பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 14, 2007

பக்தி FM ல் பாம்பப்பனின் அட்டகாசங்கள்!

அமீரக தமிழர்களை தவிர மற்ற உலக தமிழர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்ட வழியில்லை. லோ பிரஷர் உள்ளவங்க நலனுக்காகவே நடத்தப்படும் FM இது இங்கே. சர்ர்ர்ர்ன்னு பிரஷர் எகிறும். நான் காலை 6.20 முதல் 7.00 மணி வரை மட்டுமே கேட்பேன். வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.

பாம்பப்பன்: காலையில் சாலையில் செல்லும் நீங்கள் அதை சோலையாக மாற்றி மாலையாக ஆக்கி மாலையில் வீடு திரும்ப(அடங்கொய்யால இதுக்கு தல கவிதையே பெட்டர்) வாழ்த்தும் பாம்பப்பன் ஹஹ் ஹஹ் ஹா (நடுவில என்ன சிரிப்பு) இன்னைக்கு SMS கேள்வி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிச்சு வெளி வந்த பிரம்மாண்ட படத்தின் பெயர் என்ன? ஹஹ் ஹஹ் ஹா இப்ப லைன்ல இருக்கும் ரசிகர் கிட்ட பேசுவோமா?

ஹலோ பக்தி FM ல இருந்து பாம்பப்பன் நீங்க யாரு?

வணக்கம் பாம்பப்பன் சார் நான் தோப்புதுறை ஜமால் பேசறேன்

வாங்க தோப்புதுறை ஜமால் நீங்க காலையில் சாலையில் போகும் போது சோலை........... ஹஹ் ஹஹ் ஹா என்ன சொல்ல வர்ர்றீங்க

பாம்பப்பன் சார் நல்ல அறிவுபூர்வமான கேள்வி ஆனா ஒரு சின்ன குளூ குடுத்தீங்கன்னா நல்ல இருக்கும்

வாழ்த்துக்கு நன்றி, இப்படி அறிவு பூர்வமா கேட்டு தமிழர்களின் அறிவை வளர்ப்பதே நாம் பக்தி FM மின் கடமை, நீங்க கேட்டதுக்காக ஒரு சின்ன க்ளூ அந்த படத்தின் முதல் எழுத்து சி சரி நேயர்களே இது வரை 15 பேர் சரியான விடை அனுப்பி இருக்காங்க வாங்க பாட்டுக்கு போகலாம்

பாட்டு !@#$%^^&*()_++_)(*&^%$#@!

பாம்பப்பன்: என்ன நேயர்களே பாட்ட நல்லா இருந்துச்சுல்ல இப்ப அடுத்த நேயர் லைன்ல இருக்கார் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா

ஹலோ பக்தி FM ல இருந்து பாம்பப்பன் நீங்க யாரு?

வாணக்கம் பாம்பப்பன் சார் நானு ஜேபலலில இருந்து கோபி

ஹஹ் ஹஹ் ஹா வாங்க கோபி என்ன பதில் தெரிஞ்சுதா? சாலையில் போகும் நீங்க சோலை காலை மாலை (கன்றாவி தலை எழுத்து)

சார் இன்னுமொறு சின்ன குளூ தாங்க சார்

சரி கோபி படம் 3 எழுத்து அதில கடைசி எழுத்து ஜி சர் நேயர்களே இப்ப செய்தி நேரம்

பக்தி FM செய்திகள் வாசிப்பது பாம்பப்பன், பாமக தலை வர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதியை கம்மனாட்டி என்று திட்டினார் ஆனாலும் தொடர்ந்து ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பேன் என கூறினார். வடக்கு வல்வெட்டிதுறையில் கந்த சாமி ராசப்பன் மகிந்த ரசபக்சே அரசால் கொல்லப்பட்டார். சானியா 1 இடம் முன்னேறினார்.!@#$%^&*()_++_)(*&^%$#@

இத்துடன் செய்திகள் முடிவடைந்தது...ஹஹ் ஹஹ் ஹஹ்ஹா( நீ செய்தி வாசிச்ச லெட்சனத்துக்கு சிரிப்பா)

அடுத்த நேயர் யாருன்னு பார்ப்போமா ஹல்லோ பக்தி FM ல இருந்து பாம்பப்பன் நீங்க யாரு

வணக்கம் பாம்பப்பன் சார் நானு முத்துபேட்டை தாஜுதீன் பேசறேன் SMS கேள்விக்கு இன்னும் ஒரு குளூ தர முடியுமா

கண்டிப்பா தரேன் எப்படியாவது அமீரக தமிழர்களிடம் அறிவை வளர்ப்பதே பக்தி FM மின் முதல் நோக்கம் என்பது உலகம் அறிந்த ஒரு விஷயம். ஹஹ்ஹஹ் ஹா நடு எழுத்து "வா" இப்ப அடுத்த பாட்டுக்கு போவோமா

***********************************************************************************************
போதும் நான் காலையில் அனுபவிக்கும் சந்தோஷத்தை தமிழ்மணமும் அனுபவிக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் எழுத பட்டதே இந்த பதிவு, பாதிக்க பட்டவங்க யாராவது இருந்தா வந்து என் கண்ணை தொடச்சிட்டு போங்கப்பா. இதன் தாக்கம் ஆபீஸ் ல 2 மணி நேரம் நீடிக்குது தினமும். பின்ன என்னாத்துக்கு கேக்குற ஆஃப் பண்ண வேண்டியது தானேன்னு கேட்பவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்!

