பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 29, 2007

ஊதிய உயர்வு வேண்டி விண்ணப்பம்!!!

காலை எழுந்ததுமே "ஆஹா இன்னிக்கு வியாழக்கிழமையா"ன்னு ஒரு வித சந்தோஷமா இருந்துச்சு. வேலைக்கு போனதுமே ஒரு வித அசமஞ்சமா இருந்துச்சு. நேரம் நகரவேயில்லை. மாச கடைசி வேறயா, இன்னிக்குன்னு பார்த்து வியாழகிழமை வந்துடுச்சேன்னு சலிச்சு கிட்டே எதுக்கும் சம்பளம் கிரெடிட் ஆகிட்டுதான்ன்னு 3138888 க்கு போன் பண்ணினேன். "your account balance is _____ in credit, to repeate your balance press 1"ன்னு கம்பியூட்டர் பெண் கிளி சொன்னுச்சு. சரி எப்படியும் இன்னிக்கு கிரெடிட் ஆகிடும்ன்னு கொஞ்ச நேரம் கழித்து போன் பண்ணினேன் அப்பவும் அதே பதில் தான். முதல் முறை செல்லமாக சொன்ன அந்த பெண் கிளி என்னுடைய 18வது போனில் கர கர குரலில் சொன்னதையும் நான் பொருட்படுத்தாமல் கஜினி முகமதுவாக இருந்தேன். கிட்டத்தட்ட 32 வது போனில் "நாதாறி என்னய மத்தவங்களுக்கும் பதில் சொல்ல வுடுடா...கர்...தூஊஊஊஉ"ன்னு சொல்லவே, கேபின் சாத்தியிருப்பதை உருதி செய்து கொண்டு முகத்தை துடைத்து கொண்டு போனில் மொக்கை போடலாம் யாருக்காவதுன்னு நெனச்சுகிட்டு குசும்பனுக்கு போன் பண்ணினேன். "உங்க அக்கவுண்ட் பேலன்ஸ் மைனஸ் 3 திர்காம், தாங்கள் பேங்க் கம்பியூட்டர் பெண்கிளியிடம் சத்தெடுத்ததை போல என்னிடம் வம்பு பண்ணினா வெட்டிடுவேன் தங்கள் அழைப்புக்கு நன்றி"ன்னு முதல்ல இங்கிலீஷ்லயும் அதையே அரபியிலயும் சொல்லிடுச்சு.

சரி நாம் இதுக்கு பழிக்கு பழி வாங்கியே தீரனும்ன்னு நெனச்சு கிட்டு இருக்கும் போதே ஒரு தமிழ் நண்பன் லொஜிஸ்டிக் இஞினியர் வந்தான். " என்னய்யா டல்லா இருக்க வியாழக்கிழமையும் அதுவுமா...சும்மாதான இருக்க எனக்கு ஒரு லெட்டர் டைப் பண்ணி குடு, நான் இன்னிக்கு ஹெட் ஆபீஸ் போறேன். அங்க குடுக்கனும்"ன்னு சொன்னான். "என்ன லெட்டர்?'ன்னு கேட்டேன். "சேலரி இண்கிரி மெண்ட் லெட்டர் தான்! நான் இந்த கம்பெனில கடுமையா உழைக்கிறத எல்லாம் விலா வாரியா சொல்லி அதனால கூடிய சீக்கிரம் இன்கிரிமெண்ட் கொடுக்க சொல்லி எழுதி குடுய்யா மீதி எது எது சேர்க்கனுமே சேர்த்துக்கோ. அதான் பதிவெல்லாம் போடுறியே இட்டு கட்டி எழுது, அந்த ஒரு லெட்டரிலே என வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரணும்"ன்னு சொன்னான். என் கோவத்தை கொஞ்சம் கூட காட்டிக்காம "அடிச்சு வைக்கிறேன் ஹெட்டாபீஸ் போகும் போது வாங்கிட்டு போ"ன்னு சொல்லிட்டு லெட்டர் அடிக்க ஆரம்பிச்சேன்!29/11/07
துபாய்

ஊதிய உயர்வு வேண்டி விண்ணப்பம்

அனுப்புனர்:

(*********)
ஆல் இன் ஆல் அழகுராஜா,
*********
*********

பெறுநர்:

உயர் திரு.**********,
*********
*********
********

உயர் திரு அய்யா,

பொருள்: ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பம்

*********

மேற்படி நான் தங்கள் நிர்வாகத்தில் கடந்த ஆறு வருடங்களாக மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து வருவது சமூகம் தங்களுக்கு தெரிந்ததே.

தங்கள் கார் ஒருமுறை மணலில் சிக்கிய போது நான் பின்பக்கமிருந்து 10 பேரோடு சேர்ந்து நம்ம வடிவேலு காமடி மாதிரி "தள்ளு தள்ளு தள்ளு"ன்னு கூவிகிட்டே தள்ளி விட்டதையோ கார் கிளம்பிய பின் தாங்கள் மொத்த கும்பலையும் பார்த்து "நன்றி"ன்னு சொன்ன போது அது எனக்கு மட்டுமேயான தனிப்பட்ட நன்றி என நான் நினைத்து பெருமை பட்டு கொண்டதையோ எல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்தி ஊதிய உயர்வு கேட்கப்போவதில்லை.அந்த கார் மணலில் சர்வ சாதாரனமாக போகும் கார் என்பதோ, நான் கார் தள்ள உதவிக்கு கூப்பிட்ட பத்து பேரும் கிரீஸ் கையோடு இருந்தவர்கள் என்பதோ தங்கள் உதவியாளர் அடுத்த நாள் சொல்லித்தான் தெரியும்.

