பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 26, 2007

தல கைப்ஸுக்கு பிச்சு, கிச்சு &அபிபாப்பா வச்ச ஆப்பு!!!

திஸ்கி: முதல்ல வ.வா.ச முதலாம் ஆண்டு விழாவுக்கு வாழ்த்துக்கள்! நமக்கு பரிசெல்லாம் குடுத்த சிங்கங்கள் எல்லாருக்கும் நான் ஏதாவது குடுத்தே ஆவனும்ன்னு நாகைபுலி சிங்கத்தை கேட்டேன். எது குடுத்தாலும் எனக்குதான் பஸ்ட்டு, என்ன கொடுக்க போறீங்கன்னு கேட்டார். நான் "வேற என்ன ஆப்புதான்"ன்னு சொன்னேன். அதுக்கு புலி"எனக்கு 105 பதிவ படிச்சதுல கண்ண கட்டுது, எங்க தல ஃப்ரீ தான். நீங்க அவர் கிட்ட குடுத்துடுங்க"ன்னார். என்ன உஷார் பாத்தீங்களா மக்களே. பின்ன வெட்டிதம்பிகிட்ட கேட்டேன். உங்க தலக்கு ஒரு ஆப்பு வைக்கவான்னு. அதுக்கு அவர் "தாராளமா"ன்னு அவர் தாராள குணத்தை காமிச்சார். அதனால தான் ஹி ஹி :-)

*******************************


அபிபாப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இன்னிக்கு ஆட்டோகார் ஏதோ கல்யாணத்துக்கு போகனும்ன்னு லீவ் போட்டுட்டார். அதனால ஸ்கூல் போகாம லீவ் போட்டுட்டு ஜாலியா டைகரோட விளையாடலாம்ன்னு இருந்த போது தங்கமணி பாப்பாவை பாத்து "அபி, கண்மணி ஆன்டி போன் பண்ணாங்க. உங்க ஆட்டோ தான பிச்சுவும் கிச்சுவும் அதனால கண்மணி ஆன்டி வேற ஆட்டோ அரேஞ் பண்ணிட்டாங்களாம். நீயும் அந்த ஆட்டோல ஸ்கூலுக்கு போ"ன்னு சொல்ல "பெரிய இம்சைம்மா இந்த கண்மணி ஆன்டியோட"ன்னு சலிச்சுகிட்டே கிளம்பினா.

*****************************
தல கைப்புள்ள ஆட்டோ டிரைவர். காலைல எழுந்து நல்ல புள்ளயா குளிச்சு பட்டையெல்லாம் போட்டுகிட்டு அம்மா அப்பா கால்ல்ல் விழுந்துட்டு சூடம் கொளுத்தி காமிச்சுட்டு அம்மாவை எதிர்க்க நிக்க வச்சுட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி பேரட்ண்ஸை பாத்து "சாயந்திரம் 6.00 மணிக்கு வருவேன்"ன்னு அன்பா சொல்லிட்டு கெளம்பி அபிபாப்பா வீட்டுக்கு வந்தார்.

அபிபாப்பா ரெடியா இருந்தா. தல கைப்புள்ள வந்ததும் ஆட்டோல ஏறிகிட்டா.

வாம்மா அபிபாப்பா எங்க போகனும்?

ம்...சினிமாவுக்கு போவனும் - இது அபிபாப்பா

ஆஹா எடக்கு மடக்கா பேசுதே வந்து மாட்டிகிட்டோமோ சரி சின்ன புள்ளதான சமாளிச்சிடலாம்ன்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே அபிபாப்பா "ஸ்கூல் ஊனிஃபார்ம் போட்டிருக்கேனே எங்க போவனும்ன்னு கேட்டா இப்டிதான் பதில் வரும் வெள்ரு"ன்னு சொல்ல கைப்ஸ் "அதுக்கில்ல பாப்பா எந்த ஸ்கூலுக்கு போகனும்ன்னு கேட்டேன்"ன்னார். அதுக்கு பாப்பா "நீங்க நம்ம ஊருதானே இந்த யூனிஃபார்ம் எந்த ஸ்கூல்ன்னு தெரியாதா?"ன்னு கேக்க கைப்ஸ் கொஞ்சம் கலங்கிதான் போயிட்டார்.சரின்னு பாப்பாவை ஏத்திகிட்டு கண்மணி வீட்டுக்கு வந்தார். அங்க பிச்சுவும் கிச்சுவும் ஏறிக்க வண்டிய கெளப்பிட்டார்.

