பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 7, 2009

தலைவா! செருப்பு விழுவதை விட குண்டு விழுவது கொடுமை என் தலைவா!!!
என் அன்பு தலைவா!
ஒரு உள்துறை அமைச்சர் மீது செருப்பு வந்து விழுந்தமைக்கே பதறி போய் ஒரு நாட்டின் முதல்வனாகவும் கூட்டனி கட்சியின் தலைவனாகவும் போன் போட்டு பேசினாயே என் தலைவா! மேலே உள்ள படங்களை பார் தலைவா. உனக்கு கண்ணீர் வரவில்லையா.
அடிபட்ட குழந்தையை மடியில் வைத்து கொண்டு அழும் தந்தையை பார். கால் துண்டிக்கப்பட்ட பெண் குழந்தையை பார். செத்து போன பிச்சுவை பார்.
என்னால முடியலை தலைவா! உன்னால் கண்டிப்பாக முடியாது ஏனனில் நீயும் மக்களை பெற்ற மகராசன் தான்.

அவர்களின் தலைவருக்கு தான் ஈகோ பிரச்சனை. உனக்கு என்ன ஆயிரம் பிறை கண்டவன் நீ! மற்றவர் பிழை மன்னித்து உன் கருணையை காட்டு. அந்த பிஞ்சுகள் நிலையை நினை.

உன்னால் முடியாதது ஏதும் இல்லை. நீ நினைத்தால் மட்டுமே இப்போது எதுவும் சாத்தியம். அது தான் இப்போதைய சத்தியம். உனக்கு இப்போ தேவை இல்லை தேர்தல். ஏனனில் எம் இனத்தவருக்கு உடனடி தேவை ஆறுதல் தான்.

வரும் செய்திகள் அத்தனை சரியாக படவில்லை மனதுக்கு. நீ 15 நாள் தேர்தல் சுற்று செய்வதை விட 15 நிமிடம் இந்த விஷயத்துக்கு செலவிட்டால் போதும் நாற்பதும் நமக்கே அந்த தமிழீழம் என்னும் நாடும் நமக்கே!
கண்ணீர் துளிகளுடன்
அபிஅப்பா
புலம் பெயர்ந்து நம் இனத்து சொந்தபந்தங்கள் நினைத்து அழுது கொண்டிருக்கும் என் தங்கை தூயா போன்றவர்களுக்கு என் ஆறுதல் இந்த பதிவு மாத்திரமே! என்ன செய்வது:-((
படங்கள் விடுதலை வீரபத்திரன் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி!

51 comments:

 1. யாராவது ஏதாவது செய்து, எம் இனத்தாரின் துயர் ஓயாதா என்ற எண்ணம்தான் மேலிடுகிறது.
  இந்த குரூரங்களை அனுபவிக்குமளவுக்கு இந்த பிஞ்சுகள் செய்த பாவம்தான் என்ன?
  சொல்ல வார்த்தையில்லை.:((((

  ReplyDelete
 2. சித்தப்பா,
  மிக அருமையானப் பதிவு. ஒட்டுமொத்த உண்மைத் தமிழர்களின் ஆதங்கத்தையும் ஒரு பதிவில் வடித்துள்ளீர்கள்.

  நீங்கள் விடுத்துள்ள கோரிக்கை இந்த தேர்தல் நேரத்திலாவது நிறைவேறினால் நல்லது.

  ReplyDelete
 3. கண்ணீருடன் வழி மொழிகிறேன். குழந்தைகள் துன்பப்படுவதைக் காண இயலவில்லை..

  சீமாச்சு..

  ReplyDelete
 4. //நீ 15 நாள் தேர்தல் சுற்று செய்வதை விட 15 நிமிடம் இந்த விஷயத்துக்கு செலவிட்டால் போதும்//


  வழிமொழிகிறேன்!

  ReplyDelete
 5. உங்கள் பதிவிற்கு நன்றி...நாம் புலத்தில் இருந்து செய்து ஒன்றும் நடக்கவும் இல்லை...நடக்கவும் போவதில்லை...தமிழக உறவுகளால் மாத்திரம் தான் ஏதாவது நள்ளிரவில் நடக்கக்கூடிய மாற்றத்தை உண்டாக்க முடியும்...தாய் தமிழ்உறவுகளே..உங்கள் கால்களை பிடித்து மன்றாடுகிறோம்..இந்த படுகொலையை நிறுத்த ஏதாவது ...எதாவது செய்யுங்கள்...உங்களுக்கு வாழ்நாள் வரை நன்றிக்கடன் உள்ளவராக இருப்போம்...ஒரு சில மணித்துளிகள் தான் எங்கள் உறவுகளின் வாழ்வு...சிங்களவன் அதை எந்த நேரத்திலும் பறித்து விடுவான்.. உங்கள் ராணுவமும் நச்சுப்புகை அடிப்பதாக பிந்திய தகவல்........எங்கள் உறவுகளின் உயிர் உங்கள் கையில்.....

