பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 6, 2008

குப்பனும், சுப்பனும் என் புத்தாண்டு பிறப்பும்!!!!

புத்தாண்டு 2008 பிறந்ததே எனக்கு ஒரு மாதிரியா கல கலன்னு காமடியாமே பிறந்துச்சு. நான் வேலை முடிந்து வந்ததே 10.30க்கு தான். சரி இந்த வருடம் நல்ல பிள்ளையா இருப்போம்ன்னு எங்கயும் போகாம பேசாம சேட்டிங்ல உக்காந்துட்டேன். 12.00 ஆகும் போது நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு படுக்கலாம்ன்னு நெனச்ச போது தான் ஒரு குடிகார குப்பன் வந்து "அண்ணே நம்ம ரூம்க்கு வந்து சிறப்பிங்க அண்ணே, புது வருஷம் எங்களுக்கு நல்லா ஆரம்பிக்கட்டும் அண்ணே"ன்னு கூப்பிட்டான். ரொம்ப நல்லவனா இருக்கானே, நம்மையும் மதிச்சு கூப்பிடுறானேன்னு போனேன்.

அந்த பையன் எனக்கு உபசரித்த போது "இல்லப்பா எனக்கு லாகிரி வஸ்துகள் ஒத்துக்காது"ன்னு சொல்லிட்டு முந்திரி பருப்பை மாத்திரம் மேஞ்சேன். சரி ன்னு கலைஞர் டிவி போட்டா ஒரே குடிகார பாட்டா போட்டாங்க. எம்ஜியாரை கூட விட்டு வைல்ல வில்ல. "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து"ன்னு மஞ்சுளா கூட அவர் லந்து பண்ணும் பாட்டு ஓடுது. ஆஹா ஏழரையை கூட்டுறானேன்னு நெனச்சு கிட்டு இருக்கும் போது தான் இன்னும் ஒரு குடிகார சுப்பன் வந்தான்.

இந்த குப்பனும் சுப்பனும் தான் என் புத்தாண்டு தினத்தை கலகலன்னு ஆக்கினாங்க. அவங்க பேச்சை கேட்டுகிட்டே நான் சேட்டிங்க இருந்தேன். என்ன பேசறோம்ன்னு தெரியாம ரொம்ப சூப்பரா மொக்கை போட்டு கிட்டு இருந்தாங்க. திடீர்ன்னு குப்பன் சுப்பனை பார்த்து " ஆமா நாம இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கோமே, உங்க ஊர் என்னன்னு சொல்லவே இல்லியே" ன்னு கேக்க அந்த உரையாடலை பாருங்க!

குப்பன்:ஆமா நாம இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கோமே, உங்க ஊர் என்னன்னு சொல்லவே இல்லியே!

சுப்பன்: அட ஆமால்ல, நான் திருச்சி நீங்க

குப்பன்: திருச்சில எங்க?

// அவன் தான் அவன் ஊரை சொல்லிட்டான்ல, பதிலுக்கு உன் ஊரை சொல்ல வேண்டியது தானே//

சுப்பன்: பாலக்கரை தெரியுமா?

குப்பன்: தெரியுமாவா? பாலக்கரையில எங்க?

சுப்பன்: ம்ம்ம் சத்திரம் பஸ்ட்டாண்டு

குப்பன்: பஸ்ட்டாண்டுல?

சுப்பன்: யோவ் நல்லா வருது வாயில பஸ்ட்டாண்டுல பிச்சையா எடுக்கறேன். பஸ்ட்டாண்டுன்னா பக்கத்துல தான்!

குப்பன்: அப்படின்னா நம்பிய தெரியுமா?

சுப்பன்: தெரியுமாவா, என்னய பார்த்துட்டார்ன்னா விட மாட்டாரு, எலேய் குப்பா எப்படி இருக்கன்னு கேக்காம இருக்க மாட்டாரு. அவருக்காக நான் ஒரு பிராஜக்ட்டு கூட பண்ணினேன். அதுல ரொன்ப சந்தோஷம் அவருக்கு!

குப்பன்: நான் கூட வெள்ளை ரவி அண்ணன் கிட்ட பிராஜக்ட் பண்ணினேன், இப்ப இங்க வந்ததுக்கு பின்ன எல்லாத்தையும் விட்டுட்டேன்!

//எனக்கு அவனுங்க என்ன பேசிக்கிறாங்கன்னு புரிஞ்சு போச்சு. ஏதோ பெரிய பெரிய கம்பெனிகளுக்கு புரொகிராம் எழுதி குடுத்த ரேஞ்சுக்கு பேசிகிட்டு இருந்தானுக//

சுப்பன்: வெள்ளை ரவி அண்ணனை போட்ட போது நான் ஸ்பாட்டில தான் இருந்தேன்....

