பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 19, 2007

என் சின்னக்காவுக்கு இன்னிக்கு பிறந்த நாள்!!!

என் பெரியக்காவை அனேகமமக அத்தனை பிளாக்கர்ஸ் அததவது என்னோடு தொடர்பு உடையவர்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு! ஆனால் எனக்கு ஒரு சின்ன அக்கா உண்டு! கோபத்திலும், குணத்திலும்,அழகிலும், அன்பிலும் எல்லலம் எனக்கு கிட்டத்தட்ட un predictable charector அவங்மாதிரியே ஒருத்தங்க எனக்கு சகோதரியய கிடைச்சாங்க வலை உலகில்!!

ரெண்டு அக்காவும் நானும் தம்பியும் சேர்ந்துட்டால் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. தம்பி தான் ஆரம்பிப்பான், "அம்மா பெரியக்காவுக்கு வருஷ புளியும், கூழ் வடகமும் குடுத்தியே, நான் கொண்டு போய் கொடுத்தனே, அது குறை சொல்லுதும்மா, பத்தலைன்னு"ன்னு ஆரம்பிப்பான். பெரியக்கா பேந்த பேந்த முழிக்கும்!!

அப்ப ஆரம்பிக்கும் சண்டை! சும்மா ஜக ஜோரா சின்னக்கா இருக்கும் 1 வாரமும் எங்களுக்கு களை கட்டும். பாவம் அம்மாவுக்கு தான் கண்னை கட்டும்!!

வழக்கம் போல என் சின்னக்கா என் கூட பேசுவதில்லை! ஆனா தங்கமணி, குழந்தைகள்ளோடு நல்ல உறவு! எனக்கு அந்த குறை இல்லாமல் தணிக்கும் என்னை திட்டிகொண்டே இருக்கும் என் சகோதரி, என் கல்லூரி ஜூனியர், என் பள்ளி கால மஹா ஜூனியர் முத்து லெஷ்மிக்கு இன்று பிறந்த நாள்! இடட்டை வாழ்த்து! ஆனந்த விகடனிலும் வந்தாச்சு!!!

வாழ்க வாழ்கப்பா!!!!!

27 comments:

 1. முத்துலெட்சுமி அக்காவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 3. ஆமாம் இந்த சின்னக்கா பேசிக்கிட்டேஏஏஏஏஏஏஏ இருப்பாங்கன்னு சொல்றத நெசமா?

  ReplyDelete
 4. //வழக்கம் போல என் சின்னக்கா என் கூட பேசுவதில்லை//

  அது என்னா வழக்கம்????????

  ReplyDelete
 5. ஹைய் நாந்தான் பர்ஸ்ட்டாஆஆஆஆஆ....!!!!!!!!!

  ReplyDelete
 6. Late ஆ பதிவு போட்டு இருந்தாலும் வாழ்த்துக்கள்! சுவரொட்டி யில பார்க்கவும்

  ReplyDelete
 7. முத்து லெஷ்மி அக்காவுக்கு இன்று பிறந்த நாள்! இடட்டை வாழ்த்து! ஆனந்த விகடனிலும் வந்தாச்சு!!!

  வாழ்க வாழ்க!!!!

  ReplyDelete
 8. வருசா வருசம் புலியெல்லாம் கொடுப்பீங்களாஆ!

  ReplyDelete
 9. //என் பள்ளி கால மஹா ஜூனியர் //

  அட...! அக்கா நம்ம ஸ்கூல் தானா.!

  ReplyDelete
 10. முத்துலெட்சுமி அக்காவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. //ஆயில்யன் said... ஹைய் நாந்தான் பர்ஸ்ட்டாஆஆஆஆஆ....!!!!!!!!!//
  ஆகா ஆயில்யனுக்கும் இந்த வியாதியா? பாவம்.

  ReplyDelete
 12. என்ன ரொம்ப லேட்டு?

  பதிவும்

  கமெண்ட்ஸும்

  ReplyDelete
 13. //என்னை திட்டிகொண்டே இருக்கும் என் சகோதரி//

  என்னது அக்கா திட்டுவாங்களா???????

  ReplyDelete
 14. அட! நம்ம முத்துலெட்சுமிக்குப் பிறந்தநாளா?

  என் 'அண்ணாத்தை'யின் அம்மாவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 15. நன்றி அபி அப்பா.. என்ன ஆனந்த விக்டனிலயா..அய்யாவழக்கம் போல நீங்க முப்பெரும்விழா பதிவை ப்படிக்கலைன்னு நிரூபிக்கிறீங்க..
  நான் எப்ப உங்க ஸ்கூலில் படிச்சென் பாருங்க வந்து கேக்கறாரு ஆயில்யன்..

  எப்பதான் திருந்துவீங்க ?பதிவை படிச்சு பின்னூட்டம்போடுங்களேன்.. (அப்பாடா திட்டியாச்சு )


  ஆயில்யன் ,சிவா ,இளா, வித்யா ,பவன் துளசி.. எல்லாருக்கும் நன்றி..

  ReplyDelete
 16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துக்கா ;)

  ReplyDelete
 17. //ரெண்டு அக்காவும் நானும் தம்பியும் சேர்ந்துட்டால் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. தம்பி தான் ஆரம்பிப்பான்//

  ஒ.கே ஒ.கே தம்பி ஆரம்பிச்சாரு!
  நீங்களும் கன் டினியூ பண்ணிட்டீங்க பட் இன்னும் பெரியக்காவ காணோமே...!

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் முத்தக்கா..

  ReplyDelete
 19. அக்காவுக்கு என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க அபி அப்பா..

  ReplyDelete
 20. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. //கண்மணி said...
  happy birthaday muthulashmi
  //
  எப்பயிருந்து அக்கா "muthulashmi" இப்படி மாறினாங்க டீச்சர்...?

  ReplyDelete
 22. கோபி , இரண்டாம் சாணக்கியன்.. ,ரசிகன் , புதுகைத்தென்றல் , கண்மணி எல்லாருக்கும் நன்றி.

  ReplyDelete
 23. to முத்துலெட்சுமியக்காவுக்கு!

  அர்ச்சனாவுல பார்ட்டி கேட்டா அபிராமி பேரை சொல்லி திசை திருப்பவேணாம்!

  இன்னொரு விஷயம் நீ சின்னக்காவை தொந்தரவு பண்ணாத நான் உனக்கு பார்ட்டீ தர்றேன் பொங்கலுக்குன்னு இந்த தம்பிக்கு அண்ணன்(அபி அப்பாதான் வேற யாரு?!) சம்மதம் தெரிவிச்சிருக்காருங்கறத இச்சபையிலேயே சொல்லிக்கிறேன்
  :-)))))))))))))))

  ReplyDelete
 24. மங்களூர் சிவா நன்றி.. ஆயில்யன் சபை யில் பார்ட்டி வைப்பதில் கிங் உங்க அண்ணன் என்று பட்டவர்த்தனமாய் கூறீயதற்கு நன்றி.(அண்ணி கவனிக்கவும்)

  ReplyDelete
 25. //முத்துலெட்சுமி said...
  அண்ணி கவனிக்கவும்//

  நானும் அர்ச்சனா ஹோட்டலுக்கு வந்து,முத்துலெட்சுமி பர்த்டே பார்ட்டியை தடபுடலா கவனிச்சிக்கிறேன்னு, அண்ணி முன்னாடியே சொல்லிட்டாங்க!
  :-)))))))))))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))