பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 16, 2009

சூடான இட்லியும் நெய்யும் ஜீனியும் 16.04.2009!!!

குசும்பனுக்கு காலையிலே போன் பண்ணி திருமண வாழ்த்துகள் சொன்னேன். அதுக்கு அவன் " அந்த கொடுமையை ஏன் கேட்குறீங்க அபிஅப்பான்னு சொன்னதும் பகீர்ன்னு ஆகி போச்சு. என்னடா தம்பி நல்லாத்தான போய் கிட்டு இருந்துச்சுன்னு கேட்டதுக்கு "அட நீங்க வேற, ஆபீஸ்ல இருந்து உடனே கிளம்பி வா"ன்னு சொல்லிடாங்க, அதான் மூட் அவுட் ஆகிடுச்சு"ன்னு சொன்னான். சரிதான் அப்படின்னு நெனச்சு கிட்டு அய்யனாருக்கு போன் பண்ணினா அவனும் அதே டயலாக். "ஏன் உனக்கும் லீவ் தரலையா?"ன்னு கேட்டதுக்கு "இப்ப ஆபீஸ் போன என்னை மேனேஜர் கூப்பிட்டு லீவ் போட்டுட்டு வீட்டுக்கு போய் சந்தோஷமா இரு"ன்னு அனுப்பிட்டாருன்னு சொன்னான். என்னடா இது கூத்து சந்தோஷமான சேதி தானேன்னு கேட்டதுக்கு "என்னத்த போங்க அபிஅப்பா, அதான் ஊர்லயே விட்டுட்டு வந்துட்டனே தங்கமணியை"ன்னு ஒரே புலம்பல். வீட்டுக்கு வீடு வேற வேற வாசப்படி!

திடீர்ன்னு கொஞ்ச நாளா கையிலே புது ரத்தம் ஊறுவது போல் ஒரு அரிப்பு.மண்டையிலே மரை கழண்டது போல ஒரு நினைப்பு. ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் ஆகுதுன்னு ஒரு நண்பன் கிட்ட கேட்ட போது "ஆஹா உனக்கு கவிதை எழுதும் ஆசை வந்துடுச்சு, இனி உன் பிளாக் படிப்பவர்களை காப்பாத்த அந்த ஆண்டவனால் கூட முடியாது"ன்னு ரஜினி ரேஞ்சுல சொல்லிட்டு போயிட்டான். விடுவனா நான்! சும்மா ஒரு ஹூ லேஸ் அவிழ்ந்து போனதுக்கும், உளுத்தம்பருப்பு கீழே கொட்டியதுக்கும், சோப்பு நுரை கண்ணில் பட்டு எரிந்ததுக்கும், மேனேஜர் டை கோணலா கட்டியதுக்கும், நாயை பார்த்ததுக்கும், பூனை கத்தியதுக்கும், ராதா நினைப்பு வந்ததுக்கும் எல்லாம் கூட கவிதை எழுதினேன். ஆச்சு இப்படியா ஒரு 243 கவிதை. எல்லாத்தையும் நேத்து உட்காந்து படித்து உடனே ஓடிப்போய் கிடேசன் பார்க்கிலே அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறந்தது என நினைத்து ஆழ குழி தோண்டி அதிலே அதை புதைத்து அதன் மேலே ஒரு வேப்பங்கன்று நட்டு தண்ணீர் ஊற்றி வருகின்றேன். இன்னும் 2 வருஷத்திலே என் கவிதை பூத்து குலுங்கும் என நினைத்து கொண்டேன். அதனால் வாசகர்கள் வசவர்கள் ஆமும் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

கவிதை என்றவுடன் என் தங்கமணி கவிதைகள் நியாபகம் வருகின்றது. அபிகூட என் கிட்ட அம்மா கவிதைகள் எங்கப்பா இருக்குன்னு கேட்டதுல அவசரத்துல ஒரு குத்து மதிப்பா நியாபகத்தில் இருந்த சில வரிகளை எழுதி அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் போன் அபிஅம்மாவிடம் இருந்து " உங்களுக்கு ஏகப்பட்ட திறமை இருக்கு. சம்மந்தமே இல்லாம 3 கவிதைகளை ஒரே கவிதையாக்கி "கன்றாவியா" ஒரு கவிதையாக்க உங்களை தட்டிக்க இந்த லோகத்திலே ஆள் கிடையாது"ன்னு. விடுடா விடுடா கைப்புள்ள... உன் அருமை எப்ப புரிய போவுதோ!

