பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 22, 2007

ஸ்ரீ அவயாம்பிகை சமேத ஸ்ரீ கௌரி மாயூரநாதர்!! (பாகம் # 2)

எங்க ஊர் பெரிய கோவில் போகலாம்ன்னு ஒரு பதிவு போட்டேன். அதன் 2ம் பாகம் இது. அதை படிக்கனும்னா இங்க அழுத்துங்க! பின்ன இங்க வாங்க!


இப்போ நாம மாயூரநாதர் சன்னதிக்கு நுழையும் கோபுர வாசலில் இருக்கோமா, இப்ப நிலைப்படி தாண்டி உள்ளே வந்தா பெரிய உண்டியல் இருக்கே இங்க இருந்து இடது பக்கம் பிரகாரம் நோக்கி போனா எதிரே இருப்பது மயிலம்மன். அவயாம்பிகை மயில் உருவம் கொண்டு மாயூரநாதரை பூ வால் அர்ச்சித்த அம்மன் விக்ரஹம்.கும்பிட்டுப்போமா. இப்போ தெற்கு பக்க பிரகாரத்தில் நடந்து வர்ரோம்.

நமக்கு இடது பக்கம் 63 நாயன்மார்கள் சிலை வரிசையா இருக்கா. வலதுபக்கம் மாயூர நாதர் சந்நதிக்கு போகும் படில ஏறி உள்ளே போனா மாயூரநாதரிடம் நாம் வந்தாச்சு. நாம இப்போ துவாரபாலகர் கிட்டே இருக்கோம். நமக்கு கீழே ஹோம குண்டம். 108 போற்றி சட்டம் போட்டு தூண்ல தொங்குது. தமிழில் அர்ச்சனை செய்யப்படும்ங்குற போர்டு தொங்குது. இதோ கர்ப்பகிரகத்தில இருந்து பார்வதி குருக்கள் வர்ரார் நம்ம பேச்சு சத்தம் கேட்டு. எனக்கு தெரிஞ்சதுல இருந்து ஒடிஞ்சு விழற மாதிரி தான் இருக்கார்.

"அம்பி நன்னாயிருக்கியா, இவாள்ளாம் யாரு, வீடு கட்டினியே சொல்லப்படாதோ?"

"அலமலப்புல மறந்து போயிடுத்து, அடுத்த தடவ கட்டும் போது சொல்லிட்டா போச்சு, இவங்கல்லாம் பிளாக்கர்ஸ் ஒரு அர்ச்சனை பண்ணுங்க"

அவர் அர்ச்சனைய அங்கிருந்தே ஆரம்பிச்சுட்டாரா இப்ப அதோ பாருங்க நம்ம மாயுரநாதர் ஜம்முன்னு உக்காந்து இருக்கார்.

நமச்சிவாய வாழ்க

நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் எம் நெஞ்சில்

நீங்காதான் தாள் வாழ்க

தம்பி ஆயில்யா கும்பிட்டுக்கோ!


இதோ அர்ச்சனை முடிஞ்சு தீபாராதனை பாருங்க! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய

இப்போ பிரசாதம் வாங்கிப்போம்.

"கொழந்த ஷியாமளா கோவில்ல இந்த தபா நவராத்திரிக்கு ஜமாய்சிடனும்ன்னு நான் சொன்னேன்னு அப்பாட்ட சொல்லு"

"ம் ஜாமாய்ச்சுடலாம்"

"சவுந்தரத்துக்கு மொதல மார்க் பச்ச பெல்ட் வேணுமாம், அடுத்த தபா வரச்ச வாங்கியா கொழந்த"

"ம் வாங்கிவந்தா போச்சு"

