பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 25, 2010

அய்யோ ப்ராம்பூஊஊஊஊஊஊஊ!!!!!
காலை நட்ராஜை பள்ளியில் விட்டு விட்டு என் மனைவியை கோவிலில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ஹாயாக வீட்டின் கேட் உடபட வாசல் கதவு எல்லாம் பப்பரக்கான்னு திறந்து வச்சுகிட்டு நாற்காலியில் லேப்டாப் ஓப்பன் செஞ்சுட்டு அதன் மேலே பேப்பர் வச்சு படிச்சுகிட்டு இருக்கும் போது தான் சம்பவம் நடந்தது. இல்லை ஊர்ந்ததுன்னு சொல்லலாம்.

நல்ல இம்மாம் பெரிய பாம்பு. (ரெண்டு கையையும் விரிச்சு வச்சிருக்கேன்) பொதுவா பாம்பை பார்த்தவன் எல்லாரும் "சும்மா இத்தா மொத்தம்ன்னு தன் முழங்கையை காட்டுவான். ஒரு ஆள் உசரத்துக்குன்னு சொல்லுவான். எவனுமே குட்டி பாம்பை பார்த்ததா சொல்லவே மாட்டான். அப்படி சொன்னா அவனுக்கு இழுக்கு என்பது போல் நினைத்து கொள்வான். நீங்க தயவு செய்து நம்புங்க. அது அத்தாதண்டி பாம்பு. இத்தனைக்கும் வாசலில் நந்தி மாதிரி என் வண்டி சாய்ஞ்சுகிட்டு நிக்குது. எப்படி வந்ததுன்னு தெரியலை. நிலைப்படி தாண்டி முக்கால்வாசி உள்ளே வந்துடுச்சு. மீதி வால் மாத்திரம் நிலைப்படிக்கு வெளியே இருக்கு. ஏதோ பெரியதாய் ஊர்வதை போல உள்ளுணர்வு சொன்னதால் திரும்பி பார்த்தேன்.

அது பாம்பு தான் என என் மூளைக்கு செய்தி போவதற்கு முன்பாக மீதியும் உள்ளே வந்துவிட்டது. அடுத்து என் கால் தான். கிட்ட தட்ட அதன் வாய்ப்பக்கம் என் கால் இருக்கு. அது இடது பக்கம் திரும்பினால் பூஜை ரூம். ஒரு வேளை சாமிகும்பிட வந்திருக்குமோ? இல்லை இன்றைக்கு என்ன கிழமை? அய்யோ அவசரத்துல கிழமை எல்லாம் மறந்து போச்சு. எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.

பாம்புகடித்தால் வாயில் நுரை வருமே. அடடா வாயில் வெற்றிலை வேற போட்டிருக்கேன். நுரை வர அது இடைஞ்சலா இருக்குமே...ச்சே மனசு என்னவெல்லாம் நினைத்து தொலைக்கிறது. பூஜை அறையில் ஓம் நமச்சிவாய ஓடிகிட்டு இருக்கு. பேசாம எதுனா எல் ஆர் ஈஸ்வரியின் பாம்பு பாட்டு ஓடினா கூட அது கேட்டுகிட்டு சமத்தா கொத்தாம போயிடும் என நினைத்து கொண்டேன்.

அடுத்து அடுத்து என்ன நடந்தது என்பதெல்லாம் சரியா நியாபகம் வரவில்லை இப்போது. ஆனா கத்தினேன். டீசண்ட்டா கத்தலை என்பது மாத்திரம் நல்லா தெரியுது. பக்கத்துல கட்டுமான பணியில் இருக்கும் கொத்தனார், மேஸ்திரி எல்லாம் வந்தாச்சு. அப்ப தான் கிட்ட தட்ட என் சுயநினைவுக்கு வர்ரேன். லேப்டாப் கீழே கிடக்கு. நான் சோபா மேலே நிற்கிறேன். வந்தவங்க எல்லாம் கையில் கம்பு, செங்கல் சகிதம் நிற்க அது "ஆகா தப்பான இடத்துக்கு வந்துட்டமோ"ன்னு திரும்பி படியிறங்கி சாவகாசமா ஜல்லிமேல் ஊர்ந்து காம்பவுண்ட் சுவர் ஏறுது.

பயந்துடுச்சு. ஆமாம் நான் அத்தனை ஒரு கத்தல். முன்னமே சொன்ன மாதிரி டீசண்டா கத்தலை. அதிலே ஒரு சித்தாள் சொன்னான் "யாரோ ஆடு அறுக்குறாங்கன்னு நினைச்சு வந்தேன்" ங்கொய்யால என் சத்தம் அப்படியா இருந்துச்சு. எங்க போச்சு அதுன்னு பாருங்கன்னு சொன்னதுக்கு ஒருத்தன் "அது சந்து வழியா கொல்லை பக்கம் போயிடுச்சுங்க"ன்னு சொன்னதும் எனக்கு இன்னும் பயம்.

"யோவ் யாராவது வந்து கொல்லை கதவு திறந்து பாருங்கய்யா"ன்னு கத்த ஒரு மாவீரன் போய் திறந்தான். 'அய்யய்யோ'ன்னு அலறி கதவை சாத்தினான். "மேஸ்திரி மேஸ்திரி இங்க வாசல்ல கெடக்கு மேஸ்திரி"ன்னு கத்த எனக்கு வெள்ளிகிழமை விரதம் சிவகுமாரெல்லாம் நியாபகம் வந்து போனாங்க. ஆகா பாம்பே, நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை. சும்மா பகுத்தறிவுன்னு பீலா தான் வுடுவேன். நீ இப்ப சொல்லு இப்பவே வேண்டிக்கறேன். அலகு குத்தி தீமிதிக்கனுமா செய்ய சொல்றேன். இதுக்காகவே தான் என் அப்பா அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க என வேண்டிகிட்டேன்.

பின்னே ஒரு வழியா அதை விரட்டிட்டு எல்லாரும் தன் வேலையை பார்க்க போயாச்சு. மெதுவா லேப்டாப்பை எடுத்து வச்சுட்டு என் மனைவிக்கு போன் செஞ்சா என் மாமனார் தான் எடுத்தாங்க. "மாமா பாம்பு பாம்பு"ன்னு சொல்ல ஆரம்பிக்கும் போதே "சரி மாப்ள அனுப்பி வைக்கிறேன்"ன்னு சொல்லி வச்சுட்டாங்க. அட தேவுடா திரும்பவும் பாம்பை அனுப்பி வைக்க போறாங்களான்னு நினைச்சு கிட்டே என் பெரிய அக்காவுக்கு போன் செய்தேன்.

