பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 18, 2014

2G ஸ்பெக்ட்ரம் விளக்கம்! உண்மையான நடுநிலையாளர்களின் கவனத்துக்கு!!!!நான் கிட்ட தட்ட 2010ம் ஆண்டு மத்தியில் இருந்தே 2G ஸ்பெக்ட்ரம் பிரச்சனை சம்பந்தமாக பல இடங்களில் விவாதித்தும், அதே போல  நானே அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், மேலும் சில சமயங்களில் பாட்டியாலா  சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெறும் விவாதங்கள் மற்றும் பல்டி அடித்த ட்ராய் முன்னாள் அதிகாரி மாத்தூர் போன்றவர்கள் முகத்திரை கிழித்தும் வந்துள்ளேன். இது தேர்தல் நேரம். சென்ற 2011 தேர்தலின் போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த போது கூட திமுகவில் இருக்கும் பலருக்கே கூட 2G ஸ்பெக்ட்ரம் என்பதின் முழு பரிமாணம் சரியாக கிடைக்கவில்லை.


 திமுகவினரே கொஞ்சம் பயந்து தான் அது பற்றி அதிகமாக வாய் திறக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் பெரம்பலூர், அரியலூர், கோவை,தஞ்சை  மாவட்டங்களில் 2 ஜி விஷயத்தில் தெளிவான பரப்புரை இருந்தது. திருச்சி சிவா, திராவிட தென்றல் சுப.வீ அய்யா போன்றவர்கள் மற்றும் திராவிடர் கழகம் இவர்களே இந்த விஷயத்தில் பரப்புரையை சரியான நேர்க்கோட்டில் எடுத்து சென்றனர். அதன் பலன் அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் தலா இரு தொகுதிகள் திமுக வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


இப்போது இந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் நிலைமை அப்படி இல்லை. திமுகவுக்கு எதிரானவர்கள் இதே 2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி பேசும் முன்பே திமுகவினர் ஒரு தெளிவான புரிதலுடன் அது பற்றிய விளக்கம் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் மூளை சலவை செய்யப்பட்ட  சில பொய் பரப்புரையாளர்கள் பழைய பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லி வருவதால் இதே விஷயத்தை பற்றி நான் இதுவரை எழுதிய கட்டுரைகள், விவாதங்கள் அனைத்தையும் தொகுத்து சிறியதாக ஆனால் அதே நேரம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுத நினைத்தேன்.

ஆனால் எங்கள் நண்பர் திரு. ஜே.பி. பிரகாஷ் மிக அருமையான ஒரு கட்டுரையை தன் முக நூலில் வெளியிட்டார். எனவே அந்த கட்டுரையை இங்கே நான் பகிர்கிறேன். நடு நிலையாளர்களும், 2 ஜி விஷயத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என ஆர்வம் கொண்டோரும் தயவு செய்து இந்த கட்டுரையை படித்து தெளிவடையவும்! நன்றி திரு. ஜே.பி பிரகாஷ் அவர்களுக்கு! இதோ கட்டுரையை படியுங்கள்!


*********************


திரும்ப திரும்ப சிலர் 2Gயில் ஊழல் ஊழல் என்று கிளிப்பிள்ளையை போல சொல்லி கொண்டு இருக்கிறார்கள்....(நீண்ட பதிவு....2G விஷயத்தில் முழுமையான விளக்கம் கிடைக்க தயவுசெய்து முழுதும் படிக்கவும்)


CAG அறிக்கையில் கூட, எந்த ஓர் இடத்திலும் ' ஊழல் ' ( Scam ) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. வருவாய் இழப்பு ( Loss of revenue ) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் ஊக இழப்பு.....presumptive loss என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.....


அரசிற்கான வருவாயை அரசின் கொள்கையின் அடிப்படையில் குறைத்துகொள்வது, வருவாய் இழப்பு அல்ல....


