பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 19, 2008

கண்மணி டீச்சருக்காகவும், பாஸ்டன் பாலா அவர்களுக்கும் - நான் எழுதியதில் பிடித்தது!!!

கண்மணி டீச்சரும், பாஸ்டன் பாலாவும் அழைத்ததின் பேரில் இந்த எழுதியதில் பிடித்த பதிவு. சென்ற வருடம் இந்த நேரத்தில் தான் நான் எழுத வந்தேன். "சாமிதான் காப்பாத்தணும்" என எழுத ஆரம்பித்து, நான்கைந்து பேர் வந்து எட்டிபார்த்து பின்னூட்டம் போட்டவுடன் ஜில்லுன்னு மனசு குதிக்க ஆரம்பித்து விட்டது. மேலும் நான் எந்த வித கனமான விஷயங்களையும் எழுதாமல் "சும்மா லூசா விடு மாமே" என்கிற பாணியில் எழுதியதால் கணிசமாக நிரம்பியது பின்னூட்ட பெட்டி.

அபிபாப்பாவுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு அதிகம் தான். இப்போது கூட போனில் "தம்பி மண்டி போட்டு நகர்கிறானா?" என கேட்டதற்கு "ம்.. ஆனா தம்பிக்கு ரிவர்ஸ் கீர் தாம்ப்பா விழுது, இன்னும் ஃபிரண்ட் கீர் சரியா விழலை"என்று தம்பி பின்பக்கமாக நகர்வதை கேஷுவலாக சொல்கிறாள். அதனால் தானோ என்னவோ அவள் பற்றின என் பதிவுகள் சூப்பர் ஹிட் ஆகியது. "பாரதிக்கும் பாரத மாதாவுக்கும் என்ன பிரச்சனை" பதிவு எண் 13 வது பதிவு. 134 பின்னூட்டங்களை வாங்கி கொடுத்த பதிவு. பலமுறை "வலைச்சரத்தில் பரிந்துரைக்கப்பட்ட பதிவு. பல பதிவர்களை என் பக்கம் திருப்பி விட்ட பதிவு. அந்த பதிவில் "பழம் எனக்குத்தான் என்னும் டயலாக் 17 பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தது" என்ற வசனம் எனக்கே பிடித்து இருந்தது. அது போல கிளைமாக்ஸும், அதில் பாப்பா என்னிடம் பேசும் டயலாக்கும் "அப்ப நான் தான் லூசா" என்ற என் டயலாக்கும் எல்லோருக்கும் பிடித்து இருந்தது.
அது போல "அபிபாப்பாவும் அஞ்சு ஜார்ஜும்" பதிவு. இந்த பதிவும் பலமுறை வலைச்சரத்தில் வந்து எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. வ.வா.சங்க போட்டியிலும் இந்த பதிவு வெற்றி பெற்றது. அந்த பதிவில் பாப்பா பெரிய குழிகரண்டியில் நெல்லிக்காய் அளவினால எலுமிச்சம் பழம் வைத்து போட்டிக்கு போனதும் வீட்டுக்கு வந்து என் அம்மாவிடம் கடையில் வாங்கிய பரிசுகளை சொல்வதும் எனக்கு பிடித்த நிகழ்வுகள்.

அபிபாப்பாவின் "பசுவுக்கு சவாலா" பதிவும் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததோடு இல்லாமல் நான் சிறந்த காமடி பதிவராக நினைக்கும் டுபுக்கு அவர்களால் "தேசி பண்டிட்டில்" இணைக்கும் அளவு இருந்தது அந்த பதிவு. மீன் விற்க வந்த மீன்காரியிடம் பாப்பா 100 முறை குருவணக்கம் வைத்து மீன் காய்ந்து கருவாடு ஆகி, போகும் போது "கருவாடு வாங்கலையோ கருவாடு" என கூவிக்கொண்டு போகும் காட்சி எனக்கு பிடித்தது.

