பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 7, 2012

இவ்விடம் மாட்டுக்கறி பிரியாணி கிடைக்கும்!!!


இன்று காலை வெளிவந்த நக்கீரனில் (எங்கே வெளிவந்தது, அதான் காலை ஆறு மணிக்கு எல்லாம் எல்லா ஊர் அதிமுகவினருக்கும் மேலிடத்தில் இருந்து போன் வந்து அவர்கள் கத்தை கத்தையாக பிடுங்கி எரித்து விட்டனரே) ஜெயா மாட்டுகறி சாப்பிடுவார் என்னும் விஷயம் பற்றி அவர்கள் எழுதப்போக இப்போது பிரச்சனை நக்கீரனை அடித்தது சரியா தவறா என்பது போய் மாட்டுக்கறி சாப்பிடுவது சரியா தவறா என்னும் "கொள்கை" பிரச்சனைக்கு தாவி விட்டு நக்கீரனை அடித்தது மறைந்து போய்விட்டது. சபாஷ்! நம்ம மக்கள் பலவீனமே அது தானே! சில சமயம் பிரச்சனை திசை திருப்பப்படும். சில சமயம் பிரச்சனைகள் தானாகவே ட்ராக் மாறி போய் வேகமெடுக்கும். இப்பவும் இப்படித்தான் நக்கீரனை அடித்தது அதிமுக அரசின் அராஜகம் என்பதை மக்கள் மறந்து போய் மாட்டுக்கறி பிரியாணிக்கு வந்து கெக்கேபிக்கேன்னு சிரிக்க ஆரம்பித்து விட்டது.

ஒரு பத்திரிக்கை தவறாக எழுதுகின்றது என நினைக்கும் பட்சத்தில் அதை கூண்டில் ஏற்றுங்கள். அதைவிடுத்து அராஜகம் கையில் எடுப்பது தவறு என பொதுவான குரல் எழும்பிய போது அப்படி குரல் எழுப்பியவன் நடுநிலைவாதியாக இருந்தாலும் கூட அவன் திமுககாரனாக சித்தரித்து "நீங்க மட்டும் தினகரனை தாக்கவில்லையா" என அரைவேக்காடு கும்பல் பிதற்ற ஆரம்பித்தது. தம்பி அப்துல்லா அதற்கு அழகாய் "நக்கீரன் அலுவலக தாக்குதலுக்கு கண்டனம் சொன்னா உடனே ஏன் நீங்க மட்டும் தினகரனைத் தாக்கலையோன்னு பதிலுக்கு கூவுறானுங்க. அடகூமுட்டைகளா, தினகரன் திமுக பத்திரிக்கை, தாக்கினவனும் திமுககாரன். ஆட்சியை விமர்சிச்சு செய்தி வந்ததுக்காகவும் தாக்கலை. அது உட்கட்சி பூசல்தொடர்புடையது. ஒரு வீட்டுக்குள்ள இருந்துகிட்டே கிர்மினல் பண்றானேன்னு அண்ணங்காரன் தம்பியை ரெண்டு அறை அறையிறதில்லையா அது மாதிரி விசயம் திமுககாரன் தினகரனை எரிச்சது. ஏன்டா நீ அடுத்த வீட்டுக்காரனை அடிச்சன்னு கேட்டா நீ ஏன்டா உன் வீட்டுக்குள்ளயே அடுச்சிகிறனு கேக்குறானுங்க அறிவாளிங்க!'' என அழகாய் பதில் சொல்லியும் கேட்பார் இல்லை.