Reserve Bank of India Governor D. Subbarao, who served as Finance Secretary to the Centre during 2007-08 said, “It is correct that while determining policy, the government has to make a balance between welfare maximisation and revenue maximisation. In this case, if there was a sacrifice of some revenue, it cannot be said that the government suffered a loss.”


மேலும் , நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் TRAI, 2G அலைகற்றையை ஏலத்தில்தான் விடவேண்டும் என்று என்று சொல்லியிருகின்றதா???


The Telecom Regulatory Authority of India (TRAI) has said in court that it had never recommended an auction for the 2G spectrum..


தொலைத் தொடர்புக் கொள்கை பற்றிய முடிவுகளை எடுக்க, ' TRAI ' ( Telecom Regulatory Authority of India ) என்று ஒரு குழு உள்ளது. அந்தக் குழு, 1994 இல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை (  2G Spectrum) ஏலத்திற்கு விட வேண்டுமென முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்தக் கொள்கைக்கு ' 1994 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு தேசியக் கொள்கை ' (  NTP 94 - National Telecom Policy - 1994 ) என்று பெயர். அதன் அடிப்படையில், சில பெரிய நிறுவனங்கள் அதனை ஏலத்துக்கு எடுத்தன. ஆனால், அவை தங்களுக்கு வணிக அடிப்படையில் கட்டுபடியாகவில்லை ( Commercially not viable ) என்று கூறி 1998 இல் அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டன. அதனால், அந்தக் குழு ( TRAI ), 99ஆம் ஆண்டு மீண்டும் கூடி, இனி ஏலத்திற்கு விட வேண்டாம். முதலில் வருகின்றவர்களுக்கு முதலில் ( First come first serve basis ) என்னும் அடிப்படையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்ற மும்,அன்றைய அமைச்சரவையும் ஏற்றன. புதிய கொள்கைக்கு, ' New NTP 99' என்று பெயர். TRAI குழு, ஏன் ஏலத்திற்கு விட வேண்டாம் என்று முடிவெடுத்தது? அந்தக் குழுவே கூறும் காரணம் இதுதான், ஓர் அரசு எல்லாவற்றிலும் இலாப, நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான். ரேஷன் அரிசி, உரம், எரிபொருள் முதலியனவற்றிற்கு அரசு மானியம் வழங்கப் படுகிறது. அரசிற்கு நட்டம்தான். வேண்டாம் என்றோ, ஊழல் என்றோ அதனைக் கூற முடியுமா?


 எனவே எந்த ஒரு கொள்கை முடிவையும், அமைச்சராக இருந்த ஆ.ராசா தனித்து எடுக்கவில்லை. அப்படி முடிவெடுக்க எந்த அமைச்சருக்கும் அதிகாரமில்லை. 1999 முதல், அத்துறைக்கு அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் அனைவரும், அக்கொள்கைப்படி, முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில்தான் உரிமம் கொடுத்தனர். ஆ.ராசாவும் அதனைத்தான் செய்தார்.


டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல..


குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல கதையாக இன்னும் சிலர் தங்களின் 2G கோவணம் லட்சம் கோடி துண்டுகளாய் கிழிந்தபின்னும், ராசா தவறே செய்யவில்லையா என்று கேட்கிறார்கள்....


2007 ஆம் ஆண்டின் நிலவரப்படி, தொலைதொடர்பு வழிகாட்டுதல் ஆணையம் ட்ராய்யோ (TRAI), இல்லை, தேசிய தொலை தொடர்ப்பு கொள்கையோ, 2G அலைகட்ற்றையை ஏலம் விடவேண்டும் என்று சொல்லவில்லை....அப்படி அவர்கள் சொல்லியிருந்து, ராசா அவர்கள் அதை மீறி முதலில் வருபவர்க்கு முன் உரிமை என்ற வழிமுறையை கையாண்டு இருந்தால் அது தவறு..ஆனால் அப்படி ஒன்றும் இல்லை..


