பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 17, 2012

ஜெயா அரசின் ஓராண்டு கால சாதனைகள்!!! By J.P.பிரகாஷ்.



இதை எழுதியது நான் இல்லை. நண்பர் ஜே பி பிரகாஷ். சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி இல்லை. இருந்தால் இதை எல்லாம் பேசியிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அங்கே ஜால்ரா சத்தம் தான் அதிகம் கேட்கின்றது. அதன் காரணமாக இந்த பதிவு இங்கே பதிக்கப்படுகின்றது. இதை ஜெயகுமார் ஒன்றும் செய்ய இயலாது. இப்போது பதிவை படியுங்கள்.கார்டூன் எங்கயோ சுட்டது. கார்டூன் வரைந்தவருக்கு நன்றி!

*******************************

ஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகள் :

1. வரலாறு காணாத மின் கட்டண உயர்வு சுமார் 100% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு...

2. வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு , சுமார் 200% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு...

3. பால் விலை கடுமையாக உயர்வு

4. பத்திரபதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது

5. கடுமையான மின் வெட்டு, குறைந்த பட்சம் 7 மணி நேரதிற்கு மேல்

6. வங்கி கொள்ளைகள், படுகொலைகள் அதிகரிப்பு, தினமும் சராசரி 3 கொலை சம்பவங்கள், 5 கொள்ளை சம்பவங்கள், 10 செயின் பறிப்பு சம்பவங்கள் என்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக பேணி காப்பது..

7. எந்த ஒரு பெரிய திட்டத்தையும் அறிவிக்காதது

8. துறைமுக விரைவு சாலை பணியை நிறுத்தியது

9. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட பல மேம்பால பணிகளை தாமதபடுத்துவது

10. அமைச்சர்களை பேசா மடந்தைகள் ஆக்கிவிட்டு, தானே அனைத்து அறிவிப்புகளையும் விதி எண் 110 இன் கீழ் வெளியிடுவது

11. சட்டசபையை, சுய புராண, தற்புகழ்ச்சி, ஜால்ரா மன்றமாக ஆக்கியது

12. உடன்பிறவா சகோதரி சசிகலாவை, சின்னக்காவாக்கி, மக்களை முட்டாளகியது...

13. பொய் வழக்குகளை போடுவதில் புதிய சாதனையை படைத்தது...அந்த பொய் வழக்குகளை நீதி மன்றங்கள் தள்ளுபடி செய்து குட்டுவாங்கியது...

14. கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டது

15. வெற்றிகரமாக சொத்துக்குவிப்பு வழக்கை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டுவருவது..

16. சொத்துக்குவிப்பு வழக்கில் தான் மட்டும் ஜாமீனில் இருந்து கொண்டே, முதல்வர் பதவில் இருந்து கொண்டு , பிறரை குற்றம் சொல்வது..

17. பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடிக்கு வரிகளை போட்டது / உயர்த்தியது.

18. மக்களின் மேல் கடும் விலை உயர்வை சுமத்தியது

19. முந்தய திமுக ஆட்சியில் போடப்பட்ட, திட்டமிடப்பட்ட, துவக்கப்பட்ட திட்டங்களை , ஏதோ தான் ஆட்சிக்கு வந்து துவக்குவதாய் ஏமாற்றுவது

20. அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சீட்டு ஆட்டம் போல் மாற்றிக்கொண்டே இருப்பது, அனைவரையும் இடமாற்றம், பதவி மாற்றம் எப்போ வருமோ என்ற பயத்திலேயே வைத்து இருப்பது.

21. ஓராண்டு காலத்தில் நீதிமன்றத்திடம் அதிகமாக குட்டு வாங்கிய அரசு என்று பெயர் வாங்கியது

22. 200 கோடி மதிப்புள்ள , சென்னையின் மையபகுதிலுள்ள, (செம்மொழி பூங்கா எதிரில்) 115 கிரௌண்ட் அரசு நிலத்தை தனியாருக்கு (தோட்டகலை கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகருக்கு) தாரைவார்த்து கொடுக்கப்பட்டது.

23. விலையில்லா மென்பொருள் பல இருக்க, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி கொடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது (ஹிலாரியை சந்தித்தவுடன்)

24. சுமார் 500 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை பாழ்படுத்துவது.

25. இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட 3 செம்மொழிகளுள் , தமிழையும் பல ஆண்டு போராடி சேர்த்ததை இருட்டடிப்பு செய்து, செம்மொழி என்ற பெயர்களை மறைப்பது..

26. ஆசியாவின் பெரிய நவீன நூலகமாக திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முயற்சிப்பது

27. சேலத்தில் சுமார் 100 கோடி செலவில் கட்டப்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உபயோக படுத்தாமல் வீணடிப்பது

28. பழைய பாட திட்ட புத்தகங்கள் வீணாக அச்சிட்டு சுமார் 200 கோடி நஷ்டம்

29. 6800 கோடி புது வரி விதிப்பு (பட்ஜெட் அல்லாத)

30. பரமக்குடி காவல்துறை கண்மூடிதனமாக 6 பேரை சுட்டு கொன்றுள்ளது இனவெறியுடன் இருவர் தேடுதல் வேட்டையில் கொலை..

31. தொழில் துவங்க வரும் பன்னாட்டு நிறுவனங்களை குஜராத்க்கு அனுப்பபடுகிறது.

