பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 5, 2012

கலைஞரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி?பொதுவா எங்க ஊர்ல இருக்கும் திமுகவினருக்கு கலைஞர் எங்க ஊர் பக்கம் வரும் நாள் எல்லாமே தீபாவளி போல, பொங்கல் போல... காலை முதலே "ரெஸ்ட்லெஸ்" ஆக இருப்பாங்க. சின்ன பசங்க தீபாவளியை எதிர்பார்த்து காத்து கிடந்து தீபாவளி அன்று காலை 11 மணிக்கு அந்த பசங்க கிட்டே பெரியவங்க வந்து "தீபாளி போய்டிச்சா" என கேட்கும் போது "ம் .. அது கும்மோணம் தாண்டி போச்சுது. இனி அடுத்தோர்ஷம் தான் வரும்" என சோகமாக சொல்வாங்களே அதே போல கலைஞர் எங்களை கடந்து போனதும் திரும்பி வீட்டுக்கு வரும் போது நடை தளர்ந்து வருவோம். ஆனாலும் அவரை பார்த்த அந்த "பூஸ்ட்" அடுத்த முறை அவர் வரும் வரை மனதில் இனிக்கும் அளவு அவர் நினைவுகள் மலர்ந்து கிடக்கும். இதான் எங்கள் தலைவர் கலைஞர்.

இந்த முறை அவர் வருவதோ பிய்ந்து போன பலரின் வாழ்வை வசந்தமாக்க. தானே புயல் தாக்கியவர்களை தாங்கிப்பிடிக்க. கடலூர் தாண்டி எங்கள் ஊர் நகர் பக்கம் அத்தனை ஒரு சேதம் இல்லை என்றாலும் விவசாய பயிர் சேதம் அதிகம். அதனால் டவுன் பக்கம் அத்தனை ஒரு தாக்கம் இல்லை நகர்புர மக்களிடம். ஆனாலும் தலைவரை காண வேண்டும் என்கிற ஆர்வம் மிக மிக அதிகமாக இருந்தது. நான் இன்று தலைவரை பார்த்த போது ஒரு மூன்று விஷயங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அது என்ன மூன்று விஷயம்?

மயிலாடுதுறையில் கால்டெக்ஸ் பெட்ரோல் பங்க் இடத்தில், மணிக்கூண்டு அருகில் மற்றும் நகராட்சி வாசலில் ஆகிய மூன்று இடங்களில் தலைவர் மக்களை சந்திக்க இருக்கின்றார் என்பது தான் திட்டமிடல். ஆனால் கூட்டம் கூடியதோ மயிலாடுதுறை எல்லை ஆரம்பம் முதல் முடிவு வரை. நான் நின்ற இடம் நகராட்சி வாசலில். அங்கே தான் நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் முதல் நகராட்சி சேர்பர்சன் திருமதி பவானி சீனிவாசன், வக்கீல் சீனிவாசன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் இருந்தனர். தவிர என் வீட்டுக்கு அருகில் இருக்கும் இடம் அது என்பதால் நான் அங்கு நின்றேன். நான் அங்கே போகும் போது மாலை மணி நான்கு.

யாருக்கும் அவர் எப்போது வருவார் என சரியாக தெரியவில்லை. ஆனாலும் எல்லோரும் "அவர் சிதம்பரம் தாண்டி விட்டார், வைத்தீஸ்வரன்கோவில் வந்து விட்டார் இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என யூகமாக சொல்லிகொண்டே இருக்க நேரம் கடக்க கடக்க கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. நான் சப்ஜெயில் பக்கத்தில் தாலுக்கா ஆபீஸ் வாசலில் நின்றேன். எனக்கு பின்னால் ஒரு வருவாய் ஊழியர் சங்க கொடிக்கம்பம். அதன் மேடையில் ஒரு பைத்தியம் அழுக்கான கிழிந்த உடை. பரட்டை தலை, கோர முகம். அந்த சின்ன கொடி மேடையின் மீது சுருண்டு கிடந்தது. கூட்டம் கூட கூட அதுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. எங்கோ வெறித்து பார்த்தது. பின்னர் கண் மூடி சுருண்டு கொண்டது. அதை விடுங்கள்.

