பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 29, 2007

நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க!!!!!

"நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்க்கிறாய், எந்தன் நெத்தி பொட்டில் தீயாய்" தடக்குன்னு தூக்கி வாரி போட்டு எழுந்தாள் தீபா, ரிங் டோனாக செட் செய்யப்பட்ட தம் கணவனின் ஆசைப்பாட்டை கேட்டுக்கொண்டே செல்ல போனை எடுத்து "என்னங்க திடீர்ன்னு இப்ப போன்"

"அடி கழுத எப்பவும் கேட்டுகிட்டே இருக்கத்தானா போனெல்லாம் வாங்கி குடுத்தேன் குட்டிம்மா, நெம்பத்தான் அலுத்துக்கற"

"அட அதுக்கு இல்லைங்க, அரக்க பறக்க உங்களை ஆபீஸ் போக வச்சுட்டு செத்த கண்ண மூடிட்டு எழுந்து குளிச்சுட்டு உங்களுக்கு மதியம் சாப்பாடுக்கு தயார் பண்னலாம்ன்னு இருந்தேன், ஆனா அசதியா இருந்துச்சு படுத்துட்டேன் நல்ல வேளை போன் பண்ணி எழுப்பிட்டீங்க"

"என்னாது அசதியா இருந்துச்சா ஏண்டா செல்லம்"

"மொகர கட்டை, சரி என்னது மொபைல்ல இருந்து பேசரீங்க, ஆபீஸ்ல இல்லையா, சைட்டுக்கி போயிருக்கீங்களா"

"ஊகூம் சைட் அடிக்க போய் கிட்டு இருக்கேன்..."

அப்போ காலிங் பெல் சத்தம் கேட்க "கொஞ்சம் இருங்க எந்த கரடியோ வந்திருக்கு பார்த்துட்டு வாரேன்"

கதவை திறந்தா மூர்த்தி காலையில் ஆபீஸ் போன தோற்றம் கொஞ்சமும் கலையாமல் நிற்க தீபா கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்.அவன் கையிலிருந்த லேப்டாப்பை அவசரமா வாங்கிகிட்டு பதறி போய் "என்னங்க உடம்புக்கு முடியலையா என்னாச்சி காலையில நல்லா தானே போனீங்க" என்று பட படத்தாள்!

"இல்ல பசிக்குது அதான் வந்துட்டேன்"

கொஞ்சம் வெட்கத்துடனே செல்ல கோபமாக "அட பாவி மனுஷா காலையில கூட டிசைன் டிசைனா கொட்டிகிட்டு போனியே அதுக்குள்ள பசியா, ஆபீஸ்லயே கேண்டீன்ல கொட்டிகிட்டா என்ன?"

"நானும் அதான் நெனச்சேன் தமிழரசி ஒத்துக்கலை"

"என்னாது, தமிழரசி ஒத்துக்கலையா?''

"ஆமாம் ரெண்டு சமோசா வாங்கி வான்னு சொன்னா என்னமா கோவிச்சுக்கறா, "போங்க சார் 12 லெட்டர் டிராஃப்ட் பன்ன குடுத்துட்டு சமோசா வடைன்னு கிட்டு"ன்னு சலிச்சுகறா சர்தான் போடின்னு இங்க வந்துட்டேன்"

அவன் பேசிகிட்டு இருக்கும் போதே அவன் மேல் வேஷ்டியை தூக்கி போட்டுட்டு சிரித்த்து கொண்டே "பேண்டை கழட்டிட்டு வேஷ்டி மாத்திகோங்க நான் குளிச்சுட்டு வந்து வித்யாசமான சாப்பாடு சமைக்கிறேன் சாப்பிடுவோம்" என்றாள்.

"சரி அதுக்கு என்ன கெக்க பிக்கேன்னு சிரிப்பு வேண்டி கிடக்கு"

"இல்ல உங்க மேல வேஷ்டி கிடக்கா, சாதாரண மூர்த்திய வெண்ணிர ஆடை மூர்த்தியா ஆக்கிட்டனேன்னு சிரிப்பு வந்துச்சு!"

இருவருமே சிரித்தனர்.

"சரி எனக்கு வித்யாசமான சாப்பாடுன்னு வேற சொல்லிட்ட ஒரு கை ஓசை நல்லா இருக்காது, என்ன செய்யனும் சொல்லு நான் ஹெல்ப் பண்ரேன் நீ குளிச்சுட்டு வரும் முன்ன செஞ்சு வைக்கிறேன்."