எதுக்கு வம்பு சமாதானமாயிடுவோம்ன்னு "பாப்பா உனக்கு என்ன பிடிக்கும்"ன்னு கைப்ஸ் கேக்க அதுக்கு கிச்சு "அங்குள் அவளுக்கு காத கடிச்சு துப்ப ரொம்ப பிடிக்கும்"ன்னு சொன்னான். ஆஹா இன்னிக்கு ஆப்பு வக்காம வுடமாட்டாய்ங்க போலயிருக்கேன்னு மனசுகுள்ள திங் பண்ணிகிட்டு "மாப்பீஸ் நீங்களாவது சொல்லுங்கப்பா எங்கிட்டு போவனும்ன்னு"ன்னு கேக்க பிச்சு ஸ்கூல் பேர சொல்லி"அங்குள் கொண்டு போய் விட்டுட்டு அழைச்சிகிட்டு வந்து வீட்ல விட்டுடனும்"ன்னு சொன்னான்.

உடனே கைப்புள்ள மனசுகுள்ள ஆஹா இன்னிக்கு நாள் சவாரி கிடச்சிடுச்சே, சரி இன்னிக்கு பசங்கள கொண்டு போய் விட்டுட்டு ஒரு ஒரமா ஸ்கூல்ல படுத்து தூங்கிட்டு சாயந்திரம் கொண்டு விட்டுட்டு 6 மணிக்கு நம்ம டாஸ்மாக் போயிட்டு வீட்டுக்கு போயிடலாம், பசங்க கிட்ட 300ரூபா தீட்டிட வேண்டியதுதான் இந்த கைப்புள்ளயும் ஸ்கூலுக்கு போனான்ன்னு சரித்திரத்துல வரட்டும்ன்னு நெனச்சுகிட்டு "பசங்களா குச்சி டப்பால எவ்ளோவ் பணம் இருக்கு"ன்னு கேக்க அதுக்கு பிச்சு"எல்லார் கிட்டயும் 300 ரூபா இருக்கு அங்குள்"ன்னு சொன்னான். அது ஸ்கூல் பீஸ் பணம்ன்னு பாவம் கைப்ஸ்க்கு தெரியாது!

ஸ்கூல்ல போன பின்ன மொதோ 1 மணி நேரத்துல தலக்கு போர் அடிச்சதால அங்க தோட்டகாரர்க்கு, மணி அடிக்கிறவர்க்கெல்லாம் உதவி செய்ய ஆரம்பிச்சுட்டார். அதை பாத்துட்டு PT சார் "யோவ் இங்க வாய்யா நீ புதுசா"ன்னு கேக்க "இல்லீங்க அரத பழசு"ன்னு கைப்ஸ் சொன்னார். அதுக்கு PT சார் "அட அதில்லய்யா நீ அப்ரண்டிசா"ன்னு கேட்டார்.

நம்ம கைப்ஸ் அதுக்கு "ஹைய்யோ ஹைய்யோ..நானு அப்புரண்டீஸ் இல்ல சார் எங்கிட்டதான் அப்புரண்டீசுங்க இருக்கானுவ"ன்னு பீத்திகிட்டாரு. "சரி நீ எத்வா வேணா இருந்துட்டு போ..இந்த பென்சு நாற்காலியெல்லாம் மேல் மாடிக்கு கொண்டு போய் வச்சிடு"ன்னு சொல்லிட்டு போயிட்டார்.

