பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 29, 2007

"அதபெகொகு"ன்னா என்னா??????ஒரு கிசு கிசு!!!

வேலை பளு நிச்சயம் காரணம் இல்லை மேட்டர் பஞ்சத்துக்கு. அதுக்கும் மேல ஏதோ இருக்கு.மனசு ஒட்ட மாட்டங்குது எதிலேயும். பதிவு போடனும்ன்னு நெனச்சா தூக்கம் தூக்கமா வருது. தூங்க படுத்தா பதிவு போடனும் போல இருக்கு. ஏதாவது மேட்டர் சிக்குனாத்தானே! ஒன்னும் மாட்ட மாட்டங்குது. இதையெல்லாம் போக்க என்ன தான் வழி!

1. அய்யனார் ஒரு பதிவு சுரங்கம். அவர் ஒரு பதிவு போட்டா அவரால பத்து பேர் பொழப்பு நடத்தலாம். அப்படி ஒரு ஜீனியஸ் அவரு. எதிர் பதிவு, பின் பதிவு, சைடு பதிவு, அய்யனார் செய்வது நியாயமா? இப்படின்னு போட்டு தமிழ்மணத்துல ஜொலிக்கலாம். ஆனா அய்ஸ் இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல. அய்யனாருக்கு பஞ்சர் ஆச்சு அதனால குசும்பனுக்கு காத்து போச்சு! ஆக அய்யனாரை "பனோரமா" கொண்டு போய் குளிப்பாட்டினா பஞ்சம் போக வழி இருக்கு.பிதுங்கி பிதுங்கி பதிவு போடுவார். நாம அத வச்சி எதுனா பதிவு போடலாம். அடுத்து...

2. ஓசை செல்லா இருக்கவே இருக்காரு! முன்னல்லாம் ஓசை செல்லாவுக்கு ஒரு கேள்வின்னு பதிவு போடலைன்னா அவங்க ஒரு பதிவரே இல்லைன்னு சொல்லும் படி இருந்துச்சு, ஆனா இப்ப ஓசை இல்லாம இருக்காரு அவரும். கேள்வி கேட்டா பதிலே சொல்ல மாட்டேன்ன்னு அடம் பிடிக்கிறார். ஓசையோட வாங்க எங்க பஞ்சத்தை போக்க!

3. பொன்ஸ் எங்கன்னே தெரியல, வலைச்சரம் கூட இப்ப முத்து லெஷ்மிதான் நடத்துறாய்ங்க! பொண்ஸையாவது ஏமாத்தி வலைச்சரம் ஆசிரியரா ஆகி பதிவுன்னு ஒப்பேத்தலாம்ன்னு பார்த்தா அவங்க VRS வாங்கிட்டு முத்துலெஷ்மிகிட்ட குடுத்துட்டாங்க, முத்துலெஷ்மிய ஏமாத்த முடியாது. பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டாத்தான் வலைச்சரம் ஆசிரியர்ன்னு பிடிவாதமா இருக்காங்க. இது எந்த காலத்துல நடக்கும். ஆஹ இந்த முயற்சி வீண்.

4. ஜி டாக்குல இருக்கும் மெசேஜ்ஜை பதிவா போடலாம்ன்னு பார்த்தா வெட்டி, இளா எல்லாம் "எங்க பொழப்பை கெடுக்காதே"ன்னு கத்துவாங்க. இந்த ஐடியாவும் வீண்.

5.சரி குழந்தைகளுக்கு பாட்டி வடை சுட்ட கதை எழுதலாம்ன்னு பார்த்தா பவன்,நிலா,மாதினி,பொடியன்னு தூள் கிளப்பி சூடான இடுகைல துண்டு போட்டு வச்சுட்டாங்க, அதனால இந்த முயற்சி வேணாம்.போற போக்க பார்த்தா “அமரிக்க ஏகாதிபத்திய குடியுரிமை பெற்ற கல்பனா சாவ்லாவுக்கும், சுனிதா வில்லியம்சுக்கும் இந்தியா இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?” என அசுரன் மாதிரி பதிவு போட்டாலும் போடுவாய்ங்க போல இருக்கு!!

