பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 13, 2007

நன்றி! இனி எல்லாம் சுகமே!!!

இன்றைக்கு எங்க ஊர் மகாராஜாவும் மகாராணியும் ஜம்முன்னு கல்யாணம் பண்ணிகிட்டு தேர்ல ஊர்வளம் வரும் நாள்.ஆமாம் மாயூரநாதரும், அவயாம்பிகையும் திருக்கல்யாணம் செய்து கொண்டு தேரில் வரும் நாள். இதே போல சமீபத்துல! கொஞ்சம் வருஷம் முன்னதான் நான் இதே நாளிள் பிறந்தேன். பெரிய குடும்பம் அதனால இப்ப அபிக்கோ, தம்பி நட்ராஜ்க்கோ இருக்கும் முக்கியத்துவம் எல்லாம் அப்போ இல்லை. நான் பிறந்தது உறவுகாரங்களுக்கு ஒரு கால்கிலோ ஜீனி செலவு, அவ்வளவே! எங்க வீட்டுக்கு ஒரு பத்து காப்பி செலவு. ஆனா அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் சந்தோஷம் இருந்திருக்கும். இப்படியாக நான் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் காலங்களில் பள்ளி நாட்களில் திடீரென புது சட்டை போட்டுகிட்டு ARC ஜுவல்லரி பசங்களோ, வேறு சிலரோ எல்லாருக்கும் சாக்லெட் குடுக்கும் போது "இது அவங்களுக்கு மட்டுமேயான விஷேஷம் போலயிருக்கு"ன்னு நெனச்சுப்பேன்.மேலும் எனக்கு என் பிறந்த தேதி என்பது 27\6\66 தான். எனக்கு மட்டுமல்ல குரங்குராதா முதல் அன்றைக்கு யார் யாரெல்லாம் ஸ்கூலில் சேர்ந்தார்களோ எல்லாருக்குமே அது தான் பிறந்த நாள்.

பின்பு ஏழாவது எட்டாவது படிக்கும் காலங்களில் எனக்கும் சாக்லெட் கொடுக்க ஆசை வந்தது. ஆசை மட்டுமே வந்தது. கொடுக்கவில்லை. பின்பு கல்லூரி நாட்களில் கேக் வெட்ட ஆசை வந்தது. ஆனால் வெட்டவில்லை. பின்பு அந்த சிந்தனையே இல்லாமல் வளர்ந்துவிட்டேன். பின் திடீரென 1995ம் ஆண்டு நவம்பர் 13 அன்று காலையில் ஒரு போன் "என்னங்க பிறந்த நாள் வாழ்த்துக்கள்"ன்னு. எனக்கு சொரேர்ன்னு இருந்துச்சு. அப்போது எனக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. வேற யாரு தங்கமணிதான்! சரின்னு சுதாரிச்சுகிட்டு "சரி உங்களுக்கு எப்போ பிறந்த நாள்?"ன்னு ஏதோ கேட்டு வச்சேன். என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் இல்லை. அது தான் எனக்கு முதன் முதலாக மத்தவங்க கிட்ட இருந்து வந்த என் வாழ்க்கையின் முதல் வாழ்த்து. உடனே அம்மாவுக்கு போன் பன்ணி "அம்ம்ம்ம்மா, எனக்கு எப்போ பிறந்த நாள்?"ன்னு கேட்டேன். அதுக்கு அம்மா "அய்ப்பசி இருவத்திஏழு"ன்னு சொன்னாங்க. அதுக்கு நான் "இங்கிலீஷ்ல சொல்லும்மா"ன்னு சொன்னதுக்கு "அய்ப்ஸ் டொண்டிசவன்"ன்னு சொன்னாங்க! ( நக்கல் பிறவியில இருந்தே வந்துடுச்சுங்கப்பூ)

இப்படியாக 13 வருடங்களாக தவறாமல் தங்கமணி வாழ்த்தும், பெத்தவங்க வாழ்த்தும், கூட பிறந்தவங்க வாழ்த்தும், அபிபாப்பா, இந்த வருடம் முதல் நட்ராஜ் வாழ்த்தும்(ஆமாங்க காலையில போன்ல விசில் அடிச்சான்) கிடைத்து கொண்டிருக்க இந்த வருடம் கொஞ்சம் அதிகப்படியாகவே வாழ்த்து மழையில் நனைந்து விட்டேன். காரணம் தமிழ்மணம்!

