பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 21, 2009

மாநக்கல் சிபிக்கு கண்டனம் செய்த தம்பி சென்ஷிக்கு ஒரு ஷொட்டு!!!

டிசம்பர் வந்தா சென்னையிலே மாத்திரம் தான் எப்பவும் கர்நாடக காய்சல் அடிக்கும். ஆனா ஜனவரி வந்தா உலகம் முழுக்க எங்க தல "பாலபாரதி" பிறந்த நாள் சூராவளி அடிக்க ஆரம்பித்து விடும். அதுவும் இந்த தடவை தலயின் தல பிறந்த நாள் வேற. சும்மா விட்டுடுவோமா!

ஒபாமாவின் பதவியேற்புக்கு கவுண்டவுன் செஞ்ச பாசிச கூட்டத்தை எல்லாம் பின்னுக்கு தள்ளி எங்கள் பாகச கூட்டம் தல பாலபாரதி பிறந்த நாள் கவுண்டவுன் செஞ்சுகிட்டு இருப்பதை பார்த்து ஒமாமாவே நெம்ப வருத்தப்பட்டு பாகச அகில உலக மகளிர் அணி தலைவி பொன்ஸ்க்கு போன் போட்டு அழுததாக பீப்பீசி செய்தி பிலாச் நியூச் சொல்லிகிட்டு இருக்குதாம்.

அதுவும் இந்த தடவை தலயின் செய்தி தொடர்பாளர் நாமக்கல் சிபியின் அறிவிப்பு எங்களுக்கு புது உற்சாகத்தையும் எங்கள் தல க்கு புது ரத்தம் பாய்ச்சுவதாகவும்ம் அமைந்தது.(பின்னே, இந்த தடவை தல மரம் செடி கொடி முதல் துளசி ரீச்சரின் பூனை முதல் பொன்ஸின் யானை வரை ரத்த தானம் செய்ய போகிறார்ல்ல)

சிபியின் அறிக்கை: தல பாலாபாரதி அவர்களின் ஜனவரி 24 பிறந்த நாளை முன்னிட்டு ஆங்காங்கே உலகம் முழுமையும் பாகச கிளை கழகங்கள் புது உறுப்பினர்சேர்க்க வேண்டும் எனவும், புதிதாய் சேர்ந்த உறுப்பினர்கள் அணைவருக்கும் தல ஆளுக்கு 5 பவுன் தங்க சங்கிலி பரிசாக கொடுத்து, வழக்கம் போல உறுப்பினர் அட்டையில் தன் ரத்த கையெழுத்தை ஒரு தடவைக்கு இருபத்திஏழு தடவையாக போட்டு தருவார் எனவும், தவிர ஒரு வருடத்துக்கான சந்தா தொகையான 500 ரூபாயை பின் தேதியிட்ட காசோலையாக அடுத்த பிறந்த நாள் வரை 12 மாதங்களுக்கு புது உறுப்பினர்களுக்கு வழங்குவார் எனவும் கேட்டு கொள்ள படுகின்றது!

சிபியின் இந்த அறிக்கைக்கு பின்னே உலக பாகச கிளை கழக தலைவர்கள் பலரும் பலவித ஆலோசனை அதாவது "பாலபாரதி விருது" உட்பட சொல்ல எல்லாம் எல்லோராலும் ஒரு மனதாக ஒத்து கொள்ளப்பட்டது.

அது சம்மந்தமாக நடந்த கிடேசன் பார்க் கூட்டத்தில் அபிஅப்பா "தல பாலபாரதியின் சொந்த செலவிலே கிடேசன் பார்க் கொண்டு வருவது எனவும் அமரிக்க பொருளாதார வீழ்ச்சியால் வாடி போன கிடேசன் பார்க் மரம் செடி கொடி உட்பட போனது வந்ததூக்கு எல்லாம் தலயை விட்டு ரத்த தானம் செய்வது என்றும் அதிகமாக ரத்தம் குடிக்கும் ஜீவனுக்கு தல தலைகீழாக நின்னு "பாலபாரதி விருது" வழங்குவார்" எனவும் தீர்மானம் நிறை வேற்ற அதன் தொடர்சியாக பா.க.ச உலக கிளை கழகங்களின் அறிக்கை போர் பின்னே காங்கிரஸ் கட்சி கூட்டம் மாதிரி ஆகி போய் சென்ஷி டவுசரை கிழிக்கும் அளவு போனது ஒரு தனிகதை. அதை கீழே பார்க்கவும்!