அது போல என் நண்பன் குரங்கு ராதாவை வைத்து எழுதப்பட்ட பதிவுகளும் எனக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. " மன்னார்குடி குரூப்பும்" மீண்டும் டுபுக்கு அவர்களால் தேசிபண்டிட்டில் இணைக்கப்பட்டது. இது அரசியல் சம்பந்த பட்ட பதிவு என நினைத்து சிலர் எட்டி பார்க்காமல் போனது துரதிஷ்டம்.

"குரங்கு ராதாவுக்கு ஒரு கடிதம்" பதிவும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. கீதாம்மா அதற்கு போட்ட ஒரு பின்னூட்டம் "கோப்பெரும் சோழனுக்கும் பிசிராந்தையாரின் நட்பு போல அல்லவா இருக்கின்றது உங்கள் நட்பு" என பின்னூட்டம் போட்டிருந்தார்கள். அதற்கு லொடுக்கு அவர்கள் "ஏன் அவர்களும் டாய்லெட்டில் சாந்தி ஐ லவ் யூ என எழுதினார்களா?" என பின்னூட்டம் போட்டிருந்தார். நான் நீண்ட நாள் அதை நினைத்து சிரித்ததுண்டு.

"ராதா குரங்கு ராதாவாக மாறிய கதை" பதிவில் நாகை சிவா பின்னூட்டத்தில் "ராதா குரங்கு ராதாவாக ஆக்கப்பட்ட கதை" என தலைப்பிட்டு இருக்கணும் என பின்னூட்டம் போட்டதை நான் வெகுவாக ரசித்தேன்.

இப்படியாக எழுதி கொண்டிருந்த நேரத்தில் "டாக்டர் ராமமூர்த்தி M.B.B.S" பதிவு என் மயிலாடுதுறை சக பதிவர்கள் அத்தனை பேரையும் என் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதில் எனக்கு கிடைத்த்த லாபாம் டாக்டர் டெல்பின் அம்மா அவர்களின் நட்பு.

அது போல என் நட்சத்திர வாரத்தில் "கல்யாண வீட்டுக்கு சமைக்க போன கதை" எனக்கு மிகவும் பிடித்த என் பதிவுகளில் ஒன்று. அதே நட்சத்திர வாரத்தில் சக பதிவர்களை சரளமாக கலாய்க்கும் நண்பர் நாமக்கல் சிபியின் "மாதங்களில் அவள் மார்கழி-விமர்சனம்" எனக்கு பிடித்து இருந்தது.

நான் கவிதை எழுதுகிறேன் என கையை சுட்டு கொண்டதும் உண்டு. சமையல்குறிப்பை ரொமான்சாக சொல்கிறேன் என அடி வாங்கியதும் உண்டு.

நட்சத்திர வாரத்தில் எழுதிய "திருநங்கை கண்ணகி" பதிவும் எனக்கு மனதுக்கு திருப்தி தந்த பதிவு. பதிவு எழுதி நீண்ட நாட்கள் கழித்து லிவிங் ஸ்மைல் வித்யாவிடம் இருந்து "பதிவு நல்லா இருக்கு" என்று ஒரு பின்னூட்டம் வந்தது. மிக்க நன்றி வித்யா!

நான் சமீபத்தில் எழுதிய "பொங்கல் சாப்பிடுவது எப்படி?" பதிவும் "காபி சாப்பிடுவது எப்படி" பதிவும் என்க்கு பிடித்தமான பதிவுகள்.

"ஆனந்த விகடனில் அபிஅப்பா" மற்றும் கும்மி பதிவில் எழுதிய "பூங்காவில் அபிஅப்பா" மற்றும் "துபாயில் என் புதிய தோழன்" போன்ற என் மொக்கை பதிவுகளில் "அது மொக்கை தான்" என சான்று அளிக்கும் விதமாக பெனாத்தலார் ஆஜராகி பின்னூட்டம் இட்டிருப்பார். வாழ்க உப்புமா தலைவர் பெனாத்தலார்.

"இவர் ஒரு மல்டி நேஷனல் கம்பனியின் முதலாளி" என நான் எழுதிய பதிவு எனக்கு மிக பெரிய பாராட்டை வாங்கி தந்தது.