  ReplyDelete
 6. கலைஞர் கருத்தில் எடுக்க வேண்டும்...

  ReplyDelete
 7. தாய் மொழியில் வார்த்தை இல்லை...வாய் மொழியில் வலுவுமில்லை...
  மன வேதனையை என்னால் எழுத்தில் வடிக்க இயலவில்லையே அபி அப்பா..
  என் செய்வேன்...
  :-(((((((((((((

  ReplyDelete
 8. வாங்க சுல்தான் பாய், ஜோசப், சீமாச்சு அண்ணா,ஆயில்யன் மிக்க நன்றி! தூயாவுக்காக இல்லாட்டியும் அந்த நம் இனத்துக்குக்காக ஒரு பதிவு போடுங்க எல்லா இனைப்பைஅயும் இங்க கொடுங்க. நான் ஒரு முக்கியமான இடத்துக்கு கொண்டு செல்ல இருக்கின்றேன்!

  ReplyDelete
 9. சரியான செருப்படி தலைவா நல்ல பதிவு ... பதரவும் செய்யுது

  ReplyDelete
 10. \\ லோயர் said...
  உங்கள் பதிவிற்கு நன்றி...நாம் புலத்தில் இருந்து செய்து ஒன்றும் நடக்கவும் இல்லை...நடக்கவும் போவதில்லை...தமிழக உறவுகளால் மாத்திரம் தான் ஏதாவது நள்ளிரவில் நடக்கக்கூடிய மாற்றத்தை உண்டாக்க முடியும்...தாய் தமிழ்உறவுகளே..உங்கள் கால்களை பிடித்து மன்றாடுகிறோம்..இந்த படுகொலையை நிறுத்த ஏதாவது ...எதாவது செய்யுங்கள்...உங்களுக்கு வாழ்நாள் வரை நன்றிக்கடன் உள்ளவராக இருப்போம்...ஒரு சில மணித்துளிகள் தான் எங்கள் உறவுகளின் வாழ்வு...சிங்களவன் அதை எந்த நேரத்திலும் பறித்து விடுவான்.. உங்கள் ராணுவமும் நச்சுப்புகை அடிப்பதாக பிந்திய தகவல்........எங்கள் உறவுகளின் உயிர் உங்கள் கையில்.....

  \\

  என்னப்பா எங்களை மீண்டும் அழ வைக்குறீங்க! இருங்க நல்ல்லது நடக்கும்!

  ReplyDelete
 11. இப்போதைக்கு அந்த பெருசுக்கு யார் என்ன சொன்னாலும் கேட்காது.இது செவிடன் காதில் ஊதிய சங்கு.

  ReplyDelete
 12. ரவுசு, ராதா, சுரேஷ், வோல்டா எல்லாரும் தூயா தங்கச்சிக்காக இல்லாட்டியும் கூட ஒரு சக மனிதனுக்காக ஒரு பதிவு போட்டா நல்லாயிருக்கும்!!போடுங்கப்பா!

  ReplyDelete
 13. இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க...

  :((((

  ReplyDelete
 14. பதிவிற்கு நன்றி! மனம் கனக்கிறது!

  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 15. நாகை சிவா , மயிலாடுதுறை சிவா! நேரம் அதிகமில்லை எல்லாரும்பதிவு போடுங்க! காலைக்குள் நம் ப்ழதிவு எங்கே போகனுமோ அங்கே போகும்.

  இங்க லிங் கொடுங்க ப்ளீஸ்!

  ReplyDelete
 16. //15 நிமிடம் இந்த விஷயத்துக்கு செலவிட்டால் போதும் நாற்பதும் நமக்கே//

  Serious pathivula joke! LoL.

  ReplyDelete
 17. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டு போட சொல்லும் ஆதரவு லேபிள் இடது பக்கத்தில் போட்டுள்ளீர்கள், வலது பக்கத்தில் அதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அழித்திருக்கும் ஈழ மக்களை போட்டுள்ளீர்கள்...

  ஒன்று உங்களுக்கு நேர்மையாக இருங்கள்.... அல்லது உங்கள் தலைவனுக்கு நேர்மையாக இருங்கள்... இந்த பதிவு எழுதும்போது உங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தலையா?

  ReplyDelete
 18. இந்த தலைவான்ற வார்த்தையை விட மாட்டீங்களா..?

  அதற்கான அர்த்தத்தை அவர் இழந்து ரொம்ப வருஷமாச்சு..

  நீங்க என்னதான் கரடி மாதிரி கத்தினாலும் அது அவர் காதுல விழுகப் போறதில்லை..