நேற்று இரவு முதன் முதலாக வந்த வாழ்த்து தல பால பாரதிகிட்டயிருந்து வந்த போன்! ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது! பின் வரிசையா போன்! பின் இரவு 12 வரை நெட்டில் உலாத்திட்டு படுத்து காலை 4க்கு எழுந்து பின் இபோதான் வர்ரேன்.

இடையிடையே நிறைய போன்கள், ரொம்ப மிகிழ்வாய் இருந்தது!! இப்போ வந்து பார்த்தா நெட்ல எப்போதும் போல நிறைய பின்னூட்டம் வந்திருக்கும்ன்னு பார்த்தா நிறைய பதிவு வந்திருந்தது!! அதைப்பற்றி நாளை விரிவான பதிவு போடலாம் என இருக்கிறேன்! ஆக்சுவலி இந்த பதிவு வாழ்த்து சொன்னவங்களுக்கு நன்றி சொல்லும் பதிவு இல்லைப்பா! அது நாளைக்கு! நான் உங்க எல்லாரையும் கேட்க நினைத்த கேள்வி ஒன்னுதான்! எனக்கு என்ன பரிசு குடுத்தீங்க???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

என்னடா இவன் இப்படி கேட்கிறானேன்னு நினைக்காதீங்க! எனக்கு ஒரு பரிசு வேணும்! தருவீங்களா?

உடனே “ஆஹா அபிஅப்பா எதுக்கோ அடிபோடறான், அவன் ஊர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பணம் கேக்க போகிறான், ஸ்கூலுக்கு கேக்க போகிறான் என பயப்பட வேணாம்! அது போல விஷயங்களுக்கு அபிஅப்பா வரமாட்டான்!

என் வலையுலக நண்பர்களே! உங்களை எல்லாம் எனக்கு எப்படி தெரியும்? வலையுலகம் மூலமாகத்தானே? அதே போல நம்மோடு நம்மாக வலையில் சந்தோஷமாக சுற்றி திரிந்த நம் சகோதரி அனுராதா அவர்கள் கொஞ்சம் கஷ்டத்துல இருக்காங்க! நாம் ஏன் அவங்களுக்காக வரும் வெள்ளிகிழமை 16\11\07 அன்று காலை 8 மணிக்கு கூட்டு பிரார்த்தனை செய்ய கூடாது? அப்படி செய்தால் இது உலகலாவிய கூட்டு பிரார்த்தனையாக இருக்குமே?? அது கடவுளின் காதை எட்டுமே? செய்வீங்களா? இல்லை பெரியவங்களா பார்த்து ஏதாவது ஒரு உகந்த தேதி நேரம் சொல்லுங்க! அப்ப வச்சுப்போம்! இதை பத்தி பின்னூட்டத்துல டிஸ்கஸ் பண்ணுங்க! இதுவே நான் எதிபார்க்கும் பரிசு!!

இதிலே கடவுள் கொள்கை\மறுப்பு கொள்கை இதல்லாம் வேணாமே ப்ளீஸ்!! மறுப்பவர்கள் “உளமாற” அவங்க நல்லா இருக்கணும்ன்னு நெனைச்சா போதுமே!!

மதம் கூட வேண்டாமே!! அவங்க அவங்க இஷ்டபடி கும்பிடலாமே!

பரிசு கிடைக்குமா எனக்கு உங்களிடமிருந்து??????
ஆனால் ஆசையுடன் எதிர்பார்க்கிறேன்!!!!

20 comments:

  1. வந்துட்டோம்ல, ரெடி ஸ்டார்ட் மீஜிக்....

    ReplyDelete
  2. எனக்கு என் பிறந்த தேதி என்பது 27\6\66 தான். எனக்கு மட்டுமல்ல குரங்குராதா முதல் அன்றைக்கு யார் யாரெல்லாம் ஸ்கூலில் சேர்ந்தார்களோ எல்லாருக்குமே அது தான் பிறந்த நாள்.

    எப்படி 10 வருசம் அதிகம் பண்ணினாங்க....