கிளைமாக்ஸ்க்கு வருகிறேன். நான் எழுதியதில் ரன்னரப் பதிவு என பார்த்தால் "அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும்". நானும் தங்கமணியும் சாக்கு ரேஸில் அபிபாப்பாவை தூக்கி கொண்டு ஓடும் போது "அப்பா டைகர் பாவம்ப்பா அதையும் தூக்கி சாக்கிலே போடுப்பா" என சொல்வதும் தான் புது ஷூ வாங்கியதை காலை தூக்கி கூட ஓடிவரும் பையனிடம் காட்டி சாக்கின் உள்ளே விழுவதும், பிரின்சிபால் எங்களை பார்த்து " குழந்தைகளுக்கு பேரண்ட்ஸ் ஹெல்ப் பண்ணலாம்ன்னு சொன்னதுக்காக நீங்களே தூக்கிகிட்டு ஓடுவது கொஞ்சமும் நல்லா இல்லை" என திட்டுவதும் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள். ஆக இதுவே என் ரன்னரப் பதிவு.

அப்படி என்றால் வின்னரப் பதிவு எது என கேட்கிறீர்களா?

"ஒரு கிராமத்து நினைவுகள்"

நான் மிகவும் ரசித்து எழுதியது இந்த பதிவு. பத்து நிமிடத்தில் எழுதிவிட்டேன். தஞ்சை மாவட்ட கிராமத்து ஸ்லேங், எனக்கு அந்த பதிவிலே மிகுந்த மனசு திருப்தி கிடைத்தது. சொல்ல வந்ததை சரியாக சொன்ன திருப்தி கிடைத்தது. ஒரு 30 வருஷம் பின்னே போய் வந்த மாதிரி ஒரு சந்தோஷம் கிடைத்த்தது. நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் படிக்க வில்லை எனில் இப்போ படியுங்க.

பாஸ்டன் பாலா அவர்களும் கண்மணி டீச்சரும் எனக்கு கொடுத்த இந்த வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டேன் என நினைக்கிறேன். உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி!!!

27 comments:

 1. ஆஹா எனக்கு உங்க பதிவுல பிடிச்சது "பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சனை"க்கு அடுத்தது "இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்ன பதில் சொல்ல போகிறார்" அப்புறம் "ஒரு மணி நேர டைம் பாஸ்க்கு ரெண்டு த்ராம்"

  ReplyDelete
 2. ஐ முதல் போணி...நானா......!!!!

  ReplyDelete
 3. எல்லாம் படிச்ச பதிவுங்கதான். அங்கயே எல்லாம் சொல்லியாச்சே! இங்க என்னத்த சொல்ல தனியா? வழக்காமா போடறது மாதிரி - பதிவு செம காமெடி அப்படின்னு சொல்லறதோட நிறுத்திக்கவா? :))

  ReplyDelete
 4. btw, delphine சொல்றமாதிரி, சமீபகாலமா சுவாரஸ்யம் கம்மியா இருக்கு.

  அபிபாப்பாவும் அஞ்சுஜார்ஜும் மாதிரி ஹாஸ்யம் இப்ப வர பதிவுகள்ள காணோம். :)
  தூசுதட்டி எழுந்து அடிச்சு ஆட ஆரம்பிங்க.

  ReplyDelete
 5. //
  TBCD said...
  ஐ முதல் போணி...நானா......!!!!
  //
  ஹெல்ல்லொ ஏபிசிடி ச்ச டிபிசிடி

  மீ தி பர்ஸ்ட்டு

  ReplyDelete
 6. இதுக்கு நான் எழுதின எல்லாமே பிடித்ததுன்னு சொல்லிருக்கலாம்.

  ஆமா என்னமோ இனிமே வரமாட்டன்னு சொன்ன மாதிரி கேள்விபட்டேன்!

  இந்த பதிவுக்கான காரணத்தை பதிவின் தலைப்பிலே சொல்லிட்டேள்! சரி, ஓகே
  ஆனா அடுத்த பதிவுல அய்யனாருக்கா, ஆசிப்புக்காகன்னு தலைப்புல போட்டு பெடலெடுக்க கூடாது.

