பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 26, 2007

சின்ன சின்னதாய் சில கலாய்த்தல்கள்!!!



என் அலுவலகத்தில் ஒரு மலையால தம்பதி வேலை பார்கிறாங்க. ரெண்டு பேரும் ஒரே டிபார்ட்மெண்ட் தான். அந்த டிபார்ட்மெண்ட் முதல் மாடியிலும் என் அலுவலகம் கீழ் தளத்திலும் இருக்கும். வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் அந்த நண்பர்.
அவர் தண்ணியடிப்பதோ சிகரட் பிடிப்பதோ எதுவுமே அவர் தங்கமணிக்கு தெரியாம பார்த்துப்பார். தம் அடிக்கனும்ன்னு நெனச்சார்ன்னா நேரா கீழே இறங்கி வந்து வேற டிபார்ட்மெண்ட்ல யார்கிட்டயாவது வாங்கி பக் பக்ன்னு இழுத்துட்டு விக்ஸ் மாத்திரை சப்பிட்டு மேல போவார்.

அன்றைக்கும் அப்படித்தான் கீழே மெதுவா வந்து என் கேபினை திறந்து என்னை பார்த்தார். எனக்கு தெரிஞ்சு போச்சு அவர் சிகரட் கேக்க தான் வந்திருக்கார்ன்னு. நானே போரடிச்சுகிட்டு உக்காந்திருந்தேன்.

தமிழ் மணம் அன்றைக்கு "ஓசை செல்லாவுக்கு 'நச்'ன்னு ஒரு கேள்வி"

"ஓசை செல்லாவுக்கு தலைல குட்டு வச்சு ஒரு கேள்வி"

"ஓசை செல்லாவை கட்டி வச்சு ஒரு கேள்வி"ன்னு ஒரே எக்ஸாம் ஃபீவர்ல இருந்துச்சு.

ஒரு மனுஷன் எத்தனை கேள்விக்கு பதில் சொல்லுவார்.
அவரோ எல்லா கேள்வியையும் சாய்ஸ்ல விட்டுட்டு போறார்.

எனக்கோ பயம் குசும்பன் " ஓசை செல்லாவுக்கு 127 கேள்விகள்"ன்னு போட்டு

1. உயிர் எழுத்துகள் மாத்திரம் பேசும் மணியான பதிவர் யார்?

2.சமீபத்தில் கிழிந்த டவுசரோடு இருப்பவர் யார், அதை கிழித்தது யார்?

3. மு.கார்த்திகேயன் என்ற பதிவரின் இயற் பெயர் என்ன?

இப்படியாக கேட்டு மொக்கை போட்டுடுவாரோன்னு.

அந்த சமயம் பார்த்து நம் நண்பர் வந்தாரா சரி இன்னுக்கு இவர் தான் நமக்கு சரியான தீனின்னு நெனச்சுகிட்டு டக்குன்னு அவர் தங்கமணி எக்ஸ்டன்ஷனுக்கு ரிங் பண்ணினேன்.

அவங்க எடுத்து "என்ன சாரே எந்து விஷேஷம்"ன்னு சோதிச்சு. நான் "இவ்விட இனி தான் விஷேஷம், கொறச்சு கேள்கு"ன்னு சொல்லிட்டு போனை ஸ்பீக்கர்ல போட்டுட்டு வந்த நண்பரை பார்த்து '' வாய்யா என்ன விஷேஷம்"ன்னு கேட்டேன். பின்ன அவரும் நானும் பேசியது அப்படியே தாரேன் பாருங்க!

"வாய்யா ரெவி(தமிழ்ல ரவின்னா அவ்விட ரெவியாக்கும்) என்ன விஷேஷம்?"

"ஒன்னுமில்ல சாரே லைஃப் ரொம்ம போர் அடிக்குது, ஒரு தம் இருக்கா குடு!"

"யோவ் உன் ஓய்ஃப்க்கு தெரிஞ்சா என்னா ஆகும்?"