6. இளையராஜா போல மாசத்துக்கு ரெண்டு பேர் இங்க வந்தாலாவது பதிவு ஏதாவது தேறும்ன்னு பார்த்தா கோபிதம்பி கோவிச்சுப்பான். அதனால கதிர் தம்பி மாதிரி குரங்கு குல்லா போட்டாகூட காது மட்டும் மூடாம பஸ் பஸ்ஸா ஏறி இறங்கினா ரெண்டு மூணு பதிவு தேற வாய்ப்பு இருக்கு.

7. வெட்டி,அம்பி,கைப்ஸ் எல்லாம் கைகட்டப்பட்டு பெரும் அவஸ்த்தையிலே இருப்பதால் இந்த கேப்பிலே நாம விளையாண்டாதான் உண்டுன்னு எனக்கு மனசிலே தோணுவதை எல்லாம் குசும்பன் போட்டு தாக்கிட்டு இருக்காரு. அதனால மனசிலே எதையும் நினைக்காமல் திடீர்ன்னு பதிவு போடுவது நல்ல வழின்னு படுது எனக்கு. அப்படி போட்டா மாசம் ரெண்டு பதிவாவது தேறும்.


8. குரங்கு ராதா என்னடான்னா ராயல்டி கேக்கறான். ஏதோ ஆயிரம் ஆயிரமா கொட்டுவது போல. வேணுமின்னா பாதி பின்னூட்டம் குடுக்கலாம். இல்லாட்டி "அதபெகொகு "ன்னு கிசு கிசு மாதிரி அவன் பெயரை வச்சு எழுதலாம். அதாங்க அம்பிகாவின் தங்கை பெயர் கொ ண்ட குரங்கு!


9. பெஸ்ட் ஐடியா! அண்ணாச்சி ஆசீப்பை உசுப்பேத்தி "வலைப்பதிவர் பட்டறை" துபாய்ல நடத்த வச்சி "பட்டரைக்கு இன்னும் 30 நாள், 29 நாள் ன்னு பட்டரை நடக்கும் வரை தினமும் ஒரு பதிவா போடலாம். இது எனக்கு என்னவோ சரியா படுது. துபாய் வலைப்பதிவர்களே திரண்டு வாங்க அண்ணாச்சிய பிடிப்போம். (பதிவு போட்டு) வாழ வழி செய்யுங்க அண்ணாச்சின்னு கேப்போம் வாங்க வாங்க!!

19 comments:

 1. அபி அப்பா,
  அது பட்டறை! முதல்ல உம்மை எல்லாம் கூட்டி வச்சி ஒரு எழுத்துப் பயிற்சிப் பட்டறை கொடுக்கச் சொல்லுங்க அண்ணாச்சியை!

  ReplyDelete
 2. //. ஜி டாக்குல இருக்கும் மெசேஜ்ஜை பதிவா போடலாம்ன்னு பார்த்தா வெட்டி, இளா எல்லாம் "எங்க பொழப்பை கெடுக்காதே"ன்னு கத்துவாங்க. இந்த ஐடியாவும் வீண்.//
  இளாவுக்கு என்ன வேலை இப்போன்னு உங்களுக்கே தெரியும். அதான் வரதே இல்லே.

  வெட்டிப்பயலை தொந்தரவு பண்ணினா பிற்காலத்துல உமக்கு.........

  ReplyDelete
 3. //பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டாத்தான் வலைச்சரம் ஆசிரியர்ன்னு///


  அட அப்படியாஆஆஆஆஆ!?!?!?!?

  டூ முத்துலெட்சுமியக்கா!

  அண்ணாத்த சொல்றது உண்மையா அக்கா?

  ReplyDelete
 4. இப்ப வியாழகிழமைன்னாலே ரெண்டாஆஆஆஆ

  ReplyDelete
 5. //எனக்கு மனசிலே தோணுவதை எல்லாம் குசும்பன் போட்டு தாக்கிட்டு இருக்காரு. //

  அப்பன்னா குசும்பன் உங்க மனசாட்சியா?

  ReplyDelete
 6. //பொன்ஸ்~~Poorna said...
  அபி அப்பா,
  அது பட்டறை! முதல்ல உம்மை எல்லாம் கூட்டி வச்சி ஒரு எழுத்துப் பயிற்சிப் பட்டறை கொடுக்கச் சொல்லுங்க அண்ணாச்சியை
  //

  ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

  ஆமாம்! ஆமாம்!!
  முதல்ல எழுத்துப்பயிற்சி பட்டறைன்னு சொல்லி ஒரு மாசம் ஓட்டிட்டு அப்புறமா
  வலைபதிவர் பயிற்சி பட்டறை ஒரு மாசம் சூப்பர்....!