  சொன்ன சொல்ல ஒரு மாசத்துக்கு கூட உங்களால காப்பாத்த முடியாதா?

  ReplyDelete
 7. டெல்பின் , தம்பி ஆக உங்க புண்ணியத்தால் திரும்ப அபி அப்பாவிடம் இருந்து ஒரு டாட்டா பை பை, பிர்லா பை பை என்று ஒரு பதிவை எதிர்பார்கலாம்:)))

  ReplyDelete
 8. தனக்குப் பிடித்த பதிவைப் பற்றி ஒரு பதிவு எழுதுவது என்பது சற்றெ சிரமமான செயல்தான். அபி அப்பா படித்து, ரசித்து, எழுதும் போது இருந்த பழைய மன நிலையை, தற்போதும் கொணர்ந்து, சிறு விமர்சனக் குறிப்புகளுடன் சுட்டி கொடுத்தது பாராட்டத் தக்கது.

  நன்றி - நல் வாழ்த்துகள்

  ReplyDelete
 9. ஆஹா ஒரு பதிவைக் குறிப்பிடச் சொன்னா இப்படி எழுதுன மொத்தப் பதிவையும் சுட்டி கொடுத்து விளம்பரப் படுத்திய சாமர்த்தியசாலி அபி அப்பா வாழ்க
  அபிகுட்டியின் டயலாக்தான் சூப்பர்[ரிவர்ஸ்கீர்:)

  சரி போகட்டும் நீங்க இன்னும் 5 பேரைக் கூப்பிட்டு அவங்ககிட்டயும் சொல்லிடுங்க
  1.தம்பி
  2.குசும்பன்
  3.அய்யனார்
  4.ராம்
  5.காயத்ரி
  6.நாகைசிவா

  இந்த லிஸ்ட் ஓகேவா
  இல்லை வேறு யாரையும் சேர்க்கனுமா.உடனே செய்யுங்க
  அடுத்த டேக் ரெடி பண்ணிட்டேன்.
  ஜூப்பராயிருக்கும்.புதுமையாவும் இருக்கும்.

  ReplyDelete
 10. போன பின்னூட்டத்தில் 5 னு சொல்லிட்டு 6 பேர் எழுதியிருப்பேன்.
  அது 5 அல்லது அதிகமாகவும் னு இருக்கனும்.
  டிபிசிடி
  வினையூக்கி
  ஆயில்யன்
  பொன்வண்டு
  துர்கா
  10 பேர்கூட சேர்க்கலாம்

  ReplyDelete
 11. \\இலவசக்கொத்தனார் said...
  எல்லாம் படிச்ச பதிவுங்கதான். அங்கயே எல்லாம் சொல்லியாச்சே! இங்க என்னத்த சொல்ல தனியா? வழக்காமா போடறது மாதிரி - பதிவு செம காமெடி அப்படின்னு சொல்லறதோட நிறுத்திக்கவா? :))\\

  வழிமொழிகிறேன்..;))

  ReplyDelete
 12. மங்களூர் சிவா! நான் இப்பவே 15 லிங் கொடுத்துட்டேன்ன்னு தம்பி காதிலே புகை! அதல்லாம் கொடுக்கத்தான் நீங்க எல்லாம் இருக்கீங்களே!! நன்றிப்பா!!

  ReplyDelete
 13. மலேஷியா மாரியாத்தா காத்து பட்டாலே இந்த குணம் வந்துடுமா டிபிசிடி நண்பா:-)))இன்னும் ஆத்தாவை காணுமே!!!

  ReplyDelete
 14. டாக்டர்! உங்களுக்கு எத்தனை காமடி பதிவு வேணும்! கொஞ்சம் பொறுங்க, ஊருக்கு போய் எடுத்து வாரேன்:-))

  ReplyDelete
 15. கொத்ஸ்! நீங்க நிப்பாட்டிக்க வேனாம்! இதிலயும் இதுக்கு பின்ன நான் போடும் பதிவுகளுக்கும் வாங்க! நான் மீண்டு(ம்) வருவதற்கு நீங்க முக்கியமான காரணம் என்பதை நான் மட்டுமே உணர்வேன்!!

