பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 28, 2007

ஒரு கிராமத்து நினைவுகள்!!!

அந்த கிராமத்தில் ஜாதி மத பேதம் எதுவும் கிடையாது அவ்வளவாக. மதம்ன்னு பார்த்தா முஸ்லீம் குடும்பம் ஒன்னு தான். ராஜமுது பாய் வீடு(ராஜா முகமது போலிருக்கு அதான் ராஜமுது ஆகிடுச்சு) கசாப்பு அவர் மாத்திரம் தான் அந்த ஊரிலே. ஆனா தலகறி எடுத்தா மூளை இருக்காது ராஜமுது கறிகடையில. இம்பாலாவுக்கு போயிடும் எட்டாம் நம்பர் பஸ் ஏறி. கிரிஸ்டியன்ன்னு பார்த்தா ஆரோக்கியம் சாரும் அவர் பொண்டாட்டி மேரியம்மாவும். மேரியம்மா ஊர்ல யாருக்காவது ரெண்டு புள்ளைக்கு மேல பொறந்தா ஆப்ரேசன் பண்ணி வைக்க வந்துடும்ன்னு ஊர் முழுக்க அது கிட்ட பயம். பெரிய கோவில் இருக்கே தவிர அக்ரஹாரம் இல்லை.பெரிய குருக்களும் சின்ன குருக்களும் பத்னைஞ்சு நாள் முறை வச்சு வீர சோழன் ஆத்தை தாண்டி இருக்கும் மலைக்குடி அக்ரஹாரத்தில இருந்து வந்துட்டு போவாங்க. காலையில சைக்கிள்ள வந்தாங்கன்னா ராத்திரி அர்த்த சாம பூசை முடிஞ்ச பின்ன அரிக்கன் எடுத்துட்டு போகும் வரை கோவிலே கதி.மடபள்ளி வெங்குடு அய்யரும் ராயர் சாரும் மட்டுமே அந்த சன்னதிதெருவில் வீடு. அதை தவிர கோவில் அறங்காவல் துறை அலுவலகமும் அதை ஒட்டி கோவில் மேனேஜர் வீடும் இருக்கும்.

விடிகாலை நாலு மணிக்கு விழித்து கொள்ளும் அந்த கிராமம் காலை ஒன்பது மணிக்கு எட்டாம் நம்பர் பஸ் மூணாவது ட்ரிப் போன பின்ன அமைதியாகி விடும். பின்பு எண்ணெய் செட்டியார் வீட்டு செக்கு சத்தம் கிரீச் கொய்ங்ங்ங்ங் ம், ராவுத்தரின் சைக்கிளாடும் காய்கறி கடையின் முள்ளங்கி,பீட்ரூட்டு, பெங்களூரு கத்தரிக்காய்(அப்பவே ராவுத்தர் பெங்களூருன்னு பேரை மாத்திட்டார்)சத்தமும், ஈரு,பேனு,பொடுவுக்கு சம்மங்கி வெதய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு சைக்கிள் வியாபாரியின் குரலும், சாண புடிக்கலையோ சாணய்ய்ய்ய்ய் குரலும்,சரஸ்வதி பாடசாலையின் ஓரோன் ஒன்னு கோரஸ் குரல்களும் நடுநடுவே எட்டாம் நம்பர் பஸ் சத்தமும். அது சரஸ்வதி பாடசாலையை கிராஸ் பண்ணும் போது கூடி நிற்கும் பசங்களின் "டைவர் வணக்கம்" குரலும் பதிலுக்கு என்னைக்காவது அவரும் வணக்கம் வைத்தால் உலக அழகியான பின்ன உதட்டை குவித்து அழும் அழகிகள் போல பசங்க போடும் பதில் கூச்சலும் தவிர்த்து பார்த்தால் பகலில் ரொம்ப அமைதியான கிராமம் அது.

மத்தபடி ஊரில் வன்னியர்களும், தலித்துகளும், தேவர்களும், முதலியார்,பிள்ளைமார்களுன்னு எல்லாரும் ஒன்னடி மண்ணடியா மாமா,மச்சான்,தங்கச்சி,அத்தாச்சி,பெரியம்மா அப்படின்னு சொந்தம் கொண்டாடிகிட்டு சந்தோஷமா இருக்கும் கிராமம் அது.

என் அம்மா பிறந்த கிராமம். அப்பாவுக்கு நல்ல மதிப்பு அந்த ஊரிலே மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு. அப்பா எப்பவாவது வருவாங்க நான் என் அம்மா கைபிடிச்சு கிட்டு எட்டாம் நம்பர் பஸ்ஸில் போய் இறங்கியதுமே அம்மா கையை உதறி விட்டு நடராசன்,பிரகாஸ் ன்னு ஓடிடுவேன். மஞ்சு கீத்து கொட்டாய் எங்களுக்கு சொர்க்கம்.குள்ள(ம்)மாவை தேடுவேன். அவர் வண்டி ஓட்டும் அழகு அப்படி. அம்மா போய் இறங்கின உடனே ஊர் முழுக்க கொஞ்சம் கொஞ்சமா சேதி போகும். அம்மாவுக்கு அடுத்த செட் பொம்பளை பசங்க எல்லாம் வந்துடும். என் பாட்டியை ஊரே அக்கம்மான்னு தான்சொல்லும். பாட்டிக்கு அத்தனை ஒரு மதிப்பு ஊரிலே. அந்த தெருவை தவிர எங்கயும் போக மாட்டாங்க, அதிக பட்சமா புடவை இழுத்து போத்திகிட்டு கர்ணம் பிள்ளை வீட்டுக்கு போய் அந்த வீட்டு பாட்டிகிட்ட பேசிட்டு வருவாங்க. மத்தபடி நாத்து நடும் போது ஒரு தடவையும் அறுப்புக்கு ஒரு தடவையும் வயல் பக்கம் போவாங்க. ஆனா உக்காந்த இடத்துல இருந்தே ஊர் சேதி அத்தனையும் தெரிஞ்சுப்பாங்க.

