பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 23, 2009

பத்துமா மாமா vs அபிஅப்பா!

கோடை விடுமுறை வந்துட்டாலே நாங்க பரம்பரை பரம்பரையா போகும் இடம் மாயவரத்தில் இருந்து 9 கிமீ தூரத்தில் இருக்கும் எங்க அம்மாவின் கிராமம் தான். அது என்ன பரம்பரை பில்டப்பா? நான் போய்கிட்டு இருந்தேன். இப்ப நட்டுவும் போக ஆரம்பிச்சாச்சு அதனாலத்தான்.

அங்க கோழிபெட்டி ரிப்பேர், மாட்டை காளை போட மங்கைநல்லூர் அழைத்து போதல், புளியம் பழம் உலுக்குதல், நெல் அவித்தல், கொண்டு போய் முதலியார் மில்லில் கியூவில் நின்னு அரைத்து வருதல், மரத்தில் இருக்கும் மாங்காய்க்கு பிலாஸ்டிக் பை கட்டுதல், கீழே விழுந்த வாழை மரத்தின் இலைகளை நறுக்கி காயவைத்து சருகாக்கி ஐம்பது ஐம்பதா கட்டி வைத்தல், குடாப்பு போட்டு ஊதி ஊதி வாழைத்தார் பழுக்க வைத்தல், அணிலுக்கு மிச்சம் வைக்காமல் கொய்யா பிஞ்சு முதல் துவம்சம் செய்தல் இப்படி

எல்லாவகை மிலிட்டரி ட்ரெய்னிங்கும் கொடுக்கப்படும் எங்க மாமாவால்.
அதிலும் வயல் வேலைன்னா ரொம்ப கொண்டாட்டம் தான். காரணம் அங்க கிடைக்கும் இனிப்பு போண்டாவும் டீயும் தான். தவிர அம்மா களத்துக்கு வந்தா நடவு நட்டுகிட்டு இருக்கும் அத்தனை பொம்பளை ஆளுங்களும் "தங்கச்சி தங்க்சச்சி"ன்னு ஓடி வருவது பார்க்க பெருமையா இருக்கும். என்னவோ தெரியலை அந்த கிராமத்துக்கே அம்மா "தங்கச்சி" தான். அப்பா "மாப்பிள்ளை" தான்.

இப்ப பொறந்த வாண்டு எல்லாம் கூட அங்க அம்மா அப்பாவை "தங்கச்சி ஆத்தா, மாப்ள தாத்தா"ன்னு தான் கூப்பிடுதுங்க. அது போல நான் பெரிய தம்பி, என தம்பி சின்ன தம்பி. வாங்க பெரியதம்பி அண்ணன் அப்படின்னு கோவிந்த ராசு மொவன் கூப்பிடும் போது "என்னடா முறை இது பேசாம அண்ணன் அப்படிக்கு சொல்லுவேன். அப்படி ஒரு பாசமான கிராமம்.

எனக்கு அங்க எல்லாமே பிடிக்கும் . ஆனா என்னை கண்டாலே பிடிக்காத ஒரு ஆத்துமான்னா அது பத்துமா மாமா தான். அவர் பேர் பத்மநாதன். எல்லோரும் பத்துமா அண்ணன் என்றே சொல்லுவாங்க. நானோ ரெட்டை வால் ரங்குடு. அதனாலேயே அவருக்கு என்னை கண்டால் பிடிக்காது. அவர் மகன் நடராஜன் என் தோஸ்த். ராஜாமனி வாத்தியார் மொவன் பிரகாஷ் நான் நடராஜன், மடப்பள்ளி அய்யரு மொவன் கணேசன் எல்லாம் சேர்த்தா அந்த தெருவே அதகளம் தான்.
\
எல்லாரையும் விட்டுடுவாரு பத்துமா மாமா , என்னை மட்டும் புடிச்சு தொங்கி கிட்டு இருப்பாரு. அவர். அவர் பக்கத்து வீடு. நான் நின்னா குத்தம் உட்காந்தா குத்தம். அதிலயும் நான் தெருவிலே கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சா ஈசி சேர் போட்டு அவர் வீட்டு வாசலில் உட்காந்துப்பார். எனக்கு சோதனையா சிக்சர் அவர் கிட்ட தான் போகும். எங்க கிரிக்கெட் ரூல் படி பந்து விக்கெட்க்கு வரும் வரை ஓடலாம். அதாவது அவர் கிட்ட போனா பந்தை பிடிச்சுப்பார் தர மாட்டார். நான் அதுக்குள்ள 34 ரன் ஓடி ஓடி எடுத்துடுவேன். மத்த பசங்க எல்லாம் பந்தை கெஞ்சி கெஞ்சி வாங்கிட்டு வரும் முன்னே நான் தேவையான ரன் எடுத்துடுவேன்.

