பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 25, 2007

அமீரக வலைப்பதிவர் மாநாடு - அறிவிப்பு & அழைப்பு!!!

அன்பு நண்பர் சங்கத்து சிங்கம் சூடான் புலி நாகை சிவா அவர்களின் 3 நாள் துபாய் விஜயம் முன்னிட்டு வரும் வெள்ளி 27/07/07 மாலை 4.30 க்கு கராமா பார்க்கில் (போண்டா வாங்க வசதியாக சரவண பவன் எதிரில்) கூடி தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போவது பற்றியும், நம்ம பிளாக்ல எழுதுவதை அடமட்ட தமிழனிடம் சேர்ப்பது எப்படி என்பது பற்றியும், தல பாலபாரதி போல நாம எப்ப டி.வி ல வார்ரது என்பது பற்றியும் எல்லாம் பேசாமல் வழக்கம் போல அருமையான கும்மிகள் அடித்து திரும்புவோம் என முடிவு செஞ்சிருக்கோம்.

நான் வீட்டில் தலைகீழா நின்னு பையில் ஒட்டியிருக்கும் 25 பைசாவையும் உதறி விட்டு வாயோடு வந்துவிடுகிறேன். யார் யார் என்னென்ன எடுத்து வர்ரீங்கன்னு பின்னூட்டத்துல வந்து குமுறுங்க மக்கா!

இன்று மாலை 6.00க்கு நான் போனிலும் அழைப்பு விடுகிறேன். என்னை தொடர்பு கொள்ள 050 7495127. உங்கள் வருகையை பின்னூட்டத்தில் சொல்லிடுங்க.

55 comments:

 1. //இன்று மாலை 6.00க்கு நான் போனிலும் அழைப்பு விடுகிறேன்//

  நான் கற்பூரம் அடிச்சு சொல்றேன்.. 6 மணிக்கு அண்ணாத்த தூங்கிடுவாரு.. இவரு பேச்ச நம்பாதீங்க...

  ReplyDelete
 2. aaga moththathule selavellaam puli thalaiyile kadrathaa uththesamaa???

  ReplyDelete
 3. புதிய வடிவமைப்பு அழகா இருக்கு. :)

  சந்திப்பு பற்றி.....

  என்னத்த சொல்லி......

  ReplyDelete
 4. அபி அப்பா என் பங்குக்கு கடந்த முறை போல 50 fils க்கு எலிபுலுக்கை மிட்டாயும், 50 filsக்கு தேன் குழல் மிட்டாயும் வாங்கி வருகிறேன்...

  எப்பொழுது நீங்க 4 மணிக்குன்னு சொன்னா 7 மணிக்கு தான் வருவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்

  ReplyDelete
 5. லொடுக்கு அவர்களுக்கு எனக்கு அல்ரெடி ஒரு டீல் பேலன்ஸ் இருக்கிறது, அதை இங்கு நான் அவருக்கு நினைவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை, ஏன் என்றால் அவர் ஜெண்டில் மேன்!!!

  ReplyDelete
 6. என்னையும் ஆட்டைல சேர்த்துக்கோங்க...

  ReplyDelete
 7. நாகை சிவா said...
  என்னையும் ஆட்டைல சேர்த்துக்கோங்க...

  ராசா நீங்க தானே ராசா கதாநாயகன்!!!
  ஸ்பான்சர் புலி, கொடை வள்ளல் நீங்க தான்னு சொல்லி வச்சு இருக்கிறார் அபி அப்பா,, அதுவும் இல்லாம் யாரும் எதுவும் உங்களுக்கு முன்பு பில் கொடுத்தால் சடார் என்று அடிச்சி விடுவீங்கன்னு சொல்லி இருக்கிறார்

  ReplyDelete
 8. //குசும்பன் said...

  லொடுக்கு அவர்களுக்கு எனக்கு அல்ரெடி ஒரு டீல் பேலன்ஸ் இருக்கிறது,
  //

  ஆஹா! அது என்ன தல? சென்ஷிக்கு வச்ச மாதிரி எதுவுமில்லையே??

