பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 26, 2008

கூட படிச்ச குறத்திகள்!!!

நேத்து நட்டு பண்ணின அக்கிரமம் சொல்லி மாளாது. இரவு 10.30 வரை நியூஸ் பார்த்துட்டு கொஞ்ச நேரம் காமடி பார்த்துவிட்டு சமத்தா தூங்க போகும் அவனுக்கு நேத்து என்ன மூடோ தெரியலை. என் கூடவே முழிச்சுகிட்டு இருந்தான் ராத்திரி 12 வரை. தூங்கிடுவானான்னு நான் அப்பப்ப அவன் முகத்தை பார்க்கும் போதல்லாம் ரிலையன்ஸ் ஃபிரஷ் மாதிரி இருக்கு அவன் முகம். இந்த கூத்திலே அவன் தூளியிலே குப்புற படுத்துகிட்டு டிவி பார்க்க நான் தூளியை ஆட்டிகிட்டே சேட்டிகிட்டு இருந்தேன். நடு நடுவே சிபி,ஆயில்யன் எல்லாம் வந்து இன்னுமா தூங்கலைன்னு என்னை வெறுப்பேத்த நட்டுவோ மிட்நைட் மசாலா பார்த்துகிட்டே நான் தூளி ஆட்டுவதை மட்டும் நிறுத்த கூடாது என்பதில் கவனமா இருந்தான். சில காட்சிகளில் டிசிபிடி மாதிரி "புரியல்ல தயவு செய்து விளக்கவும்" என்பது மாதிரி என்னை திரும்ப திரும்ப பார்த்து கொண்டான். தன்னை மறந்து தூக்கம் என்பார்களே அது போல நான் தூங்கி விட்டேன்.



அது 1982 , அப்போ நான் +2 படித்த நேரம்(என்னை விட வயதில் மூத்த திரிஷா அப்போ காலேஜ் முதல் வருடமாக இருந்திருக்கலாம்)நாங்க எல்லாம் அப்போ "இண்டராக்ட்"கிளப்பில் இருந்த நேரம். எங்கள் பள்ளி மாத்திரம் இல்லை. மத்த புள்ளய்ங்க படிக்கும் பள்ளிகளிலும் அந்த கிளப் இருந்தது. அதன் காரணமாகவே நாங்கள் அதில் சேர்ந்தோம்ன்னு நெனச்சா என் மேல தப்பான அபிப்ராயம் வச்சிருக்கீங்கன்னு அர்த்தம். அப்போதான் அந்த விழா வந்துச்சு. மண்டலாம் 4ன் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதும் மண்டல மாநாடும். கிட்டதட்ட 75 பள்ளிகள் கலந்துகிட்டாங்க. மயிலாடுதுறை AVC கல்யாண மண்டபத்திலே நிகழ்ச்சி. எங்க ஊர்ல நடந்ததால் எங்க பள்ளி கிளப் தான் முக்கியமாக எல்லா வேலையும் இழுத்து போட்டுகிட்டு செஞ்சோம். அதிலே எல்லா பள்ளிகளும் கலை நிகழ்ச்சிகளும் உண்டுன்னு சொன்ன பிறகு சும்மா இருப்போமா?? அதுவும் சென்னை பொண்ணுங்க எல்லாம் முதல் நாளே சும்மா நமீதா ரேஞ்சுக்கு வந்து அசத்த அந்த ஊர் பசங்க பீட்டர் விட்டுகிட்டு இருக்க நாங்க ஏதோ வேலைக்காரன் ரேஞ்சுக்கு எங்களை பார்க்க எங்களுக்கே பாவமா இருந்துச்சு. இதிலே எங்க ஊர் பொண்ணுங்க கிட்டதட்ட அப்பதான் சுடி போட்ட பொண்ணுகளையும், டவுசர் போட்ட தடியன்களையும் பார்க்கிறாங்க. நாங்க கூட அப்படித்தான். நாங்க கைலிய மடிச்சு கட்டி எலக்ட்ரிக் போஸ்ட்டிலே ஏறி பேனர் கட்டுவதையும் கீழே இருந்து டவுசர் பாண்டிகள் கையிலே தம் வச்சுகிட்டு "ஷேம் ஷேம் பப்பி ஷேம்" சொல்வதையும் அதை பார்த்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கும் சுடிதார்களை கண்டு எங்களுக்கு எரிச்சல் வந்தாலும் வேற வழி இல்லாததால் சகிச்சு கிட்டோம்.