அம்மா போய் இறங்கிவ உடனே அத்தனை தோழிகளும் வந்துடுவாங்க!

"யக்கா, அங்க ராசராச சோழம்பாத்தியாக்கா, என்னவோ போ நீயாவது டவுனுக்கு வாக்க பட்டு போன நல்ல நாலு படம் பாக்கலாம், இங்க பாரு பருத்திகொட்ட அரச்சே தேஞ்சு போறன், உம் மாமியார்காரி என்னா சொல்லுது வரனுமான்னு கேளு லெப்டு ரைட்டு வாங்கிடுவோம்! அத்தான் எப்டி இருக்காங்கக்கா? "- இது அந்த இளசுகளின் கல கல பேச்சு. அம்மாவுக்கு ஒரு பொய்யான கோவம் வரும். ஆனாலும் தனக்காக தன் தோழிகள் தரும் ஆதரவு மனசுக்கு இதமாக இருக்கும்.

"அடி செருப்பால, யேம்மா இவளுங்க கிட்ட ஏதும் சொன்னியா, மாமிய திட்டுராளுங்க காத்துல இந்த சேதி போவுட்டும் பின்ன நான் இங்கயேதான் இருக்கனும் ராட்டி தட்டிகிட்டு, நல்லா குடுத்தாங்க கண் கானா தூரத்துல...."மூக்கை முந்தானையால் சிந்தி கொண்டே அம்மா.....(அந்த கிராமத்துக்கும் மயிலாடுதுறைக்கும் எட்டு கிலோமீட்டர், என்னவோ அம்மா அமரிக்காவிலே வாக்கபட்ட மாதிரி என்ன ஒரு பில்டப்பு) உடனே பாட்டி..

"அட நா இல்லந்த அவள்வோளுக்கு தெரியாத ஊரு சேதியா அதான் கமலா இருக்காளே பத்தாது, ஒரு தடவ மாயவரம் போயிட்டு வந்தான்னா ஒரு மாசத்துக்கு சேதி அச போடுவாளுங்க, மாப்ள நல்ல படியா வச்சிருக்காரா ஒன்ன? நீதானந்த கேட்ட கா காசா இருந்தாலும் கவருமெண்டு காசா இருக்கனுன்னு இப்ப இப்புடி தப்புளி தனமா பேசுற"ன்னு சொன்ன வுடனே அம்மா

"அத விடும்மா, அவுங்களுக்கு என்ன கேப்பார் பேச்ச கேக்கறதுல மன்னனாச்சே, அத விடு இந்த பத்து நாள்ல வருஷ புளி, வருஷ உளுந்து எல்லத்தையும் சரி பண்ணனும் ஆமா குள்ளன்ன எங்க?'' அதுக்கு பாட்டி ..

"காலைல 'அக்கம்மா அண்ட வெட்ட போரன் மம்புட்டி குடு'ன்னு வாங்கிட்டு போனவன் தான் மங்கநல்லூர் பசார்ல பாத்ததா நாக்கீரு சொல்லிட்டு போனாரு, எங்க சுத்துதோ என்ன பண்ணுதோ"

முதல்ல குள்ள(ம்)மாமாவை பத்தி பார்த்தோமானால் அவர் அத்தனை குள்ளம் இல்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு பெயர் வந்தது என்று அவருக்கே தெரியாதாம். எங்களுக்கு சின்ன வயசிலே அவர் கிட்டதட்ட ஒரு அர்னால்டு கணக்கா ஒரு ஹீரோ வாக இருந்தார். மபோசி மாதிரியான மீசை அதை அவர் புறங்கையால் நீவிவிடும் அழகை இன்னைக்கும் பார்த்து கொண்டு இருக்கலாம். தினவெஉத்த தோள்கள்ன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு தோள்பட்டை. மார்பு விரிந்து விரைப்பான முலைகள் கட்டுமஸ்தாக. அவர் சட்டை போட்டு பார்த்ததில்லை. ஆனால் எப்போ அப்பாவை பார்த்தாலும் "அத்தான் இந்த டெரிகாட்டன் சட்டை கிழிஞ்சுதுன்னா எனக்கு தான் அது"ன்னு புக் பண்ணிப்பார். ஆனால் எனக்கு தெரிஞ்சு அப்பாவுக்கு சட்டை கிழிஞ்சதா தெரியலை. நான்கு முழ வேஷ்டி கட்டி பச்சை கலரில் பாம்பே டையிங் மொத்த துணியில் பெல்ட் அதிலே பை வச்சு அதுக்கு மூடி போட்டு பட்டன் போட்டு கிட்டதட்ட சிங்கப்பூர் முதலை மார்க் பச்சை பெல்ட் மாதிரியே கேசவன் டைலர் கிட்டே உக்காந்து தச்சு வாங்கி அதை கட்டியிருப்பார். பின்பு அந்த வேஷ்டியை பட்டாபட்டி டிராயர் தெரியும் படி மடக்கி கட்டி தலையில் ஒரு காசிதுண்டை ஒரு ரவுண்டு முண்டாசு கட்டி காதில் தரையில் நெருப்போடு தேய்க்கப்பட்ட பாதி சுருட்டு சொருகி வைத்து ஒரு கலக்கலாகத்தான் இருப்பார். இதோ அவரே வந்துட்டாரு பாருங்க

"வா வா தங்கச்சி, செல்ராசு சொன்னான் 'யக்காவ எட்டுல பாத்தேன்ன்னு' அதான் ஓடியாந்தேன். நல்லாருக்கியா, அத்தான் எப்டி இருக்குது? பெரியவ எப்டி இருக்கா,எலே மாப்ள அம்மாள எனக்கு ஒரு பொண்ணு பாக்க சொல்லுடா உனக்கு பொண்ணு பெத்து தாறேன்!"