  //ஏன் என்றால் அவர் ஜெண்டில் மேன்!!!//

  இது எப்பயிருந்து??

  ReplyDelete
 9. அபிஅப்பா 4.30 மணிக்கா? அதுவும் வெள்ளிக்கிழமை. ஒரு வார இறுதி விடுமுறை வீணாப்போகும் - பரவாயில்லை அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம். கராமா பார்க்கில் ரொம்ப சூடா வெக்கையா இருக்குமே? எங்கேயாவது ரெஸ்டாரெட்ண்டுக்குள்ளே? சிவிஸ்டார் பவன் ஓகேவா? ஆனா வர மக்கள் அவங்கவங்க மனைவியை அழைச்சிட்டு வந்தாதான் நமக்கு (அதாவது எனக்கு) கம்பெனியா இருக்கும் இல்லாட்டி அவுட்டா ஆஃப் பேலாசா இருப்பேனோன்னு தோன்றது.

  ReplyDelete
 10. "ஆனா வர மக்கள் அவங்கவங்க மனைவியை அழைச்சிட்டு வந்தாதான் நமக்கு (அதாவது எனக்கு)"

  அபி அப்பா சீக்கிரம் எனக்கு நாளைக்கே கல்யாணம் செஞ்சு வைங்க அக்காவுக்கு துணைக்கு ஒரு பெண் வேண்டும் என்று சொல்றாங்க பாருங்க.

  அக்கா உங்களுக்காக தான் நான் அபி அப்பா கிட்டே கேட்கிறேன் :)

  ReplyDelete
 11. லொடுக்கு
  "ஆஹா! அது என்ன தல? சென்ஷிக்கு வச்ச மாதிரி எதுவுமில்லையே??"

  உங்க பதிவுல எனக்கு மட்டும் டீரீட் தருவதா ஒத்துக்கொண்டீர்களே அது மறந்து போச்சா!!!!


  "நீங்க ஜென்டில் மேன்" இது எப்பயிருந்து??

  எப்பயிலிருந்து இல்லை கேள்வி தவறு, எதுவரை என்று கேட்டு இருக்க வேண்டும் ???
  டீரிட் தரும் வரை மட்டுமே!!!

  ReplyDelete
 12. என் கூட ஷூட்டிங்குக்கு வருகிறேன் என்று சொன்னீங்களே மாமா! ஒன்னு நான் வேண்டுமா இல்லையா என்று முடிவ சொல்லுங்க!!!

  ReplyDelete
 13. ஜஸீலா அவர்களே!

  1. பெனாத்தலார் கொஞ்ச நாளா ஜாலியா இருக்கார் காரணம் தங்கமணி இந்தியா போயிருக்காங்க

  2. லியோ சுரேஷ் அதே போல அனுப்பிட்டார்
  3. நான் ரொம்ப ஜாலியா இருக்கேன்
  4. தம்பி சமீபத்துல தான் பால் புட்டிய கடாசினார். கல்யாணம்ன்னு கேட்டா குமட்டுல குத்துவாங்க வீட்டுல
  5.குசும்பனுக்கு பொண்ணு குடுக்க எந்த தியாகியும் முன்வரலை
  6. சென்ஷி சாமியாரா போக முடிவு பண்ணிட்டர்
  7. கோபி இன்னும் பால்புட்டிதான்
  8.மகி பஸ்டாண்டிலே "எம் பொண்டாட்டி நெசமாவே ஊருக்கு போயிட்டா"ன்னு கூவிகிட்டு இருக்கார்
  9. மின்னலும் சாமியாரா போக போவுது
  10. லொடுக்கு தங்கமணியோட வர்ரார்
  11. பாஸ்ட் பவுலர் தங்கMஐயோட வர்ரார்
  12. முத்து குமரன் "கல்யாணம் பண்ணி வைங்க"ன்னு வீடிலே கேட்டப்ப அவங்க அப்பா தலைல குட்டி இன்னும் அந்த வீக்கம் கூட அப்படியே இருக்கு("குழந்தை திருமணம்" தடை செய்யப்பட்டது)

  ம்ம்ம்ம்ம்.....என்ன செய்யலாம்?