"அவ கிடக்கா தெண்டி, அவளோட வல்லிய புத்திமட்டு, நான் இங்கோட்டு அடிச்சுட்டு விக்ஸ் குளிகை அடிச்சுட்டு போவேன். ஆ தெண்டிக்கு ஒன்னும் அறியில்லா!"

"ரெவி கள்ளு எங்கன குடிக்கும், இதுக்கே இங்கன பயந்தா?"

"வளர ஈஸி, நான் நேரத்தே ஸ்டாக் பண்ணி வீட்டுல, சின்ன ஜூஸ் பாட்டில்ல பிரிச்சு வச்சு, தினக்கும் ஒரு பாட்டில் டாய்லெட் கொண்டு போய் பாத்டப்புல வெள்ளம் நெரப்பி அதுக்குள்ள காலை ஆட்டிகிட்டே " கடலினகரை போனோரே கானா பொண்ணின போனோரே போய் வரும் போ என்ன கொண்டு வரும்"ன்னு பாடிகிட்டே மூணொன்னும் வீசும் ஆ மண்டிக்கு கண்டுபிடிக்காம்பட்டில்லா"

"சரி ரெவி! நீ எங்கோட்டு வச்சிருக்கும் ஸ்டாக் வீட்டுல?"

"நான் என்ன வட்டோ எண்ட கப்போர்டில வைக்க அவ கப்போர்டுல தான் பட்டு புடவை அடில ஸ்டாக் வைக்கும். அவ ஆ ஸ்தலத்த ஓனம் சமயம் மாத்திரம் நோக்கும் ஸோ நோ ஒர்ரி"

"அது சரி, ரெவி நிங்களட ஏரியாவிலே ரஷ்ய பெண்குட்டி ஜாஸ்தியோ?"

"ஒ பின்னே, ஒரு பாடு உண்டு, எண்ட பிளாட்க்கு அடுத்த பிளாட்டே ரஷ்ய குட்டிகளோட பிளாட் தான். இன்னேல நான் ஈ விட்டி கிச்சன் போன பின்ன பால்கனிக்கு போனா... ஒ கலக்கி ...அது ஒரு அடிபுளி பிகராக்கும். நான் மோர் தேன் ஹண்ட்ரட் பறக்கும் உம்மா கொடுத்து, நீ நோக்கு ஜஸ்ட் ஒன் வீக், ஆ ரஷ்யாகாரியை ஈ சேட்டன் மடக்கும்!"

"இதுக்கு நீ பேசாம நிண்ட ஒய்ஃபை நாட்டுக்கு அனுப்பிட்டு இவ்விட ஜாலியாய்ட்டு இருக்கலாம் ரெவி!"

"நோ நோ எனக்கு வளர வளர பிரேமம்......... அவல் மேல இல்லடோ அவ சேலரி மேல!"

சரி, இதுக்கும் மேல இவனை பேச விட்டா இவன் உயிருக்கு ஆபத்துன்னு நெனச்சுகிட்டு ஒரு தம்மை கொடுத்து அனுப்பிட்டு போனை எடுத்து
" சேச்சி விஷேஷம் கேட்டோ"ன்னு கேட்டேன்.

ரெண்டு காதிலும் புகை சேச்சிக்கு! அடுத்த நாள் ரெவிக்கு ஃபீவர்ன்னு லீலெட்டர் குடுத்துச்சு சேச்சி! ஏன் ஜுரம் வந்திருக்கும்? தெரியலையே, தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!

55 comments:

  1. சேட்டா நிங்களும் ஆ ஆள் பத்தி நன்னாயிட்டு அறிஞ்சிட்டில்லா.
    பின்ன எங்கன ஞான் பிரேமிக்கான்

    ReplyDelete
  2. Y this Kolai veri?