14 comments:

 1. //பின்ன என்னாத்துக்கு கேக்குற ஆஃப் பண்ண வேண்டியது தானேன்னு கேட்பவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்!//

  நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகனும். இல்லைனா பதில் சொல்ல வைப்பேன்...

  ReplyDelete
 2. மேகம்..மோடமா இருக்கே...மழை வரும்மோ....

  ReplyDelete
 3. அபி அப்பா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே அமீரக பக்திFM நாங்களும் கேட்பதுண்டு :(

  ஆனா ஒரிஜினலா சிலோனிலிருந்து ஒலிபரப்பாகிற சக்திFM கேட்டா நீங்க இப்படியெல்லாம் புலம்பியிருக்க மாட்டீங்க!!

  முடிந்தால் இணையத்தினூடாக கேட்க முயற்சிக்கவும்!!!!!

  www.shakthifm.com

  ReplyDelete
 4. இருந்தாலும் இவ்வளவு கடினமான கேள்விகளைக் கேட்டு, மூன்றெழுத்துப் படத்தின் மூன்று எழுத்துக்களை மட்டும் க்ளுவாக கொடுத்தால் எப்படி விடை கண்டுபிடிக்க முடியும்?

  நாங்கல்லாம் காலைத்தொழுகை முடித்து விட்டு படுத்தால் 7.30 - 8.00 மணிக்குதான் கண்விழித்துப் பார்ப்போம். தப்பிச்சுடுவோம்ல!

  ReplyDelete
 5. நல்ல வேளை இந்த கருமத்தை கேட்கிறதையே விட்டாச்சு. நீங்க இனிமே காலையில் வானொலி கேட்பதற்கு பதிலாக இரவு 11-11.50 647 AM கேளுங்க. :-)

  ReplyDelete
 6. எனக்கு இப்போ ஆத்திரமாத் தான் வருது. உங்களை யாரு இதெல்லாம் கேட்கச் சொன்னாங்க? :P

  ReplyDelete
 7. யோவ் என்னது பக்தி fm மா இத்தனை வருசமா நான் கேள்வி படலையே... :(

  ReplyDelete
 8. ஹும்.... உங்களை நான் என்ன சொல்றது.....

  சொ.செ.சூ நான் எப்பவும் செய்துகொண்டதில்லை :)

  அதெல்லாம் உங்களை மாதிரு ஆட்களுக்காக நடத்துற FM.

  கேளுங்க கேளுங்க.

  ReplyDelete
 9. அவங்க ரேடியோ நடத்தியே ஆகோனும்
  நீங்க ரேடியோ போட்டே ஆகோனும் இல்லையா?

  அப்படீன்னா நீங்க உங்க காதுல பஞ்ச வச்சு
  அடச்சுகிட்டு ரேடியோவப் போட்டுடுங்க.
  உங்களுக்கு கஸ்டமில்ல அவங்களுக்கு நஷ்டமில்ல.

  ReplyDelete
 10. நீங்க இந்த காமெடி பதிவு போடுவதற்காகவே ஒரே ஒரு நாள் மட்டும் கேட்டிருந்தீங்கன்னா ஓகே..
  உங்களுக்கு அரட்டை அடிக்க அந்த நேரத்துல ஆள் கிடைக்காததால் ரேடியோ கேட்டிருப்பீங்க் போல...

  ReplyDelete
 11. அன்பு வணக்கம் நண்பரே,
  UAE-யில் இருந்த போது உங்கள் வலைத்தளத்தை பார்க்காமல் போனதற்காக வருந்துகிறேன். ரசிக்கும் படியும் இனிமையாவும் இருந்தது. தங்களின் பத்திகள் அருமை. சென்னை வந்து சில மாதங்கள் கழித்து தான் பார்க்கவேண்டும் என்கிற பிராப்தம் எனக்கு வேறென்ன சொல்ல....
  "பக்தி FM-இல் பாம்பப்பனின் அட்டகாசங்கள்" பத்தி எழுதியதற்கு நன்றி....

  உங்கள் சக்தி ஐ ஞாபகபடுத்தியது உங்களின் வலைத்தளம்...சிறப்பான நையாண்டி தொனிக்க எழுதும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்...

  அந்த பாம்பப்பன் இந்த நாகப்பன் தானே??????????????

  அன்புடன்,
  ஆர்.நாகப்பன்.
  0091-9444105390

  H-48,திருப்பூர் குமரன் தெரு,
  M.M.D.A.,காலனி,
  அரும்பாக்கம்,
  சென்னை-600106
  தமிழ் நாடு,
  இந்தியா.

  ReplyDelete
 12. People should read this.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))