பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 6, 2007

சினிமாவுக்கு போவோமா?

எங்க குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம். ஏகப்பட்ட பெரியம்மாக்கள், சித்திகள் எல்லாருக்கும் வச வசன்னு பசங்க அந்தந்த ஏஜ் குரூப்பிலே செட்டு செட்டா திரிவோம். இதிலே சினிமா பார்க்க போவது இருக்கே ஒரு திருவிழாவுக்கு போவது போலத்தான்.

அதிலே ஒரு பெரியம்மா அவங்க தான் சினிமாவுக்கு சென்சார் ஆபீஸர். அவங்க எந்த படம் வந்தாலும் முதல் காட்சியே பார்த்திடுவாங்க. பின்ன அந்த படம் குடும்பத்தோட பார்க்கலாமா இல்லியான்னு முடிவு பண்ணிட்டு எல்லா மருமகளையும் (அதாங்க எங்க் அம்மா/சித்திகள்) அழைச்சுட்டு போக ஒரு ஞாயிற்று கிழமையை தேர்ந்து எடுத்து அதுக்கு 3 நாள் முன்னமே மெதுவா சாயந்திரம் 4.30க்கு எங்க வீட்டுக்கு வருவாங்க. அவங்களை பாத்தாலே எங்களுக்கு குஷி தான்.

வந்து மெதுவா அம்மாகிட்ட பார்த்து வந்த படத்தை சிலாகிச்சு பேசி அம்மாவுக்கு ஆசை காட்டி பின்ன "ஹூம் உன்னய அழச்சிட்டு போலாம்ன்னு பார்த்தா உன் வூட்டுகாரு கிட்ட கேக்கனும்ன்னு சொல்லுவ"ன்னு மெதுவா பிட்ட போடுவாங்க. அதுக்குள்ள நான், தம்பி, அக்கால்லாம் அம்மாவை சொறிய ஆரம்பிச்சுடுவோம். அப்ப அப்பா ஆபீஸ்ல இருந்து உள்ள வருவாங்க. உடனே பெரியம்மா "வாங்க தம்பி என்ன தலை வலி மாதிரி தெரியுதே கொஞ்சம் இருங்க காபி போட்டு தாரேன்"ன்னு அப்பாவை கூலாக்கி பர்மிஷனும் வாங்கிடுவாங்க.

பிறகு என்ன நான் வாரு வச்ச டிராயர் கீழே விழாதுன்ற நம்பிக்கைல சர்ருன்னு பி.டி உஷா ரேஞ்சுல ஓடி மீதி அத்தனை பெரியம்மா, சித்தி வீட்டுல எல்லாம் தகவல் சொல்லிட்டு அன்னிக்கு ராத்திரியே எங்க வீட்டு வாசப்படில போர்டு மீட்டிங்ல என்ன தீர்மானம் நிறைவேற போவுதுங்ற் ஆவல்ல மாங்கு மாங்குன்னு அசோகர் மரம் நட்ட பாடத்தையே 108 தடவை சத்தம் போட்டு படிப்பேன். சின்ன அக்கா ஓவர் ஆக்டிங்க நடந்து நடந்தெல்லாம் படிக்கும். அப்படி படிக்கலைன்னா சினிமாவுக்கு கிடையாதுன்னு மிரட்டல் வேற அம்மா கிட்ட இருந்து வரும்.

