பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 12, 2007

இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி இதுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?

மயிலாடுதுறைய துபாயா ஆக்கிதான் தீரணும்ன்னு 1992ல கிளம்பினாரு நம்ம தொகுதி M.P மணிசங்கர் அய்யர். அப்ப ஒரு குரூப்பா நாங்க கிளம்பினதுதான் இங்க துபாய்க்கு இவரு என்ன நம்ம ஊரை துபாயா மாத்தறது நாம துபாய மயிலாடுதுறையா மாத்துவோம்ன்னு. அவருக்கு இன்னும் அதை சாதிக்க முடியலன்னாலும் நாங்க சொன்னபடி செஞ்சுட்டோம். இங்க டேரா துபாய்ல ஒரு எடத்த வளச்சி புடிச்சு கொத்து பரோட்டா ஓட்டலு, சாமி இட்லிகடை, தஞ்சை சலூனு, தமிழ்நாடு மசாலாகடை, பிரவுசிங் செண்டரு, லாண்டரி கடை ரோட்டு ஓர டிராண்ஸ்பார்மரு(சாயந்திரம் ஒக்காந்து பேச) இப்டீன்னு!சாயந்திரம் பொழுது சாஞ்சா போதும் மார்ட்டின் முழுக்கை சட்டைய போட்டுகிட்டு, வெள்ளை கைலிய அயர்ன் பண்ணி போட்டுகிட்டு தஞ்சை சலூன்ல போய் ஒரு கூட்டம் கோலங்கள் பார்க்கும், அப்பா கடைல ஏதாவது கடல் பாசி தின்னுட்டு அது வாசல்லயே 15 பேர் ரவண்டு கட்டி "இருந்தாலும் மன்மோஹன் சிங் இப்டி செஞ்சிருக்க கூடாது"ன்னு ஜரூரா பேசிப்போம். எங்க குறைஞ்ச பட்ச பேச்சுதான் நடுவன் அரசு பத்தி,அதிக பட்சம் விண்வெளி மாசு படுவது பத்தில்லாம் போகும். நார்வே தூதுகுழு மாதிரி எங்கள ஊஸ் பண்ணலாம் அத்தன ஒரு நாலெட்ஜ்!


வேற குரூப் அந்த டிராண்ஸ்பார்மர் கீழ சுத்தியும் குந்திகிட்டு புளிச்சு புளிச்சுன்னு துப்பிகிட்டு பைன் சிகரட் வலிச்சுகிட்டு ஊர்ல யாரு யாரை இழுத்துகிட்டு ஓடினாங்க என்பத போல முக்கிய விஷயத்த அலசி தொவச்சி காயப்போடும்.


அடுத்த கும்பல் தஞ்சை சலூன் வாசல்ல "தொல்காப்பியன தொவச்சி எடுக்கனும்டா"ன்னு நான் குறுக்க வரும் போது சாட பேசும். கோலங்கலை பத்தி பேசுதுங்கலாம்! அட...


கைலிய தூக்கி கட்டி கிட்டு "டேய்ய்ய் வெள்ரு நில்லுடா அல்வாவூட்டு மஜீத்துக்கு புள்ள பொறந்துருக்கு பய மாட்ட மாட்டங்குறான், தாளிக்கலாம்ன்னு பாத்தா சிக்க மாட்டங்குறான்"ன்னு சவுண்ட் வுட்டுகிட்டு போகும் ஒரு தனிப்படை!


மானுகடைல நிமிசத்துக்கு ஒரு தடவ "இன்றைய பெசல்" மாத்திகிட்டே இருப்பாங்க. டிராண்ஸ்பார்மர்ல "Bed space available" ஒட்டிட்டு போவான் எவனோ, அதுல இருக்கும் காண்டெக் நம்பர எடுத்து " எலேய் மாப்ள கல்யாணம் பண்ணிட்டு வந்தியே ஏதும் விசேசமா"ன்னு கலாய்க்கும்.


புதுசா பால் புட்டியோட வந்ததுங்க தனி குரூப்பா திரியும். தனக்கு புது சொக்கா போட்டுக்குதோ இல்லியோ செல் போனுக்கு நெத்தம் ஒரு சொக்கா போடும்.