"என் தங்கம் அது போதும்டா ராசா, தோ பாருங்க விதை மல்லி ஒரு 100 கிராம் எடுத்துகோங்க,கடலை பருப்பு 2 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன், பட்ட மிளகாய் 6 எடுத்துகோங்க"
சொல்லி கொண்டே மள மளன்னு அழுக்கு துணிகளை எடுத்து ஒரு பக்கெட்டில் போட்டு கொண்டாள். மூர்த்தியும் தீபா சொன்ன எல்லாம் எடுத்துவிட்டு கிச்சன்னிலிருந்து "எடுத்தாச்சு இப்ப என்ன செய்யனும்மா" என்று குரல் விட

"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் நான் வந்து சமைச்சுகறேன், எடுத்து கையில வச்சிருப்பதை வானலில கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்துடுங்கப்பா பொன் முருகலா இருக்கனும்"
எடுத்த துணிகளில் நீர் பிடித்து ஸர்ஃப் போட்டு முடிக்கும் போது அவளுக்கு வந்த வாசனை வைத்தே "என்னங்க போதும் வற்த்தது இதுக்கு மேல வருத்தா கருகிடும் இப்போ அதை மிக்சில போட்டு பொடியாக்கிடுங்க நான் பாத்ரூம் உள்ல போரேன் சந்தேகம்ன்னா கேளுங்க"

"மே ஐ ஹெல்ப் யூ"

"அடி படுவீங்க சமையல்ல ஹெல்ப் பண்ணா போதும்"

உள்ளே போன தீபா "ஹல்லோ புருஷா ஒரு உதவி வேனுமே?"

"அதான் கேட்டேன் முதல்லயே சரி கதவை திற"

"யோவ் நல்லா வருது வாயில"

"அப்பூடியா சொல்லவே இல்லியே கள்ளி..."

"அலுக்கு பையா இது அது இல்ல, நான் சொல்றத கேளுங்க ரெண்டு பிஞ்சு கத்தரிக்காய் பெருசா வச்சிருக்கேன் பாருங்க பிரிட்ஜ்ல அதை எடுத்து கழுவிட்டு நம்ம குமட்டி அடுப்பிலே கரி போட்டு நெருப்பாக்கி அதிலே சுடுங்க பின்ன மேல் தோல் கருகி உரிஞ்சு வரும் அதை எடுத்துட்டு பின்ன மிக்ஸில போட்டு அதை கீரை மாதிரி கடைஞ்சு எடுத்து தனியா வச்சுடுங்க, அப்படியே குக்கர்ல 1 டம்ளர் அரிசி போடுங்க"
"சரி, கத்திரிக்கா பிஞ்சுன்னு சொன்ன முத்தலா இருக்கும் போல இருக்கே"

'அது பிரிஜ்ல இருந்துச்சுல்ல அதான் கொஞ்சம் வெத வெதன்னு தண்ணில போடுங்க சரியாகிடும்" பாத்ரூம் உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்!

"சரி செஞ்சாச்சு வேற என்ன செய்யனும் சீக்கிரம் குளிச்சுட்டு வாடா"

"சரி வர்ரேன், தோ பாருங்க ரெண்டு தக்காளி பொடியா அரிஞ்சு வைங்க இதோ வர்ரேன், வேற ஒன்னும் செய்ய வேண்டாம் நான் வந்து மீதியை பார்த்துக்கறேன். ஒரு பெரிய நெல்லிக்கா அளவு புளி மாத்திரம் ஊற வைச்சுடுங்க""சரிப்பா சீக்கிரம் வா"

"ஏங்க சொல்ல மறந்த கதை ஒன்னு இருக்குங்க"

"என்னாது சொல்லி தொலை"

"கோவத்த பாரு...அப்படியே அடுப்பு மேல இருக்கும் வானலில கொஞ்சம் எண்ணெய் ஊத்தி லைட்டா கடுகு உளுத்தம் பருப்பு தாளிங்க ப்ளீஸ், நான் வந்து மீதியை பார்த்துக்கரேன்"

"சரி குக்கர் 2 விசில் வந்துடுச்சே இப்ப என்னா பண்ணும்"

"அதை நல்லா ஊக்குவிக்கிற மாதிரி பதிலுக்கு நீங்களும் விசில் அடிங்க"

"டேய் கதவ உடச்சிகிட்டு வந்தன்னா தெரியும் அடி கொன்றுவேன்"

" அது கிடக்கட்டும் தாளிச்சாச்சா, இந்த கேப்புல 1\4 கிலோ சின்ன வெங்காயத்தை உரிச்சுடுங்க பின்ன மூணாவது விசில் வந்துடுச்சு அதை இரக்கிடுங்க"

"சரி, டண்,"

" அடுத்து தாளிச்சது தலையில அந்த உரிச்சு வச்ச வெங்காயத்தை அதிலே போட்டு வதக்கனும் பின்ன அதுக்கு மேல வெட்டி வச்ச தக்காளிய கொட்டுங்க""சரி செஞ்சாச்சு, நீ சீக்கிரம் வா, என் பசியே போயிடும் போல இருக்கு, பின்ன தமிழரசிய விட்டு சமோசா வாங்கி தின்ன போயிடுவேன்"