"டேய் நீ ராத்திரி ஒழுங்கா தூங்காம கம்பியூட்டரை கட்டிகிட்டு அழற. அதான் தூக்க கலக்கம். நல்லா படுத்து தூங்கு"

"அக்கா இல்லைக்கா எல்லாரும் பார்த்தாங்க"

"எல்லாரும் நின்னு பார்க்கும் போது உனக்கு மட்டும் என்ன பயம் வேண்டி கிடக்கு"

"அய்யோ எல்லாரும் அது போன பின்னேதான் பார்த்தாங்க"

"போன பின்னே என்னாத்தை பார்த்தாங்க?"

"அய்யோ அக்கா இதுக்கு பாம்பே தேவலை. நீ போனை வச்சிடு. எனக்கு போன்ல ஆஃப் பட்டன் எங்க இருக்குன்னு கூட தெரியலை. கை நடுங்குது"

"சரி நீ எதுக்கும் 2 முட்டை வாங்கி மாரியம்மன் கோவில்ல வச்சுடு சாயந்திரம்"

"நாட்டுகோழி முட்டையா ஒயிட்லகானா"

"பாம்புக்கு என்னடா தெரிய போவுது. அது போய் செட்டியார் கடையிலே கேட்கபோவுதா அவன் நாட்டுகோழிமுட்டை வாங்கினானா, சத்துணவு திருட்டு முட்டை வாங்கினானான்னு"

அதுவும் சரிதான். எனக்கு தான் பயத்திலே ஒன்னும் புரியமாட்டேங்குது.பெரிய அக்கா எப்பவும் இப்படித்தான். சின்ன அக்கா தான் சரின்னு அதுக்கு போன் பண்ணினேன். விஷயத்தை சொன்னேன்.

"டேய் நீ இந்த கதை சொன்னதும் நம்ம சின்ன வயசுல மங்களத்தக்கா நியாபகம் தான் வருது. அது நுரை தள்ளி செத்து போச்சு தெரியுமா? உனக்கு நியாபகம் இருக்கோ"

"யக்கா, உனக்கு வெவஸ்தையே கிடையாது. நானே பாம்பை பார்த்துட்டு பயந்து கிடக்கேன். நீ வேற இதல்லாம் நியாபகபடுத்திகிட்டு"

"ஓக்கேடா. நான் ஒன்னு சொல்றேன் கோவிக்காத கேளு"

"சீக்கிரம் சொல்லு. நானே கதவை எல்லாம் பூட்டிகிட்டு இருக்கேன்"

"அடப்போடா பயந்தாகுளி பயலே. இப்படித்தான் ராஜா ஒருத்தர் பாம்புக்கு பயந்துகிட்டு பூட்டிகிட்டாராம். கடைசியா எலுமிச்சம் பழத்திலே இருந்து புடுங்குச்சாம்"

"அய்யோ அக்கா அது புடுங்குனது இருக்கட்டும். நீ என்னவோ பரிகாரம் சொல்ல போறதா நினச்சு கேட்டுகிட்டு இருக்கேன்"

"ஆமாடா பரிகாரம் தான். உனக்கு இல்லை. கிருஷ்ணாவுக்கும் குழந்தைகளுக்கும் தான். நீ இன்னிக்கே நல்ல நாள். அத்தானுக்கு சொந்தம் ஒருத்தர் L.I.C ல ஏஜண்ட். நல்ல கைராசிக்காரர். கையோட பணம் வாங்கி கொடுத்துடுவாரு குடும்பத்துக்கு. பாலிசி போட்டோமா, அத்தோட அதை மறந்தோமான்னு இருக்க மாட்டாரு"

"ஆமா இருக்கியா செத்துட்டியான்னு தினம் தினம் வந்து பார்ப்பாரா?"ன்னு கத்திகிட்டே போனை வைக்கவும் கத்வு தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பயத்துக்காக டிவி வேற சத்தமா வச்சிருந்தேன். என் நேரம் ஸ்ரீபிரியாவும் கமலும் "ஓரிடத்தில் இல்லாது நான் தவிக்க"ன்னு நீயா பாட்டை பாடிகிட்டு இருந்தாங்க.

ஆகா வந்துட்டான்யா வந்துட்டான்யா...சுத்தி சுத்தி வருதே இப்படி. ஆமா பாம்பு கதவை எல்லாம் தட்டிகிட்டு மே ஐ கம் இன்னு சொல்லிகிட்டா வரும். அய்யோ என் நேரம் அப்படி டெவலப் ஆனாலும் ஆகியிருக்கும் பாம்பெல்லாம் என நினைத்து கொண்டே மெதுவா பீப்பிங் ஹோல் வழியா பாம்பை பார்த்தேன். யாரோ வந்திருந்தாங்க. எதுக்கும் கண்ணாடி வழியா பார்த்தா அதன் பிம்பம் பாம்பு மாதிரி தெரியுதான்னு பார்த்தேன். (அந்த பாட்டில் கமல் அப்படித்தான் கண்டுபுடிச்சாரு) மனுசன் தான். கதவை திறந்து "யாருய்யா" என கேட்டேன்.

"பம்பு பிட்டருங்க, உங்க மாமா தான் அனுப்பினாங்க"

"ஓ நான் பாம்புன்னு சொன்னேன் அவங்க கிட்ட"

கதவை சாத்தினேன். வியர்த்து விட்டிருந்தது. அடுத்து ஒரேஜீவன் ஒன்றே தெய்வம் வாராய் கண்ணான்னு ஏதோ பாடிகிட்டு இருந்தது. ஒரு படப்பாடலாம். டிவியை நிறுத்தினேன். திரும்பவும் கதவு தட்டும் சத்தம். திறந்தேன். என் சகதர்மினி.

தாலி நிலைக்க கோவிலுக்கு போயிட்டு வந்திருக்காங்க.

"என்னங்க பேய் அடிச்ச மாதிரி இருக்கீங்க?"

விஷயத்தை எல்லாம் சொன்னேன்.