  அவருக்கு இப்ப முக்கியம்.. அவர் மகனை, பேரனை ஜெயிக்க வைக்கிறதுதான்..

  ReplyDelete
 19. அபி அப்பா,
  முதலில் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. எமக்காக குரல் தர எம் உறவுகள் உண்டு என்பதை உங்களை போன்றவர்கள் தான் உண்மையாக்குகின்றீர்கள். மிக்க நன்றி.

  இந்த பதிவை படிக்கும் அனைவரும் எம் இனத்திற்காக ஒரு பதிவிட வேண்டும் என வேண்டி கொள்கின்றேன்..

  ReplyDelete
 20. \\ குழலி / Kuzhali said...
  ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டு போட சொல்லும் ஆதரவு லேபிள் இடது பக்கத்தில் போட்டுள்ளீர்கள், வலது பக்கத்தில் அதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அழித்திருக்கும் ஈழ மக்களை போட்டுள்ளீர்கள்...

  ஒன்று உங்களுக்கு நேர்மையாக இருங்கள்.... அல்லது உங்கள் தலைவனுக்கு நேர்மையாக இருங்கள்... இந்த பதிவு எழுதும்போது உங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தலையா?\\

  குழலி உறுத்துவது பத்தி எல்லாம் நீங்களும் மருத்துவர் அய்யாவும் பேசுவது தான் வியப்பு!

  தமிழீழம் வேண்டும், புலி ஆதரவு எல்லாம் பேசிகிட்டே செயலலிதாவோடு கை கோத்துகிட்டு அங்க இருந்த ஒரே புலி ஆதரவு வைக்கோவையும் படு பாதாளத்திலே தள்ளி விட்ட நீங்க எங்களை பார்த்து இந்தகேள்வியை கேட்க கூடாது!

  ReplyDelete
 21. உண்மை தமிழா!

  கலைஞர் எதிர்பு என்பதை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டிருக்க வேண்டியது தான் உங்க கொள்கை! திடீர்ன்னு ஏனப்பா அவரை தலைவன் பதவியிலே இருந்து டெர்மினேஷன் பண்ணிட்ட? என்னவோ அந்த பதவியை நீ கொடுத்த மாதிரி! நாங்க ஒன்னரை கோடி பேர் அந்த கட்சி உறுப்பினர் சேர்ந்து கொடுத்த பதவி அது.

  ஒரு வழிபோக்கன் அந்த பதவியை நீக்க சொல்வது எந்த வித்ஹத்தில் நியாயம். அட்லீஸ்ட் அந்த கட்சியிலே நீர் இருந்து ஒரு ஓட்டு அவரை தலைவனாக தேர்ந்தெடுக்கும் தேர்தலில் போட்டுட்டு பின்ன சொல்லியிருந்தா கூட பரவாயில்லை!

  ReplyDelete
 22. //குழலி உறுத்துவது பத்தி எல்லாம் நீங்களும் மருத்துவர் அய்யாவும் பேசுவது தான் வியப்பு!//
  மருத்துவர் அய்யாவிடம் மூளையை அடகுவைத்த முட்டாள் என்று என்னை நினைத்தீர்களா?

  எல்லோரும் ஒரு சிலரைப்போல எந்த தலைவனிடமாவது மூளையை அடகுவைத்த பிரியாணி குஞ்சா என்ன?

  கொள்கைக்காக ஆதரிப்பதும் ரசிக மனோபாவத்திற்காக ஆதரிப்பதும், பிரியாணிக்காக ஆதரிப்பது என பல நிலைகள் உண்டு....

  நான் பிரியாணிக்காகவோ ரசிக மனோபாவத்திலோ யாரையும் ஆதரிகப்பதில்லை ஒரு சிலரைப்போல்

  என்னை விடுமய்யா... ஒரு நிமிடம் உம்ம மனசாட்சியிடம் பேசி கேளுமய்யா....

  ReplyDelete
 23. ஒன்று உங்களுக்கு நேர்மையாக இருங்கள்.... அல்லது உங்கள் தலைவனுக்கு நேர்மையாக இருங்கள்... இந்த பதிவு எழுதும்போது உங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தலையா?//

  இன்றைக்கு கருணாநிதியை விட்டால் கதியென்ன சொல்லுங்கள் குழலி.

  புதிதாகத் தலைவனைத் தேடுவதா. அப்படித்தேடினாலும் அந்தத் தலைமை ஈழத்திற்கு ஈமக்காரியம் செய்யவே உபயோகப்படும்..


  நானும் சற்றேறக்குறைய அபி அப்பா அவர்களின் நிலைமையிலேயே இருக்கிறேன்.