"இருங்க வந்துட்டேன், என்ன பறக்குரீங்க நான் வந்து மீதிய பார்த்துகறேன், நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம், இப்ப லைட்டா தண்ணி ஊத்தி கொதிக்க விடுங்க, என்னாது ஊத்தி அது கொதிக்குதா அப்ப சரி என் செல்லம் இப்ப கடஞ்சு வச்ச அந்த கத்தரிக்காயை அது தலையில கொட்டுங்க"
"தீபா இப்பவே லைட்டா ஏதோ நல்ல சமையல் மாதிரி வாசனை வருதுடா" அடுத்து என்ன செய்யட்டும்"

"இப்ப லைட்டா கொதி வந்த பின்ன முதல்ல மிக்ஸில போட்டு அடிச்ச்ச பொடி அந்த மசாலா பொடியை அதுல போடுங்க பின்ன தண்ணியாவும் இல்லாம கெட்டியாவும் இல்லாம இருக்குர மாதிரி பாத்துகோங்க"
"சரி உப்பு போட வேண்டாமா"

"குட் கொஸ்டின், இப்ப தேவையான அளவு போடுங்க, உப்பு
சுகர் பார்ட்டி எல்லாம் தான் ஷேத்ராடணம் போயிடுச்சே ஷேத்ராடணம்"

"ஏய் எங்க அம்மா அப்பா கால்ல விழலைன்னா உனக்கு தூக்கமே வராதே, சரி இப்ப என்ன செய்யனும்"

"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் நான் வந்து பார்த்துகரேன், இப்ப புளி கரைசலை அதிலே ஊத்துங்க, சரியா இப்ப உப்பு காரம் பாருங்க"
"உப்பு சரியா இருக்கு, காரம் கொஞ்சம் பத்தலை"

"சரி கொஞ்சமா மிளகாய் பொடி போட்டு கொதிக்க விடுங்க அடுப்பை சிம்ல வச்சு மூடி போட்டு மூடி வச்சுடுங்க நான் வந்து மீதிய பார்த்துக்கரேன்"
"சரி என்ன சோப்பு அது இத்தன வாசனையா இருக்கு"

"லூசு பையா நான் குளிச்சு முடிச்சு டிரஸ் மாத்திகரேன், இன்னிக்கு உங்க கைலி சட்டை போட்டுக்க ஆசை போட்டுக்கவா"

"அடிப்பாவி எதையாவது பன்ணு சீக்கிரம் வா, வேற என்ன செய்யனும் அடுத்து"

"ஏங்க சொல்ல மரந்துட்டனே கொஞ்சம் மிளகு, சீரகம், முந்திரி எடுங்க அதை நெய்யில வறுங்க பின்ன 1,2ந்தா மிக்சில உடைங்க ஒரு விஷயம் இருக்கு சொல்றேன்"

"ஏங்க என்ன சத்தத்தையே காணும், அதிலேயே கொஞ்சம் நெய் கூட போட்டு குக்கர் திறந்து சாதத்தை அதிலே கொட்டி கிளருங்க, வேற ஒன்னும் செய்ய வேணாம் அப்படியே ரெண்டு தட்டு எடுத்து கழுவி ஊஞ்சல் மேல வச்சிடுங்க தோ வந்துடறேன், மறக்காம பார்த்த முதல் நாளே பாட்டு போடுங்க ஹோம் தியேட்டர்ல மெல்லீசா"

"வச்சாச்சு வா சீக்கிரம்"

"வந்துட்டேன், என்னங்க உங்க கைலி எப்படி இருக்கு"

"கிட்ட வா நாயே முழு சமையலும் என்னயே செய்ய வச்சுட்டு நொடிக்கு ஒரு தடவ "நீங்க ஒன்னும் செய்ய வேந்தாம் நான் வந்து மீதிய பார்த்துக்கரேன்னு டயலாக் வேர அடி ராஸ்கல்"

"ஏங்க இதுக்கு என்ன பேர் தெரியுமா கொத்ஸூ சிதம்பரம் கொத்ஸு, அந்த சாதம் பேர் சம்பா சாதம் ரெண்டு பேருக்கும் செம பொருத்தம் நம்ம மாதிரி"

"கொத்சுன்னா பிளாக் எல்லாம் எழுதுவாரே அவரா"

"யோவ் நக்கலா இத்தன கஷ்டப்பட்டு சமைச்சா கிண்டல் கேக்குதா மரியாதையா கிளம்பி ஆபீச்க்கு போங்க எனக்கு இப்படி லீவெல்லாம் போட்டா பிடிக்காது"

அப்போ போன் அடிக்க தீபா எழுந்து போனை எடுத்து"ம் தமிழரசியா, இல்லப்பா சாருக்கு நெருப்பா கொதிக்குது...ஊகூஉம் வர்ரத்துக்கு ச்சான்ஸே இல்ல கொஞ்சம் பாத்துக்கப்பா ஆபீசை".......................