அதே போல் நம் நிர்வாகத்தின் இஃப்தார் விருந்தின் போது நோம்பு கஞ்சி உங்க மீசையில் ஒட்டியது பார்த்து நான் துடித்து போய் டிஷ்யூ கொண்டு உங்க மேல் பாய்ந்து மீதி இருந்த கஞ்சியை உங்க கோட் மேல தட்டிவிட்டேனே, அப்போது கூட டிஷ்யூ கொடுக்க வந்த என் நல்ல எண்ணத்தை பாராட்டி "நன்றி" ன்னு பாராட்டினீங்களே அதையெல்லாம் சொல்லி நான் ஊதிய உயர்வு கேட்டால் அது அசிங்கம் என்பதை நானும் அறிவேன்!

மேலும் ஒருமுறை தங்கள் தலையில் மாட்டிகொண்ட தலைகவசத்தை கழட்ட நான் உதவி செய்து அந்த என் பெரு முயற்சியில் உங்கள் விக்கும் சேர்ந்து வந்துவிட்டதே அப்போது என்னை நீங்கள் "உற்று" பார்த்ததை எண்ணி பல நாள் பலபேரிடம் சொல்லி சந்தோஷப்பட்டேன்.அப்போது கூட தாங்கள் என் பெயரையும், என் அடையாள அட்டை எண்ணையும் குறித்து வாங்கி கொண்டீர்கள், அத்தனை அன்பு என் மேல் உங்களுக்கு. அதை எல்லாம் சொல்லி நான் ஊதிய உயர்வு கேட்கப்போவதில்லை."பின் எதற்காக தர வேண்டும்?" என தாங்கள் நினைப்பது புரிகின்றது.

"உயர"மான இடத்தில் அமர்ந்திருக்கும் டவர் கிரேன் ஆப்பரேட்டரை கூட நிர்வாகத்தின் தொலை பேசி வழி கூப்பிடாமல் விசில் "ஊதி"யே கூப்பிட்டு வேலை வாங்கும் எனக்கு நீங்கள் ஏன் "ஊதி"ய உயர்வு தரக்கூடாது? இதை சிந்தித்து சீர் தூக்கி பார்த்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள

****************
ஆல் இன் ஆல் அழகுராஜா


**********************************************************************************************

லெட்டர் டைப் செய்து கவரில் போட்டு, நண்பன் வந்த பின்ன கொடுத்தேன். படித்து பார்த்து கையெழுத்து போட்டு கொடுக்க சொன்னதுக்கு, "யோவ், உன் லெட்டர் டிராஃப்டிங்க சந்தேகப்பட்டா நானெல்லாம் மனுஷனே இல்லய்யா, படிக்க நேரமில்ல ஹெட் ஆபீஸ் அவசரமா போறேன். அங்க போய் கையெழுத்து போட்டுக்கறேன்"ன்னு சொல்லிட்டு ஓடிட்டான். நாளை நடப்பதை யார் அறிவார்!!!

8 comments:

 1. :)) இது உங்களுக்கு

  :(( இது உங்க நண்பருக்கு

  ReplyDelete
 2. நீ அவலைக் கொண்டுவா, நான் உமியைக் கொண்டு வரேன் நாம 'ஊதி' 'ஊதி' சாப்பிடலாம் எனச் சொல்வது உம்ம நண்பருக்குத் தெரியாது போல!

  ReplyDelete
 3. இப்படி அடுத்தவனை கமுத்திரதுல உங்களுக்கு இருக்கிற வக்ர சந்தோசமும், பாவப்பட்ட அந்த புண்ணிய்வான் இன்னும் உங்களை நம்பறார்னு பார்த்தா .. சிப்பு சிப்பா வருது

  ReplyDelete
 4. உங்களை சொல்லி குற்றமே இல்லை. உங்கிட்ட விண்ணப்பக் கடிதம் அடிச்சு கேட்டான் பாருங்க.. அந்த ஆள சொல்லனும்...

  சேருவார் சரி இல்லான சேது சமுத்திரத்தில் முங்கி எழுந்தாலும் XXX விடாதாம்.

  ReplyDelete
 5. //சேருவார் சரி இல்லேன்னா மகா சமுத்திரத்தில் முங்கி எழுந்தாலும் XXX விடாதாம்.//

  ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

  ReplyDelete
 6. உம்மைப் போன்ற நண்பர் இருக்கையில் எதிரியும் தேவையோ எமக்கு? ஹிஹி. "நண்பர்" ஊதப்பட்டு விடுவார் என்பது உறுதி. ப்ரௌன் நோஸிங் நல்லா எழுதியிருக்கீங்க.

  //நாகை சிவா said...
  சேருவார் சரி இல்லான சேது சமுத்திரத்தில் முங்கி எழுந்தாலும் XXX விடாதாம்.//

  ஆயில்யன் said...
  //சேருவார் சரி இல்லேன்னா மகா சமுத்திரத்தில் முங்கி எழுந்தாலும் XXX விடாதாம்.//

  சேதுவை ம‌காவாக்கிய‌ ஆயில்ய‌னைக் க‌ண்டிக்கிறோம். அபி அப்பா மூளையைப் பிழிந்து அல‌சிய‌தை அர‌சிய‌லாக்குகிறார்:‍)))

  ReplyDelete
 7. ஆயில்யன் said...
  //சேருவார் சரி இல்லேன்னா மகா சமுத்திரத்தில் முங்கி எழுந்தாலும் XXX விடாதாம்.//

  ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))