  ReplyDelete
 14. மக்கா! காலைல இருந்த டெம்பிளேட் விட இப்போ உள்ள டெம்பிளேட் பிடிச்சிருக்கு! உங்க கருத்து சொல்லுங்கப்பா!

  ReplyDelete
 15. இது நல்லாத்தான் இருக்கு.நேத்தே ஏன் கேக்கலை.வாயில என்ன கொழுக்கட்டையா ;)

  ReplyDelete
 16. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  நற...நற...நற...நற...நற...நற...நற...

  ReplyDelete
 17. //ஒளி ஒலி அமைப்பாளர் said...
  இது நல்லாத்தான் இருக்கு.நேத்தே ஏன் கேக்கலை.வாயில என்ன கொழுக்கட்டையா ;)//

  ஒளி ஒலி அமைப்பாளரே! எனக்கு வேற நண்பர் செஞ்சி குடுத்தாங்க ஆசையா. அவங்க கிட்ட இது சரியில்லை அது சரியில்லன்னு சொன்னா நல்லா இருக்குமா அதான்.

  வாயில கொழுக்கட்டை இல்லை. போண்டா! வலைபதிவர் சந்திப்பு வருதுல்ல அதான் போண்டா சாப்பிட்டு பழகறேன்:-))

  ReplyDelete
 18. அபி அப்பாவும் கைப்புள்ளையும் போலத்தான் பாஸ்ட்டும் லொடுக்கும் :-) சரி எப்படியோ நமக்கு ஒரு கம்பெனி இருக்குல அது போதும்.

  ReplyDelete
 19. ஆமா அய்யனாரை உங்க லிஸ்டில் காணோமே? அவர் மனைவியை கூட்டிட்டு வருவாரா? ;-) அப்புறம் இஷாக், நண்பன், சுல்தான், கவிமதிக்கெல்லாம் அழைப்பு அனுப்புனீங்களா? கல்ஃப் தமிழன்னு ஒருவர் எழுதுவாரே அவரு யாரு?

  ReplyDelete
 20. //உங்க பதிவுல எனக்கு மட்டும் டீரீட் தருவதா ஒத்துக்கொண்டீர்களே அது மறந்து போச்சா!!!!//

  கராமா மக்களுக்கு அறிவிப்பதென்னவென்றால், அங்குள்ள அனைத்து உணவகங்களும் வெள்ளிக்கிழமை மூடப்படும்.

  இது துபை மாநகராட்சி உத்தரவு! உத்தரவு!!

  ReplyDelete
 21. //சரி எப்படியோ நமக்கு ஒரு கம்பெனி இருக்குல அது போதும்.//

  ஒன்னு இல்ல. ரெண்டு.

  ReplyDelete
 22. ஜஸீலா! கைப்புள்ளயும் அபிஅப்பாவும் ஒன்னா:-)) அது போல லொடுக்கு வேற பாஸ்ட் பவுலர் வேறங்க!

  ஆமா அய்யனார் விட்டு போச்சே! 48 மணி நேரத்துல ஒரு கல்யாணம் பண்ணிட்டு வாய்யான்னு ஒரு மயில் விடனும்!

  இஷாக், நண்பன், கவிமதி போன் நம்பர் இல்ல ஆனா சாயந்திரம் எப்படியாவது வாங்கி போன் பண்ணிடுவேன்.

  கல்ஃப் தமிழன் மஸ்கட்ல இருக்கார்!

  ReplyDelete
 23. //லொடுக்கு said...
  //சரி எப்படியோ நமக்கு ஒரு கம்பெனி இருக்குல அது போதும்.//

  ஒன்னு இல்ல. ரெண்டு. //

  என்ன கூத்து இது:-))

  ReplyDelete
 24. ஏங்க ஜஸீலா! லொடுக்கா இருப்பவர் எப்படி வேகமா பந்து போடுவார். அத வச்சி தான் சொல்றேன் ரெண்டு பேரும் வேற வேறன்னு! புரிஞ்சுதா!