"யம்மா இது பேசுற பேச்ச பாரு, ஆமா காலைல அண்ட வெட்ட போறேன்ன்னு போனியாம் பின்ன மங்கநல்லூருல சுத்திகிட்டு இருந்தியே என்னா நெனப்பு மனசுல?"

"ஆமா ஒனக்கு எப்டி தெரியும் நான் பஜார் போனது, அக்கம்மா, உனக்கு கூட தெரியாத நா பஜார் போனது..கல்யாணம் புள்ள ஒடயார் கடைல ஒரம் எடுத்தார சொன்னாரு அதான் போனேன்".

"சேரின்னே எனக்கு வருஷ புளி வேணும். போயி புளியங்கெள உலுக்கு, டேய் போங்கடி ஆளுக்கு ஒரு கொட்டாபுட்டி எடுத்துகிட்டு, யம்மா தொலசிம்மாக்கா இருக்கா வூட்டுல?"

"தங்கச்சி, புளிய உலுக்குறேன் ஆனா உளுந்து,பயரு பறிக்க ஒரு வாரம் ஆகும் நான் பறிச்சு தட்டி கொட்டி இவளுங்கள வச்சு தீட்டி எட்டுல போட்டு பாஞ்சி நாளுக்கு அப்றம் எடுத்தாரேன் அத்தான டெரிகாட்டன் சட்டை கேட்டிருந்தேன் அத சரி பண்ணி வையி, எத்தன நாளைக்கு ஒங் கொட்டம் தம்பிக்கு கல்யாணம் ஆன பின்ன வர்ரவ கிட்ட கேட்டு தான் எடுத்துட்டு போவனும் அதுக்குள்ள அனுபவிச்சுக்க"ன்னு கலாய்ப்பாரு. அதுக்கு அம்மா "எவ என்னாத்த சொல்றது இது என் வூடு நா வருவேன் வேனுங்கறத எடுத்துட்டு போவேன்"ன்னு தன் உரிமையை நிலை நாட்டிட்டு எழுந்து போகும்.

"அய்யோ அக்கம்மா அங்க பாரு பெருசு போவுது..." இது குள்ள(ம்)மாமா, அதுக்கு பாட்டி

"எலேய் நாகராசு என்ன ரொம்ப கொழுப்பு அதிகமாச்சோ அதான் பாப்பா வந்திருக்குல்ல நாள மெக்காநாளு புத்துக்கு படைக்க சொல்றேன் போ சின்ன பசங்க வந்திருக்கு கண்ணுல பட்டுகிட்டு, குள்ளா அவன போ சொல்லுடா...''

''இல்ல அக்கம்மா இவன ஒரு நாள் இல்ல ஒரு நாளு அறுப்பறுவாளேலயே போட்டு தள்ள போறன் அப்ப நீ குத்திப்ப பாரு நேத்து வக்க புடுங்குற போது ஐஸ் கட்டி மாரி சர்ருன்னு கையோட வாரான்..''.

''எலே வாய கழுவுடா ஒரு மாசம் முன்னாலயே புத்துக்கு படைச்சு இருக்கனும் பாப்பா வரட்டுமே நாட்டு கோழி ஆசையா திங்குமேன்னு நானும் தள்ளி போட்டுகிட்டே வந்தேன் சரி நாளைக்கு படையலுக்கு வேலைய பாரு இப்ப போயி பழம் உலுக்கு போங்கடி கொட்டாபுட்டி எடுத்துகிட்டு, இந்தா(அம்மாவை பார்த்து) தோ பாரு துளசிம்மா வூட்டுல தான் இருக்கா, சின்னசாமி தம்பியும் ஆட்ட திருப்பிகிட்டு போயிடுச வெயிலு கொளுத்துதுல்ல திண்ணைல தான் இருக்கும் போ போயி விசாரிச்சுட்டு வா...''

அம்மா கிளம்பி நாலு வீடு தள்ளியிருக்கும் சின்னசாமி மாமா (எனக்கு தாத்தா) வீட்டுக்கு போய்....

"மாமா என்ன காத்தாட கெடக்குற?" இது அம்மா!

"அட வாடா ராசாத்தி" - அவசர அவசரமா கோவணத்தை மறைச்சு துண்டை கட்டிகிட்டு, "எப்படா வந்த மாப்ள எப்புடி இருக்காரு இந்த பக்கம் வந்தா டெரிகாட்டன் சட்டையில மண்ணு ஒட்டிகுமாமா?"

"அத நீயே கேட்டுக்க மாமா ஒம் மாள்ள வந்த பின்ன, நா வாரத்துக்கு உட்ட ஆடு என்னாச்சு?"

"அது ஒன்னுக்கு நாலா ஆச்சு, நாலுத்தயும் ராவுத்தன்கிட்ட வித்துபுட்டு ஒன் சின்ன மவனுக்கு தம்பி தோழன் செஞ்சி போடனும்ன்னு அக்கம்மா சொன்னுச்சு.. எலேய் தொலசிம்மா தொலசிம்மா குச்சிகார செறுக்கி பாப்பா வந்திருக்கு பாரு காப்பி தண்ணி கொண்டா...அடுப்புகுள்ள தலைய வுட்டா ஒலகத்துல என்னா நடக்குது ஏது நடக்குதுன்னு தெரியாது அவளுக்கு..."

"ந்தா வுடு மாமா, வண்ட வண்டயா திட்டிகிட்டு, புழுத்த நா குறுக்க போவாது உம் ஏச்சுல அதுவும் ஒத்த மனுசி எத்தன பாடு படுது, என்னா சொன்ன எங்காச எடுத்தே எம்புள்ளக்கி தம்பி தோழன் கேக்குதோ தோ பார் மாமா அதுக்கு ஆச இருந்தா அது வாரத்துக்கு உட்ட ஆட்டுல இருந்து பண்ணி போட சொல்லு, என்னுத தொடுற வேல வச்சிகாத சொல்லிட்டேன் அப்புறம் நா பத்ரகாளியா ஆயிபுடுவேன் சொல்லிட்டன்".