\\அண்ணன் மாநக்கல் சிபிக்கு கடும் எச்சரிக்கை!சங்கத்தில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டதாக மூத்த உறுப்பினர்கள் அறிக்கை கொடுத்தும் இதுவரை ஷார்ஜாவிற்கு 10 லிட்டர் ரத்தம் கூட அனுப்ப முடியாததன் மர்மம் என்ன.. சங்கத்திலும் ஊழலா... இந்த கண்டனம் படித்த உடனே அமீரக பாகச தொண்டர்களுக்கு ரத்தம் கிடைக்கவில்லை என்றால் கடத்துவோம். தலயை ஆசிப் அண்ணாச்சியை வைத்தே கடத்துவோம்.

இப்படிக்கு
சென்ஷி
பா.க.ச ஷார்ஜா கிளை கழகம்\\

சென்ஷியின் இந்த கடும் கோவத்துக்கு பின் நந்து பாதர் ஆப் நிலாவின் அறிக்கை கீழே!

\\ரத்தம் குடிப்பது எப்படின்னு இந்த படத்தில் இருப்பது மாதிரி பாலா செஞ்சு காட்டுவார்.
http://www.flickr.com/photos/mkguru123/510785325/
சரிதானே அபிஅப்பா?
(படம்-நன்றி திரு.ஒப்பாரி)
நந்து \\

இது போதாதுன்னு சும்மா இருக்குமா கோவை கிளை கழகம், கிளம்பிட்டாரு வடகரை வேலன் அண்ணாச்சி!

\\இதை நான் கடுமையாக, உரக்க ஆட்சேபிக்கிறேன்.
கோவைக் கிளைக்கே இன்னும் ரத்தம் வரவில்லை. ஞாயிற்றுகிழமை ரத்தப் பொறியல் கூட காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம்.
எனவே உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தபின்பே வெளிநாடு வாழ் உறுப்பினர்களைக் கணக்கில் எடுக்கவேண்டும் என்று முன்மொழிகிறேன்.
மறுத்தால். ரத்தப் பொறியல் அணைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு செலவுகள் சென்ஷியின் கணக்கில் ஏற்றப்படும் என்பதை ஆணித்தரமாக அறைகூவல் விடுக்கிறோம்.
வடகரை வேலன்\\
இப்படியாக தல பாலபாரதியின் பிறந்த நாள் கொண்டாட்ட கவுண்டவுன் ராக்கெட் வேகத்தில் போய் கொண்டிருக்கு மக்கா!

உபரி செய்தி!

ஒபாமாவின் பதவி ஏற்பு விழா ஏரோப்பிளேன் வேகத்திலும், தல பிறந்த நாள் கவுண்டவுன் ராக்கெட் வேகத்திலும் செல்வது அறிந்த ஒபாமா தலயிடம் கேட்ட கேள்வி!

"தல என் கவுண்டவுன் மாத்திரம் ஏரோப்பிளேன் வேகத்திலே மணிக்கு 300 கி.மீ வேகத்துல போகுது, ஆனா உங்க கவுண்டவுன் மாத்திரம் எப்படி தல ராக்கெட் மாதிரி மணிக்கு 1000 கி.மீ வேகத்துல போகுது"

அதுக்கு தல ஒபாமாவிடம் " நல்லா வருதுய்யா வாயில ராக்கெட்டுக்கு "அந்த" இடத்தில நெருப்பு வைப்பாங்க தெரியுமா? அது போல உனக்கும் வச்சா நீயும் 1000 கிமீஇ வேகத்துல போவய்யா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

பா.க.ச ஆளுங்க நல்லா வச்சாங்கய்யா நெருப்ப!!!

14 comments:

 1. \\சென்ஷி டவுசரை கிழிக்கும் அளவு போனது ஒரு தனிகதை. அதை கீழே பார்க்கவும்!\\

  அடபாவமே! சென்சார் ஏதும் இல்லியா இந்த பதிவுக்கு!