  ReplyDelete
 25. அபி அப்பா said...
  "5.குசும்பனுக்கு பொண்ணு குடுக்க எந்த தியாகியும் முன்வரலை"

  ஆம் அபி அப்பா நீங்க சொல்வது சரிதான், அன்னா கோர்னிக்கோவா, மரியா ஷெரப்போவா, கேட்ரீன், இவுங்க அப்பா எல்லாம் இந்தியாவின் சுதந்திரத்திர்காக போராடிய தியாகிகள் இல்லையே!

  ReplyDelete
 26. அபிஅப்பா என்னா டெம்புலேட்டுல்லாம் மாறிடிச்சி சந்திப்புக்கு நீங்கதான் தல ங்கறதால கெட்டப்பு புதுசா.நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 27. ஆமா டெம்பிளேட் மாறிடுச்சு! நல்லா இருக்கா நானே நானே ராத்திரி கண்ணு முழிச்சு செஞ்சேன்.(அடிக்க பிடாது..எதா இருந்தாலும் பேசி தீத்துப்போம்)

  ReplyDelete
 28. அப்பிடியா சங்கதி ரீஜண்டா தான் இருக்குது.நமக்கும் கொஞ்சம் சொன்னா தாவலை

  ReplyDelete
 29. //அபி அப்பா said...
  ஏங்க ஜஸீலா! லொடுக்கா இருப்பவர் எப்படி வேகமா பந்து போடுவார். அத வச்சி தான் சொல்றேன் ரெண்டு பேரும் வேற வேறன்னு! புரிஞ்சுதா!//

  என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலயே!!

  ReplyDelete
 30. நான் அவனில்லை.

  ReplyDelete
 31. ரமணர் பக்கத்திலே இந்தப் படமா? படத்தை மாத்துங்கன்னு சொன்னா ஒத்துக்கவா போறீங்க?
  சரி, ரமணர் பேரிலே எழுதி வச்சிருக்கிறதையாவது எடுங்க! :P

  புலி நல்லா மாட்டிக்கிச்சாக்கும்? வச்சுத் தீட்டுங்க! வாழ்த்துக்கள் எல்லாருக்கும், நல்லாச் சாப்பிடுங்க, புலி தயவிலேயும், செலவிலேயும், ரொம்ப சந்தோஷமா இருக்கு!:P

  ReplyDelete
 32. \\யார் யார் என்னென்ன எடுத்து வர்ரீங்கன்னு பின்னூட்டத்துல வந்து குமுறுங்க மக்கா!\\

  அன்பு
  பாசம்
  நட்பு
  பின்னூட்டம்
  கும்மி

  இது போதுமா இல்ல இன்னும் வேணுமா ;-)

  ReplyDelete
 33. \குசும்பன் said...
  லொடுக்கு அவர்களுக்கு எனக்கு அல்ரெடி ஒரு டீல் பேலன்ஸ் இருக்கிறது, அதை இங்கு நான் அவருக்கு நினைவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை, ஏன் என்றால் அவர் ஜெண்டில் மேன்!!!\\

  சித்தாப்பு ...நீ தல லொடுக்கையும் விடவில்லையா ;-)))))

  ReplyDelete
 34. கோபி
  அப்புறம் ஆப்போட வீடு போயி சேருனு சொல்லுவீங்க எதுக்கு வம்பு தல

  ReplyDelete
 35. புதிய வடிவமைப்பு அழகா இருந்தது..:)

  நேற்று பார்த்த போது

  ReplyDelete
 36. புதிய வடிவமைப்பு அழகா இருக்கிறது..:)

  இன்று பார்த்த போது

  ReplyDelete
 37. புதிய வடிவமைப்பு அழகா இருக்கலாம்..:)

  நாளை பார்க்கும் போது


  யப்பா போதும்டா சாமி

  கண்ண கட்டுது

  ReplyDelete
 38. \\குசும்பன் said...
  லொடுக்கு
  "ஆஹா! அது என்ன தல? சென்ஷிக்கு வச்ச மாதிரி எதுவுமில்லையே??"