சில நடுநிலைவாதிகள் என்னும் போர்வை போத்தியவர்கள் 'அவா செஞ்சதும் தப்பு, இவா செஞ்சதும் தப்பு" என அருமையான விளக்கம் கொடுத்து விட்டு கடையை கல்லா கட்டிவிட்டு கிளம்பிவிட்டனர். ஒரிஜினல் அக்மார்க் அதிமுகவினரோ "அம்மாவைப்போய் மாட்டுக்கறி சாப்பிடுவாங்கன்னு சொல்லும் அந்த அயோக்கியன் கோபாலை கொன்னு போடனும்" என திருவாய் மலர்ந்துள்ளனர். அதற்கு தம்பி அப்துல்லாவோ "ஜெயலலிதா மாட்டுக்கறி உண்பர் என்று எழுதியது பெரிய தவறாம். அதனால் தாக்குதல் நடத்துவது சரியாம். அதிலும் இன்னும் சிலர் எழுதிய ஆளைச் சரியாக கண்டுபிடித்து உதைக்க வேண்டும் என்று கூப்பாடு வேறு. ஆமாம் மாட்டுக்கறி உண்பது என்பது என்ன அவ்வளவு கேவலமா? மலத்தை உண்பதுதான் நான் அறிந்தவரையில் கேவலம். மற்ற எதுவும் அவரவர் சுயவிருப்பம். அதில் எந்தப் பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை. இந்த நாட்டின் கோடான கோடி தாழ்தப்பட்ட மக்களின் புலால் ஆசைக்கு ஒரே தீர்வாக இருப்பது இன்றும் மாட்டுக்கறி உணவுதான். நான் அறிந்தவரையில் செல்வி.ஜெயலலிதா அவர்கள் திரைப்படங்க்களில் நடித்த காலத்தில் எந்த ஒளிவுமறைவுமின்றி ஷூட்டிங்களில் புலால் உணவை உண்டவர். அதைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் இன்றும் ஆயிரம்பேர் உண்டு. அந்த அம்மாவே சும்மா இருக்க அல்லக்கை அடிவருடிகளின் ஆட்டம் ஓவர்'' என காட்டமாக பதில் சொல்லி இருக்கின்றார். நல்ல பதில் தான்.

அதிமுகவினர் மற்றும் நடுநிலைவாதிகள் போர்வை போத்திய சிலர் "அம்மா மாட்டுக்கறி சாப்பிட்டாங்கன்னு அவதூறு கிளப்பிய நக்கீரன் செயல் மன்னிக்க முடியாத குற்றம்" என வாதிட அதற்கு தோழர் ஜே பி பிரகாஷ் அருமையாக ஒரு "டங் புல்லிங்" கேள்வி கேட்கிறார். "மாட்டுக்கறி தின்னும் மாமி என்று எழுதிய நக்கீரனை தாக்கியது சரி என்றால், கருணாநிதி குடும்பத்தை பற்றியும் , கனிமொழி , ராசா போன்றவர்களை குறித்து
இல்லாததை பொல்லாததை , ஆபாசமாக, விரசமாக தொடர்ந்து எழுத்தும் பூணுல் பத்திரிகைகளுக்கு என்ன தண்டனை...." .... சரியாகத்தான் இருக்கு இதும். நல்ல கேள்வி தான். ஆனால் பதில் வந்தபாடில்லை.

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் அதிமுகவை சேர்ந்த பொன்னையன் ஒரு அதிரடி அறிக்கை வெளியிடுகின்றார். அது என்னான்னா "ஜெயலலிதா, அவரது வீட்டிலேயே கொள்கை ரீதியாக ஒருகாலத்திலும் இதை (Beef) அனுமதிப்பதே இல்லை'' அடடே அருமையான அறிக்கையாக இருக்கே, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது அதிமுகவின் கொள்கையா அல்லது ஜெயா அம்மையாரின் வீட்டு கொள்கையா என புரியவில்லை. ஆனால் அதற்கு தோழர் ஜே பி பிரகாஷ் ஒரு சூடான பதில் கொடுக்கின்றார். அது என்னான்னா "இதுல என்ன கொள்கை சம்மந்தபட்டது ????