32. மணல் கொள்ளை

33. காவல் நிலையத்தில் இதுவரை 12 பேர் அடித்து கொலை.

34. வாரம் மூன்று முறை மீனவர்கள் மீது தாக்குதலை கை கட்டி வேடிக்கை பார்ப்பது.

35. செயல்அற்ற மற்றும் செயல்படாத அமைச்சரவை

36. நெசவாளர்கள் போராட்டம்

37. சமசீர் கல்வி போராட்டம், மாணவர்களின் கல்வியில் விளையாடியது

38. மக்கள்நல பணியார்களை வேலையிலிருந்து நீக்கி, அவர்களின் வாழ்கையில் விளையாடியது, பலரின் தற்கொலைக்கு காரணமாயிருப்பது..பதிமூனாயிரம் மக்கள் நல பணியாளர்கள் குடும்பங்களை நடு தெருவில் நிறுத்தியது

39. செங்கல் விலை ரூபாய் முன்றில் இருந்து ரூபாய் ஏழு ஆக உயர்வு

40. சிமெண்ட் விலை ரூபாய் 230 இல் இருந்து ரூபாய் 320 உயர்வு

41. நியாய விலை கடையில் கலைஞர் ஆட்சியில் வழங்கிய 30 ரூபாய் பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது

42. நியாய விலை கடைகளில் கலைஞர் வழங்கிய 25 ரூபாய் மளிகை பொருள்கள் கொடுப்பதில்லை

43. ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெ அளவை குறைத்து, விலையை உயர்த்தியது..

44. அனைத்து எண்ணைகளும், 50 ரூபாய் விலை உயர்வு

45. ஜவுளிகள் விலை உயர்வு

46. செய்யாத சாதனையை செய்ததாக கூறி 4 முழு பக்க விளம்பரங்களை, இந்திய அளவில் பெரும்பாலான நாளிதழ்களில் வெளியிட்டு அரசு கஜானாவை காலி செய்வது

47. செம்மொழி மற்றும் தமிழ் ஆய்வு நூலகங்களை பாழ்படுத்தியது

48. திருப்பூர் சாய பிரச்சனையை தீர்ப்பதாக கூறி, அனைத்து தரப்பினருக்கும் பட்டை நாமம் போட்டது..

49. பெரும்பாலான இடங்களில் மக்கள் போக்குவரத்திற்கு ஒத்துவராது என்று புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, மோனோ ரயிலை கொண்டுவருவேன் என்று அடம் பிடிப்பது..

50. மெட்ரோ ரயிலின் அடுத்த கட்ட விரிவாக்கங்களை கைவிட்டது
*****************************

உங்கள் கருத்துகளை அதாவது விட்டுப்போன கருத்துகளை பின்னூட்டமாக சொல்லுங்கள் தோழர்களே!

9 comments:

  1. தெள்ள தெளிவான கணக்கெடுப்பு..... சரியான பார்வை.... மக்கள் மனதின் பிரதிபலிப்பு,,,, ஒரு வருட செய்திதாளின் தொகுப்பு போல உள்ளது..... இதை கண்டிப்பாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.... கைப்ரதி போல அடித்து கொடுத்தால் எல்லா மக்களுக்கும் தெரிய வரும்.....

    ReplyDelete
  2. சமச்சீர் கல்வி புத்தக பின் பக்க அட்டைகளில் திமுக ஆட்சி காலத்தில் நடத்திய தமிழ் செம்மொழி மாநாட்டு படத்தில் உள்ள திருவள்ளுவர் படத்தை மறைத்து பச்சை ஸ்டிக்கர் ஒட்டி தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிய அம்மையார் இவர் ஒருவரே! இந்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஆசிரிய பெருமக்களுக்கே வழங்கிய பெருமையும் அம்மையார் அவர்களையே சேரும்

    ReplyDelete
  3. சமச்சீர் கல்வி புத்தக பின் பக்க அட்டைகளில் திமுக ஆட்சி காலத்தில் நடத்திய தமிழ் செம்மொழி மாநாட்டு படத்தில் உள்ள திருவள்ளுவர் படத்தை மறைத்து பச்சை ஸ்டிக்கர் ஒட்டி தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிய அம்மையார் இவர் ஒருவரே! இந்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஆசிரிய பெருமக்களுக்கே வழங்கிய பெருமையும் அம்மையார் அவர்களையே சேரும்

    ReplyDelete
  4. நித்தியானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக்கியதுதான் பெரியா சாதனை...

    ReplyDelete
  5. அம்மாடியோவ் ?! முடியல ..

    ReplyDelete
  6. இதை உல்டா பண்ணிதான் ஓராண்டு சாதனைப் பட்டியலை இந்தியா முழுவதும் பிரபலப் படுத்தியிருக்காங்க சார்..ஓரண்டுக்கே நாலு பக்கம்னா அஞ்சு வருசத்துக்கு நாற்பது பக்கம் போடுவாங்க...என்ன பன்றது..ஆல் இஸ் வெல்...

    அருமையான பதிவு.

    ReplyDelete
  7. உண்மையைச் சொன்னா, நான் தி.மு.க காரன்னு சொல்றாங்க... நான் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாதுங்க.

    -திருச்சிக்காரன்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))