தேவையே இல்லாம இப்ப ராதா நியாபகத்துக்கு வரான் பாருங்க மனசிலே! அதான் குரங்கு மனசு என்பதோ. ஒரு நாள் ராமூர்த்தி சார் "ஐன்ஸ்டீன் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். வெறும் பிரட்டும் பாலாடைகட்டியும் தான் அப்போது அவருக்கு உணவு"ன்னு பாடம் நடத்தி கொண்டு போனார். ராதா மெதுவா "டேய் பாலாடைகட்டின்னா தமிழ்ல என்னடான்னு கேட்க நான் "ச்சீஸ்" டான்னு சொன்னேன். அதுக்கு அவன் "பார்ரா பார்ரா பிரட்டும் ச்சீசும் தின்னா ஏழையா? எங்க பாம்பே அத்தை வீட்டிலே அவா எல்லாருமே கார்த்தால பிரட், ச்சீஸ் தான் தின்றாடா. கொழுத்த பணம் தெரிமோ அவாளுக்கு, ஆத்துல லாம்ப்ரடான்னு குதிரை கணக்கா ஒரு ஸ்கூட்டர் நிப்பாட்டி வச்சிருக்கான்னா பார்த்துகோயேன்" அப்படின்னு சொன்னான். அவன் சொன்னது நியாயமா பட்டுச்சு எனக்கும் அப்போது.

இதை சொன்ன வுடனே நம்ம பாகிஸ்தானிய ஓட்டுனர் தான் நியாபத்துக்கு வர்ரான். நல்ல பையன் அப்புராணி. ஒரு தடவை ஆண்டிமெர்சான்னு ஒரு ஆங்கிலேய லொஜிஸ்டிக் மேனேஜர் தன் 6 வயது பையனையும் 3 வயது பெண்குழந்தையையும் கூட்டி வந்திருந்தார். பசங்க தன் அப்பாகிட்ட பேசிகிட்டு இருந்ததை பார்த்துட்டு நம்ம ஓட்டுனர் ஓடி வந்து "ஸாப் அந்த குழந்தைகள் என்னமா இங்கிலீஷ் பேசுது பாருங்க, இன்னும் சொல்ல போனா அவங்க அப்பனை விட நல்லா பேசுதுங்க"ன்னு சொன்னான். நான் சொன்னேன் "இங்கிலீஷ் கான்வெண்ட்ல படிக்க வச்சிருப்பார்"ன்னு. அதுக்கு நம்ம டிரைவர் "இருந்தாலும் இருக்கும் அவனுக்கு என்ன பெரிய சம்பளகாரன்"

ஒரு வழியா எனக்கு தனி ரேஷன் கார்டு வந்துவிட்டது நம்ம ராதா புண்ணியத்துல!(நான் ஒரு குடும்பத்துக்கு தலைவனாகிவிட்டேன்) ராதா தன் செல்வாக்கை(?) வச்சு வாங்கி கொடுத்துட்டான். போன் பண்ணி சொன்னான். "டேய் கார்டு வந்துடுத்து. கொண்டு கொடுத்துட்டேன். அபி "அங்கிள் அவசரமா பத்து நாள்குள்ள மதுரை அட்ரசுக்கு கார்டை மாத்தி தர முடியுமா?"ன்னு கேட்டா, ஏன் உனக்கு மதுரைக்கு போக உத்தேசமா என்ன?"ன்னு கேட்டான். போடா போக்கத்தவனே நீ அரசியல்ல ஜெயித்து கிழிச்ச மாதிரி தான்னு சொல்லி திட்டிட்டு போனை வச்சுட்டேன்.


பல்விளக்கி கிட்டு இருக்கும் போது பக்கத்து ரூம் பரதேசி பல்லை தேச்சுகிட்டே கேட்டான். அவசரமா ஒரு ஜோக் சொல்லு நான் டாய்லெட் போகனும்ன்னு. செம கடுப்பாகிடுச்சு. என் காமடி இந்த அளவு போயிடுச்சேன்னு. கடுப்பாகி இவனுக்கு எல்லாம் அரசியல் தான் சொல்லி வெறுப்பேத்தனும். ஜோக் எல்லாம் சொல்ல கூடாதுன்னு நினைச்சுகிட்டு "வைக்கோ விருதுநகர்ல நிக்கிறார்"ன்னு சொன்னேன். இடி இடின்னு சிரிச்சு கிட்டு வயித்தை கையால பிடிச்சுகிட்டு "இன்னும் ஒரு ஜோக்கு சொல்லு இன்னும் ஒரு பெரிய ஜோக் சொல்லுன்னு சொல்ல என் கோவம் இன்னும் அதிகமாகி "ம் கார்த்திக் அவரை எதிர்த்து நிக்கிறார்"ன்னு கடுப்பா சொன்னேன். அவன் இன்னும் அதிகமா சிரிச்சு கிட்டே தேங்க்யூ தேங்கியூன்னு டாய்லெட்க்கு ஓடினான். என்ன கொடுமை இது!

