பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 26, 2007

அமீரக பதிவர்களின் போலிகள் செய்யும் அட்டகாசங்கள்!!!

எப்போதும் போல சுறுசுறுப்பா சேட்டிகிட்டு இருந்தப்ப ஒரு நண்பர் கேட்டார் "அபிஅப்பா நம்ம குசும்பன் அய்யனார் பதிவை கலாய்ச்சு ஒரு பதிவு போட்டிருக்காராமே அந்த லிங் தாங்க"ன்னு. நான் தமிழ் மணத்துல போய் அலைய அலுப்பு பட்டுகிட்டு சேட்டுல பச்சை பல்பு எரிந்த குசும்பனிடம் போய் "தம்பி குசும்பா அய்யனார் எதிர்வினை பதிவின் லிங் தாய்யா"ன்னு கேட்டேன். அதுக்கு பதில் வந்துச்சு "அபிஅப்பா நான் குசும்பனின் போலி நீங்க குசும்பன் கிட்டயே கேளுங்க"ன்னு. பதறி போய் பார்த்தா ஒரிஜினல் குசும்பன் ஆஃப் லைன்ல!

சரின்னு குசும்பனுக்கு போன் பண்ணி "எங்கய்யா இருக்க"ன்னு கேட்டேன். அதுக்கு குசும்பன்" ஆபீஸ்க்கு போய்கிட்டு இருக்கேன்"ன்னு சொன்னார். நான் நம்பலை."ப்ரூப் பண்ணுய்யா"ன்னு சொன்னேன். சரின்னு கார்ல உளரிகிட்டு இருந்த சக்தி FM நாகப்பன் சிரிப்பதை சவுண்டா வச்சார். அடபாவமேன்னு நெனச்சுகிட்டு "யோவ் தெரியுமா சேதி உனக்கு போலி வந்தாச்சு'ன்னு சொன்னேன். அதுக்கு குசும்பன் "அடபோங்க அபிஅப்பா எனக்கு நேத்தே தம்பி போன் பண்ணி புலம்பினார் மீதி சோக கதையை அவர்கிட்ட கேளுங்க"ன்னு சொன்னார்.

தம்பிக்கு போன் பண்ணினேன். தம்பி போன்ல கதற ஆரம்பிச்சுட்டார். "அபிஅப்பா நேத்து சேட்டுல குசும்பன் இருந்தாரு, சரின்னு ஒரு விஷம் சேட்டிலே சொன்னேன், அதுக்கு அதயே கட் பேஸ்ட் பண்ணி எனக்கு குசும்பன் கிட்ட இருந்து பதில் வருது, சரி இன்னிக்கு குசும்பன் கிட்ட நாம தான் மாட்டிகிட்டோம்ன்னு திரும்ப சேட்டினேன் வேற விஷயத்தை, திரும்பவும் காபீ பேஸ்ட், அடடா கொடுமையேன்னு கடுப்பாகி போன் பண்ணினேன் ஆனா எடுக்கவே இல்லை, சரின்னு சேட்ல "யோவ் போனை எடுய்யா"ன்னு கத்தினேன். அதுக்கு பதில் வந்துச்சு"தம்பி நீ மொதல்ல போன பண்ணு நான் எடுக்கறேன்'ன்னு. நான் சொன்னேன் "யோவ் அதான் ரிங் போகுதே"ன்னு கத்தினேன். அதுக்கு "தம்பி அது என் பாஸ் குசும்பர் தி ஒரிஜினல், நான் அவரின் போலி"ன்னு பதில் வந்துச்சு. சரின்னு கிளிக் பண்ணி பார்த்தா அது போலி! நம்ம குசும்பன் ஐடி kusumbuonly@gmail.com இல்லியா ஆனா போலில ஒரு u விட்டு போச்சு"ன்னு தம்பிகிட்ட இருந்து புலம்பல்.

ஏற்கனவே அய்யனாருக்கு ஒரு போலி இருந்து சிரமம் தருது, அதோட இது வேறயான்னு நெனச்சுகிட்டு போலி குசும்பன் கிட்ட சேட்டினேன்.