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கதை முடிஞ்சுது, அவ்ளவ் தான் அடுத்த வீட்டை எட்டி பார்க்க எத்தன ஆசை, போங்க போய் சிதம்பரம் கொத்ஸும், சம்பா சாதமும் செய்யுங்க!!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

\\அபிஅப்பா நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர் பார்க்கலை நீங்களா இப்படி\\

\\யூ டோ அபிஅப்பா:-((\\

\\அழ.வள்ளியப்பா said அபிஅப்பா எனக்கு அவமானமா இருக்கு கண்றாவி, இங்க பாருங்க உங்க ஊர் சாண்டில்யன் என் பக்கத்துல குதிச்சு குதிச்சு சிரிக்கிரார்:-((\\

போதும் போதும் விட்டுடுங்க.....................

52 comments:

  1. சமையல் முடிஞ்ச உடன் கரிஞ்ச வாசனை வந்ததே!
    அதான் பின்னூட்டம் போட நாங்க இருக்கோம்ல? அப்புறம் நீங்க ஏன் போடனும்?

    ReplyDelete
  2. இது எல்லாம் பேச்சு இலர் மேட்டர் மாதிரில இருக்கு... அப்ப என் மாதிரி பேச்சிலர் க்கு என்ன வேலை... நான் கிளம்புறேன்....

    ReplyDelete
  3. நிறையா தமிழ் சினிமா பாப்பீங்க போல இருக்கு.... கவித்துவமா இருக்குனு கூட சில பேர் பின்னூட்டம் போடலாம்... அவங்களையும் தப்பு சொல்ல முடியாது....

    ReplyDelete
  4. தீபா னு பெயரை யூஸ் பண்ணிங்க பாருங்க.. இங்க தான் உங்களோட வக்கிரம் புத்தி தெரியுதுனு யாரு சொல்லாம். ஆனால் நமக்கு பிடிச்சவங்க பெயரை இது போன்ற கதையில் உபயோகப்படுத்துவதை ஒரு அழகான விசயம் தான். :)

    ReplyDelete
  5. தீபா பெயர் போக... கதையின் மற்றொரு கதாபாத்திரத்துக்கு தமிழரசி என்று தமிழ் பெயர் வைத்தால் தப்பித்தீர்... இல்லனா ரவுண்ட் கட்டி இருப்பாங்க தெரியும்ல....

    ReplyDelete
  6. இது உண்மை கதையாக இருந்தால் இவ்வளவு அப்பிராணியா நீங்க..... வீட்டிலும் சமையல் வேலை செய்து ஆபிஸ்லையும் வேலை செய்து... ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு உங்க நிலைமை... அதுக்கு தான் துபாய் ஒடிட்டிங்களா...

    நீங்க துபாய் போனதுக்கு இந்த ஒரு வாரத்தில் ஒரு 6,7 காரணம் வந்துடுச்சுல... ;)

    ReplyDelete
  7. //சிதம்பரம் கொத்ஸும், //

    இது எங்க வீட்ல அடிக்கடி செய்வாங்க.. மெய்யாலுமே டேஸ்டா இருக்கும்.... இட்லிக்கு இதுவும் ஒரு நல்ல காம்பினேஷன்....

    ReplyDelete
  8. அண்ணாத்த அந்த சமையல் குறிப்ப மட்டும் தனியா பிரிச்சு,இது எங்கள மாதிரி தனியா கிடந்து கஷ்ட்டப்படுற ஆளுங்களுக்கு சமையல் குறிப்பின்னு தனி டைட்டில்ல போடுங்க...!

    மத்த விஷயத்தை - அது எக்கேடு கெட்ட எனகென்னா?

    ReplyDelete
  9. இதுவும் என் சமையல் குறிப்பு புத்தகத்தில் திருடியதுதானே? குசம்பர் உங்களிடம் கொடுத்துட்டாரா? இன்னும் எத்தனை பேர் அத வச்சே பதிவுப் போட்டு சமாளிப்பீங்க :-))? ஆமா கதைன்னு வகைப்படுத்தியிருக்கீங்களே கதை எங்கே? :-)

    ReplyDelete
  10. அடப்பாவி மனுசா, பொண்டாட்டி ஊருக்குப் போன நேரம் பாத்தா இந்த பதிவ போட்டு வயத்தெரிச்சல் பண்ணுவ?

    ஹும் அவ இருந்திருந்தா இந்த மழை நேரத்துக்கு சிதம்பரம் கொத்ஸு செஞ்சிருக்கலாம்.

    இங்க வேற தமிழரசியும் இல்ல.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. அபி அப்பா இந்த சிதம்பரம் கொத்சு டாடிஸ் மட்டும் தான் பண்ணுவாங்களா?

    எங்க அப்பா என்ன சிஸ்டம் முன்னாடி கூட விடாம படிச்சுகிட்டு இருக்காரு???

    எனக்கு ஒன்னும் புரியல

    ReplyDelete
  12. அட ஏங்க கண்ணாலம் கட்டாத பசங்க மனசயெல்லாம் கெடுக்கறீங்க?அந்த பசங்கள்ளாம் இதப்பாத்துட்டு கல்யாணம் பண்ணா இவ்ளோ ஜாலியா இருக்கும்ன்னு நெனச்சு ஏமாறபோறாங்க.