அதுக்கு கைப்ஸ்"பார்ரா பார்ரா..ஏதோ எல்ப் பண்ணலாம்ன்னா என்னய போய் வேல வாங்குனா என்னா அர்த்தம்"ன்னு சொல்லிகிட்டே ஒத்த ஆளா எல்லாத்தையும் மதியம் வரை மேல ஏத்தினார்.தல காக்கி பேண்ட் காக்கி சட்டை வேற போட்டிருந்தாரா அவர் ஸ்கூல் ஆளுன்னு நெனச்சிகிட்டு அவனவன் போட்டு தொவச்சு எடுத்துட்டான்.

4.30 க்கு ஸ்கூல விட்டதும் பசங்க வந்துச்சு.ஏத்திகிட்டு கைப்ஸ்"பசங்களா நல்லா படிச்சீங்களா"ன்னு ஃபார்மாலிட்டீஸ் பேசிகிட்டு பின்னால் வரப்போகும் ஆப்பு பத்தி தெரியாமலே வண்டி ஓட்டி வந்து பிச்சு வீட்டிலே நிறுத்தினார்.

கண்மணி டீச்சர் இன்னும் ஸ்கூல் முடிஞ்சு வரலை. பிச்சுதான் 40 ரூபா எடுத்து குடுத்தான் நம்ம தலகிட்ட. ஒரு நிமிஷம் ஆடிட்டார் நம்ம கைப்ஸ். அப்ப கிச்சு"இங்க பாருடி அபி, அங்குள்க்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மண்ட் வீக்குடி"ன்னு டைமிங் ஜோக்கடிச்சு கைப்ஸை வெறுப்பேத்தறான்.

கைப்ஸ் பணத்தை பிச்சு கிட்ட நீட்டி "இதென்ன"ன்னு கேக்க அபி பாப்பா"பணம்"ங்குது.கைபுள்ள கடுப்பாகி"சின்னபுள்ள தனமா இருக்கு, ராஸ்கோல்ஸ் நாள் சவாரிக்கு 40 ரூவாயா. ஒலுங்கு மரியாதையா 300 ரூவா குடுங்க இல்லாட்டி நான் போமாட்டேன்"ன்னு அடம் பிடிக்க பசங்க 3ம் தனியா மீட்டிங் போட்டுச்சு.

அபி: டேய் கிச்சு என்னடா செய்யலாம்?

கிச்சு: பேசாம காதை கடிச்சுடுடீ

பிச்சு: டேய் அதல்லாம் வேணாம், அவந்திகா அக்கா கராத்தே கிளாஸ்க்கு போயிட்டு வர்ர நேரம்தான் போய் கூட்டிகிட்டு வாடா

பசங்க திரும்பி வந்ததும் கைப்ஸ்"என்ன பசங்களா நல்ல முடிவா எடுத்தீங்களா, இல்ல நாறி போயிடும்"ன்னு சொல்ல கிச்சு அவந்திகாவை கூப்பிட ஓடிட்டான்.

பிச்சு"பேசி பிரயோஜனம் இல்ல பஞ்சாயத்து தான்"ன்னு சொல்ல கைப்புள்ல கடுப்பாயிடாரு. "எலேய் என்னாங்கடா நான் பாக்காத பஞ்சாயத்தா நடத்துங்கடா நல்லா நடத்துங்கடா, ஆமா கிச்சு எங்கிட்டுடா ஓடுறான்"ன்னு கேக்க அபிபாப்பா"பஞ்சாயத்து தலய கூப்பிட போயிருக்கான்"ன்னு சொன்னா.

கராத்தே டிரஸ்ல வந்த அவந்திகா சைக்கிள்லயே கிச்சுவும் தொத்திகிட்டு வந்து சேந்துட்டான். வந்ததும் கைப்ஸ்"மாப்பி என்னடா இது என்னய பஞ்சாயத்துல விசாரிக்குறத பாக்க கூட்டம் சேக்குறியா, ஏம் புள்ள இந்த பசங்க தான் காசு குடுக்காம கலாய்குதுன்னா நீயும் இவிங்க கூட சேந்துகிட்டியா"ன்னு கேட்டார். அப்போ பிச்சு"அங்குள் அவங்கதான் பஞ்சாயத்து தலயே, எங்களுக்கு எப்போ பிரச்சனைன்னாலும் அவங்கதான் பஞ்சாயத்து பண்ணி தீத்து வப்பாங்க. அபி பஞ்சாயத்தே 1 மாசத்துக்கு 10 நடக்கும்"ன்னு சொன்னான்.

