பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 29, 2008

லாஜிக் இல்லா மேஜிக்!!!

இந்த கலையை முழு நேர தொழிலாக கொண்ட கலைஞர்களும் உண்டு. அவ்வப்போது சுத்தி இருப்பவர்கள் கொஞ்சம் சீரியசாக இருக்கும் போது நடத்தி காட்டி அசத்தும் கலைஞர்களும் உண்டு. எனக்கும் கொஞ்சம் தெரியும் என்பதால் நம்ம குட்டீஸ்களுக்கு ஒரு நிகழ்ச்சி மாதிரி நடத்திக் காட்டி கற்று கொடுக்கலாம் என்பதற்காகவே இந்த பதிவு.

நிகழ்ச்சியில் பங்கு பெறும் குட்டீஸ் நிலாகுட்டி, பேபி பவன், பொடியன், மாதினி, அபிபாப்பா, அவந்திகா கூடவே நட்ராஜ் என்கிற நட்டு பாப்பா இவர்களோடு நானும். ஒரு நிகழ்ச்சின்னா தான் நான் அந்த பாத்திரமாவே ஆகிறேனோ இல்லியோ அட்லீஸ்ட் காஸ்ட்டியூமாவது அப்படி இருக்க வேண்டாமா. "ரெண்டு" படத்திலே நம்ம கைப்புள்ள போட்ட காஸ்ட்யூம் எல்லாம் போட்டுகிட்டு ஆஜராகியாச்சு.

பசங்க எல்லாம் ஒவ்வொருத்தரா வர நம்ம நட்டுவும் ரிவர்ஸ் கீரிலேயே வந்து சேர்ந்துட்டான்.

அபிஅப்பா: பசங்களா, வந்தாச்சா! நான் இப்போ செய்ய போவதை நல்லா கவனிச்சுகோங்க! இதோ இந்த சீட்டு கட்டிலே எத்தனை சீட்டு இருக்குதோ அத்தனையும் நான் நல்லா கலைச்சுடுவேன். பின்ன உங்க கிட்ட ஆளுக்கு ஒரு சீட்டு தருவேன். அதிலே என்ன படம் இருக்குன்னு எனக்கு நீங்க காமிக்க கூடாது. இருங்க நான் இப்ப நல்லா கலைக்கிறேன்.(நன்றாக கலைக்கப்பட்டது)

அவந்தி: அண்ணா, எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை. குடுங்க நானும் ஒரு தடவை நல்லா கலைக்கிறேன்.

நிலா: அக்கா அப்புடி போடு அருவாள, இன்னிக்கு அபிஅப்பாவுக்கு டின்னுதான்.

அபி: வெல் செட் நிலா குட்டி, அவந்தி அக்கா நல்லா கலைச்சு குடுங்க

நான் மனதுக்குள்: அகராதி புடிச்சதுக்களா இருக்குதுங்களே!

நான்: சரி நல்லா கலைச்சுடுங்க, பின்னால கவர்னரா ஆகிடலாம். (கலைத்து என் கைக்கு கட்டு வருகிறது)

நான்: சரி நான் இப்ப அந்த சீட்டு கட்டை நான் உங்க கிட்ட காட்டும் போது ஆளுக்கு ஒரு சீட்டு கையில எடுத்துக்கணும். அதிலே என்ன படம் இருக்குன்னு என் கிட்ட காமிக்க கூடாது. சரியா?

எல்லாரும் ஆளுக்கு ஒரு சீட்டை எடுத்துகறாங்க.

நான்: சரி இப்ப எல்லாரும் அவங்க அவங்க சீட்டில் என்ன படம் இருக்குன்னு பார்த்துகோங்க, எனக்கு சீட்டின் பின் பக்கத்தை காட்டுங்க. என்ன படம் இருக்கு அதிலேன்னு மனசுல வச்சுகோங்க.

எல்லோரும் சீட்டின் பின் பக்கம் காட்ட நட்டு மட்டும் முன் பக்கத்தை காட்ட அதிலே டைமன் ராணி இருக்கு. உடனே பொடியன் அவசர அவசரமாக நட்ராஜ் சீட்டை வாங்கி திருப்பி சொருகி விடுறான் தம்பி கையிலே.

நான்: இப்போ எல்லோரும் உங்க சீட்டிலே என்ன படம் இருக்குன்னு பார்த்தாச்சா, அதை மனசிலே வச்சு கிட்டு சீட்டை கிழிச்...

பேபி பவன்: அங்கிள் நான் கிழிச்சுட்டேன் 234 தொகுதியா ஸாரி பகுதியா

நான்: அடங்கொய்யால! நான் சொல்லியே முடிக்கலை அதுக்குள்ள 234 தொகுதியா ச்சீ பகுதியா கிழிச்சுட்டியா ..சரி அபி பாப்பாவுக்கு 22 பகுதி குறையுதாம் அவளுக்கு குடு.