குப்பன்: அப்படியா முட்டை ரவி முட்டை போட்ட போது நான் இருந்தேன்!

இப்படியாக சுத்தி வளைச்சு தமிழ் நாட்டின் அத்தனை தாதாக்களும் அவங்களுக்கு ரொம்ப பரிச்சயம் என்பது போலவும் அதிலே ரொம்ப பெருமையாகவும் பேசிகிட்டே இருந்தானுங்க. அவனுங்க ஆள் எப்படி இருப்பானுங்கன்னு இந்த இடத்திலே சொல்லியாகனும். தனுஷ்க்கு 10 நாள் சோறு போடாம பட்டினி போட்ட மாதிரி இருப்பானுங்க. எனக்கு இதல்லாம் கேக்க கேக்க ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. இப்படியே அவங்க காமடி பண்ணிகிட்டு இருக்கும் போது என் பக்கமா திரும்பிட்டானுங்க.

குப்பன்: அண்ணே நீங்க எந்த ஊரு?

நான்: நான் மாயவரம்ங்க

சுப்பன்: அட மாயவரமேவா பக்கமா?

நான்: அக் மார்க் மாயவரமே தான்

குப்பன்: எந்த தெரு?

எங்க ஊர்க்காரங்க இது போல தாதா பத்தின பேச்சா இருந்தா எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஒரு ஸேஃபா கொத்த தெருன்னு சொல்லிக்கிறது வழக்கம்.

நான்: கொத்த தெருவுங்க

குப்பன்: அட கொத்த தெருவுல யாரை தெரியும்

நான்: என்னைய தெரியும், என் அப்பா தம்பி எல்லாரையும் தெரியும்ங்க

சுப்பன்: அட அத கேக்கல, அங்க எந்த தாதாவை தெரியும்?

ஆஹா இவனுங்க தேரை இழுத்து தெருவுல உட பார்க்கிறாயங்களேன்னு நெனச்சு கிட்டு இருந்தப்ப தான் நம்ம கொத்ஸ் ஆன்லைன்ல இருப்பது தெரிஞ்சுது. உடனே நான் அவங்க கிட்ட " கொத்த தெருவிலே கொத்தனாரை தெரியும்"ன்னு சொல்ல குப்பனும் சுப்பனும் ஒரே நேரத்துல "எந்த கொத்தனார்"ன்னு கேக்க "இலவச கொத்தனார்"ன்னு சொல்லி வச்சேன்.

குப்பனும் சுப்பனும் தான் தங்களுக்கு எல்லா தாதாவையும் தெரிஞ்ச மாதிரி பீலா விட்டு கிட்டு இருக்காங்களே, இலவச கொத்தனாரை தெரியாதுன்னு சொன்னா அசிங்கமா போயிடுமேன்னு திரு திருன்னு முழிச்சுட்டு பின்ன ஒரு வழியா சமாளிச்சாரு குப்பன்.

குப்பன்: அட நம்ம இலவச கொத்தனாரா, ஆஹா அவரு அருவாளை முதுகுல வச்சிருக்கும் அழகே தனி பாணிப்பா, வெட்டி முடிஞ்ச பின்ன கைலிய தூக்கி கடாசிட்டு அசால்ட்டா பாடி மேல பிளட்ட தடவும் அழகே தனிப்பா

எனக்கு தூக்கி வாரி போட்டுடுச்சு. அப்படியே நெனச்சு பார்த்தேன் நம்ம கொத்ஸ்ஸை. ரொம்ப அலாதியா இருந்துச்சு. அவனுங்க என்னை விடுற மாதிரி இல்ல "வேற யாரை தெரியும்"ன்னு கேட்டாங்க. சரின்னு "வெட்டி பாலாஜி"ன்னு சொன்னேன். அதுக்கு சுப்பன் "அடடே அந்த அண்ணனா, பல பேரை வெட்டினதால குத்தாலல் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்த பட்டம் தான் அந்த "வெட்டி"ன்னு சொன்னான்.

எனக்கு ரொம்ப இண்ட்டஸ்ட்டா போச்சு. சரி பசங்க பதிவு போட மேட்டர் தர்ராங்கன்னு நெனச்சு கிட்டு "எனக்கு இன்னும் சில பேர் எல்லாம் தெரியுங்க அவங்களை பத்தி தெரியுமான்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு லக்கிலூக், சென்ஷி, தம்பி கதிர், அய்யனார், அண்ணாச்சி, குசும்பன் இவங்களை எல்லாம் தெரியுமான்னு கேட்டேன்.