"இதுக்கு தான் சொன்னேன். காலையிலே சப்பாத்தி வச்சா சண்டை போடாம சாப்பிடனும். இப்படில்லாம் சண்டை போட்டா இப்படித்தான்"

அட ராமா சப்பாத்தி சண்டைக்கு எல்லாமா பாம்பு வரும்? என்ன லாஜிக் இல்லாம ஒரு பேச்சு. என் பாம்பு பிரச்சனை எல்லாருக்கும் காமடியா போச்சு. சரி நமக்கு வலையுலகம் தான் பிரச்சனையை கொட்டி தீர்க்க ஒரே வழின்னு நடந்ததை எழுத ஆரம்பிச்சேன். ஒரு நல்ல படமா பாம்பு படம் போட்டா நல்லா இருக்குமேன்னு நினைச்சு ஜீவ்ஸ் கிட்டே "ஒரு நல்ல பாம்பு படமா குடுப்பா"ன்னு கேட்டேன். அதுக்கு அவரு "நல்லபாம்பு படம் வேண்டுமா அல்லது நல்ல பாம்புபடமா வேண்டுமா?"ன்னு கேட்க எதுனா ஒரு பாம்புன்னு சொல்ல அவரு என்ன கலர் வேண்டும் என புடவைக்கு ஜாக்கெட் மேட்சிங் கேட்பது போல கேட்டாரு.

"அய்யோ ஜீவ்ஸ் நான் அவசரத்திலே சரியா கவனிக்கலை. கருப்பு...இல்லை இல்லை பிரவுன் கலர்தான். ஆனா கார்த்தால குளிக்காம வந்துடுச்சு போலிருக்கு வந்து போன இடம் கோடா இருக்கு"ன்னு சொல்லி வைக்க அவர்கிட்ட இருந்ததிலே கொஞ்சம் எடுத்து போட்டு எந்த டிசைன் பிடிக்குதோ அதை எடுத்துகுங்கன்னு சொன்னாரு. அதான் மேலே இருக்கும் பாம்பு.

சரின்னு நட்ராஜை அழைக்க ஸ்கூல் போனேன். நட்ராஜிடம் சொன்னேன். ஒரே அழுகை அவனுக்கு காட்டலைன்னு. ஹும் என்னையே நொந்துகிட்டேன். அபி வந்தா. அவளிடம் பள்ளியில் சொன்னேன். அவளுக்கு ஒரு சந்தேகம்.

"அப்பா பாம்புக்கு மாடி ஏற தெரியுமா?"

அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு!!!!

60 comments:

 1. எனக்கும் பாம்புக்கும் எப்பவும் ஒரு லிங்க்... அடிக்கடி கண்ணில் படும்.... :)

  பாம்பு நாம் பேசாம இருந்தால் போயிடும்.. சோ பயப்பட வேண்டியதே இல்ல...

  ReplyDelete
 2. நானே அஞ்சு ஏழு ஒம்போதுன்னு தலைகள் உள்ள பெயர் சொல்லாததைப் பார்த்துட்டு வந்துருக்கேன். இப்பப்பார்த்து ஒத்தைத்தலை வந்தா நல்லவா இருக்கு? சிம்பிளாப் போச்சே:-)))))

  ReplyDelete
 3. @அதுகிட்ட எனக்கு என்ன பேச்சுவார்தை வேண்டிகிடக்குங்க. நான் பாட்டுக்கு பேசாம தான் பேப்பர் படிச்சேன். அப்பதான் வந்து அல்லோகலப்படுத்திடுச்சு:-)

  ReplyDelete
 4. @ டீச்சர்! பாம்பு சூப் குடிக்கும் ஊர்ல கண்ணாடி பெட்டில பார்த்துட்டு சொல்றீங்க. கால் பக்கம் 27 இன்ச் பக்கத்திலே பக்கத்திலே துணைக்கு மனைவி கூட இல்லாதப்ப பார்த்திருக்கனும் அப்ப தெரியும் சேதி:-))

  ReplyDelete
 5. கண்ணாடிப்பெட்டி?

  ஊஹூம்.... ஒன்னும் கண்ணில் படலை.

  //துணைக்கு மனைவி கூட இல்லாதப்ப //

  ஆஹா..... உண்மை. நாங்க பெண்கள் சமாளிச்சுருவோம்.

  நானும் ஒர் பாம்பைக் கொன்னுருக்கேன் பூனா வாழ்க்கையில்.

  ReplyDelete
 6. உங்களைப்பாத்து ஒரு ஹலோ சொல்லிட்டு போலாம்னு வந்திருக்கு. நீங்க ஏர்டெல் சூப்பர் சிங்கரா மாறி ஏதோ பாடியிருந்திர்ருக்கீங்க. ஒரே ஓட்டமா ஓடிடுச்சு :)

  ReplyDelete
 7. \\
  //துணைக்கு மனைவி கூட இல்லாதப்ப //

  ஆஹா..... உண்மை. நாங்க பெண்கள் சமாளிச்சுருவோம்.

  நானும் ஒர் பாம்பைக் கொன்னுருக்கேன் பூனா வாழ்க்கையில்.\\

  டீச்சர்! அப்படி இல்லை.மனைவி பக்கத்தில் இருந்தா பாம்பு நம்மை கடிக்கும் பிராபேப்ளிட்டி 50 சதமா குறைச்சிடும் இல்லியா அதான்:-)))

  ReplyDelete
 8. சின்ன அம்மணி! நான் என்ன பெப்சி உமாவா? என்னை எதுக்கு பார்த்து ஹலோ சொல்லனும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... என்னவோ போங்க. அந்த பாம்பால ஒரே ஒரு நன்மை தான். எனக்கு பதிவு போட மேட்டர் கிடைச்சுது அத்தனையே:-))

  ReplyDelete
 9. ரொம்ப த்ரில்லிங்கான அனுபவம்தான்..நாம அதை விநோதமாக பார்ப்பது போல் நம்மையும் அது விநோதமாய் பார்க்குமோ என்னமோ ... சூப்பர் அனுபவம்

  ReplyDelete
 10. சரவெடி. அபி அப்பா, தூள் கிளப்பிட்டீங்க.