  ReplyDelete
 7. Siபதிவு போட மேட்டரே இல்லனு சொல்லி ஒரு பதிவு போட்டிங்க பாருங்க.. இங்க தான் நீங்க ஒரு மிக சிறந்த தமிழ் வலைப்பதிவாளர் என்பதை நிருபித்து விட்டீர்கள்

  ReplyDelete
 8. //முதல்ல உம்மை எல்லாம் கூட்டி வச்சி ஒரு எழுத்துப் பயிற்சிப் பட்டறை கொடுக்கச் சொல்லுங்க அண்ணாச்சியை!//
  ஓஹ், டேமில் படிங்க மொதள்ள. அப்புரம் பேஷிக்கழாம் மீத்தியை

  ReplyDelete
 9. இளா! உங்க தலைய நீட்டுங்க சத்தியம், சிகப்பு சுவரொட்டியோ, தங்க கட்டி வடிகட்டியோ இப்போது என் வசம் இல்லை!!!!

  ReplyDelete
 10. வாங்க பொன்ஸ்! ரை, றை எல்லாம் இருக்கட்டும், அதான் உலகத்துக்குமே தெரியுமே! உங்க கருத்து என்னா?? அதை சொல்லுங்கப்பா!!!

  ReplyDelete
 11. பேசாம என்னப்போல வீட்டில் உக்காந்துக்கிட்டு தலையை மட்டும் திருப்பிக் கண்ணைச் சுழற்றிக்கிட்டு இங்கேயும் அங்கேயும், வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலுமாப் பாருங்க. எதாவது மேட்டர் தேறாம இருக்காது:-))))

  ReplyDelete
 12. அடடே அடடே.. ஐடியா மணியா இருக்கீங்களே.... கிசுகிசு குடுத்த மாதிரியும் ஆச்சி... நம்ம கைவசம் மேட்டர் ஒன்னுமில்லைன்னு சொன்ன மாதிரியும் ஆச்சி. அபி அப்பா, உங்க கிட்ட பாடம் கத்துக்க எத்தனை பின்னூட்டம் போடனும்?

  ReplyDelete
 13. //Siபதிவு போட மேட்டரே இல்லனு சொல்லி ஒரு பதிவு போட்டிங்க பாருங்க.. இங்க தான் நீங்க ஒரு மிக சிறந்த தமிழ் வலைப்பதிவாளர் என்பதை நிருபித்து விட்டீர்கள//

  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 14. வருகைப்பதிவு!!!

  ReplyDelete
 15. கடமை பதிவுக்கு கடமை பின்னூட்டம் ;-))

  அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;)))

  ReplyDelete
 16. //
  நாகை சிவா said...
  பதிவு போட மேட்டரே இல்லனு சொல்லி ஒரு பதிவு போட்டிங்க பாருங்க.. இங்க தான் நீங்க ஒரு மிக சிறந்த தமிழ் வலைப்பதிவாளர் என்பதை நிருபித்து விட்டீர்கள்
  //

  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 17. மங்களூர் சிவா said...

  //
  நாகை சிவா said...
  பதிவு போட மேட்டரே இல்லனு சொல்லி ஒரு பதிவு போட்டிங்க பாருங்க.. இங்க தான் நீங்க ஒரு மிக சிறந்த தமிழ் வலைப்பதிவாளர் என்பதை நிருபித்து விட்டீர்கள்
  //

  ரிப்பீட்டேய்

  ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டெய்ய்ய்ய்

  ReplyDelete
 18. பிரசண்டுங்க்கோ.....

  ReplyDelete
 19. அண்ணா.. 'அதபெகொகு' ன்னா இதான் அர்த்தமா? ரொம்ப நாள் கழிச்சு வாய் விட்டு சிரிச்சேன். :))

  //Siபதிவு போட மேட்டரே இல்லனு சொல்லி ஒரு பதிவு போட்டிங்க பாருங்க.. இங்க தான் நீங்க ஒரு மிக சிறந்த தமிழ் வலைப்பதிவாளர் என்பதை நிருபித்து விட்டீர்கள்//

  ரிப்பீட்டேய்!!

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))