  இனியாவது தமிழர்கள் ஒரே குரலில் கருணாநிதியை நோக்கி இறைஞ்ச வேண்டும். தேர்தலைத் தள்ளீ வைத்து தமிழர்களைக் காப்பாற்ற புறப்படுங்கள் என்று. !!!

  அதுதான் ஒரே ஒரு வழி...!!!!

  தோழமையுடன்
  மதிபாலா.

  ReplyDelete
 24. ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவு கேட்டு விட்டு இந்த பதிவை போட்டு இருக்கும் உங்கள் மனம் மிகவும் இளகியது. இன்னுமா நம்பிகிட்டு இருப்பாங்க. இன்றும் கருணாநிதி தன் நடிப்பை வெளியிட்டு இருக்கிறார். உங்களை போல் உள்ள நல்ல தொண்டர்கள் இருக்கும் வரை கருணாநிதியின் கம்பெனி கண்டிப்பாக ஓடும். போர் நிறுத்தம் கேட்டு பேரணி போக போகுதாம் பெருசு. அடப்பாவிகளா அங்க நம்ம ஆட்களை கொல்றவனே இந்திய ராணுவம் தான் என்று பிரெஞ்சு செய்தி தாள் குறிப்பிட்டு உள்ளது. புரியல கருணாநிதி நடிக்கிறாரா? அல்லது நீங்கள் நடிக்கிறீர்களா?

  ReplyDelete
 25. நானும் பதிவு போடணும்னு விரும்புவேன்.

  எழுத வார்த்தைகளைகோர்க்க முடியாமல் கண்ணீரோடு விட்டுவிடுவேன்.

  :(((((((

  என்னால் எழுத முடியாத விடயம் இதுதான்.

  ReplyDelete
 26. அதற்காக நான் மற்ற கட்சிக்கு போடுங்கள் என்று கூறவில்லை. நீங்கள் உங்கள் சார்ந்தவர்களை 49-ஒ விற்கு போட சொல்லுங்கள். ஏன் என்றால் எந்நாளும் என்னால் உதயசூரியன் தவிர எதிலும் போட முடியாது. கருணாநிதிக்கு உணர்த்துங்கள்.

  ReplyDelete
 27. மிக‌ ந‌ல்ல‌ ப‌திவு

  ReplyDelete
 28. //இனியாவது தமிழர்கள் ஒரே குரலில் கருணாநிதியை நோக்கி இறைஞ்ச வேண்டும்.
  //
  மக்களாட்சியின் மன்னரை பார்த்து ஒரே குரலில் இறைஞ்ச தான் வேண்டும்... வேறு வழி அன்று தமிழன் தமிழன் என்று கெஞ்சினார்கள், இன்று அவர்களிடம் தமிழன் கெஞ்ச வேண்டும்...

  எதுவும் பேச முடியாத அளவிற்கு மன அழுத்தம் உள்ளது... நாலு நாள் இணையம் பக்கமோ செய்திகள் பக்கமோ போக கூடாது போல் உள்ளது...

  ReplyDelete
 29. நல்ல பதிவு தான். ஆனால் காங்கிரஸ் தலைவருக்கு ஈகோ என்பதை எல்லாம் ஏற்க முடியாது. தன் கனவரின் கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டணையை குறைக்க பரிந்துரைத்தவர் எதற்கு அப்பாவி மக்கள் விஷயத்தில் ஈகோ பார்க்க வேண்டும்.

  குழலியாரே, ஓட்டு கேட்பதற்கும் போர் நிறுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?. தேர்தல் நடப்பது இந்தியாவில். போர் நடப்பது இலங்கையில். இந்தியாவில் தங்கள் கூட்டணிக்கு ஓட்டு கேட்கிறோம். இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க போர் நிறுத்தம் கேட்கிறோம். இது ஒரு குடிமகனின் தனிப் பட்ட விருப்பம். இந்திய அரசாங்கம் ஆயுதம் கொடுக்கிறார்கள் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் விஷமப் பிரச்சாரம்.

  இதே கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடும் திருமாவளவனை வெற்றி பெற செய்ய நீங்களும் தேர்தல் பணியாற்றத் தானே போகிறீர்கள்?

  நாங்கள் செய்வது மனசாட்சிக்கும் தலைவனுக்கும் துரோகம் என்றால் நீங்களும் திருமாவளவனும் செய்வது என்னவாம் சாமி? :)

  உங்கள் தலைவர் பிரபாகரனுக்கு விசுவசமானதா? :)

  சிலருக்கும் கூட விடுதலைப் புலிகள் மீது தான் கோபமே ஒழிய ஈழத் தமிழர் மீது எந்த வெறுப்பும் கிடையாது. இதற்கு யாருடைய நற்சான்றும் எங்களுக்குத் தேவையும் கிடையாது. புலிகள் கிட்டத் தட்ட ஒடுக்கப் பட்டுவிட்ட நிலையில் போர் தேவை இல்லாதது. ஆகவே போர் நிறுத்தத்தை வலியுறுத்துவோம். இதை யார் விமர்சித்தாலும் கவலை இல்லை.

