பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 28, 2008

இரு விளம்பரம் + ஒரு கேள்வி + ஒரு விளக்கம் = மொக்கை!!!


விளம்பரம் # 1

அண்ணாச்சி அறிவிப்பு செய்துவிட்டார். மாபெரும் அமீரக வலைப்பதிவர் மாநாடு குறித்து. அதில் முக்கியமாக தமிழை தள்ளிகிட்டு போவது பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சந்தோஷம் . மகிழ்ச்சி. இது போன்ற விஷயங்களிள் அதீத ஆர்வம் காட்டும் தம்பி உமாகதிர் அவர்கள் இப்போதே அபுதாபியில் இருந்து பொடி நடையாக கிளம்பிவிட்டதாக தெரிகின்றது. இந்த விஷயத்தில் என் திரைமறைவு உதவிகளும், நேரடி பங்களிப்பும் கண்டிப்பாய் இருக்கும் என ஜொள்ளிக்கிறேன்.

ஷார்ஜாவாசிகளான பெனாத்தலார், கோபி,சென்ஷி, குசும்பன்,அஜ்மான்வாசியான லியோசுரேஷ் ஆகியோர் கண்டிப்பாக வந்துவிடுவார்கள் என நம்பப்படுகின்றது. துபாய்வாசிகளான நானும், அய்யனாரும், ஜுஃபைரும்,சுல்தான்பாயும், ஜஸீலாக்காவும், முத்துகுமரன், நண்பன் ஷாஜி,லொடுக்கு,பாஸ்ட்பவுலர் கூட வந்துவிடுவோம். அலய்ன்வாசி மின்னல் இன்னும் இந்தியாவிலே இருந்து வரவில்லை. மகி எங்கே என்றே தெரியவில்லை. போனில் பிடிக்க முயற்சி நடக்கின்றது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் வலைப்பதிவர்களுக்கு டி.வி.எஸ் 50, எவர்சில்வர் குடம், அட்லாஸ் சைக்கிள், மூக்குத்தி, சிக்கிம்/பூட்டான் லாட்டரி சீட்டுகள்,பித்தளை அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்படும்(அண்ணாச்சி பணத்தில்) என அண்ணாச்சி சார்பாக நான் அறிவிப்பதில் பெருமை படுகிறேன். மாநாட்டு நேரம், காலம், இடம் எல்லாவற்றையும் இங்கே போய் பார்த்துகோங்கப்பா.

விளம்பரம் # 2

என் உடன்பிறப்பு,ரத்தத்தின் ரத்தம்,"அபிசித்தப்பா", என் தம்பி முத்து நம்ம ஜோதியிலே வந்து ஐக்கியமாகிட்டான்.இத்தனை நாள் கல்கி,ரிப்போர்ட்டர் இங்கெல்லாம் பல அரசியல் கட்டுரைகள் எழுதி வந்தான்.இப்போது கட்டட்ற சுதந்திரம் வேண்டி "பிளாக்க" வந்துவிட்டான். அவன் எழுத்துகளை பார்க்கும் போது "தம்பிசார்"ன்னு சொல்லனும் போல இருக்கு. நல்லா எழுதறான். இங்கே போய் பாருங்க அவன் எழுத்துகளை.

ஒரு கேள்வி:(சுப்பையா சாருக்கு)

சூப்பரா கேது தசை. அதிலே ராகு புத்தி ஓடிகிட்டு இருக்கு. கோவம் அதிகமா வருது. எல்லார்கிட்டயும் சண்டை போடுகிறேன். பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது. யானை மாதிரி மனசிலே வச்சுகிட்டு திடீர்ன்னு கோவப்பட்டு விடுகிறேன்."நுனிப்புல்"மேய்வது மாதிரி மேய்ந்து கொண்டு போகும் நான் இப்போது ஆழ்ந்து படித்து(இல்லாத) குத்தம் எல்லாம் கண்டிபிடிக்கிறேன். சாதாரணமாக என் குணம் அப்படியில்லை. எல்லாம் கேதுவும்,ராகுவும் சேர்ந்து அடிக்கும் கூத்து தான் என நினைக்கிறேன். பரிகாரமாக நான் இப்போது கும்பிடும் அம்மனையே கும்பிடலாமா அல்லது லேட்டஸ்ட் அம்மனுக்கு மாறிடலாமா?