"ந்தா கழுத என்ன பேச்சி பேசுற அக்கம்மா ஆட்ட தொட வேண்டாம் ராசாத்தி எலே தொலசி ராவுத்தன வர சொல்லு அந்த என் கடா பெருச வெல பேசு நானும் சின்ன பய பொறந்ததுல இருந்து ஒன்னும் செய்யல...காப்பி குடிடா ராசாத்தி"

அப்போ ராஜ்தூத் வண்டில வந்து சர்க்குன்னு பிரேக் போட்டு நிக்கும் சம்முகம் மாமா,

"வாக்கா எப்ப வந்த போன தடவ வந்தப்ப சொன்னன சீட்டு போட சொல்லி என்னா சொல்ற இந்த தடவ சீட்டுல சேந்தாலே பிளாஸ்டிக் வாலிக்கா..நம்ம காம்ராவூட்டுல தான் அடுக்கி இருக்கு பாத்தியா.."

"இல்லடா சம்முகம் இன்னும் வூட்டயே சுத்தி பாக்கலை. மாமா இருக்குன்னு அம்மா சொல்லுச்சு அதான் சுருக்குன்னு இங்க வந்துட்டேன். பொருவா பொடி மீனு வாசம் வேற வந்துச்சா தொலசிம்மக்கா கை ருசி பாத்து நாளாச்சா அதான் வந்துட்டேன், எலே சம்முகம் அந்த பஸ்ஸ நிப்பாட்டி கண்டக்டருகிட்ட அத்தான நாளக்கி இங்க புத்துக்கு படக்க போவுது சாப்புட வந்துடுங்கன்னு சேதி சொல்லி வுடுடா அவரு கேஸ் கட்டும் போது அத்தான் கிட்ட சொல்லிடுவாரு...."

அப்போ துளசியம்மாக்கா ஒரு தட்டிலே சூடான சாதம் மீன் குழம்பு போட்டு எடுத்துகிட்டு "வா பாப்பா இந்தா சூடா இருக்கச்சே சாப்புடு ஒனக்கு சூடா சாப்டாதான புடிக்கும்"

அம்மா கண்ணுல தண்ணி. அது சூடு,காரத்தாலயா அல்லது மாமியார், புருஷன், கொழுந்தன் எல்லாம் சாப்பிட்டு பின்ன நாத்தனார்கள் கூட உக்காந்து ஆறி போனதை வேண்டா வெருப்பாக சாப்பிடுவதை நெனச்சான்னு தெரியல...

"எலே தொலசிம்மா புள்ளக்கி கண்ணுல தண்ணி வருது பாரு அந்த விசிறி எடு வசிறி உடுறேன்....."

இதுல யார் யார் எந்த எந்த ஜாதியோ! அதான் தஞ்சை கிராமம்!! அப்போ!!!

*******************************************************************

இப்போ அம்மா ஹோண்டாய் அக்செண்ட்ல போனா கூட அந்த கிராமத்திலே அம்மாவின் வருகை அத்தனை முக்கியமா படவில்லை யாருக்கும். நாலு முட்டை பல்பு எரிஞ்ச தெருவிலே சோடியம் கண்னை கூசுது. குள்ள(ம்)மாமா செத்து போயிட்டாரு. சின்ன சாமி தாத்தா போயி சேர்ந்துட்டாரு. பாட்டி இல்ல, துளசியம்மாக்கா எலும்பும் தோலுமா அதே திண்ணையிலே கிடக்கு. அம்மா குரல் கேட்டா பூஞ்சையா மருமகள் கிட்ட "அடியே லதா, பாப்பா வந்திருக்கு பாரு செங்காலா மீனு வாங்கி கொழம்பு வையி"ன்னு சொல்லுது. ஆனா அம்மாவுக்கு தான் நேரமில்லை. அந்த புளிய மரம் வெட்டியாச்சு. பாம்பு புத்து இருந்த இடம் கட்டடமா இருக்கு. சம்முகம் மாமா ஊராட்சி மன்ற தலைவர், சரஸ்வதி பாட சாலை எதிரே உள்ள கொய்யா தோப்பு இப்போ கர்ணம் பிள்ளையின் பெரிய மகன் வீடா ஆகி போச்சு. எட்டாம் நம்பர் பஸ் டிரைவருக்கு மட்டும் அதே கிராக்கி அந்த பள்ளிகூட பசங்க கிட்ட. தெருவுக்கு பத்து பைக். ஒரு கார். ராஜமுது போயாச்சு அவர் பையன் சவுதி போயிட்டதால கறி வாங்க பஜார் தான் போறாங்க. நாட்டு கோழி முட்டை வாங்கிட்டு பெங்களூரு கத்திரிக்காய் வித்த ராவுத்தரை பத்தி யாருக்கும் தெரியலை. செக்கு இருந்த இடம் மைதானமா கிடக்கு. ஆரோகியம் சார் ஆரோகியம் கெட்டு கிடக்காரு.மலைகுடியில் இருந்து சின்ன வயசு குருக்கல் பையன் ஹீரோ ஹோண்டாவிலே வர்ரார். சாந்த நாயகியும்,வாகீஸ்வரரும் மாத்திரம் அதே வவ்வால் புழுக்கை வாசனையில் அப்படியே அன்றைக்கு பார்த்த மாதிரியே இருக்காங்க !!!

52 comments:

  1. super. aana sila idathule enna nadakkuthunnu puriyala. :-S

    ReplyDelete
  2. மீ த ஷெகன்டு....? நான் பார்த்த கிராம வாழ்க்கை (அப்பவும் இப்பவும்) காண்பித்ததற்கு நன்றி.

    அப்போ, இப்ப பேதம் இருக்குன்றீங்களா?

    ReplyDelete
  3. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் .....

    ReplyDelete
  4. கிராம வாழ்க்கை பற்றிய பேச்சு வழக்கு அசத்தல்!

    ஆனா ரொம்ப யோசிச்சிங்களோ (புட் பாய்சன் இன்டர்வல்ல...???!!!)