நானும் அவரை என் எதிரியாகவே பார்க்க ஆரம்பிச்சாச்சு. அவர் மனைவி ஒரு நாள் கிளியனூர் ராவுத்தர் கிட்ட நாட்டு கோழி முட்டை கொடுத்து விட்டு ச்சவ் சவ் காய் வாங்கி கிட்டு இருந்தாங்க. இவரோ ஈசி சேர்ல ஹாயா படுத்து கிட்டு இருந்தார். நான் அவர் மேலத்தான் செம கடுப்பா இருந்தனா, உடனே "பத்துமா"ன்னு ஒரு கத்து கத்தினேன். அவருக்கு சரியான கோவம். தன்னை இந்த அகராதி புடிச்சது பேர் சொல்லி கூப்பிடுதேன்னு. நேரா என் அம்மா கிட்ட வந்துடுச்சு.
\
"சுலோச்சனா தங்கச்சி சுலோச்சனா தங்கச்சி"

"வாண்ணே என்ன இத்தனை கோவமா வரே, கருப்புட்டி காப்பி குடிக்கிறியா"

"அதல்லாம் வேண்டாம் நீ என்ன புள்ளையா பெத்துருக்க அகராதியா இருக்கு அது"


'அய்யோ என்னண்ணே செஞ்சான்?"

"என்னை பார்த்து 'பத்துமா'ன்னு கத்துது"

அம்மாவுக்கு நக்கல் ஜாஸ்தி! என்னை கூப்பிட்டு "ராஸ்கோல் கெட்ட வார்த்தை பேசகூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது"ன்னு திட்டி என் வாயிலேயே போட்டாங்க!

அத்தோட அவர் வெளிறி போய் போயிட்டார்.
பின்ன அம்மா கேட்டுச்சு "ஏண்டா பத்துமான்னு சொன்ன" ன்னு ! நான் சொன்னேன் இல்லை ச்சவ் சவ் வாங்கிச்சு கமலா அத்தை. ராவுத்தர் 3 தான் கொடுத்தார். அதான் பத்துமான்னு கேட்டேன் இவருக்கு கோவம் வந்துடுச்சு அப்படின்னு சொல்ல அம்மாவுக்கு சிரிப்பு வந்துடுச்சு. நீ பொழைச்சுப்படா அப்படின்னு சொல்லுச்சு!

எங்க வீட்டில் இருந்து நாலு வீடு தள்ளி ரோட்டில் இருக்கு சொசைட்டி!அதாவது கூட்டுறவு வங்கி. உரம் ரேஷன் பொருள் எல்லாம் கிடைக்கும் இடம். அதன் வாசலில் ஒரு கொட்டகை போட்டு தலையாரி (security) ராத்திரியில் படுத்துப்பார்.

ஆனா அந்த கொட்டகை பகலில் எங்க பாசறை. "கட்ட மொதலி பொண்ணுக்கு எப்படிடா தொடை வரை முடி இருக்கு"ன்னு நடராஜன் கேட்கும் போது நான் அதிர்ந்து போவேன். இப்படி பட்ட காலிப்பயலா இருக்கானேன்னு. இப்படி பல விஷயம் பேசுவோம்.

அப்படியாக ஒரு நாள் வேற யாரும் இல்லாததால் நானும் நடராசனும் பேசிகிட்டு இருந்த போது அந்த தலையாரி கீத்தில் சொறுகி இருந்த சுருட்டு நடராசன் கண்ணில் பட்டது தான் தப்பு. அங்கயே தீப்பெட்டியும் இருந்ததால் எடுத்து பத்த வச்சான்,. ஒரு இழுப்பு இழுக்கும் போதே ஒரே இருமல். பின்ன நான் இழுத்து இருமிகிட்டே ஓடி வந்துட்டேன். எனக்கு தான் ரகசியம் வாயில் தங்காதே!

அடுத்த அரை மணியில் செக்ரட்டரி வந்தாச்சு, முதலில் கூப்பிட பட்டது நான், பிரகாசு, நடராசன்........உள்ளே போய் இருக்கோம். ஏதோ ஒரு ஊர் பெரிய மனுசன் " அட பத்துமா வந்தா என்ன ஆகும் தெரியுமா??ன்னு கேட்க எனக்கு குலை நடுங்கிடுச்சு! பத்துமா மாமா தலையில் முண்டாசு கூட அரிவாள் வச்சிருப்பார். சரி ஒரு கொலை பார்க்க ஆண்டவன் விதிச்சுட்டன் அப்படீன்னு நினைச்சு கிட்டு இருந்தப்ப அதே போஸ்ல வந்தார். ஊர் செனமே கூடி இருக்கு. மாமா ஸ்டாண்டு எல்லாம் போடலை. தலையில் இருந்த அருவா கைக்கு வந்தாச்சு. நாங்க 3 பேரும் உச்சா போயாச்சு.