    ReplyDelete
  13. இதே மாதிரி வேர சமையல் குறிப்பு இருந்தாலும் ஜொள்ளுங்க சாரி சொல்லுங்க, ரொம்ப உபயோகமா இருக்கும்

    ReplyDelete
  14. சிதம்பரம் கொத்சு பொண்டாட்டி குளிக்கும் போது மட்டும் தான் செய்யனுமா இல்ல மத்த நேரத்திலும் செய்யலாமா?

    ReplyDelete
  15. புலியாரே! இதன்ன, க்ளாஸா அட்டண்டண்ஸ் குடுத்துகிட்டு வந்து பின்னுங்க என்னை!

    \இது பேச்சு இலர் மேட்டர் இல்லப்பா காலம் வரும் உனக்கும் இருக்குடி ஆப்பு\
    \நானா தமிழ் படமா யோவ் நான் அய்யனார் பிரண்டாக்கும்\\

    \\தீபான்னு பேர் வச்சது எதேர்ச்சையா\\

    \\பின்ன எத்தன காலத்துக்கு தான் மேரி\ரீட்டான்னு ஸ்டெனோ இருப்பாங்க அந்த காலத்துல ஆங்லிலோ இந்தியர்கள் தான் அந்த போஸ்ட்க்கு வந்தாங்க இப்ப காலம் மாறிப்போச்சே\\
    \\அடப்பாவமே எவனாவது கதை எழுதினா "அது உண்மை கதையான்னு கேட்டு கேட்டே வெட்டி பாலாஜிய சாத்தி எடுத்து ரொம்ப நாள் பின்ன இப்பதான் எழுத ஆரம்பிச்சாரு....நல்லா இருங்கடே...\\

    ReplyDelete
  16. நல்ல பதிவு.

    இன்னும் படிக்கலை. படிச்சுட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்.

    நான் முன்னால போட்ட பின்னூட்டங்கள் ரெண்டு இன்னமும் வெளிவரலை என்பதை தாழ்மையோடு தெரிவிச்சுக்கறேன்.

    ReplyDelete
  17. \\வடுவூர் குமார் said...
    இது கதையா??!!..
    \\

    வாங்க குமாரண்னே! ஒரு கட்டுமான பதிவு கூட போடலைன்னு கோவமா போட்டுடலாம்:-))

    ReplyDelete
  18. சிதம்பரம்

    கொத்சு

    சம்பா

    சாதம்

    பொருத்தம்

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  19. அடே பாவி ஆயில்யா, அதுக்குதானே சமையல் குறிப்பை மாத்திரம் போல்டா போட்டிருந்தேன், நம்ம ஊர் பசங்களுக்கு இந்த கருமாந்திரம் எல்லாம் பிடிக்காதுன்னு தெரியுமே! படிச்சு தொலச்சுட்டியா ஆண்டவா!

    ReplyDelete
  20. \\ஜெஸிலா said...
    இதுவும் என் சமையல் குறிப்பு புத்தகத்தில் திருடியதுதானே? குசம்பர் உங்களிடம் கொடுத்துட்டாரா? இன்னும் எத்தனை பேர் அத வச்சே பதிவுப் போட்டு சமாளிப்பீங்க :-))? ஆமா கதைன்னு வகைப்படுத்தியிருக்கீங்களே கதை எங்கே? :-)
    \\

    வாங்க ஜஸீலாக்கா! எங்க பிஸியா, சரி போகட்டும்! எனக்கு 12 வருஷமா கொத்ஸு\சம்பா சாதம் தெரியும் அப்ப நீங்க அபிபாப்பா மாதிரி இருந்திருப்பீங்க, அப்பவே சமையல் குறிப்பு புத்தகம் போட ஆரம்பிச்சாச்சா, வெரி குட் வெரி குட்:-))

    கதைய காக்கா தூக்கிட்டு போயிடுச்சு, ஒரு மனுசன் கதை எழுத விட மாட்டீங்களே, குமாரண்னே கதை எங்கன்னி கேக்குறார், ஆக ஒரு குரூப்பாதான் இருக்கியலா:-))

    ReplyDelete
  21. வாய்யா பேர சொன்னா பயப்படுபவரே! நீர் யாருன்னு எனக்கு தெரியும்:-))

    ReplyDelete
  22. குட்டி பெண்ணே நிலாபாப்பா! அப்பா இன்னிக்கு முழுக்க மானிட்டர்தான் கதி! அம்மாவை கூப்பிட்டு ரெண்டு சாத்து சாத்த சொல்லும்மா:-))

    ReplyDelete
  23. //
    குமட்டி அடுப்பிலே கரி போட்டு நெருப்பாக்கி அதிலே சுடுங்க பின்ன மேல் தோல் கருகி உரிஞ்சு வரும்
    //
    கேஸ் அடுப்பில் சுட முடியுமா??