ராத்திரி 8.00 மணிக்கெல்லாம் எங்க வீட்டு முற்றத்துல இல்லாட்டா வீட்டு வாசல் படியுலேயே எல்லா சித்தியும், பெரியம்மாக்களும் ஆஜர் ஆகிடுவாங்க. அந்த மூத்த பெரியம்மா தான் தலைமை. யார் யார் முறுக்கு சுட்டு எடுத்துக்கனும் இல்லையா பரவாயில்ல கூழ்வடகமாவது சுட்டு எடூத்துக்கனும், யார் தண்ணி கூஜாவுக்கு பொருப்பு எல்லம் முடிவு செய்யப்படும். எடுத்த உடனே அம்மா "நான் தண்ணி கூஜா தூக்க மாட்டேன் எனக்கு வெக்கமாயிருக்கு"ன்னு ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்கும் பெரியம்மா சளைக்க மாட்டாங்க. "அதுக்கு சின்ன மாமியை கூபிட்டுப்போம்"ன்னு ஐடியா திலகமா ஆயிடுவாங்க. பின்ன வயசுக்கு வந்த அக்கா எல்லாம் எந்த வீட்டிலே விடனும் அவங்க பாதுகாப்பு படையா எந்த மாமியை போடனும் எல்லாம் முடிவு செய்யப்படும். ஆம்பிளை துணை எந்த சித்தப்பா சினிமாவுக்கு ன்னு முடிவு பண்ணி அந்த சித்தப்பாவுக்கு தகவல் தரப்படும்.அதுக்கு பின்ன திரும்பவும் அந்த பெரியம்மா அந்த படத்தின் கதையை அழகா சொல்லி அத்தனை தாய்குலத்தையும் அழவச்சி மீட்டிங் முடிப்பாங்க.

அடுத்த 2 நாள் நாங்க வீட்டை எல்லாம் சுத்தமாக்கி அம்மாவுக்கு பதில் அக்கா முற்றம் கழுவி, நான் அலக்கு குச்சியால சாக்கடை குத்தி ஒரே ரகளையா இருக்கும். அம்மா அதுக்குள்ள முறுக்கு சுத்தி பிரிட்டானியா டின்ல போட்டு எங்களுக்கு எட்டாத தூரத்துல வச்சிடுவாங்க.

சனி இரவு தூக்கமே வராது. எப்படியோ தூங்கி காலை எழுந்தது முதலே பரபரப்பா ஆகிடுவோம். செக்யூரிட்டி சித்தப்பாவை கூட்டி வருவது முதல் கூஜா பாட்டியை தாஜா பண்ணுவது வரை ஜரூரா நடக்கும்.

மாலை 4.00க்கு எல்லாம் எங்க வீட்டுல கூடிடுவாங்க. அதுல நீ எந்த கலர் புடவை நான் எந்த கலர் புடவை எல்லாம் முதல் நாள் முடிவுசெஞ்ச மாதிரி வந்து பார்த்தா ஏதாவது ஒரு சித்திக்கு புடவை சுமாரா இருக்கும்.அவங்க எல்லார் கிட்டயும் அவசரமா டாய்லெட் போகனும்ன்னு வீட்டுக்கு ஓடுவாங்க. திரும்பும் போது வேற பளிச் புடவைல வருவாங்க. "இவ இதுக்கு தாண்டி போயிருக்கா"ன்னு கோரஸா திட்டு விழும். அது வரை சும்மா இருக்கும் அம்மா எல்லாரையும் ஒரு நோட்டம் விட்டுட்டு உள்ளே போய் பன் கொண்டையோட வெளியே வந்து ஒட்டு மொத்த வயிதெரிச்சலையும் கொட்டிப்பாங்க.(முன்னமே சொல்லியிருந்தா நானும் போடிருப்பன்ல) பின்ன அதே சித்தி டாய்லெட் போக பர்மிஷன் கேட்டு திட்டு வாங்கிகிட்டு கிளம்புவோம். வயசுக்கு வந்த அக்கா எல்லாம் காலைலயே ஒருவீட்டுல கூடிடுவாங்க. ஒரே கும்மியும் கூட்டாஞ்சோறுமா அந்த வீடு கலகலன்னு இருக்கும். ரெண்டு மூணு பாட்டிங்க செக்யூரிட்டி அந்த வீட்டுக்கு.