  ReplyDelete
 11. ஜுலை ஆகஸ்ட்லதான் வெக்கேஷன் டைம் அவனவன் ஊருக்கு போயி சொந்த பந்தம் பார்த்துட்டு வர்ற டைம் அப்புடித்தான் புள்ள வந்திருக்கு அதை போய் இப்படி காட்டு கத்தல் கத்தி அனுப்பிட்டீயளே :( வந்தவங்களை கம்முங்கன்னு சொல்லி கம்ம வைச்சு கும்மி அனுப்புறதுதானே நம்ம டமில் கல்ச்சர் #எவ்ளோவாட்டி கல்ச்சர் சொல்லிதர்றது :)

  ReplyDelete
 12. //சரின்னு நட்ராஜை அழைக்க ஸ்கூல் போனேன். நட்ராஜிடம் சொன்னேன். ஒரே அழுகை அவனுக்கு காட்டலைன்னு. ஹும் என்னையே நொந்துகிட்டேன். அபி வந்தா. அவளிடம் பள்ளியில் சொன்னேன். அவளுக்கு ஒரு சந்தேகம்.

  "அப்பா பாம்புக்கு மாடி ஏற தெரியுமா?"

  அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு!!!! //

  ha ha... super :)

  ReplyDelete
 13. பத்து வருசத்துக்கு முந்தி பச்சை பசேல்,பம்புசெட்,கரும்பு தோப்பு,பாம்பு குட்டி பார்க்க போயி நான் நின்ன இடத்தில, வீட்டை கட்டிப்புட்டு அது வருது இது வருதுன்னு அலம்பல் வேற செஞ்சுக்கிட்டு திரியிறீரா?

  ஆயில்யன்
  பசுமை மயிலாடுதுறை

  ReplyDelete
 14. //அது பாம்பு தான் என என் மூளைக்கு செய்தி போவதற்கு முன்பாக மீதியும் உள்ளே வந்துவிட்டது.//


  அவ்ளோ நேரமாச்சா? ஒரு வேளை பாம்பு ஃபுல் கட்டு கட்டிட்டு அசைஞ்சு அசைஞ்சு வந்திருக்கும்போல!:)))

  ReplyDelete
 15. ஒஹோ வாத்தி இந்த வேலைதான் செஞ்சுகிட்டிருக்கா - ஒவ்வொருத்தங்க வூட்டுக்கும் பாம்பு அனுப்புறாரா? :))

  ReplyDelete
 16. ரொம்ப நாள் ஆச்சு.. உங்க பதிவை படிச்சு சிரிச்சு.. பிறகு இந்த பதிவை நெனச்சு நெனச்சு சிரிச்சு. ;-)

  ReplyDelete
 17. வாசிக்க ஆரம்பிக்கும் முன், ஏதேது பயமில்லாம சூப்பரா பாம்பைப் படம் பிடித்துப் போட்டிருக்கிறீர்களே என நினைத்தேன்:))!

  ReplyDelete
 18. \\Gayathri said...

  ரொம்ப த்ரில்லிங்கான அனுபவம்தான்..நாம அதை விநோதமாக பார்ப்பது போல் நம்மையும் அது விநோதமாய் பார்க்குமோ என்னமோ ... சூப்பர் அனுபவம்
  \\

  வாங்கப்பா அமீரக காயத்ரி! என் சோகம் உங்களுக்கு த்ரில் அனுபவமா? கொண்டாடுங்க:-)) எப்ப லீவ் முடியுது? இன்னும் எத்தனை நாள் அப்பா வீட்டில்? எஞாய் பண்ணுங்க!!

  ReplyDelete
 19. இதுக்குப் போயி இவ்வளவு அலட்டலா???? நாங்க செல்லமா சுப்புக்குட்டினு பேரு எல்லாம் வச்சுக் கொஞ்சி விளையாடிட்டு இருக்கோம். என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ, இப்போக் கொஞ்ச நாட்களாக் கண்ணிலே காணோமேனு நினைச்சேன். உங்களைப் பார்க்க மாயவரம் வந்திருக்கா???

  அட?? நாங்க வெறும் கழியை வைச்சுட்டே பாம்பை விரட்டறோம். இப்போப் பாருங்க தோட்டத்திலே பெரிய பெர்ர்ர்ர்ர்ரிய பச்சைத் தவளை ஒண்ணு வந்திருக்கு. நண்டு வந்திருக்கு. தோட்டத்திலே இடம் பத்தாம எலி வீட்டுக்குள்ளே வந்திருக்கு. என்ன பண்ணறதுனு புரியலை, ஒத்தைப் பாம்பு பாவமா வந்ததுக்கு இவ்வளவு அலட்டல் அலட்டறீங்க?? மத்தியானம் தொலைபேசும்போது கூட ஒண்ணுமே சொல்லலையே??? :P

  ReplyDelete
 20. ஹிஹிஹி, அபி அப்பா, ராஜஸ்தான்லேயும், குஜராத்லேயும் அது கூடவே குடும்பம் நடத்தி இருக்கோம், நாங்க எல்லாரும். காலம்பர எழுந்து வாசல் தெளிக்கப் போனால் எங்கே அதை மிதிச்சுடுவோமோ, தூங்கிட்டு இருக்குமேனு கவலையா இருப்பேன். அது பாட்டுக்கு வந்து உட்கார்ந்துக்கும், அது பாட்டுக்குப் போயிடும். ஒரு பேச்சு வச்சுக்காதே!

  ReplyDelete
 21. //அவர்கிட்ட இருந்ததிலே கொஞ்சம் எடுத்து போட்டு எந்த டிசைன் பிடிக்குதோ அதை எடுத்துகுங்கன்னு சொன்னாரு. அதான் மேலே இருக்கும் பாம்பு.//


  ஹை அப்போ போட்டோ நீங்க உங்க விசிட்டரை எடுத்தது இல்லையா ? கேமரா மாடியில இருந்ததா ? போட்டோ எடுத்து வச்சிருந்தா நட்டு பார்த்திருப்பான் இல்ல ?
  எதுக்கும் இனிமே காமெராவை கிட்டே வச்சிக்கோங்க .
  ஜோக்ஸ் அப்பார்ட் பதிவு ஹிலேரியஸ் . பாம்புக்கு ஒரு நன்னி சொல்லீருங்க .