டெலிகாம் நிருவனங்களிடையே லெவல் பிளேயிங் இருக்கவேண்டும், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைதொடர்பு சேவை கிடைக்கவேண்டும் என்பதால் அதே விலையில் லைசென்சுகள் அளிக்கப்பட்டன...


தொலைத்தொடர்பில் முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கப்பட்டது - இதில் என்ன தவறு ??? அரசின் டெண்டர் விதிமுறைகளை பின்பற்றும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் உரிமையை அளிக்கலாம்...முன் அனுபவம் கொண்ட நிறுவனகளுக்கு மட்டும் தான் ஸ்பெக்ட்ரம் என்று விதிமுறை உள்ளதா ?? அல்லது ஏற்க்கனவே அவ்வாறு விதிமுறை இருந்து, அதை ராசா மற்றினாரா ????


இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் கொண்டவர்கள் மட்டும் தான் அந்த துறையில் இருக்கமுடியும் என்றால், வெறும் BSNL மட்டும் தான் இருக்கவேண்டும்...பாரதி மிட்டல், ஹட்ச் எஸ்ஸார், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இந்திய தொலைதொடர்ப்பு துறையில் இறங்குவதற்கு முன், இந்த துறையில் முன் அனுபவம் இருந்ததா ???   கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, டோக்கன் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா??? அதுதான் இதிலும் நடந்தது...நூறாவது டோக்கனுக்கு மேல் உள்ளவர்களுக்கும், மீண்டும் லட்டு வந்தப்பின் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.....(More Additional Spectrom)


 சரி, டோக்கன் உள்ள 100 பேருக்கும் லட்டு உறுதியானது என்ற பிறகு, 10ஆம் டோக்கன் வைதிருந்தவருக்கு முதலிலும், 3ஆம் டோக்கன் வைத்திருப்பவர்க்கு அடுத்தும் கொடுத்தால் என்ன...அதே போல தான் அந்த கட்-ஆப் தேதிக்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் அலைகட்ற்றை வழங்கப்பட்டது..இதில் என்ன விதி மீறல் உள்ளது...


சரி, அந்த நிறுவனகளிடம் ராசா பணம் பெற்றார் என்றால், இதோ மூன்று வருடங்கள் ஆகிறது, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இதுவரை என்ன கண்டுபிடித்து உள்ளார்கள்???? எதை நிருபித்து உள்ளார்கள் ??


வடநாட்டு, ஆரிய ஊடகங்கள் செய்த இடைவிடாத பொய் பிரச்சாரம், சுசாமி, பூஷன் போன்ற நிழல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் சதி, அதற்க்கு சிஏஜி போன்ற அரசியல் சாசன அமைப்புகள் ஒத்துபோதல், எதிர் கட்சிகளின் தொடர் போராட்டம், நாடாளுமன்றத்தை முடக்குவது என்ற செயல்பாடுகள், சுப்ரீம் கோர்ட் புரிந்துகொண்டவிதம் இவை எல்லாம் சேர்த்துதான் இந்த வழக்கை தீர்மானித்தன....


 2G - மேலும் சில விளக்கங்கள்:-

விளக்கம் : 1

குறைந்த விலைக்கு 2G லைசென்ஸ் வாங்கிய நிறுவனங்கள், அவற்ற்றை மிகபெரிய விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தன. அந்த கொள்ளை லாப தொகைக்கு 2G லைசென்சை ராஜா நேரடியாக விற்றிருகவேண்டும் என்று, ஷேர் விற்பனை மற்றும் FDI போன்றவற்றின் அடிப்படை தெரியாமல் பொங்ககூடாது...எதோ சந்தையில் ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்று 90 ரூபாய் லாபம் என்ற ஒரு மொக்கையான விஷயம் அல்ல இது... 2G லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் எதுவும் equaty ஷேர் (ப்ரோமோட்டர் ஷேர்) விற்கவில்லை. முதலீட்டு மூலதனத்தை உயர்த்திக்கொள்ள, சட்டபடியான வெளிநாட்டு நேரடி முதலீடிற்கான வழிமுறையில் ஷேர் விற்பனை செய்து தங்களது முதலீட்டு மூலதனத்தை உயர்த்தி கொண்டுள்ளன. இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று.
டெலிகாம் FDI அனுமதிக்கப்பட்ட ஒன்று, முதலீடிற்க்காக சட்டபடியாதானே ஷேர் விற்று இருக்கிறார்கள்..