பசங்கலா ஒருத்தர் கைய ஒருத்தர் பிடச்சுகனும், வெளிய வந்தா ஒரு தடவை போயிட்டு வந்துடுங்க அது இதுன்னு பெரியம்மா பதிவர் பட்டறை பாலா மாதிரி பீலா வுட்டுகிட்டு இருப்பாங்க!

கிளம்பி தியேட்டர் போகும் வரை எங்களை நடத்தி கூட்டிகிட்டு போனவங்க தியேட்டர் வாசல்ல பொதுகுழுவில முடிவு பண்ணிய மாதிரி டக் டக்ன்னு ஆளுக்கு ஒரு 4,5 வயசு பசங்களை தூக்கிப்பாங்க. அதுல என் வயசு பசங்க எல்லாம் அப்பு மாதிரி நடக்கனும். வேற என்ன டிக்கெட் வாங்காம இருக்கும் கயமைதான்.

இப்படியா உள்ள வந்து உட்காந்தா பியர்லெஸ்ஸின் மூத்திர நாத்தம் ஒரு பொருட்டாவே இருக்காது. டிக்கெட் கிடைச்சதே தள்ளுபடி புடவை வாங்கின சந்தோஷத்துல இருப்பாங்க எல்லாரும். நான் மட்டும் கரெக்டா முறுக்கு கூடை வச்சிருக்கும் சித்தி பக்கத்து உக்காந்துப்பேன். படம் ஓடும் போது மொத்தம் 2 தடவை முறுக்கு சப்ளை நடக்கும். ஆனா சித்தியை நைஸ் பண்னி நான் மட்டும் படம் முழுக்க தின்பேன். சத்தம் வராம இருக்க சப்பியே திங்க்கும் கொடுமை ரொம்ம கொடுமை. தியேட்டரே சிரிக்கும் போதோ சண்டை காட்சியின் போதோ நறுக் ன்னு நொருக்கனும்.

திரும்பி வரும் போது ஒத்தை மாட்டு வண்டி பேரம் பேசி வருவோம். அதன் பின் 1 மாசத்துக்கு அந்த நெனைப்பாவே இருக்கும்.

ஆனா இப்ப இந்த காலத்து பசங்க கிட்ட மிஸ்ஸிங். தியேட்டர் போகலாமான்னு அபிபாப்பாகிட்டே கேட்டா " I hate theater, very borepaa sweting, rush oh no...our sofa is the best to watch a film" ன்னு சொல்லிட்டு போகுது. அதே போல நாமும் மாறியாச்சு. அந்த பெரியம்மா அண்ணன் வேலை பார்க்கும் எல்லா நாட்டுக்கும் சுத்திகிட்டு இருக்காங்க, சினிமா போறீங்கலான்னா மையமா சிரிக்கிறாங்க. அது போல நானும் 3 மணி நேரம் உக்கார முடியலை.

சிவாஜி ரிலீஸ் அப்போ முதல் நாள் எல்லா பிரண்ட்ஸ்ம் போன் போட்டு போட்டு உடனே தியேட்டர்க்கு வா வா முதல் நாள் பார்க்கலைன்னா சரித்திரத்துல உன் பேர் வராதுன்னு கூப்பிட மொட்டை பாஸ் பகுதி முதல்ல பார்த்தேன், பின்ன அடுத்த ஷோவிலே பல்லேலக்கா பகுதி பார்த்தேன், அதுக்கு அடுத்த ஷோவிலே சாலமன் பாப்பையா வரும் பகுதி பார்த்தேன் இப்படியாக முதல் நாளில் 4 தடவை பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டப்ப "எடிட்டிங் சரியில்ல"ன்னு சொன்னேன்!

28 comments:

 1. கொசுவத்தி சூப்பர்

  ReplyDelete
 2. nextuu meetingle naame paasakkaara kudumbam ellaam sernthu moviekku povomaa? ;-)

  ReplyDelete
 3. நல்ல எழுத்து நடை....

  ReplyDelete
 4. /வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டப்ப "எடிட்டிங் சரியில்ல"ன்னு சொன்னேன்!//

  இந்த இடத்திலே ஹீரோ டயலாக் சூப்பர்....