  ReplyDelete
 30. மிகவும் கொடுமை.......!!!!! இந்த மாதிரி படங்களெல்லாம் நம்மனால காம்ப்யுடர்லையே பார்க்க முடியல .... !!!! நேருல பார்த்த உள்ளங்கள் எவ்வளவு வலி கொண்டதாக இருக்கும்.......!!!


  அரசியல்காரர்களை சொல்லி குத்தமில்லை.......!!! பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.... !!! அவர்களுடைய நோக்கமே சம்பாரிப்பதுதான்......!!! அவர்கள் அந்த வேலைகளை கனகட்சிதமாக செய்துகொண்டுதான் இருக்குகிறார்கள்......!!! நாம் இதுபோல அனுதாப படுவதாலும்.... ஆவேசப் படுவதாலும் .... எந்த புண்ணியமும் இல்லை......!!! விதி ... அதன்படி ..... நடைபோடுகிறது.......!!!!

  ReplyDelete
 31. புலிகள் கிட்டத் தட்ட ஒடுக்கப் பட்டுவிட்ட நிலையில் போர் தேவை இல்லாதது. ஆகவே போர் நிறுத்தத்தை வலியுறுத்துவோம்.//

  ஆகவே புலிகளை கிட்டத்தட்ட ஒடுக்க நடந்த போரை நீங்கள் விரும்பியிருக்கிறீர்கள் என அர்த்தப்படுமா இது.

  ஏனெனில் புலிகளை கிட்டத்தட்ட ஒழிக்க நடந்த போரில் கடந்த 3 மாதத்தில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 3000.

  போங்கய்யா.. போங்க.. ஈழத்தமிழினம் செத்து சுண்ணாம்பாக போகட்டும்.

  ஆனா ஏமாத்தாதீங்க..

  ReplyDelete
 32. தினம் வரும் செய்திகள் எங்கள் உறவுகளின் இழப்புகளாகவே வருகிறது. தொலைபேசி ஒலித்தால் நமது இதயத்துடிப்பு இரட்டிப்பாகிறது. யாரை இழந்ததாய் அழைப்பு அறிவிக்கப்போகிறதென. அபி அப்பா தங்கள் உருக்கமான பதிவுக்க நன்றிகள்.

  சாந்தி

  ReplyDelete
 33. //நீ 15 நாள் தேர்தல் சுற்று செய்வதை விட 15 நிமிடம் இந்த விஷயத்துக்கு செலவிட்டால் போதும் //

  அபி அப்பா நீங்க தலைவனுக்கு மிஞ்சிய தொண்டன்! என்னமா எழுதுறீங்க எழுதும் பொழுது மட்டும் ஈழ தமிழ்ர்கள் மேல் என்னமா அக்கறை வந்து விடுகிறது உங்கள் தலைவருக்கு, சில மாதங்களுக்கு முன் தாங்களுடன் பேசிய பொழுது தாங்கள் பேசிய வார்த்தைகள் இன்னும் மனதுக்குள் இருக்கிறது, உங்கள் தலைவர் செய்யவேண்டியது எல்லாம் செய்துவிட்டார் இனி ஒன்னும் செய்யமுடியாது, அது அடுத்த நாட்டு பிரச்சினை என்று சொன்னீர்கள், இன்னும் பல அப்படியே இன்னும் மனதில் இருக்கு. இன்று உங்கள் தலைவன் நினைத்தால் முடியாதது இல்லை என்று சொல்றீங்க?

  ஏன் அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு? ஏதும் எலக்சனில் நிற்கப்போகிறீர்களா? குழலி சொல்வதோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்.

  இதுதான் நான் எனக்கு தெரிந்து போடும் முதல் கடுமையான பின்னூட்டம். அதற்கு மன்னிக்கவும்!

  ReplyDelete
 34. // உங்கள் பதிவிற்கு நன்றி...நாம் புலத்தில் இருந்து செய்து ஒன்றும் நடக்கவும் இல்லை...நடக்கவும் போவதில்லை...தமிழக உறவுகளால் மாத்திரம் தான் ஏதாவது நள்ளிரவில் நடக்கக்கூடிய மாற்றத்தை உண்டாக்க முடியும்...தாய் தமிழ்உறவுகளே..உங்கள் கால்களை பிடித்து மன்றாடுகிறோம்..இந்த படுகொலையை நிறுத்த ஏதாவது ...எதாவது செய்யுங்கள்...உங்களுக்கு வாழ்நாள் வரை நன்றிக்கடன் உள்ளவராக இருப்போம்...ஒரு சில மணித்துளிகள் தான் எங்கள் உறவுகளின் வாழ்வு...சிங்களவன் அதை எந்த நேரத்திலும் பறித்து விடுவான்.. உங்கள் ராணுவமும் நச்சுப்புகை அடிப்பதாக பிந்திய தகவல்........எங்கள் உறவுகளின் உயிர் உங்கள் கையில்.....//

  வழிமொழிகிறேன்!