  உங்க பதிவுல எனக்கு மட்டும் டீரீட் தருவதா ஒத்துக்கொண்டீர்களே அது மறந்து போச்சா!!!!


  "நீங்க ஜென்டில் மேன்" இது எப்பயிருந்து??

  எப்பயிலிருந்து இல்லை கேள்வி தவறு, எதுவரை என்று கேட்டு இருக்க வேண்டும் ???
  டீரிட் தரும் வரை மட்டுமே!!!\\

  எல..குசும்பா...வெள்ளிக்கிழமை உனக்கு நான் கொடுக்குறேன் டீரிட்டு.

  ReplyDelete
 39. \\Fast Bowler said...
  நான் அவனில்லை.\\

  அதான் தெரியுமே...

  ReplyDelete
 40. நான் கற்பூரம் அடிச்சு சொல்றேன்.. 6 மணிக்கு அண்ணாத்த தூங்கிடுவாரு.. இவரு பேச்ச நம்பாதீங்க...
  //

  தூங்கினாதான் பரவாயில்லையே ஆனா வா..எ...என்ன பன்னுவது

  :)

  ReplyDelete
 41. \\அபி அப்பா said...
  ஆமா டெம்பிளேட் மாறிடுச்சு! நல்லா இருக்கா நானே நானே ராத்திரி கண்ணு முழிச்சு செஞ்சேன்.(அடிக்க பிடாது..எதா இருந்தாலும் பேசி தீத்துப்போம்)\\

  நாங்க இத நம்பனுமாக்கும்....
  ம்ஹும்..இதுவும் நல்லாவே இல்ல ;-(

  ReplyDelete
 42. 9. மின்னலும் சாமியாரா போக போவுது
  //

  என்னயிது சின்னபுள்ளதனமா ரங்கமணி கேட்டா கொலையே விழும் இங்கே

  ReplyDelete
 43. மேலும் விவரங்களுக்கு கைப்புள்ளையின் அவுட்டோய்ய்ய் பதிவை பார்க்கவும்

  ReplyDelete
 44. மேலும் விவரங்களுக்கு கைப்புள்ளையின் அவுட்டோய்ய்ய் பதிவை பார்க்கவும்

  ReplyDelete
 45. என்னையும் துரோகினு சொல்லுமோ இந்த பிலாக்கர் உலகம்.....::))

  ReplyDelete
 46. அபி அப்பா said...
  மக்கா! காலைல இருந்த டெம்பிளேட் விட இப்போ உள்ள டெம்பிளேட் பிடிச்சிருக்கு! உங்க கருத்து சொல்லுங்கப்பா!
  //

  சந்துல சிந்து பாடவேண்டாம் தனி பதிவு போடவும் கருத்து சொல்லுகிறேன்(றோம்)

  ReplyDelete
 47. Fast Bowler said...
  நான் அவனில்லை.
  //
  சச்சினும் இல்லை
  கங்குலியும் இல்லை

  அவரும் இல்லை
  இவருமில்லை
  எவருமில்லை

  நான் மட்டும் இருக்கேன் ஆடிகிட்டு

  ReplyDelete
 48. பாஸ்ட்

  பேசாம பாசகார குடும்பத்துகிட்ட இந்தியன் டீமை குடுத்துடலாம் கும்மி அடிச்சியே கெலிச்சிடலாம்

  ReplyDelete
 49. மீட்டிங்னு சொன்னதுக்கே இவ்வளவு பேரு கையெழுத்துப் போட்டுட்டாங்க,.

  நானும் போன்ல கலந்துக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 50. onlinele nan mattum thana? New template nalla irukku. Keep it up. :))))))) ithu puthu teemplate pota Kanmanikku! ungalukku ithan :P

  ReplyDelete
 51. கீதாம்மா நன்றி :))

  ReplyDelete
 52. Sir,

  Any meeting in Kuwait ..?

  ReplyDelete
 53. Sir,

  Any meeting in Kuwait ..?

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))