  ReplyDelete
 5. //சிவாஜி ரிலீஸ் அப்போ முதல் நாள் எல்லா பிரண்ட்ஸ்ம் போன் போட்டு போட்டு உடனே தியேட்டர்க்கு வா வா முதல் நாள் பார்க்கலைன்னா சரித்திரத்துல உன் பேர் வராதுன்னு கூப்பிட மொட்டை பாஸ் பகுதி முதல்ல பார்த்தேன், பின்ன அடுத்த ஷோவிலே பல்லேலக்கா பகுதி பார்த்தேன், அதுக்கு அடுத்த ஷோவிலே சாலமன் பாப்பையா வரும் பகுதி பார்த்தேன் இப்படியாக முதல் நாளில் 4 தடவை பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டப்ப "எடிட்டிங் சரியில்ல"ன்னு சொன்னேன்!//

  super.... :-)))

  ReplyDelete
 6. என்ன கொடுமை அபிஅப்பா இது?...

  கமெஸ்ட்ஸ்ல 2 தானே இருக்குனு Post a Comment கிளிக் பண்ணி உள்ள வந்தா 6 கமெண்ட் இருக்கு.

  எல்லாம் ஒரே மர்மமா இருக்கு.

  ReplyDelete
 7. மைபிரண்ட்,குசும்பன், ராம் மிக்க நன்றி நாளை பதில் சொல்கிறேன், இப்ப கிளம்பறேன்!

  ReplyDelete
 8. மிகவும் ஒரு நல்லபகிர்வு. எனக்கும் இப்படி ஒரு கூட்டமாகப்போய் படம்பார்த்த அனுனுபவங்கள் உண்டு அதைமீட்ட முடிந்தது.

  ReplyDelete
 9. ;-)))))))))))

  (இன்னும் பதிவை படிக்கவில்லை)

  ReplyDelete
 10. \\பி.டி உஷா ரேஞ்சுல ஓடி மீதி அத்தனை பெரியம்மா, சித்தி வீட்டுல எல்லாம் தகவல் சொல்லிட்டு \\

  தல...அப்போதே ஆரம்பிச்சிட்டிங்களா!!!.....இதை ;-))

  ReplyDelete
 11. \\பசங்கலா ஒருத்தர் கைய ஒருத்தர் பிடச்சுகனும், வெளிய வந்தா ஒரு தடவை போயிட்டு வந்துடுங்க அது இதுன்னு பெரியம்மா பதிவர் பட்டறை பாலா மாதிரி பீலா வுட்டுகிட்டு இருப்பாங்க!\\

  ;-))))

  ReplyDelete
 12. \\திரும்பி வரும் போது ஒத்தை மாட்டு வண்டி பேரம் பேசி வருவோம். அதன் பின் 1 மாசத்துக்கு அந்த நெனைப்பாவே இருக்கும்.\\

  தல

  அட்டகாசம் பண்ணியிருக்கிங்க அந்த காலத்துல....பதிவிலும் தான் ;-))

  ReplyDelete
 13. \\ இராம் said...
  /வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டப்ப "எடிட்டிங் சரியில்ல"ன்னு சொன்னேன்!//

  இந்த இடத்திலே ஹீரோ டயலாக் சூப்பர்.... \\

  எல மாப்பி...பதிவை படிக்கவில்லையா??

  ReplyDelete
 14. ஏசி ஆபிஸ்,பிராட் பேண்ட் கனெக்ஷன் பில்டிங் டிராயிங்க்ஸ் பண்ண வசதியா லேட்டஸ்டு கம்ப்யூட்டரு இதெல்லாம் கொடுத்து நேர நேரத்துக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து,கம்பெனிக்கு நல்ல கம்பெனி கொடுப்பாங்கன்னு அரபிக்காரன் எல்லா வசதியும் செஞ்சு வைச்சா, சொந்த கதைய யோசிச்சு யோசிச்சு பிலாக்க - இதெல்லாம் செய்றீங்களே நியாயமாப்பா? அரபிக்காரன ஆண்டவன் தான் காப்பாத்தணும்!