    மங்கநல்லூருல அந்த ரிஸ்க்கான வளைவுலேர்ந்து நேரா வீரசோழன் ஆத்துக்கரையிலேயே போன தத்தங்குடி அடுத்தாப்ல இருக்கறதுதானே மலைக்குடி எனக்கு சரியா ஞாபகமில்லை ஆனா கோவிலுக்கு நண்பன் கூட போயிருக்கேன்

    ReplyDelete
  5. நல்லா எழுதியிருக்கீங்க...கிரமத்த கண் முன்னாடி நிறுத்துறீங்க...

    ReplyDelete
  6. Unmai Thamilan range la perisa pathivu iruku, first comment pottukaren apparam padika poren.

    ReplyDelete
  7. அபிஅப்பா..
    அப்படியே அள்ளிட்டீங்க... ரொம்ப பிடிச்ச கிராமத்து வருணனைகள்..

    குள்ளமாமா அப்படியே.. பாரதிராஜா பட ஹீரோ கணக்கா அப்படியே நேரில தெரியறாரு..

    கிராமத்து அப்பாவித்தனம் ஒவ்வொரு வசனத்துலயும் தெறிச்சுது..

    மண்ணு மணம் மாறாம எழுதியிருக்கீங்க..

    பாராட்டுக்கள்..
    என்றென்றும் அன்புடன்,
    சீமாச்சு...

    ReplyDelete
  8. Excellent posting

    நான் படிச்சு வள(ர்)ந்த கிராமத்துலகூட இப்டிதான் பேச்சு வழக்கு இருக்கும். அப்டி(யெ)ல்லாம் பேசி வளந்த நான் இப்ப எவ்ளோ ட்ரை பண்ணாலும் அது மாதிரி பேச முடியலை.

    ReplyDelete
  9. மழை வாசத்தை போல கிராம வாசனையை உணர முடிந்தது அபி அப்பா.வாழ்த்துக்கள்

    கட்டிடங்கள், வாகனங்கள் கிராமத்தில் மாறியது காலத்தின் அவசியம், ஆனால் வெள்ளந்தியான கிராம மக்களை மாற்றியது இந்த பஞ்சாயத்து தேர்தல்கள்தான்.

    கவுன்சிலர், ப்ரசிடென்ட் பதவிகளினால் கிராமங்களுக்கு என்னென்ன நன்மைகளோ இருக்கலாம். தெரியவில்லை.

    ஆனால் தாயா புள்ளயா பழகின கிராமசனம், சொந்த பந்தம் எல்லாமே இந்த பஞ்சாயத்து தேர்தல்களுக்கு பிறகுதான் அடியோடு மாறிபோய்விட்டது.

    இனி அந்த வெள்ளந்தியான மக்களை பார்ப்பது கஷ்டம்தான்.

    ReplyDelete
  10. சிவா மாமா திரும்ப உங்க கிராமத்துல ரென்டு நாள் இருந்து பாருங்க. தானா அந்த பாஷை ஒட்டிக்கும்

    எப்டி தானா வந்துச்சுன்னே தெரியாது

    ReplyDelete
  11. வாங்க மைபிரண்ட்! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  12. நன்றி, கெக்கேபிக்குணி சாரே! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  13. வாங்க இளா! விவசாயின்னா விவசாயிதான் ஜாலியா பாட்டு பாடறீங்க:-))

    ReplyDelete
  14. தஞ்சைத் தரணியின் சொல்லாட்சி பதிவினில் விளையாடுது தொல்ஸ்.. உங்க கிராமத்து மீன் குழம்பு வாசம் உங்க எழுத்து மூலம் என் மூக்கை நிறைக்க வைத்திருப்பது உங்க எழுத்தின் வெற்றி.

    ReplyDelete
  15. //அம்மா கண்ணுல தண்ணி. அது சூடு,காரத்தாலயா அல்லது மாமியார், புருஷன், கொழுந்தன் எல்லாம் சாப்பிட்டு பின்ன நாத்தனார்கள் கூட உக்காந்து ஆறி போனதை வேண்டா வெருப்பாக சாப்பிடுவதை நெனச்சான்னு தெரியல...//

    நல்லா ஜாலியா போனது மனச வாரிடுச்சு...

    கடைசில இழந்த, இழந்துட்டு இருக்கிற பல விசயங்கள் அண்ணா.

    அருமையான் பதிவு...

    ReplyDelete
  16. \\ஆயில்யன் said...
    கிராம வாழ்க்கை பற்றிய பேச்சு வழக்கு அசத்தல்\

    வாங்க ஆயில்யன், ஆமா அதே மலைக்குடிதான், ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் உள்ளே சிவன் கோவில். அங்கிருந்து வீர சோழன் ஆத்தை கடந்தால் வரும் இந்த கிராமத்தின் பெயர் பெருஞ்சேரி!! உடம்புக்கு இப்ப ஓக்கே!!

    ReplyDelete
  17. \\TBCD said...
    நல்லா எழுதியிருக்கீங்க...கிரமத்த கண் முன்னாடி நிறுத்துறீங்க\\

    வாங்க டிசிபிடி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
  18. \\இம்சை said...
    Unmai Thamilan range la perisa pathivu iruku, first comment pottukaren apparam padika poren\\

    உண்மை தமிழன் ரேஞ்சுல இருக்கா, :-)) மெதுவா பொருமையா படிங்க!!

    ReplyDelete
  19. \\Seemachu said...
    அபிஅப்பா..
    அப்படியே அள்ளிட்டீங்க... ரொம்ப பிடிச்ச கிராமத்து வருணனைகள்..

    குள்ளமாமா அப்படியே.. பாரதிராஜா பட ஹீரோ கணக்கா அப்படியே நேரில தெரியறாரு..

    கிராமத்து அப்பாவித்தனம் ஒவ்வொரு வசனத்துலயும் தெறிச்சுது..