ஒரு விளக்கம்:

நம்ம அமீரக வலைப்பதிவு செல்லகுஞ்சுகள் 1 வாரமாகவே என்னை நோண்டி நொங்கு எடுக்குதுகள். "என்ன அபிஅப்பா என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டீங்க" "என்ன அபிஅப்பா தீபாவெங்கட்டை விட்டுட்டு பிரியாமணிக்கு மாறிட்டீங்க" என்பன போன்ற மொக்கை கேள்விகளால் துளைத்து எடுக்கின்றனர். "யாருப்பா அந்த பிரியாமணி?"ன்னு கேட்டா "பருத்திவீரன் முத்தழகு"ன்னு பதில் வருது. "நான் எப்போ மாறினேன்" என கேட்டால் "அதான் பதிவெல்லாம் போட்டு இருந்தீங்களே"ன்னு சொல்றாய்ங்க. ஆஹா நம்ம பிளாக்கை கடத்திட்டாங்களோன்னு பயந்து ஓடிப்போய் பார்த்தேன் என் சமீபத்து பதிவுகளை. அடங்கொய்யால............."பிரியாணியும் நானும்"ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதைத்தான் "பிரியா மணியும் நானும்"ன்னு படிச்சுட்டு என்னை சத்தெடுத்துட்டாங்கன்னு தெரிஞ்சுது. நானாவது பதிவை தான் சரியா படிக்க மாட்டேன். நீங்க தலைப்பையே சரியா படிக்க மாட்டீங்களாப்ப்பா...நல்லா இருங்கடே!!!!!!!!!

18 comments:

 1. //நானாவது பதிவை தான் சரியா படிக்க மாட்டேன். நீங்க தலைப்பையே சரியா படிக்க மாட்டீங்களாப்ப்பா...நல்லா இருங்கடே!!!!!!!!!
  //


  ஹா ஹா ஹா...

  ReplyDelete
 2. //என் உடன்பிறப்பு,ரத்தத்தின் ரத்தம்,"அபிசித்தப்பா", என் தம்பி முத்து நம்ம ஜோதியிலே வந்து ஐக்கியமாகிட்டான்//

  அடடா இவர் வேற முத்து வா? நான் நம்ம.........தானோன்னு அவசரமா போய் பார்த்தேன்:(

  ReplyDelete
 3. ஆமாங்க பதிவைப்படிப்பதில்லை.. பதிவின் பின்னூட்டத்தையும் படிப்பதில்லைன்னு சும்மா விட்டா தலைப்பே படிக்கமாட்டேங்கறாங்களா வர வர எல்லாரும் அபி அப்பாவையே மிஞ்சிடறாங்க போல .. :(

  ReplyDelete
 4. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
  ஆமாங்க பதிவைப்படிப்பதில்லை.. பதிவின் பின்னூட்டத்தையும் படிப்பதில்லைன்னு சும்மா விட்டா தலைப்பே படிக்கமாட்டேங்கறாங்களா வர வர எல்லாரும் அபி அப்பாவையே மிஞ்சிடறாங்க போல .. :(//


  1000000000000 times repeat:)

  ReplyDelete
 5. ///இப்போது கட்டட்ற சுதந்திரம் வேண்டி "பிளாக்க" வந்துவிட்டான். அவன் எழுத்துகளை பார்க்கும் போது "தம்பிசார்"ன்னு சொல்லனும் போல இருக்கு. நல்லா எழுதறான்///

  வந்துட்டேன்..வழியில்லை..கோவபடாம சகிச்சுகங்க ஏன்னா....நீங்க எல்லாரும் ரோ..ம்ப நல்லவங்க..

  ReplyDelete
 6. நான் பிரியாமணியயே, பிரியாணின்னுதான் படிப்பேன். இப்படியுமா சிலர் தப்பு பண்றாங்க???????????? ஆமா அதென்ன தமிழை தள்ளிகிட்டு போவது அபி அப்பா?

  ReplyDelete
 7. அட நம்ம ஊர்க்கராங்க புதுசா வந்துருக்காங்கன்னு அங்கன போய் பார்த்தேன்!

  அண்ணே அவுரு அல்ரெடி தூள் கிளப்புறாருன்னேன் ஏற்கனவே நிறைய புத்தகங்கள் வெளி வந்திருக்கு நானும் படிச்சிருக்கேனே!!

  வாழ்த்துக்கள் சொல்லிடுங்க!

