பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 14, 2007

பொன்ஸ் அவர்களுக்கு சில கேள்விகள்!!!

பாகச ஆண்டு விழா பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். எனக்கு அதிலே உடன்பாடு இல்லை. இன்னிக்கு காலைல பொன்ஸ்கிட்ட இருந்து ஒரு SMS வந்துச்சு பாகச ஆண்டு விழாவில கலந்துக்கனும்ன்னு. பின்ன போன் வேற வந்துச்சு. பொன்ஸ் அவர்களே நான் உங்களை கேட்பதெல்லாம் இது ஒன்னு தான். நான் எப்பவாவது தல பாலபாரதியை கலாய்ச்சதுண்டா. பதில் சொல்லுங்க!தல தன்னோட நண்பர்கள் போன் நம்பரை தன் செல்பேசியில் பதிந்து அவர்கள் பெயரை பதியாமல் ஜெ.அன்பழகன் ச.ம.உ, இந்து ராம், கலாநிதி மாறன், வைகுண்டராஜன், ஆ.வி. பாலசுப்ரமணியன் இப்படியாக பதிந்து பின் லக்கி, வரவனை, அண்ணாச்சி கூட பேசிகிட்டு இருக்கும் போது போன் வந்தால் போனை அவர்களிடம் காட்டி இங்க பாருங்க இந்து ராம் கூப்பிடுறார் அவர் கூட ரோதனையா போச்சு கொஞ்சம் இருங்க வாரேன்ன்னு சொல்லி கொஞ்ச தூரம் போய் ங்கொய்யால எப்டிடா இருக்க, சூப்பர் சூப்பர் சூப்பர்ன்னு மொக்கை போட்டு விட்டு திரும்ப வந்து லக்கி அன் கோவிடம் " அவசரமா அஸ்சாம் பிரச்சனை பத்தி ஒரு கட்டுரை வேணுமாம்"ன்னு பீலா விடுவாரே எனக்கு அந்த உண்மை தெரிஞ்சும் பொன்ஸ் அவர்களே இது வரை எந்த பதிவிலாவது சொல்லி தலயை கலாய்ச்சி இருப்பேனா?சமீபத்துல இராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் வித்தவுடில் போய் மாட்டிகிட்ட பிறகும் பேந்த பேந்த முழிக்காமல் பாமக வேலுவுக்கு மாமாமொவன்ன்னு சொல்லி தப்பிச்சு வந்தாரே இது பத்தி எங்கிட்டாவது ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா பொன்ஸ்! அதுவுமில்லாம ஊர்ல போய் கொஞ்சம் கூட கூச்சப்படாம இன்ஃபோஸிஸ்ல இஞ்சினீயர்ன்னு பால்ய நண்பர்கள் கிட்ட விட்டாரே பீலா என் வாயில இருந்து ஒரு வார்த்தை வந்திருக்குமா இத பத்தி!ஜெயா டிவில போய் தான் ஒரு அதிமுக ஆதரவாளன் இராமேஸ்வரத்துல மொட்ட செயலர் வட்ட செயலர் அப்படின்னு சொல்லி எங்களை குலை நடுங்க வச்ச சொற்பொழிவு ஆற்றி விட்டு திரும்பும் வழியில் லக்கியின் சூழ்ச்சியால் சந்தேக கேஸ்ல பிடிபட்டு கே.கே நகர் போலீஸ்ஸ்டேஷனில் வெப்பன் சப்ளை ஆளு போல பட்டாபட்டி அண்டிராயரோட ராத்திரி முழுக்க குத்த வச்சி இருந்தாரே நம்ம தல அதை நான் யாருக்காவது சொன்னதுண்டா பொன்ஸ்!மாட்டி விட்ட அதே லக்கி மருநாள் காலைல கவுன்சிலரை கூட்டி போய் மீட்டு வந்தாரே, பின்ன ஏன் வேலைக்கு லேட்டுன்னு கேட்ட முதலாலிகிட்ட "ஒரு சின்ன பஞ்சாயத்து லக்கிய ஸ்டேஷன்ல இருந்து மீட்டு வர வேண்டியதா போச்சு"ன்னு கூலா சொன்னாரே எங்க தல நான் யாரிடம் இதுவரை சொல்லியிருப்பேன்! இல்லவே இல்லையே!அவ்வளவு ஏன், பதிவர் பட்டறைல உங்க எலிகுட்டியை நீங்க ஆப்டிகல் எலிகுட்டின்னு பெருமையா சொல்ல அது தல காதுல 'ஆப்பு'டிகல்ன்னு காதுல விழ சரி நமக்கு ஆப்பு வைக்க புது மிஷின் போலன்னு நெனச்சுகிட்டு பையில தூக்கி போட்டுகிட்டு இப்ப நீங்க பதிவு போட்டு தேடும் போது உங்க கூடவே சேர்ந்து தேடுறார் பாருங்க நான் இதை கூட இது வ்ரை யார்கிட்டயாவது சொல்லி தல பேர நாற அடிச்சதில்லை!விட்டா குசும்பன் பாகச உருப்பினர் அட்டை கேக்கும் போது தல ரத்த கையெழுத்து போடுவார்ன்னு தெரிஞ்சும் "டேய் தம்பி சரவணா சும்மா சரவணான்னு கொடுக்காத பாட்டன் முப்பாட்டன் ஊரு தெருவு எல்லாம் சார்த்து குடு'"ன்னு நான் சொல்லி குடுத்ததா சொல்லுவீங்க போல இருக்கே! இதல்லாம் நல்லாயில்ல!நான் இப்பவும் சொல்லிக்கிறேன் எனக்கு தனி மனித தாக்குதலில் உடன்பாடு இல்லை! அதனால பொன்ஸ் நான் தலயை கலாய்க்க மாட்டேன் என்பதை திட்டசதுரமாக சொல்லிக்கிறேன்!

