பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 2, 2008

பறக்கத்தெரியும் என்பதற்காக சூரியனுக்குள் பாயக்கூடாது!!! (பாகம் # 1)



நான் நண்பர் திரு. ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு சொல்லப்போகும் பதிலுக்கும் இந்த தலைப்புக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால் கலைஞரின் "காலத்தால் அழியாத" இந்த வசனத்தை பயன் படுத்தி கொள்ளவே இந்த தலைப்பு. முதலில் மிக்க நன்றி திரு. ஜோஸப் பால்ராஜ் அவர்களுக்கு. காரணம் "அபிஅப்பா மூலமாக கலைஞருக்கு சில கேள்விகள்" என தலைப்பு கொடுத்து என்னை கௌரவப்படுத்தியமைக்கு. (இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்). அடுத்து தம்பி திரு. லக்கிலூக் அவர்களுக்கு, தம்பி வெளியிட்ட உடனடி பதில் பதிவுக்காக. நான் மதியம் தான் பார்த்தேன் உங்கள் பதிவையும் பின்னூட்டத்தையும். அதனால் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து இந்த பதிவினை இடுகின்றேன்.

//இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? //

மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாதுங்க. 2000 ரூபாய் மதிப்பில் ஒரு பொழுது போக்கு சாதனத்தை மக்களுக்கு வழங்க முடியுமா? அது சாத்தியமா? சுமாராக எத்தனை பேருக்கு வழங்க இயலும். அதற்கான நிதி எத்தனை தேவைப்படும். எத்தனை கால கட்டத்துக்குள் அதை தர முடியும். அப்படி வழங்கினால் அதன் காரணமாக மற்ற வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுமா? என எல்லா விதத்திலும் ஆராய்ந்து தேர்தல் அறிக்கையிலே விளக்கமாக சொல்லப்பட்டு பின்பு தகுந்த ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு படிப்படியாக அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவது எல்லோருக்குமே தெரிந்த வெளிப்படையான விஷயம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அந்த இலவச திட்டத்தால் எந்த வளர்ச்சி பணி பாதிக்கப்பட்டது என தங்களால் விளக்க முடியுமா? இந்த திட்டத்தால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை நண்பரே. அரசு வருவாயை வேறு விதத்தில் பெருக்கி இது போன்ற திட்டத்தை தாராளமாக செய்யலாம். தற்போது கடலூர் மகளிர் மாநாட்டில் கூட மத்திய அரசினால் வேறு வழியில்லாமல் ஏற்றப்ப்ட்ட கேஸ் விலையில் 30 ரூபாயை தமிழக அரசு ஏற்று கொண்டதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்??

////1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே? //

இல்லை! நீங்கள் இந்த கேள்வியை இப்போது கேட்டதே தவறு! 1996-2001 கால கட்டத்தில் எத்தனையோ குறிப்பிட்ட நல்ல திட்டங்கள் வந்தது. குறிப்பாக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த திரு. கோ.சி.மணி அவர்களின் பல நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டை ஜொலிக்க வைத்தது. சிமெண்ட் ரோடுகள், பாலங்கள், 200 அடிக்கு ஒரு குடிதண்ணீர் குழாய் போன்ற உள்ளாட்சி அமைப்பும் சரி, நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளும் செம்மையாக நடந்தது என எல்லோருக்குமே தெரியும். அது போல இப்போது இந்த அரசு அமைக்கபட்டு இரண்டரை ஆண்டுகள் மட்டுமே கழிந்துள்ளது. இன்னும் இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த கேள்வியை கேட்டிருந்தால் மிக்க பொருத்தமாக இருந்திருக்கும். ஆனாலும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவைகளிள் 65 சதவீதம் முடிக்கப்பட்டு விட்டன என்பது மறுக்கபடாத உண்மை. இந்த இரண்டரை ஆண்டுகளிள் என்ன என்ன திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன என்பதை சொல்ல தனி பதிவு தேவைப்படும். முடிந்தால் "உடன்பிறப்பு" வலைப்பூவை சென்று பார்க்கவும். மீதி விடை கிடைக்கும் உங்களுக்கு.

////பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.//

சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்பது மட்டுமல்ல தமிழகத்தின் "கட்டிட கலை" சம்மந்தப்பட்ட எல்லா விஷயங்களிளுமே தி.மு.க அரசு மட்டும் தான் முனைப்புடன் 1967 முதலே செயல்பட்டு வருகின்றது என்பது வெட்ட வெளிச்சம்.நீங்கள் சொல்வது போல் பா.ம.க வும் ஒரு காரணம். நாங்கள் பெரிய இரும்பு குண்டை சங்கிலியால் காலில் கட்டி கொண்டு இந்த இரண்டரை ஆண்டுகள் செயல் பட்டு வந்தோம். ஆனாலும் அந்த இரும்பு குண்டு இருந்தாலும் சென்ற ஆட்சியை விட பல மடங்கு அதிக வேகத்துடனேயே ஓடி வந்தோம். இப்போது அந்த சங்கிலியை ஒரே நாளில் அறுத்து எறிந்து விட்டார் தலைவர். இனி எங்கள் வேகத்தை பாருங்கள். அதி விரைவில் ஸ்ரீபெரும்புதூர் அருகே முதல் நன்றாக கவனிக்கவும் முதல் துணை நகர திட்டம் வர போகின்றது. இந்தியாவிலே சாய்பாபாவின் விமான நிலையத்தை விட அதி நவீன விமான நிலையம் சென்னைக்கு வரத்தான் போகிறது. அதற்கான நில ஆர்ஜித பணிகள் தொடங்கி விட்ட தாக செய்திகள் தெரிவிக்கின்றன்.

////இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?//

இலவச தொலைகாட்சி என்பதை விட எத்தனையோ மிக சிறந்த திட்டங்களை நாங்கள் கொண்டுவந்து செயல் பாட்டிலும் சில திட்டங்கள் வர தொடங்கி விட்டன. எத்தனையோ தொலை நோக்கு திட்டங்கள் இந்த "இலவச தொலைகாட்சி" திட்டங்களை விட நாங்கள் செயல் படுத்தி கொண்டு இருக்கிறோம். இது ஒரு கவர்ச்சியான திட்டம் என மக்கள் கருதுவதால் அது முக்கியமாக பட்டு மீடியாக்களால் மிகைப்படுத்த படிகின்றது என்பதே உண்மை. உங்களுக்கு சரியாக உதாரணம் சொல்ல வேண்டுமெனில் இதோ தமிழ்மணத்தில் கூட எடுத்து கொள்ளுங்கள். சில மொக்கை பதிவுகள் ஒரு அறிவார்ந்த பதிவுகளை தூக்கி சாப்பிட்டு விட்டு "ஜூடான" இடுகையில் வந்துவிடுமே அப்படித்தான். "இலவச தொலைக்காட்சி" என்கிற திட்டத்தையே இனி தொங்கி கொண்டிருக்காமல் தொலைநோக்கு திட்டமான "ராமர் சேது திட்டம்" போன்ற திட்டங்களை பற்றி சிந்தியுங்கள்.
அது போல ஒக்கேனக்கல் திட்டத்திற்காக தளபதி ஜப்பான் சென்று வெற்றிகரமாக நிதியதவி பெற்று வேலையும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றது. கார்னாடக தேர்தல் முடிந்த அன்று இரவே கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் "Project Completion Date" சொல்லிவிட்டார். அதில் எந்த சுனக்கமோ மாற்றமோ இல்லை. முல்லை பெரியார், பாலாறு திட்டங்களுக்கு தம்பி லக்கி சொன்ன பதில் தான் நானும் சொல்கிறேன். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்கிற இரட்டை குதிரையில் திறமையாக பயணிக்கும் கலைஞர் இடியாப்ப சிக்கலை என்றைக்குமே தரவிறக்கம் செய்து கொள்வதில்லை. இப்போது பாருங்கள் ஜூன் 12 ம் தேதி மிக அழகாக மேட்டூர் தண்ணீர் திறந்து விடப்பட்டு எங்கள் காவிரி டெல்டா கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் வழிந்து பச்சை பசேல் என காட்சியளிக்கின்றது. முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முறைப்படி எல்லாம் நடக்கிறது. கலைஞர் 50 சதவீதம் அரசியல் நடத்தினால் மீதி 50 சதவீதம் அரசை நடத்துவார். இரட்டை குதிரை சவாரி தலைவருக்கு அத்துப்படி ஸ்வாமீ!!

ஆக உங்களுக்கு இன்னும் பதில் பாக்கி இருக்குதுங்கோவ்!!!