"No sale of promoter's equity has been taken place. This was only (infusion) of an additional capital through FDI. It does not amount to divesting of promoter's equity,"

"companies can raise additional capital which come through FDI by divesting their equity." All such transactions were legal in nature as only transfer of above 49% shares needs regulatory approvals the present law permits an FDI upto 76% in telecom companies.

//the Central Board of Direct Taxes has said Swan and Unitech never sold their licenses to their foreign partners and that the sale of equity was above board....//

//They didn't sell their equities. They expanded the equity of the company and brought in new people. That's not the same thing.//

//"The question was whether it was divestment (sale) of promoter’s equity or dilution of equity by issue of fresh shares... This was examined by the Ministry of Finance.// //“Both were cases of dilution of equity by issue of fresh shares. The Prime Minister wanted to know if it was a case of dilution of equity or divestment.// //“I do not think there was any sale of spectrum. The spectrum was allocated to the company which got licence and the spectrum remained with the company. The company issued fresh shares,” he said.//


http://www.ndtv.com/article/india/2g-spectrum-scam-case-falling-apart-134876 


 http://twocircles.net/2011jan16/ahluwalia_defends_swan_unitech_stake_sale_after_spectrum_allocation.html 


 http://www.thehindubusinessline.com/industry-and-economy/article2292572.ece 


  http://www.dnaindia.com/india/report_2g-scam-govt-defends-equity-sale-to-foreign-entities_1475166 

தளபதி  அவர்களின் தீவிர பிரச்சாரத்தின் போது!

விளக்கம் : 2

கட்டுமான நிறுவனங்கள் வங்கியில் தவறான முறையில் கடன் வாங்கி 2G லைசென்ஸ் பெற்றதாய் குற்றம்சாட்டினார்கள்...வங்கிகளும் இதில் சம்பந்தம் இருப்பதாய்  பொங்கினார்கள்.. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் மேற்கூறிய குற்றசாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை, கடன் கொடுக்கப்பட்டது விதிகளுக்கு உட்பட்டதுதான் என்று சிபிஐ சொல்லியிருப்பதாக செய்தி.


CBI closes probe into banks' role in 2G spectrum scam Sources in the investigating agencies said they had "not found any irregularity in banks giving loans to those companies which got 2G spectrum licences during A Raja's tenure in 2007-2008".


 http://timesofindia.indiatimes.com/india/CBI-closes-probe-into-banks-role-in-2G-spectrum-scam/articleshow/10058553.cms 

தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களோடு மக்களாக!

விளக்கம் : 3

கிராஸ் ஹோல்டிங் வைத்து நிறுவனங்கள் தவறாக 2G லைசென்ஸ் பெற்றதாய் எழுந்த குற்றசாட்டுக்கும் ஆதாரம் இல்லை.. லூப் டெலிகாம்ல் எஸ்ஸார் கிராஸ் ஹோல்டிங் (மறைமுக பங்கு) வைத்து 2G லைசென்ஸ் பெற்றதாய் வந்த குற்றசாட்டும் தவறு..


Essar didn't violate rules: Law ministry CBI's case was that when Essar was a major telecom player, Loop Telecom -- controlled by its associate Khaitan group -- had been allotted spectrum in breach of eligibility conditions.

The MCA took a second look at the Essar-Loop corporate link and reiterated its earlier stand that "the documents of the companies examined do not substantiate 'associate' relationship between Essar group and Khaitan group".