    மண்ணு மணம் மாறாம எழுதியிருக்கீங்க..

    பாராட்டுக்கள்..
    என்றென்றும் அன்புடன்,
    சீமாச்சு...\\

    வாங்க சீமாச்சு அண்ணா! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும், ஆனா இப்ப அந்த கிராமத்து ஸ்டைல் எதுவுமே பார்க்க முடியவில்லை, நம் குழந்தைகளுக்கு இதை படித்து பார்த்து தான் தெரிஞ்ச்சுக்கணும்!:-(

    ReplyDelete
  20. \\Deepa said...
    Nostalgic post..அருமை\\

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  21. \\delphine said...
    கிராமத்து மண்வாசனை... கொஞ்சம் கூட மாற வில்லை தொல்ஸ். அவ்வளவு அருமை. ஆனா இரண்டு தடவை படிச்சாத்தான் புரியுது. அபிஅப்பா டச் அப்படியே இருக்கு. அதுசரி, இவ்வளவு நாளும் அபிஅப்பான்னு ஓட்டியாச்சு.. எப்போ நட்ராஜ் அப்பாவா வலம் வரபோரீங்க.. நட்ராஜ் பற்றி பதிவு இருக்கா இல்லையா?\\

    வாங்க டாக்டரம்மா! மிக்க நன்றி கருத்துக்கு, தம்பி நட்ராஜ் தானே, சீக்கிரம் கொண்டு வந்துட்டா போச்சு, அவர் பாப்பாவுக்கு மேல கலக்குவார் பாருங்க காமடில:-))

    ReplyDelete
  22. மங்களூர் சிவா said...
    Excellent posting

    நான் படிச்சு வள(ர்)ந்த கிராமத்துலகூட இப்டிதான் பேச்சு வழக்கு இருக்கும். அப்டி(யெ)ல்லாம் பேசி வளந்த நான் இப்ப எவ்ளோ ட்ரை பண்ணாலும் அது மாதிரி பேச முடியலை.

    \\

    வாங்க சிவா, நிலாபாப்பா சொன்ன மாதிரி 2 நாள் அங்க போய் இருந்தா அந்த வட்டார வழக்கு ஒட்டிக்கும். நம்ம ரத்தத்தில் ஊறி போன விஷயமாச்சே!

    ReplyDelete
  23. \\நிலா said...
    மழை வாசத்தை போல கிராம வாசனையை உணர முடிந்தது அபி அப்பா.வாழ்த்துக்கள்

    கட்டிடங்கள், வாகனங்கள் கிராமத்தில் மாறியது காலத்தின் அவசியம், ஆனால் வெள்ளந்தியான கிராம மக்களை மாற்றியது இந்த பஞ்சாயத்து தேர்தல்கள்தான்.

    கவுன்சிலர், ப்ரசிடென்ட் பதவிகளினால் கிராமங்களுக்கு என்னென்ன நன்மைகளோ இருக்கலாம். தெரியவில்லை.

    ஆனால் தாயா புள்ளயா பழகின கிராமசனம், சொந்த பந்தம் எல்லாமே இந்த பஞ்சாயத்து தேர்தல்களுக்கு பிறகுதான் அடியோடு மாறிபோய்விட்டது.

    இனி அந்த வெள்ளந்தியான மக்களை பார்ப்பது கஷ்டம்தான்.\\

    நிலாபாப்பா! சீக்கிரம் முழிச்சுக்கோ, உங்க அப்பா உன் பிளாக்கை யூஸ் பண்றார், ஓடிவந்து அப்பாவை விரட்டிட்டு நீ ஒரு கமெண்ட் போடுப்பா உன் ஸ்டைல்ல!! எனிவே, நன்றி நிலாஅப்பா!!

    ReplyDelete
  24. தூள் அண்ணாத்தே!!!

    ம்ம்ம்... எல்லாப் பேரனுக்கும் அம்மம்மா மேல தான் பிரியம் போலிருக்கு. எதுக்கு நைனம்மாவை பாத்தா அவ்ளவா புடிக்க மாட்டேங்குது?

    ReplyDelete
  25. //Unmai Thamilan range la perisa pathivu iruku//

    அதுல எல்லாம் எங்கள் தங்கம் உண்மைதமிழனை அடிச்சிக்க முடியாது. அடுத்ததா அண்ணன் உண்மைதமிழன் போடபோறாரு பாருங்க திண்டுக்கல் ஆட்டோகிராப். குறைஞ்சபட்சம் 150 பக்கத்துக்கு நான் கியாரண்டி.

    ReplyDelete
  26. \\தேவ் | Dev said...
    தஞ்சைத் தரணியின் சொல்லாட்சி பதிவினில் விளையாடுது தொல்ஸ்.. உங்க கிராமத்து மீன் குழம்பு வாசம் உங்க எழுத்து மூலம் என் மூக்கை நிறைக்க வைத்திருப்பது உங்க எழுத்தின் வெற்றி.
    \\

    மிக்க நன்றி தேவ்! உங்க வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும்!!

    ReplyDelete
  27. நல்ல கிராமத்துக் கதை. நட்சத்திர வாரத்தின் உருப்படியான பதிவு.

    ReplyDelete
  28. \\J K said...
    //அம்மா கண்ணுல தண்ணி. அது சூடு,காரத்தாலயா அல்லது மாமியார், புருஷன், கொழுந்தன் எல்லாம் சாப்பிட்டு பின்ன நாத்தனார்கள் கூட உக்காந்து ஆறி போனதை வேண்டா வெருப்பாக சாப்பிடுவதை நெனச்சான்னு தெரியல...//

    நல்லா ஜாலியா போனது மனச வாரிடுச்சு...

    கடைசில இழந்த, இழந்துட்டு இருக்கிற பல விசயங்கள் அண்ணா.

    அருமையான் பதிவு...\\

    வாங்க ஜேக்கே! ஆமாம் எல்லா பென்ணுக்குமே அவங்க அவங்க அம்மா வீட்டுக்கு போனா ஒரு ஜாலியான சுதந்திரம் தான், என் அம்மா மட்டும் என்ன விதிவிலக்கா!!

