பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 30, 2007

மிக்க ஆனந்தமாக ஒரு நன்றி பதிவு!!!!

வணக்கம் என் அன்பு வாசகர்களே! தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர அழைப்பு வந்த போது முதலே எனக்குள் ஒரு பரபரப்பு ஏறி பாக்கெட் உள்ளே உக்காந்துகிச்சு. செப்24-30 தேதி என அவர்கள் சொன்ன போது எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. காரணம் அந்த வாரம் முழுக்க எனக்கு பொறி பறக்க ஆணி இருக்கும் என தெரியும். ஆனாலும் ஒரு குருட்டு தைரியத்தில் ஒத்துக்கொண்டேன். அதன் பின்புதான் எனக்கு ஒன்னு பின்ன ஒன்னா பிரச்சனைகள் வர ஆரம்பிச்சுது.

சரி என்ன எழுதலாம்..... நல்ல காமடி எழுதுவாங்க, மொக்கை போடுறவங்க கூட ஸ்டார்ன்னு சொன்ன பின்ன பார்த்தா சூப்பர் பதிவா போட்டு தாக்கிடுவாங்க. அய்யனார், வரவனை, ஆழியூரான், கோவி.கண்ணன், முத்து லெஷ்மி, மங்கை, ஜஸீலா,காயத்ரி எல்லார் ஸ்டார் வீக்கையும் பார்த்தா அடிச்சு தூள்கிளப்பி இருக்காங்க. சரி காமடியா எழுதும் கண்மணி டீச்சர் ஸ்டார் வீக்ல பார்த்தா பிரம்மாண்டமா இருக்கு.சரி பேசாம பின்னவீவத்துவம் எழுதிடலாம்ன்னு தம்பி கதிர் கிட்ட எப்படிய்யா பீனாநானா எழுதுவதுன்னு கேட்டா அதை அவர் பதிவா போட்டுட்டாரு, மகி அதை வச்சு ஒரு பினாநானா எழுதி பாஸ் பண்ணிட்டாரு. எப்படியாவது லக்கி டவுசரை கிழிக்கலாம்ன்னு பார்த்தா அவருக்கு நாளை முதல் திருவிழாவாம் அதுக்காக தார்பாயிலே டவுசர் தைச்சு மாட்டிகிட்டாராம், ஸ்டீல்ல கூட ஃபேப்ரிகேட் பண்ண ஆர்டர் குடுத்து இருக்காருன்னு காத்து வாக்கிலே செய்தி வந்துச்சு. சரின்னு அந்த முடிவை மாத்தி கிட்டேன். (தப்பிச்சீங்க)

ஓக்கே அரசியல் தான் சரின்னு அவசர அவசரமா சென்ஷி கிட்ட "இப்ப யாரு சென்ஷி முதல்வர், அவரை திட்டி ஒரு பதிவு போடனும்"ன்னு கேட்டா அவன் "அண்ணே நல்ல டாக்டரா பாருங்க, அவசரமா அவசர சிகிச்சையா எலுமிச்சம் பழத்தை தலைல தேச்சுப்பதை விட ஒரு அண்டாவிலே ஜூஸ் பிழிஞ்சு அது உள்ள உக்காந்துப்பது உத்தமம்"ன்னு அடவைஸ் மழை!

ஆணீயம் பத்தி எழுதலாம்ன்னு நெனச்சு கிட்டு இருக்கும் போதே ஆன்லைன்ல ஜஸீலா, முத்துலெஷ்மி,லெஷ்மி எல்லாம் இருந்தாங்க. டக்குன்னு முடிவை மாத்திகிட்டு பெண்ணீயம் எழுதலாம்ன்னு பார்த்தா அண்ணாச்சி மோகன்தாசை தலை மறவா வச்சு ரகசிய பயிச்சி குடுத்துகிட்டு இருக்கார்ன்னு தகவல் வந்து அதையும் விட்டாச்சு.

சூடான இடுகைல வரனும்ன்னா பெரியார் தான் தெய்வம் அவரை விட்டா வழி இல்லை, அவருக்கு நேர்ந்துகிட்டு எழுத ஆரம்பிச்சா, கோபி போன் பண்ணி "அபிஅப்பா உங்களுக்கு கராத்தே தெரியுமா"ன்னு கேக்க எனக்கு குலை நடுங்கி போச்சு. ரைட்டு ஆன்மீகம் எழுதிடலாம் அதான் ஒரே வழின்னு பிள்ளயார் சுழி போட்டுட்டு 4 நாள் யோசிச்ச பின்னும் ஒன்னும் தேறலை.