குப்பன்: லக்கிலூக் அண்ணே இருக்காரே ஆறு அடி உயரத்துல 100 கிலோ மாமிச மலை, கிட்டதட்ட சினிமா பொன்னம்பலம் மாதிரி இருப்பார்.

சுப்பன்: சென்ஷி இவரு சைனாகார் மாதிரி மூக்கு சப்பையா, வழுக்கை விழுந்து இருப்பாரு! அதனால தான் அவருக்கு பேரு சென்ஷி

குப்பன்: தம்பி கதிர் அண்ணே குள்ளமா கிட்ட தட்ட எங்களை மாதிரி ஒடிஞ்சு விழற மாதிரி இருப்பார். அதனாலதான் எல்லாரும் செல்லமா தம்பின்னு கூப்பிடுவாங்க

சுப்பன்: அய்யனார் பேருக்கு ஏத்த மாதிரி ஜெய்ஜாண்டிக்கா எப்பவும் அருவாள் இல்லாம இருக்க மாட்டார், அதனால தான் அய்யனார்ன்னு பேரு

குப்பன்: அண்ணாச்சி இருக்காரே படு பயங்கரம். மாயவரமே அண்ணாச்சின்னு தான் கூப்பிடும், அவ்வளவு ஏன் அவங்க அப்பாவே அண்ணாச்சின்னு தான் கூப்பிடுவாருன்னா பார்த்து கோங்க!

இப்படியா சொல்லிகிட்டே போனாங்க. எல்லாரையும் தெரியும்ன்னு சொன்னா நான் சந்தேகப்படுவேனேன்னு ரெண்டு பேரும் கோரஸா "எங்களுக்கு இந்த குசும்பன் அண்ணனை மட்டும் தெரியலீங்க"ன்னு சொல்லிட்டாங்க. ஏன்னா தாதாவுக்கு எங்கயாவது குசும்பன்ன்னு பேர் இருக்குமான்னு அவங்களுக்கு கதை இட்டு கட்ட முடியலை. சரின்னு நானே கதை இட்டு கட்ட வேண்டியதா போச்சு.

"அதாவதுங்க இந்த குசும்பன் அண்ணே இருக்காரே வெட்டி சாய்ச்ச பின்ன பாடில கிச்சு கிச்சு மூட்டுவாரு. உயிர் இருக்கா இல்லியான்னு டெஸ்ட் பண்ண அத்தன ஒரு குசும்பு அதனாலத்தான் குசும்பன்ன்னு பேரு"ன்னு சொல்லி வச்சேன்.

உடனே ரெண்டு பேரும் " ஏன் அண்ணே, இத்தன தாதாவை தெரியுதே உங்களுக்கு நேங்க ஏதாவது கொலை கிலை பண்ணியிருக்கீங்களா?"ன்னு கேட்டு என்னை அதிர வச்சுட்டாய்ங்க! நானும் சுதாரிச்சுகிட்டு "ம் சொந்த வீட்டில் 104 கொலையும் சொந்த காரங்க வீட்டுல ஒரு ஏழெட்டு கொலையும் பண்ணியிருக்கேன்"ன்னு சொல்லிட்டு அமைதியா ரூம் வந்து சேர்ந்துட்டேன்.

22 comments:

 1. :( :( :(

  வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை... :(

  ReplyDelete
 2. //Raam said...
  :( :( :(

  வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை... :(
  //

  அடப்பாவமே... இதுல நம்ம குசும்பரைத்தவிர யாரையும்
  எப்பிடியிருப்பாங்கன்னு கூட தெரியாத எனக்கே பயங்கர சிரிப்பாகிடுச்சு.. :))))

  ReplyDelete
 3. //குப்பன்: அட நம்ம இலவச கொத்தனாரா, ஆஹா அவரு அருவாளை முதுகுல வச்சிருக்கும் அழகே தனி பாணிப்பா, வெட்டி முடிஞ்ச பின்ன கைலிய தூக்கி கடாசிட்டு அசால்ட்டா பாடி மேல பிளட்ட தடவும் அழகே தனிப்பா
  //
  ஹா.ஹா.. இதே மாதிரி பிலிம் காட்டறதுல கிங் ஒருத்தன் எங்க பள்ளிக்கூட பிரண்டு.. பில்கேட்ஸ்ன்னா.. அவரா நேத்திக்குகூட டீக்கடையில பாத்தேனே.. ஆனா ஒன்னு... ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையன்ப்பா ம்பான்.. :))))