அதுக்கு கைப்ஸ்"அடப்பாவிகளா இந்த பச்சமண்ண பஞ்சாயத்து தலயாக்கி பல பேர பதம் பாத்துட்டீங்களாடா..இதே தொழிலா வச்சிருக்கீங்களாடா"ன்னார். அப்ப அவந்திகா கைப்புள்ள கிட்ட "அங்குள் உங்களுக்கு சென்(zen) தெரியுமா"ன்னு கேக்க "சாயந்திரம் 6 மணிக்கு மேல எனக்கு கண்ணே தெரியாது என்னய பாத்து சென்னு தெரியுமான்னு கேக்குறீங்களே.சட்டு புட்டுன்னு பஞ்சாயத்த முடிச்சுட்டு காசு குடுத்து அனுப்புங்கப்பா எனக்கு 6 மணிக்கு ஒரு முக்கியமான சோலியிருக்குப்பா"ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார்.

பின்ன அவந்திகாவின் பலமான விசாரனைக்கு பின்ன பசங்க ஸ்கூலுக்கு போக 1 ட்ரிப், வர 1 ட்ரிப்னு சொன்னத கைபுள்ள நாள் சவாரின்னு தப்பா புரிஞ்சுகிட்டதால 40 ரூவாதான்ன்னு முடிவாச்சு. கைப்புள்ள இதுக்கு ஒத்துகலன்னா அபி 1 காது பிச்சு 1 காது பிச்சுகலாம்ன்னு தீர்ப்பாச்சு.அதுக்கு கைப்புள்ள "ஒத்த மனுசன் எத்தன தாங்குவான்னு தெரிய வேணாம்"ன்னு சொல்லி எஸ்கேப் ஆக போகும் போது ஸ்கூல்ல இருந்து கண்மணி வந்தாச்சு.

"வாக்கா நல்ல நேரத்துல வந்தக்கா, நீயும் தான் பெத்து வச்சிருக்கியே மணி மணியா புள்ளங்கல, இந்த அகராதி புடிச்ச அபிஅப்பாவும் தான் ஒன்னு பெத்து வச்சிருகாரு பாருக்கா கொல வெறியோடயே திரியுது, நீயாவது வந்து ஒரு நல்ல தீர்ப்ப சொல்லு கண்மணியக்காவ்'ன்னு ஐஸ் வச்சாரு நம்ம தல கைபுள்ள.

எல்லாத்தையும் கேட்ட கண்மணி "கொஞ்சம் இருப்பா"ன்னு உள்ள போயிட்டாங்க. பின்ன திரும்பி வந்து "இந்தாப்பா"ன்னு ஒரு லட்டு குடுத்தாங்க. காசு குடுப்பாங்கன்னு பாத்தா லட்ட குடுக்குறாங்களே..சரி வந்த வரை லாபம்ன்னு கைப்புள்ள வாங்கிகிட்டு போயிட்டார்.

"மாப்பு வச்சுட்டாங்களே ஆப்பு"ன்னு கைபுள்ள இன்னிக்கு புலம்ப காரணமே லட்டு தான்.அந்த லட்டுல என்ன விஷேஷம்ன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா இங்க போய் பாருங்க. தலயோட சங்க ஆண்டு விழா அன்னிக்கு இம்மாம் பெரிய ஆப்பு வச்சுட்டீங்களே கண்மணி தங்கச்சி!

29 comments:

  1. மீ தி ஃபர்ஸ்ட்டு!!!! :-D

    ReplyDelete
  2. ஹாஹாஹா.. படிச்சு சிரிச்சிட்டே இருக்கேன்..