அடுத்த நாள் எங்க தாவணி தேவதைகள் எங்களிடம் வந்து "டேய் நாம கல்ச்சுரல்ல அசத்திடனும்டா, இந்த தொல்ஸ், ராதா போல இல்லாம கொஞ்சம் பார்க்க பர்ச்சனாலிட்டியான பசங்க, பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து அசத்தி பரிசை தட்டிகிட்டு வந்து இந்த டவுசர் பசங்களை மானத்த வாங்கிடனும். அதிலும் அந்த மஞ்சள் சுடிதார் மூஞ்சிய பார்த்தாலே எனக்கு குமட்டுது"ன்னு தன் பங்கு பொறாமையை கக்க எனக்கு பொச பொசன்னு பத்திகிட்டு வந்துச்சு. நானே அப்பதான் அந்த மஞ்சள் மகிமைக்கு "My friend, can i get one hamam sample soap'ன்னு கேட்டதுக்காக ஓடிப்போய் அம்மா பீரோவின் புது துணிகளுக்கு அடியில் வைத்து இருந்த யார்ட்லி சோப்பை கொண்டு போய் கொடுத்து "My house full this soap, hamam no soapன்னு லைட் பீட்டரா விட்டு சரி பண்ணிகிட்டு இருக்கேன். பசங்க கிட்ட வேற "டேய் இது செட்டாகிடும் போல இருக்குடா, அனேகமா நான் வாக்க பட போறது சென்னையாத்தான் இருக்கும் போல இருக்கு"ன்னு கலக்கிகிட்டு இருக்கேன். இதிலே அந்த மாலா இப்படி சொன்னதும் எனக்கு எப்படி இருக்கும். இதிலே சில டவுசர் பாண்டிகள் கையில் வீணை வச்சுகிட்டு(அய்யோ அது கிதார்டா மடையா) அலப்பரை தாங்கலை. இதல்லாம் முன்கூட்டியே தெரிஞ்சு இருந்தா இஞ்சிகுடியார் வீட்டிலே இரவல் வாங்கி வந்திருப்பேன். என்ன அங்க வயலின் தான் கிடைக்கும்.

அடுத்த நாள் ஆபீஸ் பேரர்ஸ் மீட்டிங். அங்க தான் எந்த எந்த பள்ளிக்கு எத்தனை மணி நேரம் ஸ்லாட் நிகழ்ச்சிக்குன்னு முடிவு பண்றாங்க. எங்க பகுதியின் 4 ஸ்கூல் சார்பாகவும் எங்க பள்ளியின் நாங்க 4 பேர் மட்டும் கலந்துகிட்டோம். உள்ளே போகும் போதே எங்க கிளப்பின் கன்வீனர் கேயார் சார்(இப்போ ஹெச்செம்) "ஏய் பசங்களா நமக்கு கண்டிப்பா ஒரு நிகழ்ச்சிக்கு ஸ்லாட் வாங்கி வந்துடுங்க பின்னதான் நாம ஸ்க்ரிப்ட் தயார் பண்ணி ராத்திரியோட ராத்திரியா ரிகர்சல் பார்த்து காலையிலே கலந்துக்கனும் சரியா"ன்னு உசுப்பி விட தெம்பா மீட்டிங் போயாச்சு.

பாவி பசங்க எல்லாம் இங்கிலீபிஸ்ல பேச பேச கடைசியா எங்களை பார்த்து "உங்க 4 ஸ்கூல்க்கும் சேர்த்து 15 நிமிஷம், கடைசி நிகழ்ச்சி"ன்னு சொல்ல மீட்டிங் முடிஞ்சுது. வெளியே போனா மத்த கேர்ல்ஸ் ஸ்கூல்லயும் எங்களை கொன்னுடுவாங்க. பத்தாததுக்கு கேயார் சார் வேற. என்ன செய்யறதுன்னு ஒரு சதுர மேசை மாநாடு போட்டு, இதை சமாளிக்கும் பொறுப்பு நான் ஏத்து கிட்டேன்.