என் பக்கத்தில் ரொம்ப டீசண்டாக ஒருவர். அவர் மீது யாரும் படாமல் ஜாக்கிரதையாக நின்று கொண்டு இருந்தார். கவுன்சிலர் அசோக் என்னருகே வந்து ஒரு பொட்டலம் சூடான கடலையுடன் வந்து எனக்கும் கொடுத்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது நகர செயலர் குண்டாமணி எங்கள் அருகில். அவருக்கு போன் வரும் போதெல்லாம் எல்லோரும் "தலைவர் எது கிட்ட வர்ராரு" என கேட்டுக்கொண்டே இருக்க... குண்டாமணி ஒருவரை அழைத்து காதில் ஏதோ கிசுகிசுக்க ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு நான்கு ஒளிவிளக்குகள், ஜெனரேட்டர் எல்லாம் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. அப்போதே எனக்க்கு தெரிந்து விட்டது. தலைவர் வர மணி கண்டிப்பாக 7.30 ஆகும் என்று.

யாரோ ஒருவர் என்னிடம் அந்த் பைத்தியத்தை பார்த்து "ஹூம் இந்த இடம் இத்தனை பரபரப்பா இருக்கே, இதுக்கு அது பத்தி எதுனா கவலை இருக்கா? அதுக்கு கலைஞரை தெரிய போகுதா? மன்மோகன் சிங் வந்தா தெரிய போகுதா" என அங்கலாய்த்தார்.

ரங்கன், ஜெய்லாபாய் போன்ற பழம் ஆட்கள் எல்லாம் சலவை வேட்டி சட்டையுடன் வந்ததோடு கையில் அழுகிப்போன வாழைத்தார், நெற் செடிகள் கொண்டு வந்திருந்தனர். சீனியர் என்றால் சீனியர் தான். தலைவர் வரும் நோக்கம் புயலை பார்வையிட. அதனால் ஆஸ் பர் புரொசிஜர் அவங்க அதை எடுத்து வந்தனர். (திமுககாரனை அசைச்சுக்க முடியாதுப்பா.... சின்ன பசங்க எல்லாம் கத்துக்கனும்)

இதே போன தடவை திருவாரூர் பிரச்சாரம் வரும் போது தலைவர் அதே நகராட்சி பக்கம் வரும் போது ஒரு 200 போலீஸ். திமுக தொண்டர்களை கிட்டே நெருங்காமல் கயிறு கட்டி எல்லாம்.... ச்சே... ஆனால் இப்போ அதல்லாம் இல்லை. கடமைக்கு என 5 போலீஸ். ஆனால் சில தொண்டர்களை கொண்டு நகரசெயலரே களத்தில் இறங்கி கூட்டம் ஒழுங்கு செய்ய .... கிட்ட தட்ட தலைவர் வந்தார்.