எனக்கு நேரமின்மையாலும் உங்களுக்கு நேரம் நல்லா இருப்பதாலும் இப்போது விட்டு போகிறேன்!! நாளை வருவேன்!!! திரும்ப 2 ம் பாகத்தோட!!! (சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்)

நன்றி!! மேலே உள்ள படம் தம்பி ஆயில்யன் உபயம்!!!

14 comments:

  1. சூப்பர் அபி அப்பா.... :)

    ReplyDelete
  2. //தமிழகத்தின் "கட்டிட கலை" சம்மந்தப்பட்ட எல்லா விஷயங்களிளுமே தி.மு.க அரசு மட்டும் தான் முனைப்புடன் 1967 முதலே செயல்பட்டு வருகின்றது என்பது வெட்ட வெளிச்சம்//

    உண்மைதான்!

    முதல்வராவதற்கு முன்பு பொ.ப.துவினை ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்ததாலோ என்னவோ துறை மீது சிறப்பு கவனம் கொண்டிருக்கிறார் முதல்வர் என்று சொல்வதும் கூட இன்னும் சிறப்பானது!

    ReplyDelete
  3. நன்றி தமிழ்பிரியன்!!! வருகைக்கும் கருத்துக்கும்!!!!

    ReplyDelete
  4. ஆமாம் ஆயில்யன்!! அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போதுதான் பூம்புகார் கலைக்கூடம், மாதவிப்பந்தல், உட்பட அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் திரப்பு விழாவுக்கு அவரே முதல்வராக வந்துவிட்டார்!!!!

    ReplyDelete
  5. அபி அப்பா, அந்த குடும்ப விவகார கேள்விக்கு நீங்க பதில் சொல்ல மறந்துட்டீங்கனு நினைக்கறேன். பாவம், உங்களுக்கு நேரம் இல்லை, ரெண்டாம் பாகத்துல சொல்லுங்க. :))


    அட, மாதவிபந்தலை ஆரம்பிச்சது கண்ணபிரான் ரவிசங்கர்னு நான் நெனச்சுட்டு இருக்கேன். கேஆரெஸ், சொல்லவேயில்லை..?


    //அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போதுதான் பூம்புகார் கலைக்கூடம், மாதவிப்பந்தல், உட்பட அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டது. //

    அட, மாதவிபந்தலை ஆரம்பிச்சது கண்ணபிரான் ரவிசங்கர்னு நான் நெனச்சுட்டு இருக்கேன். :))

    @கேஆரெஸ், சொல்லவேயில்லை..? :p

    ReplyDelete
  6. பதில்கள் பாகம் 1 க்கு நன்றி அபி அப்பா.

    உங்க‌ள் ப‌தில்க‌ளை ப‌டித்த‌பின்பும் சில கேள்விக‌ள் எழுகின்ற‌ன‌.

    தற்சமயம் பணியில் இருப்பதால், வீடு திரும்பியதும் உங்கள் பதிலுக்கு பின்னும் எனக்கு தோன்றும் கேள்விகளை கேட்கின்றேன்.

    ReplyDelete
  7. சூப்பர் அபி அப்பா.இரண்டாம் பாகத்துக்காக ஆவலாக காத்திருக்கோம்.

    ReplyDelete
  8. பதிவெழுத விசயம் கிடைக்கலன்னா அதுக்குன்னு இப்படியா? உருப்படியா எதாவது வேலை இருந்தா பாருங்க அபிஅப்பா. :(((

    ReplyDelete
  9. Dear Abiappa,

    There are now two boards in Koyambedu Bus terminus.

    1. "Selvi J.Jayalalith avargalal thuvangi vaikapattathu (date)"

    2. "Kalaignar avargalal adikal nattapattathu (earlier than above date)"
    Cheers
    Christo

    ReplyDelete
  10. அண்ணாத்த....அடுத்த பதிலுக்கு வெயிட்டிங் ;)))


    நன்றாக தெளிவாக சொல்லுறிங்க...சூப்பர் ;)