    ReplyDelete
  3. நம்மோடு நம்மாக வலையில் சந்தோஷமாக சுற்றி திரிந்த நம் சகோதரி அனுராதா அவர்கள் கொஞ்சம் கஷ்டத்துல இருக்காங்க! நாம் ஏன் அவங்களுக்காக வரும் வெள்ளிகிழமை 16\11\07 அன்று காலை 8 மணிக்கு கூட்டு பிரார்த்தனை செய்ய கூடாது? அப்படி செய்தால் இது உலகலாவிய கூட்டு பிரார்த்தனையாக இருக்குமே?? அது கடவுளின் காதை எட்டுமே? செய்வீங்களா? இல்லை பெரியவங்களா பார்த்து ஏதாவது ஒரு உகந்த தேதி நேரம் சொல்லுங்க! அப்ப வச்சுப்போம்! இதை பத்தி பின்னூட்டத்துல டிஸ்கஸ் பண்ணுங்க! இதுவே நான் எதிபார்க்கும் பரிசு!!

    பரிசு கண்டிப்பாக உண்டு....நன்றி.

    ReplyDelete
  4. கண்டிப்பாக. நாம் அனைவரும் இணைந்து அனுராதா அக்காவிற்காக கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete
  5. ஒண்ணும் சொல்லிக்க முடியல...

    இருந்தாலும் பர்த்டே அன்னிக்கு பர்த்டே பேபி கேட்டது கண்டிப்பா நாங்க எல்லோரும் தருவோம்..

    நெஞ்சம் நெகிழ வைக்கும் பரிசு...

    ReplyDelete
  6. நீங்கள் கேட்ட பரிசு நிச்சயமாய்த் தருகிறோம்!

    ReplyDelete
  7. //இதிலே கடவுள் கொள்கை\மறுப்பு கொள்கை இதல்லாம் வேணாமே ப்ளீஸ்!! மறுப்பவர்கள் “உளமாற” அவங்க நல்லா இருக்கணும்ன்னு நெனைச்சா போதுமே!!//

    “உளமாற” அவங்க நல்லா இருக்கணும்

    ReplyDelete
  8. நீங்கள் கேட்ட பரிசு நிச்சயம் கிடைக்கும்.
    ஒருவர் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு எதற்கு அங்கிள் மதமும் கடவுள் நம்பிக்கையும்? மனதிருந்தால் போதுமே. நான் நிச்சயம் ப்ரார்த்திக்கிறேன். என் நண்பர்களிடம் சொல்லி அவர்களையும் ப்ரார்த்திக்க சொல்கிறேன்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்களுடன்...!
    காத்திருக்கிறேன் காலை எட்டு மணிக்கு!

    ReplyDelete
  10. //delphine said...
    நல்ல மனசு...
    /

    டாக்டர் மேடம் பொதுவா எல்லாருமே இப்படித்தான் சொல்றாங்க, எங்களை பார்த்து...!!!

    ReplyDelete
  11. //அதுக்கு நான் "இங்கிலீஷ்ல சொல்லும்மா"ன்னு சொன்னதுக்கு "அய்ப்ஸ் டொண்டிசவன்"ன்னு சொன்னாங்க! ( நக்கல் பிறவியில இருந்தே வந்துடுச்சுங்கப்பூ)//

    குடும்பமே உங்கள மாதிரித்தானா அபிஅப்பா?

    நக்கல்ல மட்டுமில்லை. இளகின மனசுலயும் நீங்க பெரிய ஆள் அபிஅப்பா

    ReplyDelete
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறந்த நாளுக்கு பரிசு கேட்டு அதை யாராவது குடுக்காம இருப்பாங்களா. அனுராதா அம்மாவுக்கு பிரார்த்தனை நிச்சயம் செய்வோம்.

    ReplyDelete
  13. கண்டிப்பாக கிடைக்கும்.

    ReplyDelete
  14. நிச்சயமாக பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete
  15. நிச்சயமாக பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete
  16. பிறந்த நாள் இன்று பிறந்த நாள்.

    பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.

    HAPPY BIRTHDAY TO YOU.
    (CEYLONIL IRUPPADAL RUPAVAHINIYI STYLIL VAZTHUKAL)

    Pudidiga intha pakkam vanthalum prathanai seyven

    ReplyDelete
  17. கண்டிப்பாக நீங்கள் கேட்ட பரிசு கிடைக்கும் தொல்ஸ்

    ReplyDelete
  18. Belated happy birthday wishes Abi appa:)
    Kandippa kadavulkitta kaetudalaaam :)

    Btw naanum Mayavaram dhaan:)

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் அபி அப்பா.. உங்க பரிசுக்கு என்னோட பங்கும் நிச்சயமா உண்டு..

    ReplyDelete
  20. Everyday I include her in my prayer. I am praying GOD to help her.

    Rumya

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))