வெளியே வந்து பார்த்த பின்ன தான் தெரிஞ்சுது எங்களை விட எங்க தாவணிகள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க நிகழ்ச்சி நடத்த. மாலாவுக்கு இதை விட்டா வேற வாய்ப்பு கிடையாது "மாடி மேய்க்கும் கண்ணா" பாட.

கேயார் சார் கிட்ட வந்து என்னான்னு கேக்க நான் "சார் நமக்கு மட்டும் இல்ல நம்ம சுத்து வட்டார ஸ்கூலுக்கே ஸ்லாட் இல்ல, பின்ன நான் செமத்தையா இங்கிலீஷ்ல வெளுத்து வாங்கிட்டேன்"ன்னு பீலா விட அதுக்கு அவர் "சரி ரிசல்ட் என்னாச்சு அதை சொல்லு"ன்னு கேக்க நான் "சார் நமக்கு 15 நிமிஷம் கொடுத்துட்டாங்க, அதுவும் நான் கடைசி 15 நிமிஷம் தான் வேணும்ன்னு ஒத்தை காலில் நின்னு வாங்கிட்டேன் சார்"ன்னேன். அவர் 'என்னடா பாவம் கேர்ல்ஸ், அந்த கன்வீனர் மேடம் வேற நீங்க எப்படியும் ஸ்லாட் வாங்கிடுவீங்கன்னு ரொம்ப ஆர்வமா இருந்தாங்க"ன்னு சொல்ல நான் அதுக்கு "சார் நான் அதை பார்த்துகறேன்"ன்னு சொல்லிட்டேன்.

அதுக்குள்ள மாலா அண்ட் குரூப் ஓடி வந்து என்னாச்சுன்னு கேக்க நான் "கங்கிராஜுலேஷன், உங்களுக்கும் ஸ்லாட் வாங்கியாச்சு. கஷ்டப்பட்டு கடைசி 15 நிமிஷம் ஸ்லாட் டைம். ஆனா ஒரு கண்டிஷன், இது நான் போட்ட கண்டிஷன் இல்ல மீட்டிங்க எடுத்த முடிவு, அதாவது எல்லார் ஸ்க்ரிப்டையும் கேட்டாங்க ஆனா குறத்தி டான்ஸ் மட்டும் மிஸ்ஸிங், ஸோ நீங்க அத தான் பண்ண போறீங்க, ரமா, பொன்னம்மா, பூவிழி, பொம்மி எல்லாம் குறத்தி மேக்கப்போட நாளை வந்துடுங்க, மாலா நீ மேக்கப் போடாம வந்துடு'ன்னு சொல்லிகிட்டே போக அதுக்கு மாலா "ஏன் நான் டேன்ஸ்ல இல்லியா"ன்னு கேக்க "அய்யய்யோ நீ தான் மெயின் டான்ஸர்"ன்னு சொல்லிட்டு எங்க ரிகர்சலுக்கு ஓடிட்டேன்!!!

இன்னும் மீதி கலாட்டா இருக்கு, ஆனா பாருங்க அதுக்குள்ள நட்டு தூங்கிட்டான். அதனால கேப்ல நானும் தூங்கிட்டு வந்து அடுத்த பாகத்தை தொடர்கிறேன்!!

17 comments:

  1. //டேய் இது செட்டாகிடும் போல இருக்குடா, அனேகமா நான் வாக்க பட போறது சென்னையாத்தான் இருக்கும் போல இருக்கு"ன்னு//

    விதி விளையாடிடிச்சோ:))

    ReplyDelete
  2. // மாலா நீ மேக்கப் போடாம வந்துடு'ன்னு சொல்லிகிட்டே போக //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. //நகைச்சுவை மாதிரி //

    இது என்ன நட்டு புள்ளதனமா இருக்கு:)

    ReplyDelete
  4. ///முதல் நாளே சும்மா நமீதா ரேஞ்சுக்கு வந்து அசத்த அந்த ஊர் பசங்க பீட்டர் விட்டுகிட்டு இருக்க நாங்க ஏதோ வேலைக்காரன் ரேஞ்சுக்கு எங்களை பார்க்க எங்களுக்கே பாவமா இருந்துச்சு.////


    1982 la நமீதா எப்படி வந்தா?