நான்: போலி சார் போலி சார் ஏன் சார் இந்த கொல வெறி நீங்க சைவ போலியா அசைவ போலியா?

போலி குசும்பன்:அபிஅப்பா நீங்களாவது என்னய புரிஞ்சுகிட்டீங்களே, என் பாஸ் என்கிட்ட சேட்டவே மாட்டங்குறார் அபிஅப்பா, நான் சுத்த சைவம் அபிஅப்பா, தம்பி என்னய கெட்ட வார்த்தைல திட்டுறார் அபிஅப்பா

நான்: சரி போலி தம்பி, உன் வேலை தான் என்ன?

போலி: என் முதலாளி குசும்பருக்கு விசுவாசமா அழைக்காமலே ஓடி வந்து உதவும் அலாவுதீன் பூதம் நான், யாராவது என் பாஸ்க்கு பின்னூட்டம் போடலைன்னா நான் அங்க போய் மிரட்டி பின்னூட்டம் போட வைப்பேன்.

நான்: நல்ல கொள்கைதான் வேற எதுனா இருக்கா?

போலி: என் பாஸ் சேட்ட ஆள் இல்லாம மஸ்தடிச்சு மானிடரை வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருக்கும் போது நான் போய் சேட்டுவேன் அவர்கிட்ட, அவர் என்னை திட்டுவது தான் அவருக்கு சந்தோஷம்ன்னா எனக்கு அது தான் மிக பெரிய சந்தோஷம்.

நான்: வேற எதுனா இருக்கா?

போலி: அய்யனார் எதுனா போஸ்ட் போட்டா நான் ஓடி போய் "பாஸ் பாஸ் ஓடியாங்க ஆணி பின்ன புடுங்கலாம் அய்யனாருக்கு எதிர் போஸ்ட் போடனும் வாங்கன்னு அறிவிப்பு கொடுப்பேன், அவரும் குதிச்சுகிட்டே ஓடி வந்து பதிவு போடுவார். அதுக்குள்ள நான் அவரின் நட்பு வட்டம் எல்லார்கிட்டயும் எங்க பாஸ் இன்னும் 1/2 மணியில் ஒரு சூப்பர் போஸ்ட் தயாராகுது கும்மிக்கு ரெடியாகுங்கன்னு அறிவிப்போம்.

நான்: நல்லாயிருக்கே, நீங்க எத்தன பேர் இதுபோல இருக்கீங்க?

போலி: இப்போதைக்கு நானும் அய்யனார் போலியும் தான், ஆனா கூடிய சீக்கிரம் உங்களுக்கு,அண்ணாச்சிக்கு, தம்பிக்கு அவ்வளவு ஏன் எங்க மகளிர் அணியை வச்சு ஜஸீலாவுக்கு எல்லாம் தயாராகுது.

நான்: அடபாவிகளா உங்க எதிர்கால திட்டம் தான் என்ன?

போலி குசும்பன்: குட் கொஸ்டின், வேற என்ன எங்க முதலாளி புகழ் பரப்பனும், அடுத்து போலியார் மாநாடு நடத்தனும் அதே சிவ்ஸ்டார் பவன்லயோ இல்லாட்டி போலிகிடேசன் பார்க்கிலயோ, ஆனா உங்கள மாதிரி பிரயோசனமா பேசாம எங்க முதலாளிகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போவது பத்தி முடிவெடுப்போம் இன்னும் பல திட்டங்கள் இருக்கு!

நான்: ங்கொய்யால நல்லா இருங்கடா!!