    Thols... so far ur star week posts have been execellent.. keep going :))

    ReplyDelete
  3. இதை அப்படியே "ஜெகத்" எழுதிய நிரலில் கொடுத்து மாற்றி அப்படியே சிகரெட் வாங்க வந்த ஆளுக்கு மலையாளத்தில் அனுப்பினா... "உங்க காதுலேந்தும் புகை வரும்".
    செம லொல்லுப்பா. :-))
    நண்பரகள்் யாராவது இனி வருவாங்க உங்க கேபின் பக்கம்?

    ReplyDelete
  4. வந்துட்டென் வந்துட்டென்

    ReplyDelete
  5. வளர நன்னாயிட்டு உண்டு :)

    ReplyDelete
  6. mun vinai seyyin, pin vinai thaana varum... ithai settan arinjitilla..

    thurogam illaiyo...

    ReplyDelete
  7. வந்தனம்!!!!!...வந்தனம்!!!!

    சபைக்கு வந்தனம் வந்தனம்!!!!!!!

    வந்த சனம் குத்தனும் குத்தனும்

    பின்னூட்டமா குத்தோனும் குத்தோனும்!!!!!

    இப்படி சொல்லிட்டு பின்னூட்ட பொட்டிய ஏன் மூடிட்டிங்க....

    உங்க வார்தைக்கு மரியாதை குடுத்து ஒரு வாரம் ஆபிஸ்கு லீவு போட்டுட்டு பின்னூட்டமா குத்திக்கிட்டு இருக்கென்....

    ReplyDelete
  8. Your comment has been saved and will be visible after blog owner approval.

    என்னது இது ?????? முடியல நான் வெளிநடப்பு செய்யறென்.... bye bye

    ReplyDelete
  9. //ரெண்டு காதிலும் புகை சேச்சிக்கு! அடுத்த நாள் ரெவிக்கு ஃபீவர்ன்னு லீலெட்டர் குடுத்துச்சு சேச்சி! ஏன் ஜுரம் வந்திருக்கும்? தெரியலையே, தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!//

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்...இது மட்டும் தான் ஞாபகத்துக்கு வருது இப்போ

    ReplyDelete
  10. //
    ஏன் ஜுரம் வந்திருக்கும்? தெரியலையே, தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!
    //

    ஆமா சொல்லுங்கப்பா

    இப்பவே தெரிஞ்சி வச்சிகிட்டா யூஸ்புல்லா இருக்கும்.

    ReplyDelete
  11. அபி அப்பா ,

    நீங்களே சொல்லும் ஓய்

    எவ்வளவு வாங்கியிருப்பீரு

    ReplyDelete
  12. என்ன இது ஒரு மனுசன் வாழ்க்கையில் விளையாண்டுட்டு ... சிரிச்சிக்கிட்டு கேள்வியா கேக்கறீங்க... நியாபகம் இருக்கா ஒரு வரி"" ஒருமனிதன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுக்கிறான்.."' எங்கயோ கேட்டமாத்ரி இருக்கா... உங்க ப்ளாக்குல தான் முன்னால் இருந்தது... :)

    ReplyDelete
  13. பாவம் ஆயாள் - அநியாயம் சாரே!

    ReplyDelete
  14. நாராயணா நாராயணா...

    ReplyDelete
  15. நாரதர் வேலை நல்லா பண்றீங்க போல இருக்கே...

    ReplyDelete
  16. en intha kola veri?..thala ungalaku evanavathu vaipan appu appurum....konjum carefulla erunga...

    ReplyDelete
  17. பாவம் அயாள்! பிற்பகல் செய்யின் முற்பகல் விளையுமுனு யாரோ சொன்னதா கேள்விப்பட்டிருக்கேன் :-)

    ReplyDelete
  18. மல்லுக்களிடமும் உங்க லொள்ள காமிச்சிட்டீங்களா?
    பாவம் ஆ யாளு!

    ReplyDelete
  19. சாமி கடவுளே காப்பாத்துனு அந்த ஆளு இன்னும் அலறிகிட்டு இருக்காராம்.:)))

    ReplyDelete
  20. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  21. என்னது கமெண்ட் மாடுரேசனா?