    ReplyDelete
  29. //
    நிலா said...
    சிவா மாமா திரும்ப உங்க கிராமத்துல ரென்டு நாள் இருந்து பாருங்க. தானா அந்த பாஷை ஒட்டிக்கும்

    எப்டி தானா வந்துச்சுன்னே தெரியாது
    //
    இல்லடா கண்ணு கிராமத்துக்கு அப்பப்ப போறதுண்டு ஆனா வரமாட்டிங்குது

    ReplyDelete
  30. \\லக்கிலுக் said...
    தூள் அண்ணாத்தே!!!

    ம்ம்ம்... எல்லாப் பேரனுக்கும் அம்மம்மா மேல தான் பிரியம் போலிருக்கு. எதுக்கு நைனம்மாவை பாத்தா அவ்ளவா புடிக்க மாட்டேங்குது?

    \\

    வாங்க வாங்க லக்கி! நம்ம கூடவே எப்போது இருப்பதால் வரும் சலிப்பு போலயிருக்கு அப்பத்தாகிட்ட, ஆனா அம்மம்மாவை எப்பவாவது பார்க்கிறோமா அதான் கொஞ்சம் ஈர்ப்பு, என் அப்பத்தா இறந்த போது நான் 10 வகுப்பு முடிச்ச லீவ், வீட்டில் பிணம் இருக்கும் போது எதிரே கிரவுண்டில் கிரிக்கெட் ஆடி கொண்டிருந்தேன், அதை நினைத்து பல நாள் வருந்தியுருக்கிறேன். இழந்த பின் வரும் பாசத்தை விட இருக்கும் போது அதை அனுபவிச்சிடலாமே ல்க்கி!!

    ReplyDelete
  31. \\வித்யா கலை(ள)வாணி said...
    நல்ல கிராமத்துக் கதை. நட்சத்திர வாரத்தின் உருப்படியான பதிவு.\\

    ஆக மத்தது எல்லாம் உருப்படி இல்லாத பதிவுன்னு சொல்றீங்க:-))

    ReplyDelete
  32. நினைவுகள் அசத்தலா இருக்கு...
    எழுத்து நடையும் வர்ணனைகளும்
    நேரில் பார்க்கவைக்கிறது கதையில் வருபவர்களையும் இடங்களையும்.
    எட்டாம் நம்பர்ல ஏறி உள்ள கிராமத்துல இறக்கிட்டு திருப்பி பஸ்ஸுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கோம் ... இனி தான் டில்லிக்கு வரனூம் திருப்பி. :)

    ReplyDelete
  33. kalakkal + kalakkam! காலங்கள் மாறித்தான் போய்விட்டன நம்மைக்கேட்காமல்!

    ReplyDelete
  34. அபி அப்பா, எங்க ஒளிந்திருந்தது இந்தக் கதை. அருமையோ அருமை.

    ஆகக் கூடி பாட்டி வீடு எங்கேயும் ஒண்ணுதான்.
    இப்ப அது இல்லன்னாக் கஷ்டமா இருக்கு. அப்படியா மாறிடுறாங்க மனுஷங்க??

    ரொம்ப நல்லா இருந்தது அபி அப்பா. மனசுக்கு நெகிழ்ச்சியாப் போச்சு.
    இன்னோருதடவை, இன்னொரு தடவைனு மூணு தடவை படிச்சுட்டேன்.:))

    ReplyDelete
  35. Abi appa,

    Intha mathiri oru eduthala vala vaipu kedaikathannu yenga vechuteenga.

    Arbuthamana pathivu.

    Anbudan,
    Inder

    ReplyDelete
  36. தலைவா அசத்திட்டிங்க :))

    எனக்கு எங்க அம்மா கூட அவுங்க கிராமத்துக்கு போயிட்டு வந்த நினைப்பு வந்துடுச்சி...

    என்னை கொசுவத்தி சுத்த வச்சுடுவிங்க போல இருக்கே..அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  37. \\அபி அப்பா said...
    \\லக்கிலுக் said...
    தூள் அண்ணாத்தே!!!

    ம்ம்ம்... எல்லாப் பேரனுக்கும் அம்மம்மா மேல தான் பிரியம் போலிருக்கு. எதுக்கு நைனம்மாவை பாத்தா அவ்ளவா புடிக்க மாட்டேங்குது?

    \\

    வாங்க வாங்க லக்கி! நம்ம கூடவே எப்போது இருப்பதால் வரும் சலிப்பு போலயிருக்கு அப்பத்தாகிட்ட, ஆனா அம்மம்மாவை எப்பவாவது பார்க்கிறோமா அதான் கொஞ்சம் ஈர்ப்பு, என் அப்பத்தா இறந்த போது நான் 10 வகுப்பு முடிச்ச லீவ், வீட்டில் பிணம் இருக்கும் போது எதிரே கிரவுண்டில் கிரிக்கெட் ஆடி கொண்டிருந்தேன், அதை நினைத்து பல நாள் வருந்தியுருக்கிறேன். இழந்த பின் வரும் பாசத்தை விட இருக்கும் போது அதை அனுபவிச்சிடலாமே ல்க்கி!!\\\

    அபி அப்பா எல்லாம் சரிதான் ஆனா அது என்னமே இந்த மகன்களுக்கு(எனக்கும் தான்) அம்மாவுட்டு சொந்தகளுடன் இருக்கும் ஒரு ஈர்ப்பு அப்பாவுட்டு சொந்தகளுடன் இல்லைன்னு தான் தோணுது....

    ReplyDelete
  38. //இப்போ அம்மா ஹோண்டாய் அக்செண்ட்ல போனா கூட அந்த கிராமத்திலே அம்மாவின் வருகை அத்தனை முக்கியமா படவில்லை யாருக்கும்.//

    சந்தடி சாக்குல ஒரு ஊர்வலம் நடத்தும் அந்த தஞ்சை குசும்பு உங்ககிட்ட ரொம்ப ஜாஸ்தி....