  ஷோபா

  ReplyDelete
 22. " வாங்கப்பா அமீரக காயத்ரி! என் சோகம் உங்களுக்கு த்ரில் அனுபவமா? கொண்டாடுங்க:-)) எப்ப லீவ் முடியுது? இன்னும் எத்தனை நாள் அப்பா வீட்டில்? எஞாய் பண்ணுங்க!! "

  என்ன என்ஜோயோ இங்க மண்டை காயுது...அடுத்தவாரம் ஷார்ஜா போய்டுவேன் ..

  ReplyDelete
 23. 1 1/2 வருடங்களுக்கு முன்பு, எனது நிறுவனம் , 20 ஏக்கர் நிலத்தைச் சுற்றி 7 அடி உயர மதிற்சுவரை கட்டியது. நிலத்தில் 3 குட்டைகள். பெரிய குட்டையின் அருகில் நிறைய செடிகள்,கொடிகள். இக்குட்டையின் அருகில் மட்டும் ஈரப்பதம் அதிகம்; பிசு பிசுவென காவிரி கடைமடை பகுதி மாதிரி. இங்கு ஈரப்பதம் 15% தாண்டினாலே பெரிய விடயம்.

  ஒரு பின்காலை புதரிலிருந்து சலசலப்பு. 8 அடி நீளத்தில் நிதானமாக ஒரு பாம்பு. அமேரிக்க கண்ணாடி கட்டுவிரியன்.

  கொத்தனாரிலிருந்து சித்தாள் வரை அனைவரும் தெற்கு அமேரிக்கர்கள். அது ஒரு வியாழக்கிழமை.

  சனிக்கிழமை மதிய உணவு விருந்தானது பாம்பு, சேல்வடோர் நாட்டு சித்தாள் ஒருவருக்கு.

  ReplyDelete
 24. < discard my previous comment. thanks >

  1 1/2 வருடங்களுக்கு முன்பு, எனது நிறுவனம் , 20 ஏக்கர் நிலத்தைச் சுற்றி 7 அடி உயர மதிற்சுவரை கட்டியது. நிலத்தில் 3 குட்டைகள். பெரிய குட்டையின் அருகில் நிறைய செடிகள், கொடிகள். இக்குட்டையின் அருகில் மட்டும் ஈரப்பதம் அதிகம்; பிசு பிசுவென காவிரி கடைமடை பகுதி மாதிரி. அல்புகர்க்கியில் ஈரப்பதம் 15% தாண்டினாலே பெரிய விடயம்.

  ஒரு பின்காலை புதரிலிருந்து சலசலப்பு. 8 அடி நீளத்தில் நிதானமாக ஒரு பாம்பு. அமேரிக்க கட்டுவிரியன்.

  கொத்தானாரிலிருந்து சித்தாள் வரை அனைவரும் தெற்கு அமேரிக்கர்கள். அது ஒரு வியாழக்கிழமை.

  சனிக்கிழமை மதிய உணவு விருந்தானது பாம்பு, சேல்வடோர் நாட்டு சித்தாள் ஒருவருக்கு.

  ReplyDelete
 25. \\T.V.ராதாகிருஷ்ணன் said...

  :)))
  \\

  வாங்க டிவிஆர் அய்யா! மிக்க நன்றி வருகைக்கும் உங்க ஓட்டுக்கும்!!!

  ReplyDelete
 26. //ஆகா பாம்பே, நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை. சும்மா பகுத்தறிவுன்னு பீலா தான் வுடுவேன்.//

  ஐயா, உண்மையச் சொல்றீங்க...

  //ஆகா பாம்பே, நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை.//

  ஐயா, உண்மையச் சொல்றீங்க...

  ReplyDelete
 27. //ஆனா கத்தினேன். டீசண்ட்டா கத்தலை என்பது மாத்திரம் நல்லா தெரியுது.//
  //நான் அத்தனை ஒரு கத்தல். முன்னமே சொன்ன மாதிரி டீசண்டா கத்தலை.//

  ஓ... உங்களுக்கு டீஸன்டாக்கூட
  கத்தத் தெரியுமா? உதாரணமா
  அதுக்கும் எதாவது இடுகை
  போடுங்களேன்..

  ReplyDelete
 28. \\ஜ்யோவ்ராம் சுந்தர் said...

  சரவெடி. அபி அப்பா, தூள் கிளப்பிட்டீங்க.
  \\

  நன்றி குருஜி! நன்றி!!

  ReplyDelete
 29. \\Bharkavi said...

  //சரின்னு நட்ராஜை அழைக்க ஸ்கூல் போனேன். நட்ராஜிடம் சொன்னேன். ஒரே அழுகை அவனுக்கு காட்டலைன்னு. ஹும் என்னையே நொந்துகிட்டேன். அபி வந்தா. அவளிடம் பள்ளியில் சொன்னேன். அவளுக்கு ஒரு சந்தேகம்.

  "அப்பா பாம்புக்கு மாடி ஏற தெரியுமா?"

  அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு!!!! //

  ha ha... super :)
  \\

  வாங்க பெண்களூரு புதிய கவிதாயினி! மிக்க நன்றி!

  ReplyDelete
 30. \\ஆயில்யன் said...

  பத்து வருசத்துக்கு முந்தி பச்சை பசேல்,பம்புசெட்,கரும்பு தோப்பு,பாம்பு குட்டி பார்க்க போயி நான் நின்ன இடத்தில, வீட்டை கட்டிப்புட்டு அது வருது இது வருதுன்னு அலம்பல் வேற செஞ்சுக்கிட்டு திரியிறீரா?

  ஆயில்யன்
  பசுமை மயிலாடுதுறை
  August 25, 2010 4:59 PM
  ஆயில்யன் said...

  //அது பாம்பு தான் என என் மூளைக்கு செய்தி போவதற்கு முன்பாக மீதியும் உள்ளே வந்துவிட்டது.//


  அவ்ளோ நேரமாச்சா? ஒரு வேளை பாம்பு ஃபுல் கட்டு கட்டிட்டு அசைஞ்சு அசைஞ்சு வந்திருக்கும்போல!:)))
  \\

  ஆமாம் ஆயில்யா பத்து வருஷம் முன்ன மாயவரத்தின் நடுவே இந்த திட்டு மாத்திரம் ஒரு செழிப்பான பச்சை பசேல்ன்னு வயல். ஓரமாக பாசன வாய்க்கால். ஒரு ஓரத்தில் செங்கள் சூலை, நடுவே ஒரு குட்டை....இப்படியாக இருந்த இடம் தான். ஆனா என்ன செய்வது..வித்தாங்க. வாங்கியாச்சு. நான் மட்டும் பசுமை என்று வாங்காமல் விட்டா அடுத்தவன் வாங்க போறான். அத்தனையே. ஆக்சுவலி அது வயலும் பாம்பும் இருந்த இடம் தான். நாம போய் அவங்க இடத்திலே வீடு கட்டிகிட்டு அவங்களை தொல்லை தருகிறோம். கசப்பான உண்மை தான்!