    ம்ஹூம்...

    இது நமக்கான் இடம் கிடையாது.

    ReplyDelete
  22. நான் போஸ்ட் படிக்க போறேன்.

    ReplyDelete
  23. பத்த வச்சிட்டயே பரட்டை...

    நீங்க இவ்ளோளோளோளோளோளோளோளோளோளோளோளோளோளோளோளோளோளோளோளோ நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவராராராராராராராராராராராராரா. :(

    ReplyDelete
  24. \\முத்துலெட்சுமி said...
    என்ன இது ஒரு மனுசன் வாழ்க்கையில் விளையாண்டுட்டு ... சிரிச்சிக்கிட்டு கேள்வியா கேக்கறீங்க... நியாபகம் இருக்கா ஒரு வரி"" ஒருமனிதன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுக்கிறான்.."' எங்கயோ கேட்டமாத்ரி இருக்கா... உங்க ப்ளாக்குல தான் முன்னால் இருந்தது... :)\\

    ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  25. குசும்பன் உங்ககிட்ட அபி அப்பா மயிலாடுதுறை நம்பர் இருக்கா. . . . .

    குசும்பன் நீங்க அடிக்கடி அவர போய் பார்ப்பீங்களாமே. . . .

    ReplyDelete
  26. //ஏன் ஜுரம் வந்திருக்கும்? தெரியலையே, தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!//

    ஏன். உங்களுக்கு ஒன்னுமே தெரியாதா???............

    ReplyDelete
  27. //Your comment has been saved and will be visible after blog owner approval.//

    இத பாக்கும் போதெல்லாம் BP எகிறுதே.

    ReplyDelete
  28. என்ன சார் கொடுமை இது..கொடுமை..

    ReplyDelete
  29. மலையாளின்னா உங்கலுக்கு அவ்வலவு கேலியா? ஒருத்தர் வேதம் ஊதுரேன்னு மலையாளிய பேசுகிறார்..நீ என்னடான்ன? சே!

    ReplyDelete
  30. பத்த வச்சுட்டியே பரட்டை... :)

    ReplyDelete
  31. //இதுக்கு நீ பேசாம நிண்ட ஒய்ஃபை நாட்டுக்கு அனுப்பிட்டு இவ்விட ஜாலியாய்ட்டு இருக்கலாம் ரெவி!"//

    உங்க அளவுக்கு அவருக்கு விபரம் பத்தல :)

    ReplyDelete
  32. //மலையாளின்னா உங்கலுக்கு அவ்வலவு கேலியா? ஒருத்தர் வேதம் ஊதுரேன்னு மலையாளிய பேசுகிறார்..நீ என்னடான்ன? சே!//

    இதுல எங்க தமிழன் மலையாளி எல்லாம் கொண்டு வறீங்க.... நண்பர்கள் இடையில் இது போல கலாய்த்தல்கள் நடக்க தான் செய்யும். அந்த ரவி கூட இதை பெரிசா எடுத்து இருக்கார் மாட்டார்.. நீங்க என்னானா... என்னமோ போங்க..

    ReplyDelete
  33. //வெங்கட்ராமன் said...
    குசும்பன் உங்ககிட்ட அபி அப்பா மயிலாடுதுறை நம்பர் இருக்கா. . . . .
    //

    என்க்கிட்ட இருக்கு....

    ReplyDelete
  34. //delphine said...
    YOU TOO THOLS...//

    என்னமோ இப்ப தான் இது முதல் தடவை நடப்பது போல் கேட்குறீங்களே....

    ReplyDelete
  35. நாகை சிவா said...
    பத்த வச்சுட்டியே பரட்டை... :)
    //

    இல்லைய்யே பத்த வைக்காமதான் குடுத்தாரு..:)

    ReplyDelete
  36. இப்படித்தான் நான் எழுதின பதிவை தங்கமணிக்கு மெயிலில் அனுப்பினீங்க அப்படின்னு ஒரு நண்பர் வந்து சொன்னாராம் உங்க கிட்ட. ;-)

    போட்டுக் குடுக்கிறது ஒரு பொழப்பாவே போச்சாய்யா?