    ReplyDelete
  24. அபி அப்பா எங்களை மாதிரி சின்ன பசங்களுக்கு ஏற்றார் போல கதை எழுதுங்க....இதெல்லாம் ஒன்னுமே பிரியல..

    ReplyDelete
  25. \\என் தங்கம் அது போதும்டா ராசா\\

    இந்த மாதிரி எல்லாம் எத்தினி மாசம் கூப்பிடுவாங்க...

    ReplyDelete
  26. \\இதே மாதிரி ஏமாந்தவன் said...
    அட ஏங்க கண்ணாலம் கட்டாத பசங்க மனசயெல்லாம் கெடுக்கறீங்க?அந்த பசங்கள்ளாம் இதப்பாத்துட்டு கல்யாணம் பண்ணா இவ்ளோ ஜாலியா இருக்கும்ன்னு நெனச்சு ஏமாறபோறாங்க.

    September 29, 2007 6:24 PM


    சமையல் குறிப்பு மட்டுமே படிப்பவன் said...
    இதே மாதிரி வேர சமையல் குறிப்பு இருந்தாலும் ஜொள்ளுங்க சாரி சொல்லுங்க, ரொம்ப உபயோகமா இருக்கும்\\\\

    தலைவா! தலைப்பை பாருங்க! புதுசா மண்னாலம் கட்டிகிட்ட 90 நாள் இப்படித்தான் இருக்கும் அதுக்குள்ள சமையல் கத்துகிட்டா உண்டு இல்லாட்டி இல்ல!:-))

    ReplyDelete
  27. இதில் எந்த வித சமையல் குறிப்பும் தெரியவில்லை. உங்கள் வக்கிரத்தைதான் இது காட்டுகிறது.

    (எப்படியும் இப்படி ஒரு பின்னூட்டம் வரத்தான் போவுது பாருங்க)

    ReplyDelete
  28. \\லக்கிலுக் said...
    நல்ல பதிவு.

    இன்னும் படிக்கலை. படிச்சுட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்.

    நான் முன்னால போட்ட பின்னூட்டங்கள் ரெண்டு இன்னமும் வெளிவரலை என்பதை தாழ்மையோடு தெரிவிச்சுக்கறேன்.\\

    ஆண்டவா நம்ம பின்னூட்டம் பூமராங் போல வருதே திருப்பி:-))

    லக்கியாரே! போட்டாச்சு போட்டாசு! வந்துடுச்சான்னு பாருங்க குளிச்சுட்டு வரலாம்ன்னு பாத்தா அதுக்குள்ள கோவமா:-))

    ReplyDelete
  29. \\மங்களூர் சிவா said...
    //
    குமட்டி அடுப்பிலே கரி போட்டு நெருப்பாக்கி அதிலே சுடுங்க பின்ன மேல் தோல் கருகி உரிஞ்சு வரும்
    //
    கேஸ் அடுப்பில் சுட முடியுமா??\\

    இல்ல சிவா இந்த கதையில ஒரு அடுப்பில் வானலியும், அடுத்த அடுப்பில் குக்கரும் இருக்குதுல்ல, அதான் சாமி கும்பிட்டு சாம்பிரானி போட வச்சிரூக்கும் குமட்டி அடுப்பில சுட சொன்னாங்க! தவிர குமட்டி அடுப்பிலே சுடுவதுதான் ட்ரெடிஷனல் நல்லா இருக்கும் டேஸ்ட், ஆனா இப்பல்லாம் வேக வச்சுறாங்க ஆனா அந்த டேஸ்ட் வராது!!

    ReplyDelete
  30. //"சரி எனக்கு வித்யாசமான சாப்பாடுன்னு வேற சொல்லிட்ட ஒரு கை ஓசை நல்லா இருக்காது, என்ன செய்யனும் சொல்லு நான் ஹெல்ப் பண்ரேன்//


    ஒரு கை ஓசை நல்லா இருக்காது அதனால்தான் நாமெல்லாம் ரெண்டு கையால சமைக்கறமோ?
    அபி அப்பாகிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம் போலிருக்கே....

    ReplyDelete
  31. \\கோபிநாத் said...
    அபி அப்பா எங்களை மாதிரி சின்ன பசங்களுக்கு ஏற்றார் போல கதை எழுதுங்க....இதெல்லாம் ஒன்னுமே பிரியல..

    September 29, 2007 7:02 PM


    கோபிநாத் said...
    \\என் தங்கம் அது போதும்டா ராசா\\

    இந்த மாதிரி எல்லாம் எத்தினி மாசம் கூப்பிடுவாங்க...\\

    கோபி நீய்யா சின்ன பையன்! கொஞ்சம் கூட சிரிக்காம சோக் அடிக்கிற!

    எத்தன மாசமா? ஜஸ்ட் 90 நாள் தாம்ப்பா:-))

    ReplyDelete
  32. \\நாய்குட்டி said...
    இதில் எந்த வித சமையல் குறிப்பும் தெரியவில்லை. உங்கள் வக்கிரத்தைதான் இது காட்டுகிறது.