26 comments:

 1. தல பாலபாரதிய கலாய்க்க நினைக்காத உங்க மனிதாபிமானத்தை(!?) நினைச்சா...


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. ஆமாம் சிபி! எனக்கு தனிமனித தாக்குதல் பிடிக்காது ஆனா நீங்க தலய கலாய்சினா பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்(எழுந்து டேன்ஸ் ஆடுவேன்):-))

  ReplyDelete
 3. நீங்க இவ்ளோ நல்லவர்னு(?!) தெரியாம போச்சோ இவ்வளவு நாளா?...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 4. அபி அப்பா, அது சென்ஷி நம்பர்னு நினைச்சி தான் கால் பண்ணினேன்..

  தனி 'மனித' தாக்குதலில் தானே நம்பிக்கை இல்லை.. அப்ப தாராளமா பாலாவைக் கலாய்க்கலாம் ;)

  இந்தப் பதிவு போட்டிக்கு உண்டா?

  ReplyDelete
 5. http://billi1.wordpress.com/?p=5

  ReplyDelete
 6. கலைடாஸ் கோப் நன்றி!

  ராம் மிக்க நன்றி!(உனக்கு இருக்குடீ ஒரு நாள்)

  ஜேகேதம்பி! மெய்யாவே நல்லவன் தாங்கோ:-)

  ReplyDelete
 7. // பொன்ஸ்~~Poorna said...
  அபி அப்பா, அது சென்ஷி நம்பர்னு நினைச்சி தான் கால் பண்ணினேன்..

  தனி 'மனித' தாக்குதலில் தானே நம்பிக்கை இல்லை.. அப்ப தாராளமா பாலாவைக் கலாய்க்கலாம் ;)

  இந்தப் பதிவு போட்டிக்கு உண்டா//

  தலயை மனிதனே இல்லன்னு ச்சூசகமா சொல்ற மாதிரி தெரியுதே!

  ஏங்க கஷ்டபட்டு பதிவு போட்டிருக்கேன் போட்டிக்கு உண்டான்னு கேட்டா இன்னா அர்த்தம், உண்டு உண்டு உண்டு:-)

  ReplyDelete
 8. /ராம் மிக்க நன்றி!(உனக்கு இருக்குடீ ஒரு நாள்)//

  இதொரு கொலைவெறி மிரட்டல் என்பதனை இந்த சபையில் தெரியப்படுத்தி கொள்கிறேன்..... :(

  ReplyDelete
 9. யாருடா இங்க தல...?...அச்சிச்சோ....