    ReplyDelete
  3. சங்கத்து முதலாம் ஆண்டு விழாக்காக இங்கே லீவு வுட்டுட்டாங்களே! அங்கே இன்னைக்கு ஸ்கூலா?

    பாவம் கைப்பு! விழா அன்னைக்கும் சவாரி சவாரின்னு அலைஞ்சு லட்டுதான் மிச்சம்..

    அந்த லட்டும்(!!!!)... ஆப்பு ரொம்ப பெருசாச்சே!!! :-P

    ReplyDelete
  4. வன்மையாகக் கண்டிக்கிறேன் மை பிரண்டை.நாம பர்ஸ்ட் னு பின்னூட்ட வந்தா முந்திக்கிடுச்சே[ஏதாச்சும் பர்ஸ்ட்டோ மேனியாவா இருக்குமோ?அண்ணாத்த கொஞ்சம் டாக்டராண்டை கூட்டிப் போங்க]
    சரி சரி தங்காச்சிக்கு வுட்டுக் கொடுப்பம்.
    ஐம் பிரசண்ட
    மறுக்கா வாரேன் பதிவ படிச்சிட்டு

    ReplyDelete
  5. @கண்மணி:

    //வன்மையாகக் கண்டிக்கிறேன் மை பிரண்டை.//

    நோ டென்ஷன் ஸிஸ்டர். :-D

    //நாம பர்ஸ்ட் னு பின்னூட்ட வந்தா முந்திக்கிடுச்சே//

    அட.. இதுக்குதான் உங்க கண்டனமா?

    //[ஏதாச்சும் பர்ஸ்ட்டோ மேனியாவா இருக்குமோ?அண்ணாத்த கொஞ்சம் டாக்டராண்டை கூட்டிப் போங்க]//

    அப்போ நீங்களும் என்னுடன் டாக்டராண்ட வரனும் போல இருக்கே? ஹீஹீ.. ;-)

    //சரி சரி தங்காச்சிக்கு வுட்டுக் கொடுப்பம்.//

    இதுதான் அக்காவுக்கு அழகு. :-D

    //ஐம் பிரசண்ட
    மறுக்கா வாரேன் பதிவ படிச்சிட்டு //

    டீச்சர் அட்டண்டன்ஸ் எடுத்துக்கோங்க. ;-)

    ReplyDelete
  6. லட்டுடோட மாமியாத்து அல்வாவும் குடுத்தேனே மறந்துட்டீங்களா?அதுக்கப்பறம் கைப்பு வாயத் திறக்க முடியாம பேஜாரான கதையை அடுத்த பதிவுல போடுங்க.அப்படியும் முரண்டு புடிச்சா பாப்பாவவுட்டு கடிக்கச் சொல்லுங்க.இதெல்லாம் வேலைக்கு ஆகறதில்லை.'ஒத்தக் காது கைப்பு'ன்னு பட்டம் குடுத்துடுவோம்.நமக்கு பரிசு குடுத்தவங்களுக்கு நாம பட்டமாச்சும் தர வேண்டாமா?ஓகே அடுத்த ஆப்பு யாருக்கு பிச்சு,கிச்சு,பாப்பா ரெடி.

    ReplyDelete
  7. பாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க
    :)

    ReplyDelete
  8. mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடுத்த சங்கத்துக்கு வச்சே தீரனும் ஆப்பு. நாம மூணு பேரும் பாசக்கிளிகள் னு தெரியலை அவிங்களுக்கு.
    [ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது]

    ReplyDelete
  9. நல்லா இருக்குங்க உங்க பரிசு. :))

    ReplyDelete
  10. வாங்க பாசக்கார தங்கச்சிகளா, அய்யனார், கொத்ஸ் அவர்களே ஒரு மணி நேரத்துல பதில சொல்றான், கொஞ்ச நேரம் ஆணி புடுங்கிட்ட வாரேன்:-)(தவிர்க்க முடியாத ஆணி அதான்)

    ReplyDelete
  11. @அய்யனார் said...
    //பாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க
    :) //

    வந்துட்டார்ய்யா எதிர்கட்சி..