எப்படி முதலில் ஒரு அம்பாசிட்டர் ஹார்ன் அடித்து கொண்டே வந்தது. அடுத்து இரண்டு கார். அதிலே எல்லாம்யார் யார் இருந்தாங்கன்னு தெரியலை. அடுத்த ஒரு பொலீரோ. அதிலே எங்க மாவட்டம் (அண்ணன் ஏ கே எஸ்) வந்தது. உடனே கூட்டம் அந்த காரை மறித்து நிற்க அவர் உள்ளே இருந்து கத்தி கொண்டே "ஓரமா போங்கப்பா" என குதிக்க... அடுத்த காரில் வந்தார் கலைஞர். காரின் நம்பர் TN 27 - BD 2728.
காரில் அவர் தகதகத்தாய சூரியனாய் மின்ன, அவருக்கு பக்கத்து சீட்டில் அண்ணன் துரைமுருகன் , இவர்களுக்கு பின் சீட்டில் அண்ணன் பொன்முடி, நடுவே அண்ணன் எம் ஆர் கே பன்னீர் செல்வம், அடுத்து அண்ணன் எ. வ வேலு. அண்ணன் மர் நால்வரும் ரோஜாப்பூவாய் கசங்கி இருக்க என் தலைவனோ சுட்டெரிக்கும் சூரியனாய், அன்பொழுகும் தென்றலாய், அமைதியான ஆறாய், சீறும் அருவியாய், ஆர்பரிக்கும் கடலாய், புன்னகை முகமாய், இன்று பிறந்த குழந்தையாய், சிரிக்கும் ரோஜாவாய், வாசனையான மல்லிகையாய், அன்பு அம்மாவாய், கண்டிப்பான தகப்பனாய் .... எல்லாமுமாய் கலந்த ஒரு கலவையாய் கை அசைத்தார். யாரோ ஒரு பையன் கல்லூரி பையன் என் பக்கம் இருந்து அண்ணன் துரைமுருகனை பார்த்து "அண்ணே ஹிண்டுல கலக்கிட்டீங்க" என சொல்ல அவர் முகத்தில் அந்த களைப்பிலும் ஒரு சுகம் தெரிந்தது.

தலைவர் கார் நின்ற பின் என் அருகே நின்றாரே அந்த டீசண்ட் ஆசாமி வெறி கொண்டவர் மாதிரி "அன்னை அஞ்சுகம் பெற்ற என் தங்கம் வாழ்க, என் தலைவர் கலைஞர் வாழ்க" என கோஷம் போட அதுவரை அவர் சீவி சிங்காரித்து வைத்த தலை முடி எல்லாம் கலைந்து சட்டை பட்டன்கள் பிய்ந்து போனது. கொஞ்ச நேரம் முன்னர் யாரும் தன் மீது படக்கூடாமல் ஜாக்கிரதையாக இருந்த ஆசாமியா இவர் என நினைத்து கொண்டேன்.

தலைவர் காரின் கண்ணாடி இறக்கி சால்வைகள் வாங்கி கொண்டார். அப்போது ஒரு திமுக உடன்பிறப்பு தலைவரின் காரை தொட வர இசட் பிரிவு வீரர் அவரை தள்ளி விட அந்த தொண்டர் தன் சட்டையை கழட்டி அவரிடம் காண்பித்து "சுடு சுடு என் தலைவர் காரை நான் தொடுவதை நீ தடுத்து மீறி நீ சுட்டா சுடு" என சட்டை பிரித்து காண்பிக்க அந்த வீரருக்கு நம் உடன்பிறப்பு சொல்லும் மொழி புரியாவிட்டாலும் உணர்ச்சி புரிந்தது.

தலைவர் வாழ்க என்ற கோஷம் வானை பிளக்க தலைவரின் கார் மெல்ல எங்களை கடந்து போனது. நான் அந்த பைத்தியம் இருந்த கொடிக்கம்பம் கீழே என் வண்டியை நிப்பாட்டி இருந்தேன். அதை எடுக்க போன போது அந்த பைத்தியம் நம் தலைவர் கார் போகும் திசை நோக்கி கும்பிட்டு கொண்டு இருந்தது. நான் ஒரு கனம் அதிர்ந்தேன். என்னால் இப்போதும் யோசித்து யோசித்து பார்க்கிறேன். அதுக்கு எதும் தெரியாது. ஆனாலும் என்னவோ நம் தலைவர் ஒரு ரிஷி போல, ஒரு சித்தர் போல, ஒரு யோகி போல தெரிந்து இருப்பாரோ என்னவோ என நினைத்து கொண்டேன்.