அவந்தி: அண்ணா ரெக்டாங்கிலா கிழிக்கனுமா, ஸ்கொயரா கிழிக்கனுமா, ட்ரையாங்கிலா கிழிக்கனுமா?

நான்: அவந்தி, நேரா மேத்ஸ் டியூஷன்ல இருந்து வந்தா இப்படில்லாம் சந்தேகம் வரும். உன்னை டார்ச்சர் பண்ணும் உன் கிளாஸ் டீச்சரை மனசிலே வச்சிகிட்டு கிழி

மாதினி: அங்கிள்! நான் என்ன மனசுல நினைச்சுகிட்டு கிழிக்கனும்!

நான்: உஸ் அப்பாடா இப்பவே கண்னை கட்டுதே,! மாதினி, "மானாட மயிலாட"ன்னு முருகன் ஸ்லோகம் நெனச்சு கிட்டு கிழி. அப்பதான் கிழி கிழி கிழின்னு கிழியும்

நிலா: அங்கிள அந்த ஸ்லோகம் "மானாட மயிலாட" இல்ல "வேலாட மயிலாட" ஹய்யோ ஹய்யோ!

அபி: அப்பா! நட்டு உங்களுக்கு முன்னமே நட்டு மாஜிக் பண்ணிட்டான்.

நான்: என்னது மாஜிக்கா, என்னா மாஜிக்

அபி: நீங்க கொடுத்த சீட்டிலே படம் இருந்துச்சா அது இப்போ மறைஞ்சிடுச்சு.

நான்: அய்யோ, மிஸ்டர் நட்ராஜ் எங்க உங்க சீட்டை காமிங்க!

நட்டு பாதி சீட்டை வாயில் விட்டுகிட்டு ஜொள் ஒழுகிகிட்டு இருக்கு. சீட்டை காமிக்க சொன்னா "மூஞ்சி" காமிக்குது!

நான்: நட்டு சாரே, தனி மனித தாக்குதல் இங்க வேண்டாம், இப்ப எதுக்கு "துர்கா" மூஞ்சிய காமிக்கிறீங்க, உங்க சீட்டை காமிங்க

அதுக்குள்ளே மாதினி நட்ராஜ் வாயிலிருந்து சீட்டை பிடுங்க அதுல இருந்த டைமன் ராணி ஜொள்ளிலே கரைச்சு போய் பிளாங்க்கா இருக்கு!

நான்: பசங்களா, அது மாஜிக் இல்ல நட்ராஜ் ராணிய ஜொள்ளுவிட்டு கரைச்சுட்டார். இப்ப என்னா பண்ணனும் ஒருத்தர் தலையில இன்னொருத்தர் கிழிச்ச சீட்டை போட்டுக்கனும்!

எல்லோரும் போட்டுக்கறாங்க!

கோரஸ்: அடுத்து என்னா செய்யணும்????

நான்: சமத்தா எல்லாரும் வீட்டுக்கு போய் படிச்சுட்டு சாப்பிட்டுட்டு தூங்கனும்!

அவந்தி: அப்ப மாஜிக்?

நான்: என்னது மாஜிக்கா?????

அபி: எனக்கு அப்பவே மைல்டா ஒரு டவுட் இருந்துச்சுப்பா உங்க மேல!

பொடியன்: இங்க என்னா நடக்குது?

மாதினி: அதானே, ஏதோ அங்கிள் மாஜிக் கத்து கொடுக்க போறார்ன்னு நம்பி வந்தேன்!

நிலாகுட்டி: மொவனே, நட்டுக்காக பார்க்கிறேன். காதை எப்படி கடிச்சு துப்பணும்ன்னு அபிஅக்கா சொல்லி குடுத்திருக்காங்க, ஈரோடு பக்கம் வந்து தான ஆகணும்!

பேபிபவன்: அதானே! வாங்க வச்சிக்கறோம்!

நான்: ஸ்டாப் ஸ்டாப்... நான் மாஜிக் சொல்லித்தரேன் வாங்கன்னு எப்பவாச்சும் சொன்னனா?

அவந்தி: அப்ப முதல் பாராவிலே பெரிய பில்டப்பு கொடுத்தீங்களே! "இந்த கலையை முழு நேர தொழிலாக கொண்ட கலைஞர்களும் உண்டு. அவ்வப்போது சுத்தி இருப்பவர்கள் கொஞ்சம் சீரியசாக இருக்கும் போது நடத்தி காட்டி அசத்தும் கலைஞர்களும் உண்டு. எனக்கும் கொஞ்சம் தெரியும் என்பதால் நம்ம குட்டீஸ்களுக்கு ஒரு நிகழ்ச்சி மாதிரி நடத்திக்காட்டி கற்று கொடுக்கலாம் என்பதற்காகவே இந்த பதிவு." இப்படி பில்டப்பு கொடுத்தீங்களே!