    ReplyDelete
  12. @கண்மணி:

    //mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடுத்த சங்கத்துக்கு வச்சே தீரனும் ஆப்பு. நாம மூணு பேரும் பாசக்கிளிகள் னு தெரியலை அவிங்களுக்கு.//

    நோ டென்ஷன் அக்கா.. பட்டம்தானே? நாமளே நமக்கு கொடுத்துக்கலாம். ஓகே வா?? ;-)

    //[ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது] //

    புலிக்கு ஏதோ உள்குத்துமாதிரி இருக்கே? ;-)

    ReplyDelete
  13. நானும் வந்துட்டேன்:-)

    ReplyDelete
  14. கைப்ஸ் பாவம்!!!

    ReplyDelete
  15. //சங்கத்து முதலாம் ஆண்டு விழாக்காக இங்கே லீவு வுட்டுட்டாங்களே! அங்கே இன்னைக்கு ஸ்கூலா?//

    இது நேத்து நடந்த கூத்தும்மா! இன்னிக்கு உலகம் முழுவதும் விடுமுறை தான்:-))வவாச ஆண்டு விழாவுக்காக:-)
    //அந்த லட்டும்(!!!!)... ஆப்பு ரொம்ப பெருசாச்சே!!! :-P //

    நம்ம குடும்பம் வக்கிற ஆப்புன்னா சும்மாவா?:-)

    ReplyDelete
  16. //லட்டுடோட மாமியாத்து அல்வாவும் குடுத்தேனே மறந்துட்டீங்களா?அதுக்கப்பறம் கைப்பு வாயத் திறக்க முடியாம பேஜாரான கதையை அடுத்த பதிவுல போடுங்க.அப்படியும் முரண்டு புடிச்சா பாப்பாவவுட்டு கடிக்கச் சொல்லுங்க.இதெல்லாம் வேலைக்கு ஆகறதில்லை.'ஒத்தக் காது கைப்பு'ன்னு பட்டம் குடுத்துடுவோம்.நமக்கு பரிசு குடுத்தவங்களுக்கு நாம பட்டமாச்சும் தர வேண்டாமா?ஓகே அடுத்த ஆப்பு யாருக்கு பிச்சு,கிச்சு,பாப்பா ரெடி.//

    வாங்க தங்கச்சி கண்மணி! பசங்க அடுத்த ஆப்பு யாருக்குன்னு ஆள் தேடுது, பேசாம் அம்புஜம் மாமிய புடுச்சு குடுத்துடுவோமா:-)

    மனுசன் எவ்ளவு தான் தாங்குவார்- அல்வா வேற குடுத்தீங்களா - சபாஷ் இதுல்ல குடும்பம்:-))

    ReplyDelete
  17. //mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடுத்த சங்கத்துக்கு வச்சே தீரனும் ஆப்பு. நாம மூணு பேரும் பாசக்கிளிகள் னு தெரியலை அவிங்களுக்கு.//

    வாங்கின அவங்களே பேசாம இருக்காங்க..... பரிசு யாருக்கு வேணுமுனாலும் கிடைக்கும். இப்ப உங்களுக்கு, தொல்ஸ் எல்லாம் கிடைக்கலையா? ஆனா பட்டம் அம்புட்டு சீக்கிரமா கிடைக்காது. அதும் சங்கத்தின் மூலம் பட்டம் வாங்குவதற்கு ஒரு கொடுப்பினை வேணும். அது மைபிரண்ட் அவங்களுக்கு கிடைத்து இருக்கு என்று பொறமைப்படுவது உங்கள் வயதுக்கு அழகாகுமா சொல்லுங்க.....