நான் ஒரு மூன்று விஷயங்கள் என் மனதில் ஓடியது என சொன்னேனே. அந்த பைத்தியம் முதல் விஷயம். அடுத்து..... இதே அண்ணன் துரைமுருகன், அண்ணன் எம் ஆர் கே, அண்ணன் வேலு, அண்ணன் பொன்முடி... இவர்கள் கொடுத்து வைத்தவ்ர்கள்.... இதே போலத்தானே பரிதி இளம்வழுதியையும் வைத்து இருந்தார் தலைவர். அதை கெடுத்து கொண்டாரே பரிதி:-( இனி பரிதி நினைத்தாலும் அந்த உயரத்தை தொட இயலுமா? ஏன் மனிதர்கள் புத்தி இப்படி போகின்றது? இது இரண்டாவது விஷயம்.

மூன்றாவது விஷயம்.... கலைஞரின் சொத்து பட்டியல் என கொஞ்ச நாள் முன்னர் ஒரு மெயில் எல்லோருக்கும் பரப்பப்பட்டதே? அதிலே கோபாலபுரம் வீடு மதிப்பு 5 கோடின்னு இருந்துச்சு. அடப்பாவிகளா! கலைஞரின் காரை தொடவே நம் தொண்டன் தன் மார்பை பிளந்துகொள் என காட்டுகின்றான். அந்த வீடு கலைஞர் மூச்சு காற்றால் நிரம்பிய வீடு. அதை எந்த அம்பானியாவது ஆயிரம் கோடி கொடுத்து வாங்கி டிக்கெட் போட்டு தினமும் பார்க்க அனுமத்தித்தால் திமுக தொண்டன் அத்தனை பேரும் பிளாக்ல வாங்கி போய் அந்த இடத்தை தரிசித்து விட்டு வருவாங்களே. அம்பானி போட்ட காசை ஒரு வருஷத்தில் எடுத்துடுவானே. அவருடைய வீட்டுக்கு மதிப்பு 5 கோடின்னு போட்ட படுபாவிங்களே கலைஞரின் சொத்து மதிப்பு போட நீங்கள் யாரடா? போடத்தான் முடியுமா உங்களால்??????

வாழ்க கலைஞர்! வெல்க திமுக!

28 comments:

 1. யோவ் இன்னுமா அந்தாளை நம்பிகிட்டு பழங்கதை கயிறு திரிச்சிகிட்டு இருக்கீங்க, போங்கய்யா போய் பேரன் பேத்திய கொஞ்சுவியா அத விட்டுட்டு..

  உன்ன போல இருக்க வைச்சுத்தான் அந்தாள் குடும்பமே தமிழ்நாட்ட கூறு போட்டு விக்க பார்த்தனுங்க..

  ReplyDelete
 2. அண்ணே நீங்க திமுககாரரா இருக்கலாம், அதுக்காக இதெல்லாம் ரொம்ப ஓவர். நானும் திருவாரூர்க்காரன் தான். அவர் படித்த பள்ளியில் படித்தவன் தான். அவரது வீடு இருக்கும் சன்னதி தெருவில் தான் என் வீடும் உள்ளது. அவர் படிக்கும் காலத்தில் குடியிருந்த தெற்குவீதி (தற்போது அந்த வீடு டாக்டர் நீலாவின் கிளினிக்காக உள்ளது) வீட்டுக்கு எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடை எங்களது தான்.

  நீங்க எப்போதாவது பார்ப்பதால் அவரை வர்ணிக்கலாம். அதுக்காக இந்த அளவுக்காகவா?

  ReplyDelete
 3. ஒரு நேரலை நிகழ்ச்சி பார்த்ததைப் போல் ஒரு நிறைவு.நன்றி பல.

  ReplyDelete
 4. இப்படிப்பட்ட தொண்டர்கள் இருக்கும் வரை தி மு க வை எந்த கொம்பனாலும் (கொம்பியாலும்)அசைக்க முடியாது.