வெளியே மாமா வந்தாச்சு! நாங்க 3 பேரும் கம்பீரமா வந்தோம். செக்ரட்டரி தலையை தொங்க போட்டுகிட்டு வெளியே வந்தார். ஊர் சனங்களை பார்த்து "போங்க போங்க எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது" அப்படின்னு சொல்றார்.
நான் வெளியே வந்து "டேய் பத்துமா" ன்னு சொன்னேன்,
அதுக்கு அவரு "தம்பி நீ எப்படி வேணா சொல்லு ஏன்னா நீ என் தங்கச்சி மொவண்டா"


அங்க என்னா நடந்துச்சுன்னா அவர் உள்ளே அரிவாள் சகிதமா வந்தாலும் கதவை ஓங்கி அடிச்சு மூடியும் தலையில் கட்டிய துண்டை எடுத்து இடுப்பில் கட்டி '" அய்யா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்னு சொல்லி படார்ன்னு கால்ல விழுந்தாரு".

இது ஊர் சனங்களுக்கு தெரியாது. நான் தான் ரகசியம் காப்போனாச்சே அம்மா கிட்ட வந்து சொன்னேன்! அம்மா சொன்னுச்சு"டேய் அவர் உன்னை திட்டும் போது எல்லாம் செக்ரட்டரி - கால் " அப்படின்னு சொல்லு " அம்மான்னா அம்மா தான்!
பின்ன என்ன என் சிக்சர் தான் அவர் வீட்டு வாசல்ல!
இதல்லாம் எதுக்கு சொல்றேன்!
\
"என்னங்க நான் நேத்து கேடை விடுமுறைக்காக உங்க அம்மா வீட்டுக்கு போனேன்"
"அதுக்கு அதுக்கு என்ன?"
"''அங்க பத்துமா மாமா நம்ப நட்டுவை திட்டிகிட்டே இருக்கார்"
"நோ பிராப்ளம்! நீ மாமிகிட்ட கேளு அவக்க கிட்ட கேளு என் பார்முலா சொல்லுவாங்க தம்பிகிட்ட சொல்லி கொடு"

பத்துமா மாமா திருந்த மாட்டாரா?

9 comments:

  1. முடியல என்னால முடியல! அரசியல் பதிவு இன்னும் 2.5 வருஷம் கழிச்சு தாஅன் வரும் . இனி ஜாலி ஜாலி காமடி பதிவு தான்!

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு :-). கொஞ்சம் நம்மூரு பக்கம் ஒரு ரவுண்டு அடிச்ச ஃபீலிங்

    ReplyDelete
  3. //"டேய் அவர் உன்னை திட்டும் போது எல்லாம் செக்ரட்டரி - கால் " அப்படின்னு சொல்லு " அம்மான்னா அம்மா தான்!///

    :)))))))))))))

    ReplyDelete
  4. //வாங்க பெரியதம்பி அண்ணன் அப்படின்னு கோவிந்த ராசு மொவன் கூப்பிடும் போது //

    அடடா!! நீங்க எனக்கு வெறும் அண்ணன்னு நினைச்சேன், நீங்க பெரியதம்பி அண்ணனா!

    ஓ.கே. இனிமே அப்பிடி கூப்பிட்டாப் போச்சு :))

    ReplyDelete
  5. இஃகி, இஃகி.

    பழைய ஞாபகங்கள் .. என்றுமே இனிமையான நினைவுகள் தாங்க.

    ReplyDelete
  6. இப்ப அந்த நடராஜ மாமா என்ன செய்யறார்.

    பீடிலேருந்து வெளில வந்தாரா:))

    அபி அம்மா பிள்ளையப் பார்த்துக்கோங்க.
    அப்பா செய்யாததையும் அவன் செய்துட்ப் போறான்:))

    ReplyDelete
  7. நல்லாத்தான் இருக்கு.

    .. ராஜாமனி வாத்தியார் மொவன் பிரகாஷ்..

    ஆமா... ராஜாமணி வாத்தியாரின் இன்னொரு மகனின் பேரு என்னா? அவன் என்னோட படிச்சதா ஞாபகம்? 1985 ல பத்தாவது என்னோட படிச்சான். யோசிச்சுகிட்டே இருக்கேன். பாப்போம் வருதான்னு.

    ReplyDelete
  8. வணக்கம்.

    நான் மற்றும் நண்பர்கள் வினோத், கலையரசன் போன்றோர் துபாயில் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என் நினைத்துள்ளோம். இது சம்பந்தமாக உங்கள் வழிகாட்டுதல் தேவைபடுகிறது.

    உங்கள் அலைபேசி எண் கொடுத்தால் நலம்

    என் தொலைபேசி எண் 050 - 9253270

    நன்றி

    வெங்கடேஷ்.

    ReplyDelete
  9. //ச்சவ் சவ் வாங்கிச்சு கமலா அத்தை. ராவுத்தர் 3 தான் கொடுத்தார். அதான் பத்துமான்னு கேட்டேன் இவருக்கு கோவம் வந்துடுச்சு அப்படின்னு சொல்ல அம்மாவுக்கு சிரிப்பு வந்துடுச்சு. நீ பொழைச்சுப்படா அப்படின்னு சொல்லுச்சு!//

    :)))

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))