27 comments:

 1. //பல்விளக்கி கிட்டு இருக்கும் போது பக்கத்து ரூம் பரதேசி பல்லை தேச்சுகிட்டே கேட்டான். அவசரமா ஒரு ஜோக் சொல்லு நான் டாய்லெட் போகனும்ன்னு. செம கடுப்பாகிடுச்சு. என் காமடி இந்த அளவு போயிடுச்சேன்னு. கடுப்பாகி இவனுக்கு எல்லாம் அரசியல் தான் சொல்லி வெறுப்பேத்தனும். ஜோக் எல்லாம் சொல்ல கூடாதுன்னு நினைச்சுகிட்டு "வைக்கோ விருதுநகர்ல நிக்கிறார்"ன்னு சொன்னேன். இடி இடின்னு சிரிச்சு கிட்டு வயித்தை கையால பிடிச்சுகிட்டு "இன்னும் ஒரு ஜோக்கு சொல்லு இன்னும் ஒரு பெரிய ஜோக் சொல்லுன்னு சொல்ல என் கோவம் இன்னும் அதிகமாகி "ம் கார்த்திக் அவரை எதிர்த்து நிக்கிறார்"ன்னு கடுப்பா சொன்னேன். அவன் இன்னும் அதிகமா சிரிச்சு கிட்டே தேங்க்யூ தேங்கியூன்னு டாய்லெட்க்கு ஓடினான். என்ன கொடுமை இது! //

  கலக்கல்ஸ்...ROTFL
  :)))

  ReplyDelete
 2. இன்னைக்கு நகைச்சுவை கொஞ்சம் குறைச்சலா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே படிச்சேன், கடைசியில ரெண்டு பெரிய சூப்பர் ஜோக் சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 3. கடைசியில சூப்பரா ஜோக் போட்டு கிழிச்சுட்டீங்க...

  வாவ்...

  தமிழ் மணத்தில் உங்களுக்கு ஓட்டு போட முடியவில்லை. என்ன என்று பார்த்தால் நல்லா இருக்கும். (3 தடவை இத சொல்றேன்.. உடனே பண்ணுங்க..)

  ReplyDelete
 4. // "சூடான இட்லியும் நெய்யும் ஜீனியும் 16.04.2009!!!" //

  ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. // வீட்டுக்கு வீடு வேற வேற வாசப்படி!
  //

  அது என்னமோ சரிதாங்க.. வீட்டுக்கு வீடு வாசப்படிதாங்க..

  ReplyDelete
 6. // போடா போக்கத்தவனே நீ அரசியல்ல ஜெயித்து கிழிச்ச மாதிரி தான்னு சொல்லி திட்டிட்டு போனை வச்சுட்டேன். //

  ஐய்யோ பாவம் திட்டாம சொல்லியிருக்கலாம் இல்ல. நம்ம ஊரில் பாஸ்போர்ட் வாங்குவதைவிட கஷ்டம் ரேஷன் கார்டு வாங்குவது. ஹெல்ப் பண்ணவரை இப்படி திட்டியிருக்கீங்களே.

  ReplyDelete
 7. //திடீர்ன்னு கொஞ்ச நாளா கையிலே புது ரத்தம் ஊறுவது போல் ஒரு அரிப்பு.மண்டையிலே மரை கழண்டது போல ஒரு நினைப்பு.

  //

  எலக்‌ஷன் வருதுல்ல...அதுனால கூட இருக்கும்.

  :))


  விருதுநகர் :))))))))))))

  ReplyDelete
 8. கவிதை, மதுரை, விருதுநகர்... :-))))))))))))))))))

  ReplyDelete
 9. விருதுநகர்.. ;-)))))))))

  ReplyDelete
 10. //வைக்கோ விருதுநகர்ல நிக்கிறார்"ன்னு சொன்னேன். இடி இடின்னு சிரிச்சு கிட்டு வயித்தை கையால பிடிச்சுகிட்டு "இன்னும் ஒரு ஜோக்கு சொல்லு இன்னும் ஒரு பெரிய ஜோக் சொல்லுன்னு சொல்ல என் கோவம் இன்னும் அதிகமாகி "ம் கார்த்திக் அவரை எதிர்த்து நிக்கிறார்"ன்னு கடுப்பா சொன்னேன். அவன் இன்னும் அதிகமா சிரிச்சு கிட்டே தேங்க்யூ தேங்கியூன்னு டாய்லெட்க்கு ஓடினான். என்ன கொடுமை இது!
  ///

  :)))))))))
  நல்லவேளை நீங்க நம்ம டி.ஆர் எங்க நிக்கிறான்னு சொல்லவே இல்ல!