  ReplyDelete
 5. நன்றி தமிழன்,ஆரூர் மூனா செந்தில்,சுஜி, பராரி,ஹாங்காங் அன்சாரிமுகமது மற்றும் பிரகாஷ்!

  ReplyDelete
 6. கொஞ்ச நாள் நம்ம தலைவர் மேல் கோபத்தில் இருந்தேன்.....இனிமேல் தளபதி தலைமைக்கு வந்தவுடன்தான் அந்த கோபம் தணியும் என்று இருந்தேன்....உங்களுடைய சமீபத்திய பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள்(FB) ஆகியவற்றை படித்தவுடன்..ச்சே...எனக்கெ என்மேல் தீராத கோபம் வருகிறது ந்ண்பரே....'நீ என்னடா சுசுபீ...அவர் மேல் கோபிப்பதற்கு' என்று ஆத்திரம் கொப்பளிக்கிறது.....நன்றி ...என்றென்றும்....

  ReplyDelete
 7. ஏழாவது ஓட்டு. எல்லாரும் படிக்கட்டும். ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருப்பீங்க போல.

  ReplyDelete
 8. mika periya thalaivanukku.. mika periya varnanai.. kalaignar arugil photo eduthu kolla enakkum aasai.. TAMILNAATTUKKU INDRUM KALAIGNAR THAAN CM

  ReplyDelete
 9. கலைஞர் : இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது......
  துரைமுருகன்: அது அவனுக விதி........

  ReplyDelete
 10. கொடி மரத்தில் படுத்து கிடந்த பைத்தியத்துக்கும் இந்த இடுகை எழுதியவருக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக தெரியவில்லை. உணர்ச்சி வசப்பட்டுப் பட்டுத்தான் நாடு குட்டிச்சுவராகி கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 11. (விவேக் குரலில்): தமிழ் நாடுலே உங்களை மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கற வரைக்கும் கலைஞர் திருந்தவே மாட்டார், திருந்தவே மாட்டார்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 12. நீங்க மாயவரமா பாஸ்

  ReplyDelete
 13. ம்ஹும் ! நித்தியானந்தா அடிமைகள், மேலமருவத்தூர் அடிமைகள் கூட திருந்த வாய்ப்புள்ளது. இந்தக் கருணாநிதி அடிமைகள் ? வாய்ப்பே இல்லை.

  ஒரு சந்தேகம். தி.மு.க. காரர் என்பதால் இப்படிச் சிந்திக்கிறீர்களா இல்லை இப்படிச் சிந்திப்பதால் தி.மு.க. வில் இருக்கிறீர்களா ?

  ReplyDelete
 14. எட்டாவது ஓட்டு. எல்லாரும் படிக்கட்டும். ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருப்பீங்க போல. # ஜோதிஜி அண்ணனை வழிமொழிந்து...

  ReplyDelete
 15. இத்தகைய அசடுகள் இருக்கும் வரை கருணாநிதி குடும்பம் இந்தியாவைக்கூட விற்றுவிடும்

  ReplyDelete
 16. கருணாநிதியை சிலாகிப்போர் இருவகையினர்: அடிமுட்டாள்கள் மற்றும் அடிமுட்டாள்களைப் பயன்படுத்திக் கொள்வோர். இதில் அபிஅப்பா முதல்வகையைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் எனத் தெரிகிறது!

  ReplyDelete
 17. கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))//

  சொல்லிட்டாப் போகுது...


  ////
  dondu(#11168674346665545885) said...
  (விவேக் குரலில்): தமிழ் நாடுலே உங்களை மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கற வரைக்கும் கலைஞர் திருந்தவே மாட்டார், திருந்தவே மாட்டார்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ////

  சரியாக இருப்பவர்கள் திருந்த வேண்டியதில்லை நண்பரே...