இதல்லாம் விட ரூமுக்குள்ள அடச்சி கிடக்கும் குரூப் இருக்கே அதுங்கதான் ரொம்ப ரவுசு பார்ட்டிங்க. காமடி டைம்னா அல்வா சாப்புடுவது போல அதுங்களுக்கு! எவனாவது அமீரகத்துல இருந்து லெட்டர் போட்டு சிட்டி பாபு பெனாத்துவாரான்னு பாத்துட்டே இருப்பானுங்க.சிட்டிபாபு "துபாயில இருந்து ஒரு லெட்டர்"ன்னு சொன்னதும் இதுங்க எல்லாம் ஆளுக்கு ஒரு பேனா எடுத்துகிட்டு அந்த நம்பர குறிச்சுப்பானுங்க. பின்ன என்ன கொலவெறி தான். அவனுக்கு போன போட்டு "ஹல்லோ சேகர் தான, இப்பதான் உங்க லெட்டர் படிச்சாங்க"ன்னு சொன்னதும் சேகருக்கு சன் டிவில ஷேர் வாங்கின சந்தோஷம் வந்துடும். பின்ன வேற வேற நம்பர்ல இருந்து அவனவனும் "நான் உங்க ஃபேன்"ன்னு சொல்ல ஆரம்பிச்சு சேகரு அத்தோட சன் டிவிக்கு மட்டுமில்ல பொண்டாட்டிக்கு லெட்டர் போடுவதையே விட்டுடுவான்.

ஆக இதல்லாம் முடிச்சுட்டு தூங்க ஆயிடும் 12/1.இப்படியாக நாங்க துபாயை மயிலாடுதுறையா மாத்தியாச்சு! இன்னும் மணிசங்கரால மாத்த முடியலை பாருங்க மக்கா!சரி இதுக்கும் நாராயண மூர்த்திக்கும் என்ன சம்மந்தம்ன்னு கேக்க பிடாது! நெம்ப நாளுக்கு பின்ன இப்பத்தான் தலைப்பு போட முடியுது, அதான் இந்த கொலவெறி தலைப்பு! எஸ்கேப்!!!

24 comments:

 1. இப்படி தலைப்பு போட்டே சூடாக்கிடுங்க!! வாழ்க வளமுடன்!!

  ReplyDelete
 2. நம்ம தொகுதி எம்.பி பேரு மணி சங்கர் அய்யரா? பேரு எல்லாம் ஞாபகம் வச்சி இருக்கீங்க..வெரி குட்.
  வெரி குட்.

  ReplyDelete
 3. இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி இதுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
  //

  என்னத்த சொல்ல தலையெழுத்து...!!!!!

  ReplyDelete
 4. சூப்பர் அந்த இடத்து மனிதர்கள பத்தி ஒரு நாவலே எழுதலாம் அப்படி வித்தியாசமான இடம். அது தனி உலகம் அந்த இடத்துல நான் அஞ்சு மாசம் தங்கி இருந்த வகைல எனக்கும் கொஞ்சம் தெரியும். நேரம் கிடைச்சா எழுதலாம்.

  ReplyDelete
 5. தம்பி said...

  சூப்பர் அந்த இடத்து மனிதர்கள பத்தி ஒரு நாவலே எழுதலாம் அப்படி வித்தியாசமான இடம். அது தனி உலகம் அந்த இடத்துல நான் அஞ்சு மாசம் தங்கி இருந்த வகைல எனக்கும் கொஞ்சம் தெரியும். நேரம் கிடைச்சா எழுதலாம்.
  //

  தம்பி உட்டுடுய்யா பாவம் அவங்க..:(

  ReplyDelete
 6. குசும்பன் said...

  நம்ம தொகுதி எம்.பி பேரு மணி சங்கர் அய்யரா? பேரு எல்லாம் ஞாபகம் வச்சி இருக்கீங்க..வெரி குட்.
  வெரி குட்.
  //

  என்னது மயிலாடுதுறை உங்க தொகுதியா தொகுதியெல்லாம் ஞாபகம் வச்சி இருக்கீங்க..வெரி குட். :)

  ReplyDelete
 7. ஆஹா! அப்படியே டேரா தமிழ் பஜாரை கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க அபிஅப்பா. அழகா சொல்லிட்டீங்க. :)

  அந்த ஏரியாக்குள்ள நுழைஞ்சாலே ஏதோ தமிழ்நாட்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங் வரும். அதுக்காக அதை உங்க ஊருக்கு மட்டும் சொந்தம் கொண்டாடுறது தான் சரியில்லை. முகவைக்காரங்க எல்லாரும் சேர்ந்தோம்... அம்புட்டுத்தேன்.

  ReplyDelete
 8. ஏன் எல்லாரும் நம்ம தம்பியை பாத்து பயப்படுறீங்க. பாவம் அவரை உட்றுங்க.

  ReplyDelete
 9. அபி அம்மா சொன்னது..
  என்ன இப்படி ஒரு போடு போடரீங்க..உடம்பு கிடம்பு ச்ரியில்லையா?

  ReplyDelete
 10. அபி தாத்தா சொன்னது...
  ஏன் தம்பி நீ எந்த ஊர்ல இருக்கீங்கோ..கீள்பாக்கதிலில் இல்லீங்கலே.. கொஞ்ச நாளோ நீங்க சரி இல்லைன்னு கேள்விப்பட்டோமுங்க..