  ReplyDelete
 8. அபி அப்பா! ஏன் இப்படி கொல வெறியில் இரத்ததில் பதிவு எழுதி இருக்கீங்க... நீங்களும் அந்த செவப்பா இரத்தம் அல்லது ரத்தத்தில் சேர்ந்து விட்டீர்களா... ந்மக்கு அதெல்லாம் வாணாம்,.... வந்துடுங்க.. :))))

  ReplyDelete
 9. அண்ணன் முத்துக்குமாருக்கு வாழ்த்துக்கள்... :)

  ReplyDelete
 10. //மாநாட்டில் கலந்து கொள்ளும் வலைப்பதிவர்களுக்கு டி.வி.எஸ் 50, எவர்சில்வர் குடம், அட்லாஸ் சைக்கிள், மூக்குத்தி, சிக்கிம்/பூட்டான் லாட்டரி சீட்டுகள்,பித்தளை அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்படும்(அண்ணாச்சி பணத்தில்) என அண்ணாச்சி சார்பாக நான் அறிவிப்பதில் பெருமை படுகிறேன்.//

  இந்தியாவில இருக்குறவங்க எஸ்.எம்.எஸ் (எம்.எஸ்.சுப்புலட்சுமி இல்லை) மூலமா கலந்துக்கமுடியுமான்னு ஒரே சந்தேகம்...வெளக்க முடியுமா?

  //நம்ம பிளாக்கை கடத்திட்டாங்களோன்னு பயந்து ஓடிப்போய் பார்த்தேன்//

  அதுக்கு எங்க ஜாதகம் நல்லா இருக்கணும். அதுதான் இல்லையே..

  //நானாவது பதிவை தான் சரியா படிக்க மாட்டேன்.//

  இப்பவாவது ஒத்துகிட்டீங்களே..

  //நீங்க தலைப்பையே சரியா படிக்க மாட்டீங்களாப்ப்பா...//

  ஹி...ஹி..ஹி..

  //நல்லா இருங்கடே!!!!!!!!!//

  வாழ்த்துக்கு நன்றி..

  ReplyDelete
 11. //அதில் முக்கியமாக தமிழை தள்ளிகிட்டு போவது பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. //

  ஹா,ஹா,ஹா.. செமையா கலாய்க்கிறீங்க! :)

  ReplyDelete
 12. //மாநாட்டில் கலந்து கொள்ளும் வலைப்பதிவர்களுக்கு டி.வி.எஸ் 50, எவர்சில்வர் குடம், அட்லாஸ் சைக்கிள், மூக்குத்தி, சிக்கிம்/பூட்டான் லாட்டரி சீட்டுகள்,பித்தளை அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்படும்(அண்ணாச்சி பணத்தில்) என அண்ணாச்சி சார்பாக நான் அறிவிப்பதில் பெருமை படுகிறேன்.//

  அபிஅப்பா, அட்லஸ் சைக்கிள் எனக்குக் கிடைக்கிற மாதிரி ஒரு சீட்டு எடுத்து வெச்சுக்குங்க.. மயிலாடுதுறையில் டெலிவரி எடுத்துக்கறேன்..

  ReplyDelete
 13. நிச்சயமா இது நீங்க தான், போலி இல்லை, நான் கொஞ்ச நாளா சந்தேகப் பட்டுட்டு இருந்தேன், இப்போப் புரியுது, பின்னூட்டத்துக்கு பதில் வரலைனா அது அபி அப்பா, அபி அப்பா, அபி அப்பாவே தான்! :P

  சரி, எனக்கு ஒரு மூக்குத்தி, வைரத்திலே வாங்கி வச்சுக்குங்க, இந்தியா வரும்போது வாங்கிக்கறேன்! :)))))

  ReplyDelete
 14. தம்பியுடையான் பின்னூட்டத்துக்கு அஞ்சான்

  ReplyDelete
 15. //............."பிரியாணியும் நானும்"ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதைத்தான் "பிரியா மணியும் நானும்"ன்னு படிச்சுட்டு என்னை சத்தெடுத்துட்டாங்கன்னு தெரிஞ்சுது. //

  LOL :)

  ReplyDelete
 16. ANNA, ADUTHA PADHIVA PDUNGA,,,

  ReplyDelete
 17. //என் உடன்பிறப்பு,ரத்தத்தின் ரத்தம்,"அபிசித்தப்பா", என் தம்பி முத்து//

  அபி அப்பா, இவர் தான் உங்களோட முதல் பிஸினஸ்ஸான தினத்தந்திக்கு நகைச்சுவை எழுதுறதுல பார்ட்னரா இருந்தவரா?

  ReplyDelete
 18. நீங்க அந்த பிரியாணி பதிவு எழுதுன நேரத்துலத்தான் பிரியாமணிக்கு தேசிய விருது வேற கிடைச்சுச்சா, அதுனால நான் கூட முதல்ல பிரியா மணின்னு தான் படிச்சேன். ஆனா படிச்சதுக்கப்புறம்தான் புரிஞ்சுச்சு.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))