  அடுத்து பாம்பு செம கட்டு கட்டிகிட்டு வரலைப்பா, என் மூளை அத்தனை வேகமா சிந்திக்குதுன்னு அர்த்தம்:-))))

  ReplyDelete
 31. \\.:: மை ஃபிரண்ட் ::. said...

  ரொம்ப நாள் ஆச்சு.. உங்க பதிவை படிச்சு சிரிச்சு.. பிறகு இந்த பதிவை நெனச்சு நெனச்சு சிரிச்சு. ;-)
  \\

  வாம்மா அனு! ரொம்ப நாள் ஆச்சு உன்னைப்பார்த்து. அன்னிக்கு உன்னை திட்டிட்டேன்ன்னு கோவிச்சுகிட்டியா? அதல்லாம் சும்மா லூலூலாய்க்கு!
  நல்லா இருக்கியாப்பா? குட் குட் இப்ப தான் இளா பதிவிலே உன்னைப்பத்தி பொங்கிட்டு வர்ரேன்!! போய் பார்க்கவும்!

  ReplyDelete
 32. \\ராமலக்ஷ்மி said...

  வாசிக்க ஆரம்பிக்கும் முன், ஏதேது பயமில்லாம சூப்பரா பாம்பைப் படம் பிடித்துப் போட்டிருக்கிறீர்களே என நினைத்தேன்:))!
  \\

  அடடா இது நான் பிடித்த பாம்பு இல்லை. ஜீவ்ஸ் பிடித்தது தான். அதை ஏன் கேட்குறீங்க. அவர் பாட்டுக்கு பட்டுபுடவை மாதிரி வெரைட்டி அள்ளி போட்டுகிட்டே இருக்காரு. அதிலே அபிஅம்மா வேற "அய்யோ இதை பாருங்க பாக்கு கலர்ல முந்தில புட்டா போட்டு அழகா இருக்கு"ன்னு சொல்ல நானே பயந்து கிடக்கும் போது அது மாதிரி புடவைக்கு நான் எங்கே போவேன்ன்னு ஜுரமே வந்துடுச்சு:-)

  ReplyDelete
 33. \\கீதா சாம்பசிவம் said...

  இதுக்குப் போயி இவ்வளவு அலட்டலா???? நாங்க செல்லமா சுப்புக்குட்டினு பேரு எல்லாம் வச்சுக் கொஞ்சி விளையாடிட்டு இருக்கோம். என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ, இப்போக் கொஞ்ச நாட்களாக் கண்ணிலே காணோமேனு நினைச்சேன். உங்களைப் பார்க்க மாயவரம் வந்திருக்கா???

  அட?? நாங்க வெறும் கழியை வைச்சுட்டே பாம்பை விரட்டறோம். இப்போப் பாருங்க தோட்டத்திலே பெரிய பெர்ர்ர்ர்ர்ரிய பச்சைத் தவளை ஒண்ணு வந்திருக்கு. நண்டு வந்திருக்கு. தோட்டத்திலே இடம் பத்தாம எலி வீட்டுக்குள்ளே வந்திருக்கு. என்ன பண்ணறதுனு புரியலை, ஒத்தைப் பாம்பு பாவமா வந்ததுக்கு இவ்வளவு அலட்டல் அலட்டறீங்க?? மத்தியானம் தொலைபேசும்போது கூட ஒண்ணுமே சொல்லலையே??? :P
  \\

  அட போங்க கீதாம்மா! உங்க கிட்ட பேசினபோது தான் இந்த பதிவு அடிச்சுகிட்டு இருந்தேன். குரல்ல ஒரு நடுக்கம் இருந்திருக்குமே. பாம்பு பக்கத்திலே வந்து ஹலோ சொல்லி வம்பு பண்ணும் போது நான் எங்க போவேன் கம்புக்கு. நீங்க தான் பார்த்திருக்கீங்களே, அது வழி தனி வழின்னு போய்கிட்டு இருந்தது இன்னிக்குன்னு பார்த்து எங்க வழில வந்துடுச்சு. அதான் பயந்துட்டேன்.

  என்னாது இது எல்லாரும் என்னை விட தைரியசாலியா இருக்கீங்க. டீச்சர் என்னான்னா பூனாவிலே பாம்பு அடிச்சேன்கிறாங்க. நீங்க குஜராத்திலே அடிச்சேன்கிறீங்க. அப்ப நான் தான் கோழையா? நல்லவேளை அப்ப கிருஷ்ணா இல்லை. இருந்தா போட்டு தள்ளியிருக்குமோ என்னமோ!பாம்பை போட்டு தள்ளிட்டு உங்க லிஸ்ட்டுல வந்திருக்கும்:-)))

  ReplyDelete
 34. \\கீதா சாம்பசிவம் said...

  ஹிஹிஹி, அபி அப்பா, ராஜஸ்தான்லேயும், குஜராத்லேயும் அது கூடவே குடும்பம் நடத்தி இருக்கோம், நாங்க எல்லாரும். காலம்பர எழுந்து வாசல் தெளிக்கப் போனால் எங்கே அதை மிதிச்சுடுவோமோ, தூங்கிட்டு இருக்குமேனு கவலையா இருப்பேன். அது பாட்டுக்கு வந்து உட்கார்ந்துக்கும், அது பாட்டுக்குப் போயிடும். ஒரு பேச்சு வச்சுக்காதே!
  \\

  அது எங்க பேச போவுது. அது போட்டா நாமதான் பேச்சு மூச்சு இல்லாம போகனும்:-))

  ReplyDelete
 35. \\Shobha said...