The additional input from law ministry has now left CBI's prosecution department, which weighs evidence to decide if a case is fit for filing of chargesheet, in a dilemma.


http://timesofindia.indiatimes.com/india/Essar-didnt-violate-rules-Law-ministry/articleshow/10058745.cms

 ***************


உண்மையான நடுநிலையாளர்களே! உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கூட நீங்கள் கேட்கலாம். விளக்கம் கொடுக்க தயாராக இருக்கின்றோம்! வழக்கு இப்போது ஒரு நாள் கூட வாய்தா வாங்காமல் மிக வேகமாக நடந்து கொண்டுள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும். இதோ இப்போது மக்கள் மன்றத்தில் நிற்க்கின்றார் திரு. ஆ. ராசா அவர்கள். நீலகிரி தொகுதியில் உங்கள் மேலான வாக்குகளை எதிர்பார்த்து நிற்க்கின்றார். உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்!
தகதகத்தாய சூரியனுக்கு இதே போல வெற்றிமாலை சூட்டுங்கள்!


ஆதரிப்பீர் உதய சூரியனை!
19 comments:

 1. காது நெறைய பொய் ... இந்த அளவுக்கு நீங்களும் பொய் சொல்ல வேண்டியதில்லை ...

  ReplyDelete
  Replies
  1. Poi kettu kettu palagi pona ungal kadhu kalil unmaium poiyaga than irukkum.unmai endru thirium.thirindhum poi kuri vin piracharam seium kuttathargal thane ungal kuttam

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அட லூசு லூசு... எனக்கு ஏன் அண்ணன் ஆ.ராசா அவர்களை பிடிக்கும்?”ன்னு என் பதிவிலே தான் எழுதினேனே. நீ தான் அங்கயும் வந்து வாந்தி எடுத்தியே. பின்ன என்னாத்துக்கு திரும்பவும் கேக்குற?

  ReplyDelete
 4. Congrates to win Raja as a Ooty MP

  ReplyDelete
  Replies
  1. neeyellam poranthathukku ungappan romba varuththa paduvaan.

   Delete
 5. இது அரைகுறையாக ஒரு வேகத்தில் எழுதப்பட்ட பதிவாகத்தான் தெரிகிறது.

  //தொலைத்தொடர்பில் முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கப்பட்டது - இதில் என்ன தவறு ??? அரசின் டெண்டர் விதிமுறைகளை பின்பற்றும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் உரிமையை அளிக்கலாம்...முன் அனுபவம் கொண்ட நிறுவனகளுக்கு மட்டும் தான் ஸ்பெக்ட்ரம் என்று விதிமுறை உள்ளதா ?? அல்லது ஏற்க்கனவே அவ்வாறு விதிமுறை இருந்து, அதை ராசா மற்றினாரா ???//

  முன் அனுபவம் உள்ள நிறுவனங்களுக்கு மட்டும் தான் உரிமை என்று இருந்தால் அது மீறப்பட்டிருந்தால் அது விதி மீறலே. அப்படி ஒன்று இருந்ததா என தெரியவில்லை. எந்த ஒரு தகுதியையும் இதற்க்கு நிர்ணயிக்க வில்லையா. தகுதி இல்லாத சுவான் டெலிகாமுக்கு உரிமை வழங்கப்பட்டது என்பதும் ஒரு பிரச்சனைதானே. எனவே இங்கு விதி மீறல் இருப்பதாகத்தான் கூறுகிறார்கள். இல்லை என்றால் அதை இன்னும் விளக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உண்டு.