  அபி அப்பா,
  எமக்காக குரல் தர எம் உறவுகள் உண்டு என்பதை உங்களை போன்றவர்கள் தான் உண்மையாக்குகின்றீர்கள். மிக்க நன்றி.

  RB-Dubai

  ReplyDelete
 35. ஒன்னரை கோடி பேர் அந்த கட்சி உறுப்பினர் சேர்ந்து கொடுத்த பதவி அது.
  அந்த ஒன்றரைக் கோடியும் கேட்டும் தலைவன் செவியில் இன்னும் விழவில்லையா? உங்கள் பதிவுக்காக ஈழத்தில் இருந்து நன்றிகள்.

  ReplyDelete
 36. அந்த ஒன்றரைக் கோடியும் கேட்டும் தலைவன் செவியில் இன்னும் விழவில்லையா? உங்கள் பதிவுக்காக ஈழத்தில் இருந்து நன்றிகள்.

  ReplyDelete
 37. // இந்திய அரசாங்கம் ஆயுதம் கொடுக்கிறார்கள் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் விஷமப் பிரச்சாரம்.//

  See the following links..


  http://www.tamilwin.org/view.php?2adUUG7ff3cc005ZLu6ee4d44CE99jcd0ebttj0CC24d33C6QVtbb0bccPh2gs4ce0e66Wn5503b43fDpYUdde

  ReplyDelete
 38. அபி அப்பா

  நீங்க சொன்னது உங்க தலைவர் காதுல விழுந்து இல்ல மனசுல விழுந்து அவரும் அதை செயல் படுத்திட்டாருன்னா

  அவர் தான் உண்மையான இன மான தலைவர்.........

  ReplyDelete
 39. //See the following links..


  http://www.tamilwin.org/view.php?2adUUG7ff3cc005ZLu6ee4d44CE99jcd0ebttj0CC24d33C6QVtbb0bccPh2gs4ce0e66Wn5503b43fDpYUdde

  //

  இது போல ஏராளமான கட்டுக் கதைகளை படித்துவிட்டோம். அதென்ன ஒரு ப்ரென்ச் செய்தி நிறுவனம்? அதற்கு பெயர் எதுவும் இருக்காதா? அவர்கள் என்ன ஆதாரத்தைக் காட்டி இதை சொல்கிறார்களாம்? கற்பனைக் கதைகளை எல்லாம் படிக்க வைத்து ஏனய்யா கடுப்பேத்தறிங்க? :(

  ReplyDelete
 40. //புலிகள் கிட்டத் தட்ட ஒடுக்கப் பட்டுவிட்ட நிலையில் போர் தேவை இல்லாதது. ஆகவே போர் நிறுத்தத்தை வலியுறுத்துவோம்.//

  ஆகவே புலிகளை கிட்டத்தட்ட ஒடுக்க நடந்த போரை நீங்கள் விரும்பியிருக்கிறீர்கள் என அர்த்தப்படுமா இது.//

  அப்பாவி மக்கள் சிறு காயங்கள் கூட படாமல் புலிகளை அழித்திருந்தால் நிச்சயம் சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனால் அந்த அபபவிகளை கேடயமாக வைத்து சிங்களர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று புலிகள் காட்டிவிட்டார்கள். இதை (மனித கேடயம்) ஐநா பிரதிநிதி ஒருவர் சொல்லி இருக்கிறார். சுட்டி வேண்டுமா? ஆனால் நம்ப மாட்டிர்களே.

  விடுங்கய்யா.. எவ்ளோ நாள் தான் செத்து மடியும் மக்களை வைத்து அரசியல் பேச வைப்பிங்க? நான் இதற்கு மேல் இதைப் பத்தி பேச விரும்பலை.

  ReplyDelete
 41. \\அபி அப்பா said..