  ReplyDelete
 2. நான் பாகச புதிய உறுப்பினராக விருப்பம் இருக்கு எங்கு புக் பண்ணுவது

  யார் எனக்கு 5 பவுன் தங்க சங்கிலியும் 5 லிட்டர் "தல" B+ ரத்தம் தருவா..?

  ReplyDelete
 3. சென்ஷி டவுசரை கிழிக்கும் அளவு போனது ஒரு தனிகதை. அதை கீழே பார்க்கவும்//

  சென்ஷி போடவே மாட்டாறமே..!!!

  ReplyDelete
 4. =))

  வாழ்த்துக்கள் சொல்லுறேன் பேர்வழி'ன்னு மாம்ஸ் டவுசரை கிழிச்சாச்சா..

  \\இதை நான் கடுமையாக, உரக்க ஆட்சேபிக்கிறேன்.
  கோவைக் கிளைக்கே இன்னும் ரத்தம் வரவில்லை. ஞாயிற்றுகிழமை ரத்தப் பொறியல் கூட காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம்.
  எனவே உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தபின்பே வெளிநாடு வாழ் உறுப்பினர்களைக் கணக்கில் எடுக்கவேண்டும் என்று முன்மொழிகிறேன்.
  மறுத்தால். ரத்தப் பொறியல் அணைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு செலவுகள் சென்ஷியின் கணக்கில் ஏற்றப்படும் என்பதை ஆணித்தரமாக அறைகூவல் விடுக்கிறோம்.
  வடகரை வேலன்\\
  :D

  ReplyDelete
 5. என்னுடைய அறைகூவலுக்கு சென்ஷியோ மற்றெவரோ இன்னும் பதில் விடுக்கவில்லை இந்த பின்னூட்டம் வலையேறும்வரை என்பது முக்கியச் செய்தி.

  ReplyDelete
 6. //வாழ்த்துக்கள் சொல்லுறேன் பேர்வழி'ன்னு மாம்ஸ் டவுசரை கிழிச்சாச்சா.. //

  டவுசரை மட்டுமா கிழிச்சாரு? :))))

  ReplyDelete
 7. 'மாநக்கல்'தான் மருவி இப்படி ஊர் பேர் ஆயிடுச்சோ?
  ஏதோ நம்ம பங்குக்கு.... :))

  ReplyDelete
 8. அட, மாநக்கல் சிபி இந்த அளவுக்கு வாயைத் திறந்து பேசுவாரா??? ஆச்சரியமா இல்லை? :P:P:P:P:P:P:P:P

  ReplyDelete
 9. //அதுக்கு தல ஒபாமாவிடம் " நல்லா வருதுய்யா வாயில ராக்கெட்டுக்கு "அந்த" இடத்தில நெருப்பு வைப்பாங்க தெரியுமா? அது போல உனக்கும் வச்சா நீயும் 1000 கிமீஇ வேகத்துல போவய்யா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்"//

  ஹாஹாஹா...

  புது மாப்பிளைக்கு நல்லா தான் வைக்கிறாங்கய்யா... ஆப்பு.. சாரி.. நெருப்பு.. :))

  ReplyDelete
 10. // கீதா சாம்பசிவம் said...

  அட, மாநக்கல் சிபி இந்த அளவுக்கு வாயைத் திறந்து பேசுவாரா??? ஆச்சரியமா இல்லை? :P:P:P:P:P:P:P:P//

  இல்லையே ;)

  ReplyDelete
 11. நானும் உறுப்பினராகிறேன்.
  செயின் வந்துரும்ல!

  ReplyDelete
 12. இப்படி ஒரு பயமுறுத்துற போட்டோவை லிஙக் குடுத்து பாக்க சொல்லிருக்கீங்களே, பயமாருக்கு

  ReplyDelete
 13. // வெடிகுண்டு முருகேசன் said...
  நான் பாகச புதிய உறுப்பினராக விருப்பம் இருக்கு எங்கு புக் பண்ணுவது

  யார் எனக்கு 5 பவுன் தங்க சங்கிலியும் 5 லிட்டர் "தல" B+ ரத்தம் தருவா..?
  //

  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

  ReplyDelete
 14. ;-) அடி தூள், அந்த ராம் தம்பியின் ரெயில் பயணமும் படிச்சோம்ல விகடனில்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))