  //அவர்கிட்ட இருந்ததிலே கொஞ்சம் எடுத்து போட்டு எந்த டிசைன் பிடிக்குதோ அதை எடுத்துகுங்கன்னு சொன்னாரு. அதான் மேலே இருக்கும் பாம்பு.//


  ஹை அப்போ போட்டோ நீங்க உங்க விசிட்டரை எடுத்தது இல்லையா ? கேமரா மாடியில இருந்ததா ? போட்டோ எடுத்து வச்சிருந்தா நட்டு பார்த்திருப்பான் இல்ல ?
  எதுக்கும் இனிமே காமெராவை கிட்டே வச்சிக்கோங்க .
  ஜோக்ஸ் அப்பார்ட் பதிவு ஹிலேரியஸ் . பாம்புக்கு ஒரு நன்னி சொல்லீருங்க .

  ஷோபா
  \\

  வாங்க ஷோபாக்கா!நானே என் உயிருக்கு போராடிகிட்டு இருக்கேன். படம் எடுக்க வேண்டிய ஆளே உள்ள வந்திருக்கும் போது நான் எங்க இருந்து படம் எடுப்பது. அதான் ஜீவ்ஸ் கிட்ட அங்க அடையாளம் சொல்லி படம் வாங்கிட்டேன்:-)))

  நன்றி நன்றி!!

  ReplyDelete
 36. \\Gayathri said...

  " வாங்கப்பா அமீரக காயத்ரி! என் சோகம் உங்களுக்கு த்ரில் அனுபவமா? கொண்டாடுங்க:-)) எப்ப லீவ் முடியுது? இன்னும் எத்தனை நாள் அப்பா வீட்டில்? எஞாய் பண்ணுங்க!! "

  என்ன என்ஜோயோ இங்க மண்டை காயுது...அடுத்தவாரம் ஷார்ஜா போய்டுவேன் ..
  \\

  அதான் நல்ல மழை பெய்யுதே காயத்ரி! பின்ன ஏன் மண்டை காயுது:-)) சார்ஜா வெயில் தான் பிடிக்குதோ!

  ReplyDelete
 37. \\Vassan said...

  1 1/2 வருடங்களுக்கு முன்பு, எனது நிறுவனம் , 20 ஏக்கர் நிலத்தைச் சுற்றி 7 அடி உயர மதிற்சுவரை கட்டியது. நிலத்தில் 3 குட்டைகள். பெரிய குட்டையின் அருகில் நிறைய செடிகள்,கொடிகள். இக்குட்டையின் அருகில் மட்டும் ஈரப்பதம் அதிகம்; பிசு பிசுவென காவிரி கடைமடை பகுதி மாதிரி. இங்கு ஈரப்பதம் 15% தாண்டினாலே பெரிய விடயம்.

  ஒரு பின்காலை புதரிலிருந்து சலசலப்பு. 8 அடி நீளத்தில் நிதானமாக ஒரு பாம்பு. அமேரிக்க கண்ணாடி கட்டுவிரியன்.

  கொத்தனாரிலிருந்து சித்தாள் வரை அனைவரும் தெற்கு அமேரிக்கர்கள். அது ஒரு வியாழக்கிழமை.

  சனிக்கிழமை மதிய உணவு விருந்தானது பாம்பு, சேல்வடோர் நாட்டு சித்தாள் ஒருவருக்கு.
  \\

  ஆகா சரியான ஆளுங்க நீங்க. நல்ல விஷமுள்ள பாம்பை சாப்பிடும் குருப்ல ஐக்கியமாகியிருக்கீங்க:-))

  ஆமாம் நான் கூட பிலிப்பைனீஸ் சிலர் பாம்பு தின்பாங்க. நண்பர்கள் தான். பார்த்திருக்கேன்!!! வருகைக்கு நன்றி!!

  ReplyDelete
 38. \\NIZAMUDEEN said...

  //ஆகா பாம்பே, நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை. சும்மா பகுத்தறிவுன்னு பீலா தான் வுடுவேன்.//

  ஐயா, உண்மையச் சொல்றீங்க...

  //ஆகா பாம்பே, நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை.//

  ஐயா, உண்மையச் சொல்றீங்க...
  August 25, 2010 9:53 PM
  NIZAMUDEEN said...

  //ஆனா கத்தினேன். டீசண்ட்டா கத்தலை என்பது மாத்திரம் நல்லா தெரியுது.//
  //நான் அத்தனை ஒரு கத்தல். முன்னமே சொன்ன மாதிரி டீசண்டா கத்தலை.//

  ஓ... உங்களுக்கு டீஸன்டாக்கூட
  கத்தத் தெரியுமா? உதாரணமா
  அதுக்கும் எதாவது இடுகை
  போடுங்களேன்..
  \\

  ஆகா நிஜாம்! இதான் மாயவரம் குசும்பா? டீசண்ட்டா கத்துவதுன்னா சும்மா தேவயாணி மாதிரி, லைட்டா பட்டும் படாம கத்துவது.

  நான் ஆடு கழுத்தை அறுத்த மாதிரில்ல கத்தியிருக்கேன்:-)))

  ReplyDelete
 39. அண்ணே,

  சாரைப்பாம்புக்கே இந்த அலட்டலா ? ஆக்ஸுவலா நீங்க மேலே படமா போட்டிருக்கிற பாம்பு ரொம்ப விஷம் மிகுந்த "மாம்பா" வகைப் பாம்பு.

  அப்புறம் பாம்பு எல்லாம் சும்மா லுல்லுவாங்காட்டிக்கி.. அது ஒண்ணும் பண்ணாது. அது பாட்டுக்கு வரும். போகும். அது கிட்ட வம்பு பண்ணாதீங்க. முட்டை பாலு வேணும்னு கேட்டா வாங்கி குடுத்துடுங்க. அப்புறம் வீட்டைச் சுத்தி துளசி செடியோ அல்லது சிறியா நங்கை வளர்த்தா பாம்பு அண்டாதுன்னு சொல்லுவாங்க.

  ReplyDelete
 40. பாம்பு வீட்டுக்கு வந்தா இப்படி எல்லாம் சிரிக்க வைக்க முடியுமா?.

  எங்க வீட்டீல சின்ன குட்டி பாம்புதான்னு சொல்லிட்டே அலப்பறை தாங்கல.