    ReplyDelete
  37. என்ன சார்! இப்படி! கிட்டத்தட்ட நாரதர் வேலையால இருக்கு. பாவம் சார் ஏட்டன். ஒரு சிகரெட் போகுதே என்பதற்க்காக குடும்பத்தில் குழப்பம்.
    வாழ்க உங்கள் தொண்டு.

    ReplyDelete
  38. இந்த மக்கள்ஸ நெனச்சா பாவமா இருக்கு.அபி அப்பா பத்தி ஒன்னுமே தெரியலை.
    அவரு ரொம்ப நல்லவரூஊஊஊஊஊஊஊ.சும்மா அங்க பேசுனதை இங்கயும் இங்க பேசுனதை அங்கயும் ஞாபக மறதியாய் சொல்லிடுவார்.மத்தபடிAIR
    எல்லாம் இல்லீங்கோ

    ReplyDelete
  39. //"சின்ன சின்னதாய் சில கலாய்த்தல்கள்!!!"//

    இது சின்ன கலாய்த்தலா? அடடா.. ஒருத்தன் வாழ்வுக்கே உலை வச்சிட்டு.. சின்ன சின்னதாய்???

    இது 100% உண்மையா.. இல்ல கொஞ்சம் உண்மை கலந்த கற்பனையா?

    ReplyDelete
  40. "நச்""நச்""நச்" தொம்ம்ம்ம்ம்ம்ம்., கீழே விழுந்து முட்டிக்கிறது நான் தான்! :P

    கைப்புள்ள சொன்னது ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  41. @அபி அம்மா, கொஞ்சம் என்னனு கேளுங்க! தாங்கலை! :P :P

    ReplyDelete
  42. //அபி அம்மா, கொஞ்சம் என்னனு கேளுங்க! தாங்கலை!//
    அவர்கள் கண்டுக்காமல் விட்டதுதான் காரணம்.

    ReplyDelete
  43. நடத்துங்க நடத்துங்க...ஹ்ம்ம்ம்

    ReplyDelete
  44. நல்ல கற்பனை!

    பிறகென்ன, யாராவது நண்பர்கள்கிட்ட இப்படியெல்லாமா டேஞ்சரா விளையாடுவாங்க ... ஆனா, பாருங்களேன், எல்லாரும் நீங்க சொன்னதை நிஜம்னு நம்பிட்டாங்க ..

    ReplyDelete
  45. கற்பனையோ, நிஜமோ.....

    ///ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் /// இது எதுக்கு "போட்டு" வச்சுருக்கீ்ங்க?!!! :-)

    ReplyDelete
  46. அ(ட)ப்பாவி... முந்தித்தான் அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பார்கள். ஆனா இது கலியுகம் இப்ப எல்லாம் உடனக்குடனம். கண்ணக்கு முன்னாலை பாத்து அ(ட)ப்பாவி ...

    ReplyDelete
  47. Enra Guruvayuruppa, ninkalay avar
    mannikanum, masalaye... chetta...
    Nevathitha

    ReplyDelete
  48. இதில் எந்த வித காமெடியும் எனக்கு தெரியவில்லை. ஒரு வக்கிர புத்திதான் தெரிகிறது. இந்த பதிவை வெளியிடமாட்டீட்கள் என்றாலும் நான் நினைப்பதை சொல்லிவிடுகிறேன்..

    ReplyDelete
  49. \\நாகை சிவா said...