    (எப்படியும் இப்படி ஒரு பின்னூட்டம் வரத்தான் போவுது பாருங்க)
    \\

    வாங்க குட்டி!:-))

    ReplyDelete
  33. \\துரியோதனன் said...
    //"சரி எனக்கு வித்யாசமான சாப்பாடுன்னு வேற சொல்லிட்ட ஒரு கை ஓசை நல்லா இருக்காது, என்ன செய்யனும் சொல்லு நான் ஹெல்ப் பண்ரேன்//


    ஒரு கை ஓசை நல்லா இருக்காது அதனால்தான் நாமெல்லாம் ரெண்டு கையால சமைக்கறமோ?
    அபி அப்பாகிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம் போலிருக்கே....\\

    வாங்க துரியோதனன்! :-))

    ReplyDelete
  34. சே இந்த பதிவ எக்காரணத்தைக் க்கொண்டும் வீட்ல பார்த்துல கூடாது. அப்புறம் நம்மதான் சமையல் செய்ய வேண்டி வரும் போல இருக்கே

    ReplyDelete
  35. பதிவு சுமார்'தான்...... ஆனா இதையும் சுவராசியமாக படிக்க வைச்சது....


    புலியோட கமெண்ட்ஸ் தான்..... :)

    //நிறையா தமிழ் சினிமா பாப்பீங்க போல இருக்கு.... கவித்துவமா இருக்குனு கூட சில பேர் பின்னூட்டம் போடலாம்... அவங்களையும் தப்பு சொல்ல முடியாது....//

    ரீப்பிட்டேய்...






    //தீபா னு பெயரை யூஸ் பண்ணிங்க பாருங்க.. இங்க தான் உங்களோட வக்கிரம் புத்தி தெரியுதுனு யாரு சொல்லாம். ஆனால் நமக்கு பிடிச்சவங்க பெயரை இது போன்ற கதையில் உபயோகப்படுத்துவதை ஒரு அழகான விசயம் தான். :)//




    ஹாஹா சூப்பரு.... :)

    ReplyDelete
  36. /இது உண்மை கதையாக இருந்தால் இவ்வளவு அப்பிராணியா நீங்க..... வீட்டிலும் சமையல் வேலை செய்து ஆபிஸ்லையும் வேலை செய்து... ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு உங்க நிலைமை... அதுக்கு தான் துபாய் ஒடிட்டிங்களா...

    நீங்க துபாய் போனதுக்கு இந்த ஒரு வாரத்தில் ஒரு 6,7 காரணம் வந்துடுச்சுல... ;)///


    சான்ஸே இல்லை..... இத படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்....

    எப்பிடி'ப்பா புலி இப்பிடியெல்லாம்???

    ReplyDelete
  37. அண்ணே,

    இப்போ ஒரு லேட்டஸ்ட்'ஆ உன்னாலே உன்னாலே படம் வந்துச்சு, அதிலெ ஹிரோ ப்ரண்ட் ஒருத்தன் வீட்டிலே சமையல் பண்ணிட்டு இருப்பான்..

    அந்த நேரத்திலே போன் அடிக்கும், அதை எடுத்து பேசுறதுதான் காமெடி..


    "ஹலோ, நான் வீட்டிலே கொஞ்சம் பிஸியா இருக்கேன், நாளைக்கு ஆபிஸிலே சும்மா தான் இருப்பேன்... அப்போ போன் பண்ணு பேசலாம்!!"

    ReplyDelete
  38. போன கமெண்ட்'லே ஒன்னே ஒன்னு மிஸ் ஆகிடுச்சு...... :)

    அந்த படத்தை பார்த்தா இனிமே உங்க ஞாபகந்தான் வரும்..... :)

    ReplyDelete
  39. :))

    ஸ்மைலி மட்டும் போட்டா, பதிவ படிச்சிட்டேனா இல்லையான்னு எப்படி கண்டுப்பிடிப்பீங்க??? :))

    ReplyDelete
  40. வெளியே இருந்து பாக்கும்போது அவ்வளவா தோற்றம் இல்லை.ஆன உள்ள போன பிறகு நல்ல விஸ்தீரணத்தில் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய அழகன வீடாகத் தெரிந்தது.சில நுணுக்கமன வேலைப்படுகள் பிரமிக்க வைத்தது நிஜம்.நிறைவோடு வெளியே வரும்போதுதன் கண்ணில் பட்டது அது.
    கருப்பு மையில் சிவப்பு விழிகளை உருட்டி அசிங்கமாக இருந்த அந்த பொம்மை தலை வாசலில் முகபில் இருந்தது.
    இவ்வளவு நேரம் ரசித்த அழகு மறைந்து அந்த பொம்மையே மனதில் உறுத்தியது.
    ம்ம் இப்படித்தான் இந்த பதிவும் எனக்கு
    யூ டூ அபி அப்பா
    சாரி................
    சிதம்பரம் கொத்ஸை கருக வச்சிட்டீங்க

    ReplyDelete
  41. எனக்கு தெரியும்ணே பிளாக் கலர்ல லெட்டர்ஸ் இருந்தா அத பிளாக் பண்ணிட்டுத்தானே படிக்கணும்...?