  ReplyDelete
 16. வாங்க சர்வேசன்! கண்டிப்பா அஞ்சுவை கூப்பிடனும்! என்ன பண்றது ராத்திரி இல்லை விடிகாலை 3.30 ஆகிடுச்சு! தூங்கிட்டேன்.காலையில் ஆபீஸில் ஏர் கலப்பை இல்லை! மீதி லிங்கை அவசர்ஃ அவசரமாக கொடுத்து பப்ளிஷ் பண்ணிட்டேன்! அதான் டீச்சர் அந்த குறையை தீர்த்துட்டாங்கன்னு நெனைக்கிறேன்!!!

  ReplyDelete
 17. வாங்க முத்து லெஷ்மி! நன்றி!!!பத்தீங்களா வலைச்சரம் எழுதிட்டேன்:-)))

  ReplyDelete
 18. சிவா! நீதான்யா பஸ்ட்டு!!! கப்பு உனக்குத்தான்!!:-)))

  ReplyDelete
 19. தம்பி! உன்னால் பதிவு எழுத வந்தவன் நான்! நாம் போனிலும், இது சம்மந்தமாக நேரிலும் பேசியதை பதிவாக போடலாம் என எண்ணம் எனக்கு! போடவா:-))

  ReplyDelete
 20. ##தம்பி! உன்னால் பதிவு எழுத வந்தவன் நான்! நாம் போனிலும், இது சம்மந்தமாக நேரிலும் பேசியதை பதிவாக போடலாம் என எண்ணம் எனக்கு! போடவா:-))

  ##

  குசும்பனுக்கும் ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 21. நன்றி சீனா சார்! எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்தி! வேண்டுமானால் மங்கை கிட்டே கேளுங்க!:-)))

  ReplyDelete
 22. வாங்க டீச்சர் வாங்க!பத்தீங்களா! என் டயலாக் எதுவும் சொல்லாம குட்டி டயலாக் நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்களே!! இட்ஸ் ஓக்கே!!நான் 5 பேரை கூப்பிடாத காரணம் சர்வேசன் பதிலில் சொல்லிட்டேன்! அதனால நீங்க எனக்காக கூப்பிட்ட 5 பேரும் இல்ல 6 பேரும் டேக் பண்ணுவாங்கன்னு நெனைக்கிறேன்!!!

  இதை விட கொடுமை என்ன தெரியுமா டீச்சர்!

  'காரை முன்னாடி தள்ளி விட்டா என்னம்மா" என கேட்டதுக்கு பாப்பா "பாவம்பா ஏற்கனவே டயர் வழு வழுன்னு இருக்கு இன்னும் தேஞ்சிட போகுது":-))))

  ReplyDelete
 23. அபி அப்பா..உங்க பிரண்டுக்கு எழுதிய கடிதம் படிச்சு வயறு வலிக்குது.. ஆத்மார்த்த(?) நட்புங்கரது இதுதானோன்னு.. ஹிஹி..:))))))
  அப்புறம் அந்த டாக்டர் பதிவு.. ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கு.. யதார்த்தத்துலயும் சில விதிவிலக்குகள் (ஒளி விளக்குகள்)இன்னும் இருக்காங்கன்னு..வாழ்த்துக்கள் அருமையா எல்லார் மனதிலும் இடம் புடிச்ச உங்க சாதனைக்கு.. தொடருங்க..

  ReplyDelete
 24. அன்புள்ள அபிஅப்பா...நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவுகள் எல்லாமே எனக்கும் ரொம்ப பிடிக்கும். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  மத்தபடி என்னைப் பற்றி போட்டுள்ள மானே தேனே பொன்மானேக்கு ஓவார்ன்னு கூச்சமாக இருந்தாலும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. தன்யனானேன்

  ReplyDelete
 25. //அபி அப்பா.
  உங்க எல்லா பதிவுமே நல்லா இருக்கு.... ஆனால் இப்ப கொஞ்ச நாளா சுவாரஸ்யமில்லாமல் எழுதுவதுபோல எனக்கு தோணுது..//

  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏ

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))