  வணக்கம் போட்டா தரையில மூணு தடவை தலையை வச்சி கும்பிட்டு போயிடும்னு எங்க வயக்காட்டுல ஆளுங்க சொல்வாங்க. ட்ரை பண்ணி இருக்கலாம். :))

  ReplyDelete
 41. //
  கவிதா | காவித் சைட்...
  எனக்கும் பாம்புக்கும் எப்பவும் ஒரு லிங்க்... அடிக்கடி கண்ணில் படும்.... :)

  பாம்பு நாம் பேசாம இருந்தால் போயிடும்.. சோ பயப்பட வேண்டியதே இல்ல...
  //
  ஏங்க சோ பயப்படரதா முக்கியம், அபிஅப்பா எப்படி பயந்து போயிருக்காரு பாருங்க....

  ReplyDelete
 42. ஆமா அது என்ன பாம்பு?

  ReplyDelete
 43. சும்மா மீட்டிட்டு போகலாம்ன்னு வந்திருக்கும். இதுக்கு இந்த ஆர்ப்பாட்டமா :-)))))).வீட்டுக்கு வந்த விருந்தாளியை இப்படி ஒண்ணும் 'கொடுக்காம' அனுப்பிட்டீங்களே!!!!!

  ReplyDelete
 44. நல்லா படம் காட்டுறீங்க!!

  :-))

  (பாம்பு படத்தைச் சொன்னேன்.)

  ReplyDelete
 45. ஐயோ காலாண்ட ஊர்ரா மாதிரி ஒரு பீலிங்.......படம் சூப்பருங்க...... நன்றி.

  ReplyDelete
 46. ஒரு ஆள் உசரத்துக்குன்னு சொல்லுவான். எவனுமே குட்டி பாம்பை பார்த்ததா சொல்லவே மாட்டான். அப்படி சொன்னா அவனுக்கு இழுக்கு என்பது போல் நினைத்து கொள்வான். நீங்க தயவு செய்து நம்புங்க. அது அத்தாதண்டி பாம்பு
  ///
  எதுலேயும் ஒரு பிரமாண்டம் வேணாமா , அதுக்குத்தான் எ[[அடி சொல்லுறது
  (புகைப்படத்துல இருக்குற பாம்பா ?

  ReplyDelete
 47. வெள்ளிகிழமை விரதம் சிவகுமாரெல்லாம் நியாபகம் வந்து போனாங்க. ஆகா பாம்பே, நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை. சும்மா பகுத்தறிவுன்னு பீலா தான் வுடுவேன். நீ இப்ப சொல்லு இப்பவே வேண்டிக்கறேன். அலகு குத்தி தீமிதிக்கனுமா செய்ய சொல்றேன்
  ////

  பல இடங்களில் சிரிப்பு வந்திடுச்சு
  அலுவலகத்தில் இருக்கேன் ரொம்ப கஷ்டமா போச்சு

  ReplyDelete
 48. //"இதுக்கு தான் சொன்னேன். காலையிலே சப்பாத்தி வச்சா சண்டை போடாம சாப்பிடனும். இப்படில்லாம் சண்டை போட்டா இப்படித்தான்"///

  Lol :-)))))))))))))))))))

  ReplyDelete
 49. உங்க கத்தல்ல பாம்பே பயந்துடுச்சா... ஹா ஹா ஹா...சூப்பர்..

  //அட ராமா சப்பாத்தி சண்டைக்கு எல்லாமா பாம்பு வரும்?//
  அட இது நல்ல ஐடியாவா இருக்கே... இதை வெச்சே ரெண்டு நாள் மெரட்டலாம் போல இருக்கே... ஹா ஹா ஹா

  நல்ல நகைச்சுவை பதிவு... என்னோட கஷ்டம் எல்லாருக்கும் காமெடியா போச்சானு திட்டறது நல்லா கேக்குது அபி அப்பா... ஹா ஹா ஹா

  ReplyDelete
 50. ’ஆரண்ய நிவாஸ்’ தோட்டத்தில தண்ணி விடும்போது எனக்கு பயமா இருக்கும். எதாவது எங்கியாவது ஊறுதான்னு. அந்த பயத்தைப் போக்க சத்தம் போட்டு பாடுவேன்.’சிந்தனை செய் மனமே’ன்னு காட்டுக் கத்தலா கத்துவேன். ட்ராஜிடி என்னென்னா என் பாட்டு எனக்கே பயமா இருக்கும்!!

  ReplyDelete
 51. ’ஆரண்ய நிவாஸ்’ தோட்டத்தில செடிகளுக்கு தன்னந்தனியா தண்ணி ஊத்தும் போது எனக்கும் பயமாத்தான் இருக்கும். அதை மறைக்க பாட்டு பாடுவேன்.’சிந்தனை செய் மனமே’ன்னு காட்டுக் கத்தலா கத்துவேன். ஒரு இலை கூட அசையாது. ஆனா என் பாட்டு எனக்கே பயமா இருக்கும்.


  அன்புடன்,
  ஆர்.ஆர்.ஆர்

  ReplyDelete
 52. 80 களின் வீரமகனே ........... உங்களை கண்டால் ஊரே நடுங்கியது. ஆனால் நீங்களோ ??????????

  ReplyDelete
 53. எங்க வீட்ல பாம்பு குடும்பமே இருக்கு ..மனை பாம்பாம் ..அது மாலை நாலு மணிக்கு வெளியே வேட்டையாட கிளம்பி ஐந்தரை மணிக்கு திரும்ப தோட்டத்திற்கு வந்து விடும் .இரவில் மழை பெய்த நாட்களில் காலை வெயிலுக்காக எங்கள் போர்டிகோவில் ஓய்வெடுக்கும் ..
  ஒரு நாள் ரத்தம் பரிசோதிக்க வந்தவர் கேட்டை திறந்தவுடன் இந்த பாம்பை பார்த்து அலறி ,எல்லார் வீட்லேயும் நாய் வளர்ப்பாங்க நீங்க பாம்பு வளர்க்கறீங்கன்னு ஓடியே போய்ட்டார் .
  நானும் அரண்ய நிவாஸ் ராமமூர்த்தி சார் போலத்தான் பாட்டு பாடிக்கொண்டே பூ பறிப்பேன் .பாட்டுக்கு பயந்து பக்கமே வராது .

  ReplyDelete
 54. நடந்த நிகழ்வுகளை மிக அழகாக நகைச்சுவையாக எழுதி படிப்பவர்களை சிரிக்க வைக்கும் ஆளுமை உங்களிடம் அதிகமாகவே இருக்கு, பாராட்டுக்கள்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))