  ReplyDelete
 15. //*சித்தியை நைஸ் பண்னி நான் மட்டும் படம் முழுக்க தின்பேன். சத்தம் வராம இருக்க சப்பியே திங்க்கும் கொடுமை ரொம்ம கொடுமை. தியேட்டரே சிரிக்கும் போதோ சண்டை காட்சியின் போதோ நறுக் ன்னு நொருக்கனும்.*//

  என்ன கொடுமை சார் இது....??

  இப்பவும் பழக்கத்தினால், வீட்டுல கூட முறுக்கு அப்படி தான் சாப்பிடுறீங்க அப்படின்னு..ஒரு குருவி சொல்லுதே...அது உன்மையா...

  ReplyDelete
 16. //சத்தம் வராம இருக்க சப்பியே திங்க்கும் கொடுமை ரொம்ம கொடுமை. தியேட்டரே சிரிக்கும் போதோ சண்டை காட்சியின் போதோ நறுக் ன்னு நொருக்கனும்.//

  அட நீங்களுமா?நாங்க பாப்கார்னை வாயிலே ஊறவச்சி சாப்பிடுவோம் இல்லாட்டி பக்கத்து சீட்காரங்க முறைப்பாங்கலே...[நாங்க ரொம்ப ரீஜண்ட் பார்ட்டியாக்கும்]

  ReplyDelete
 17. முதல் பின்னூட்டம் என்னோடதா இருக்கணும்கிற என்னோட ஆசையைக் கெடுத்துட்டுப் போஸ்டா போடறீங்க போஸ்ட்? நறநறநறநறநறநறநற

  ReplyDelete
 18. "சத்தம் வராம இருக்க சப்பியே திங்கும் கொடுமை" எல்லார் வீட்டிலும் உண்டு! :)))))))))

  ReplyDelete
 19. Excellent. It brought so many nice memories. Hats off to you.

  Ravi

  ReplyDelete
 20. //\\பி.டி உஷா ரேஞ்சுல ஓடி மீதி அத்தனை பெரியம்மா, சித்தி வீட்டுல எல்லாம் தகவல் சொல்லிட்டு \\

  //தல...அப்போதே ஆரம்பிச்சிட்டிங்களா!!!.....இதை ;-))

  கோபி கலக்கல்! :))))))))

  ReplyDelete
 21. நல்லாருக்கு அண்ணா!!

  (நான் பதிவை படிச்சிட்டு தான் சொல்றேன்னு எல்லாருக்கும் இங்கன சொல்லிக்கறேன் .):)

  ReplyDelete
 22. பதிவை நானும் ரெண்டுமுறை படித்துவிட்டே பின்னூட்டமிடுகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..

  அருமையா இருக்கு கொசுவத்தி..அப்பமே உங்க குடும்பத்து AIR நீங்க தானா ஆகா !

  ReplyDelete
 23. நானும் அபிபாப்பா கட்சிதான். வீட்ல இருந்து சோபாவுல உக்காந்து வசதியா படம் பாக்கறதுதான் சொகம். எப்பவாச்சும் தான் தியேட்டர்ல போய் பாக்கறது

  ReplyDelete
 24. சினிமா பாத்த கதையைவிட சினிமா போன கதை சூப்பர்!!
  பழைய நினைவுகள் எழுந்தன.
  இப்ப நாங்கெல்லாம் தியேட்டர் போய்
  பாக்ரதில்லை. ஒன்லி ப்ரார்த்தனா தான்!!

  ReplyDelete
 25. சத்தம் வராம இருக்க சப்பியே திங்கும் கொடுமை" எல்லார் வீட்டிலும் உண்டு! :)))))))))--hahahaha

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))