  கீழே உள்ள கருத்து சிறுபிள்ளைத்தனமானது

  //கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, டோக்கன் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா??? அதுதான் இதிலும் நடந்தது...நூறாவது டோக்கனுக்கு மேல் உள்ளவர்களுக்கும், மீண்டும் லட்டு வந்தப்பின் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.....(More Additional Spectrom)//

  என்ன தவறு என்பதை புரிகின்ற மாதிரி நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்.
  வேலைக்கு 100 இடங்கள் காலியாக உள்ளது. முதலில் வருபவர்களுக்கு வேலை என்றே வைத்துகொள்வோம். 15ஆம் தேதி வரை வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று விட்டு பத்தாம் தேதிக்கு பிறகு யாரும் விண்ணப்பிக்க முடியாமல் செய்துவிட்டார்கள். இப்பொழுது பத்தாம் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கலாம் என்று இருந்தவர்களின் நிலை என்ன? இது தவறுதானே? காலியிடங்கள் வந்தவுடன் பிறர் விண்ணப்பிக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா.

  அதுமட்டும் அல்ல spectrum என்னமோ லட்டு திங்கற மாதிரி வரவன் போறவனுக்கெல்லாம் கொடுக்க முடியுமா?
  ஒருவேளைக்கு ஆள் எடுக்கும் பொழுது முதலில் வருபவர்களுக்கு வேலை என்றே வைத்துகொண்டாலும் வருபவர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி விட முடியுமா? எல்லா வேலையையும் எல்லோராலும் செய்ய முடியுமா? ஒரு தகுதி வேண்டாம்? spectrum விடயத்திலும் அப்படியே. நீங்கள் சொல்வதை பார்த்தால் நான் கூட ஒரு spectrum வாங்கி இருக்கலாம் போல :)

  மற்றும் ஒரு முக்கிய விடயம். டெல்லியை பொறுத்த வரை சுவான் டெலிகாம் வரிசையில் முதலில் வரவில்லை. டாட்டா தான் முதலில் வந்ததாம். சுவானுக்கு உரிமம் கொடுத்து விட்டு. டாட்டாவுக்கு டாட்டா சொல்லிவிட்டார்கள். டாட்டாவுக்கு கொடுக்காமல் சுவானுக்கு கொடுத்து முறைகேடு.

  http://www.financialexpress.com/news/2g-scam-niira-radia-deposes-in-court-says-swan-telecom-was-not-eligible/1121660
  அதுமட்டுமல்ல சுவானுக்கு முன்பே கொடுத்து விட்டு, சுவானுக்கு முன்பு வரிசையில் இருந்த spice communication கும் டெல்லியில் உரிமம் கொடுக்க வில்லை.

  இன்னும் புரிகிற மாதிரி சொல்லவேண்டும் என்றால் நீங்களும் நானும் வேலைக்கு தகுதியானவர்கள். நீங்கள் முதலில் விண்ணப்பித்துல்லீர்கள், நான் உங்களுக்கு பிறகு. ஆனால் வேலையை எனக்கு கொடுத்து விட்டார்கள். உங்களுக்கு ஒரு வருடம் கழித்துதான் வேலை கொடுக்கிறார்கள். இது முறைகேடு இல்லையா?
  இதுவும் அங்கே நடந்துள்ளது

  இன்னும் பலப்பல முறைகேடுகள் அவரசம் அவசரமாக செய்யப்பட்டுள்ளன. இதற்க்கு மேல் எனக்கு நேரம் இல்லை.
  மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.
  நன்றி

  ReplyDelete
 6. Dei avanavathu kudutha kasukku koovuran.aana nee!!!!!!

  ReplyDelete
 7. Dei avanavathu kudutha kasukku koovuran.aana nee!!!!!!

  ReplyDelete
 8. அந்த மனிதருள் மாணிக்கத்தை, அப்பழுக்கற்ற தங்கத்தை யாருயா குற்றம் சொன்னது??? ஸப்பா. முடியல....
  இதை வாசித்த பிறகு கிள்ளிப் பார்த்தேன். நான் வாசித்தது உண்மைதான்..

  ReplyDelete
 9. koramasaththula poranthavanukku ulaga arivu kammi. Pathi yezhuthura alavukku nee vanthurukkanna periya vizhayam thaan.

  ReplyDelete
 10. nee yen porantha ?