    ReplyDelete
  42. \\ILA(a)இளா said...
    சே இந்த பதிவ எக்காரணத்தைக் க்கொண்டும் வீட்ல பார்த்துல கூடாது. அப்புறம் நம்மதான் சமையல் செய்ய வேண்டி வரும் போல இருக்கே

    \\

    வாங்க விவசாயி! அப்டில்லாம் ஒன்னும் இல்ல, ஜமாய்ங்க:-))

    ReplyDelete
  43. \\ கண்மணி said...
    வெளியே இருந்து பாக்கும்போது அவ்வளவா தோற்றம் இல்லை.ஆன உள்ள போன பிறகு நல்ல விஸ்தீரணத்தில் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய அழகன வீடாகத் தெரிந்தது.சில நுணுக்கமன வேலைப்படுகள் பிரமிக்க வைத்தது நிஜம்.நிறைவோடு வெளியே வரும்போதுதன் கண்ணில் பட்டது அது.
    கருப்பு மையில் சிவப்பு விழிகளை உருட்டி அசிங்கமாக இருந்த அந்த பொம்மை தலை வாசலில் முகபில் இருந்தது.
    இவ்வளவு நேரம் ரசித்த அழகு மறைந்து அந்த பொம்மையே மனதில் உறுத்தியது.
    ம்ம் இப்படித்தான் இந்த பதிவும் எனக்கு
    யூ டூ அபி அப்பா
    சாரி................
    சிதம்பரம் கொத்ஸை கருக வச்சிட்டீங்க
    \\

    டீச்சர்! ஒரு சகோதரியா இருந்து நீங்க புரிஞ்சுகிட்டது இவ்வவளவுதானா அவிஅப்பாவிடமிருந்து

    ReplyDelete
  44. \\ கண்மணி said...
    வெளியே இருந்து பாக்கும்போது அவ்வளவா தோற்றம் இல்லை.ஆன உள்ள போன பிறகு நல்ல விஸ்தீரணத்தில் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய அழகன வீடாகத் தெரிந்தது.சில நுணுக்கமன வேலைப்படுகள் பிரமிக்க வைத்தது நிஜம்.நிறைவோடு வெளியே வரும்போதுதன் கண்ணில் பட்டது அது.
    கருப்பு மையில் சிவப்பு விழிகளை உருட்டி அசிங்கமாக இருந்த அந்த பொம்மை தலை வாசலில் முகபில் இருந்தது.
    இவ்வளவு நேரம் ரசித்த அழகு மறைந்து அந்த பொம்மையே மனதில் உறுத்தியது.
    ம்ம் இப்படித்தான் இந்த பதிவும் எனக்கு
    யூ டூ அபி அப்பா
    சாரி................
    சிதம்பரம் கொத்ஸை கருக வச்சிட்டீங்க
    \\

    டீச்சர்! ஒரு சகோதரியா இருந்து நீங்க புரிஞ்சுகிட்டது இவ்வவளவுதானா அவிஅப்பாவிடமிருந்து

    ReplyDelete
  45. Good Post but all the other posts of this week were excellent.

    ReplyDelete
  46. எனக்கு தமிழ் தெரியாது. இந்த கட்டுரையை கொஞ்சம் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து போடமுடியுமா..? :P

    ReplyDelete
  47. கொத்ஸு செய்வது இவ்வளவு ஈஸியா? :)))

    ReplyDelete
  48. வாங்க சிவா, ராம் கோபி, எல்லாருக்கும் ஒரெ பதில்----""அண்ணெ வெண்ணே சரியா சொல்லிட்டீங்கண்ண்ணே வெண்ண்ணே .......""

    ReplyDelete
  49. போஸ்ட் நல்லாருக்கு.. கமெண்ட்ஸ் ரொம்ப நல்லாருக்கு.. கொத்சு எப்டி இருக்குன்னு செஞ்சு பாத்துட்டு சொல்றேன் அபி அப்பா! :)

    ReplyDelete
  50. அதென்னங்க சிதம்பரம் கொத்ஸூ - கேள்விப்பட்டதே இல்லையே !! துபாய் பெயரா ?? இருக்கட்டும் இருக்கட்டும்

    வீட்டுக்கார அம்மாவுக்கு உதவி செய்யுரது தப்பு இல்லீங்கோ !!

    ஆப்பீஸ்லே பெஞ்சா ?? ஏது இவ்ளோ நேரம் வீட்டுலே சமயல் செய்யுரீங்க.

    இது அனுபவம்/நிகழ்வுகள் தலைப்பிலே வகப்படுத்தனும் கதைன்னு சொல்லி ஊரெ ஏமாத்துரிங்க

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))