ஓக்கே கவிதை எழுதிடலாம்ன்னு "அன்பே ஆருயிரே" ன்னு ரெண்டு வரி எழுதங்காட்டிலும் கண்மணி டீச்சர் தலைமையிலே ஒரு படை திரட்டி கிட்டு காயத்ரி கிளம்பி வர்ரதா குருவி கத்துச்சு. போனா போவுது கதை எழுதிடலாமேன்னு இம்சை அரசி ஜெயந்திகிட்ட போன் பண்ணி டிப்ஸ் கேட்டா ஒரு நாவல் எழுதும் அளவுக்கு பதில் வருது. கொட்டாவி விடாமயே தூங்கிட்டேன்.

சரி சரியா மாட்டிகிட்டோம்னு கொத்தனார் கிட்ட ஐடியா கேட்டா "ஆமா அபிஅப்பா தமிழ்மணம் இடைக்கு இடைக்கு தனக்கு தானே திருஷ்டி சுத்தி போட்டுக்க இப்படில்லாம் செய்யும், நீங்க போட்டு குழப்பிக்காம எப்போதும் போல உளருங்க உங்களுக்கு தெரிஞ்சதை"ன்னு சொன்னாரு.

பின்ன எழுத ஆரம்பிச்சு ஏதோ ஒப்பேத்தியாச்சு. அதிலும் பாருங்க ரொமான்ஸ் எழுதறேன்ன்னு வாங்கி கட்டிகிட்டேன். பிரிச்சு மேஞ்சுட்டாங்க மக்கள்ஸ். சரி உட்ரா உட்ரா கைப்புள்ளன்னு சட்டை பட்டனை பொறுக்கி பாக்கெட்ல போட்டுகிட்டு கலைந்த தலைய சீவிகிட்டு வந்துட்டேன்.

சரி இது நன்றி சொல்லும் நேரம், முதல்ல தமிழ்மணத்துக்கு. ஆயிரம் ஆயிரம் நன்றி தமிழ்மணத்துக்கு. நானல்லாம் ஏதோ எழுதிகிட்டு சும்மா ஊலுலூலா காட்டி கிட்டு இருந்தேன். என்னய புடிச்சு ஸ்டார் ஆக்கி கண்ணகி, கிராமத்து நினைவுகள்ன்னு எழுத வச்சு "சரி இவனும் ஏதோ எழுதுவான் போல சில நேரம்"ன்னு எனக்கு ஒரு பேர் வாங்கி குடுத்ததுக்கு மிக்க நன்றி.

அது போல என் பதிவுகளுக்கு(நீங்க பதிவெல்லாம் போடுவீங்களா- இது பொட்டீ கடை சத்யா) வருகை தந்து சிறப்பித்த டெல்பினம்மா, வல்லிம்மா, கீதாம்மா, கோபி, தம்பி,மின்னல்,பினாத்தலார், ஜஸீலா,அய்யனார்,குசும்பன்,மகி, சென்ஷி,முத்துகுமரன்,லொடுக்கர்,பாஸ்ட் பவுலர், லியோ சுரேஷ், சுல்தான் பாய்,நாமக்கல் சிபி, தேவ், விவசாயி இளா,வெட்டி பாலாஜி, ராயல் ராம், கைப்ஸ்,நாகை சிவா,பாலரஜன் கீதா சார்,தருமி சார், லெஷ்மி,இம்சைஅரசி ஜெயந்தி, காயத்ரி, மைபிரண்ட், துர்கா,கண்மணி டீச்சர், சுப்பையா சார், வேதா, இம்சை, நிலா, மங்களூர் சிவா, ஆயில்யன், மயிலாடுதுறை சிவா, சீமாச்சு அண்ணன்,ரமணி, பூக்குட்டி, லக்கி, பொட்டீகடை சத்யா, கொத்தனார், சேதுக்கரசி, காட்டாறு,சின்ன அம்மனி,அரவிந்தன்(பெங்களூரு),மங்கை, முத்துலெஷ்மி, துளசி டீச்சர்,வினையூக்கி,உண்மை தமிழன் ,வித்யா கலைவாணி,INDAR,நிலவு நண்பன்,ஓசை செல்லா,தாமோதர் சந்துரு,டிசிபிடி,பாரிஅரசு,உமையாணன்,பெங்களூரு தீபா,வீரசுந்தர்,மதுமிதா, ஜேக்கே,ரத்னீஷ்,வடுவூர் குமார்,அனுசுயா,வெங்கட்ராமன்,பு பட்டியான்,கெக்கேபிக்குனி,நலாயினி,ஜிதீன்,கப்பி, துரியோதணன், ராமசந்திரன் உஷா............இந்த பட்டியலை கொஞ்சம் கொஞ்சமா தொடர்கிறேன் (ஆனால் முதல் பதிவில் யார் யார் வந்தார்கள் என தெரிய வில்லை காரணம் என்னால் அந்த பதிவை ஓப்பன் செய்ய முடியவில்லை)