    ReplyDelete
  11. //மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாதுங்க. 2000 ரூபாய் மதிப்பில் ஒரு பொழுது போக்கு சாதனத்தை மக்களுக்கு வழங்க முடியுமா? அது சாத்தியமா? சுமாராக எத்தனை பேருக்கு வழங்க இயலும். அதற்கான நிதி எத்தனை தேவைப்படும். எத்தனை கால கட்டத்துக்குள் அதை தர முடியும். அப்படி வழங்கினால் அதன் காரணமாக மற்ற வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுமா? என எல்லா விதத்திலும் ஆராய்ந்து தேர்தல் அறிக்கையிலே விளக்கமாக சொல்லப்பட்டு பின்பு தகுந்த ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு படிப்படியாக அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவது எல்லோருக்குமே தெரிந்த வெளிப்படையான விஷயம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. //
    இது ஒளிவு மறைவுக்கான விஷயம் இல்லை அண்ணா.. இதில் முறைகேடு நடந்திருப்பதாக அப்போது அதிமுக அறிக்கை விட்டாலும் அதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை என்று சொல்வேன். ஏன்னா.. அந்த திட்டத்துக்காக அமைக்கப் பட்ட அனைத்துக் கட்சி குழுவை புறக்கணித்தவர்கள் அவர்கள். முறை கேடு நடக்கும் என்று கருதி இருந்தால் அந்த குழுவில் அவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லை.. அந்த திட்டத்திலே எங்களுக்கு உடன்பாடு இல்லை.. அதனால் இடம் பெறவில்லை என்றும் சப்பை கட்ட முடியாது. ஏனெனில் அந்த திட்டத்தை கலைஞருக்கு சொன்னவரின் ஜாதகமே எனக்கு தெரியும். அவரை அழைத்து சென்று கலர் டிவியுடன் DTH சேர்த்து இலவசமாக வழங்குவதற்கான் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து கடைசி நேரத்தில் அதை அதிமுக கைவிட்டது.

    .... இலவச தொலைகாட்சி திட்டத்தால் இரண்டு பெரிய துறைகள் பாதிக்கப் பட்டது.
    1. விவசாயம் - இலவச தொலைகாட்சியும் குறைந்தவிலை அரிசியும் கிடைத்ததால் அது வரையில் விவசாய வேலைகளுக்கு வந்த தொழிலாளர்கள் அதன் பிறகு வேலைக்கு வர மறுத்தார்கள். அழுகாச்சி சீரியல்களின் தொடர்ச்சியை விட வேலை அவர்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஒரு குடும்பத்தில் 3 பேர் வேலைக்கு வந்தவர்கள் பிறகு ஒருவர் வருவதற்கே மறுத்தார்கள். அப்படியும் வந்தால் பழய நிலையில் இருந்து 2 அல்லது 3 மடங்கு கூலி கேட்டார்கள். இதனால் பெரிய அளவில் விவசாயம் பாதிக்கப் பட்டது.

    2. தொலைகாட்சி வியாபாரத் துறை - இன்று பெரும்பாலானவர்கள் தவணை முறையில் தான் டிவி வாங்குகிறார்கள். தனியார் கடன் நிறுவனங்கள் காசோலை இருந்தால் மட்டுமே கடன் அளிக்கிறார்கள். எனவே கிராமப் புற மற்றும் காசோலை இல்லாத நுகர்வோர்களுக்கு டிவி கடைக்காரர் தன் சொந்த பணத்தில் கடன் வழங்குகிறார். திடீரென்று இலவசத் தொலைகாட்சி கிடைத்தவுடன் பெரும்பாலானோர் தவணைத் தொகையை செலுத்துவதை நிறுத்திவிட்டார்கள்.

    வழக்கமாக தவணைத் தொகையை செலுத்தவில்லை என்றால் அந்த வாடிக்கையாளருக்கு அளித்த டிவியை அந்த கடைக்காரர் எடுத்து வந்து விடுவார். தவணை தொகை செலுத்தியதும் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்போது அதற்கு வழி இல்லை. வேண்டுமென்றால் எடுத்துட்டு போ.. அவ்வளவு தான். இலவசத் தொலைகாட்சி இருக்கும் போது தவணை தொகை ஏன் செலுத்தி காசு குடுத்து வாங்கிய டிவியை திரும்ப எடுத்து செல்லப் போகிறார்கள்?..
    ஒவ்வொரு டிவி கடைக்காரரும் எவ்வளவு கஷ்டப் பட்டார்கள் என்பதை நேரில் பார்த்திருந்தால் தெரியும். கண்ணீர் விட்டார்கள் என்று சொல்வது கூட மிகையாக இருக்காது.