நேரு பிரதமராய் இருந்தபோது நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவர கோரி பார்பன சனாதனிகள் போராட்டம் நடத்தினர்...காமராஜர் இருந்த டெல்லி வீட்டையும் கொளுத்தினர்..அப்போது இந்த போராட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் இருந்து மட்டும்தான் எதிர்ப்பு குரல் எழுந்தது....அந்த குரல் திராவிட இயக்க பிதாமகன் தந்தை பெரியாருடையது....அப்போது அவர் அறிவித்த போராட்டம் தான் "மாட்டு கறி உண்ணும்" போராட்டம்....அனைத்து இடங்களிலும் மாட்டுக்கறி பிரியாணியும், மாட்டுக்கறி சூப்பும், பொது இடங்களில் சமைத்து வேண்டுவோர்க்கு அளிக்கப்பட்டது...அந்த போராட்டத்தின் எதிரொலியாக, வட நாட்டு சனாதனிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது....அனால் பொன்னையன் போன்றோர் இப்போது "வேறு" ஒரு கொள்கையை பேசுகின்றனர்"" இப்படியாக தோழர் பிரகாஷ் போட்டு கிழிச்சு எடுக்கின்றார். பொன்னையன் வாயை மூடிகிட்டு பேசாம இருந்து தொலைச்சு இருக்கலாமோ?

இதன் நடுவே நக்கீரனை தாக்கிய விஷயத்தை அம்போன்னு விட்டு விட்டு பிரச்சனை முழுவதுமாக மாட்டுக்கறிக்கு வந்து விடுகின்றது. விந்தைமனிதன் ராஜாராமன் என்னும் தோழர் மாட்டுக்கறியின் ஜாதகம் எல்லாம் தூசி தட்டி கட்டம் எல்லாம் போட்டு சோழி உருட்டி விளையாடிவிட்டார். அது என்னான்னா \\ பிராமணர்கள் மாட்டுக்கறி உண்பது இழிவான செயல் என்ற கருத்துருவாக்கம் எப்போதிருந்து வந்தது தெரியுமா?வேதகாலத்தில் மாட்டுக்கறி உண்பது இயல்பாகவும், மதிக்கத் தக்க ஒன்றாகவுமே இருந்து வந்திருக்கின்றது. சமைக்க உகந்த மாடு எத்தனை பற்கள், எத்தனை சுழிகளோடு இருக்க வேண்டும்.. மாட்டை எப்படி அறுத்துப் பங்கு வைக்கவேண்டும், அக்னிதேவன் உள்ளிட்ட அதிதேவதைகளுக்கு எந்தப் பாகத்தில் இருந்து கறியெடுத்து அவிர்ப்பாகம் கொடுக்கப்படவேண்டும், அவிர்ப்பாகம் கொடுக்கும்போது எந்தெந்த மந்திரங்களையெல்லாம் உச்சாடனம் செய்யவேண்டும் என்றெல்லாம் மிகத்தெளிவாக எழுதிவைத்து, மாட்டுக்கறி உண்பதை சனாதனத்தினர் கொண்டாட்டமாகவே செய்திருக்கின்றனர். பின்னர் உயிர்க்கொல்லாமையை வலியுறுத்தி வளர்ந்த சமண, பௌத்த மதங்களின் போட்டியைச் சமாளித்துத் தாக்குப்பிடிக்கவே சனாதன இந்து மதமும் உயிர்க்கொல்லாமைத் தத்துவத்தினைக் கடைப்பிடிக்கத் துவங்கியது \\ சபாஷ்!

அப்போது தான் தோழர் வினி ஷர்பனா ஒரு புது கோணத்தில் இந்த பிரச்சனையை அனுகுகின்றார். அது என்னான்னா ஜெயா அசைவம் சாப்பிடுபவர் என நக்கீரன் சொல்லியிருந்தா கோவிச்சுகிட்டு இருக்க மாட்டார், ஆனா பொதுவாக விலை குறைவு என்னும் காரணத்தால் ஏழ்மை நிலையில் இருக்கும் தாழத்தப்பட்டவர்கள் சாப்பிடும் ஒரு உணவை தான் உண்டதாக சொல்லி தன்னை அவமானம் செய்ததாக ஜெயா நினைத்து இப்படி காண்டு ஆகி நக்கீரனை அடிச்சு துவைக்க சொல்லிட்டார்" என அதிரடியாய் போட்டு தாக்க...

