ஆரம்பிச்ச weirdஏ இன்னும் அங்கங்க ஓடிக்கிட்டு இருக்கு,
  ஆனானப்பட்ட jodi number 1 க்குகூட கொஞ்சம் gap விட்டாங்கப்பா, எங்களையும் கொஞ்சம் consider பண்ணுங்க

  ReplyDelete
 9. // உங்கள் நண்பன் said...
  ஒரு அட்டெண்டண்ஸ் பின்னூட்டம். //

  சரா, சின்ன பிள்ளைல போட்ட அட்டெண்டண்ஸ், எழுத்து கூட்டி படிக்கிறா மாதிரி தெரியுது:-))

  ReplyDelete
 10. // Fast Bowler said...
  அழகப்பா :)
  //

  என்னப்பா, அழகு அழகாப்பா:-))

  ReplyDelete
 11. //அடடா வீட்டை பத்தி சொன்னது அழகு, அதுவுமில்லாமே ஊர்திருவிழாவிலே நம்ம கோஷ்டிகளோட திரியுறது இன்னொரு அழகு :)//

  வாங்க இராம் தம்பி! நெம்ப டேங்ஸு :-))

  ReplyDelete
 12. //சரி அடுத்த மூனு அழகு எங்க?.......அதையும் சீக்கிரம் போடுங்க ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. //

  சரி கோபி தம்பி! சீக்கிரம் போடுகிறேன்,:-)

  ReplyDelete
 13. குடமுழுக்கு...முழுக்கு கடை.நியாபகப்படுத்திட்டீங்களே.
  அதுக்கு காசு சேர்த்து இன்ன இன்ன வாங்கனுன்னு லிஸ்ட் போட்டு பட்ஜெட் போட்டு அது ஒரு ஜாலி அப்ப.

  ReplyDelete
 14. //இடம், அமைதி, அமானுஷ்யம், பல தத்துவார்தங்களை உள்ளடக்கிய அந்த இடம் அழகுதான்.
  //

  அக்காங்க்! கரீட்டாச் சொன்னே வாத்தியாரே!

  கண்ணம்மா பேட்டையிலிருந்து காத்தவராயன்

  ReplyDelete
 15. //Fast Bowler said...
  அழகப்பா :)//

  ரிப்பீட்டே.... :)

  சென்ஷி

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))