    ReplyDelete
  39. //இப்போ அம்மா ஹோண்டாய் அக்செண்ட்ல போனா கூட அந்த கிராமத்திலே அம்மாவின் வருகை அத்தனை முக்கியமா படவில்லை யாருக்கும்.//

    முகத்தில் அறையும் உண்மையும் கூட....

    ReplyDelete
  40. //பின்ன நான் இங்கயேதான் இருக்கனும் ராட்டி தட்டிகிட்டு, நல்லா குடுத்தாங்க கண் கானா தூரத்துல...."மூக்கை முந்தானையால் சிந்தி கொண்டே அம்மா.....(அந்த கிராமத்துக்கும் மயிலாடுதுறைக்கும் எட்டு கிலோமீட்டர், என்னவோ அம்மா அமரிக்காவிலே வாக்கபட்ட மாதிரி என்ன ஒரு பில்டப்பு) உடனே பாட்டி..//

    இது அல்டிமேட்... நானும் இதே பல தடவை கேட்டு இருக்கேன்...

    ReplyDelete
  41. //அபி அப்பா said...

    \\வித்யா கலை(ள)வாணி said...
    நல்ல கிராமத்துக் கதை. நட்சத்திர வாரத்தின் உருப்படியான பதிவு.\\

    ஆக மத்தது எல்லாம் உருப்படி இல்லாத பதிவுன்னு சொல்றீங்க:-))

    //

    அவங்க எங்க சொன்னாங்க.

    இப்போ நீங்க் தான் சொல்றீங்க.

    ReplyDelete
  42. ஆட்டோகிராப்ல சேரன் தனது கிராமத்துக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்குது உங்க பதிவு. பாராதிராஜாவுக்கு அஸிஸ்டெண்டா போகலாம் நீங்க

    ReplyDelete
  43. அசத்தலோ... அசத்தல்... தேர்ந்த எழுத்தார் எழுதினது போல...

    எப்படி சொல்றதுன்னு தெரியலை... கடா வெட்டி சாப்பாடு சாப்ட மாதிரி இருக்கு...பாட்டியின் அன்பும்..அம்மாவின் உணர்வுகளும் இப்ப என் கண் முன்னால...அருமை அபி அப்பா...

    சிவா தனிப் போஸ்ட் போட்டது இதுக்குத்தான்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. நீங்க எங்கியோ போயிட்டீங்க அபி அப்பா...........
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மறுபடியும் பொகை வருது [மனுஷன் பின்னி பெடலெடுக்கிராரு]
    மெயிண்டெய்ன் பண்ணுங்க.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. //அபி அப்பா said...
    நன்றி, கெக்கேபிக்குணி சாரே! வருகைக்கு நன்றி!//

    "ந‌ன்றி, மாபெரும் தானைத் த‌லைவி கெக்கெபிக்குணி அவ‌ர்க‌ளே! வ‌ருகைக்கு ந‌ன்றி"

    இந்த‌ ஒரு வ‌ரியை 1000 முறை க‌ட் அன்டு பேஸ்டு செய்யுமாறு அன்புட‌ன் ஆணையிடுகிறேன்:-)

    ReplyDelete
  46. இப்போதுதான் உங்கள் நட்சத்திர வார பதிவுகளை ஒவ்வொன்றாக உட்கார்ந்துப் படிக்கிறேன். வழக்கமான இயல்பான நகைச்சுவை உங்களுக்கு எளிதாக வருகிறது. குறிப்பாக இந்தப்பதிவில் நீங்கள் கையாண்டிருக்கிற கிராமத்து மொழி வெகு இயல்பாக இருக்கிறது. கற்பனையாக இல்லாமல் நிஜத்தை எழுதியதால் இது கை வந்திருக்கலாம். கதை என்ற பெயரில் நீங்கள் எழுதியிருப்பதை விட, இந்தப்பதிவில் கதைக்குரிய தன்மைகள் நிறைய இருக்கின்றன.

    எந்த வித சாதி வேற்றுமையும் இல்லாமல் அனைத்து சாதியினரும் ஒற்றுமையாக பழகிய கிராமம் என நீங்கள் குறிப்பிடும்போது, அந்த வரிசையில் தலித் என்றும் எழுதியிருக்கிறீர்கள். மருதநிலத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில், என்னால் இதை நம்ப முடியவில்லை. மற்ற அனைத்து சாதியினரும் ஒற்றுமையாக இருப்பது உண்மைதான். ஆனால், அந்த ஒற்றுமைப்பட்டியலில் நானறிந்தவரை தலித்துகள் வருவதில்லை. ஒருவேளை அப்படியொரு கிராமம் இருந்தால் மெத்த மகிழ்ச்சியே..!

    ReplyDelete
  47. இனியவைகள் அந்த உறவுகள்.................வருமா?

    ReplyDelete
  48. யூத்ஃபுல் விகடன் ‘குட் ப்ளாக்ஸ்’ பரிந்துரையில் இன்று கண்டேன். வெகு அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வட்டார வழக்குப் பேச்சை அப்படியே பதிந்த விதமும் அற்புதம்.

    முத்துலெட்சுமி said...


    // எட்டாம் நம்பர்ல ஏறி உள்ள கிராமத்துல இறக்கிட்டு திருப்பி பஸ்ஸுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கோம் ... இனி தான் டில்லிக்கு வரனூம் திருப்பி. :)//

    அதே:)! ஒரு வித்தியாசம்...இனிதான் பெங்களூரு வரனூம் திரும்பி:)!

    ReplyDelete
  49. கிராம வழக்கு பேச்சுகளை அச்சு அசலாய் அப்படியே இறக்கியிருக்கிறீர்கள்.

    ஒரோன் ஒன்னு
    சாணய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    அருமை..

    முடிவு பாராவும். சூப்பர்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))