ப்யூர் இந்துத்வாவாதிகள் "அது ஒரு தெய்வம் அதை கொல்லலாமா"என கேட்க "அப்படின்னா முருகன் தமிழ்கடவுள் கையில் இருக்கும் சேவல் கோழியை கொல்லலாமா? என மடக்க ஒரே அதகளம் இன்றைக்கு நம் இணையம் பக்கம் முழுக்க முழுக்க.

நிற்க..... ஒரு விஷயம் மட்டும் தெளிவு. அம்மையார் நக்கீரனை அடிச்சது என்பது போய் பிரச்சனை மாட்டுக்கறிக்கு வந்து நிற்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதிமுகவினரோ, ஆதிக்க சக்திகளோ பத்திரிக்கை தணிக்கை வேண்டும் என்ற குரல் மட்டும் எழுப்பவே இல்லை. ஏன்னா திமுக, ஸ்பெக்ர்டம், 2ஜி, கனிமொழி, ராசா என அவர்கள் இஷ்டத்துக்கு ஆட்டம் போட முடியாமல் போய்விடும் அபாயம் அவர்களுக்கு இதனால் ஏற்படுமே என்கிற பயம் தான். அப்படி அவர்கள் போட்ட ஆட்டத்தினால் தான் இன்று அதிமுக ஆட்சிகட்டிலில் பப்பரக்கான்னு படுத்து கிடக்கு. அதை இழக்க விரும்ப மாட்டார்கள் அவர்கள். அதே போல மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என கோஷமிடும் இந்துத்வாக்கள் "மனித கறி" சாப்பிட்ட மோடிகளை மறந்தும் கூட இந்த விவாதத்துக்கு கொண்டு வரவில்லை. ஏன்னா மட்டுக்கறி மட்டும் கூடாது ஆனால், சிறுபான்மையினர் கறி என்பது அவர்கள் உயிர் வாழ தேவையான உணவு. அப்படித்தானே? என்ன நடக்குது இந்த நாட்டில்?

ஆனால் இந்த விவாதங்களில் எல்லோருமே ஒன்றை மட்டும் மறைக்க விரும்பவில்லை. அதிமுக தான் இந்த அராஜகத்தை நடத்தியது. அதும் தலைமை சொல்லித்தான் இது நடந்தது என்பதை எல்லோரும் ஒத்துகொள்கின்றனர். இதற்கு உண்மையான நடுநிலைவாதிகள் பதில் என்ன? நிலை என்ன? எப்போதும் போல வாய் மூடி மௌனகுருவாக இருக்க போகின்றார்களா? எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு பட்டனை அழுத்தி பதில் சொல்ல போகின்றார்களா?15 comments:

 1. //இந்த விவாதங்களில் எல்லோருமே ஒன்றை மட்டும் மறைக்க விரும்பவில்லை. அதிமுக தான் இந்த அராஜகத்தை நடத்தியது. அதும் தலைமை சொல்லித்தான் இது நடந்தது என்பதை எல்லோரும் ஒத்துகொள்கின்றனர். இதற்கு உண்மையான நடுநிலைவாதிகள் பதில் என்ன? நிலை என்ன? எப்போதும் போல வாய் மூடி மௌனகுருவாக இருக்க போகின்றார்களா? எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு பட்டனை அழுத்தி பதில் சொல்ல போகின்றார்களா?//


  எதுவேனாலும் நடக்குங்க. ஆனா கடசீயா சொன்னது மட்டும் நடக்கவே நடக்காது. அதுக்கு இன்னும் ரெண்டு வருசம் இருக்கு. அதுவரைக்கும் இது ஞாபகத்துல இருக்காது.