  ReplyDelete
 4. //"எங்களுக்கு இந்த குசும்பன் அண்ணனை மட்டும் தெரியலீங்க"ன்னு சொல்லிட்டாங்க. ஏன்னா தாதாவுக்கு எங்கயாவது குசும்பன்ன்னு பேர் இருக்குமான்னு //
  இந்த மலையேற்றத்துலயும் ,எம்புட்டு தெளிவாயிருக்காங்கய்யா.. :D

  ReplyDelete
 5. ரொம்ப நாளக்கப்புறம் நல்ல காமெடி கற்பனை.ஆனா எழுத்து பிழையில் விழுந்து எழுந்து படிக்கிறதுக்குள்ள சிரிப்பு மறந்துடுது.

  ReplyDelete
 6. //ஒரு ஸேஃபா கொத்த தெருன்னு சொல்லிக்கிறது வழக்கம்.//

  எவ்ளோ இடத்துல ஹெல்ப பண்ணியிருக்கு இந்த தெரு பேரு :)

  ”கொத்த தெரு” பேரக்கேட்டாலே சும்மா அதுருனுசுல்ல அப்ப !

  ReplyDelete
 7. //
  வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை...
  //

  இதுக்குதாங்க செம சிரிப்பு.

  ReplyDelete
 8. ம்ஹ்ம்... எப்பவும் நான் சொல்ல நினைக்கறத வேற யாராச்சும் சொல்லிட்டு போயிடுறாங்க. என்ன செய்ய வழக்கம்போல ராமுக்கு ரிப்பீட்டெ போட்டுட்டு எஸ்கேப்பிக்கறேன் :))

  ReplyDelete
 9. குடிகார சுப்பனுடனும், குப்பனுடனும், மயிலாடுதுறை தாதாக்களோடும் சூப்பரா புத்தாண்டேத் தொவக்கி இருக்கீங்க - புத்தாண்டு முழுவதும் குடியும், குடித்தனமும், தாதாக்கள் வாசமும் வாய்க்க நல்வாழ்த்துகள்.

  ராம், கண்மணி, சென்ஷி இவங்க அட்ரஸ் எல்லாம் வாங்கி கொத்த தெருவுக்கு கூரியர் பண்ணிடுவோமா

  ReplyDelete
 10. ஒன்னும் அவசரம் இல்ல நிதானமா போஸ்ட் போடுங்க...
  உங்க பாணியே இல்லையே இதுல...ரெண்டாவது வரில இருந்தே காமெடி யான வர்ணனைகள் வரனுமே அதே இல்லாம எப்படி அபி அப்பா.. ம்...

  ReplyDelete
 11. அபி அப்பா,

  என்ன ஆச்சு? இந்த புதுவருஷம் உங்களை ரொம்ப தடுமாற வைக்கிறது போலத் தெரிகிறது.

  1. வவ்வாலைத் துரத்தி அந்த பதிவே காணாமல் போய்விட்டது.

  2. என்னன்னவோ செய்தும் குப்பனும் சுப்பனும் மருந்துக்குக் கூட சிரிக்க வைக்கவில்லை.

  3. ஒரு வருத்தமான சம்பவத்தை வைத்து, குசும்பனுக்குப் போட்டியாக மொக்கைப் பதிவு எந்த ஊர் நியாயம்? திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தப் பதிவும் காணாமல் போய்விட்டது.

  எல்லாவற்றையும் விட்டுவிட்டு பளிச்சென்று முதலிலிருந்து ஆரம்பியுங்கள். முடிந்தால் ஒரு நடை ஊருக்குப் போய் மயூரநாதரைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்.

  ஆல் த பெஸ்ட்!

  ReplyDelete
 12. //தனுஷ்க்கு 10 நாள் சோறு போடாம பட்டினி போட்ட மாதிரி இருப்பானுங்க.//

  பொணங்ககூட எப்பிடி பேசிகிட்டு இருந்தீங்க?? :)

  ReplyDelete
 13. //வைல்ல வில்ல. //

  இது என்ன மொழி? :P

  ReplyDelete
 14. //குப்பன்: அட நம்ம இலவச கொத்தனாரா, ஆஹா அவரு அருவாளை முதுகுல வச்சிருக்கும் அழகே தனி பாணிப்பா, வெட்டி முடிஞ்ச பின்ன கைலிய தூக்கி கடாசிட்டு அசால்ட்டா பாடி மேல பிளட்ட தடவும் அழகே தனிப்பா
  //
  ஹிஹிஹி, இ.கொ.வை இப்படிக் கற்பனை பண்ணிப் பார்த்தாலே நல்லா இருக்கும் போலிருக்கே, இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு! :P

  ReplyDelete
 15. //அபி அப்பா,

  என்ன ஆச்சு? இந்த புதுவருஷம் உங்களை ரொம்ப தடுமாற வைக்கிறது போலத் தெரிகிறது.