    //மலையாளின்னா உங்கலுக்கு அவ்வலவு கேலியா? ஒருத்தர் வேதம் ஊதுரேன்னு மலையாளிய பேசுகிறார்..நீ என்னடான்ன? சே!//

    இதுல எங்க தமிழன் மலையாளி எல்லாம் கொண்டு வறீங்க.... நண்பர்கள் இடையில் இது போல கலாய்த்தல்கள் நடக்க தான் செய்யும். அந்த ரவி கூட இதை பெரிசா எடுத்து இருக்கார் மாட்டார்.. நீங்க என்னானா... என்னமோ போங்க
    \\

    நன்றி சிவா! மிக்க நன்றி, ஆனாலும் என் பாணி பதில் சொல்லித்தானே ஆகனும். தோழரே! நான் இதிலே கலாய்ச்சதில் தமிழ், மலையாளி என்ற பாகுபாடு எங்கே வந்தது! நான் மலையாளியை கீழ்கண்டபடி எங்கயாவது அந்த பதிவில் கிண்டல் செய்திருக்கிறேனா?

    1. கேரளாவில் சிறு குழந்தைகள் முதல் பல்லு போன மல்லுவரை "எம்பியே" படிச்சிருக்காங்கன்னு அந்த பதிவிலே சொன்னேனா எந்த இடத்திலாவது?

    2.கல்ஃப் நாடுகளில் வேலை பார்க்கும் அத்தனை ச்சாயா பாய்ஸ் மலையாளிகளும் எம் ஏ., எம்பியே படிச்ச உண்மை பத்தி எந்த இடத்திலாவது சொன்னேனா?

    3.டாக்டரே இன்ஞ்னியரு படிப்பையும், இஞ்ஜினியரே வக்கீலாகவும் காசர்கோட் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் வாங்கிய அதிசயம் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?

    4. புரூனே போன்ற நாடுகள் உங்களுக்கு போக பிடிக்காது(முடியாது) என்பது இந்தியாவில் இருக்கும் எத்தனை பேருக்கு தெரியும் என அந்த பதிவில் கேள்வி கேட்ட்கப்பட்டிருக்கிறதா?

    5. பாண்டி, அண்னாச்சி என தமிழர்கள் கிண்டல் செய்வதை கூட காதில் வாங்கிக்காமல் உழைப்பு மட்டுமே நம்பி இருக்கும் தமிழர்களுக்கு எங்கே நேரம் கிடக்கிறது உழைக்காமல் சோறு தின்னும் மலையாளிகளுக்கு?
    நான் சென்ஸ் ரமணி வேரு இடத்துக்கு போ!

    ReplyDelete
  50. இல்லைய்யே பத்த வைக்காமதான் குடுத்தாரு..
    aamaa ivaru pakkathil irunthu paathaaru..

    athuthaan pathavachaachae.. ithai vidava
    atha vera pathavaikanumaakum..

    yaaa minnal.. neenga vera...
    neenga maatiningana ippadi nakkal panuveengala....irukku ungalukkum..

    ReplyDelete
  51. http://asifmeeran.blogspot.com/2007/09/blog-post_27.html

    ReplyDelete
  52. பூக்குட்டி காமெடி இல்லைன்னு சொல்வது உங்க ரசனை.
    ஆனா வக்கிரம்னு சொல்றது மகா மட்டமன ரசனை.
    சிகெரட் குடிப்பது.சைட் அடிபதை பெத்தவங்க கிட்டயோ நண்பனின் மனைவிகிட்டயோ போட்டுக் கொடுப்பது தப்பில்லை.அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது சம்மந்தப் பட்டவர் கண்ணோட்டம்.
    இதில் வக்கிரம் எங்க வந்தது?
    முதல்ல வக்கிரம்ன என்னன்னு தெரிஞ்சிகிட்டு பின்னூட்டம் போடுங்க.
    வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ ன்னு எழுதக் கூடது.

    ReplyDelete
  53. பத்த வச்சிட்டியே பரட்ட....

    ReplyDelete
  54. இதில எங்க வக்கிரம் வந்தது. எல்லாம் பார்க்கிற மனசைப் பொறுத்ததுதான். சும்மா எஞ்சாய் பனண்ணிட்டுப்போங்க.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))