31 comments:

 1. //தம்பி குசும்பா அய்யனார் எதிர்வினை பதிவின் லிங் தாய்யா"ன்னு கேட்டேன். அதுக்கு பதில் வந்துச்சு "அபிஅப்பா நான் குசும்பனின் போலி நீங்க குசும்பன் கிட்டயே கேளுங்க"//

  அன்னிக்கு சிரிச்சே வயத்து வலி வந்துச்சின்னா பாருங்க

  ReplyDelete
 2. //யோவ் தெரியுமா சேதி உனக்கு போலி வந்தாச்சு'ன்னு சொன்னேன். அதுக்கு குசும்பன் "அடபோங்க அபிஅப்பா எனக்கு நேத்தே தம்பி போன் பண்ணி புலம்பினார் மீதி சோக கதையை அவர்கிட்ட கேளுங்க//

  அவருகிட்ட சாட்டிங் ஆட் பன்னது பத்தி சொல்லவே இல்லையா?

  ReplyDelete
 3. மக்களே நான் சொன்னா நம்புங்க மேல உள்ள ரெண்டு பின்னூட்டமும் போலியார் கைவண்ணம்! இப்ப குசும்பன் ஆஃபீஸ்ல மீட்டிங்ல இருக்கார், அதுவரை இவர் போடுவாராம்! ஒரிஜினல் குசும்பனையே இவர் சேட்ல ஆட் பண்ணிய கதை பெரும் கதை அதை ஒரு தனி பதிவா போடலாம்!

  ReplyDelete
 4. //தம்பிக்கு போன் பண்ணினேன். தம்பி போன்ல கதற ஆரம்பிச்சுட்டார்//

  இத விட கொடுமை எனக்கு போன்செய்து "யோவ் போன் அடிச்சா எடுக்க மாட்டியான்னு மிரட்டல் வேற"
  நான் சொன்னேன் மொதல்ல போன் அடிக்கனும் அதுக்கு போன் இருக்கனும் யாருக்கு போன் பன்னிட்டு என்னை மிரட்டுறீங்கன்னு கேட்டேன் தம்பி அன்னிக்கு மாங்கா பிய்க்க போனவர்தான் இன்னும் ரிடர்ன் ஆகலை

  ReplyDelete
 5. nalla irrukatam....

  Vazhka Valarka....

  Duabi pathivarkal rangey thani than pola...

  ReplyDelete
 6. சந்தேகமே வேண்டாம் இதற்கு பின்னனியில் அபி அப்பா தான் இருக்கிறார்...
  அதற்கு காரணங்கள் சில
  -போலி உருவாக்கனும்மா என்று என்னிடமே கேட்டுள்ளார்
  -குசும்பன் மீது அவர்க்கு காண்டு..;-)
  -சமீபத்தில் அவர் கடப்பாரை போட்டதாக சொன்னார்..அந்த இடைவெளியில் தான் இதனன உருவாக்கிருக்க வேண்டும்...
  -தமிழ் மணத்தில் பதிஞ்ச உடனே எப்படிங்க..போலி வராரு..தகவல் தந்தீங்களா..இல்ல நீங்க தான் அந்த போலியா..

  ஏதோ என்னால ஆனது.. :))))

  ReplyDelete
 7. வாங்க புலி சாரே! புது வேலை எப்படி இருக்கு? ஏன் இங்கிலீஷ் போர்வை போத்தியிருக்கீங்க!

  ReplyDelete
 8. வாங்க ஏபிசிடி! எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! ஏதோ உங்களால ஆனதா இந்த நெருப்பு! நல்லா இருங்க:-)

  ReplyDelete
 9. அன்னிக்கு சிரிச்சே வயத்து வலி வந்துச்சின்னா பாருங்க
  //

  :)

  ReplyDelete
 10. அபி அப்பாக்கு கூட போலி இருக்காமே? abiapa@gmail.com???

  ReplyDelete
 11. ஹப்பா, கொளுத்தி போட்டாச்சு. :-P

  ReplyDelete
 12. http://anony-anony.blogspot.com/2007/08/blog-post.html

  ReplyDelete
 13. "TBCD said...

  சந்தேகமே வேண்டாம் இதற்கு பின்னனியில் அபி அப்பா தான் இருக்கிறார்...