  ReplyDelete
 18. Anonymous said...
  கருணாநிதியை சிலாகிப்போர் இருவகையினர்: அடிமுட்டாள்கள் மற்றும் அடிமுட்டாள்களைப் பயன்படுத்திக் கொள்வோர். இதில் அபிஅப்பா முதல்வகையைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் எனத் தெரிகிறது!//

  அன்பு அனானி...கருணாநிதியை எதிர்ப்போர் முன்று வகையினர்....ஒரு வகை கருணாநிதியை அவர் சார்ந்த அரசியலை எதிர்ப்போர்.......பிரிதொருவர் ,அவரது கட்சியின் இருப்பும் , கொள்கையும் தமக்கு ஆபத்து எனக்கருதுவோர்...


  இன்னொரு கூட்டமும் இருக்கிறது......தின____ போன்ற நடுநிலை நாதாரிப்பத்திரிக்கைகளைப் படித்து விட்டு ஊருக்கு உழைப்பதாய் உள்வேடம் போட்டுக்கொள்பவர்கள்.

  நீங்கள் எந்த வகை...?????

  ReplyDelete
 19. அக்கப்போரு said...
  ம்ஹும் ! நித்தியானந்தா அடிமைகள், மேலமருவத்தூர் அடிமைகள் கூட திருந்த வாய்ப்புள்ளது. இந்தக் கருணாநிதி அடிமைகள் ? வாய்ப்பே இல்லை.////

  ஒரு சந்தேகம். தி.மு.க. காரர் என்பதால் இப்படிச் சிந்திக்கிறீர்களா இல்லை இப்படிச் சிந்திப்பதால் தி.மு.க. வில் இருக்கிறீர்களா ? ////


  கருணாநிதி அடிமைகளை மீட்டவர்....காலமெல்லாம் சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களை கைதூக்கிவிட முயற்சித்தவர்...முயற்சிப்பவர்.....நடக்கவே இயலாவிடினும் இன்றும் மக்களைச் சந்திப்பவர்...இளமையிருந்தும் ஹெலிகாப்டரில் சென்று காலைக் கூட கீழே வைக்காத முதல்வரை நீங்களெல்லாம் பெற்றிருந்தும் கலைஞரின் அருமை புரியவில்லையெனில் தவறு உங்கள் மீதுதான்.!!

  அதுசரி....காலமெல்லாம் தலித்துக்களுக்காக உழைத்த கலைஞரை எம்.ஜி.ஆரின் கலருக்காகவும் , அவர் மதுரைவீரன் படத்தில் நடித்ததற்காகவும் , ரெட்டை எலைக்கே ஓட்டுப்போட்டுப் பழகிய மக்கள் இருக்கும்போது உங்களை நொந்து என்ன பயன்...?

  எந்தவொரு மாபெரும் தலைவரையும் இருக்கும் போது உலகம் கொண்டாடுவதில்லை....எல்லோரும் இன்று புகழும் காமராசரைக் கூட தோற்கடித்தவர்கள் தான் தமிழ்நாட்டு மக்கள்......தமிழ்ப்பேப்பர்.நெட் இணையத்தில் 'க' என்ற தொடர் வருகிறது.....படித்துப்பாருங்கள்...கலைஞர் ஏன் அரைநூற்றாண்டு காலம் தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாதவராக இருக்கிறார் என்பது தெரியும்!!!!
  இருக்கும் போது கொண்டாடா விட்டாலும் ,

  ReplyDelete
 20. Andha paithiyathukavadhu thaan paithiyam endru endru therindhirukumo ennamo..ungalai pola irupavargaluku neengal paithiyamanadhu theriyavillai. Avlo dhan

  ReplyDelete
 21. ஒரே ஒரு பைத்தியம் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.