இப்போ வந்த வழியே வெளியே வருவோம் பிரகாரத்துக்கு இதோ வலது பக்கம் ஸ்ரீ மேதா தெட்ஷிணாமூர்த்தி குரு பிரம்மா சொல்லிப்போமா, அதுக்கு அடுத்து கிழக்கு பார்த்து உட்காந்து இருக்கும் இந்த சந்தன பிள்ளையாருக்கு வினாயகர் சதுர்த்தி அன்னிக்கு மாத்திரம் சந்தன அபிஷேகம் ஆகும் அந்த இடத்தில் தான் சித்தர் கொங்கனவர் சித்தி அடைஞ்சதா சொல்லுவாங்க. அடுத்து முருகன் வள்ளி தெய்வானை சந்நதி. இதோ கும்பிட்ட நிலையில் இருக்கும் இந்த இரண்டு சிலையும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சிலை. அது எட்துக்காக அங்க இருக்குன்னா முருகன் சந்நிதானத்தில் கொடுக்கப்பட்ட தீருநீறு மீந்து போச்சுன்னா அந்த சிலையில தான் நான் இதுவரை கொட்டியிருக்கேன். நீங்களும் அப்படியே கொட்டுங்க.

இப்ப பிரகாரம் சுத்தி வந்தா மாஹாலெஷ்மி சிலை, பிரம்ம லிங்கம் எல்லாம் கடந்து வந்தா வடக்கு பிரகாரத்தில் துர்க்கை அங்கே "சிலையை தொடாதீகள்"ன்னு போர்டு போட்டிருக்கா அதனால துர்க்கை காலடியில் இருக்கும் குங்குமத்தை தொடாமல்(?) எடுத்து வச்சிகிட்டு பக்கத்தில இருக்கும் சண்டிகேஸ்வரரை சொடக்கு போட்டு கூப்பிட்டு எதுக்கு கூப்பிட்டோம்ன்னு அவருகிட்ட சொல்லாமலே வந்துடுவோம்.இடது பக்கம் மரமாடிப்படி மேல ஏறி போனா சீர்காழி சட்டநாதர் இருப்பார். அவர் கூட கோவில் வவ்வால் ஒரு 100 இருக்கும். கை தட்டினா அந்த அமைதியான கோவில்ல சடசடன்னு பறக்கும். அதே போல அபிஷேக நீர் போகும் சின்ன கால்வாய் மேல போடப்பட்டிருக்கும் அந்த பலகையில் டமார்ன்னு குதிச்சு சத்தம் உண்டாக்குவேன் நான் சின்னவனா இருந்த போது. இப்போ அபி குதிக்கிறா!

பின்ன நமக்கு இடப்பக்கம் நடராஜர். சிதம்பர நடராஜரை விட கொஞ்சம் பெரிய உருவம் இவர். அதே அழகு பக்கத்திலே சிவகாமிஅம்மா. என்ன சிதம்பரம் நடராஜர் நகைல ஜொலிப்பார். இவரு மயில்கண் வேஷ்டில உத்திராட்சம் போட்டிருக்கார். அம்மா ஜோரா கொசுவம் வச்சி மடிசார் கட்டியிருக்காங்க.

இப்போ நவகிரகம் கிட்ட வந்தாச்சு! இதோ கோவில் பெட்டகம். எம்மாம் பெரிய பூட்டு. அது தான் சுரங்கம் அது நேரா தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு போவும்ன்னு நான் சின்ன பையனா இருந்த போது எனக்கு விடப்பட்ட கதையையே நானும் உங்களுக்கு விடுகிறேன். இப்போ நவகிரகத்தை சுத்தி வருவோம். இது தான் அருணாசலேஸ்வரர், இது கால பைரவர் இப்போ திரும்பவும் உண்டியல் இருக்கும் இடம் வந்தாச்சு! இப்போ சாஷ்டாங்கமா விழுந்துட்டு வெளியே வருவோம்.

வெளியே வந்து இடப்பக்கம் வருவோம். அதோ எதிக்க தெரியுதே அதான் கோயில் ஆபீஸ். இவரு தான் முத்துகுமரசாமி எழுத்தர்.