  ReplyDelete
 2. சின்னு,USAJanuary 8, 2012 at 1:41 AM

  நக்கீரன் மீதான தாக்குதல் எதிர்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஜெயலலிதாவை பற்றி நக்கீரன் எழுதியதும் அருவருக்க தக்கது. அன்புத்தம்பி அப்துல்லா பன்னிக்கறி திங்கும் மாமா என எழுதினால் ரசிப்பரா? அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை!

  ReplyDelete
 3. அமைச்சர் மாற்றம் இல்லை வேற பிரச்சனை வந்தால்
  இந்த பிரச்சனை மறந்து போகும்

  ReplyDelete
 4. நீங்களெல்லாம் லூஸா ஸார்???

  ReplyDelete
 5. தினகரன் அலுவலகத்த எரிச்சதுல செத்தது என்னா கருணாதி வீட்டு புள்ளயா? ஏண்டா முட்டாதனமாவே பேசுரிங்க தேவடியா பசங்களா... ஆனா இப்டி கேட்டாலும் உனக்கு எல்லாம் கோவமே வராதுடா பாடு.

  ReplyDelete
 6. //அதிமுக தான் இந்த அராஜகத்தை நடத்தியது. அதும் தலைமை சொல்லித்தான் இது நடந்தது என்பதை எல்லோரும் ஒத்துகொள்கின்றனர்.//

  ரொம்ப சரி.

  //ஒரு வீட்டுக்குள்ள இருந்துகிட்டே கிர்மினல் பண்றானேன்னு அண்ணங்காரன் தம்பியை ரெண்டு அறை அறையிறதில்லையா அது மாதிரி விசயம் திமுககாரன் தினகரனை எரிச்சது. //

  அப்போ அந்த மூணு பேரைக் கொன்னது திமுககாரன் இல்லை?


  //அதிமுகவினர் மற்றும் நடுநிலைவாதிகள் போர்வை போத்திய சிலர் "அம்மா மாட்டுக்கறி சாப்பிட்டாங்கன்னு அவதூறு கிளப்பிய நக்கீரன் செயல் மன்னிக்க முடியாத குற்றம்" என வாதிட அதற்கு தோழர் ஜே பி பிரகாஷ் அருமையாக ஒரு "டங் புல்லிங்" கேள்வி கேட்கிறார். "மாட்டுக்கறி தின்னும் மாமி என்று எழுதிய நக்கீரனை தாக்கியது சரி என்றால், கருணாநிதி குடும்பத்தை பற்றியும் , கனிமொழி , ராசா போன்றவர்களை குறித்து
  இல்லாததை பொல்லாததை , ஆபாசமாக, விரசமாக தொடர்ந்து எழுத்தும் பூணுல் பத்திரிகைகளுக்கு என்ன தண்டனை...." .... சரியாகத்தான் இருக்கு இதும். நல்ல கேள்வி தான். ஆனால் பதில் வந்தபாடில்லை//

  உங்களுக்கு சாதகமா கேட்டா மட்டும் ”டங் புல்லிங்”

  ReplyDelete
 7. //ப்யூர் இந்துத்வாவாதிகள் "அது ஒரு தெய்வம் அதை கொல்லலாமா"என கேட்க "அப்படின்னா முருகன் தமிழ்கடவுள் கையில் இருக்கும் சேவல் கோழியை கொல்லலாமா? என மடக்க ஒரே அதகளம் இன்றைக்கு நம் இணையம் பக்கம் முழுக்க முழுக்க.//

  என் + ஆ? - :)))) ஏன் அபிஅப்பா? ஏன்ன்ன்ன்?