நான்: ஓ அதுவா, மொக்கை போடுவது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்ன்னு வலைஞர்களுக்கு அதுவும் உங்களை போல வளரும் வலைஞர்களுக்கு சொல்லி கொடுக்கலாம்ன்னு அப்படி சொன்னேன். வழக்கம் போல ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் ஆகி கலைஞர்ன்னு ஆகிடுச்சு. அதை வச்சு நீங்களே மாஜிக்குன்னு நெனச்சுகிட்டா நானா பொறுப்பு!

நட்டு: நற நற நற.....

நான்: சார், உங்களுக்கு பேர் வச்சது வேணா கீதாபாட்டியா இருக்கலாம், அதுக்காக "நற நற" சொல்றதா, அதுக்கு காப்பிரைட் இப்பவும் அவங்க கிட்டதான் இருக்கு தெரியுமா?

அபி: இன்னும் சொல்ல போனா இன்னும் பல்லே முளைக்கலை, வேணும்னா "நழ நழ"ன்னு ஜொல்லு தம்பி!


*****************************திஸ்கி: யார் கூப்பிட்டாங்கன்னு தெரியாது நானும் என் பங்குக்கு மொக்கை போட்டாச்சு
41 comments:

 1. அட அட அட சூப்பரு... இருங்க பதிவு படிச்சிட்டி வரேன்

  ReplyDelete
 2. நல்லா இருக்கு வாழ்த்துக்கள் பவன் சார்பாக

  ReplyDelete
 3. அண்ணா உமக்கு ஏன் இம்புட்டு கொல வெறி?

  ReplyDelete
 4. போன மச்சான் திரும்பி வந்தான் பூ மனத்தோட

  ReplyDelete
 5. மொக்கையோ என்னவோ, கொஞ்ச நேரம் சிரிச்சேன். அது போதும்.

  ReplyDelete
 6. குட்டிகளுடன் கும்மாளம் போட்டிருக்கீங்க. ஹா ஹா ஹா... நல்லாயிருக்குது. இதுல நட்டு சீட்டை மென்னு மூஞ்சை காமிச்சது தூக்கல். :-)

  ReplyDelete
 7. தல

  ரொம்ப நாளைக்கு பிறகு மொக்கை+காமெடி...சூப்பர் ;)

  ReplyDelete
 8. ஆகா ஆகா - இது தான் கும்மி ரியலாவே - நகைச்சுவை தூக்கல் - சிரிப்பு தாங்கலே - நட்டு துர்கா மாதிரி காட்டுறது ச்சூப்பர் - நற நற - கீதாகிட்டே நட்டு அனுமதி வாங்கி இருப்பான். - நள நள நல்லாவெ இருக்கு

  ReplyDelete
 9. நகைச்சுவை இல்லை ஆனால் மொக்கை அதிகம் ....

  ReplyDelete
 10. அபிஅப்பா ஃபுல் பார்ம்க்கு வந்துட்டீங்க, தூள் கிளப்புங்க

  ReplyDelete
 11. நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் கடி ரெடியா இருக்கு :P

  ReplyDelete
 12. //நட்டுவும் ரிவர்ஸ் கீரிலேயே வந்து சேர்ந்துட்டான்.//
  அந்த அழகை ஒரு விடியோ பிடிச்சு போட்டா என்ன? சூப்பரா இருக்குமில்ல?

  ReplyDelete
 13. அபி அப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல நகைச்சுவை படிக்க வச்சுதுக்கு நன்றி:)
  அதுவும் நட்டுவோட நழ நழ ப்ரமாதம்.!!!

  ReplyDelete
 14. அபி வந்தாலே கலகலப்பு தான்.. நட்டு நழநழன்னு சொல்லுடான்னு என்னமா ஜோக்கடிக்கறா..

  ReplyDelete
 15. நான்: சார், உங்களுக்கு பேர் வச்சது வேணா கீதாபாட்டியா இருக்கலாம், அதுக்காக "நற நற" சொல்றதா, அதுக்கு காப்பிரைட் இப்பவும் அவங்க கிட்டதான் இருக்கு தெரியுமா?

  grrrrrrrrrrrrrrrrr nara nara nara naranara nara nara, ithukku thana from yesterday you are forcing me to read this one? grrrrrrrrrrrrr

  ReplyDelete
 16. அட அட அட சூப்பரு... இருங்க பதிவு படிச்சிட்டி வரேன்

  ReplyDelete
 17. நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. //
  துர்கா said...
  அண்ணா உமக்கு ஏன் இம்புட்டு கொல வெறி?
  //
  அதானே!!

  ReplyDelete
 19. மொக்கையோ என்னவோ, கொஞ்ச நேரம் சிரிச்சேன். அது போதும்.