  என்னப்பா எங்களை மீண்டும் அழ வைக்குறீங்க! இருங்க நல்ல்லது நடக்கும்\\

  இன்னும் சிறிய நேரத்தில் நீங்கள் (தமிழக மக்கள்) ஏதாவது செய்யாது விட்டால்........மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள். எல்லாம் எல்லை மீறி போய்விட்டது. மிகவும் கசப்பான செய்திகள் எவ்வேளையிலும் வரலாம்.. மாதக்கணக்கில் நடக்ககபோவதையோ அல்லது நாள் கணக்கில் நடக்கபோவைதையோ நாள் சொல்லவில்லை..சில மணிநேரங்களில் நடக்கபோவதைதான் சொல்லு கிறேன்...இந்த பதிவை வேண்டும் என்றால் சில நாட்களின் பின்னர் மீண்டும் வாசியுங்கள். அனைத்தும்...அனைத்தும்...அனத்தும் எல்லை மீறி போய்விட்டது...வார்த்தைகள் வர மறுக்கிறது.... ஐயா கனவான்களே..!!!! அருமை தமிழக உறவுகளே....வேண்டாம்!!!!!..... நாம் வெட்கி தலைகுனியும் போது மீண்டும், உங்களுடன் சேர்ந்து ஒப்பாரி பின்னுட்டம் போடுகிறேன்...

  ReplyDelete
 42. அபிஅப்பா ஏன்.. இப்படி படம் எல்லாம் போட்டு...... :(

  ReplyDelete
 43. Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
  //

  இது போல ஏராளமான கட்டுக் கதைகளை படித்துவிட்டோம். அதென்ன ஒரு ப்ரென்ச் செய்தி நிறுவனம்? அதற்கு பெயர் எதுவும் இருக்காதா? அவர்கள் என்ன ஆதாரத்தைக் காட்டி இதை சொல்கிறார்களாம்? கற்பனைக் கதைகளை எல்லாம் படிக்க வைத்து ஏனய்யா கடுப்பேத்தறிங்க? :(
  //ஆதாரத்தை காட்டினால் உங்கள் தலைவி உடனே போரை நிறுத்தி வைப்பாரா?? அத்தோடு மக்களிடம் பொய் உரத்தர்க்க்காக மக்கள்தாம் பகீரங்கமாக வெளிப்படுத்த தயாரா??
  சரி...உங்களிடம் ஆதாரத்தை காட்டினால் அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்??

  ReplyDelete
 44. //சரி...உங்களிடம் ஆதாரத்தை காட்டினால் அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?? //

  காட்டுங்கள். என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன்.

  ReplyDelete
 45. http://www.metacafe.com/watch/329627/ltte_human_shield_sri_lanka/

  ReplyDelete
 46. அபி அப்பா

  அழகிரிக்காக பதறித் துடித்துக்கொண்டிருக்கும் தமிழினத்தலைவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். இதுதான் ஒரு கட்சிக்காரனுக்கு அழகா? இன்னும் கலைஞரை நம்பச் சொல்கிறீர்களா? கலைஞரை நோக்கி இறைஞ்ச வேண்டும், பிச்சை கேட்க வேண்டும், தமிழனை நன்றாக உயர்த்தி இருக்கிறீர்கள் அய்யா! இறைஞ்சிக் கேட்டால் என்ன செய்வார் உங்கள் தலைவர்?

  நாளை பேரணி நடத்துவார். தூயவர் பிரணாப் முகர்ஜி தொலைபேசுவார். சொக்கத்தங்கம் சோனியாவும் பேசுவார். பேருவுகை அடைந்து தமிழினத்தின் மீது கரிசனை ததும்ப தமிழின காவலனாய் தன்னை வரித்துக் கவிதை புனைந்து முரசொலியில் புன் சிரிப்போடு வீற்றிருப்பதை பார்த்து மகிழ வேண்டும்.

  ஈழத்தில் சிதறித் தெறிக்கும் கருப்புப் மனிதர்களின் சிவப்பு ரத்தத்தை எடுத்து உங்கள் கட்சிக் கொடியில் பூசிக்கொள்ளுங்கள். புது ரத்தம் மினுமினுக்க பட்டொளி வீசி பறக்கும் உங்கள் கட்சிக் கொடி. ஈழத்தமிழனின் பிணத்தின் மேல் நின்று கொண்டு கலைஞர் காணம் பாடலாம்

  எதற்கு இந்தப் பதிவு? நானும் வருத்தப்பட்டேன்? துயரப்பட்டேன் என்பதை பதிவு செய்து கொள்ளவா? தலைவனுக்குச் முட்டுக் கொடுத்துக்கொண்டே துயரப்படுவதற்கு பதில் மவுனமாக அழுது விட்டுப் போகலாம். அழுதேன் என்பதற்கு சாட்சி வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன?

  மனசாட்சி இருந்தா மனிதனாக இருப்பதா? கட்சிக்காரனாக இருப்பதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 47. Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...//

  காட்டுங்கள். என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன்//
  அதைத்தான் நான் முன்னைய பின்னூட்டத்தில் கேட்டேன்..உங்களால் உங்கள் அளவுக்கு என்ன செய்ய முடியும்?? மனு அனுப்புறது, கடிதம் போடுறது, தந்தி அடிப்பது.....அதைவிட... அந்த பாவப்பட்ட மக்களுக்கு உடனடியாக எதாவது நடக்க கூடியதாக தங்களால் என்ன செய்ய முடியம்...அதை கூறுங்கள்..