  சொல்லியிருந்தீங்க பயபுள்ள அங்கேயே...... :)))))

  ReplyDelete
 11. நல்ல மொக்க ஒன்னும் புரியல?

  ReplyDelete
 12. கார்த்திக் 5 சீட்டு பா ஜ க கிட்ட வாங்கி அதுல ரெண்ட சரத் குமாருக்குக் குடுக்குறார்.

  பாவம் வைகோ நிலமை?

  ReplyDelete
 13. கார்த்திக் 5 சீட்டு பா ஜ க கிட்ட வாங்கி அதுல ரெண்ட சரத் குமாருக்குக் குடுக்குறார்.

  பாவம் வைகோ நிலமை?

  ReplyDelete
 14. //வைக்கோ விருதுநகர்ல நிக்கிறார்"ன்னு சொன்னேன். இடி இடின்னு சிரிச்சு கிட்டு வயித்தை கையால பிடிச்சுகிட்டு "இன்னும் ஒரு ஜோக்கு சொல்லு இன்னும் ஒரு பெரிய ஜோக் சொல்லுன்னு சொல்ல என் கோவம் இன்னும் அதிகமாகி "ம் கார்த்திக் அவரை எதிர்த்து நிக்கிறார்"ன்னு கடுப்பா சொன்னேன். //

  இதுதான் டாப்பு :)

  ReplyDelete
 15. கடைசி ஜோக் செம நக்கல்!

  ReplyDelete
 16. அபி அப்பா.....இட்லியும் சீனியும் பார்த்ததும் அப்டியே சூடா தர போறீங்கன்னு நினச்சு வந்தேன்.....நிஜமாவே சூப்பர்..

  கடைசி ஜோக்...நிஜமாவே சூப்பர்....

  ReplyDelete
 17. //அவன் சொன்னது நியாயமா பட்டுச்சு எனக்கும் அப்போது.//

  இப்போதும் ப்ரட்டும் ச்சீஸும் பணக்கார உணவுதானே இந்தியாவில்..

  //"இங்கிலீஷ் கான்வெண்ட்ல படிக்க வச்சிருப்பார்"ன்னு. அதுக்கு நம்ம டிரைவர் "இருந்தாலும் இருக்கும் அவனுக்கு என்ன பெரிய சம்பளகாரன்"//

  :)))!

  ReplyDelete
 18. ஹூ லேஸ்
  அவிழ்ந்து போனதுக்கும், உளுத்தம்பருப்பு
  கீழே கொட்டியதுக்கும்,
  சோப்பு நுரை
  கண்ணில் பட்டு
  எரிந்ததுக்கும்,
  மேனேஜர்
  டை கோணலா
  கட்டியதுக்கும்,
  நாயை பார்த்ததுக்கும்,
  பூனை கத்தியதுக்கும்,
  ராதா நினைப்பு
  வந்ததுக்கும்
  எல்லாம் கூட
  கவிதை எழுதினேன்.


  இது கூட கவிதை தான்!

  இதுக்கு ஏன் கை அரிக்கணும்!

  வேற பிரச்னையா இருக்கும்!
  சைபால் யூஸ் பண்ணுங்க!

  ReplyDelete
 19. உங்கள் அனைத்து
  பதிவுகளையும் படித்தேன்...
  சரளமான நடை...
  எளிமையான வார்தைகள்...
  அருமை!!!

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 20. 243 கவிதை. எல்லாத்தையும் நேத்து உட்காந்து படித்து உடனே ஓடிப்போய் கிடேசன் பார்க்கிலே அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறந்தது என நினைத்து ஆழ குழி தோண்டி அதிலே அதை புதைத்து அதன் மேலே ஒரு வேப்பங்கன்று நட்டு தண்ணீர் ஊற்றி வருகின்றேன். இன்னும் 2 வருஷத்திலே என் கவிதை பூத்து குலுங்கும் என நினைத்து கொண்டேன்....

  பூத்துக் குலுங்கும் ஆனால் கனியெல்லாம் மேலும் கசக்குமா,அல்லது மாறாக தித்திக்குமா என்று சுவைத்து பார்த்து சொல்லுங்கள்

  ReplyDelete
 21. //
  அவசரமா ஒரு ஜோக் சொல்லு நான் டாய்லெட் போகனும்ன்னு.
  //
  ஹி..ஹி.. டாய்லெட் ஸ்பெஷல் எழுத்தாளர் அபி அப்பா வாழ்க.. வாழ்க.. :))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))