  ReplyDelete
 8. திமுக ஆட்சியில் பெரும்பாலும்(ஒரு சில விதி விலக்கை தவிர) மாற்று கருத்துக்களுக்கு வன்முறை பதிலாக இருக்காது. சகிப்பு தன்மை உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பத்திரிக்கைகளில் வரும் மாற்று கருத்துகளின் உண்மைகளை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் திருத்தி கொண்ட சம்பவங்களும் உள்ளது.
  //ஒரு வீட்டுக்குள்ள இருந்துகிட்டே கிர்மினல் பண்றானேன்னு அண்ணங்காரன் தம்பியை ரெண்டு அறை அறையிறதில்லையா அது மாதிரி விசயம் திமுககாரன் தினகரனை எரிச்சது. //
  அண்ணன்காரன் தம்பியை அடிக்கிறான்னா தைரியமா கலாநிதியையும் தயாநிதியையும் வீட்டுக்கு கூப்பிட்டு அடிக்கவேண்டியது தானே? அதுக்கு ஏன் அப்பாவி தொழிலாளர்களை உயிரோடு கொளுத்த வேண்டும்.

  திமுகவினர் கடந்த சில வருடங்களாக கருணாநிதி மற்றும் மாவட்ட செயலாளர்களின் குடும்ப அரசியல்(ஒன்றே குறிக்கோள்) மற்றும் உண்மையான திராவிட கொள்கைகளிலிருந்து தடம் புரண்டு போவதை எதிர்க்காமல் கண் மூடி தனமாக ஆதரிப்பது தான் தி மு கவின் அழிவின் ஆரம்பம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 9. அய்யா திமுக கொபசெ,

  ஆ.ராசா ஊழல் செய்து உள்ளே இருந்தா அந்த இடம் காலியா இருக்குதுங்குறதுனால நீங்க அதை கையில் எடுத்துக்கிறதா. உமக்கு பிரச்சனை மாட்டுக்கறி சாப்பிடலாமா இல்லையா என்பது பற்றியல்ல. ஜெயலலிதாவையும் அதிமுகவையும் திட்ட ஒரு சம்பவம் கிடைச்சா எடுத்துகிட்டு விளையாடுறதா? உமக்கு தைரியம் இருந்தா நீர் உங்க சொந்த கருத்தை போட்டு பதிவிடுய்யா. அதை விட்டு விட்டு அப்துல்லாவையும் பழங்கால தமிழகத்தையும் ஏன் துணைக்கு கூப்பிடுகின்றீர்.

  மூன்று அப்பாவி செத்து போனா அது சொந்த பிரச்சனையா, அவர்கள் வீட்டில் அது பிரச்சனையில்லையா? உன்னைய நம்பி வேலைக்கு வந்தா உன் குடும்ப பிரச்சனையில கொளுத்த விட்டு இன்றைக்கு உன் குடும்பம் சமாதானமாகிட்டா செத்தவனுங்கள கைவிட்டுடுவியா, நல்ல நியாயம்யா உங்களுது.

  அந்த நக்கீரன் கோபாலே முதல் பக்கத்தில் பரபரப்புக்காக எதை வேண்டுமானாலும் எழுதி விக்கிற ஆளு. நம்ம ஜனங்களும் அவர் போட்ட ஆபாச தலைப்பை நம்பி புக்க வாங்கி படிச்சா உள்ளே ஒரு யழவும் இருக்காது.

  இப்ப பிரச்சனை மாட்டுகறி திங்கிறத பத்தி கிடையாது. அதை வச்சி இவனுங்க அல்பத்தனமா பத்திரிக்கையை விக்கனும்னு நினைச்சாங்க பாருங்க அது தான் தப்பு. நல்லாத்தானே பதிவுகளை எழுதிக்கொண்டு இருந்தீர்கள். என்ன ஆச்சுங்க உங்களுக்கு.