  அதற்கு காரணங்கள் சில
  -குசும்பன் மீது அவர்க்கு காண்டு..;-)

  அபி அப்பா நான் உங்களுக்கு என்ன குறைவெச்சேன், கேட்டவுடனே உங்க போட்டோவுக்கு ஒளி வட்டம் போட்டுதரலையா?

  உங்க மாணிட்டரில் இருந்த அரை குறை பெண்னை மறைத்து பிள்ளையார் படம் வச்சு மாற்றி தரலையா?

  இல்லை உங்க போட்டோவை ஒரு அரை மணி நேரம் தொடர்ந்தபடி பார்த்து சிம்ரன் உடலி தீபா தலையைவைத்து அதை உங்க போட்டோவுக்கு பக்கத்தில் வைத்து ஒரு போஸ்ட் போடவில்லையா?

  இல்லை அன்று நடந்த விசயத்தை யாரிடமாவது சொல்லி இருப்பேனா?( என்னவென்று தெரியவேண்டும் என்றால் தனிமடல் அனுப்பவும்)

  இப்படி எல்லாவிதத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் எனக்கு இப்படி நீங்க ஒரு காரியம் செய்யலாமா?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((((((((

  ReplyDelete
 14. TBCD said...
  "சந்தேகமே வேண்டாம்"

  ஆமாம் TBCD இனி உண்மையை சொன்ன நீங்கதான் என் friend. இனி அபி அப்பா கூட டூ
  டூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூ:(

  ReplyDelete
 15. "இப்போதைக்கு நானும் அய்யனார் போலியும் தான், ஆனா கூடிய சீக்கிரம் உங்களுக்கு,அண்ணாச்சிக்கு, தம்பிக்கு அவ்வளவு ஏன் எங்க மகளிர் அணியை வச்சு ஜஸீலாவுக்கு எல்லாம் தயாராகுது."

  அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு:) சீக்கிரம் ஆரம்பிங்க அபி அப்பா:)

  ReplyDelete
 16. http://i189.photobucket.com/albums/z261/alif007/24082007410.jpg


  இந்த இடத்தில் சுல்தான் பாய்க்கு நன்றிகள்

  ReplyDelete
 17. அபிஅப்பா, போலியுடனான உங்க பேச்சாடல் தூள் :-))

  ReplyDelete
 18. No Comments:)))))
  Ithellaam eppadiththaan yosippeengaLO.
  saami.!!!
  hmm. ithukkum oru PATTARAI nadaththinaal thevalai:)))

  ReplyDelete
 19. எல்லாரும் விஷயம் தான் சொல்லுவாங்க, உங்களுக்கு மட்டும் தம்பி "விஷம்" சொன்னாரா? தலை எழுத்து, இது எல்லாம் என் கண்ணிலே முதலில் பட்டுத் தொலைக்குது! நறநறநற.,

  போகட்டும் நல்லாத் தான் எழுதி இருக்கீங்க, அந்த ஏபிசிடி, சொல்றதுக்கு பதில் சொல்லாதீங்கனு நான் சொன்னேனே சாட்டிலே, பதில் சொல்லாதீங்க அதுக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 20. உங்க கோப்பெருஞ்சோழன், பிசிராந்தயார் நட்பிலே விரிசலா...
  அதுக்கு காரணம் நானா..

  என்ன கொடுமை குசும்பா இது...

  குசும்பா..பிரண்டுன்னு சொல்லிட்டு , நம்பளுக்கு ஆப்பு அடிச்சிடாதீங்க...

  //*குசும்பன் said...

  ஆமாம் TBCD இனி உண்மையை சொன்ன நீங்கதான் என் friend. இனி அபி அப்பா கூட டூ
  டூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூ*////

  ReplyDelete
 21. யாரது...சவுத் ஆப்பிரிக்கா சிங்கமா..

