பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 7, 2012

அறிஞர் அண்ணாவும் அசன்முகமது ஜின்னாவும்!

அது 1963ம் ஆண்டு. சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு சிறப்பு மாநாடு. நம் அண்ணா பேசுகின்றார். 'நான் 1938ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவன்" என்கிற ரீதியில் பேச்சை ஆரம்பித்து "அரசியல் சட்டத்தின் 17 வது விதியை அதாவது மொழி பிரிவினையை எதிர்த்து அதை கொளுத்தும் போராட்டம். 1963ல் நவம்பர் 17 அன்று நான் கொளுத்த போகின்றேன்" என சொல்லிவிட்டார். ஆனால் நவம்பர் 16ம் தேதி அவர் காஞ்சியில் இருந்துன்சென்னை புறப்படும் முன்னர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை சென்னை மத்திய சிறையில்.....

பல முறை அவர் சிறையில் இருந்தார். ஆனாலும் இந்த முறை அவரை வளர்த்த அவரால் "தொத்தா" என அழைக்கப்பட்ட அம்மையார் இறந்துவிட்டார். அண்ணா சிறையில் இருக்கும் போதே! ஆனால் அதை விட அதிகம் அவரை வாட்டிய செய்தி எது தெரியுமா தோழர்களே! உடன்பிறப்புகளே!

அப்போது "மெயில்" என்று ஒரு ஆங்கில தினசரி. அதை பற்றி அண்ணா அந்த ஆறு மாதகாலத்தில் எழுதுகின்றார்.. ... அப்படியே தருகின்றேன்! கேளுங்கள்.......படியுங்கள்...

\\ இன்று மெயில் என்று ஒரு பத்திரிக்கை பார்த்து ஒரு கணம் பதறிப்போனேன். இந்தி எதிர்ப்பு அறப்போரினை நான் வெளியே வந்ததும் நிறுத்திவிட எண்ணுவதாகவும், என்னை சிறையில் வந்து பார்த்த முக்கிய நண்பர்கள் சிலரிடம் நான் இதை சொல்லி அனுப்பியது போலவும் மெயிலில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். நான் நினைத்து கூட பார்க்காத ஒன்றினை இப்படி மெயில் துணிந்து வெளியிட்டு இருப்பது நான் பதறிப்போனேன். இவ்விதமான பத்திரிக்கை தாக்குதல்களிடமிருந்து நாம் தப்பி பிழைத்து இந்த அளவு வளர்ந்து இருக்கிறோம் என எண்ணிப்பார்க்கும் போது பெருமிதம் எழத்தான் செய்கின்றது!"

அதற்கு அவருடன் சிறை சென்ற அரக்கோணம் ராமசாமி " அண்ணா! இந்த பத்திரிக்கையில் வெளியாவதை எல்லாம் நம் தோழர்கள் நம்ப மாட்டார்கள். நீங்கள் தான் ஏற்கனவே சொல்லிவிட்டீங்களே, இந்திஎதிர்ப்பு அறப்போர் சம்மந்தமாக நம்நாடு, முரசொலி ஆகியவை தவிர எந்த செய்தி எதில் வந்தாலும் நம்ப வேண்டாம் என" ---- இப்படி சொல்கின்றார்.

அப்போது அன்று அண்ணா தன் நாட்குறிப்பில் எழுதுகின்றார்! \\ அவர் சொன்னது போலவே நமது தோழர்கள் பத்திரிக்கைகள் இட்டுகட்டு எழுதுவதை நம்ப மாட்டார்கள் என்ற உறுதி எனக்கு இருக்கின்றது என்றாலும்பத்திரிக்கைகள் இப்படிப்பட்ட செய்திகள் வெளிப்படுத்துவது ஜனநாயக முறையை குந்தகப்படுத்துகின்ரனறோ என்கிற அச்சம் வர செய்கின்றது. இனி நாட்டிலே ஒரே கட்சி, ஒரே ஆட்சி, என அறிவித்துவிட்டு போகலாமே!ஜனநாயகம், எதிர்கட்சி, பொதுத்தேர்தல், பேச்சுரிமை என்று உதட்டளவில் மட்டும் செயல்படுவதற்கு இது மேல் தானே" \\

ஆக நம் அண்ணா அன்று மனம் புண்பட்டார். இன்று குமுதம் என்னும் விஷ பத்திரிக்கை வெளியிட்ட செய்தி ....