  ReplyDelete
 10. மாட்டுக்கறி சாப்பிடுவது ஒரு வகை உணவுப்பழக்கம் - இன்ன உணவு இன்னார்தான் சாப்பிடவேண்டும் என்று உலகத்தில் எங்குமே சட்டமே இல்லை. உணவுப் பழக்கம் தனி மனித உரிமை. உணவுப்பழக்கம் அவரவர் விருப்பம். மாமிசத்துடன் மதுபானம் சுவைக்கும் பிராமண இளைஞர்கள் தமிழ் நாட்டிலே இருக்கிறார்களே. ஒரு உண்மையை கூறியதற்காக தாக்குதல்தான் பரிகாரமா ? இது மக்களாட்சி நடைபெறும் நாடு தானே ?

  ReplyDelete
 11. //ஒரு உண்மையை கூறியதற்காக தாக்குதல்தான் பரிகாரமா ? இது மக்களாட்சி நடைபெறும் நாடு தானே ?//

  JJ has no faith in democracy.haha

  ReplyDelete
 12. "அதே போல மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என கோஷமிடும் இந்துத்வாக்கள் "மனித கறி" சாப்பிட்ட மோடிகளை மறந்தும் கூட இந்த விவாதத்துக்கு கொண்டு வரவில்லை".

  அருமையாக சொன்னீர்கள் ஸார். ஏன்னா இந்த மதசார்பற்ற நாட்டில் காவி இந்துத்துவ பயங்கரவாதம் மறைக்கப்பட்டு அல்லது இருட்டடிப்பு செய்யப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் கர்நாடகாவிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றி, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை கொத்துக்கொத்தாக கொல்ல இருந்த ஆர்.எஸ்.எஸ் அஜண்டா வெளிக்கொணரப்பட்டுள்ளது. இதை ஊடகங்கள் மவுனமாக மறைத்து விட்டன.
  ----------------------- -----------
  காவி தீவிரவாதிகளின் கயவாளித்தனம்!
  http://meiyeluthu.blogspot.com/2012/01/blog-post.html
  --------------------------------------- -------

  ReplyDelete
 13. ஸலாம் சகோ.அபி அப்பா,

  தினகரன் தீயிட்டு எரிக்கப்பட்ட உயிர்க்கொலைகளை... 'அறைதல்' என்று மொக்கையாக அமுக்கிய இடத்தில் அதை நறுக் என குட்டாமல்...//என அழகாய் பதில் சொல்லி//...என்று ஆதரித்ததால் நீங்கள் தடம் புரண்டுவிட்டீர்கள்..! மற்றபடி மிக நன்றாக அலசியுள்ளீர்கள்.

  நக்கீரனை எல்லாம் ஒரு பத்திரிக்கை என்ற அளவுக்கு எல்லாம் உயர்வாக மதிப்பதில்லை நான்.
  ஒரு கெட்டவன் கெட்டவனால் அடிக்கப்பட்டான். அவ்ளோதான் மேட்டர். இதற்கு பதில் மாட்டுக்கறி ஆய்வு பலருக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

  ReplyDelete
 14. Ithu maathiriyaana oru asingamana pathivai thayavu seithu inimal thodaratheerkal!

  ReplyDelete
 15. இதெல்லாம் ஒரு பிரச்சனையாக எடுக்க வேண்டியதில்லை! தினகரன் பத்திரிக்கையும் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டது. அதில் அப்பாவிகள் முன்று பேர் கொல்லப்பட்டனர். இதனை இந்த பிரச்சனையுடன் இணைக்கக்கூடாது என்கின்றனர்! ஏன் என்று தெரியவில்லை!!! விலை மதிப்பில்ல உயிர்கள் பலியாகினவே!!! அதுமட்டும் இல்லை மதுரை "தினமலர்" பத்திரிகை தி.மு.க.வினரால் தாக்கப்பட்டது. "குமுதம்" மற்றும் "துக்ளக்" பத்திரிக்கைகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் தெரியாதா என்ன?

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))