  1. வவ்வாலைத் துரத்தி அந்த பதிவே காணாமல் போய்விட்டது.

  2. என்னன்னவோ செய்தும் குப்பனும் சுப்பனும் மருந்துக்குக் கூட சிரிக்க வைக்கவில்லை.

  3. ஒரு வருத்தமான சம்பவத்தை வைத்து, குசும்பனுக்குப் போட்டியாக மொக்கைப் பதிவு எந்த ஊர் நியாயம்? திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தப் பதிவும் காணாமல் போய்விட்டது.

  எல்லாவற்றையும் விட்டுவிட்டு பளிச்சென்று முதலிலிருந்து ஆரம்பியுங்கள். முடிந்தால் ஒரு நடை ஊருக்குப் போய் மயூரநாதரைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்.

  ஆல் த பெஸ்ட்!//

  ஒரு மாசமா இணையம் இல்லாம வரலை, அதுக்குள்ளே, என்ன என்னமோ ஆயிருக்கு போலிருக்கு? :(((((

  ReplyDelete
 16. //இராம்/Raam said...

  :( :( :(

  வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை... :(//

  பேசாம குசம்பரை விட்டு ராயல் அண்ணாவை கிச்சு கிச்சு மூட்ட சொல்லுங்க :-)

  ........

  கொத்ஸ் தான் டாப் :-)

  ReplyDelete
 17. \\ இராம்/Raam said...
  :( :( :(

  வேற எதாவது டிரை பண்ணுங்க, கொஞ்சம் கூட சிரிப்பு வரலை... :(\\

  மாப்பி சூப்பர் காமெடி ;))

  ReplyDelete
 18. /பேசாம குசம்பரை விட்டு ராயல் அண்ணாவை கிச்சு கிச்சு மூட்ட சொல்லுங்க :-)

  ........

  கொத்ஸ் தான் டாப் :-)//

  பாலாஜி,

  ஒவ்வொருத்தவங்க ரசனை ஒவ்வொரு விதம்... எனக்கு என்ன தோணுச்சோ அதை சொன்னேன். உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு அது பிடிச்சுதான் ஆகனுமின்னு எதுவும் கட்டாயமில்லை'னு நினைக்கிறேன்... :)

  கோபி,

  என்ன சொல்லவர்றே???

  ReplyDelete
 19. புத்தாண்டு வாழ்த்துக்கள்.. என்ன இது நல்லா காமெடியாத் தானே இருக்கு.. இம்புட்டு பேர் வந்து கம்பளையின்ட் பண்றாங்க...வடிவேலு...விவேக் யாரை வேணும்ன்னாலும் போட்டு இந்த விசயத்தைப் படமாக்கலாமே... கன்டினியூ

  ReplyDelete
 20. //
  பாலாஜி,

  ஒவ்வொருத்தவங்க ரசனை ஒவ்வொரு விதம்... எனக்கு என்ன தோணுச்சோ அதை சொன்னேன். உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு அது பிடிச்சுதான் ஆகனுமின்னு எதுவும் கட்டாயமில்லை'னு நினைக்கிறேன்... :)//

  அண்ணே,
  நீங்க சொன்னதை தப்புனு நான் ஏதாவது சொன்னனா? நீங்க வேற முயற்சி பண்ண சொன்னீங்க. அதுக்கு தான் நான் பதிவுல சொல்லியிருக்கற மாதிரி ("அதாவதுங்க இந்த குசும்பன் அண்ணே இருக்காரே வெட்டி சாய்ச்ச பின்ன பாடில கிச்சு கிச்சு மூட்டுவாரு.") பண்ண சொன்னேன் ;)

  நோ ரென்சன் ;)

  ReplyDelete
 21. ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..

  சிரிச்சது போதுமா இன்னும் கொஞ்சம்
  வேணுமா? கோச்சுக்காம தொடர்ந்து
  பதிவெழுது ராசா!

  ReplyDelete
 22. நானும் கொஞ்சம் சிரிச்சிக்கிறேன்...

  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..
  ஹா..ஹா...ஹா..ஹா..

  ஒவ்வொருத்தரா க்யூவில வந்து சிரிங்கப்பா. அண்ணன் வருத்தப்படறாரில்ல?

  இப்படிக்கு
  சிரிப்பாய் சிரிச்ச அனானி

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))