  ReplyDelete
 20. குட்டிகளுடன் கும்மாளம் போட்டிருக்கீங்க. ஹா ஹா ஹா... நல்லாயிருக்குது. இதுல நட்டு சீட்டை மென்னு மூஞ்சை காமிச்சது தூக்கல்

  ReplyDelete
 21. ரொம்ப நாளைக்கு பிறகு மொக்கை+காமெடி...சூப்பர் ;)

  ReplyDelete
 22. அபிஅப்பா ஃபுல் பார்ம்க்கு வந்துட்டீங்க, தூள் கிளப்புங்க

  ReplyDelete
 23. அபி வந்தாலே கலகலப்பு தான்.. நட்டு நழநழன்னு சொல்லுடான்னு என்னமா ஜோக்கடிக்கறா..

  ReplyDelete
 24. என்ன சமாசாரம்? மங்களுர் சிவா மத்தவங்க காமென்ட் எல்லாம் திருப்பியும் எழுதியிருக்கார்?

  ReplyDelete
 25. //
  திவா said...
  என்ன சமாசாரம்? மங்களுர் சிவா மத்தவங்க காமென்ட் எல்லாம் திருப்பியும் எழுதியிருக்கார்?
  //
  ஓ. நான் எழுதறதுக்கு முன்னாடியே இந்த கமெண்ட் எல்லாம் போட்டுட்டாங்களா???

  அவ்வ்வ்

  ReplyDelete
 26. இம்சை இப்படி எனக்கே அல்வா தரலாமா!!!:-))

  ReplyDelete
 27. துர்க்கா நீ என்னிடம் கேட்க கூடாத கேள்வி! மூஞ்சி காமிச்சது உன் மருமகன்!:::)

  ReplyDelete
 28. அனானி புது வாசத்தோட வந்தேன்னு ஒத்துகிட்டா சரிதான்!!!

  ReplyDelete
 29. திவா! சிரிச்சா போதும் சந்தோஷம்!!!

  ReplyDelete
 30. காட்டாறு! வாங்கப்பா! நட்டு சீட்டை மட்டுமா வாயிலே வைக்குது! இன்னும் சொல்ல போனா செம ரகலையா இருக்கும் கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்!!!!

  ReplyDelete
 31. நைட் ராம்ஸ்! என்னப்பா முடியலை???

  ReplyDelete
 32. கோபி நீ ரிப்பீட்டு போட்டாதான் அழகு! அதை விட்டுட்டு கருத்து சொன்னா மனசு ஏத்துக்க மாட்டங்குது!!:-))

  ReplyDelete
 33. சீனா சார்! ழ அடிக்கனும்ன்னா za அடிங்க! வருகைக்கு மிக்க நன்றி!!!:-))

  ReplyDelete
 34. அனானிக்கு நன்றி!!! தெளிவா போட்டிருக்கேனே இது மொக்கைன்னு!!

  ReplyDelete
 35. நிலா குட்டி அவிஅப்பா எப்பவும் ஃபுல் ஃபார்ம் தான் வேணுமின்னா அப்பாகிட்ட கேளுப்பா!

  ReplyDelete
 36. திவா! சீக்கிரம் மெயில் அனுப்பறேன்!!!

  ReplyDelete
 37. வல்லிம்மா எப்படி! உங்க சந்தோஷத்தை இரட்டிப்பாக்கினேன் பாத்தீங்கலா! நழ நழ சீக்கிரம் உங்க துபாய் வீட்டிலும்!!! ஆமா!!!

  ReplyDelete
 38. முத்துலெஷ்மி வாங்க! ஆமா அபி வந்தா கலகலப்புதான் ஒத்துக்கறேன்!!!

  ReplyDelete
 39. //சீனா சார்! ழ அடிக்கனும்ன்னா za அடிங்க! //

  அபிக்கண்ணு - அப்பாகிட்டே சொல்லி வை - தட்டச்சுப் பிழை - அதுவும் என்கிட்டேயா - யாரு - உங்கப்பா - பொங்கள் பண்ண்றவரு - ம்ம்ம் - நான்ன் நள நள தான் அடிச்சேன் - நழ நழ அடிக்கலே - நட்டு ஒரு தடவை இப்ப்டி சொல்வான் அப்புறாம் அப்ப்டி சொல்வான் - உங்கப்பாக்கு இதெல்லாம் புரியாது - ஏன் என் கிட்டே வெள்ளாடுறாரு அவரு

  ReplyDelete
 40. அட! நீங்க சாதாரனமா பின்னூட்டத்துக்கு பதில் போடறதில்லைன்னு நினைச்சேன்!
  //திவா! சீக்கிரம் மெயில் அனுப்பறேன்!!!//

  காத்துட்டுருக்கேன்!

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))