    ReplyDelete
  18. //அது மைபிரண்ட் அவங்களுக்கு கிடைத்து இருக்கு என்று பொறமைப்படுவது உங்கள் வயதுக்கு அழகாகுமா சொல்லுங்க..... //

    சரிதான் புலி உருமுதுன்னு தங்கச்சி சொன்னப்பவே நெனச்சேன்! இந்த பாசமலர் குடும்பத்துகிட்ட மோதினா என்ன ஆகும்ன்னு கொஞ்சம் ஹிஸ்டரிய திருப்பி பார் புலி:-)

    ReplyDelete
  19. //[ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது] //

    டவுட் ஆனேன், இப்ப கன்பார்ம் பண்ணிட்டேன் உங்கள பத்தி... ;-)

    ReplyDelete
  20. //சரிதான் புலி உருமுதுன்னு தங்கச்சி சொன்னப்பவே நெனச்சேன்! இந்த பாசமலர் குடும்பத்துகிட்ட மோதினா என்ன ஆகும்ன்னு கொஞ்சம் ஹிஸ்டரிய திருப்பி பார் புலி:-) //

    தொல்ஸ், வரலாறை படைப்பவன் கிட்ட போய் திருப்பி பாரு புரட்டி பாருனா என்ன அர்த்தம்.

    ReplyDelete
  21. //புலிக்கு ஏதோ உள்குத்துமாதிரி இருக்கே? ;-) //

    விடுங்க மை ஃபிரண்ட், நம்ம எல்லாம் நேர் குத்தையே சமாளிக்குறவங்க, உள் குத்து தானே... இருந்தாலும் அவங்க உங்கள் பார்த்து பொறாமை படுவது ரொம்ப தப்பு. என்ன் நான் சொல்லுறது.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் அண்ணா :)))

    ReplyDelete
  23. //எல்லாருக்கும் நான் ஏதாவது குடுத்தே ஆவனும்ன்னு நாகைபுலி சிங்கத்தை கேட்டேன். எது குடுத்தாலும் எனக்குதான் பஸ்ட்டு, என்ன கொடுக்க போறீங்கன்னு கேட்டார். நான் "வேற என்ன ஆப்புதான்"ன்னு சொன்னேன். //

    ஆப்ப தான் நாங்க நித்தமும் வாங்கிட்டு இருக்கோமே. அப்புறம் என்ன மறுபடியும் அதே... புதுசா திங்க பண்ணுங்க... யூத் சொன்னா மட்டும் பத்தாது, யூத் மாதிரி திங்கும் பண்ணனும். ;-)

    ReplyDelete
  24. \\அய்யனார் said...
    பாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க
    :)\\

    இப்படியே சொல்லக்கிட்டு இருந்திங்க அடுத்தது உங்க காது தான் ;)

    ReplyDelete
  25. ஆகா இதுல வர எல்லா குழந்தைங்க ளும் எத்தனை புத்திசாலியா இருக்காங்க..

    இனிமே எங்க வீட்டு பஞ்சாயத்து எல்லாம் அவந்தி கிட்டேயே பைசல் பண்ணிக்கறேன்.

    ReplyDelete
  26. Present. Tamil font not available at present.

    ReplyDelete
  27. :-))))))))))))))))))

    நடக்கிற 10 பஞ்சாயத்தில அபி பாப்பாவே 8 கேஸ்க்கு தீர்ப்பு குடுத்துறும், ச்சும்மா நாங்க எல்லாம் கூட பாடி கார்ட்ஸ்..அதுனால தான் எங்க காது எல்லாம் தப்பிச்சது..

    //ஏதாச்சும் பர்ஸ்ட்டோ மேனியாவா இருக்குமோ?அண்ணாத்த கொஞ்சம் டாக்டராண்டை கூட்டிப் போங்க//

    ஆமாக்கா...அபி அப்பாவையும் சேர்த்து கூப்டுட்டு போகனும்...

    தேங்க்ஸ் அண்ணா..எனக்கு குடுத்த பதவிக்கு...

    ReplyDelete
  28. அபி.அப்பா அவர்களே...

    வ.வா.சங்கத்துக்கு ஆப்புரைசல் நடக்குது...உடனடியாக வ.வா.சங்கத்தை விசிட் செய்து, ஆப்புரைசலில் கலந்துகொள்ள Official Request ஆக இந்த மடலை அனுப்புகிறேன்.

    சங்கம் ஆப்பு மேனேஜர்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))