  ReplyDelete
 48. //உங்களால் உங்கள் அளவுக்கு என்ன செய்ய முடியும்?? மனு அனுப்புறது, கடிதம் போடுறது, தந்தி அடிப்பது.....அதைவிட... அந்த பாவப்பட்ட மக்களுக்கு உடனடியாக எதாவது நடக்க கூடியதாக தங்களால் என்ன செய்ய முடியம்...அதை கூறுங்கள்..//

  எங்கள் செயலைக் கொச்சைப் படுத்துவதெல்லாம் இருக்கட்டும். இந்திய ராணுவம் தமிழரை அழிக்கிறது என்ற பொய் குற்றச் சாட்டை மறுக்க ஆதாரம் இருந்தால் சொல்லுங்க. இல்லைனா வழக்கம் போல இந்தியாவை கேவலப் படுத்திட்டெ இருங்க. உங்கள மாதிரி ஒரு சிலருக்காக ஈழத் தமிழர் மேல இருக்கிற அனுதாபம் குறையாது. ஆதாரம் காட்ட முடியவில்லை என்றால் இதோடு விடுங்க. இது விவாதப் பதிவு இல்லை. ஒரு சக தமிழனின் உணர்வு. நன்றி.

  ReplyDelete
 49. அபி அப்பா, please publish this....

  அவசரமாக விடுதலைப்புலிகளின் வேவுப்பிரிவினர் இத்தகவலை அறிவித்திருக்கின்றார்கள்.
  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்கரையோர பிரதேசத்தில் எழு(07) குழிதோண்டும் (வைக்கோ இயந்திரம் நின்று பாரிய குழிகள் தோண்டப்படுகின்றது. அக்குழிகளில் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்ற அப்பாவி மக்கள் மீது இந்தியா கொடுத்த நச்சுவாயுவை வீசி கொண்றுவிட்டு இக்குழிகளி ல் போடும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.. இப் பணியில் ஈடுபடுவதற்கென தென்பகுதியில் இருந்து ஊர்காவற்படையினர் அலம்பில் பிரதேசத்தில் வந்து நிலை கொண்டுள்ளனர். அவர்களிற்கு ஒவ்வொரு நாளும் காலை, மாலை முகமூடி(மாஸ்க்) அணிவிக்கப்பட்டு கடற்கரையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
  இரவு வேளை வேவுப்பணியில் போராளிகள் ஈடுபட்டிருந்த போது அங்கு நின்ற ஊர்காவற்படையினரின் உரைகளில் இருந்து இத்தகவல் மேலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

  இவ் கொடூரத்தை அரங்கேற்றுவதற்காகவே வன்னியில் சுமார் அறுபதினாயிரம் மக்கள் மட்டும் உள்ளனர் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. உண்மையில் முல்லைத்தீவு அரச அதிபரின் கணக்குப்படி வன்னியில் உள்ள மக்கள்; தொகை இரண்டு லட்சத்துக்கும் மேல் என்று உத்தியோகப10ர்வமாக அறிவித்திருக்கின்றார்.
  எனவே உடனடியாக சர்வதேசசமூகமும், புலம்பெயர் தமிழர்களும், குறிப்பாக தழிழக தலைவர்கள் இவ்விடயத்தில் ஒற்றுமையாக தலையிட்டு இங்கு நடக்கப்போகின்ற பாரிய மனித அவலத்தை தடுத்து நிறுத்துங்கள்.. இல்லையேல் ஒரு வரலாற்றுத் தமிழினம் பூண்டோடு அழிந்து விடும். இந்த நாகரிகமான புதிய நுற்றாண்டில் இப்படியொரு அவலம் தமிழனுக்கும், மனிதகுலத்திற்கும்.
  தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரிக்கு சந்தர்ப்பமாகவும், தழிழனுக்கு மரண இடியாகவும் அமையப்போகின்றது

  ReplyDelete
 50. Iththanai kolaigal mudintha pin Naam anaivarum Thamizhinath Thalaivar munnilayil Mouna Anjali seluthi vittu ,Thalaivar vaazhga endru (Kalaignar Vaazhga) endru uraththu koovuvom.
  Nichayamai appothum Klaignarin Kangal panikkum. Oru latcham thamlargalin uyirum nam thalaivarin oru sottu kanneerum, namakku ondruthan.
  Thalaivar Vaazhga.

  Kaali Prungaya Dappavin pugal paaduvom

  ReplyDelete
 51. Abi appa, what happend to your effort? Have you taken this matter to the concern party? Why silence.......

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))