\\ நெருங்கியே இருப்பவர்கள் திடீ ரென பிரிந்துவிடுவதும், முட்டி மோதிக்கொள்பவர்கள் ஒரேநாளில் இணைவதும், நிழல்கள் நிஜமாவதும், நிஜம் நிழலாகிப் போவதும் அரசியலில் அடிக்கடி காணக் கிடைக்கிற காட்சிகள்தான். இப்போது ஜெ.-சசி பிரிவுக்கு இணையாக தமிழக அரசியலில் மற்றொரு பிரிவுக் காட்சியும் தி.மு.க.வில் நிகழ்ந்துள்ளது. ஸ்டாலினுக்கும் அவரது நண்ப ரான அசன் முகமது ஜின்னாவுக்கும் இடையே நிகழ்ந்து வரும் மௌன மோதல்தான் அது.

கடந்த சட்டசபைத் தேர்தல் வரை தி.மு.க. வினரால் அரசல் புரசலாக அறியப்பட்டிருந்த ஜின்னா, தேர்தலின் போதுதான் பிரபலமடைந்தார். காரணம், அதுவரை ஸ்டாலின் போட்டியிட்டு வந்த ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் ஜின்னாவே போட்டியிட்டார். இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த அந்த நட்புதான் இப்போது பிளவாகியிருக்கிறது.

‘தி.மு.க.வில் வட்டச் செயலாளர் பதவிக்காக போராடியே வாழ்க்கையைக் கடந்துவிட்டவர்கள் பலர். ஆனால், திடீரென வந்த ஜின்னாவுக்கு மாநில அளவில் இளைஞரணி துணைச் செயலாளர் பதவி, எம்.எல்.ஏ. சீட் என ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்ததால்தான் அவருக்குப் பிடிக்காதவர்கள் இந்த விரிசலுக்கு வழிவகுத்திருக்கிறார்கள்..’ என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்போ, ‘ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தை ஜின்னா பயன்படுத்தி கட்சியிலும், ஸ்டாலின் குடும்பத்திலும்கூட பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினார். இதனால்தான் தளபதி அவரை வெளியேற்றிவிட்டார்’ என்கிறது.\\

ஆக அன்று நம் அண்ணா! இன்று நம் ஜின்னா! ஊடகங்கள் அன்று அண்ணாவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் எதிர்த்து தோல்வி கண்டதை போல இன்றும் தோல்வி காணும்! இன்று காலை கூட நான் தோழர் ஜின்னாவிடம் பேசினேன். மிகுந்த ஆர்வமுடம் புதிய இரத்தம் காணப்போகும் திமுக இளைஞர் அணி பற்றி பேசினார். தளபதியுடன் அவர் நேற்று திருவள்ளூர் கூட்டம் கலந்து கொண்டதை அழகாய் பேசினார்! அது பற்றி நான் கட்டுரை எழுத போவதை சொன்னேன். " அதற்கான என் டிப்ஸ் என்ன வேண்டுமோ கேளுங்க" என சொன்னார்! இது தான் ஜின்னா! தளபதி உடல்நிலை பற்றி கேட்டேன்! அதற்கு அவர் அதை நாங்க இருக்கோம் பார்த்துப்போம். நீங்க எல்லாரும் கட்சி வேலை பாருங்க என சொன்னார்! இதான் ஜின்னா!

4 comments:

 1. குஷ்பூ ரசிகன்.January 7, 2012 at 12:48 PM

  இந்தியை ஒழித்த அண்ணா வாழ்க

  ReplyDelete
 2. ஜெயா - சசி பிரிவு செய்தியை திசை திருப்புவதற்காக பரப்பப்படும் தந்திரம் தான் குமுதத்தின் இந்த செய்தி...

  ReplyDelete
 3. தினமலர்,தினமணி,மக்கள் குரல்,குமுதம், துக்ளக் ,ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் எல்லாம் கிராஸ் பெல்ட் காரர்களின் நாளிதழ்கள் ,வார இதழ்கள் ,இவர்களிடம் எப்படி நாம் நடுநிலையான ,மக்களை திசை திருப்பாத ,
  சாதிசமய மற்ற நிலை காண முடியும் ,தமிழ் மொழிமூலம் தமிழை தமிழரை கொஞ்ச கொஞ்ச மாக அழிக்கும் ஊடகங்கள்.இவற்றிற்கு மாற்றாக மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் ,என்ன செய்வது தமிழ்நாட்டில் தமிழர் எண்ணிக்கை குறைவு ,இதை யாரும் அறிவதில்லை ,கண்டுகொள்ளபோவதும் இல்லை ,உணரப்போவதும் இல்லை ,தமிழ் பேசிவிட்டால் தமிழன் என்கிற கள்ளம் கபடமற்ற நிலையில்,சிகப்பு நிற மோகத்தில் ,திரைப்பட மோகத்தில் ,திரைத்துறையோடு தனது வாழ்வையும் இணைத்து கற்பனையில் உலாவரும் வரையில்.தமிழன் உயரப்போவதில்லை

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))