இன்னும் பல பதிவுகளில் பின்னூட்டமிட்டவர்களுக்கு நேரமின்மையால் பதில் சொல்ல வில்லை. ஆனால் கண்டிப்பாக இன்று சொல்லிவிடுவேன்.இந்த வாரம் சரியான நேரத்தில் பதிவுகள் பப்ளிஷ் பண்ண, தவிர பல வித ஆலோசனைகள் தந்து மிகுந்த உதவியாக இருந்த அன்பு சகோதரி கண்மணி டீச்சருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். இந்த அருமையான வாய்ப்பை கொடுத்த தமிழ்மணத்துக்கும் மீண்டும் நன்றி!

44 comments:

 1. கலக்கலான நட்சத்திர வாரம் அதற்குள் முடிந்துவிட்டதே

  கனவு மெய்பட வேண்டும் ,
  மயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் சிந்தியாவும்!!!!!.. என
  காமெடியாக சொல்லி

  திருநங்கை கண்ணகி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!
  என பீலிங்ஸ் ஆப் இந்தியா பதிவுடன் டாப்கியர்ல தூக்கி

  சமைக்க போன கதை சொல்லி கிலி கிளப்பி

  கம்பைன் ஸ்டடி, கிராமத்து நினைவுகள்னு எல்லாருக்கும் கொசுவத்தி சுத்த வீட்டு

  புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்கன்னு கல்யாணமாவாத பயபுள்ளைகளையெல்லாம் உசுப்பிவிட்டு

  சின்ன சின்னதாய் கலாய்த்தல்கள்னு சொல்லி ஆபீஸ்ல ஆரம்பிச்சி

  மா.அ.மா விமர்சனம் போட்டு 'கலாய்தல் திணை' ஓனரையே கலாய்ச்சதென்ன

  அரட்டை அரங்கம்னு சொல்லி அய்ஸ்ஸை ஓட்டி

  ஒரு வாரம் போனதே தெரியலை.

  நீங்க எப்பவுமே ஸ்டார்தான் என்பதை திரும்ப நிருபித்திருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தூள் கிளப்பீட்டிங்க!
  இன்னும் ஒருவாரம் நீங்களே இருந்திருக்கலாம்
  சரி ஒரு வாரம்தான்னு ஒரு நியதி இருக்கும்போது
  என்ன செய்ய முடியும்
  சரி, அடுத்த இன்னிங்ஸ்ல வச்சுக்கலாம் அபி அப்பா!

  ReplyDelete
 3. நல்லா ஜாலியா போச்சு அபிஅப்பா இந்த வாரம்.

  ReplyDelete
 4. எல்லா பதிவிலும் இழையோடும் நகைச்சுவை உங்களுக்கு வரம்தான்.

  வாழ்த்துக்கள் இந்த குட்டி பாப்பாகிட்ட இருந்து

  ReplyDelete
 5. அப்புறம், ரெடி ஒன் டூ த்ரீ

  ஸ்டார்ட் கும்மிதானே? :)

  வேற எப்படி வழியனுப்புவிழா செய்யறது?

  ReplyDelete
 6. கும்மியடிக்கற மாமா அத்தை எல்லாரும் ஓடியாங்களேன்.

  ReplyDelete
 7. அப்பாடானு இருக்கு ;)

  ReplyDelete
 8. Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.


  இது என்னாத்துக்கு இங்க?

  (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

  ReplyDelete
 9. கலக்கலான நட்சத்திர வாரம்

  ReplyDelete
 10. எல்லாப்பதிவையும்விட, இந்தப்பதிவுல இயல்பான காமடி நல்லா இருக்கு ;))

  ReplyDelete
 11. //சரி இவனும் ஏதோ எழுதுவான் போல சில நேரம்"ன்னு எனக்கு ஒரு பேர் வாங்கி குடுத்ததுக்கு மிக்க நன்றி//
  அண்ணே! பொதுவா மாயவரத்து ஆளுங்க ரொம்ம்ம்ப்ப தன்னடக்கமானவங்கல்ல...!?

  ReplyDelete
 12. //
  நிலா said...
  கும்மியடிக்கற மாமா அத்தை எல்லாரும் ஓடியாங்களேன்.