  ReplyDelete
 22. அடேய் கோமுட்டி தலையா, நான் அப்பவே சொன்னேன் அபி அப்பா இப்படித்தான் சொம்ப பளபளன்னு விளக்கி வைப்பாருன்னு, கெரகம் புடிச்சவனே. @அபி அப்பா, நீங்க சொன்னா சரியாதாங்க இருக்கும், அவரு எவ்ளோ பெரிய மகான், அவரு உங்க ஊருக்கு வாரதுக்கு நீங்க மஞ்ச துண்டு பரிகாரம் எல்லாம் பண்ணி இருக்கணும். அவரு பெரிய தலைவருங்க... நம்ம அண்ணா பேரை சொல்லியே ஆசியாவிலே பெரிய ஏழை ஆனவரு இவரு மட்டும் தான் பாவம். நம்ம எல்லாத்தையும் தமிழ படிக்க சொல்லி நம்மளை கரையேத்திட்டு பாவம் பேரனுங்களுக்கு ஹிந்தியும் இங்கிலிபீசும் சொல்லி குடுத்து கிளவுட் நைன், ரெட் ஜியான்ட் ன்னு அவிங்கள நட்டாத்துல விட்டுட்டாருய்யா பாவம். ங்கொய்யாலே, அவரு தகதகத்தாய சூரியன்னு சொன்ன ராசாவ ஒரு நாயும் பார்க்கல ஆனா "கவிஞ்சர்" கனிமொழிய வெளிய கொண்டு வந்த சாணி நக்கியவர் (ச்சே ச்சே அது சாணக்கியர்) ஆச்சே அவரு... ஹ்ம்ம் நீங்க கொடுத்து வச்சவிங்கயா நீங்க, அவர பார்த்து புட்டிங்க...


  என்றும் தி.மு.க எதிர்ப்புடன்,
  சதீஷ் முருகன்

  ReplyDelete
 23. இதையெல்லாம் பார்க்கும்போது தி. மு. கவின் அடுத்த தலைவராக யார் வரவேண்டுமென்று குமுதம் ரிப்போர்ட்டர் நடத்தும் சர்வேக்கு எப்படி முடிவு வருமுன்னு தெரியலை. அவரோட வாரிசுகளில் யாராவது ஒருவர் வரலாமென்றாலும் அப்படி வரக்கூடியவர் 75% தொண்டர்களின் பேராதரவைப் பெற்றவராயிருத்தல் மிகவும் அவசியம். இல்லையென்றால் கட்சி சிதறிப்போவதற்கும் தமிழகத்தில் சரியான மாற்றுக்கட்சி இல்லாமல் போவதற்கும் ஏதுவாக அமைந்துவிடும். இந்த நிலையைத் தவிர்க்க தலைவர் ஒரு ஒத்திசைவை உருவாக்கும் வரையில் தாமே தலைமைப் பொறுப்பில் நீடித்தால் நல்லது

  ReplyDelete
 24. அணணா! நம்முடைய விலை மதிப்பில்லா சொத்து நம் தலைவர் (கலைஞர்).இரவில் ஒளிரும் மின்மனி பூச்சி அல்ல,இருட்டையே விரட்டியடிக்கும் சூரியன் நம் தலைவர்.

  ReplyDelete
 25. அணணா! நம்முடைய விலை மதிப்பில்லா சொத்து நம் தலைவர் (கலைஞர்).இரவில் ஒளிரும் மின்மனி பூச்சி அல்ல,இருட்டையே விரட்டியடிக்கும் சூரியன் நம் தலைவர்.

  ReplyDelete
 26. அணணா! நம்முடைய விலை மதிப்பில்லா சொத்து நம் தலைவர் (கலைஞர்).இரவில் ஒளிரும் மின்மனி பூச்சி அல்ல,இருட்டையே விரட்டியடிக்கும் சூரியன் நம் தலைவர்.

  ReplyDelete
 27. அணணா! நம்முடைய விலை மதிப்பில்லா சொத்து நம் தலைவர் (கலைஞர்).இரவில் ஒளிரும் மின்மனி பூச்சி அல்ல,இருட்டையே விரட்டியடிக்கும் சூரியன் நம் தலைவர்.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))