"மாமா மேனேஜர் இல்லியா"

"மடத்துக்கு போயிருக்கார்டா தம்பி, இவங்களுக்கு சாப்பாடு டோக்கன் எடுத்து வச்சிடவா"

"ம் வச்சிடுங்க அவயாம்பா பார்த்துட்டு வந்து சாப்பிட்ட்கறோம்"

"சீக்கிரம் போங்க உச்சிகாலம் ஆக போகுது"

"அண்ணாதொர அண்ணன் எங்க?"

"அவன் அவேம்பா சந்நதில இருக்கான்"

அண்ணாதொரயும் கோவில் எழுத்தர் தான்.

அடுத்து கணக்கடி வினாயகர். இது தான் நான் சின்ன பையனா இருந்தப்ப ஆபீஸ். இப்போ குத்தகைகாரங்க அளக்கும் நெல் கொட்டி வைக்க இந்த இடம். யானை சைஸ்க்கு எத்தனை கொட்டி வச்சிருக்காங்க. அதன் மேல சாணிப்பாலால கோடு கோடா போட்டிருக்காங்க ஏன் தெரியுமா? கொஞ்சம் நெல் எடுத்தாலும் அந்த சாணிப்பால் கோடு சரிஞ்சுடும். ஆஹா திருடு போயிடுச்சுன்னு மேனேஜர் எல்லாரையும் கூப்பிட்டு ரிவீட் அடிப்பாரு. ஆனா சின்ன வயசுல இந்த கோட்டை நான் அழிக்காம போனதே இல்ல. பல தடவ மாட்டி ஒதை வாங்கினதெல்லாம் இப்ப எதுக்கு.

இதோ கணக்கடி வினாயகர் முன்னால ஒரு கருப்பு மார்பிள் போட்டிருக்கே அதிலே ஆள்காட்டி விரலால நாம ஏதாவது கணக்கு போட்டு டேலி பண்னனும். (இது ஒண்ணும் சட்டம் இல்ல ஆனா எல்லாரும் செய்வதால் நானும் செய்வேன்) அப்படித்தான் 37+ 41= ன்னு போட்டுட்டு எல்லா விரலையும் விட்டு வெரல் பத்தாம திண்டாடிக்கிட்டு இருந்தா போது என் சின்ன அக்கா தலைல நொட்டுன்னு தட்டி "டேய் 50+50=100ன்னு ஈஸியா போட்டு டேலி பண்ணு. இதுல தப்பா போட்டா பரிச்சைல முட்ட தான் வரும்"ன்னு உபதேசிக்கப்பட்டு 50+50=100 ன்னு ஆரம்பிச்சு பின்ன எதுக்கு ரிஸ்க் அதை விட ஈஸியா 2+2=4 ஊகூம் இதவிட சின்ன கணக்கா போடுவோம்ன்னு 0+0=0 ன்னு போட்டு ஓக்கேன்னு பிள்ளையாரும் அதே ஆன்சரை பரிட்சையிலும் வரவழைச்சார்.

அதனால இப்போ நீங்களும் ஈஸியா ஒரு கணக்கு போட்டுவிட்டு வாங்க அடுத்தது அவயாம்பா சந்நதிக்கு போகணும்!

மீதி அடுத்த பாகத்தில்:


30 comments:

 1. ஒரு வழியா 50 வது போஸ்ட் போட்டாச்சு!

  ReplyDelete
 2. மீ த ஃபர்ஸ்ட்!