  //
  வந்துட்டன்டா செல்லம்

  ReplyDelete
 13. //
  நிலா said...
  Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.


  இது என்னாத்துக்கு இங்க?

  (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

  //
  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 14. இங்கயும் கும்மி அலவ் பண்ணாத அபி அப்பா மீது வெறித்தனமான கோவத்தில் நாங்கள்...

  ReplyDelete
 15. //
  எச்சூஸ்மி, இங்க கும்மி அலவ்டா? அலவ்டுன்னா கண்மனி அத்தை வந்து திட்ட மாட்டாங்களே?

  //

  இது ஒரு மீள் ரிப்பீட்

  (எவ்வளவு நாள்தான் மீள் பதிவு, மீள் பின்னூட்டம் போடுவாங்க)

  ReplyDelete
 16. \\நாகை சிவா said...
  அப்பாடானு இருக்கு ;)\\

  ரீப்பிட்டேய்.... :)))

  ReplyDelete
 17. //கனவு மெய்பட வேண்டும் -ஒரு பதிவு!
  மயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் சிந்தியாவும்!!!!!..
  கல்யாண்வீட்டுக்கு சமைக்க போன கதை பாகம் #2
  திருநங்கை கண்ணகி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!
  வாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம்!!!//

  சொந்த மண்ண மையமா வைச்சு எழுதுன பதிவுகளுக்காக ஊரிலேர்ந்து நெறையா வாழ்த்துக்கள் உங்களுக்கு..!

  குறிப்பா மணி அய்யரும் உங்களை நேர்லேயே பார்த்து வாழ்த்தணுமுனு ரொம்ப அடம் புடிக்கிறாராம்..!!

  ReplyDelete
 18. கமெண்ட் மாடரேசனை கண்ணடித்து தமிழகம் முழுவதும் வருகிற திங்கள் கிழமை பந்த் அனுசரிக்கப் படுகிறது என்பதைத் தெரிவித்துக் 'கொல்'கிறோம்!

  ReplyDelete
 19. அத்தான் எங்களை மறந்துட்டீங்களே..

  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 20. யோவ் 5:30 க்கு கும்ம வந்துடுனு சொல்லிட்டு மாட கட்டிபோட்டுடீங்களே


  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 21. சிவா மாமா இன்னும் ரெண்டு மனி நேரம் பாப்பா பிசி.

  அப்புறமா வந்து ரீஜாய்ன் பண்ணிக்கறேன்.

  அதுவரைக்கும் நல்லா கும்முங்க எல்லாரும்.

  நான் வந்த பின்னாடியும் கமெண்ட் மாடுரேசன் இருந்துச்சுன்னா 10 பேரு தீக்குளிப்பாங்க. 100 பஸ் எரியும், தமிழகமே ஸ்தம்பித்துப்போகும்

  அதுக்கப்புறம்தான் இது குட்டி பாப்பாவா இல்ல குட்டி ஆட்டம்பாம் ஆ ன்னு எல்லாருக்கும் தெரியும்

  அபிஅப்பா இது எச்சரிக்கை இல்லை

  கட்டளை

  கட்டளை

  கட்டளை

  ReplyDelete
 22. மங்களூர் சிவா said...
  கமெண்ட் மாடரேசனை கண்ணடித்து தமிழகம் முழுவதும் வருகிற திங்கள் கிழமை பந்த் அனுசரிக்கப் படுகிறது என்பதைத் தெரிவித்துக் 'கொல்'கிறோம்!
  //

  நாங்களும்...:)

  ReplyDelete
 23. என்னது வெறும் நன்றின்னு ஒரு வார்த்தைல சொல்லிட்டீங்க?? ட்ரீட்???

  ReplyDelete
 24. //
  நிலா said...
  சிவா மாமா இன்னும் ரெண்டு மனி நேரம் பாப்பா பிசி.

  அப்புறமா வந்து ரீஜாய்ன் பண்ணிக்கறேன்.

  //
  என்னம்மா 'சின்ன புள்ள' சாப்புடறதுக்கு ரெண்டு மணிநேரமா இது ரொம்ப ஓவரா இல்ல??

  ReplyDelete
 25. அண்ணே,

  ஒரு வாரமும் சூப்பரா போச்சு.

  நல்லா கமெடியா போச்சு.

  கண்ணகி பதிவு போட்டு அசத்தீட்டீங்க.

  ஊர் வாசனை அதிக பதிவுகள்ல இருந்தது.

  வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
 26. //Your comment has been saved and will be visible after blog owner approval.//

  இது ஏன் இன்னும் வருது.