  யாருடாங்க இங்கக தலங்க...?...இப்பவும் சரியில்லியே...

  தல எங்க இருக்கு....வால் எங்க இருக்கு....? இப்பவாச்சும்..சரியா....

  (அபி அப்பா...நீங்க பின்னுட்டம்..போட சொல்லிக் குடுத்தது மறந்துப் போச்சி...அட்ஜீஸ் பண்ணிக்கோங்க...)

  ReplyDelete
 10. திட்டசதுரமாக சொல்லிக்கிறேன்//eppidi???eppidi abi appa ithellam??/??/!!!!

  ReplyDelete
 11. // இராம் said...
  /ராம் மிக்க நன்றி!(உனக்கு இருக்குடீ ஒரு நாள்)//

  இதொரு கொலைவெறி மிரட்டல் என்பதனை இந்த சபையில் தெரியப்படுத்தி கொள்கிறேன்..... //

  ஆமாம்:-)

  ReplyDelete
 12. // TBCD-2 said...
  யாருடா இங்க தல...?...அச்சிச்சோ....

  யாருடாங்க இங்கக தலங்க...?...இப்பவும் சரியில்லியே...

  தல எங்க இருக்கு....வால் எங்க இருக்கு....? இப்பவாச்சும்..சரியா....

  (அபி அப்பா...நீங்க பின்னுட்டம்..போட சொல்லிக் குடுத்தது மறந்துப் போச்சி...அட்ஜீஸ் பண்ணிக்கோங்க...) //

  ஏபிசிடி! வாய்யா சரி பின்னூட்டம் போட பின்ன கத்துகுடுக்கறேன், பதிவு போட கத்து குடுத்ததுக்கு ஃபீஸ் எங்கய்யா:-)

  ReplyDelete
 13. //jaseela said...
  திட்டசதுரமாக சொல்லிக்கிறேன்//eppidi???eppidi abi appa ithellam??/??/!!!! //

  வாங்க ஜஸீலா! தானா பொங்குது:-))

  ஆமா நேத்தி கூட இப்படி அனானியா வந்தீங்க நீங்க தானா இது?

  ReplyDelete
 14. அதுக்குத் தான் பின்னுட்டம் போட சொல்லித் தரீங்களே..அதுக்கும்..இதுக்ககம் சரியாப் போச்சி...:)))
  //*பதிவு போட கத்து குடுத்ததுக்கு ஃபீஸ் எங்கய்யா:-)*//

  ReplyDelete
 15. ithu Baalabaarathi kalaayththal vaarama.:)
  dance vera aaduveenggaLA.
  aduththa thadavai paarkkumbothu avarkitta sollidaREn:)))

  ReplyDelete
 16. என்னதான் இருந்தாலும் கடைசி வரை உணமையை சொல்லாத உங்களை பாராட்டியே ஆகணும்..:)

  ReplyDelete
 17. இன்று "தல" நாளை "நீங்கள் அபி அப்பா ;-))

  (குசும்பன் அண்ணே நீங்க சொன்னாது போல பின்னூட்டம் போட்டுட்டேன் சரியானு பாருங்க ;-)))

  ReplyDelete
 18. ஹா ஹா ஹா.... அபி அப்பா... தூள்!

  பதிவு நேத்து வந்தாலும், மறு மொழி 15 ஆம் தேதி கொடுப்பதால், இந்தாங்க பிடிங்க.... இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை!

  ReplyDelete
 19. ஹி ஹி அப்ப இதுக்கு பேரு என்னங்கோ:)

  ReplyDelete
 20. சுதந்திர தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. தலய கலாக்கமாட்டேன், கலாய்க்கமாட்டேன்ட்டு அம்புட்டு வேலையும் பார்த்துட்டீங்களே!

  ReplyDelete
 22. //தனி 'மனித' தாக்குதலில் தானே நம்பிக்கை இல்லை.. அப்ப தாராளமா பாலாவைக் கலாய்க்கலாம் ;)//

  ஆமாம் அவரு மனிதனே இல்ல ;)

  அதனால நீங்க கவலபடாம கலாய்க்கவும் :D

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))