  வயசாயிட்டாலே இப்படித் தான்..பல்லு ஆடும்..அது தான் நறநறநறநறநற சத்தம்...நல்ல டெண்டிஸ்ட் பாருங்க

  அப்புறம்..தொண்டையில என்ன பிராபளம்..முழிச்சிட்டு இருக்கும் போதே..கர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு ஒரு சத்தம்...
  இ.என்.டி..ஸ்பெசலிஸ்ட் பாருங்க..

  லேட் பண்ணாதீங்க.... :))))


  //*கீதா சாம்பசிவம் said...

  எல்லாரும் விஷயம் தான் சொல்லுவாங்க, உங்களுக்கு மட்டும் தம்பி "விஷம்" சொன்னாரா? தலை எழுத்து, இது எல்லாம் என் கண்ணிலே முதலில் பட்டுத் தொலைக்குது! நறநறநற.,

  போகட்டும் நல்லாத் தான் எழுதி இருக்கீங்க, அந்த ஏபிசிடி, சொல்றதுக்கு பதில் சொல்லாதீங்கனு நான் சொன்னேனே சாட்டிலே, பதில் சொல்லாதீங்க அதுக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*//

  ReplyDelete
 22. என் பெயரில் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் போலி அபி அப்பா யார்?
  இப்படிக்கு
  ஒரிஜினல் அபி அப்பா.

  ReplyDelete
 23. வல்லி யம்மா மாதிரி பதிவுக்கு கமெண்டு போட முடியல ...காரணம் எனக்கு ஒன்னுமே புரியல...

  பின்னூட்டத்துக்கு ஒரு பின்னூட்டம் போடலாம்..குசும்பன் உங்களுக்கு இத்தனை செய்திருப்பதா சொல்லிட்டு
  எதோ ரகசியம்ன்னு சொன்னாரே அதை மட்டும் உடனே கூகிள் சேட்டு க்கு
  வந்து சொல்லிவிடவும்.

  ReplyDelete
 24. நீர்தான் என் போலின்னு பேசிக்கிறாங்களே நெசமா வே

  ReplyDelete
 25. அபி அப்பா ஜாக்கிரதை.உங்களுக்கும் போலி வந்துடப் போவுது.
  ஆமா இன்னும் யார் யாருக்கெல்லாம் இருக்கு;)

  ReplyDelete
 26. //அதுக்கு பதில் வந்துச்சு "அபிஅப்பா நான் குசும்பனின் போலி நீங்க குசும்பன் கிட்டயே கேளுங்க"ன்னு. பதறி போய் பார்த்தா ஒரிஜினல் குசும்பன் ஆஃப் லைன்ல!//

  சிரிப்பு தாங்க முடியலை போங்க.... அலுவலகத்தில் லூசு போல் சிரித்துக் கொண்டிருக்க அனைவரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள்..

  உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டு, பிள்ளையார் சுழி போடுகின்றேன்..

  இ.கா.வள்ளி

  ReplyDelete
 27. பதில் சொல்லாதீங்க....சொல்லிறாதீங்க....அய்யயோ..சொல்லிட்டீங்களா..முதல்லயே...
  சரி என்ன பண்ணலாம்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு நீங்களும்..ஒரு சவுண்டு குடுத்துடுங்க...அபி அப்பா..

  //*அந்த ஏபிசிடி, சொல்றதுக்கு பதில் சொல்லாதீங்கனு நான் சொன்னேனே சாட்டிலே, பதில் சொல்லாதீங்க அதுக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*//

  ReplyDelete
 28. ஆமா நீங்க உண்மையா போலியா..? :)

  வாங்க வந்து போட்டியில கலந்துக்கோங்க...

  http://nilavunanban.blogspot.com/2007/08/blog-post_30.html

  ReplyDelete
 29. எல்லோரும்..போலியை மறந்திருந்த வேளையிலே இந்த பதிவின் மூலம்...நீறு பூத்த நெருப்பை ஊதி காட்டுத் தீ ஆக்கி விட்ட அபி அப்பாவிற்கு என் கண்டனங்கள்...

  :)

  ReplyDelete
 30. இந்த ஆணி பிடுங்குதல் என்றால் என்ன?

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))