  50 வது காமெடி போஸ்ட்க்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. 50 க்கு வாழ்த்துக்கள் ...
  அய்யோ நானும் எதுக்கு ரிஸ்க்குன்னு ஈஸி கணக்குதான்போடுவேன் அதுல..
  ஆனா 0+0 இல்ல..கொஞ்சம் புத்திசாலி இல்லயா
  அதுனால 2+2 தான். :)

  ReplyDelete
 4. அய்..அப்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அபி அப்பா நெலம இப்படி ஆயிடுச்சே யாராச்சும் காப்பாத்துங்களேன்
  ஓம் அபி அப்பாய நமஹ
  ஓம் தொல்ஸ் ஆய நமஹ
  ஓம் பக்தி பூஷணமாய நமஹ

  ReplyDelete
 5. வாங்க சிபி! இது காமடி போஸ்ட்டா? நல்லா இருங்கப்பா, உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் மொக்கை பதிவு போட்டாதான் சரியா வரும்!:-))

  ReplyDelete
 6. வாங்க முத்துலெஷ்மி! 10 படிக்கும் போதெல்லாம் 50+50 பின்ன +2 போன பின்ன 100+100 இப்படியே தான் இப்பவும் அந்த கூத்து நடக்குது அங்க!

  ReplyDelete
 7. வாங்க டீச்சர்! நமக்கு மண்டைல சரக்கு தீரலை! 50 வது பதிவாச்சேன்ன்னு கோவில் பதிவுங் மேடம்! வர்ரேன் சீக்கிரமா ஒரு காமடி பதிவோட ஓக்கே!:-)))

  ReplyDelete
 8. 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அபி அப்பா!

  ReplyDelete
 9. 50??? வாழ்க வாழ்க ஆனா க்கொஞ்சம் ஸ்லோ?ஏன்?
  அடிச்சு ஆடுங்க
  கண்மணி டீச்சர்

  ReplyDelete
 10. 50 வது பதிவு வாழ்த்துக்கள்.

  அதென்ன ஆட்டய நீங்களே ஆரம்பிச்சுட்டீங்க!...

  ReplyDelete
 11. வாங்க ஆவிஅம்மணி! "ஆனந்தவிகடனில் அபிஅப்பா" பதிவிலே வந்தீங்க! அதுக்கு பின்ன இப்பதான் வர்ரீங்க! நன்றி!

  ReplyDelete
 12. என்ன டீச்சர் பண்றது ஆணி அதிகம்! வர்ரேன் வர்ரேன் உங்க பாதம் தொடர்ந்து!

  ReplyDelete
 13. வாங்க ஜெ.கே, பதிவில சொல்ல மறந்துட்டேன் 50ன்னு அதான் நானே ஆட்டைய ஆரம்பிச்சுட்டேன்!

  ReplyDelete
 14. 50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

  எல்லாரும் சுற்றுலா தொடர் எழுதறீங்க..கலக்குங்க

  ReplyDelete
 15. 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;-)

  ReplyDelete
 16. இந்த பகுதியும் அருமை ;-)

  ReplyDelete
 17. மொக்கைன்னு நினைச்சி வந்தேனே? இப்டி பக்திப்பழமா இருக்கு.. :(
  போங்க உங்க கூட டூஊஊஊஊஊ!

  ReplyDelete
 18. அதுக்குள்ள 50ஆ. 5000 ஆக வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. 50க்கு வாழ்த்துக்கள்!
  ஏனோ ஐம்பதிலும் ஆசை வரும் பாடல் ஞாபகத்துக்கு வருது! :-)
  50+50 பிள்ளையார் கிட்ட போட்ட்படி அடுத்த 50க்கு ரெடி பண்ணுங்க!

  அபயாம்பிகையைத் தான் செல்லமா அவயாம்பிகை-ன்னு சொல்றீங்க போல! அஞ்சல் நாயகியைப் பார்க்க ஆசை கிளப்பி விட்டுட்டீங்களே! :-)

  தியாகராஜரும் முத்துசாமி தீட்சிதரும் சந்தித்த தலம் அல்லவா? தொடருங்கள்....கைப்பிடித்து கூப்பிட்டுச் செல்வது போல் உள்ளது அபி அப்பா!