    இதனால் டிவி விற்பனை பெருமளவு குறைந்தது. நான் முன்னனி நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் விநியோகத்தையே கை விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இதனால் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை அடையமுடியாமல் எவ்வளவு பேர் வேலை இழந்தார்கள் தெரியுமா? 2 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தங்களின் மண்டல அலுவலகங்கள் அனைத்தையும் மூடிவிட்டன.

    .. இந்த 2 பாதிப்புகளையும் நான் அனுபவித்து சொல்கிறேன். இதை யாரும் மறுக்க முடியாது...



    //அந்த இலவச திட்டத்தால் எந்த வளர்ச்சி பணி பாதிக்கப்பட்டது என தங்களால் விளக்க முடியுமா? இந்த திட்டத்தால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை நண்பரே.//

    நிச்சயம் எந்த வளர்ச்சி பணியும் பாதிக்கப் பட்டிருகாது. ஆனால் உபரி நிதி இழப்பு எனப்தை மறுக்க முடியாது..

    ...கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கும் சமயத்தில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவித்தது அரசு ( கோர்ட் உத்தரவு படி தான்). இதனால் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு கூட அனைவரும் ஹெல்மெட் வாங்கினார்கள். டிமேண்ட் இருந்ததால் கண்டபடி விலை உயர்ந்தது. அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாங்கினார்கள்.. எல்லோரும் வாங்கி விட்ட நிலையில், ஹெல்மெட் அணிய கட்டாயப் படுத்த கூடாது என உத்தரவிடப் பட்டது. பள்ளி கட்டணம் செலுத்தும் நிலையில் இது எவ்வளவு பெரிய சுமை?.. டிவி வழங்காமல் அனைவருக்கும் ஹெல்மெட் வழங்கி அதை கட்டாயம் உபயோகிக வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கலாமே...

    ReplyDelete
  12. dear abi appaa

    ஜோவோட பதிவுல குடும்பத்தினருக்கு பதவி பற்றி உங்களிடமும்,அண்ணன் லக்கிலுக்கிடமும் கேட்டதற்கு நான் பதிலை அங்கு பின்னூட்டமாக இட்டுள்ளேன். நேரம் இருப்பின் சென்று பார்க்கவும்.

    ReplyDelete
  13. Abi appa,

    Thangal alikkum bathilkal thangal azh manathil irunthu suya ninodu ezhukirirkala enbathai mattum check seyyavum athavathu thangal alikkum bathilkal nadu nilamiyoda allathu katchi sarbila yenenil, katchi sarbu enbathu oruvagayana moodanambikkai allthu atharkku mele , thalaivan yevvazhiyo thondan avvanzhi enkira mathiriyan vishayam, ungalai pondravarkal sirithenum marubattu thalaivanidam ulla nallathu kettathugalail alasi aaraainthu solvathan moolam periya maatrangalai yerpadutha mudiyum, enave thangalin aduth pathivu ithaiyum manthirkondey amaiyum ena nambugiren.

    ReplyDelete
  14. சற்று முன்பு படித்து http://kumarankudil.blogspot.com/2008/07/blog-post_5583.html ‍ ல்

    உலக புகழ் பெற்ற அறிஞர் டேல் கார்னெகி தன்னுடைய “How to Stop Worrying and Start Living” புத்தகத்தில் கவலையைக் களைய உற்ற வழியாக இறை வழிப்பாடை கூறிப்பிட்டுள்ளார். யாருக்கும் இடையுறு தராத இறை வழிப்பாடானாலும் அதை விமர்சிக்கும் பகுத்தறிவாளர்கள் கண்களுக்கு, தங்கள் தலைவர்களின் சுயநல, லஞ்ச, அதிகார துஷ்பிரயோக செயல்கள் தெரிவதில்லை. ((((உண்மையிலேயே இவர்களுக்கு பகுத்தறிவு இருந்தால், வேண்டாம், அறிவு இருந்தால், தங்கள் தலைவர் நல்லது செய்யும்போது எப்படி புகழ்கிறார்களோ, அதேப்போல் தவறு செய்யும் போது அதையும் விமர்சிக்க வேண்டும். சும்மா சப்பைக்கட்டு கட்டினால், அப்புறம் இவர்களுக்கும் போலி சாமியார்களுக்கும் என்ன வித்தியாசம்?)))


    பின்ணூட்டம் அளிப்பவர்கள் முக்கியமாக் அபிமானிகள் இதையும் நினைவில் கொண்டு பதில் அளிப்பது நன்றாயிருக்குமென நான் கருதுகிறேன்..

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))