  ReplyDelete
 11. ////கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, டோக்கன் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா??? அதுதான் இதிலும் நடந்தது...நூறாவது டோக்கனுக்கு மேல் உள்ளவர்களுக்கும், மீண்டும் லட்டு வந்தப்பின் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.....(More Additional Spectrom)////

  சரி லட்டுன்னே வச்சிக்குவோம். ஒவ்வொரு நாலு பேருக்கு லட்டு கிடைக்கும். அதுதான் லிமிட்.

  முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பது ஏற்கனவே உள்ள கொள்கை. சரி ok.

  ஏன் 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தொகையிலேயே அலைக்கற்றையை விற்கும் முடிவை எடுத்தார்? (2001 வாடிக்கையாளர் எண்ணிக்கை 40 லட்சம், 2007ல் அது 35 கோடி என்றானது).

  கேள்வி: ஏன் 6 வருடம் பழசான ரேட்டிலேயே விற்க வேண்டும்?
  கேள்வி: ஏன் CDMA செல் நிறுவனங்கள் GSMல் நுழைய அனுமதிக்க வேண்டும்?

  2G டோக்கன் வாங்குவது என்பது கவுண்டரில் கைநீட்டி டோக்கன் வாங்குவது போல் எளிதா என்ன?

  அதற்கான டாகுமெண்ட்ஸ், பதிவுத்தொகை 1600 கோடி ருபாய் எல்லாம் தயாராக இருக்க வேண்டுமல்லவா?

  2008 சனவரி 10-ஆம் தேதி மதியம் 2.45க்கு இன்னும் 45 நிமிடங்களில் கவுண்டர் திறக்கும். அதுவும் ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே என அறிவிப்பு வெளியாகிறது. அப்படியும் ஒன்பது நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றன.

  **# On Jan 10, 2008, the CEOs Swan and Unitech (most favoured companies of Raja) sit at Private Secretary RK Chandolia’s cabin in Sanchar Bhavan. DDG Access Service (AK Srivastava) directs officials to go Chandolia’s cabin at 3pm. Chandolia asks official o collect application and demand draft from CEOs and directs to give No : 1 status to Swan and No : 2 status to Unitech. Then only counter was opened at eighth floor of Sanachar Bhavan to receive application/ fee from other seven companies. There was a mad rush to become first in the queue and physical fight taken place between rivals. Bouncers were brought. CEOs were quarreled each other some telecom officers were manhandled.. Though police arrived, no case was registered by instruction of Chandolia.**

  ஒவ்வொரு ஊரிலும் உள்ள நாலு லட்டுக்கு 9 நிறுவன தலைமை நிர்வாகிகள் அடித்துக் கொள்கின்றனர்.

  ஏன்னா, 2 லட்டுக்கான டோக்கன அறங்காவலர் ரூமுக்கே போய் அவரோட பேவரைட் பாய்ஸ் அமுக்கிட்டாங்க.

  உஸ்ஸ்ஸ்... அப்பாடா... மேலும் தெரிந்து கொள்ள...,

  http://jgopikrishnan.blogspot.in/2011/01/violations-timeline-in-2g-spectrum-scam.html

  ReplyDelete
 12. yella allakai . publish pannalaiyattukku comments a? ithellam oru pozhappu .. thuu

  ReplyDelete
 13. http://savukku.in/6008

  ReplyDelete
 14. dei ... comment a publish pannalaya nee ... ithu yenna da tharmam ?

  ReplyDelete
 15. உங்களது தளத்தில் ஜெயா வழகை படித்த்பின் ராஜா வழக்கு பற்றி படிக்க நேர்ந்தது. ஒரு உண்மை புரிந்தது.
  உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளிச் சட்னி

  ReplyDelete
 16. It's very straightforward to find out any topic
  on web as compared to textbooks, as I found this paragraph at this site.


  Feel free to visit my homepage; บริษัทกำจัดปลวก

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))