  ReplyDelete
 20. வாங்க மங்கை! வருகைக்கு மிக்க நன்றி!

  கோபிதம்பி! வாப்பா,

  காயத்ரி! அப்பப்ப சாமியும் கும்பிட்டுக்கனும்பா!

  வாங்க சின்ன அம்மனி! வாழ்த்துக்கு நன்றி!

  ReplyDelete
 21. வாங்க கேஆரெஸ்! அபயாம்பிகை இல்லை அவயாம்பிகை,அம்சொல்நாயகி இது சரி. அம்சொல்நாயகி மறுவி அஞ்சல் நாயகியா ஆயிடுத்து. ஆனா நாங்க செல்லமா "அவேம்பா"ன்னு கூப்பிடுவோம்!

  முத்துசாமி தீட்ஷதர் வருகை பற்றி தெரியும் ஆனா தியாகய்யர் வருகை தெரியலை. கேட்டு தெரிஞ்சுக்கறேன்!

  ReplyDelete
 22. அட, 50 மொக்கையா? சாரி, ஹிஹிஹி, இது மட்டும் மொக்கை இல்லை! மத்ததைச் சொன்னேன். வாழ்த்துக்கள். 50 மொக்கை போட்டாச்சுன்னு ஒரு மெயில் தட்டக் கூடாது? விழா எடுத்திருக்கலாம், போகட்டும், கோபிநாத் கிட்டே சொன்னால் துண்டு போட்டு மறுபடி வசூல் பண்ணுவார், இங்கே அனுப்பிடுங்க, நான் விழா எடுத்துடறேன்! :P

  ReplyDelete
 23. நீங்க வாங்கின மார்க்குதான் பதிவு எழுதற லட்சணத்திலேயே தெரியுதே? போட்டு வேறே காட்டணுமா? தலை எழுத்து! உங்க டீச்சருங்களுக்குச் சொன்னேன்! :P

  ReplyDelete
 24. Ay mavane, Ni dhan patrikai unga mamanarka kodukalai. Ella pathrikeyam karthi kadaila unnun erruku. Ni eppadi namba kurukaluku kuduppe. Vene avara eppa vandu vankika sollu apsarala.

  (Please write it in tamil and post it)

  - Korangu Radha

  ReplyDelete
 25. Superb! Keep it up! I have some photos which was taken very recently also. Pl. drop a mail to rajni_ramki@yhaoo.com.

  ReplyDelete
 26. //இதோ கும்பிட்ட நிலையில் இருக்கும் இந்த இரண்டு சிலையும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சிலை. அது எட்துக்காக அங்க இருக்குன்னா முருகன் சந்நிதானத்தில் கொடுக்கப்பட்ட தீருநீறு மீந்து போச்சுன்னா அந்த சிலையில தான் நான் இதுவரை கொட்டியிருக்கேன்//
  நானுந்தான்..!

  //இதோ கோவில் பெட்டகம். எம்மாம் பெரிய பூட்டு. அது தான் சுரங்கம் அது நேரா தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு போவும்ன்னு //
  அது அம்பாள் கோவிலுக்கு போற சார்ட்கட்தானே?


  //எதுக்கு ரிஸ்க் அதை விட ஈஸியா 2+2=4 ஊகூம் இதவிட சின்ன கணக்கா போடுவோம்ன்னு 0+0=0 ன்னு போட்டு ஓக்கேன்னு பிள்ளையாரும் அதே ஆன்சரை பரிட்சையிலும் வரவழைச்சார்.//
  டிரேட் மார்க் பதிச்சாச்சா?

  ReplyDelete
 27. greetings to yr fiftieth post Abi Appa.
  Kovil tharisanam ad the conversations with the archakar were good.:))

  ReplyDelete
 28. Really i enjoyed that kanaku pillayar

  ReplyDelete
 29. நமச்சிவாய வாழ்க -->
  நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

  please read http://www.vallalyaar.com/?p=409

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))