  ReplyDelete
 27. நட்சத்திர வாரத்தை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள். அபி அம்மாவிடம் சொல்லி சுற்றிப் போடுங்கள்.
  டிஸ்கி : அபி பாப்பாவிடம் சொல்லி விடாதீர்கள். 'சுற்றி' போட்டுவிடப் போகிறது

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் அபி அப்பா :-)

  தொடர்ந்து கலக்குங்க!!

  ReplyDelete
 29. இங்கே பின்னூட்டம் போட்ருக்கோமே....

  எங்களுக்கும் நன்றி
  சொல்லுவீங்களாஆஆஆஆஆ...

  ReplyDelete
 30. என்ன கொடுமை சார் இது? ரீஜாயின் பன்னலாம்னு வந்தா இப்டி ஆட்டம் அப்டியே இருக்கு? :O

  ஹூம் நம்ம பலத்த காட்ட வேண்டியதுதான்.

  ReplyDelete
 31. //கொத்தனார் கிட்ட ஐடியா கேட்டா "ஆமா அபிஅப்பா தமிழ்மணம் இடைக்கு இடைக்கு தனக்கு தானே திருஷ்டி சுத்தி போட்டுக்க இப்படில்லாம் செய்யும், நீங்க போட்டு குழப்பிக்காம எப்போதும் போல உளருங்க உங்களுக்கு தெரிஞ்சதை"ன்னு சொன்னாரு.//

  ஆக மொத்தம் நான் சொன்னதைத்தான் செஞ்சீங்க. :))

  நல்லாயிருடே!!

  ReplyDelete
 32. அட! இந்த ஐடியா நல்லா இருக்கே!

  பின்னூட்டியவங்க பேர் லிஸ்ட்:-))))

  அருமையா, இயல்பா, நகைச்சுவையாக இருந்துச்சுங்க உங்க 'வாரம்' :-))))

  ReplyDelete
 33. Enjoyed the whole week, all posts were excellent.

  ReplyDelete
 34. அபி அப்பாவின் நட்சத்திர வாரம் நலனே முடிந்தது. சிறு கலாய்ப்புகள் - செல்வி கண்ணகியின் தொண்டு - அய்யனாரின் அரட்ட அரங்கச் சேவை - இன்னும் பல நகைச்சுவைகளுடன் கூடிய இடுகைகள் படிக்க ரசிக்க மகிழ சிறந்த பதிவுகள் - வாழத்துகள்

  ReplyDelete
 35. எல்லாம் முடிச்சிட்டிங்க. காமடி தூள்...!
  :)

  1026 பின்னூட்டம் கண்ட அபூர்வ அபிஅப்பா என்ற பட்டம் அமுக சார்பில் வழங்கப்படுக்கிறது.
  :))))))))

  ReplyDelete
 36. ஓக்கே வழியை உடுங்க. சுனாமி வரட்டும்...

  ReplyDelete
 37. நல்லா பொழுதுபோச்சு அபி நைனா. இந்தவாரம் டவுசர் பாண்டி வாரமா..? பாக்கலாம் யாரு டவுசர எப்படி கிழிக்கிறார் என்று..

  ReplyDelete
 38. எழுத்து நடை சூப்பர்:)))

  (சும்மா தமாசுக்கு)!!!

  ReplyDelete
 39. கலக்கல் வாரம் தல!! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 40. //கப்பி பய said...
  கலக்கல் வாரம் தல!! வாழ்த்துக்கள்!!//

  கப்பி இருந்தாலும் உனக்கு ஒவர் நக்கல் தான்ய்யா... போறார் என்று சொல்ல வுடன் வந்து வாழ்த்துக்கள் என்று சொல்லுற பாரு...

  ReplyDelete
 41. சுவாரஸ்யமாக இருந்தது.
  கருத்துக்கள் எழுதாவிட்டாலும் அவ்வப்போது உங்கள் பதிவுகளைப் படித்தேன்.
  ரசித்தேன்

  ReplyDelete
 42. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் அபி அப்பா!

  ReplyDelete
 43. நீங்க நட்சத்திரமாக தேர்வு ஆகி இருக்கிங்களா, வாழ்த்துகள், கவனிக்கவே இல்லை(நல்லவேளை!)( ஆனால் கடைசி வரை பூங்காவில் தான் உள்ள விடலை)

  நான் வழக்கமாக அந்த நட்சத்திரம் பக்கம் பார்ப்பதே இல்லை, அதனால் தான். உங்கள் நட்சத்திர பதிவுகள் வழக்கம் போல சூப்பராகவே இருக்கும்!

  ReplyDelete
 44. இந்த நன்றி போஸ்ட் சூப்பரா இருக்கே? :-)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))