    ReplyDelete
  5. //நட்டுவோ மிட்நைட் மசாலா பார்த்துகிட்டே நான் தூளி ஆட்டுவதை மட்டும் நிறுத்த கூடாது என்பதில் கவனமா இருந்தான்.//
    பய புள்ள ஒரு மாசத்தில்லேயே எல்லாம் கத்துக்கிச்சு போல :))

    ReplyDelete
  6. ///நான் அப்பப்ப அவன் முகத்தை பார்க்கும் போதல்லாம் ரிலையன்ஸ் ஃபிரஷ் மாதிரி இருக்கு அவன் முகம்.///


    உங்க முகம் இருட்டடஞ்சி போய் இருக்குமே?

    ReplyDelete
  7. ///நான் தூளியை ஆட்டிகிட்டே சேட்டிகிட்டு இருந்தேன்.///

    அடப்பாவி மக்கா ஒத்த கையாலேயே பத்து பேருக்கு மேல சாட்டுனதா சொல்லுறாங்க? நெசமா?

    ReplyDelete
  8. ///நடு நடுவே சிபி,ஆயில்யன் எல்லாம் வந்து இன்னுமா தூங்கலைன்னு என்னை வெறுப்பேத்த///


    லிஸ்ட்டுல என் பேரு விட்டு போய்டுச்சே?

    ReplyDelete
  9. ////நாங்க எல்லாம் அப்போ "இண்டராக்ட்"கிளப்பில் இருந்த நேரம். எங்கள் பள்ளி மாத்திரம் இல்லை. மத்த புள்ளய்ங்க படிக்கும் பள்ளிகளிலும் அந்த கிளப் இருந்தது. அதன் காரணமாகவே நாங்கள் அதில் சேர்ந்தோம்ன்னு நெனச்சா என் மேல தப்பான அபிப்ராயம் வச்சிருக்கீங்கன்னு அர்த்தம்.///

    அடங்கொயால இத பார்ரா....!!!!

    ReplyDelete
  10. அபி அம்மா படிச்சுட்டாங்களா இதை? :P

    ReplyDelete
  11. ///அதுக்கு மாலா "ஏன் நான் டேன்ஸ்ல இல்லியா"ன்னு கேக்க ///


    அப்பாவி புள்ள போலருக்கு!!!

    ReplyDelete
  12. ////என்னை விட வயதில் மூத்த திரிஷா அப்போ காலேஜ் முதல் வருடமாக இருந்திருக்கலாம் ///
    அப்ப எங்களை எல்லாம் ஏமாத்திப்புட்டாங்கலா......
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  13. அடுத்த பார்ட்டும் இருக்கா...
    நல்ல காமெடி :)

    ReplyDelete
  14. \\கீதா சாம்பசிவம் said...
    அபி அம்மா படிச்சுட்டாங்களா இதை? :P
    \\

    அருமை...ரீப்பிட்டே ;)

    ReplyDelete
  15. //அந்த மஞ்சள் மகிமைக்கு "My friend, can i get one hamam sample soap'ன்னு கேட்டதுக்காக ஓடிப்போய் அம்மா பீரோவின் புது துணிகளுக்கு அடியில் வைத்து இருந்த யார்ட்லி சோப்பை கொண்டு போய் கொடுத்து "My house full this soap, hamam no soapன்னு லைட் பீட்டரா விட்டு சரி பண்ணிகிட்டு இருக்கேன்//

    ஹா..ஹா..:)))))

    ReplyDelete
  16. /"மாடி மேய்க்கும் கண்ணா" பாட.//

    என்னது ”மாடி” மேய்க்கும் கண்ணாவா?:P

    ReplyDelete
  17. //சில காட்சிகளில் டிசிபிடி மாதிரி "புரியல்ல தயவு செய்து விளக்கவும்" என்பது மாதிரி //

    :))))
    நல்ல காமெடி :)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))