  ReplyDelete
 11. அபி தம்பி பாப்பா சொன்னது..
  அப்பா என் தலை முடிய பிச்சுக்குணும் போல தோணுது.

  ReplyDelete
 12. அபி அத்தை சொன்னது...
  அண்ணா நல்லாத்தானே போனீங்க.. நாரயண மூர்த்தி யாருங்க?

  ReplyDelete
 13. //// மார்ட்டின் முழுக்கை சட்டைய போட்டுகிட்டு

  ஏம்பா இந்த விளம்பரம் பண்றத நிறுத்த மாட்டீங்களா. . . .?

  ReplyDelete
 14. \\தம்பி said...
  சூப்பர் அந்த இடத்து மனிதர்கள பத்தி ஒரு நாவலே எழுதலாம் அப்படி வித்தியாசமான இடம். அது தனி உலகம் அந்த இடத்துல நான் அஞ்சு மாசம் தங்கி இருந்த வகைல எனக்கும் கொஞ்சம் தெரியும். நேரம் கிடைச்சா எழுதலாம்.\\

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 15. \\லாண்டரி கடை ரோட்டு ஓர டிராண்ஸ்பார்மரு(சாயந்திரம் ஒக்காந்து பேச) இப்டீன்னு!\\

  என்ன தொல்ஸ் நான் அதை டிராண்ஸ் "பார்" மரு ன்னு தானே நினைச்சேன்.

  ReplyDelete
 16. அபி அப்பா இத்தனை பேரு இருக்காங்களா துபாயில. கைலி கட்டினவங்க எல்லாம் அண்டை நாட்டவங்கனு நினைச்சுப்பேன்.
  மாயவரம் வந்திருச்சு,முகவை வந்திருச்சி இன்னும்மத்தவங்க எல்லாம் எந்த ஊரோ.

  ReplyDelete
 17. \\ "நான் உங்க ஃபேன்"ன்னு சொல்ல ஆரம்பிச்சு சேகரு அத்தோட சன் டிவிக்கு மட்டுமில்ல பொண்டாட்டிக்கு லெட்டர் போடுவதையே விட்டுடுவான்.\\

  :))))))))))))

  ReplyDelete
 18. //நம்ம தொகுதி எம்.பி பேரு மணி சங்கர் அய்யரா? பேரு எல்லாம் ஞாபகம் வச்சி இருக்கீங்க..வெரி குட்.//

  குசும்ப்ஸ்சோட ஒரிஜனல் குசும்பா?-)))))

  ReplyDelete
 19. உம்ம தலைப்புக்கு சிரிக்கவா? அந்த குசும்பன் பின்னூட்டத்துக்கு சிரிக்கவா? நல்லாயிருங்கடே!!

  (அப்பாடி பதிவைப் பத்தி ஒண்ணும் சொல்லலை. எவனாவது வந்து வத்தி வைக்கிறதுக்கு முன்னாடி ஐயாம் தி எஸ்கேப்)

  ReplyDelete
 20. இப்படி தலைப்பு வெச்சா நாளைக்கு நீங்க சீரியஸ் பதிவு போட்டாலும் காமெடினு மிஸ் பண்ண சான்ஸ் இருக்கு. அதனால கொஞ்சம் பார்த்து வைங்கண்ணா...

  ReplyDelete
 21. தெய்ரா துபாயில் நம்ம ஆட்கள் டேரா போட்டதால் அதை எல்லோருமாக சேர்ந்து டேரா துபாயக்கிட்டீங்க போலிருக்கே? சம்பவம், நிலவரம், சூழல், பேச்சாடல் எல்லாம் சரிதான் அந்த கூட்டத்தில் நீங்க எங்க உட்கார்ந்திருந்தீர்கன்னு எழுதவேயில்லையே? அனாவசியமாக தன்னுடைய நிறுவனத்தின் பெயரை தலைப்பாக சம்பந்தமே இல்லாமல் எழுதியத்திற்கு என்ன 'கோ'ல என்ன தண்டனைன்னு தெரியுமா? சம்மன் வரும் காத்திருங்கள் ;-)

  ReplyDelete
 22. "காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது"னு சொல்லுவாங்க, இப்போத் தான் அர்த்தம் புரிஞ்சது. விவேகானந்தர் சாலை, 2-வது குறுக்குத் தெரு தானா? விலாசம் மாறிட்டீங்களா? நாங்க துபாய் ரெயில் ஸ்டேஷன் பார்த்தோம், போனமுறை 2004-ல் யு.எஸ்ஸிலே இருந்து துபாய் வழியாத் திரும்பினப்போ! :P

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))